Thursday, July 12, 2018

நெகிழ வைக்கும் நெகிழிப்பூ - கைவண்ணம்

நாம விரும்பாவிட்டாலும், எத்தனைதான் அவாய்ட் பண்ணாலும் காய்கறி, மளிகைச்சாமான், துணிக்கடை, கறிக்கடை, கல்யாண வீடு, எழவு வீடுன்னு எங்க போனாலும் ஒரு பிளாஸ்டிக் பை தொத்திக்கிட்டு வந்திடுது.  கழுவி, கழுவி ஊத்துறாங்கன்னு கழுவி கழுவி யூஸ் பண்ணாலும் பிளாஸ்டிக் கவர் வீடு முழுக்க இருக்கு.

அதனால, இப்பலாம் அதைக்கொண்டு கிராஃப்ட் செய்ய ஆரம்பிச்சாச்சு.... 

தேவையான பொருட்கள்...
கலர் கலரான பிளாஸ்டிக் கவர்
கத்திரிக்கோல்’
நூல்
பச்சை கலர் கிராஃப்ட் டேப்

பிளாஸ்டிக் கவரை மடிச்சு  நல்லா சுருக்கம் போக நீவி,  கவரின் கீழ்பக்கமா இருக்கும் ஜாயிண்டை வெட்டிக்கனும்.
அதேப்போல கைப்பிடியையும் வெட்டிக்கனும்...  இப்படி வெட்டிக்கிட்டதும் பிளாச்டிக் கவர் செவ்வக பிளாஸ்டிக் ஷீட்டா மாறிடும். 


ஒரு கம்பியின் நுனியில் வெட்டிய கைப்பிடி, ஜாயிண்ட் பகுதியை சுத்தி ஒரு பந்து போல ஆக்கிக்கனும். க்ளூ இல்ல நூல் கொண்டும் கழண்டு வராதமாதிரி சுத்திக்கலாம். நான் டேப் கொண்டு சுத்திக்கிட்டேன்.
செவ்வக வடிவ பிளாஸ்டிக் ஷீட்ல கம்பிய குத்தி, பந்து போக சுருட்டி இருக்கும் பகுதியை சுத்தி பிடிச்சுக்கிட்டு வெட்டிக்கனும்.
இப்படியே எல்லா பிளாஸ்டிக் ஷீட்டையும் நுழைச்சு வெட்டிக்கிட்டே வரனும்...
தேவைப்படும் அளவு பூ வந்ததும், உள்ள பந்து போல் சுருட்டினதையும் சேர்த்து வெளிப்பக்கத்துல நூல் கொண்டு சுத்தி கழண்டு வராதமாதிரி முடி போட்டுக்கனும். 

அடுத்து கிராஃப்ட் பச்சை கலர் டேப்பை சுத்திக்கனும்..

காம்பை பிடிச்சுக்கிட்டு பூ மாதிரி விரிச்சு விட்டு, ஒழுங்கில்லாம இருக்கும் பிளாஸ்டிக் பேப்பரை வெட்டி விட்டுட்டா அழகான பூ ரெடி.

வெவ்வேறு கலர்ல செஞ்ச பிளாஸ்டிக் பூ...
பிடிச்ச மாதிரி அரேஞ்ச் பண்ணிட்டு பச்சை கலர் கிராஃப்ட் டேப்பை கம்பி தெரியாத மாதிரி சுத்திக்கனும்...
அழகான நெகிழிப்பூ பூங்கொத்து தயார்...

எப்படி இருக்குன்னு சொல்லுங்க...

நன்றியுடன்...
ராஜி

12 comments:

  1. கலையும் கற்று ஆனால் மறக்காமல் இருக்கிறீர்கள். பாராட்டுகள்!

    பூக்கள் அழகாய் இருக்கின்றன.

    ReplyDelete
    Replies
    1. அப்பப்ப சும்மா இருக்கும்போது செய்வேன்.
      இப்ப பதிவுக்காகவும் செய்ய ஆரம்பிச்சிருக்கேன்.

      Delete
  2. அழகா இருக்கு சகோதரி/////ராஜி உங்க கைவண்ணம்.

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க கீதாக்கா, துளசியண்ணா

      Delete
  3. அழகான பூக்கள். கை வண்ணம் அருமை.
    என் அம்மா நிறைய செய்து இருக்கிறார்கள்.வித விதமாய் இந்த நெகிழி பைகளை கொண்டு. அம்மா செய்ய பழைய பைகளை, நீங்கள் செய்து இருப்பது புது பைகள் போல் இருக்கே!

    ReplyDelete
    Replies
    1. இதுலாம் பழசுதான்மா, ஓரிரு முறை மட்டுமே பயன்படுத்தினது. லேசா அயர்ன் பண்ணிக்கிட்டேன். அதான் புதுசுப்போல இருக்கு.

      Delete
  4. எனக்கும் இவற்றை செய்து பார்க்க ஆசை ஆனால் முடியுமா தெரியவில்லையே

    ReplyDelete
    Replies
    1. சோம்பேறி நானே இதுலாம் செய்றேன். நீங்க செய்ய மாட்டீங்களாப்பா?!

      Delete
  5. அழகாய் இருக்கிறது.

    பாராட்டுகள்.

    ReplyDelete