புதன், மே 24, 2017

மரணத்தாலும் கைவிடப்பட்டவள்

கொஞ்ச நாட்கள்  முன் உடல்நிலை மோசமான காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த சமயம் அது. நினைவு வருவதும் போவதுமாய்..... நினைவு வந்தபோது வலியின் கொடுமை தாளாமல் கதறல். என் சத்தத்திலிருந்து மருத்துவமனையை காப்பாத்த நர்சம்மா ஒருத்தங்க  மயக்க ஊசி போட்டாங்க.  சிறிது நேரத்தில் உடலெல்லாம் கனத்து என் எடை என்னாலே தாங்க முடியாததை போல ஒரு உணர்வு. வேண்டியவர்கள் யாராவது கிட்டக்க  இருக்காங்களான்னு கண்களை சுழற்றி பார்த்தேன். பின்புதான் உரைத்தது..., சிகிச்சை அறையில் நான் மட்டுமே இருப்பது...,


ஏதேதோ நினைவுகளின் தாக்கத்தினால் எழுந்த இயலாமையால் கண்ணீர் சுரந்து வழிந்தோடி தலையணை நனைகிறது. கண்ணீர் காதில் நுழைந்து குறுகுறுக்க, அதை துடைக்க கைகளை தூக்க முயல கைகள் மேலெழவில்லை. 

இறைவா! எத்தனை சொந்தம் எனக்குள்ளது இப்படி என்னை கண்ணீர் துடைக்க கூட ஆளில்லாமல் அனாதைப் போல் கிடத்திவிட்டாயே!ன்னு மனதில் ஒரு கூப்பாடு. நா வரளுது, தண்ணீர் தர ஆளில்லை. விரக்தியின் விளிம்பிலிருந்தாலும் உயிர் பயம் ஆட்டி படைக்கிறது. கைப்பிடித்து ஆறுதல் சொல்ல ஆள் இல்லை. நான் கொண்ட நட்பு, காதல், நேசம், சண்டை அழுகை, வெற்றிக் களிப்பு, பெருமிதம், அவமானம், விருப்பு, வெறுப்பு, ஆசை எல்லலாமே வந்து கண்முன் என்னை எள்ளி நகையாடுகிறது. இப்போ என்ன உன்னால் செய்ய முடியும் என என் முன்னால் வந்து நின்று அரூபமொன்று  கொக்கரித்து எள்ளி நகையாடுது.
Pinterest                                                                                         More:
என்ன நரக வேதனை இது? நீ யார்? என்று மனது அருகில் நின்ற உருவத்திடம் கேட்க, நான் ’உன் விதி’ என்கிறான். மரணம் நேரப் போகிறதா எனக்கு?!  சொர்க்கம் செல்வேனா?! நரகம் செல்வேனா?! என் வாழ்வில் அறிய முடியா ரகசியங்களை இப்போதாவது அறிவேனா?! மண்ணும்மாறுகின்ற விண்ணும்,பூவும்புல்லும்மனித பசிக்களும் இன்னும்எனக்கு   அலுத்துவிட்டது.  வீடு, வாசல், தோட்டம், துறவு, பெற்றோர், இணை, பிள்ளைகளை விட்டு வர ஆயத்தமாகிறேன்.  இல்லை,  உன் காலம் முடியவில்லை என கூட்டிப்போக மறுக்கிறான். 

to_the_moon_by_sylar113:
கெஞ்சுகிறேன்... இரஞ்சுகிறேன்.... ம்ஹூம் மசியவில்லை. வாதங்கள் தொடர்கிறது. கைப்பிடிக்கிறேன், கை உதறிவிட்டு செல்கிறான்.  துக்கம் தொண்டையை அடைக்க மூச்சுவிடக்கூட சிரமப்பட தலைக்கோதி ஆறுதல் சொல்ல ஆள் இல்லை. 

திக்கவற்றவருக்கு தெய்வமே துணை என இறைவனை தொழ, பெரும் வெளிச்சத்தோடு அவனும் கீழிறங்கி வருகிறான். என்னவென்று கேட்பவனிடம் விதியின்  வாதத்தை எடுத்து சொல்கிறேன். இவனும் ஆன்மா, கர்மா, வினைன்னு ஏதேதோ பிதற்றுகின்றான். 

Je veux voir les lignes du vents:
என்னால் பாசம், அன்பு, துரோகத்தை தினம் தினம் சந்திக்கும் தெம்பில்லை.  கைக்கொடுக்க உடன்பிறந்தார் யாருமில்லை என்னை அழைத்து செல் என்கிறேன்.  வலியோடு இருக்கத்தான் உன்னை தனியாய் படைத்தேன் என்கிறான்.  காதல், அன்பு, சிரிப்பு, கோவம், பயம் மாதிரி வலியும் ஒரு உணர்வே.

