ஆயிரந் தாமரை போலும் ஆயிரஞ் சேவடி யானும்
ஆயிரம் பொன்வரை போலும் ஆயிரந் தோளுடை யானும்
ஆயிரம் ஞாயிறு போலும் ஆயிரம் நீண்முடி யானும்
ஆயிரம் பேருகந் தானு மாரூ ரமர்ந்தவம் மானே .
ஆயிரம் ஞாயிறு போலும் ஆயிரம் நீண்முடி யானும்
ஆயிரம் பேருகந் தானு மாரூ ரமர்ந்தவம் மானே .
என ஆதி அந்தம் இல்லாத திருவாரூர் தலத்தில் உறையும் சிவனை அப்பர் பாடுகிறார்.
ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி!
அருள் பொங்கும் முகத்தைக் காட்டி இருள் நீக்கும் தந்தாய் போற்றி!
தாயினும் பரிந்து சாலச் சகலரை அணைப்பாய் போற்றி!
தழைக்கும் ஓர் உயிர்கட்கெல்லாம் துணைக்கரம் கொடுப்பாய் போற்றி!
தூயவர் இதயம் போலத் துலங்கிடும் ஒளியே போற்றி!
தூரத்தே நெருப்பை வைத்து சாரத்தைத் தருவாய் போற்றி!
ஞாயிறே நலமே வாழ்க நாயகன் வடிவே போற்றி!
நானிலம் உள நாள் மட்டும் போற்றுவோம் போற்றி போற்றி!
என கர்ணன் படப்பாடலில் சூரியதேவனை புகழ்ந்து பாடுவர்.
வாரணம் ஆயிரம் சூழ வலஞ்செய்து
நாரணன் நம்பி நடக்கின்றான் என்று எதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறம் எங்கும்
தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோழீ நான் ...
பூரண பொற்குடம் வைத்துப் புறம் எங்கும்
தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோழீ நான் ...
வாரணம்ன்னா வாழை, ஆயிரம் வாழைமரங்களை கொண்டு அமைக்கப்பட்ட மேடையில் தன் கரம் பிடித்து நாராயணன் நடக்கின்றான்னு ஆண்டாள் பாடுகிறாள்...
விஷ்ணு பகவானின் ஆயிரம் நாமங்களை கொண்ட விஷ்ணு சகஸ்ரநாமத்திற்கு அழகு தமிழில் ’பேராயிரம்’ன்னு பேரு. தான் நினைத்த நேரத்தில் உயிர் பிரியும் வரத்தை தாய் கங்காதேவியிடம் வாங்கி இருந்த பீஷ்மர், மகாபாரத போரில் அர்ஜுனன் விட்ட அம்பினால் துளைக்கப்பட்டு அம்பு படுக்கையில் இருக்கிறார். போர் முடிவுற்று, தருமருக்கு பட்டாபிஷேகமும் முடிந்தது. ஆனாலும் மகாபாரத போரின் விளைவுக்காக மனம் வருந்திய தருமர், தன்னால் தருமம் பிழையாகியதோ என பாட்டனாரிடம் தன் கவலையை சொல்லி
ஒன்றேயான சிறந்த தெய்வம் யார் ?
அவருக்குரிய மேலான நிலை எது ?
அவரை எப்படிப் பாடியும் துதித்தும் மானுடர் மங்களம் பெறுவர் ?
எல்லா வழிபாட்டு நெறிகளிலும் சிறந்தது எது ?
எந்த ஜபத்தினால் மனிதன் உலக பந்தங்களில் இறந்து விடுபடுகின்றான் ? என
தனது சந்தேகத்தினை பாட்டனாரிடம் தருமர் கேட்க, அதற்கு பீஷ்மர் அளித்த விளக்கமே விஷ்ணு சகஸ்ரநாமம் என்னும் பேராயிரம். ஒரே தெய்வம், உலக நாயகன் அளவிலன், புருஷோத்தமனான ஸ்ரீமன் நாராயணனே என்றும், அவனைப் போற்றும் ஆயிரம் நாமங்கள் மனிதனை உய்விக்கும் என்றும் அதனைதருமனுக்கு மட்டுமில்லாம பிந்தை உலகின் நற்பேற்றுக்காகவும் எடுத்து கூறினார்.
தாயரின் பரி சேடியர். தாது உகு
வீ. அரித் தளிர். மெல்அணை. மேனியில்
காய் எரிக் கரியக் கரிய. கொணர்ந்து.
ஆயிரத்தின் இரட்டி அடுக்கினார்.
