Monday, March 17, 2014

ஹாஸ்பிட்டல்ல இருக்குறவங்களைப் பார்க்கப் போகும்போது இப்படி நடந்துக்கலாமா!? - ஐஞ்சுவை அவியல்

ராஜியோட மூத்தார் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்குன்னு நீயும் உன் ஃப்ரெண்டும் ராஜியும் போனீங்களே! பாப்பா எப்படி இருக்கு!? ராஜியை அவன் பாட்டின்னு கூப்பிட்டானா!?

ம்க்கும், அவளை வம்புக்கிழுக்காட்டி தூக்கம் வராதே உங்களுக்கு!

ஏய் நான் என்ன வம்பிக்கிழுத்தேன்!? முறைப்படி பார்த்தா ராஜிக்கு பேரந்தானே வேணும்!?

ஆமா, அதுக்காக, ராஜியை பாட்டின்னு சொல்லுவீங்களா!?

ப்ப்ப்ப்ச்ச்ச்ச் அதை விடு பாப்பா எப்படி இருக்கு!?

பாப்பா நல்லாதான் இருக்கு மாமா. 3.500 கிலோ வெயிட்ல, தலை நிறைய முடியோட செம அழகா இருந்துச்சு. அவங்களைப் பார்க்க, நாங்க போன நேரம் சாப்பாட்டு நேரம் கூடவே பார்வையாளர்கள் நேரமும் கூட.  நோயாளிகளை பார்க்க வர்றவங்க பண்ற அலம்பல் இருக்கே! சாமி தாங்க முடியல. ஒவோருத்தரும் கண்டிப்பா ஒரு கட்டைப் பை நிறைய விதம் விதமா சாப்பாடு கொண்டு வந்து பாசத்தை காட்டுறாங்க. கூடவே பிளாஸ்டிக் கவர்ல வாங்குன பழங்கள், இனிப்புகள்ன்னு ஹாஸ்பிட்டலை ஒரு பிக்னிக் ஸ்பாட் மாதிரி ஆக்கிடுறாங்க.

அட, அதுவாவது ஹாஸ்பிட்டல்ல இருக்குறாவங்களுக்கு வீட்டு ச் சாப்பாடு கொண்டு வந்து தர்றங்கன்னு நினைச்சு ஆறுதல் அடைஞ்சுக்கலாம். நோஆளிகளுக்குப் பரிமாறிட்டு, அவங்க கட்டில் பக்கத்துலயே உக்காந்துகிட்டு இவங்களும் ரவுண்ட் கட்டி அடிப்பாங்க பாருங்க. அப்படியே செம எரிச்சல் வரும். கூடவே நோயாளிகள்கிட்ட இப்படிதான் எங்க ஒண்ணு விட்ட மாமாவுக்கு இந்த நோய்க்கு ஆப்ரேசன் செய்யப் போயி அப்படி ஆகிடுச்சு, இப்படி ஆகிடுச்சுன்னு நோயாளிக்கு பீதியை கிளப்புவாங்க. ஹாஸ்பிட்டல் போகும்போது வீட்டில் இருக்கும் நண்டு சிண்டுகளைலாம் தூக்கிட்டு போய் காட்டுவாங்க. குழந்தையோட அப்பா, அம்மா நோயாளியாய் இருந்தா பரவாயில்ல கூட்டிப் போகலாம். அதை விட்டு சும்மா யாராயைவாது பார்க்கப் போனால்கூட குழந்தைகளைக் கூட்டிப் போய் குழந்தைகளுக்கு நோயை வாங்கி வர வேண்டியது. இதெல்லாம் நோயாளிகளைப் பார்க்கப் போறவங்க யோசிச்சா நல்லது.

ம்ம்ம் நீ சொல்றது நிஜம்தான் புள்ள. எனக்கு தெரிஞ்சு ஒரு பொண்ணு பிரசவத்துக்கு வேன் வச்சு போய் வந்தாங்க. பிரசவத்துக்கு ஹாஸ்பிட்டல் பில் விட, கூட போய் வந்தவங்களுக்கு டீ,காஃபி வாங்கி கொடுத்த செலவுதான் அதிகம் வந்திருக்கும்!  
மாமா, ரொம்ப நாள் கழிச்சு தூயா வீட்டுக்கு வந்திருக்கவே கோவிலுக்குப் போய் வர்லாமின்னு ராஜியும், தூயாவும் போய் இருக்காங்க. கோவிலுக்குப் போகும்போது தெருவுல ஒரு அம்மா பூ வித்திட்டு இருந்திருக்காங்க.  பூ வாங்கி தலையில் வச்சப்புறம்தான்  பர்ஸ்ல பார்த்தா100 ரூபாய் நோட்டாதான் இருந்திருக்கு. சில்லறை இல்ல. பூ விற்கும் அம்மாவை நம்பி எப்படி 100 ரூபாய் தர்றதுன்னு ராஜி யோசிச்சிக்கிடு இருக்கும்போதே. அந்தம்மா, தான் இருக்கும் இடத்தை சொல்லி, கோவிலுக்குப் போய் வந்துக் கொடுங்கன்னு சொல்லி பெருந்தன்மையால ராஜியை தலைக்குனிய வச்சிருக்காங்க.