என்னை வலியோடு இருக்க பணிக்க நீ யார்?!   எனக்கு கடவுளாய் வாய்த்தது உன் குற்றம்.    உன்னை நம்பிய குற்றத்திற்கு  நீ வலியை பரிசாய் தந்தால்  அதையும் ஏற்றுக்கொள்வேன்..  மனம் மரத்தவளுக்கு எல்லாமே ஒன்றுதான்...
¿Japón? / Japan?:
எத்தனை மணித்துளிகள் இந்த போராட்டமோ தெரியாது. கண்விழிக்கையில் இலவம்பஞ்சாய் மாறிய மனம் கடவுள் தந்த பரிசான வலியுடன் கூடிய வாழ்க்கையை வாழ பூமி பந்தை எதிர்கொண்டது.

அம்மா! அழுதப்படியே சொன்னாள்... ’நீ செத்து பிழைச்சேடி’ன்னு.....

நான் சொன்னேன்....  இல்லம்மா.... பிழைச்சு தினம் தினம் சாகப்போறேன்னு....

#தமிழ்மணம் ஓட்டுப்பட்டை தெரியாதவங்களுக்காய்..
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1461076

The Art Of Animation, Sylar113:
நன்றியுடன்,
ராஜி.

21 கருத்துகள்:

 1. மரண அவஸ்தையினை மிகவும் அருமையாக நேரேட் செய்து எழுதியுள்ளீர்கள்.

  இந்தக்கடைசி வரிகளான .....

  //அம்மா! அழுதப்படியே சொன்னாள்... ’நீ செத்து பிழைச்சேடி’ன்னு.....

  இல்லம்மா.... பிழைச்சு தினம் தினம் சாகப்போறேன்னு....//

  முத்தாய்ப்புடன் முடித்துள்ளீர்கள்.

  பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிப்பா

   நீக்கு
 2. கற்பனையா உண்மையா... அழகாக எழுதியிருக்கிறீங்க..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை. ஆனா, கொஞ்சம் மிகையூட்டல்

   நீக்கு
 3. பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே

   நீக்கு
 4. கற்பனை மிக மிக அற்புதம்
  கவித்துவமாய் முடித்தவிதம் அருமை
  வாழ்த்துக்களுடன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உடம்புக்கு முடியாம படுத்தது நிஜம் செத்துப்போய்டலாம்ன்னு துடிச்சது நிஜம். பிழைச்சதும் நிஜம். ஆனா, விதியும், கடவுளும் கண்முன் வந்தது மட்டும் மிகையூட்டல்ப்பா

   நீக்கு
 5. மரணபயம் கொடிது. வெல்வோர் அரிது. அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மரண பயம் இருப்பதால்தான் சாமியார்கள் கல்லா கட்டுறாங்க

   நீக்கு
 6. 20 வருடங்களுக்கு முன் மிகவும் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்ற நேரத்தில் நான் நினைத்துப் பார்த்தவை போலவே உள்ளன. நான் குணமாகி திரும்பியபோது அங்கிருந்த மருத்துவர் கூறினார், இன்னும் ஒரு மணி நேரம் தாமதமாக வந்திருந்தால் எனக்கு சங்கு ஊதியிருக்கவேண்டுமென்று.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எல்லாருமே அனுபவித்ததுதான் இந்த அனுபவம். டாக்டரான நீங்க இதுப்போல பல நிகழ்வுகளை தினம் தினம் பார்த்திருப்பீங்கதானேப்பா

   நீக்கு
 7. ஆ! மரணப்பிடியில் சிக்கி வெளி வந்தும் தினமும் அவஸ்தை என்றால்...ஆம் மரணத்தின் பிடியில் இருக்கும் போது அந்தப் பயம் கொடிது என்றால் பிழைத்து தினம் தினம் அந்த மரணத்தை நினைத்துத் துன்புறுவது அதனினும் கொடிது!

  கற்பனையாய் அமைந்துவிடட்டும்! அருமை!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க கீதா

   நீக்கு
 8. மரணத்துடன் போராடுகிறபோது எதையெல்லாமோ சிந்திக்கிறது மனம். நாம் கொண்ட நட்பு, காதல், நேசம், சண்டை அழுகை, வெற்றிக் களிப்பு, பெருமிதம், அவமானம், விருப்பு, வெறுப்பு, ஆசை எல்லலாமே வந்து வந்து போவது நாம் வாழ்ந்த வாழ்க்கையை நகைப்பிற்குரியதாக்குகிறது.

