Wednesday, May 17, 2017

மாயக்கண்ணனின் குலமான யதுகுலத்தின் முடிவு - தெரிந்த கதை தெரியாத உண்மை .

பொதுவாக மகாபாரத கதைகள் எல்லாமே இடியாப்ப சிக்கல்களாகத்தான் இருக்கும்.  நமக்குலாம் பொதுவான சில முக்கியமான பாத்திரங்கள் மட்டுமே தெரியும். ஆனால் கிளைக்கதைகள் மற்றும் அவர்களின் பெயர்கள் எல்லாம் பற்றி  அறிந்துகொள்ளவேண்டும் என்றால் நமக்கு இந்த ஆயுள் போதாது. போன பதிவில் யதுகுலத்தை முடிவுக்கு கொண்டுவர காரணமான க்ருஷ்ணனரின் மகன் சாம்பாவின் விளையாட்டுத்தனத்தையும் அதனால் முனிவர்கள் விட்ட சாபத்தையும் பார்த்தோம். பாக்காதவங்க இங்கே போய் பார்த்துட்டு வாங்க.

துவாரகையில் நடந்த துயர சம்பவத்தை அறிந்த கிருஷ்ணருக்கு வேண்டப்பட்டவர்களெல்லாம் வந்து என்ன நடந்தது என விசாரிக்க தொடங்கினர். அப்பொழுது உக்கிரசேனர் அங்கே வந்தார். யார் இந்த உக்கிரசேனர்?! மதுரா நாட்டின் யதுகுல மன்னரும், கம்சனின் தந்தையும், கிருஷ்ணரின் தாய்வழி பாட்டனும் ஆவார். உக்கிரசேனர் யதுகுலத்தின் குக்குர கிளையினர் ஆவார். புராணங்களின்படி, உக்கிரசேனர் ஆஹூகனின் மகன் ஆவார். மன்னர் உக்கிரசேனர் இவரது மகனான கம்சனால் சிறையில் அடைக்கப்பட்டார்.  பின்னர் கம்சனை கொன்று கிருஷ்ணர் உக்கிரசேனரை சிறை மீட்டு மீண்டும் அரியணையில் அமர்த்தினார். அதன் பிறகு சூரசேனரின் மகனும், கிருஷ்ணரின் தந்தையும், மன்னர் உக்கிரசேனரின் மருமகனுமான வாசுதேவருக்கு பட்டத்து இளவரசு பட்டம் வழங்கப்பட்டது. அந்தக்கதை எழுத ஆரம்பித்தால்  அதுவே ஒரு தனிப்பதிவாக வரும். நாம நம்ம கதைக்கு வருவோம்...
இங்கே என்ன நடந்தது என கிருஷ்ணரை பார்த்து உக்கிரசேனன் கேட்க , அதை நான் சொல்லுகிறேன் என்றது ஒரு குரல்.  குரல் வந்த திசையை நோக்கி திரும்பி பார்த்தார் உக்கிரசேனர். அங்கு ருக்மணி நின்று கொண்டிருந்தாள். முப்பத்தியாறு ஆண்டுகளுக்கு முன்னர் கிருஷ்ணர், அழிவின் கடவுள் ருத்திரனை போல் ஒருமகன் வேண்டுமென தவம் இருந்தார். .சாம்பசிவன் அருளால் பிறந்த அவனுக்கு சாம்பா என பெயரிட்டார் (தமிழில் சாம்பன் எனவும் அழைக்கப்படுவான்). அவன் பிறந்தது எதற்காக என கிருஷ்ணருக்கு தெரியும். காந்தாரியின் சாபத்தை நிறைவேற்றவே அவன் பிறந்தான் என மெல்லிய குரலில் கூறினாள். ( கிருஷ்ணா நீ கௌரவர்களும் பாண்டவர்களும் போரிட்டு ஒருவரை ஒருவர் அழித்துக் கொண்டு இருந்த போது சலனமின்றி இருந்தாய். ஓ கோவிந்தா! அதனால் நீயே உன் பங்காளிகள் அனைவரின் அழிவிற்கும் காரணமாவாய். இன்றிலிருந்து முப்பத்தாறாவது வருடம், உன்னுடைய குலத்தைச் சார்ந்தவர்கள், உன் நண்பர்கள் மற்றும் குழந்தைகள் அனைவரின்  அழிவிற்குக் காரணமாகி, பிறகு வனாந்திரந்தில் தனிமையில் மரணமடைவாய். உன் குலப் பெண்கள், தங்கள் குழந்தைகள், பங்காளிகள் மற்றும் நண்பர்களை இழந்து இந்த பாரத போரில் மாண்டவர்களின் பெண்களைப் போலவே அழுது அரற்றுவார்கள் என சாபமிட்டாள் காந்தாரி)  போன பதிவில் தெளிவாக பார்த்தோம்.