வாழ்க்கைத்தரத்துலயும், படிப்புலயும் பின் தங்கியிருந்தாலும் மனசால உயர்ந்தவங்கன்னு சொல்லாம சொல்லி இருக்காங்க அந்தம்மா!.
 
நிஜம்தானுங்க மாமா! நேத்து ராஜி ஏதோ நினைப்புல, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலக்குமாரா!! படத்துல வர்ற “எதிர் வீட்டுல நான் இருந்தேனே”ன்ற பாட்டை ஹம் பண்ணிக்கிட்டு இருந்திருக்கா. உன் டாடி மூஞ்சி புடிக்கல, உன் மம்மி பேச்சுப் பிடிக்கலைனு ராஜி ஹம் செய்யவும், தூயா வரவும் சரியா இருந்துச்சு. உடனே தூயா, நீ பாடுறது எனக்கு சகிக்கலன்னு எதிர்பாட்டு பாடி இருக்கா. இதைக் கேட்டு, இனியாவும், அப்புவும் சேர்ந்து ராஜியைக் கலாய்ச்சிருக்காங்க.
ஹா! ஹா! தேவையா உன் ஃப்ரெண்டுக்கு!? நான் ஒரு கணக்குப் புதிர் கேக்குறேன். பதில் சொல்லு பார்க்கலாம்!

ருத்தர் தன்னோட பசங்களுக்கு பொம்மை வாங்கப் போனாரு. அவர் கையில நூறு ரூபாய் வச்சிருந்தாரு.ஒரு யானை பொம்மையோட விலை அஞ்சு ரூபாய். குதிரை பொம்மை விலை ஒரு ரூபாய். ஒரு நாய்க்குட்டியோட விலை இருபத்தஞ்சு பைசா.

அப்படின்னா, அவரு மொத்தமா நூறு பொம்மைங்களை நூறு ரூபாய்க்கு வாங்கியிருந்தா ஒவ்வொன்னுலேயும் எத்தனை பொம்மைகள் வாங்கியிருப்பார்!?


அது வந்து...., 

சீக்கிரம் சொல்லு புள்ள. இருங்க மாமா யோசிக்குறேனில்ல!
சரி, நான் ஒரு ஜோக் சொல்றென். கேட்டு சிரிச்சுட்டு, நல்லா நிதானமா யோசிச்சு பதில் சொல்லு. 

 மகன் : பலூன் வாங்கித் தந்தால்தான் நான் ஹோம் வொர்க் செய்வேன் 
அப்பா: கடமையை செய், பலூனை எதிர்பார்க்காதே!

ஜோக் எப்படி புள்ள!?

கடி தாங்க முடியல. இருங்க நான் போய் காஃபி போட்டு கொண்டாறேன் உங்களுக்கு.

புதிருக்கு விடைச் சொல்லாம எஸ்கேப் ஆகுறியா!?

நான் ஏன் எஸ்கேப் ஆகுறேன். எனக்கு பதிலா, விடையைச் சொல்ல நிறையப் பேர் வருவாங்கப் பாருங்க மாமா.
 

32 comments:

  1. மருத்துவமனையில் இவர்கள் போன்றவர்கள் அடிக்கற லூட்டி இருக்கே...... ரொம்பவே ஓவர்.

    நல்ல அவியல்......

    ReplyDelete
  2. பார்வையாளர்கள் நேரத்தை மாற்றி விட வேண்டியது தான்...

    என்னவொரு தைரியம்...! கலாய்ப்பதோ அல்லது பாட்டின்னு எப்படி அவர்கள் சொல்லலாம்...! ஹிஹி...

    ReplyDelete
    Replies
    1. அதானே! கலாய்க்க நீங்கலாம் இருக்கும்போது அவங்கலாம் எப்படி கலாய்க்கலாம்!?

