கையில் பழுப்பு நிற பேப்பரை சுருளை எடுத்துக்கிட்டு பெண்களும், சைக்கிள் பாரில் அதே பழுப்பு நிற பேப்பர் சுருளை சொருகிக்கிட்டு ஆண்களும் வலம் வந்ததை 90களில் சர்வ சாதாரணமாய் பார்க்கக்கூடும். எங்கே போறீங்கன்னு கேட்டா டைப் ரைட்டிங்க் கிளாசுக்கு போறேன்னு கெத்தா சொல்வாங்க. அந்த காலக்கட்டத்தில் அரசாங்க வேலைக்கு போக ஆசைப்படுறவங்க டைப் ரைட்டிங் கத்துக்குவாங்க. தமிழ், ஆங்கிலம்ன்னு நம்மூரில் இருந்துச்சு. லோயர், ஹையர்ன்னு ரெண்டு பிரிவா கிளாஸ் எடுப்பாங்க. ஹையர் கிளாசில் ஷார்ட் ஹாண்டும் சேர்த்து படிச்சா வேலை கன்ஃபார்ம்ன்னு இருந்த நேரம் அது. எப்படியாவது அரசு வேலைக்கு அனுப்பனும்ன்னு ஆசைப்பட்ட என் அப்பா என்னைய கொண்டு போய் டைப் ரைட்டிங்க் கிளாசில் சேர்த்து விட்டார். கிளாசில் பசங்க தொந்தரவு இருக்காதுன்னும், ரோட்டில் அதிக நடமாட்டம் இருக்காதுன்னும் காலை 6 டூ 7ன்னு கிளாஸ்.
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்ன்னு சொல்வாங்க. அதுமாதிரி நம்ம அரட்டைக்கு அதுவே பலமாகி போனது. யாரும் பார்க்க மாட்டாங்கன்னு தைரியத்தில் அடிச்ச லூட்டிகள்.. எப்பவாவது அந்த வழியா போகும்போது கண்முன் வந்து போகும். அரட்டையோடு படிச்சாலும் லோயர் ஃபர்ஸ்ட் கிளாஸ் பாஸ். அதுக்கப்புறம் ஹையர்கிளாஸ் கொஞ்ச நாள் போனேன். அதுக்குள் கல்யாணம் ஆகிட்டுது. அன்னிக்கு, பசங்களோடு சேர்ந்து போட்டி போட்டு அடிச்ச ஸ்பீட், இன்னிக்கும் போன்லயும், கணினிலயும் கைக்கொடுக்குது. டைப் ரைட்டருக்கு தட்டச்சு எந்திரம்ன்னு பேரு. ஒவ்வொரு எழுத்தா தட்டி தட்டி எழுத்துக்களை அச்சடிப்பதால் இதுக்கு தட்டச்சுன்னு பேரு உண்டானது. தட்டச்சு பயிற்சியில் ஷார்ட் ஹாண்ட்ன்னா சுருக்கெழுத்து பயிற்சின்னு பேரு. சரளமா பேசிக்கிட்டு போறதை சட்டுன்னு குறிப்பெடுக்க புள்ளிகள், கோடுகள் மூலமா குறிப்பெடுத்துக்கிட்டு பின்பு விரிவா டைப் பண்ணி தரனும். பத்திரிக்கை துறையிலும் நிருபர்களுக்கு பெரும் உதவியா இருந்துச்சு, ஆஃபீசில் செக்கரட்டரி, பி.ஏன்னு இப்படி டைப் அடிச்சு தரவே ஒரு ஆள், இருப்பாங்க.