வீ. அரித் தளிர். மெல்அணை. மேனியில்
காய் எரிக் கரியக் கரிய. கொணர்ந்து.
ஆயிரத்தின் இரட்டி அடுக்கினார்.
மகரந்தப்பொடிகள் சிந்தப்பட்ட மலர்களாலும், மெல்லிய தளிர்களாலுமான சீதையின் படுக்கையின் மெத்தைகள், சீதையின் திருமேனியில் எரியும் காமத்தீயினால் கருகிக்கொண்டேயிருக்க.... தாயைவிட அன்பு காட்டும் சீதையின் தோழியர் இரண்டாயிரம் (ஆயிரத்தின் இரண்டு மடங்கு) படுக்கை மெத்தைகளை ஒன்றன்பின் ஒன்றாகக் கொண்டு வந்து மேன்மேல் அடுக்கி அமைத்தார்கள்ன்னு மிதிலையில் ராமனை கண்ட சீதையின் நிலையை எடுத்துச்சொல்லும் பாடல் இது.
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் திண்தோள் மணிவண்ணா! உன்
செவ்வடி செவ்வி திருக்காப்பு,
அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி
ஆயிரம் பல்லாண்டு
வடிவாய் நின் வல மார்பினில் வாழகின்ற
மங்கையும் பல்லாண்டு
வடிவார் சோதி வலத்து உறையும் சுடர்
ஆழியும் பல்லாண்டு
படைபோர் புக்கு முழங்கும் அப் பாஞ்ச
சன்னியமும் பல்லாண்டே...
அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி
ஆயிரம் பல்லாண்டு
வடிவாய் நின் வல மார்பினில் வாழகின்ற
மங்கையும் பல்லாண்டு
வடிவார் சோதி வலத்து உறையும் சுடர்
ஆழியும் பல்லாண்டு
படைபோர் புக்கு முழங்கும் அப் பாஞ்ச
சன்னியமும் பல்லாண்டே...
விஷ்ணு பகவானின் அலங்காரத்தினால் இறைவனுக்கு திருஷ்டி பட்டுவிடக்கூடாதென்பதற்காக பாடப்படும் திருஷ்டி பாடல்...
அகிலத்தை காக்கும் அன்னைக்கு, ஆயிரம் நாமம் உண்டு, பக்தர்களின் கஷ்டங்களை தெரிஞ்சுக்கும் வகையில் அவள் மேனியெங்கும் கண்களை கொண்டதால் அவளுக்கு ஆயிரம் கண்ணுடையாள்ன்னு பேரு.
ஆயிரம் ஆயிரம் நன்மைகள்
அனுதினமும் என்னை சூழ்ந்திட
அனுதினமும் என்னை சூழ்ந்திட
கிருபையும் இரக்கமும் அன்பும் கொண்டீரே!
நல்ல எபிநேசராய் என்னை
நடத்தி வந்தீரே
நன்றி சொல்ல வார்த்தை இல்லை...
ஆதி அந்தமில்லாத இறைவனை, அவனை உயர்த்தி சொல்ல எண்ணிக்கையிலடங்கா எண்கள் இருந்தாலும், அவனின் பராக்கிரமத்தை எடுத்து சொல்ல 1000ன்ற எண்ணைதான் எல்லாரும் எடுத்துக்கிட்டாங்க. இதிலிருந்து என்ன தெரியுதுன்னா 1000ன்றது அம்புட்டு ஸ்பெஷல். இறைவனை குளிர்விக்க, ஆயிரம் மலர்கொண்டு அலங்காரம், ஆயிரம் நாமாவளி, 1008 சங்காபிஷேகம்ன்னு இறைவனுக்குண்டான சிறப்புகள் அனைத்தும் ஆயிரத்தில்தான் எல்லாம் தொடங்கும்.’’...
இறைவனின் பாடல் மட்டுமல்ல.....
ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களே
இங்கிரண்டு ஜாதி மல்லிகை
தொட்டுக்கொள்ளும் காமன் பண்டிகை
கோவிலில் காதல் தொழுகை...ன்னு கார்த்திக்கும்....
ஆயிரம் நிலவே வா! ஓராயிரம் நிலவே வான்னு எம்.ஜி.ஆரும்... ஆயிரம் மலர்களே மலருங்கள்ன்னு ரதியும், ஆயிரம் பூக்கள் மலரட்டும்....ன்னு முகம் தெரியாத நாயகியும், ஆயிரம் ஜன்னல்கள் கொண்ட வீடுன்னு சூர்யாவும் குடும்பத்தை பத்தியும் பாட இந்த ஆயிரத்தைதான் தேர்ந்தெடுத்திருக்காங்க.