      Delete
  3. மருத்துவமனையில் சொந்த பந்தங்கள் செய்யும் லொள்ளு கொஞ்சம் அதிகம்தான்! ஜோக் செம கடி!

    ReplyDelete
  4. பொம்மை = x,y,z
    x + y + z = 100 (1)

    ஐந்து ரூபாய் + ஒரு ரூபாய் + இருபத்தஞ்சு பைசா

    5x + 1 y + 1/4 z = 100 (2)

    (1) & (2)

    விடை : 1

    யானை பொம்மை 3
    நாய்க்குட்டி பொம்மை 16
    குதிரை பொம்மை 81

    விடை : 2

    யானை பொம்மை 6
    நாய்க்குட்டி பொம்மை 32
    குதிரை பொம்மை 62

    விடை : 3

    யானை பொம்மை 9
    நாய்க்குட்டி பொம்மை 48
    குதிரை பொம்மை 43

    எப்படி என்று பசங்க கிட்டே கேட்டு, விளக்கத்தை எனக்கு தகவல் அனுப்பணும் சகோதரி...

    ReplyDelete
  5. அருமையான சுவையான
    ஆரோக்கியமான அவியல்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. பாட்டியானதற்கு வாழ்த்துகள்! :)
    அவியல் நல்ல சுவை..

    ReplyDelete
  7. ///பாப்பா நல்லாதான் இருக்கு மாமா///
    உலகத்தில் எல்லோரும் தைரியமா பொய் சொல்லுவது இப்படிதான் அதை இல்லையென்று யாரும் மறுப்பதில்லை.... பிறந்த கன்னுகுட்டி நாய்க் குட்டி எல்லாம் பார்க்க மிக அழகாக இருக்கும் ஆனா மனுஷ குட்டிகள் பிறந்த உடன் அழகாக இருப்பதில்லை வளர்ந்த பின் தான் அழகாக இருப்பார்கள்

    பிறந்த குழந்தையை பார்த்ததும் இந்த பெண்கள் பண்ணும் அழிசாட்டியம் இருக்கே அப்பப்பா முதலி அவர்கள் வாயில் இருந்து வருவது ஸோ க்யூட் வாவ்....என்பது போலத்தான்... ஏதோ ஒரு வாரம் 2 வாரம் கழிச்சு சொன்னகூட நம்புற மாதிரி இருக்கும்.....

    ReplyDelete
  8. Replies
    1. பத்து மாதம் சுமர்ந்திருந்து நீங்கள் பெத்திருந்தால் பெண்களின் மனமும் வலியும் தெரிந்திருக்கும்.
      பெண்ணுக்குத் தான் பெண்களின் கஷ்டம் தெரியும். குழந்தை நல்லாவே .... அசிங்கமாகவே இருந்தாலும் அந்த நேரத்தில் தாயின் மனம் நோகா வண்ணம் பேசுவது தான் மனித நேயம்.

      தவிர, இரண்டு வாரம் கழித்துத் தெரியும் அழகு பெண்களுக்கு முதல்நாளே தெரிந்துவிடுகிறதே....
      இப்போதாவது பெணகளின் உயர்ந்த உள்ளங்களைப் புரிந்துக்கொள்ளுங்கள் “உண்மைகள்“

      Delete
    2. பெண் புத்தி முன் புத்தி!!!! :)

      Delete
    3. ச் ச் அப்பா. உண்மைன்னு பேரு வைச்சிக்கிட்டு அருணா செல்வத்துக்கு யாருப்பா சீற்றத்தை உருவாக்குனது? :))

      Delete
    4. 10 மாசம் நீங்கள் குழந்தையை சுமந்து இருக்கலாம் அதை மறுக்கவில்லை ஆனால் அந்த 10 மாதத்திலும் அந்த குழந்தையோடு தாயையும் நாங்கள் சேர்த்து கவனித்து இருக்கிறோமே நாங்கள் அதைபற்றி யாறுமே ஒன்றும் சொல்வதில்லையே. அப்படி எல்லாம் ஆண்கள் செய்வது இல்லை என்று நீங்கள் சப்புகொட்டலாம் ஆனால் நான் அப்படியெல்லாம் பண்ணி இருக்கிறேன் அதனால் கருத்து சொல்லும் உரிமை எனக்கும் உண்டு..

