Monday, February 17, 2014

பெண்கள் படி தாண்டினால வரும் விளைவு - ஐஞ்சுவை அவியல்


என்னங்க மாமா! எங்க போய்ட்டு வர்றீங்க!?
நம்ம ஊருல இருக்கும் டாஸ்மாக்கை எடுக்க சொல்லிப் போராட்டம் நடத்தலாம்ன்னு இருக்கோம். அதுக்குதான் மீட்டிங் போட்டு வரோம்.
ஏன்!? என்னாச்சு!? அது இல்லாம நம்ம ஊரு ஆம்பிள்ளைகளுக்கு பொழுது விடிஞ்சு பொழுது போகாதே!
ஸ்கூல் காம்பவுண்ட் பக்கத்துலயே டாஸ்மாக் கடை இருக்கு. காலி பாட்டில்களில் இருக்கும் மிச்சம் மீதி சரக்கை ஸ்கூல் பிள்ளைங்க சொட்டு சொட்டா சொட்டி குடிக்குறாங்க. அதுமில்லாம, கோவிலும் பக்கத்துலயே இருக்குறதால குடிமகன்களால பென்கள் கோவிலுக்கு போகவே அச்சப்படுறாங்க. 
அதுமட்டுமில்ல மாமா! போதை தலைக்கேறி சரக்கு பாட்டிலை உடைச்சு போட்டுட்டு போய்டுறதால ஸ்கூல் பிள்ளைங்க காலில் கண்ணாடி ஏறி காயம் படுதுங்க குழந்தைங்க.
ம்ம் அதனாலதான் இங்கிருந்து டாஸ்மாக்கை வேற இடத்துக்கு மாத்தச் சொல்லி போராட்டம் பண்ணப் போறோம். 
போராட்டம் நடத்துறதுல தப்பில்ல! பொதுமக்களுக்கு பாதகம் வராம போராட்டம் பண்ணுங்க. அதான் முக்கியம்.
நினைவு வச்சுக்குறேன் புள்ள. இன்னிக்கு கடைத்தெருவுக்கு போறதுக்காக வண்டில போய்க்கிட்டு இருக்கும்போது பத்து, பன்னெண்டு வயசுல ரெண்டு ஆண் குழந்தைங்க மூட்டை முடிச்சுகளோடு இருந்துச்சு. என்னன்னு கேட்டேன். அம்மா அப்பாவோட தப்பான நடவடிக்கைப் பிடிக்காம எங்கயோ போய்ட்டுதாம். இப்ப அவங்க எங்க எப்படி இருக்காங்கன்னு கூடத் தெரியாதாம். கேட்க ஆளில்லாததால அப்பனோட ஆட்டம் அதிகமாகி உடம்பு சரியில்லாம போய் செத்து போய்ட்டாராம். அதனால, பெரியவங்க யாருமில்ல வாடகை வராதுன்னு வீட்டைக் காலிப் பண்ண சொல்லிட்டாங்களாம். எங்க போறதுன்னு தெரியாம உக்காந்து இருந்த பசங்களைப் பார்க்கும்போது பாவமா இருந்துச்சு. அப்புறம், ஊர் தலைவர் கிட்ட கெஞ்சி கேட்டு இப்பத்திக்கு சமுதாயக் கூடத்துல தங்க வச்சி, கைச்செலவுக்கு கொஞ்சம் பணம் தந்துட்டு வந்திருக்கேன். இனிதான் எதாவது கருணை இல்லத்தை கேட்டு பார்க்கனும்.
அதனாலதான், பொம்பளைங்க எந்த சூழ்நிலையிலயும் உணர்ச்சி வசப்படக்கூடாதுன்னு சொல்லுறது. போனவ ரெண்டு குழந்தைகளைக் கூட்டி போயிருந்தால் நல்லா இருந்துருக்கும். இப்ப பாருங்க, குழந்தைங்க திக்கு திசை தெரியாம நிக்குதுங்க. 
ம்ம்ம் அந்த பசங்க கெட்டவங்க கையில சிக்காம நல்லப்படியா இருந்தா நல்லது. அதான் என் வேண்டுதல் புள்ள.
ம்க்கும் ஊரெல்லாம் நல்லா இருக்கனும்ன்னு நினைக்குறீங்களே! பொண்டாட்டி மனசு புரிஞ்சு நடந்துக்கனும்ன்னு தெரியுதா உங்களுக்கு!?
உன் மனசு கஷ்டப்படுற மாதிரி என்ன செஞ்சுட்டேன் புள்ளா!?
ஒண்ணுமே செய்யலைன்னுதான் சொல்றேன். என் ஃப்ரெண்ட் ராஜி வீட்டுக்காரர் வாலண்டைன்ஸ் டேவுக்காக ராஜிக்கு அல்வாவும், பூவும் வாங்கி வந்து கொடுத்திருக்கார். 
அது மட்டும்தான் உன் ஃப்ரெண்ட் சொன்னாளா!? அதுக்கப்புறம் நடந்ததை சொல்லலியா!?
என்ன நடந்துச்சு!? அல்வாவையும், பூவையும் பார்த்த சின்ன பொண்ணு இனியா, டேய் அப்பு! அப்பா, 20 வருசம் கழிச்சு அம்மாக்கு அல்வா கொடுத்து காதுல பூ சுத்துறாங்கடான்னு சொன்னான். அதுக்கு அப்பு, ஆனா, அம்மா தினமும் அப்பா காதுல பூ சுத்தி அல்வா தர்றங்கன்னு சொன்னான்.
சரி, சரி, ஊரான் வீட்டு கதை நமக்கெதுக்கு!? ஒரு ஜோக் சொல்லவா!?
நீ ஆரம்பிச்சா நல்லது. நான் ஆரம்பிச்சா புரணி பேசுறதா!? சரி ஜோக் சொல்லு, சிரிச்சு தொலைக்குறேன்.
இப்படிலாம் வேண்டா வெறுப்பா கேட்டால் சொல்ல மாட்டேன்.
ஹி! ஹி!, ஹா! ஹா! இப்ப சொல்லுடி
ராமு: வெயிட்டான படிப்பு படிச்சும் என் பையனுக்கு வேலை கிடைக்கல
சோமு: அப்படியா… என்ன படிப்பு படிச்சிருக்காரு….?

