தபால் தலை, நாணயம் சேகரிக்குற பசங்களை பார்த்திருக்கேன். நான் பெத்த சின்ன பொண்ணு கீச்செயின் சேகரிக்குது. குதிரை, டோரா புஜ்ஜி, கிளி, பர்பி டால்ன்னு விதம்விதமா 40க்கு மேல கீச்செயின் வாங்கி வச்சிருக்கு. வுல்லன் மாலைக்காக செஞ்ச வுல்லன் குஞ்சம் கொஞ்சம் இருந்துச்சு. அதை வேஸ்ட் பண்ண வேணாமேன்னு சொல்லி அதுக்கு ஒரு கீச்செயின் செஞ்சு கொடுத்துட்டேன். சுமாரா இருந்தாலும் என் பொண்ணுக்கு தலைக்கால் புரியாத சந்தோசம்.
தேவையான பொருட்கள்..
வுல்லன்,
முத்து,
நூல்.
கத்திரிக்கோல்
வுல்லன் நூலை கைவிரல்ல சுத்தி 15 இழை எடுத்திக்கிட்டேன்.
வளையம் பிரிஞ்சு வராம இருக்க முடி போட்டுக்கனும்...
முடி போட்ட இடத்திலிருந்து கொஞ்ச கீழ ஒரு நூல் கொண்டு முடி போட்டுக்கனும்.
முடி போட்ட பாகத்துக்கு எதிரா இருக்கும் வுல்லன் நூலை சீரா ஒழுங்கா ஒரே அளவில் வெட்டிக்கிட்டா குஞ்சலம் ரெடி.
இதுமாதிரி தேவைப்படும் அளவுக்கு செஞ்சுக்கனும்.
எல்லா கலர் நூலையும் ஒண்ணா சேர்த்து விரலை சுத்தி பத்து இழை எடுத்துக்கிட்டேன். விரல்ல இருந்து கழட்டி குறுக்கால ஒரு நூல் கொண்டு கட்டிக்கிட்டேன்.
நடுப்பக்கத்தை விட்டு வளையத்தின் இரு பக்கமும் நூலை கத்திரிச்சு விட்டு ஒரு பால் மாதிரி செஞ்சு, ஒரே அளவா வுல்லன் நூலை கட் பண்ணிக்கனும்.
ஒரு நூல்ல முத்தை கோர்த்துக்கனும்.
உல்லன் குஞ்சலத்தின் நடுப்பாகத்தில் ஊசியைக்கொண்டு நூல்ல கோர்த்துக்கனும்.
மீண்டும் ஒரு முத்தை கோர்த்துக்கிட்டு இன்னொரு உல்லன் குஞ்சலத்தை கோர்த்துக்கனும்.
இதேமாதிரி ஒரு முத்து, ஒரு குஞ்சலம்ன்னு கோர்த்துக்கனும்.
அடுத்து ஒரு பீட் கேப்பை கோர்த்துக்கனும்....
மீண்டும் ஒரு முத்து கோர்த்திக்கிட்டு உல்லன் பாலை கோர்த்துக்கனும்...
மீண்டும் சில முத்துகளை கோர்த்துக்கிடனும். ஏற்றத்தாழ்வா இருக்கும் உல்லன் நூலை கட் பண்ணி, சாவி வளையத்துல சேர்த்து கட்டிக்கனும்.
அழகான கீச்செயின் தயார். வுல்லன் நூலை அதிக எண்ணிக்கையில் சுத்திக்கிட்டு குஞ்சலம் தயார் செஞ்சா நல்லா பஃப்ன்னு பார்க்க அழகா இருக்கும்.
நன்றியுடன்,
ராஜி
பார்த்து ரசித்தேன்
ReplyDeleteரசித்தமைக்கு நன்றிப்பா
Deleteகைவண்ணம் அருமை.
ReplyDeleteவண்ண வண்ண POM POM...கீ செயின் ...சூப்பர் க்கா
ReplyDeleteஇன்னும் அடர்த்தியா செஞ்சா நல்லா இருந்திருக்கும்ல்ல!
Deleteநல்லாருக்கு ராஜி...
ReplyDeleteகீதா
நன்றிங்க கீதா
Deleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ
ReplyDelete