      நான் எனது பதிவுகளில் பூரிக்கட்டை என்று சொல்லும் சம்பவங்கள் எல்லாம் கற்பனைதான் என் மனைவியிடமும் குழந்தையிடமும் கேட்டுப்பாருங்கள் நான் அவர்களை எப்படி கவனித்து கொண்டேன் என்று.. அது ஏன் என் வீட்டுக்கு அருகில் இருக்கும் அல்லது நான் வேலை பார்க்கும் இடத்தில் கூட என்னைப்பற்றி விசாரித்து பார்க்கலாம் நான் எப்படி என்று


      //தவிர, இரண்டு வாரம் கழித்துத் தெரியும் அழகு பெண்களுக்கு முதல்நாளே தெரிந்துவிடுகிறதே.//

      அழகு மட்டும்தான் பெண்களுக்கு அட்வான்ஸாக தெரிகிறது ஆனால் ஆண்களுக்கு குணம்தான் முதலில் தெரிகிறது... ஹீ.ஹீ இப்ப எப்படி

      Delete
    5. உண்மைகள் என்று பெயர் வைத்து விட்டு உண்மையை சொல்லாமல் சென்றால் எப்படி? சில சமயங்களில் உண்மை கசக்கவே செய்யும்...

      @ குறும்பன் அருணாவுக்கு சீற்றமா இதெல்லாம் ஒன்றுமே இல்லை இது சகோவிடம் செய்யும் வாதம். அவர்களின் சீற்றம் சகோவிடம் கிடையாது வூட்டுக்காரரிடம் மட்டுமே என்ன சகோ நான் சொன்னது சரிதானே

      Delete
  9. பாட்டியானதற்கு வாழ்த்துக்கள் தோழி.

    ஆமா.... பிள்ளைபெத்தால் அவங்க நோயாளியா...?

    ReplyDelete
    Replies
    1. பிள்ளைப் பெத்தவங்களும், குழந்தைகளும் மட்டும்தான் ஹாஸ்பிட்டலில் இருக்காங்களா அருணா!?

      Delete
    2. வாழ்த்துக்கள், பிறந்தது பேரன் தான், ஆனா ராஜி அவர்கள் பாட்டி இல்லை :) .... ராஜி அவர்கள் பாட்டி இல்லை :) .... ராஜி அவர்கள் பாட்டி இல்லை :) .... ராஜி அவர்கள் பாட்டி இல்லை :) .... ராஜி அவர்கள் பாட்டி இல்லை :) ....

      Delete
  10. கடைசி கடி .. ஐயோ . அய்யயோ.

    ReplyDelete
  11. அவர்கள் உண்மைகள்! பல குழந்தைகள், பிறந்த சிலமணி நேரத்திலேயேயும் ஒரு வகை அழகு இருக்குமுங்க. பொதுவாக இறுக்க கண்ணை மூடிக் கொண்டு, கைகளைப் பொத்திக் கொண்டு கன்னத்தில்
    அழுத்தி, சோம்பல் முறித்து, சிறு கோடுகள் போல் கூசும் கண்களைத் திறந்து பார்த்துப் பார்த்து மூடுவது கொள்ளை அழகாக இருக்கும்.
    இந்த வைத்திய நிலைய அசட்டுத்தனங்கள், நம் நாடுகளில் அதிகமே!

    ReplyDelete
  12. மருத்துவமனை பற்றி நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை...எங்கள் ஊரில் இதனாலேயே பல மருத்துவமனைகளில் பழங்கள் உட்பட எதனையும் எடுத்து செல்ல அனுமதிப்பதில்லை.... பூக்கடை குறித்து/ உன்மைதானக்கா பல நேரங்களில் அவர்களைப் போன்றவர்களிடம் இருக்கும் நேர்மையும் உண்மையும் நம்மை தலை குனியத்தான் வைக்கின்றன...

    ReplyDelete
  13. ஹாஸ்பிட்டலுக்குப் போனா போனோமா நோயாளியைப் பாத்தோமா வந்தோமான்னு இருக்கணும். இது நிறைய பேருக்கு தெரியறதில்லை. அங்கேயே குப்பையைப் போடுறதும், சத்தமா போன்ல பேசறதும்னு நிறைய பேருக்கு இங்கிதமே தெரியறதில்லை. இந்த அவலங்களை மட்டும் நூறு பதிவா போடலாம்.

    கடைசி கடி அய்யோ அம்மா...