ராமு:  L(kg) U(kg)pre(kg).

நல்ல வெயிட்டான படிப்புதான். நான் விடுகதை சொல்றேன் பதில் சொல்லு பார்க்கலாம்!

வெளியே உள்ளதை எறிந்து உள்ளே உள்ளதை சமைத்தான். பின் வெளியே உள்ளதை  சாப்பிட்டு விட்டு உள்ளே உள்ளதை எறிந்தான் அது என்ன?

விடையை யோசிச்சிக்கிட்டே இரு. நான் கடைத்தெருவுக்கு போய் வந்திடுறேன்.

15 comments:

  1. இனியா சமத்து...!

    சோளம் தானே...?

    ReplyDelete
    Replies
    1. நீங்க மருமகப்பிள்ளைக்குதான் சப்போர்ட் பண்ணுவீங்கன்னு நினைச்சேன்.

      Delete
  2. கோயில் இல்லாத ஊரில் குடி இருக்க வேண்டாம் என்று சொல்வது அந்த காலம். ஆனால் டாஸ்மாக் இல்லாத தெருவில் குடி இருக்க வேண்டாம் என்பது இந்த காலம்...

    ReplyDelete
    Replies
    1. அப்படிதான் தமிழகத்தின் இன்றைய நிலை ஆகிட்டுது.

      Delete
  3. Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ!

      Delete
  4. காலம் மாறி போச்சு.டாஸ்மாக்கால் எவ்வளவு பிரச்சனைகள்.பலாபழம்

    ReplyDelete
    Replies
    1. விடை தப்பு சுபா!

      Delete
  5. பசங்க பயங்கர கெட்டி தான் போல...:))

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க ஆதி! என் வீட்டுக்காரருக்கு தெரியாததைக் கூட எடுத்து கொடுத்து என்னை கலாய்ப்பாங்க.

      Delete
  6. வெயிட்டான ஜோக் தான்!

    ReplyDelete
  7. நல்லாச் சொல்லியிருக்கீங்க...
    இனியா கலக்கிட்டாங்க...
    அப்புவுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. ஆஹா, அப்பு கரிக்கட்டா கண்டுப்பிடிச்சுட்டானே, கெட்டிக்கார பயப்புள்ள தான்.
    கடி தாங்க முடியலை சகோ.

    ReplyDelete
  9. அக்கா விடை முருங்கைக் காயா?

    ReplyDelete
  10. டாஸ்மாக் - இல்லாத இடம் ஏது!... :(

    ReplyDelete