கிராஃப்ட், தையல் வேலை, கோலம்லாம்தான் கைவண்ணத்துல சேருமா என்ன?! எழுதுறதும் கைவண்ணத்துலதான் சேரும்ன்ற நம்பிக்கை எனக்கு. அதான் முகநூலில் பகிர்ந்ததுலாம் இங்க பதிவாக்கி இருக்கேன்... மத்தபடி, உடம்புக்கு முடிலன்னு கிராஃப்ட் செய்யாமலாம் இல்ல.
சில நாட்களுக்கு முன் ஒருவேலையா சி.எம்.சி மருத்துவமனைக்கு போய் இருந்தேன். என்னாக்கூட என் பெரிய பொண்ணும் வந்திருந்தா. எங்கக்கிட்ட வந்த ஒரு அம்மா, என் பொண்ணுக்கு டயாலிஸ் பண்ணி இருக்கு, வேற ஹாஸ்பிட்டல் போகனும்.ஒரு முன்னூறு ரூபா இருந்தா கொடுங்கம்மா, ஆட்டோக்கு ஆகும்ன்னு கேட்டாங்க. அந்தம்மாவை பார்க்க பாவமா இருந்துச்சு. நாங்களும் கொடுத்து விட்டோம்.
சில நாட்கள் கழித்து மீண்டும் சி.எம்.சிக்கு போய் இருந்தேன். இந்தமுறை அப்பா கூட வந்திருந்தார். அதே இடம்.... அதே அம்மா... அதே டயலாக்... என் அப்பா, நூறு ரூபா கொடுக்க போனார்...
நான் அந்தம்மாக்கிட்ட,
டயாலிஸ் பண்ணுன பொண்ணை நீங்க ஏன்மா ஆட்டோவில் தூக்கிட்டு போகனும்?! நாங்க கார்லதான் வந்திருக்கோம்(சும்மாதான் சொன்னேன்). பாப்பாவை அதுலயே வசதியா கூட்டிட்டு போய்டலாம்ன்னு சொன்னேன். அதுக்கு அந்தம்மா மாலைலதான் கூட்டி போவோம். இப்ப டயாலிஸ் நடந்திட்டிருக்கு. அதுவரைக்கும் நீங்க இருப்பீங்களா?!ன்னு ஜகா வாங்கிச்சு. இல்ல, எனக்கும் வேலை இருக்கு. நான் மாலை வரை இங்கதான் இருப்பேன்னு சொன்னேன். இருங்க என் வீட்டுக்காரரை கேட்டு வரேன்னு சொல்லிட்டு போனவங்க... போனவங்கதான்.
எப்படிலாம் ஏமாத்துதுங்க!!!! இனி யாராவது நிஜமாவே உதவி கேட்டால் செய்ய மனசு வருமா?! என்னம்மா நீங்க இப்படி பண்றீங்களேம்மா!!!
கடை, ஸ்கூலுக்கு பிள்ளைகளை கூட்டி வர நைட்டி போட்டுக்கிட்டு போறப்பொண்ணுங்களை கிண்டல் பண்ணும் சமூகம்....
கடை, பேங்க், ஹாஸ்பிட்டல், ஸ்கூல், ஹோட்டல்ன்னு அரை டவுசர் போட்டுக்கிட்டு வரும் ஆண்களை ஒன்னும் சொல்றதில்லையே! அது ஏனுங்க?!
என்னவொரு ஆணாதிக்க சம்முவம்?!
குடிச்சா கசக்கும், விர்ர்ர்ர்ர்ன்னு இருக்கும் தெரிஞ்சுதானே குடிக்குறீங்க!! அப்புறம் எதுக்கு குடிச்சு முடிச்சதும் தலையை ஆட்டுக்கடா மாதிரி ஆட்டுறீங்க?!
உனக்கெப்படி இது தெரியும்ன்னு கேக்காதீங்கப்பு. செங்கல் சூளைக்கூ ஒரு வேலையா போய் இருந்தபோது அருகிலிருந்த டாஸ்மாக்கை, பொழுது போகாம ஒன் ஹவர் வாட்சிங்க்ல தெரிஞ்சுக்கிட்டது..
பெண் கணவனுக்கு அடங்கியவள், வீட்டுக்கு உழைப்பவள்ன்னு ஒரு சாராரும்... பெண் போகப்பொருள்ன்னும் ஒரு சாராரும்.. பெண் புனிதமானவள், சகலமும் அவளே, அவளை கொண்டாடனும், மதிக்கனும்ன்னு இன்னொரு சாராரும்... சொல்லிட்டு, கட்டக்கடைசியா அவளை மனுஷியா மட்டும் பார்க்கலைன்னு மட்டும் இன்னிய சமூக நிலவரம் சொல்லுது.
உன்னைக்காண வந்து
உன்னிடமும் சேராமல்
வந்த வழியும்
மறந்து அல்லாடிக்கொண்டிருக்கும்
மனதிடம் எப்படி சொல்வேன்?!
அங்கே அதற்கு இடமில்லையென!!!
................................
அன்புக்குரியர்வகள்
துரோகம் செஞ்சா
கோவிக்காதீங்க.
நம்ம அன்பே அவங்களை
ஒண்ணும் செய்யாதபோது
கோவம்தானா மாற்றத்தை
உண்டு பண்ணிடபோகுது?!
..............................
தலைக்குமேல் தூக்கி வைத்து கொண்டாடவும் முடியாம...
தலைய சுத்தி வீசவும் முடியாதொரு உறவு எல்லோருக்குமே இருக்கும்தானே?!
..........................
சிலவற்றை மறுபடியும் இங்கும் வாசித்தேன்...
ReplyDeleteஅன்புக்குரியவர்கள் :- மிகவும் அருமை...
சரி, அதுக்காக இப்படியா அழுவறது...!?!
அழுதாவாலாவது மசிவாங்களான்னுதான்...
Deleteஇந்த டயாலிசிஸ் மேட்டர் ஃபேஸ்புக்கில் படித்தேனோ? படித்த மாதிரி இருக்கே...
ReplyDeleteஇது மொத்தமும் ஃபேஸ்புக் காபிதான் சகோ
Deleteவெங்கட் தளத்தில் நான் இந்த ட்ரவுசர் போட்டு வெளியில் அலையும் ஆண்கள் பற்றிச் சொல்லி இருந்தேன். எனக்கும் பிடிக்காது. எரிச்சல் வரும்!!!
ReplyDeleteசின்ன பசங்க போட்டுக்கிட்டு இருந்தால் அழகா இருக்கும். நல்லா காண்டாமிருகம் மாதிரி இருக்கும் ஆண்களும் போட்டுக்கிட்டு திரியும்போது அப்படியே அறையலாம் போல இருக்கும்.
Deleteஅமெரிக்கா போன்ற நாடுகளில் சில நாட்களோ பல நாட்களோ இருந்த நம் இந்தியர்கள் ட்ரௌசர் போட்டு அலையறதை மதிப்பு என்று எண்ணுகிறார்கள் போல் தோன்றும்
Deleteகவிதைகளை ரசித்தேன்.
ReplyDeleteநன்றி சகோ
Deleteஅருமையான பதிவு
ReplyDeleteசுவைத்தேன்
நன்றி சகோ
Deleteசுவையான பதிவு கா..
ReplyDeleteநன்றி அனு
Deleteஅருமை
ReplyDeleteநன்றி சகோ
Deleteசுவையான பகிர்வு. நன்றி.
ReplyDelete