Monday, July 09, 2018

ஆயிரம் வாசல் கொண்ட வீடு - ஐஞ்சுவை அவியல்


 கோவிலுக்கு போய் இருந்தேன். உனக்காக மந்திரிச்ச கயிறு வாங்கி வந்திருக்கேன். கட்டி விடுறேன்.  கையக்காட்டு மாமா!

எனக்கெதுக்கு இந்த கயிறுலாம்?!

கொஞ்ச நாளாவே லூசுத்தனமா பேசிக்கிட்டு இருக்கே! அதுக்குதான். மந்திரிச்ச கயிறு கொண்டாந்திருக்கேன்.

சரி, எனக்கு இதுலலாம் நம்பிக்கை இல்லன்னாலும் உனக்காக கட்டிக்கிறேன். எத்தனை நாளைக்கு இந்த கயிறை கட்டி இருக்கனும்?!

இதென்ன கேள்வி?! அடுத்த கயிறு கிடைக்கும்வரை.. இல்லன்னா கயிறு அழுக்காகும்வரை இதையே கட்டிக்கிட்டு இருக்க வேண்டியதுதான்.

திருப்பதி, திருத்தணி மாதிரியான கோவிலுக்கு போகும்போது கருப்பு, சிகப்பு, பச்சைன்னு கயிறு வாங்கி கட்டிப்போம். இல்லன்னா, எதாவது வேண்டுதல் வச்சு கயிறு கட்டிப்போம். இன்னும் சிலர் பில்லி, சூனியம் மாதிரியான தீய சக்திகள் விலக மந்திரிச்ச கயிறு கட்டிப்பாங்க.  இந்த கயிறுகளை ஆண்கள் வலது கையிலும், பெண்கள் இடது கையிலும் கட்டிக்கனும். வரலட்சுமி நோன்புக்கயிற்றை மட்டும் பெண்கள் வலது கையில் கட்டிக்கனும். இந்த மாதிரி சாமிக்கயிற்றை கட்டும்போது அஞ்சு முடிச்சுகளை போட்டுக்கனும். முதல் முடிச்சு பயத்தை போக்கும்., இரண்டாவது முடிச்சு தைரியத்தை தரும். மூணாவது முடிச்சு கர்மவினைகளை  அழிக்கும். நாலாவது முடிச்சு விபத்திலிருந்து காக்கும். ஐந்தாவது முடிச்சு பில்லி, சூனியம் மாதிரியான தீய சக்திகளிடமிருந்து காக்கும்.  இந்த கயிறுகளின் பலன்காலம் 48காலம் மட்டுமே. 49வது நாள் இந்த கயிறுகளை கழட்டி ஆறு, குளம், கடல் மாதிரியான நீர்நிலைகளில் விட்டுடலாம். இல்லன்னா, எதாவது மரத்தில் கட்டிடலாம். கால்ல மிதிப்படுற மாதிரி போடக்கூடாது. அசைவம் சாப்பிடக்கூடாது. துக்க வீட்டுக்கு போகக்கூடாது. கழட்டி நீர்நிலைகளில் விட்டுட்டு போகலாம். ஒருமுறை கழட்டிய கயிறையே மீண்டும் கட்டக்கூடாது.  இதுலாம் தெரிஞ்சுக்கிட்டு கயிறு கட்டு.

எல்லாம் தெரிஞ்சுக்கிட்டேன். அதுலாம் நான் பார்த்துக்குறேன். நீ மனசு மாறினா போதும். இந்தா இந்த கயிறை கட்டிக்க...

சாமிக்கிட்ட வேண்டிக்கிட்டதுலாம் ஓகே. ஆனா அப்படி வேண்டிக்குறதுக்குமுன் அது ஒரிஜினல் சாமியான்னு தெரிஞ்சுக்கிட்டு கும்பிடு. அதை குறிப்பிட்டு சொல்லுற மாதிரி எஃப்.பி ஸ்டேட்டஸ் ஒண்ணு...
டேய்! மூதேவி இங்க என்ன பண்ணுறே?! நீ கும்பிட்டுக்கிட்டு இருக்குறது டூப்ளிகேட் சிலை. ஒரிஜினல் சிலை லண்டன்ல கெடக்கு. அங்க போய் கும்பிடு....

ம்க்கும். ஒருசிலரால் சாமி நிலை இப்படி கேலியாகிட்டுதுல்ல...

தன்னைத்தானே காப்பாத்திக்க முடியாத சாமியா உன்னையும். என்னையும் காப்பாத்த போகுது?! இதை சொன்னா என்மேல் பாய்ஞ்சுக்கிட்டு வருவே.
மனமது செம்மை யானால் மந்திரஞ் செபிக்க வேண்டா;
மனமது செம்மை யானால் வாயுவை வுயர்த்த வேண்டா;
மனமது செம்மை யானால் வாசியை நிறுத்த வேண்டா;
மனமது செம்மை யானால் மந்திரஞ் செம்மை யாமே... 