  வாழ்ந்த வாழ்க்கை அலுத்துவிட்டது. வீடு, வாசல், தோட்டம், துறவு, பெற்றோர், இணை, பிள்ளைகளை விட்டு வர ஆயத்தமாகிறோம்[உங்களை முன்னிலைப்படுத்திக் கதை சொல்லியிருக்கிறீர்கள். அதை நான் பொதுமைப்படுத்தியிருக்கிறேன்]. ஆன்மா, கர்மா, வினைன்னு ஏதேதோ சொல்கிறார்கள்.

  செத்த பிறகாவது, ‘நாம் சொர்க்கம் செல்வோமா?! நரகம் செல்வோமா?! வாழ்வில் அறிய முடியாத ரகசியங்களை மரணத்திற்குப் பின்னரேனும் அறிய முடியுமா?’ என்றெல்லாம் யோசிக்கிறோம். ஆனால், நாம் நினைத்தபடி செத்துவிடுவதும் சாத்தியப்படவில்லை[‘உன் காலம் முடியவில்லை என்று கூட்டிப்போக மறுக்கிறது விதி’].

  இறைவனிடம் முறையிடுகிறோம். அவனோ, ‘வலியோடு இருக்கத்தான் உன்னைப் படைத்தேன்’ என்கிறான்.

  ஆக, ‘ஆசைப்பட்டபடி வாழவும் முடிவதில்லை; சாகவும் முடிவதில்லை. வலியுடன் வாழ்ந்து முடிப்பதைத் தவிர வேறு வழியில்லை’ என்ற நிலையில்.....

  “என்னை வலியோடு இருக்க பணிக்க நீ யார்?! எனக்கு கடவுளாய் வாய்த்தது உன் குற்றம். உன்னை நம்பிய குற்றத்திற்கு நீ வலியை பரிசாய் தந்தால் அதையும் ஏற்றுக்கொள்வேன்.. மனம் மரத்தவளுக்கு எல்லாமே ஒன்றுதான்...” என்று கண்முன் காட்சி தந்த கடவுளிடமே விரக்தி மேலிடச் சொல்லும் நிலை.

  இந்த மனோ தைரியம் மனிதராய்ப் பிறந்த அத்தனை பேருக்கும் தேவை. இது, உங்களின் இந்தக் கதை உணர்த்தும் வாழ்க்கைத் தத்துவம் என்பது என் எண்ணம்.

  நிகழ்வுகளை அடுக்கிக் கதை பின்னுவது எளிது. மன உணர்வுகளை வார்த்தைகளால் வடித்தெடுப்பதற்கு எழுத்தின்மீதான அதீத ஆர்வமும் பயிற்சியும் தேவை. இரண்டாம் வகையைச் சேர்ந்தது உங்களின் இந்தப் படைப்பு.

  என் மனம் நிறைந்த பாராட்டுகள்; வாழ்த்துகள்.
  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கதைக்குப் பொருத்தமான, கண்கவரும் மனம்கவரும் படங்கள்! மகிழ்ச்சி.

   நீக்கு
  2. நேற்றுக் காலையிலிருந்து சற்று முன்னர்வரை தமிழ்மணத்தின் ‘முகப்புப்பக்க’ப் பட்டியல் மாறவேயில்லை. இதனால், ‘சூடான இடுகைகள்’ பட்டியலில் உங்களின் இந்தப் பதிவு இடம்பெறவில்லை[இடம்பெறுமா தெரியவில்லை].

   தமிழ்மணம் எப்போது பழுது பார்க்கப்படும்?

   நீக்கு
  3. தமிழ்மணத்தில் இடம்பெறலைன்னாலும் உங்க விருப்பப்பட்டியலில் இடம்பெற்றிருக்கேனே1 நன்றிப்பா.


   வலியை எதிர்கொள்ள எல்லாரும் தயங்கி மரணத்தை எதிர்பார்ப்பது இயல்புதான். ஆனா, அந்த மரணமும் நம்மை கைவிட்டப்பின் மனம் மரத்து என்ன வேணும்ன்னாலும் செஞ்சுக்கோன்னு ஒரு விரக்தி வந்து நிக்கும். அதான் பொதுப்படுத்தி இருக்கேன்.

   இது நான் அனுபவித்ததை எழுதினாலும், எல்லோரும் தன் வாழ்நாளில் ஒருநாளாவது அனுபவிச்சிருப்பாங்க.

   வருகைக்கும் கருத்துக்கும் நன்றிப்பா

   நீக்கு
  4. எல்லோரும் கடவுளை நம்பி கேக்குறோம். கேட்டது கிடைக்கலைன்னா கடவுளையே தூக்கி எறியும் நிலைக்கு தள்ளப்படுறோம்.

   நீக்கு
 9. கடைசி வரிகள் கலக்கல்.
  ஓர் இலக்கியவாதி ஆயாச்சு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்படி எடக்கு மடக்கா பேசினா இலக்கியவாதி ஆகிடலாமா?! இத்தனை நாள் தெரியாம போச்சேப்பா

   நீக்கு