பக்தியிலும், காதலிலும் மட்டும் இந்த ஆயிரம் (1000) பயன்படுத்தப்படல. சமுதாயத்தின் அன்றாட பேச்சு வழக்கிலும் இந்த ஆயிரம், ஆயிரம் முறை இடம்பெறும். ஆயிரங்காலத்து பயிர்ன்னு கல்யாணத்தையும், ஆயிரம் பேரை கொன்னவன் அரை வைத்தியன், யானை இருந்தாலும் ஆயிரம் பொன்னு, இல்லன்னாலும் ஆயிரம் பொன்னுன்னு மக்கள் பேச்சில் அடிப்படும். ஆயிரந்தான் இருந்தாலு அவன் சொல்லி இருக்கக்கூடாதுன்னும் இந்த வார்த்தை பயன்படுது.
நம்மூர்ல மொய் எழுதுதல்கூட 1001ல தொடங்கினால்தான் மருவாதி. இல்லன்னா வெட்டு குத்துலாம் நடக்கும். 12ல 1000 மார்க்குக்கு மேல எடுத்தால்தான் கெத்தே. ஒரு மார்க் குறைஞ்சாலும் பாவமா பார்க்குறதும், ஏளனமா சிரிக்குறதும், அட்வைசும் தொடரும் என்னடா இன்னிக்கு ஆயிரத்தின் சிறப்புகள் பத்தி போகுதேன்னு யோசிக்குறீங்களா?!
இன்னிக்கு என் வலைப்பூவில் ஆயிரமாவது பதிவு. அதான், இப்படி ஒரு பதிவு. எட்டு வருசத்துக்கு முந்தி விளையாட்டாய் ஆரம்பித்தது இந்த வலைப்பூ. குடும்ப சூழ்நிலை காரணமா அப்பப்ப வரமுடியாம போனாலும், ஒரு கைக்குழந்தையை வீட்டில் விட்டு வந்திருக்கும் தாயின் நிலையில்தான் அந்த காலக்கட்டத்தில் இருந்திருக்கேன். எங்க போனாலும், எதை படிச்சாலும் இதை பதிவாக்கமுடியுமான்னு யோசிப்பேன். போகுமிடமெல்லாம் படமெடுத்தால் அதுக்கும் பசங்க திட்டுவாங்க. தினத்துக்கும் எதாவது எழுதுறியே! உனக்கு போரடிக்கலியான்னு... கடவுள் கைவிட்ட தருணத்தையும், அப்பா அம்மா பிள்ளைகள்ன்னு கைவிட்ட தருணத்திலும், பிளாக் ஒருபோதும் என்னை கைவிட்டதில்லை. அதனாலாயே எனக்கு பிளாக் எழுத பிடிக்கும்.
நன்றி மறத்தல் பாவத்திலும் பாவம், அதேப்போல விரும்பியதை வெறுக்கவும் முடியாது. வாய்ப்பு கிடைக்கும்வரை எதாவது எழுதிக்கிட்டேதான் இருப்பேன். அப்படி எழுத உங்க ஆதரவும், கருத்தும் தேவை.
இன்னிக்கு பிளாக் பக்கம் பலப்பேரு வரலைன்னாலும், 100 பதிவு வரை சும்மா கிறுக்கிட்டு இருந்த என்னை, என் எழுத்துகளில் மாற்றத்தை உண்டு பண்ணியவர்கள் பலர். ஒவ்வொரு விசயத்தில் ஒவ்வொருவர் வழிக்காட்டி இருக்காங்க. எல்லாரையும் இங்க சொல்லிக்கிட்டு இருந்தால் இன்னும் நாலு பதிவு போடனும். அதனால, என் பிளாக் நாலு பேராச்சும் ரசிக்கும்படியா இருக்க உதவியருக்கு ஆயிரமாயிரம் நன்றிகள். நீங்க(ள்) இல்லாமல் இது சாத்தியமே இல்ல.
அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றியுடன்,
ராஜி
வாழ்த்துக்கள்,தங்கச்சி.............அம்மாடியோவ்.......ஆயிரம்........//ஆயிரங்களில் பதிவும் படங்களும் அருமை....மீண்டும் வாழ்த்துக்கள்!