என்பது அகத்தியர் வாக்கு...   இதை எடுத்து சொல்ற மாதிரி ஒரு கதை இருக்கு...

சீனாவில்  ஷவோலின் கோவிலில் ஒரு தனிப்பட்ட மண்டபம் இருக்கு.  அந்த மண்டபத்து  சுவர்,  கூரைன்னு ஆயிரம் கண்ணாடிகளை பதித்து இருக்காங்க.  அந்த மண்டபத்துக்கு ஆயிரம் கண்ணாடிகள் மண்டபம்ன்னு பேரு. பல துறவிகள் ஆயிரம் கோணங்களில் இருந்து தங்களைப் பார்த்து, அங்குப் பயிற்சி செய்து, தனிச்சிறப்புடைய துல்லியமான தங்களின் அசைவுகளை மிகக் கச்சிதமானதாக ஆக்கிக் கொள்ள அந்த மண்டபம் பயன்படுது.  ஒரு நாள் ஒரு நாய் எப்படியோ அந்த மண்டபத்துக்குள் போய்டுச்சு.  ஆயிரம் நாய்கள் தன்னை சூழ்ந்து கொண்ட மாதிரி உணர்ந்த அந்த நாய்,  அது பாதுகாப்பற்று, பயமுறுத்தப்படுவது மாதிரி உணர்ந்து மத்த நாய்களை விரட்டுவதாக நினைத்து பயங்கரமா குலைச்சுது. அதல் உறுமல் சத்தம் எதிரொலிச்சு அதை இன்னமும் பயமுறுத்துச்சுது. அந்த நாய்களை தாக்கும்பொருட்டு கண்ணாடிகளில் மோதி ரத்தம் சிந்தி செத்தே போனது. அதைக்கண்ட துறவிகள் அந்த இடத்தை சுத்தம் செய்து மீண்டுமொரு ஆயிரம் கண்ணாடி மண்டபத்தை அமைச்சாங்க.  இன்னொரு நாள் இன்னொரு நாய் அந்த மண்டபத்துக்குள் நுழைஞ்சது. 
முன்ன வந்த நாயைப் போலவே, இதுவும் தன்னை சுத்தி ஆயிரம் நாய்கள் இருப்பதை பார்த்து சந்தோஷம் தாளாமல் தன்னோட வாலை ஆட்டிச்சு.  திரும்ப ஆயிரம் நாய்கள் தங்களது வாலை ஆட்டிச்சு. ஆயிரம் நண்பர்களைக் கண்டதால் நாய்க்குட்டி குட்டிக்கரணம் அடித்தது. அழகான ஆயிரம் நாய்க்குட்டிகள் அன்பாக அதையே திரும்பச் செய்தது. அன்பொழுக கண்ணாடியில் தெரிஞ்ச அந்த பிம்பங்களை பார்த்தது. கண்களில் அன்பொழுக எதிரில் நிற்கும் பிம்பத்தை கண்ட நாய் ஆயிரம் நாய்களும் தன்னை நேசிப்பதாய் குதூகலப்பட்டது. அம்மண்டபமே அன்பால் நிறைந்தது.   இந்த ஆயிரம் கண்ணாடிகள் மண்டபமும், நமது உலகமும் ஒன்றுதான். நாம முறைச்சா இந்த உலகம் முறைக்கும். அடிச்சா இந்த உலகம் அடிக்கும். நீங்க சிரிச்சா சிரிக்கும். அன்பு காட்டினால்?! திரும்ப அன்பே கிடைக்கும்.    ஏன்னா புதுசா ஒண்ணை  ஆரம்பிக்குறதைவிட, திரும்ப திரும்ப செய்வது எளிது.   நாம் ஒவ்வொருவரும் அவரவரது சொந்த ஆயிரம் கண்ணாடிகள் மண்டபத்தில் நின்று கொண்டிருக்கிறோம். அங்குச் சிரிப்பதோ, சிடுசிடுப்பதோ அவரவரது விருப்பமாகும். என்னவாக இருந்தாலும், நமக்குத் திரும்பக் கிடைப்பது மிகப் பெரிய அளவான, 1000 சதவிகிதம் ஆகும். நமது மண்டபம் நமது உலகமே ஆகும். இது நமது சொந்தப் பிரதிபலிப்பே ஆகும். அதைவிட்டு சாமி , பூதம், சாத்தான்ன்னு ஏதுமில்ல,

அறிவியல் விதிப்படி ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர்வினை உண்டு. நாம நல்லது செஞ்சா நல்லது நடக்கும் கெட்டது செஞ்சா கெட்டது நடக்கும். இதைவிட்டு, வீணாப்போன கோவம், பழி வாங்குதல், ஈகோலாம் தேவையே இல்லாதது. இன்னிக்கு இருப்பவங்க நாளை இருப்போமான்னு தெரியாது. அப்படி இருக்க, நிலையில்லா உலகில் இதுலாம் எதுக்கு வீணா சுமந்துக்கிட்டு?!

