Sunday, July 22, 2018

நான் பூவெடுத்து வைக்கனும் பின்னால... - பாட்டு கேக்குறோமாம்.

படம் வெளிவர்றதுக்குள் பாட்டு வெளிவந்துடும். சில படப்பாட்டுங்க கேசட்டில் ஒரு மாதிரியான வரிகளும், படத்தில் வேறு மாதிரியான வரிகளும் இருக்கும்.  சில படத்துல, குறிப்பிட்ட வார்த்தை மட்டும் கட்டாகிடும் இல்லன்னா பீப் சவுண்ட் ஒலிக்க விடுவாங்க. ஒருமுறை  கமல் மதனுக்கு கொடுத்த Interviewல் நானும் ஒரு தொழிலாளி படத்தில் இடம்பெற்ற 'நான் பூவெடுத்து வைக்கனும் பின்னால...  ன்னு ஆரம்பிக்கும் பாடலில் ஒரு வார்த்தை தப்பான அர்த்தம் வருவதா சொல்லி சென்சாரில் ஏத்துக்கலைன்னு சொல்லி கஷ்டப்பட்டார். சாதாரணமாக எழுதிய பாடலைக்கூட  பிரித்து,பிரித்து அர்த்தம் பார்த்தால் என்ன செய்வது?! என்று கேள்வி கேட்டார். 

நம்மவர் படத்துல சொர்க்கம் என்பது நமக்கு பாடலில் ஒரு வரி வரும்... நல்ல வார்த்தைக்கூட இப்ப கெட்ட வார்த்தை ஆனதே...ன்னு.... ஆத்தான்னா அத்தனை மரியாதை தென் மாவட்டங்களில்.. எங்க ஊரில் ஆத்தான்னு சொன்னா மேலும் கீழுமா பார்ப்பாங்க.  சித்தி, அத்தை, மாமிகளை கூப்பிடும் புனிதமான ஆங்கில வார்த்தையான ஆன்டி, இப்ப கிண்டலா, நக்கலா கூப்பிடப்படுது. நல்ல வார்த்தைகள் கெட்ட வார்த்தை ஆனதுக்கு காரணம் சமூகமா இல்ல சினிமாவான்னு தெரில.

படம் பார்த்ததே கனவு கண்ட மாதிரி மங்கலா நினைவில்  இருக்கு.  அதுல பாடல் வரிகளை எப்படி நினைவு வச்சிக்குறது.  சரியோ தப்போ சில பாட்டுகள் கேக்கும்போது மனசு உற்சாகமாகும். அதில் இந்த பாட்டும் ஒண்ணு... பயணங்களில் இந்த பாட்டு அவசியம் இடம்பெறும். அதுலயும் வண்டில போகும்போது... கேட்டுக்கிட்டே வண்டி ஓட்டுவதில் அலாதி பிரியம் எனக்கு... 


நான் பூவெடுத்து வைக்கணும் பின்னாலே
அதில் வஞ்சி இப்ப சொக்கணும் தன்னாலே
என் மச்சான் மச்சான்... மல்லிய வைச்சான்
என் மச்சான் மச்சான்... தேன் மல்லிய வைச்சான்
உள்ளத்திலே என்னடி உண்டாச்சு?!

நான் பூவெடுத்து
நான் பூவெடுத்து வைக்கணும் பின்னாலே..
அதில் வஞ்சி இப்ப சொக்கணும் தன்னாலே..


அத்தமவன் சொன்னத ஒத்துக்கனும்
சரிதான் சரிதான்..
அத்தனையும் நித்தமும் கத்துக்கனும்
சுகம்தான் சுகம்தான்......அத்தமவன் சொன்னத ஒத்துகனும்
சரிதான் சரிதான்அத்தனையும் நித்தமும் கத்துக்கனும்
சுகம்தான் சுகம்தான்தென்பழநி சந்தனம்தான் இங்கு ஒரு பெண்ணாச்சோ?!
என்னென்னவோ எண்ணம்தான் என்னக் கண்டு உண்டாச்சா?!உன் முந்தானைய இழுக்கட்டுமா?!
 சும்மா இருஒரு முத்தாரத்த பதிக்கட்டுமா?!
 கொஞ்சம் பொறுஅடி பூவே! பொன்னே! கண்ணே இங்கே வா ஹோய்..