 இந்த சாம்பா , கிருஷ்ணருக்கும் ஜாம்பவதிக்கும் பிறந்தவன் என்றும் அவன் அர்ஜுனனிடமிருந்து போர்க்கலையைப் பயின்றவன்.  துரியோதனனின் ஒரே மகளான இலெட்சுமணாவை, சுயம்வரத்தின்போது சாம்பன் கடத்திச் சென்று திருமணம் செய்ய இருக்கையில், பலராமனின் முயற்சியால் இருவீட்டாரும் இணங்க சாம்பன் – இலெட்சுமணாவின் திருமணம் நடந்தேறியது எனவும் சொல்லப்படுகிறது. சாம்பா முனிவர்களை கிண்டல் செய்தது முனிவர்களின் சாபம் நடக்கும் என்பதும், முக்காலமும் தெரிந்த கிருஷ்ணருக்கு தெரியும் என சொல்லவும் உக்கிரசேனர் என்ன சொல்வது என தெரியாமல் மெதுவாக அவ்விடத்தைவிட்டு சென்றார் .

இந்த ருக்மணி யாருன்னு பார்த்தோம்னா, விதர்ப்பநாட்டு இளவரசி. கிருஷ்ணரின்மேல் தீராத காதல் கொண்டவள். அது அவளது சகோதரன் ருக்மிக்கு பிடிக்காததால் சேதி நாட்டு அரசன் சிசுபாலனுக்கு தன் சகோதரியை மணம் முடிக்க முடிவுசெயதான். உடனே ருக்மணி இந்த கணமே தன்னை வந்து காப்பாற்றாவிடில் தன்னுயிரை மாய்த்துக்கொள்வதாக  கிருஷ்ணருக்கு அவசரமான தூது அனுப்பினாள். உடனே கிருஷ்ணர் விதர்ப்ப நாட்டிற்கு சென்று அங்கே அம்பிகை பார்வதிதேவியின் திருக்கோவிலில் கிருஷ்ணரை கணவனாக அடைய பிரார்த்தனை செய்துக்கொண்டிருந்த ருக்மணியைத் தேரில் ஏற்றிக்கொண்டு,   எதிர்த்த மன்னர்களையும் ருக்மியையும் வெற்றிக்கொண்டு மகாலட்சுமியின் அம்சமான ருக்மணியை திருமணம் செய்து கொண்டார். ருக்மணியே கிருஷ்ணரின் மனைவியரில் முதன்மையானவர் .
ருக்மிணிக்கு ஐந்து சகோதரர்கள். அவர்களின் பெயர்கள் ருக்மி, கருக்மன், ருக்மபாஹூ, ருக்மகேசன், ருக்மமாலி ஆகும். ருக்மணிக்கும் கிருஷ்ணருக்கும் பிறந்த குழந்தை பிரத்யும்னன். இவருக்கும் ருக்மியின் பெண்ணான ருக்மவதிக்கும் திருமணமானது. பிரத்யும்னன் - ருக்மவதிக்கு பிறந்தவர் அனிருத்தன் ஆவார். இவர் கிருஷ்ணனின் பேரனாவார். எல்லா கதைகளும் ஒரு கிளைக்கிதைகளை கொண்டு இருக்கிறது. அவற்றை தனியாக வேறு ஒரு பதிவினில் பார்க்கலாம் .
Sage Narada visits the homes of Lord Krishna.:
இறுதியாக அக்ரூரரின் கட்டளைக்கு கீழ்ப்படிந்து, அவர்கள் அந்த இரும்பு துண்டை தூளாக அரைத்தனர். அப்பொழுதுகூட  மிகவும் கடினமான முக்கோண வடிவில் கூர்மையான ஒரு துண்டு மட்டும் தூளாகவில்லை. அதோடு சேர்த்து அந்த துகள்களை கடலில் எறிந்துவிட்டு நிம்மதியாக திரும்பினார்.  அவர்களால் கடலில் எறியப்பட்ட அந்த முக்கோண வடிவினால ஒரு மீனினால் விழுங்கப்பட்டது. மிச்ச மீதி துகள்க சில காலம் கழித்து கடல் அலைகளால் பிரபாசபட்டினக் கடற்கரையில் ஒதுங்கி மிக உறுதியான நீண்ட கோரைப் புற்களாக வளர்ந்தன. இரும்புதுண்டை விழுங்கிய மீனானது ஒரு மீனவனால் பிடிக்கப்பட்டு, மீன் பல கை மாறி வெட்டுப்படும்போது வெளிவந்த அந்த இரும்பு துண்டு ஒரு கூறிய அம்பாக வடிவமைக்கப்பட்டது. கடற்கரையில் ஏரக்கா கோரை புற்கள் இரும்பினைப்போல  உறுதியாக  வளர்ந்து நின்றன. எல்லாம் ஒரு இறுதியான அழிவிற்கு என்னவெல்லாம் வேண்டுமோ அனைத்தும் தயார் நிலையில் அமைக்கப்பட்டது போல எல்லாம் தத்ரூபமாக அமைந்தன.
Vaivasvata Manu Worships Lord Matsya (the "Noah's Ark" description of the Vedas):