    ReplyDelete
  14. ராஜியோட மூத்தார் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்குன்னா ராஜியை பாட்டின்னு சொல்லுவதில் என்ன தப்பு? அப்படி சொல்லுவது தான் முறை. முதல்ல ஏத்துக்க கடினமாதான் இருக்கும். அப்புறம் சரியாகிடும். ;) ஆனா பிறந்த குழந்தை பேசமாட்டான்னு மாமாக்கு தெரியாம போயிடுச்சே :))

    ReplyDelete
  15. எனக்கு என் குழந்தை பிறந்த போது அழகாகத்தான் இருந்திச்சி.( காக்கைக்கு தன் குஞ்சு பொண்குஞ்சுதான்).. ஆனா என் மனைவிக்கு அது அழகாக இல்லை என்றுதான் தோணிச்சி அதை இன்னும் சொல்லி சொல்லி என் குழந்தையிடம் சீண்டுவாள் என் மனைவி


    நான் சொல்ல வருவது என்ன வென்றால் பிறந்த நாள் அன்று நிச்சயம் வாவ் என்று சொல்லும்படியாக எந்த குழந்தையும் இருக்காது அது பெற்றவர்களை மகிழ்விக்கவே சொல்லப்படுகிறது என்பதுதான் உண்மை ஆனால் போகப் போக குழந்தைகள் மிக அழகாவும் அவர்களின் ஸ்மல் மிகவும் அருமையாகவும் இருக்கும். நான் குழந்தையை தூக்கி வளர்த்தவன் என்பதால்தான் இதை சொல்லுகிறேன் நான் சொல்ல வருவதை புரியாதவர்களுக்கு மிகப் பெரிய கும்பிடு

    ReplyDelete
  16. ஹாஸ்பிட்டலுக்குப் போனா போனோமா நோயாளியைப் பாத்தோமா விசாரித்தோமா வந்தோமான்னு இருக்கணும் அதைவிட்டு விட்டு அங்கே போய் என்ன பதிவு போடலாம் என்று சுத்தி சுத்தி பார்த்துட்டு பாக்க போனவங்களை ஒழுங்காக பாக்கமா அவரசர அவரசரமாக வந்து பதிவு போடறதுதான் தப்பு என்ன நான் சொல்லுறது ஹீ.ஹீ

    அம்மா தாயே இதை நான் கிண்டலுக்காக்த்தான் சொன்னேன் அதுக்காக நீ செஞ்ச லட்டுவை வைத்து என் மண்டையை உஅடைத்து விடாதே

    ReplyDelete
  17. வாழ்த்துக்கள் ராஜி .சிறப்பான பகிர்வுக்குப் பாராட்டுக்களும் .

    ReplyDelete
    Replies
    1. சிறப்பான பதிவு என்று பாராட்டுவது போல பாட்டியானதுக்கு வாழ்த்து சொல்லிட்டு போறாங்கப்பா .பொண்ணுங்க ஸ்மார்ட்தான் நாமதான் ஏதாவது உளறிக் கொட்டி வாங்கி கட்டிகிறோம்... ஆத்தா மன்னிச்சிடு

      Delete
  18. இந்த முறை அவியல் home madeனு சொல்லலாமா?
    நல்லா இருந்துச்சு அக்கா!
    அவியலைவிட அதுக்கு வந்த கம்மென்ட்ஸ் காரசாரமா இருக்கே!!?

    ReplyDelete
  19. அவியலின் மணம் சுகம்! அதுவும் அந்த ஆஸ்பத்திரி விஷயம் மிகவும் ந்ல்ல பகிர்வு!....

    ஏ புள்ள இப்படி கடிச்சியானா நாங்கள்லாம் எந்த ஆஸ்பத்திரிக்கு போறதாம் புள்ள? அப்புறம் அங்கிட்டு ஊரு சனம் சாதி சனம் எல்லாம் கூடி கும்மியடிச்சுவாய்ங்களே புள்ள!!!

    துளசிதரன், கீதா

    ReplyDelete
  20. //நான் எனது பதிவுகளில், பூரிக்கட்டை என்று............என்னைப் பற்றி விசாரித்துப் பார்க்கலாம் நான் எப்படி என்று//

    மிகவும் ரசித்தோம்! மதுரைத்தமிழா உங்களை விசாரித்துத்தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை! "அவர்கள் உண்மைகள்"!!! உண்மையை மட்டும்தானே பேசும்!!!

    ReplyDelete
  21. நல்லஅவியல்.

    "ஹாஸ்பிட்டலை ஒரு பிக்னிக் ஸ்பாட் மாதிரி ஆக்கிடுறாங்க.' பலரும்இதைஉணர்வதில்லை. .

    ReplyDelete
  22. புதிருக்கு விடையை சீக்கிரம் விம்முங்கோ ... இருக்குற முடியையாவது காப்பாத்திக்கலாம் ...

    ReplyDelete