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்ன்னு சொல்வாங்க. அதுமாதிரி நம்ம அரட்டைக்கு அதுவே பலமாகி போனது. யாரும் பார்க்க மாட்டாங்கன்னு தைரியத்தில் அடிச்ச லூட்டிகள்.. எப்பவாவது அந்த வழியா போகும்போது கண்முன் வந்து போகும். அரட்டையோடு படிச்சாலும் லோயர் ஃபர்ஸ்ட் கிளாஸ் பாஸ். அதுக்கப்புறம் ஹையர்கிளாஸ் கொஞ்ச நாள் போனேன். அதுக்குள் கல்யாணம் ஆகிட்டுது. அன்னிக்கு, பசங்களோடு சேர்ந்து போட்டி போட்டு அடிச்ச ஸ்பீட், இன்னிக்கும் போன்லயும், கணினிலயும் கைக்கொடுக்குது. டைப் ரைட்டருக்கு தட்டச்சு எந்திரம்ன்னு பேரு. ஒவ்வொரு எழுத்தா தட்டி தட்டி எழுத்துக்களை அச்சடிப்பதால் இதுக்கு தட்டச்சுன்னு பேரு உண்டானது. தட்டச்சு பயிற்சியில் ஷார்ட் ஹாண்ட்ன்னா சுருக்கெழுத்து பயிற்சின்னு பேரு. சரளமா பேசிக்கிட்டு போறதை சட்டுன்னு குறிப்பெடுக்க புள்ளிகள், கோடுகள் மூலமா குறிப்பெடுத்துக்கிட்டு பின்பு விரிவா டைப் பண்ணி தரனும். பத்திரிக்கை துறையிலும் நிருபர்களுக்கு பெரும் உதவியா இருந்துச்சு, ஆஃபீசில் செக்கரட்டரி, பி.ஏன்னு இப்படி டைப் அடிச்சு தரவே ஒரு ஆள், இருப்பாங்க.
2000த்தின் ஆரம்பக்காலக்கட்டத்து வரை எல்லா அலுவலகங்களிலும் உள்ள நுழையும்போது நம்மை வரவேற்பது தட்டச்சு இயந்திரத்தின் சத்தமே. அப்புறம்தான் என்ன ஏதுன்னு மத்தவங்க கேட்பாங்க. கம்ப்யூட்டர்கள் வர்றதுக்கு முன்பு தட்டச்சு இயந்திரம்தான் தகவல்களை எளிதாக காகிதத்தில் அச்சடிக்கவும், ஆவணங்களை பதிவு செய்யவும் பயன்பட்டது. தட்டச்சு இயந்திரத்தின் திரைகள் கிடையாது. விசைகளை அழுத்தினால் அது மை கொண்ட பெல்ட்டில் அழுத்தம் கொடுத்து, எழுத்தை காகிதத்தில் பதிக்கும். இதுவே அரசு ஆவணங்கள் முதல் தனிநபர் தகவல் பரிமாற்றத்திற்கும் பயன்பட்டது. இப்போது தட்டச்சு கருவிகள்லாம் எல்லா இடத்திலும் வெளிநடப்பு செய்தாகிட்டுது.
தட்டச்சு இயந்திரத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் அமெரிக்காவைச் சேர்ந்த கிறிஸ்டோபர் லதாம் சோல்ஸ். இவர் விஸ்கான்சின் மாகாணத்தின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். தி கெனொசா டெலிகிராஃப் எனும் செய்தித்தாளையும் நடத்தி வந்தார். இன்றுவரை பயன்படுத்தப்படும் தட்டச்சு இயந்திரத்தை உருவாக்கியவர் அவர்தான். அவருக்கு முன்னதாகவே பலர் தட்டச்சு இயந்திரங்களை உருவாக்கினர். எனினும் வணிகரீதியாக வெற்றி அடைந்த தட்டச்சு இயந்திரத்தைக் கண்டுபிடித்தவர் இவரே. ஒருநாள் அவரது நிறுவனத்தின் அச்சுக்கோப்புத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தனர். அவர்கள் இல்லாமலேயே அச்சுக்கோப்புப் பணியைச் செய்வதற்காக ஒரு இயந்திரத்தைக் கண்டுபிடிக்க சோல்ஸ் முயன்றார்.
பிறகு, புத்தகங்களுக்கு எண்கள் பதிக்கும் ஒரு கருவியை அவரும் அவரது நண்பர் சாமுவேலும் சேர்ந்து 1866-ல் தயாரித்தனர். அவர்களோடு கார்லஸ் கிளிட்டன் எனும் ஒரு வழக்கறிஞரும் சேர்ந்துகொண்டார். முதலில் பியானோ போன்ற அமைப்பில் ஒரு இயந்திரம் தயாரிக்கப்பட்டது. அதைக்கொண்டு பெரும்பாலும் மரத்தாலான தட்டச்சு இயந்திரத்தை அவர்கள் தயாரித்தனர். 1868-ல் இதே நாளில் அதற்குக் காப்புரிமை கிடைத்தது. இந்த இயந்திரத்தில் சோல்ஸ் ஒரு ஒப்பந்தத்தைத் தட்டச்சு செய்தார். முதன்முதலில் தட்டச்சு செய்யப்பட்ட ஆவணம் அதுதான். ஜேம்ஸ் டென்மோர் என்பவர் அவர்களின் காப்புரிமையின் கால்வாசியை வாங்கிக்கொண்டார். தட்டச்சு இயந்திரத்தை மேலும் நவீனப்படுத்த டென்மோர் முயன்றபோது நால்வர் குழுவில் இரண்டு பேர் விலகிக்கொண்டனர். பின்னர், சோல்ஸ், டென்மோர் ஜோடி அந்தப் பணியைத் தொடர்ந்தது. கணினி, செல்போன்களில் பயன்படும் குவார்ட்டி கீபோர்டு எனப்படும் முறையையும் சோல்ஸ்தான் கண்டுபிடித்தார்.1890 பிப்ரவரி 17-ல் காசநோயால் சோல்ஸ் மரணமடைந்தார்.
