இளையராஜா, தன் இசையில் வரு ஒரு கிராமத்து பாட்டுல பறை, நாதஸ்வரம், மேளம், தவில், வீணைன்னு எதாவது ஒரு இசைக்கருவியை படு அட்டகாசமாய் ஒலிக்கவிட்டு மனசை கொள்ளை கொள்வார். இப்படிப்பட்ட உதாரணங்கள் பல உண்டு... ஆனா, தவில், மேளம், உருமி, நாதஸ்வரம்ன்னு அத்தனை இசைக்கருவிகளையும் கலந்துகட்டி ஒலிக்கவிட்டு பொறி பறக்க அடிச்சா எப்படிங்க இருக்கும்?!
உள்ளூர் ஆட்டக்காரனுக்கு என்னிக்குமே மரியாதை கிடையாது. நம்மாளுங்களை பொறுத்தவரை வெளிநாட்டுல இருந்து வந்து சொன்னால்தான் அதுக்கு மதிப்பே. அதிலும் படிக்காதவன் பேச்சு எடுபடுமா?!
அப்படி ஒரு சூழலுக்காக உருவான பாடல், கிராமத்து திருவிழாவுக்கு, கோட், சூட் போட்ட பாட்டு கச்சேரிக்கு வெளி ஊரிலிருந்து ஆட்களை கூட்டி வர, அதுக்கு கதாநாயகன் எதிர்ப்பு தெரிவிக்க, நீயே படிக்காத கிராமத்து தற்குறி. உனக்கு பாட்டு ஞானம் உண்டான்னு பாட்டு கச்சேரிக்காரன் வம்பிழுக்க, கதாநாயகன் களமிறங்கி பாட்டு பாடி அசத்தும் பாடல்...
இளையராஜா இசைக்கு கங்கை அமரன் அட்டகாசமாய் பாட்டு எழுதி இருப்பார். வெட்டியான் வேடம் போட்டாலும் ஃபுல் ஹாண்ட் சட்டை, ஃபேண்ட்ல வரும் கார்த்திக், இதுல அரைக்கை சட்டையில் வேட்டியில் வருவார். அதுவே, பார்க்க க்யூட்டா இருக்கும். இதுல சிலம்பு வேற சுத்துவார். யோவ் கார்த்திக்! உன்னையவிட நானே நல்லா சிலம்பு சுத்துவேன்னு கத்த தோணும்.. டான்சும் அருமையா இருக்கும்.
ஒவ்வொரு அரிசியிலும் அதுக்கானவங்க பேர் இருக்கும்ன்னு சொல்வாங்க. அட்டகாசமான இந்த பாடலை மலேசியா வாசுதேவன் பாடினால்தான் நல்லா இருக்கும்ன்னு இசைதேவன் முடிவு செஞ்சு ஹிட் அடிச்ச பாட்டு.
அந்த காலத்துல, கோவில் திருவிழா, கல்யாண வீடுகளில் ராத்திரி நேரத்துல அமளிதுமளிலாம் அடங்கினபின் ஒலிக்க விட்டு, சரக்கோடு இளைஞர்கள் குத்தாட்டம் போட்ட பாடல்களில் இதும் ஒன்று.
படம்: பெரிய வீட்டு பண்ணக்காரன்’
இசை : இளையராஜா
எழுதியவர்: கங்கை அமரன்
நடிப்பு: கார்த்திக், கனகா
ராஜி.
பாடலை ரசித்தேன். நன்றி.
ReplyDeleteபாடலை ரசித்தமைக்கு நன்றிண்ணே
Deleteகுத்துப்பாட்டுகளின் துவக்கமோ
ReplyDeleteஎம்.ஜி. ஆர் பாடல்கள் தவிர எல்லா பாட்டுமே பிடிக்கும்.
Deleteஅருமையான பாட்டு...
ReplyDeleteநன்றிண்ணே
Deleteநண்பரே,
ReplyDeleteதங்களின் பதிப்பு மிகவும் அருமை. தங்களின் இந்த அருமையான பதிவு இன்னும் பல நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள நமது தமிழ்US இல் பகிருங்கள். வாழ்க தமிழ் வளர்க தமிழ் பற்று.
https://www.tamilus.com
– தமிழ்US
ஏற்கனவே பதிவு செஞ்சேன். ஆனா எனக்கு எர்ரர் காட்டுது இனி ஒருமுறை பதிவு செய்றேனுங்க சகோ
Deleteரசித்தேன்.
ReplyDeleteநன்றிப்பா
Deleteஉண்மையில் எனக்கு இந்தப் படத்தில் இந்தப் பாடலை விட மற்ற பாடல்கள்தான் பிடிக்கும். நிக்கட்டுமா போகட்டுமா டாப். அப்புறம் மல்லிகையே மல்லிகையே தூதாகப்போ, சும்மா நீ நிக்காத பாடல்கள்.
ReplyDeleteஇந்த படத்தில் மொத்தம் ஆறு பாட்டு அதுல மூணு பாட்டு செம ஹிட். ஏன்னா அதுலாம் லவ் சாங்க்ஸ். முத்து முத்து மேடை போட்டுன்ன்னு சோகப்பாட்டு.. அது அந்தளவுக்கு ஹிட் அடிக்கல.. கார்த்திக் எண்ட்ரி பாட்டு சோம்பல் கூடாதுன்னு தத்துவ பாட்டு மாதிரி இருக்கும். இது படிக்காதவனையும். அவனுக்கு இருக்கும் இசை ஞானத்தையும் எடுத்து சொல்றதால எந்த கேட்டகிரிலயும் சேராம கடைசி ரெண்டு பாட்டு அந்தளவுக்கு ஹிட் அடிக்கல.
Deleteநல்ல பாட்டு. இதுவரை கேட்ட ஞாபகம் இல்லை. ஸ்ரீராம் கூறிய நிக்கட்டுமா போகட்டுமா பாடல் பரிச்சயம். பதிவு சிறப்பு. உங்க குரலில் பாடி பதிவிட்டா இன்னும் நல்லா இருந்திருக்கும்.
ReplyDeleteஎதுக்கு கொலைக்கேசுல நான் உள்ள போகவா?! என் குரல் வளம் தெரியாம இப்படிலாம் கமெண்டக்கூடாது
Delete//அமளிதுமளிலாம் அடங்கினபின் ஒலிக்க விட்டு, சரக்கோடு இளைஞர்கள் குத்தாட்டம் போட்ட பாடல்களில் இதும் ஒன்று//
ReplyDeleteஇதெப்படி ஒனக்கு தெரியும்?
அதுலாம் கம்பெனி சீக்ரெட் சேக்ஸ் அண்ணா
Delete