நாளடைவில் எல்லாம் சகஜநிலைமைக்கு திரும்பிவிட்டது. யதுகுலத்தவர் தங்களுக்கு ஏற்பட்ட சாபத்தை மறந்துவிட்டனர். ஒட்டுமொத்த துவாரகை அரசாட்சியில் மதுதடை செய்யப்பட்டது. பாரதப்போர் நடக்கும்போது கிருஷ்ணரின் வயது 90. எனினும் மகாபாரத போர் நடந்த 36 வருடங்களுக்குள் துவாரகையில் பல விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெற்றன. கிருஷ்ணரின் சங்கு, சக்கரம், அவரின் அழகிய ரதம் எல்லாம் மறைந்தன. பலராமனின் மழு என்னும் கலப்பையும்  மறைந்துவிட்டது. யாதவர் குலம் அழியும்நேரம் சமீபித்தபோது, கடற்கரையோரத்திலிருக்கும் பிரபாஸா என்ற இடத்திற்குச் செல்லும்படி கிருஷ்ணர் கூறினார். யாதவர்கள் கடற்கரையில் கூடினார்கள். அவள்களில் சில யாதவ இளைஞர்கள் மதியை மயக்கும் போதையைத் தரும் மைரேயம் என்ற மதுவை அளவுக்கு மீறி குடித்து விட்டு சண்டைபோட்டனர். அவர்கள் குடித்துக்கொண்டிருக்கும் மதுபானம் அவர்களது உணர்வுகளை முற்றிலும் இழக்கச் செய்தது.
BHAGAVAD GITA {2, 55 } According to mother Sarda, desires for knowledge, devotion, and salvation cannot be classed as desires because they are higher desires. One should first replace the lower desires with higher desires and then renounce the highest desire also and be­come absolutely free. It is said that the highest freedom is the freedom from becoming free:
பாரதப்போரில் எதிர் எதிரணிகளில் இருந்த கிரிதவர்மா மற்றும் சத்யாகி ஆகிய இருவருக்கும் இடையே சண்டை மூண்டது. அவர்கள்தான் இந்த அழிவை தொடங்கிவைத்தனர். சத்யாகி குருக்ஷேத்திர யுத்த களத்தில் பாண்டவர்கள் பக்கமும், கிரிதவர்மா கௌரவர்கள் பக்கமும் நின்று சண்டையிட்டனர். போரின் கொடூர நினைவுகள் மீண்டும் வர ஒருவருக்கொருவர் வாக்குவாதம் முற்றி, ஆத்திரமடைந்த சத்யாகி துள்ளிக்குதித்து கிரிதவர்மாவின் தலையை கொய்துவிட்டான். உடனே கிரிதவர்மாவின் நண்பர்கள், சத்யாகி மேல்பாய்ந்து அவனை கொன்றனர். பின்னர் இருவரின் நண்பர்களும் கடுமையாக சண்டை இட்டனர். வெகுவிரைவில் இந்த சண்டையில் அனைவரும் கலந்து கொண்டனர். அவர்கள் கடற்கரைக்கு வந்ததினால் ஆயுதம் எதுவும் எடுத்துவரவில்லை அதனால் கடற்கரைகளில் வளர்ந்து இருந்த ஏரக்கா  புல்லை பிடுங்கி ஒருவரையொருவர் அடித்துக் கொள்ள ஆரம்பித்தனர். சாம்பா  வயிற்றில் இருந்துவந்த இரும்பு உலக்கையின் துகள்களே அந்த புற்கள்.  அந்த புல் இரும்பு கம்பிகளைப் போலிருந்ததால் அனைவரும் இறந்தனர்.
கிருஷ்ணர் தன்னுடைய ரதசாரதி தருகாவிடம் துவாரகையை விட்டு எல்லோரும் இடம்பெயர வேண்டும். ஏனென்றால் கடல் நீர்மட்டம் அதிகரிப்பதினால் துவாரகை மூழ்கிவிடும் என அவசரப்படுத்தி, எல்லோரையும் அப்புறப்படுத்தியப்பின், கிருஷ்ணர்,  பாலராமன் மற்றும் தருகா இவர்கள் மட்டுமே மீதமிருந்தனர். நடந்தவைகளை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்த பலராமன் ஒரு மரத்தின் கீழ் அமர்ந்து தன்னுடைய குண்டலினி சக்தியை எழுப்பி தன்நிலை மறந்த நிலையில் அந்த பரம்பொருளிடம் தியானம் செய்து பூலகத்தில் தன் வாழ்வை முடித்து தன்னுள் எடுத்துக்கொள்ளவேண்டும் என பிரார்த்தனை செய்து மிகப்பெரிய வெள்ளை நாகமாகமாறி கடலுக்குள் வீழ்ந்து இவ்வுலகம் நீத்தார்.
இந்த கூட்டத்தில் ருக்மிணிக்கும் கிருஷ்ணருக்கும் பிறந்த மற்றொரு மகனான பிரத்யும்னா (இவன்  சிவனால் எரித்து சாம்பலாக்கப்பட்ட மன்மதனே ருக்மிணியின் கருவில் உருவானான் என்றும் சொல்லப்படுகிறது) ஒருமுறை சாம்பரா என்னும் அசுரன், பிரத்யும்னாவினால்தான் கொல்லப்படுவான் என்று தெரிந்துகொண்டு பிரத்யும்னா குழந்தையாக இருக்கும் போது பெண் உருவமெடுத்து அவனை கடத்தி சென்று கடலில் எறிந்துவிட்டான். அப்பொழுது ஒரு பெரிய மீன் அவனை விழுங்கி விட்டது. அதை ஒரு மீனவன் பிடித்து சாம்பராவின் அரண்மனைக்கே விற்றுவிடுகிறான். அந்த அசுரனின் சமையற்காரியாக இருந்தவள் மாயாவதி.  இவள் ரதியினுடைய அம்சம் எனவும் சொல்லப்படுகிறது. அவள் அந்த மீனை வெட்டும்போது வயிற்றுப்பகுதியில் இருந்து ஒரு அழகான குழந்தை இருப்பதை கண்டவுடன் ஆச்சர்யமடைந்து குழப்பத்தில் இருந்தாள்.