தட்டச்சு இயந்திரத்தின் கருவியில் உள்ள விசைப்பலகைக்கு குவர்ட்டி (Qwerty) விசைப்பலகை என்ற பெயர் உண்டு , Qwerty என்ற எழுத்துகள் மேல் வரிசையில் வரிசையாக அமைந்திருப்பதைக்கொண்டு இந்த பெயர் ஏற்பட்டதுன்னு சொல்றாங்க. 1873-ல் குவர்ட்டி விசைப்பலகை அறிமுகமானது. எழுத்துகளை வேறுவேறு இடங்களில் அமைக்காமல் இந்த வரிசையில் அமைப்பது தட்டச்சு செய்ய சுலபமாக இருப்பதாக கருதி இந்த வரிசையில் எழுத்துகள் அமைப்பது பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இன்னிக்கு தட்டச்சு இயந்திரத்திலும், கணினியிலும் ஒரே மாதிரியில் விசைப்பலகை (கீபோர்டு) இருக்கு. ஆனா, ஆரம்பக்காலக் கட்டத்தில் தட்டச்சு கருவிகளில் ஒவ்வொரு கருவியிலும், ஒரு எழுத்து வெவ்வேறு இடத்தில் அமைந்திருந்தது. இதனால் பொதுவான குவர்ட்டி விசைப்பலகையை ஏற்றுக்கொள்ளும் முன் தட்டச்சு தேர்வுகளோ, போட்டிகளோ நடைப்பெறலை.
ஆரம்ப காலத்தில் தட்டச்சுப் பலகையில், தட்டச்சு செய்பவர் காகிதத்தின் ஓரத்திற்கு வந்துவிட்டார் என்பதை தெரிவிக்க இறுதிப் பகுதியை நெருங்கும் முன்பு லேசான மணியோசை எழுப்பி எச்சரிக்கும் முறை இருந்துச்சு. தட்டச்சு கருவிகளில் பொதுவாக காகிதங்களை கைகளால் சொருகி தட்டச்சு செய்யனும். அதேமாதிரி ஒரு பக்கம் முழுசா அடிச்சு முடிச்சப்புறம் கைகளால்தான் பக்கத்தை மாத்தி வைக்கனும். தட்டச்சு செய்யும்போது தவறு நேர்ந்தால் கணினிகள்போல அழித்து, அடித்து திருத்த முடியாது. தட்டச்சு தவறுகளை அழிப்பதற்காக பிரத்தியேக அழிக்கும் ரப்பரும், எழுத்துக்களை பூசி மறைக்கும் வொயிட்னரும் இருந்தது.
தாமஸ் எடிசன் 1870 ல் எலக்ட்ரானிக் தட்டச்சு எந்திரத்தை உருவாக்கி காப்புரிமம் பெற்றார். இதில் தூரத்தில் இருந்தபடி ரிமோட் மூலம் தட்டச்சு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. தட்டச்சு செய்வதில் இடது கையைப் பயன்படுத்தி மட்டுமே தட்டச்சு செய்யும் மிகப்பெரிய வார்த்தை stewardesses. தட்டச்சுப் பலகையில் ஒரே வரிசையில் (மேல் வரிசையில்) உள்ள எழுத்துக்களை பயன்படுத்தி Typewriter என்ற வார்த்தையை அடிக்கிறோம் என்பது ஆச்சரியமான உண்மை.
Skepticism (ஸ்கெப்டிசிஸ்ம்)ன்ற வார்த்தை தட்டச்சுப்பலகையில் ஒவ்வொரு எழுத்துக்கும் கைகளை மாற்றி மாற்றி தட்டச்சு செய்யக்கூடிய மிகப்பெரிய வார்த்தை. ஆக்ஸ்போர்டு அகராதியில் விசைப்பலகையின் பெயரை குறிக்கும் qwerty என்ற சொல் சேர்க்கப்பட்டது.