ReplyDeleteஎந்த பதிவு போட்டாலும் சலிக்காம வரும் ஆட்களில் நீங்களும் ஒருவர். இத்தனைக்கும் நீங்க வலைப்பதிவர்கூட இல்ல. ஆனா, எந்த பிரதிபலனும் இல்லாம ஓடிவந்து பதிவை வாசித்து இங்கயும், முகநூலிலும் கருத்து சொல்லி வாழ்த்துவதற்கு நன்றிண்ணே!
Deleteஉங்கள் ஆதரவு இனியும் தொடரனும்ன்னு வேண்டிக்குறேன்ண்ணே
ஆயிரம்பதிவுகள் ப்லாகில் மட்டும் இன்னும் எத்தனை எதனை முகநூலிலும் வேறு இடங்களிலும் வாழ்த்துகள் மேம்
ReplyDeleteஅது பொழுதுபோக்குப்பா. இது உயிர்மூச்சு. அங்க என்ன வேணும்ன்னாலும் கிண்டல் செய்வேன், மொக்கை வாங்கினாலும் அமைதியா இருப்பேன். இங்க ஒரு சிறு குழப்பம்ன்னாலும் அல்லாடிப்போவேன்.
Deleteதொடர் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிப்பா
மகிழ்ச்சி சகோதரி.... வாழ்த்துகள் பல...
ReplyDeleteநன்றிண்ணே.
Deleteஎன் வலைப்பூ இத்தனை அழகா இருக்க நீங்களும் ஒரு காரணம். நன்றிண்ணே
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
ReplyDeleteஅண்ணே! பயப்படாதே! அண்ணிக்கிட்ட உளர்ற மாதிரி இங்க உளராத.
Deleteவாழ்த்துகளுக்கு நன்றி
1001 வாழ்த்துகள் சகோ தொடரட்டும்...
ReplyDeleteதொடரும்ண்ணே
Deleteஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ..
ReplyDeleteநல்ல அருமையான தகவல்களை எல்லாம் தருகிறாய் அம்மணி.
தொய்வின்றி தொடரட்டும் உன் பணி
ஓ! பாட்டாவே படிச்சுட்டீங்களா?!
Deleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றிப்பா
1000 வாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்துகளுக்கு நன்றி சகோ
Deleteவாழ்த்துக்கள் ராஜி, வாழ்க வளமுடன்.
ReplyDeleteபதிவு அருமை.
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிம்மா
Delete1000 மாவது பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ராஜி :)
ReplyDeleteநன்றி ஏஞ்சல்
Deleteஆயிரமாவது பதிவுக்கு வாழ்த்துகள். உங்களின் நிறைய பதிவுகள் மிகவும் அக்கறை எடுத்து எடுத்து எழுதப்பட்டு ரசிக்க வைத்தவை.
ReplyDelete// ஆயிரங்கள் நீட்டி //
ஆயிரம் கரங்கள் நீட்டி... தலைப்பிலும் ஒரு சிறு திருத்தம் தேவை.
நிறம் மாறாத பூக்கள் - 'ஆயிரம் மலர்களே மலருங்கள்' பாடலை விட்டுட்டீங்க... இன்னும் பொருத்தமா இருந்திருக்கும்!
இதோ மாத்திட்டேன். இப்படி குறைகளை சொல்லி திருத்த ஆளிருந்தால் எல்லாமே சாத்தியம்
Deleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ
1000 என்பது வெறும் எண்ணிக்கை அல்ல. அனுபவம், மேன்மை, மேம்பாடு, அறிவுத்திறன், உழைப்பு என்பன போன்ற பல கூறுகளின் தொகுப்பு. சமூகம் சார்ந்தவை, சமயம் சார்ந்தவை என்ற நிலைகளில் அந்தந்த கோணத்தில் பார்த்து, உரிய இடங்களில் சரியாக தெரிவு செய்த புகைப்படங்களைத் தேடிப்பிடித்து இணைத்து, வாசகர்களை உடன் அழைத்துச் செல்கின்ற உங்களின் பாணி போற்றத்தக்கது. மென்மேலும் பெருகவும், மெருகு ஏறவும் மனம் நிறைந்த வாழ்த்துகளை - தொடர்ந்து உங்கள் வலைப்பூவினை வாசிப்பவன் என்ற நிலையில் - தெரிவிப்பதில் மகிழ்கிறேன்.
ReplyDeleteபதிவினை தேர்வு செய்வதில் சிக்கல் இல்லப்பா. ஆனா, படம் தேடி எடுக்கத்தான் சிரமம். இப்படி படம் இணைக்க சொல்லி கொடுத்தவங்களுக்குதான் இந்த பாராட்டு போய் சேரனும்.