நிறைய வலி சுமக்கப்போகிறோமென அறிந்தே நிகழ்த்தப்படுகின்றன சில பேரன்பு பந்தங்கள்
அன்பு காட்டினா அன்பு கிடக்கும்ன்னு சொல்றீங்க ஆனா, பேஸ்புக்ல ஒருத்தர் இப்படி எழுதி இருக்காரே!

தோன்றின எல்லாத்துக்கும் அழிவுண்டு. இதுவும் அறிவியல் விதி. அப்படி பார்த்தா, அன்புக்கு விதிவிலக்கு ஏதுமில்ல.
ரொம்ப பேசிட்டோம். பேஸ்புக்ல பார்த்த படமிது. நல்லதொரு கோணத்தில் எடுத்திருக்காங்க. நல்லா இருக்குல்ல மாமா?!’

நல்லா இருக்கு. அப்படியே போய் நல்லதா ஒரு காஃபி போட்டுக்கிட்டு வா பார்க்கலாம்.

நன்றியுடன்
ராஜி.

10 comments:

  1. நிறைய விஷயங்கள் நல்ல புரிதல் ஆனால் நாம் நல்லது செய்டால் நல்லது நடகும் என்னும் ரிதியில் அறிவியலைக் காட்டி இருப்பதுதான் இடிக்குது அறிவியலில் FOR EVRY ACTION THERE WILL BE AN EQUAL AND OPPOSITE REACTION என்று படித்த நினைவு அதாவது நமொவ்வொரு செயலுக்கும் அதெ அளவில் எதிர்வினை இருக்கும் என்பதாகிறது இப்படி இருக்கநல்லது செய்தால் நல்லதுவிளையுமென்று அறிவியல் சொல்லுகிறதா

    ReplyDelete
    Replies
    1. ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினைன்னு தான் சொல்லி இருக்கே தவிர, எதிரான வினைன்னு சொல்லலப்பா. இங்க பிதாகரஸ் தியரி சொல்வது ஒரு செயலுக்கு இன்னொரு செயல் கிடைக்கும்ன்னுதான் சொல்லி இருக்கே தவிர, ஒரு செயலுக்கு எதிரான செயல் நடக்கும்ன்னு சொல்ல;அ.

      பிதாகரஸ் சொன்னது செயல் = செயல்,
      நீங்க புரிஞ்சுக்கிட்டது பாசிட்டிவ் = நெகட்டிவ், நெகட்டிவ் = பாசிட்டிவ்ன்னு...

      அறிவியல் ஒரு செயலை எப்படி செய்யலாம்ன்னு சொல்லிக்கொடுக்குது அதை வச்சு நல்லது, கெட்டதை உருவாக்குவது நமது திறமை, குணம்...

      கத்திய வச்சி, காய், பழம், பூவையும் வெட்டலாம். மனுசங்க தலையையும் வெட்டலாம். ஒரு பெண்ணை கற்பழிக்க முயற்சிக்கையில் அவனை தாக்குவதற்கும், பணம் நகைக்காக தாக்குவதற்கும் வித்தியாசமிருக்கில்லையா?!

      அன்பு செலுத்தி வசமாக்கிக்க நினைக்குறது தப்பில்ல. அன்பைக்காட்டி வஞ்சகம் செய்வது தப்புதானே?!

      Delete
  2. அருமையான அவியல்.......அந்த சீன கண்ணாடி மண்டபம் சிந்திக்க வைத்தது...உண்மையும் அது தானே?கடைசி நிழற் பிரதி அருமை......எடுத்த கைக்கு சாமி கயிறு கட்ட வேண்டும்........ நன்றி தங்கச்சி,அவியலுக்கும் படையலுக்கும்.....அதான் ஃபோட்டோஸ்...........

    ReplyDelete
    Replies
    1. கட்டுற கயிறுல தங்கத்துல ஒரு டாலர் இருந்தால் நல்லா இருக்கும். ப்ளீச்

      Delete
  3. அருமையான அவியல்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிம்மா

      Delete
  4. அவியலை ரசித்தேன்.

    ReplyDelete