மேல் வரிசையில் உள்ள எழுத்துக்களை மட்டுமே பயன்படுத்தி தட்டச்சு செய்யக்கூடிய மிகப்பெரிய வார்த்தை rupturewort என்பதாகும். இது ஒரு மருத்துவ தாவரமாகும். பெரு நாட்டின் ஆங்கில பெயர் (PERU) மட்டுமே ஒரே வரிசையில் (மேல் வரிசை) அமைந்துள்ள எழுத்துக்களை கொண்டு தட்டச்சு செய்ய முடிந்த நாட்டின் பெயராகும், அமெரிக்க மாநிலங்களில் ஒன்றான அலாஸ்கா (Alaska) என்ற பெயரை மத்திய வரிசையில் உள்ள எழுத்துகளை மட்டும் கொண்டு தட்டச்சு செய்ய முடியும்.
இன்று கணினிகள் இருப்பதுபோல 1980-க்கு முன்பு படித்த, வசதி படைத்தவர்கள் வீட்டில் தட்டச்சு கருவிகள் இருந்ததாம். விஷயங்களை தட்டச்சு செய்து கொடுப்பது கவுரவமாக பார்க்கப்பட்ட காலம் உண்டு. வேகமாக தட்டச்சு செய்பவர்களால் நிமிடத்திற்கு 100 வார்த்தைகளுக்கு மேல் தட்டச்சு செய்ய முடியும். நிமிடத்திற்கு 150 வார்த்தைகளுக்கு மேல் தட்டச்சு செய்து சாதனை செய்தவங்களும் இருக்காங்க. 46.30 வினாடிகளில் மூக்கைப் பயன்படுத்தி 103 எழுத்துகளை தட்டச்சு செய்தது கின்னஸ் உலக சாதனையாக பதிவாகி உள்ளது.
எழுத்தாளர் மார்க்டுவைன், தனது டாம் சாயர் 1876-ம் ஆண்டு தட்டச்சில் தட்டச்சு செய்து ஒரு நாவலை உருவாக்கினார். இதுவே தட்டச்சில் தயாரான முதல் நாவலாகும். துருக்கியில் தட்டச்சு எந்திரங்களுக்கான அருங்காட்சியகம் உள்ளது. இது 2016-ம் ஆண்டு திறக்கப்பபட்டது. இணையதளங்களில் பழமையான தட்டச்சு எந்திரங்களை ஏலம் விடும் அமைப்புகள் பல உள்ளன. குழந்தைகளுக்கென பிரத்தியேக தட்டச்சு கருவிகளும் இருந்தது. தற்போது தட்டச்சு கருவி வடிவில் விளையாட்டுப் பொருட்கள் கிடைக்குது. கணினிகள் அதிகமா புழக்கத்திற்கு வந்துவிட்ட காரணத்தால் 1990களின் கடைசியில் தட்டச்சு கருவிகளின் பயன்பாடு குறைய ஆரம்பித்தது. ஒருசில பணிகளுக்காக மட்டும் தட்டச்சு கருவி பயன்படுத்தப்பட்டு வருகிறது. வளர்ந்த மேலை நாடுகளில் கைதிகள் கணினி பயன்படுத்த அனுமதி இல்லையென்பதால் அவர்கள் தட்டச்சு கருவியை அதிகமாக பயன்படுத்துகின்றனர்.
மனிதனுக்கு எவ்வளவு வசதிகள் இருந்தாலும் போதாது. இன்னும் வேணும்ன்ற அந்த மனநிலையே, புதுசு புதுசா கண்டுபிடிப்புகளுக்கு காரணமாகுது. இருப்பினும், அந்தந்த காலகட்டத்தில் நமக்குப் பேருதவியாய் இருந்த சில பொருட்கள், காலப்போக்கில் அதன் பயன்பாடு குறைந்து அந்த பொருட்கள் பரண்மேல் தன்னை பொக்கிஷமா நினைச்ச நாட்களை நினைச்சு அசைப்போட்டுக்கிட்டு தன்னந்தனியா இருக்கும். அதுக்கு அதன் நினைவுகளே, தன்னை அப்படி மதிச்சதுக்கான மௌனச்சாட்சிகள்.