Deleteஆரம்பக்கால கட்டத்துல நானும் ஏனோதானோன்னுதான் படம் போட்டுக்கிட்டு இருந்தேன். இந்த பதிவுக்கு இந்த படம் நல்லா இருக்கும்ன்னு சொல்லி படத்தை அனுப்பி, அனுப்பி இப்ப நானே படத்தை தேர்வு செய்ய கத்துக்கிட்டேன்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிப்பா
ராஜி க்கா ..சூப்பர்..
ReplyDeleteஆயிரம் பதிவுகள்...பார்க்கவே பிரம்மிப்பு.
வாழ்த்துக்கள் க்கா...
உங்க எல்லா பதிவும் எனக்கு மிக விருப்பமே..
எவ்வொலோ செய்திகள், விளக்கங்கள்,படங்கள் என உங்க கடின உழைப்பை பார்க்கும் போது இன்னும் வியப்பு அதிகம் தான் ஆகுது..
எனக்கு உங்க பதிவுகள் தான் முன் மாதரி..அதுக்கும் நன்றி க்கா..
இன்னும் நிறைய நிறைய எழுதி...லட்சங்களை தொடட்டும்...உங்க பதிவுகள்.
லட்சம்ன்னா எவ்வளவுன்னு தெரியுமா அனு!? அதுக்கு என் வாழ்நாளே பத்தாது.
Deleteஎன் பதிவு முன்மாதிரியா இருக்குன்னா சந்தோசம்தான்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அன்ய்
அக்கா...கனவுகள் எப்பவும் பெருசா இருக்கணும் ல..😊😊😊
Deleteஇது பேராராராராராராராராராராராசை
Delete10 அட்மின் சேர்த்து தினத்துக்கு பத்து பதிவு போட்டாலும் சாத்தியப்படாதுப்பா
எங்கள் இருவரின் மனமார்ந்த வாழ்த்துகள். உங்களது ஒவ்வொரு பதிவும் உழைப்பு மிக்கது. பொறுமையா உட்கார்ந்து டைப்புவது. என்று பல சொல்லலாம். ஹான் படங்கள் அப்லோட் செய்வது என்று....(கீதா: எனக்கு பொறுமை இன்னும் வேண்டும். இப்பலாம் எழுதவே சுணக்கமா இருக்கு. )
ReplyDeleteவாழ்த்துகள். தொடரட்டும் உங்கள் பதிவுகள்!!!
எழுதும் வேலை எனக்குஎப்பவுமே பிடிக்கும் கீதாக்கா. படிக்கும்போத் பிள்ளைங்களுக்கு எழுதி தருவேன். ஆனா படம் வரைய வராது. அவங்க எனக்கு படம் வரைஞ்சு தந்துடுவாங்க.
Deleteஅந்த பழக்கம் இப்ப கணினியிலும் தொடருது,,,
இருவரின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்! உங்களின் ஒவ்வொரு பதிவிலும் இருக்கும் சிரத்தையை வியந்து பார்த்திருக்கிறேன்! ஒருகாலத்தில் வலைப்பூவில் தொடர்ந்து இயங்கிய போது உங்களின் பதிவுகள் சிலவற்றைப்போல நானும் எழுத வேண்டும் என்று எண்ணியதுண்டு. தற்போது சூழல் சரியில்லாமையால் வலையுலகம் வரவில்லை! ஆயிரம் பல்லாயிரம் ஆகட்டும்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteஎன்னைப்போல எழுத ஆசையா?! ஆச்சர்யம்தான் சகோ.
Deleteஎத்தனை முயன்றும் உங்களைப்போல சிறுகதை எழுத முடிலன்னு எனக்கு வருத்தம்..
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ
ஆயிரம் பதிவுகள்.....
ReplyDeleteமனம் நிறைந்த வாழ்த்துகள். மேலும் பல பதிவுகள் நீங்கள் எழுதிட எனது வாழ்த்துகள்.
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிண்ணே
Deleteஆயிரம் ஆயிரம் நன்மைகள்
ReplyDeleteஅனுதினமும் என்னை சூழ்ந்திட
கிருபையும் இரக்கமும் அன்பும் கொண்டீரே!
நல்ல எபிநேசராய் என்னை
நடத்தி வந்தீரே
நன்றி சொல்ல வார்த்தை இல்லை...
இதைத் தான் சொல்ல வேண்டும் தாங்களுக்கு