மீன் வயிற்றில் இருந்த குழந்தையை கண்ட  குழப்பத்தில் இருந்த மாயாவதியின் முன்பு தோன்றினார் நாரதமுனிவர். அவர் பிரத்யும்னாவின் பிறப்பு பற்றியும் அவன் யார் எனவும் விரிவாக எடுத்து கூறினார்.  இவனே மன்மதன் என்றும், அவன் வந்த வேலை முடிவடைந்ததும் நீங்கள் இருவரும் தேவலோகம் செல்வீர்கள் எனவும் இவனுக்ககத்தான் நீயும் காத்து இருக்கிறாய் என விளக்கினார். அதிசயமாக மிகவும் குறுகிய காலத்திற்குள் அந்த குழந்தை வளர்ந்தது. எல்லாவற்றையும் தெரிந்துகொண்ட  குழந்தை பிரத்யும்னா, சாம்பாராவை போருக்கு அழைத்தான். ஒரு சிறுவன் தீடிரென போருக்கு அழைத்து அவமானப்படுத்துகிறானே என கலக்கமடைந்து பிரத்யும்னாவுடன் போருக்கு  சென்றான் சாம்பரா.  அப்படி போர் புரியும்போது சாம்பரா தன்னுடைய மழை பெய்யும் ஆயுதத்தினால் பிரத்யும்னாவை தடுமாற செய்தான். பல மாயவித்தைகளை செய்து போரிட்டான் சாம்பரா.  அதையெல்லாம் மஹாமாயாவின் துணைக்கொண்டு சாம்பாராவின் தலையை வெட்டி அவனை கொன்றான் பிரத்யும்னா. வானில் இருந்து தேவர்கள் மலர்மாரி பொழிந்தனர். முடிவில் பிரத்யும்னா,ரதியுடன் அலங்கரிக்கப்பட்ட தேரில் தன்னுடைய இருப்பிடமான துவாரகைக்கு கிளம்பினான் .
சத்யாகி ஆரம்பத்தில் கிரிதவர்மாவிடம் பாண்டவர்களின் படையை நடு இரவில் தாக்கியது பற்றி சண்டை எழ அவர்களுக்குள் சண்டை நடந்து சத்யாகி கொல்லப்பட்ட்டதும் அவனுக்கு ஆதரவாக கிரிதவர்மாவிடம் சண்டையிட்டான் பிரத்யும்னா. அந்த யுத்தத்தில் அவன் கிருஷ்ணரின் முன்பு நடந்த அந்த சண்டையில் படுகொலை செய்யப்பட்டான். பிரத்யும்னாவின் மகன் அனிருதா இவனது மனைவி உஷா (இவள் பானதைத்யவின்  மகளும், மகாபலியினுடைய பேத்தியும் ஆவாள்அனிருதா தன்னுடைய பாட்டனார் கிருஷ்ணன்மீது மிகுந்தமரியாதை கொண்டவன். இவனது மகனும் கிருஷ்ணரின் கொள்ளுபேரனுமாகிய வஜ்ஜிர, ஜெய்சால்மர் குடும்பம் வழியாக அறியப்படுகிறார். யாதவ வம்ங்களில் தப்பி பிழைத்த சிலரில் வஜ்ராவும் ஒருவன்(வஜ்ஜிர மற்றும் கிருஷ்ணருடன் சேர்த்து 16 பேரின் சிலைகள் மதுராவில் உள்ள கோவில்களில் காணப்படுகின்றன).
Mahabharatham - The Great Indian Epic...:
எல்லோருடைய முடிவும் விதித்தபடி நடந்தேறியதால் மனம் உடைந்த கிருஷ்ணர் ஒரு மரத்திற்கு அடியில் அமர்ந்திருந்தார். அவருக்கு பழைய நினைவுகள் நிழலாடியது. பாரத போர்  முடிந்த சமயம், போரில் 100 மகன்களையும் இழந்த பெரியன்னையைச் சந்திக்க பாண்டவர்கள் தயங்கினர். காந்தாரி தங்களைச் சபித்துவிட்டால் என்ன செய்வது என்ற பயம் அவர்களுக்கு.  பிறகு, ஸ்ரீகிருஷ்ணர் எல்லோரையும் சமாதானப்படுத்தி அவளைச் சந்திக்க சென்றனர்.  திருதராஷ்டிரரின் அனுமதியுடன் காந்தாரியைச் சந்தித்தனர். அவர்கள் பயந்தது போலவே, அவளும் ஆத்திரத்துடன் சபிக்க முற்பட்டாள். உடனே வியாசர் குறுக்கிட்டு  அவளைச் சமாதானப்படுத்தி, அறம் இருக்கும் இடத்தில் வெற்றி உண்டு என வாழ்த்தினாய். அதன்படி, அறம் வென்றது எனவே சினம் வேண்டாம்  சமாதானப்படுத்தினார். உடனே அடுக்கடுக்கான கேள்விக்கணைகளை தொடுத்தாள் காந்தாரி. யுத்தத்தில்,  அறத்துக்குப் புறம்பாக பீமன் தொப்புளுக்குக் கீழே கதையைப் பயன்படுத்தினானே அது அறம்தவறிய செயல் இல்லையா?அதை எப்படிப் பொறுப்பது? என்று காந்தாரி கேட்க  பீமன் மன்னிப்புக் கேட்டான்.  அத்துடன், சூது விளையாட்டு மற்றும் திரௌபதியின் வஸ்திராஹரணம் ஆகியவை அறத்துக்குப் புறம்பானவைதானே அதையும் நீங்கள் பார்த்துக்கொண்டுதானே இருந்தீர்கள் என வாதிட்டான் .
Bhima kills Dusshasana in the battle of Kurukshetra, tears open his chest and drinks his blood and collects it to wash Draupadi's hair to keep his promise:

இதில் கோபமுற்ற காந்தாரி, துச்சாதனனின் ரத்தத்தைக் குடித்தாய். உன்னை எப்படி மன்னிப்பது என ஆவேசப்பட்டாள். உடனே அவன், தாயே!அவனது ரத்தம் என் பற்களைக் கடந்து உள்ளே செல்லவில்லை. கைகள் ரத்தத்தில் தோய்ந்திருந்தன. அந்தக் கைகளால், அவிழ்ந்த திரௌபதியின் கூந்தலை அள்ளிமுடிப்பேன் என்ற வாக்குறுதிப்படி, திரௌபதியின் தலையில் ரத்தத்தைப் படியச்செய்தேன் என்றான். இதன் பின்னர் தருமா! என காந்தாரி அழைக்க தர்மர் அவளது காலில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து மன்னிப்பு கோரினார். தருமர் காந்தாரியின் கால்விரல்களை தொட்டதும், தருமரின் நகங்கள் எல்லாம் கருத்து போயின. காந்தாரியும் சிறிது சாந்தமானாள் .



வேதவியாசர், காந்தாரிக்கு  திவ்ய திருஷ்டியை அளித்தார். போரில் தோற்றவர்களையும், இறந்தவர்களையும் கண்டு கவலையானாள். சிதையில் எரியும் கணவன்மார்களின் உடல்களை வலம்வந்த பெண்களை பார்த்ததும் காந்தாரி ஆவேசம் கொண்டு க்ருஷ்ணரை பார்த்தாள்.  இத்தனை துன்பத்துக்கும் நீயே காரணம். நீ நினைத்திருந்தால் இந்த யுத்தத்தை தடுத்திருக்க முடியும். நான் பதிவிரதை என்பது உண்மையானால் எனது வம்சத்து சகோதரர்கள் ஒவ்வொருவரும் சண்டையிட்டு மாண்டதுப்போல, நீ தோன்றிய யதுகுல வம்சத்தின் சகோதரர்கள் சண்டையிட்டு மடிய வேண்டும். நீயும் காட்டில் தனிமையில் மரணத்தை சந்திக்க வேண்டுமென சபித்தாள். குரு வம்சம் அழிவதை நீ பார்த்துக்கொண்டிருந்தாயே என க்ருஷ்ணரை நிந்தித்தாள். ஆனால், ஸ்ரீக்ருஷ்ணர் பொறுமையுடன் தாங்கள் சொல்வது உண்மைதான், ஆனால் இவையனைத்தும் முன்பே நிச்சயக்கட்ட விசயங்கள். அதனால் நடந்தே தீரும் என்றார்.  பதிவிரதையின் சாபம் யாதவர்களையும் கண்ணனையும் பாதித்தது. அதை சற்றே நினைவுகூர்ந்தபடி மரத்தின் அருகில் சாய்ந்து இருந்தார். தன் முன்னே தன குலத்தவர் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டு மாய்ந்ததை எண்ணி வேதனைப்பட்டு கிருஷ்ணர் ஒரு அசுவமரத்தின்  கீழ் அமர்ந்து இருந்தார். தன்னுடைய இறுதிக்காலம் நெருங்குவதை உணர ஆரம்பித்தார்.
Aum Sai Ram.   What Happened After The Mahabharata War Is Something You Weren't Taught In School.   Mahabharata is a nearly perfect example ...:

அவர் ஹிரண்ய நதிக்கரையில்  அடர்ந்த புதர்கள் அடங்கிய குரா  மரத்தடியில்  கால்களை நீட்டி ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தார். அப்போது "ஜரா' என்ற வேடன் ஒரு காட்டு முயலைத் துரத்திக் கொண்டு வந்தான்.  அது புதர்ப்பகுதியில் ஓடி மறைந்தது. அந்த வேளையில் கிருஷ்ணரின் கால்களில் ஒன்று வேடன் கண்களுக்கு முயல்போல் தெரிய, மறைந்திருந்து அம்பு எய்தான். அந்த அம்பு பகவானின் வலது குதிக்காலில் பலமாகத் தைத்ததும், அந்த அம்பு கிருஷ்ணரின் ஆன்மாவில் நுழைந்து அவரது   உயிரை எடுத்துக்கொண்டிருந்தது.  அப்பொழுது "ஆ' என்ற அலறல் சத்தம் கேட்டு பதறினான் வேடன்; ஓடோடி வந்தான். அங்கே பகவான் கிருஷ்ணர்  காலில் அம்பு தைக்கப்பட்டு, உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதைக் கண்ட வேடன், ""பகவானே! உங்கள் பாதம் எனக்கு முயல்போல் தெரிந்ததால் மறைந்திருந்து அம்பு எய்தேன். என்னை மன்னித்து விடுங்கள்'' என்று கதறினான். அப்பொழுது கிருஷ்ணர் அவனை தேற்றினார். ""வேடனே, வருந்தாதே. நாம் செய்த பாவங்கள் நம்மைப் பின்தொடர்ந்து வரும். தெரியாமல் செய்த பாவங்களை இப்பிறவியிலேயே பரிகாரங்கள் மூலம் நிவர்த்தி செய்திடலாம். ஆனால் தெரிந்து செய்த பாவங்களை எந்த வழிபாடுகளாலும் நிவர்த்தி செய்ய முடியாது. அதற்கு நானே உதாரணம் எனக்கூறினார் .

