Sunday, July 08, 2018

அன்புள்ள சந்தியா.... - பாட்டு கேக்குறோமாம்

ஒருதலைக்காதல், சொன்ன காதல், சொல்லாக்காதல் வரிசையில் பொருந்தா காதல் பத்தி வந்த படம். காலேஜில் சீனியர்  பொண்ணு மேல காதல் சொல்ல வந்தேன் படம். அதென்னமோ அம்மாவாகிட்டதாலோ இல்ல வயசாகிட்டதாலோ இதுமாதிரி காலேஜ், பள்ளிக்கால காதல் படங்களும், சின்ன பிள்ளைங்க ஹீரோவா நடிக்கும்  படங்களை பார்க்க பிடிப்பதில்ல. 

எனக்கு பிடிக்கலைன்றதுக்காக பசங்க பார்க்காம இருக்காதுல்ல!. அதுங்க பார்க்கும்போது இந்த படத்தின் பாடலை கேட்டிருக்கேன். பாடல்லாம் செமயா இருக்கும்.  தன் காதலை சீனியர் பொண்ணு ஏத்துக்கலைங்குறதுக்காக ஹீரோ பாடும் பாடல் இது.... 

யுவன் சங்கர் ராஜா  நல்லா இசையமைச்சிருப்பார் இந்த பாடலை... நா. முத்துக்குமார் நல்லா எழுதி இருப்பார். 

அன்புள்ள சந்தியா உனை நான் காதலிக்கிறேன்..
நீ சொல்லும் ஒரு வார்தை அதற்காக
நான் காத்திருப்பேன்..
என்னை எனக்கு தருவாயா?!
இல்லை காட்டில் விடுவாயா?!
உன் பதிலை எதிர்ப்பார்த்து
இங்கே எனது இதயம்
எங்கே எனது இதயம்

அன்புள்ள சந்தியா உனை நான் காதலிக்கிறேன்

நீ சொல்லும் ஒரு வார்தை அதற்காக
நான் காத்திருப்பேன்


எந்தப்பக்கம் நீ செல்லும்போதும்
எந்தன் காதல் ஆகாயம் ஆகும்
கண்ணை மூடிக்கொண்டாலும் மறையாதே

தூறல் வந்தால் கோலங்கள் அழியும்,

காலம் வந்தால் கல்வெட்டும் அழியும்,
என்றும் பெண்ணே என் காதல் அழியாதே!
அடி கோயில் மூடினால்கூட

கிளி கவலைப்படுவதே இல்லை
அந்த வாசல் கோபுரம்மீது
அதன் காதல் குறைவதே இல்லை..
உந்தன் காலடி எந்தன் வாழ்வின் வேரடி




அன்புள்ள சந்தியா உனை நான் காதலிக்கிறேன்
நீ சொல்லும் ஒரு வார்தை அதற்காக
நான் காத்திருப்பேன்


தாயை கண்டால் தன்னாலே ஓடும்
பிள்ளைப்போலே என் காதல் ஆகும்
அன்பே அதை உன் கண்கள் அறியாதா?!…
என்றோ யாரோ உன் கையை தொடுவார்

இன்பம் துன்பம் எல்லாமே அறிவார்
அன்பே அது நானாகக்கூடாதா?!
உன் காதல் என்னிடம் இல்லை

நான் கரைக்க நினைக்கிறேன் கல்லை
இந்த காதல் என்பதே தொல்லை
உயிரோடு எரிக்குதே என்னை
உன்னை நீங்கினால் எங்கே போவேன் நானடி?!


அன்புள்ள சந்தியா உனை நான் காதலிக்கிறேன்
நீ சொல்லும் ஒரு வார்தை அதற்காக
நான் காத்திருப்பேன்
என்னை எனக்கு தருவாயா?!
இல்லை காட்டில் விடுவாயா?!
உன் பதிலை எதிர்ப்பார்த்து…

அன்புள்ள சந்தியா உனை நான் காதலிக்கிறேன்

நீ சொல்லும் ஒரு வார்தை அதற்காக
நான் காத்திருப்பேன்
ஓ….

பாடலை கேட்டுட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க...
நன்றியுடன் 
ராஜி

4 comments:

  1. எனக்கு ஏனோ ரசிக்கவில்லை வசனத்துக்கு மெட் அமைத்துப் பாடால் ஆக்கி இருக்கிறார்கள் நானும் காதலித்தவன்தான் காதலை விட ஏதோஒரு இயலாமை தென்படுகிறது

    ReplyDelete
  2. ம்ம்ம்.... அவ்வளவாக பிடிக்கவில்லை. ரசிக்க முடியல.

    ReplyDelete
  3. வசன கவிதையாய் இருக்கிறது.

    ReplyDelete
  4. எனக்கு மிகவும் பிடிக்கும் இந்தப் பாடல்..கார்த்திக்கின் குரலில் மிகவும் அருமையாக இருக்கும்..முதன்முறையாகக் கேட்பவர்களுக்குப் பிடிக்காதது போல் தோன்றலாம்..

    ReplyDelete