நட்புடன்,
நட்புடன்,
ராஜி
அப்போது கிடைத்த சந்தோசம் இப்போது இல்லை...
ReplyDeleteதகவல் தொகுப்பு அருமை...
ஆமாம்ண்ணே. பொறுப்பும், கடமையும், உழைப்புமில்லாம சுத்தின காலமில்லையா?! அதான் இனிக்குது.
Deleteஎனக்கெல்லாம் யாருமே சொல்லித்தரவில்லை நானாக நொட்டி, நொட்டி பழகி கொண்டேன்.
ReplyDeleteநீங்க அறிவாளிண்ணே. ஆனா உங்க தங்கச்சி அப்படி இல்லையே!
Deleteசுவாரஸ்யம். இனிமையான நினைவுகள். நான் தமிழ், ஆங்கிலம் இரண்டும் ஹையர்! சுருக்கெழுத்து செல்லும் முன் வேலை கிடைத்தது. சுருக்கெழுத்து மண்டையில் ஏறவில்லை!!!!!
ReplyDeleteசுருக்கெழுத்தும் ஈசிதான்ண்ணு என்னோடு கிளாசுக்கு வந்த அக்கா சொல்வாங்க. முதல் நாள் கிளாசுக்கு போயிட்டு வரும்போது இன்ன்ன்ன்னா கெத்துங்குறீங்க.. செம அலப்பறைதான் வீட்டில்
Deleteவகுப்புகள் பற்றிச் சொல்ல எனக்கும் நிறைய கதைகள் உண்டு. என் நண்பன் வீட்டில் ஒரு சின்னசைஸ் டைப்ரைட்டர் இருந்தது. அதில் எழுத்துகள் சேர்ந்து சேர்ந்து வரும். அதில் நண்பனுக்கு வேலைக்கு விண்ணப்பங்கள் அடித்துக் கொடுத்திருக்கிறேன்.
ReplyDeleteஒரு கதையாவது சொல்லி இருக்கலாம்ல்ல!
Deleteரெமிங்டனைவிட Facit மெஷின் நல்லது என்று சொல்லி, அதில் உட்காரதான் நாங்கள் போட்டி போடுவோம்! எழுத்துகளும் சீராக அழகாக இருக்கும்.
ReplyDeleteம்ம் நானும் இப்படி சண்டை போட்டதுண்டு. ஆனா, டைப் அடிக்க சொல்லி தரும் சார் நம்மாளுங்குறதால நாந்தான் ஜெயிப்பேன்
Deleteடைப்ரைட்டிங்கில் பாலன்ஸ் ஷீட் டைப் செய்வதுதான் அப்போது கஷ்டமான வேலை அப்போது!
ReplyDeleteகொடுமை... அதுல நான் கம்மி மார்க்தான். ஸ்பீட் இருந்ததாலும், ஸ்பெல்லிங்க் மிஸ்டேக் இல்லாததாலும் நான் பாஸ் பண்ணேன்.
Deleteதட்டச்சையும், சுருக்கெழுத்தையும் பற்றி தனியாக ஒரு பதிவு எழுதிவருகிறேன். அதனை நிறைவு செய்வதற்குள் இப்பதிவினைக் காணும் வாய்ப்பினைப் பெற்றேன். அருமையான செய்திகள், நல்ல அனுபவங்கள். என் அனுபவங்களை, ஒரு முறையில் எனக்கு அடித்தளமான, இக்கலையின் தொடர்பான அனுபவங்களை விரைவில் எழுதத் தூண்டிவிட்டதுஇப்பதிவு.
ReplyDeleteஇதும் ட்ராஃப்ட்ல ரொம்ப நாளாய் இருந்த பதிவுப்பா. நுனிப்புல் மேய்ந்த கதைதான் என்னுது. என் அனுபவத்தை எழுதனும்ன்னா நாலு பதிவு வரும். நீங்க சீக்கிரம் பதிவு போட்டு சொல்லுங்க.
Deleteதட்டச்சு அனுபவங்கள் - ஸ்வாரஸ்யம். நானும் நெய்வேலியில் இருந்தபோதே ஆங்கிலத் தட்டச்சு ஹையர் பாஸ் செய்தேன். இன்று வரை பயன் தருகிறது!
ReplyDeleteஏற்கனவே இந்த டைப்பிங் பற்றி ஒரு பதிவு எழுதி இருக்கிறேன். சுட்டி கீழே...
https://venkatnagaraj.blogspot.com/2017/04/blog-post_13.html