திரேதாயுகத்தில் நான் ராமனாக அவதரித்தபோது, வாலியை மறைந்திருந்து அம்பு எய்தி கொன்றேன். அப்போது வாலி, "ராமா, எனக்கும் உனக்கும் என்ன பகை? எங்கள் விலங்கினத்தில் ஒரு பெண்ணை கடத்திச் செல்வது சகஜம். ஆனால், நீ என்னைத் தவறாகப் புரிந்துகொண்டாய். என்னிடம் நேருக்கு நேர் போர்புரிய முடியாது என்பதை அறிந்து, மறைந்திருந்து என்னை வீழ்த்தினாய். இதே நிலைமை உனக்கு என்னால் ஏற்படும். தர்மம் என்று ஒன்றிருந்தால், எத்தனை காலமானாலும் உன்னை மறைந்திருந்து வீழ்த்துவேன்' என்று வேதனையுடன் சாபமிட்டான். அந்த சாபம்தான் இன்று பலித்தது.
தெய்வமாக இருந்தாலும் சிறிதளவு நெறி தவறினால் துன்பத்தை அனுபவித்தே தீரவேண்டும் என்பது பொது விதியாகும். இதற்கு எந்தவிதமான பரிகாரங்களும், யாகங் களும், தான- தர்மங்களும், வழிபாடுகளும் கைகொடுக் காது. அதைத்தான் நான் இப்போது அனுபவிக்கிறேன். வேடனேநீதான் அந்த வாலி. உன் சாபத்தினை நிறைவேற்றிவிட்டாய். முன்ஜென்ம நிகழ்வுகள் எதுவும் பூலோகத்தில் பிறந்தவர்களுக்கு நினைவுக்கு வராது. அதனால் உனக்கு இது தெரியவில்லை. என் அவதாரம் இன்றுடன் முடிந்தது. நீ நீடூழி வாழ்வாயாக'' என்று வாழ்த்தினார் கிருஷ்ணரின் வார்த்தைகளால் ஆறுதல் அடைந்த ஜரை அவரை மூன்று முறை வலம் வந்து, பிறகு அவரை நமஸ்கரித்து விட்டு வீடு திரும்பினார்.
gallery_1_42_1244183.jpg (1991×2487):
ஸ்ரீகிருஷ்ணர் இறக்கும் தருவாயிலிருக்கிறார் என்பதை அறிந்த உத்தவர் நிலைகுலைந்து போகிறான். ஸ்ரீகிருஷ்ணரிடம் தன்னை வழி நடத்துமாறு கேட்கிறான். அப்போது அவன் உத்தவ கீதையை கேட்கிறான். ஸ்ரீ கிருஷ்ணர் இந்த உடலின் அழியும் தன்மையைப் பற்றி மறுபடியுமாக எடுத்துரைத்து இவ்வுடல் விலையேறப்பெற்றது. ஐம்புலன் கொண்ட இந்த சரீரத்திலிருந்துதான் ஒரு மனிதன் ஜீவன் முக்தியை அடைய முயற்சி செய்யலாம். பத்ரி வனத்திற்குச் சென்று நான் கூறிய சத்தியத்தை தியானம் செய். நான் பாகவதம் மூலமாக என்னை வழிபடுபவர்களுக்கு வழிகாட்டுவேன் என்றார். இவ்வாறு கூறிவிட்டு பரம்பொருளை தியானம் செய்து விண்ணுலகம் சென்றார் .
கிருஷ்ணரின் சாரதியான தாருகன் கிருஷ்ணரைத் தேடிக் கொண்டிருந்தான். கிருஷ்ணர் அணிந்திருந்த துளசி மாலையின் மணம் அவனை அவர் இருக்கும் இடத்துக்கு இழுத்தது. தன் எஜமானர் தரையில் கிடப்பதைப் பார்த்து, அவர் பக்கம் ஓடினார். அவனைப் பார்த்த கிருஷ்ணர், "தாருகா! எதையும் பேசுவதற்கு இப்பொழுது நேரம் இல்லை. யாதவர்கள் தங்களிடையே சண்டை போட்டுக் கொண்டு அழிந்து விட்டார்கள் என்றும், பலராமரும் மறைந்து விட்டார் என்றும், உறவினர்களிடம் சொல். நானும் சீக்கிரமே இந்த உடலை விட்டு போகப் போகிறேன். இனி நீங்களோ அல்லது என் உறவினர்களோ துவாரகையில் தங்கக்கூடாது. ஏனெனில், யாதவர்கள் இருந்த இந்த நகரம் கடலால் கொள்ளப்படும். நீங்கள் எல்லோரும் இந்திரப்பிரஸ்தம் சென்று அர்ஜுனன் ஆதரவில் இருங்கள்" என்று கூறினார். என்ன செய்வது என்று தெரியாமல் தாருகன் விம்மி விம்மி அழுதான். கிருஷ்ணரை மூன்று தடவை வலம் வந்து அவரை வணங்கினான். பிறகு அவன் வருத்தத்தோடு நகர் திரும்பினான்.
After killing Vali, Lord Rama promised that Vali would have his revenge in his next birth. Vali was reborn as Jara, a hunter who was the cause of death of Krishna.:
அச்சமயம் பிரம்மா அங்கு தோன்றி, அவருடன் ருத்திரனும் , இந்திரன் முதலான தேவர்களும் தோன்றினார்கள். அவர்கள் பகவானின் பூவுலக அவதார முடிவை காண ஆவலுடன் அங்கு கூடினார்கள். அனைவரும் கிருஷ்ணர் மீது பூமழை தூவி, அவரைப் போற்றி பாடல்கள் பல பாடினர். கிருஷ்ணர் கண்களை மூடி, யோகத்தில்,அமர்ந்து பரம்பொருளிடம் பிரார்த்தனை செய்து ,பரம்பொருளே இந்த வாழ்வைலிருந்து விடுதலை தாருங்கள் என் பிரார்த்தித்து  தம் ஆன்மாவில் ஒன்றினார். உலகையே மயக்கிய தம்முடைய கிருஷ்ண ரூபத்துடன் பகவான் வைகுண்டத்திற்கு திரும்பினார். இன்றும் பக்தர்கள் தியானத்தில் ஆழ்ந்து அவருடைய என்றும் அழியாத ரூபத்தைக் காணும் பேறுபெறுகிறார்கள்.
அனைத்து பெண்கள் மற்றும் குழந்தைகளை பாண்டவர்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது கிருஷ்ணரின் ஆசை என்பதால், துவாரகைக்கு வந்தான் அர்ஜுனன். கிருஷ்ணரின் தந்தையான வாசுதேவனின் உயிரும் தன் உடலை விட்டு பிரிந்தார்.
குழந்தைகளை அழைத்துக்கொண்டு ஹஸ்தினாபுரத்திற்கு சென்ற அர்ஜுனன் அனைத்து பெண்களையும் குழந்தைகளையும் தன்னுடன் அழைத்துக்கொண்டு ஹஸ்தினாபுரத்திற்கு புறப்பட்டான் அர்ஜுனன். அவர்கள் சென்றவுடன் துவாரகை கடல் விழுங்கியது. போகும் வழியில் ஒரே ஒரு ஆண் துணையுடன் பல பெண்கள் வருவதை கவனித்த கொள்ளையர்கள் அவர்களை தாக்கி, பெண்களையும் செல்வங்களையும் எடுத்துச் சென்றனர். அர்ஜுனனின் அனைத்து வில் வித்தைகளும் அஸ்திர அறிவுகளும் தோற்று போயின. வெறுத்துப் போன அர்ஜுனன் யுதிஷ்டரிடம் சென்று நடந்த அனைத்து விஷயங்களையும் கூறினான். வருத்தத்தில் மூழ்கிய பாண்டவர்கள்  வருத்தத்தில் மூழ்கினர். திருதிராஷ்டிரன், காந்தாரி, குந்தி மற்றிம் விதுரர் ஆகியோர் காட்டிற்குள் சென்று வாழ்ந்து தவம் புரிய புறப்பட்டனர். தன்னிலை மறந்த நிலையில் புரிந்த தவத்தால் விதுரர் தன் உடலை துறந்தான். மற்ற அனைவரும் வனத்தில் மூண்ட காட்டுத்தீயில் உயிரை விட்டனர்.