நீ பூவெடுத்து வைக்கனும் பின்னாலே ஓ...ஓ
அதில் வஞ்சி இப்ப சொக்கணும் தன்னாலே ஹா......
ஆ.....ஆஹாஹா...ஆ.........ஆஹாஹா......
லாலல்லா...லாலல்லா...லாலல்லா...லாலல்லா...லாலல்லா...
ஆ.....ஆ....ஆ..
.......
பத்து விரல் பட்டதும் தொட்டதும்தான்சுடுதா சுடுதா?!
ஆசையோடு அச்சமும் வெட்கமும்தான்வருதா வருதா?!
பத்து விரல் பட்டதும் தொட்டதும் தான்சுடுதா சுடுதா
ஆசையோடு அச்சமும் வெட்கமும் தான்வருதா வருதா வருதா?!
தென்னங்கிளை தென்றலைத் தான்பின்னுவது அங்கேதான்
செவ்விளநி சேலக்கட்டிமின்னுறது இங்கேதான்
ரெண்டு கண்ணால நீ அளக்கிறதுஉன் மேனிதான்
என்ன கண்டையில நீ கொதிக்கிறது
உன் மேனிதான்
அட மச்சான் வெச்ச கண்ணு இங்கேதான்

நீ பூவேடுத்து வைக்க்கணும் பின்னாலே
அதில் வஞ்சி இப்ப சொக்கணும் தண்ணாலே
ஏ மச்சான் மச்சான் ஹா மல்லிய வைச்சான் ம்..
ஏ மச்சான் மச்சான் மல்லிய வைச்சான்
உள்ளத்திலே என்னவே உண்டாச்சு

நான் பூவெடுத்து
நான் பூவெடுத்து வைக்கணும் பின்னாலே
அதில் வஞ்சி இப்ப சொக்கணும் தண்


படம்: நானும் ஒரு தொழிலாளி
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.பி.பி, ஜானகி
நடிகர்கள்: கமல், அம்பிகா

நன்றியுடன்,
ராஜி.

10 comments:

  1. இளையராஜா.

    நல்லாதானே இருக்கும்!

    எஸ் பி பி குரலும் நல்லா இருக்கும். இந்தப் படத்தில் ஒரு ஃபாஸ்ட் ஸாங் இருக்கும். "ஒரு நிலவும் மலரும் நடனம் புரியும் கலையரங்கம்..." அதையும் ரசிப்பேன் நான்.

    ReplyDelete
    Replies
    1. பாடல் கேட்க நல்லா இருக்கும். ஆனா ஒரே ஒரு வார்த்தை மட்டும் டபுள் மீனிங்க்ல வந்ததா அந்த காலத்தில் சென்சார்போது பஞ்சாயத்து நடந்துச்சாம்.

      Delete
  2. நல்ல பாடல். எனக்கும் பிடித்த பாடல்.

    ReplyDelete
  3. பல வருடம் எடுத்த படம்...

    ReplyDelete
    Replies
    1. அப்படியா?! இந்த விசயம் தெரியாதுண்ணே! ஏ.வி.எம் தயாரிப்புன்னு நினைக்குறேன்

      Delete
  4. இயல்பாகவே ஆழ்ந்த மனதில் சென்று பதிந்துவிடுகின்ற வரிகள்.

    ReplyDelete
  5. பாடல் கேட்டநினைவு இல்லை இப்போதெல்லாம் திரை இசைப்பாடல்களின் மேலொரு காழ்ப்பூணர்ச்சியே வருகிறது காலத்தின்கோலமோ

    ReplyDelete
    Replies
    1. இருக்கும். எனக்குமே இப்பத்திய பாட்டுக்களை பிடிக்குறதில்லை.

      Delete