இவ்வாறாக யதுகுலம் முடிவுக்கு வந்தது.

நாளைக்கு நான் செஞ்ச கம்மல், செயின், எம்ப்ராய்டரி வேலைலாம் கைவண்ணத்துல பார்க்கலாம்..

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை தெரியாதவங்களுக்காய்...
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1460248

நன்றியுடன் ..
ராஜி. 

11 comments:

  1. யதுகுலம் பற்றிய பதிவு அருமையான படங்களுடன், சிறு சிறு நிகழ்வுகளுடன் குழந்தைகளுக்குச் சொல்வதுபோல அமைந்திருந்தது. இவ்வாறான பதிவுகளை எழுத நிதானமும், பொறுமையும் அதிகம் வேண்டும். மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றிப்பா

      Delete
  2. இப்போது தான் உங்கள் வலைதளத்தை
    படிக்க ஆரம்பித்துள்ளேன்.
    அபாரம்.
    எளிய எழுத்து நடை, பொருத்தமான படங்களுடன்.
    மனதில் உட்கார்ந்து கதை சொல்வது போல் உள்ளது.
    படிக்க,படிக்க மனதில் கதை விரிகிறது.
    சிறந்த் கதை சொல்லி நீங்கள்.
    தொடரட்டும் உங்கள் பணி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

      Delete
  3. படங்களும் பதிவும் மிகவும் பாராட்டும் வகையில் உள்ளன. தொடருங்கள் வெற்றி பெறுங்கள்

    ReplyDelete
  4. மிகச் சிறப்பான பதிவு. உங்கள் பதிவு ஒவ்வொன்றும் ஒன்றை ஒன்று விஞ்சியதாக இருக்கிறது!

    ReplyDelete
  5. அறிந்த கதைகள் என்றாலும் மீண்டும் இப்படி வாசிப்பதும் சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது சகோ/ ராஜி

    ReplyDelete
  6. பெட்டி கண்ணுக்குத் தரிசனம் கொடுத்துச்சு...தம சுத்துக்கிட்டே இருக்கு. விழுந்துச்சானு தெரியலையே.

    ReplyDelete
  7. "தருமர் காந்தாரியின் கால்விரல்களை தொட்டதும், தருமரின் நகங்கள் எல்லாம் கருத்து போயின. காந்தாரியும் சிறிது சாந்தமானாள் "

    Gandhari saw Dharma Putra's leg nails through the gap in her eyecover and they were burned by her anger.

    ReplyDelete