Friday, September 22, 2017

ராஜராஜனின் வெற்றிக்கு காரணம் ஒரு பெண் தெய்வமா?!


நவராத்திரியின் இரண்டாவது நாளில் நாம் வணங்க வேண்டியது வராகி அம்மனை.  பன்றி முகமும், பெண் உடலுடனும்,  தெத்துபற்களுடன் காட்சியளிப்பவள். தனது தெத்துபற்களால் பூமிப்பந்தை தாங்கி நிற்பவள். மூன்று கண்கள்,  சங்கு, சக்கரம், கத்தி, உலக்க்கை, கலைப்பை, உடுக்கை போன்ற ஆயுதங்களோடு அபய வரத முத்திரையோடு கூடிய எட்டு திருக்கரங்களுடன் காட்சியளிப்பவள்.  நீல நிற உடலோடு  சிவப்பு நிற ஆடையுடுத்தி சந்திரகலை தரித்த நவரத்தின க்ரீடம் அணிந்து சிம்ம வாகனத்தில் அமர்ந்து அருள்பாளிப்பவள். பஞ்சமீ, தண்டநாதா, சங்கேதா, சமயேஸ்வரி, சமய சங்கேதா, போத்ரிணி, வார்த்தாளி, மகாசேனா,   மங்கள மய நாராயணி, தண்டினி, பகளாமுகின்னு வேற பேர்களும் உண்டு. இவள் பராசக்தியின் படைத்தளபதியாகி பண்டாசுரனை அழித்தவள். ராஜராஜேஸ்வரியின் குதிரைப்படைத்தலைவியாகும்.  ஏவல், பில்லி சூனியம், எதிரிகள் தொல்லையில் இருந்து விடுபட இவளின் அருளைப் பெறுவது அவசியம். சப்த கன்னிகளில் ஐந்தாவது கன்னி இவள். பகைவருக்கு 

மிகுந்த உக்கிரமானவள். ஆனா அன்பு காட்டி ஆதரவளிப்பதில் அன்னைக்கு நிகரானவள்.   எட்டு காட்டு பன்றிகள் இழுக்கும் தேர் இவளது வாகனமாகும்.  இவள் விஷ்ணுவின் வாயிலிருந்து வெளிப்பட்ட தீஜ்ஜுவாலையில் தோன்றியவள். மகா வராகி, ஆதி வராகி, ஸ்வப்னவராகி, லகு வராகி, உன்மத்த வராகி, சிம்ஹாருடா வராகி, மகிஷாருடா வராகி, அச்வாருடா வராகி என்பன இவளது அவதார தோற்றமாகும்.  இவளுக்கென்று தனிக்கோவில் இந்தியாவிம் மொத்தமே இரண்டு இடங்களில்தான் உள்ளது. ஒன்று காசியில். மற்றொன்று தஞ்சையில். ராஜராஜ சோழனின் இஷ்டதெய்வம் இந்த வராகி அம்மன். இவை இரண்டும் மிகப்பழமை வாய்ந்தது. இப்போது அரக்கோணத்துக்கருகில் பள்ளூர் என்ற ஊரிலும் இவளுக்கு ஆலயம் எழுப்பி உள்ளனர். 
பள்ளூரில் இன்றைக்கு வராகி அம்மன் குடியிருக்கும் ஆலயத்தில் அவளுக்கு முன்பாக மந்திரகாளியம்மன் தான் வீற்றிருந்தாள். அரிய வரங்களை பெற்ற மமதையில் மந்திரகாளியம்மனையே தன் மந்திரத்தால் கட்டி வைத்தான். தக்க சமயம் வர அன்னையும் காத்திருந்தாள். தக்க நேரம் வந்ததும் கடும் மழை, புயல், இடியால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வராகி அம்மன் மிதந்து மந்திரகாளியம்மன் கோவிலுக்கருகில் வந்து சேர்ந்தாள்.  தட்டு தடுமாறி எழுந்து ஒதுங்க கோவில் கதவை திறக்க சொல்லி மந்திரகாளியம்மனை வேண்டினாள்.  மந்திரவாதியினால தான் கட்டுண்டதை சொல்லி கதவை திறந்தால் பெரும் அழிவை சந்திக்க வேண்டுமெனவும் எச்சரித்தாள். அண்ட சராசரங்களும் கிடுகிடுக்க வைத்தபடி சிரித்த வராகி உன்னை காப்பேன் என உறுதியளித்து கோவிலுக்குள் சென்று மந்திரவாதிக்கு காத்திருந்தாள். 

நடுநிசியில் கோவிலுக்கு வந்த மந்திரவாதி கோவில் கதவை திறந்திருப்பதை கண்டு ஆத்திரமுற்று ஓங்கி கதவை எட்டி உதைத்தான்.  இதற்காகவே காத்திருந்த வராகி அவனை இரண்டாக கிழித்து  தூக்கி எறிந்தாள். மந்திரகாளியம்மனும் விடுவிக்கப்பட்டாள். வராகி அம்மனிடம், தாங்களே இக்கருவறையில் தங்கி அருள்பாலிக்க வேண்டுமென மந்திரக்காளியம்மன் வேண்ட வராகி அம்மனும் புள்ளலூரிலேயே தங்கி அருள்பாளிக்கிறாள்.
வராகிக்கு பிடித்தது செவ்வரளி மாலை, வராகிக்கு பிடித்தது தாமரைக்கிழங்கு, அல்லிக்கிழங்கு, தண்ணீர்விட்டான் கிழங்கு, மாகாளிகிழங்கு, பனங்கிழங்கு.  மரிக்கொழுந்து, கருந்துளசி, செந்தாழை வாசனைக்கு மயங்குபவள்.இவளுக்கு ஏற்ற நைவேத்தியம் கருப்பு உளுந்து வடை, பாதாம் கேசரி, தயிர்சாதம், பானகமாகும். நம் உடலில் இருக்கும் ஆதார சக்கரமான ஆறு சக்கரங்களில் நெற்றியில் இருக்கும் ஆக்ஞா சக்திக்கு சொந்தக்காரி. நம் எண்ணங்களை ஈடேற்றி தருவதில் அவளுக்கு நிகர் வேறு யாருமில்லை

உலகப்புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவில் உருவாக காரணமான ராஜராஜ சோழனின் கண்கண்ட தெய்வம் இந்த வராகி அம்மன்.  பொதுவாக வினாயகரை வணங்கிய பின்னரே எந்த செயலையும் தொடங்குவது தமிழர் பண்பாடு. ஆனா, ராஜராஜன் வராகி அம்மனை வழிப்பட்ட பின்னரே எந்த செயலையும் தொடங்குவார். அந்த வழக்கம் இன்றுவரை தொடருது.

ராஜராஜன் தன்னை தடுத்தாட்கொள்ளும் இறைவனுக்கு பெரிய அளவில் கோவில் எழுப்ப முடிவு செய்தபின் இடம்தேடி எங்கெங்கோ அலைந்தார். இறுதியாக தஞ்சைக்கு வந்து தங்கி இடம்தேடினார்.  ஒருநாள் பொழுதுபோக்காக வேட்டைக்கு  புறப்பட்டு சென்றபோது  ஒரு இடத்தில் அவருக்கு எதிராக பன்றி ஒன்று எதிர்த்து நின்றது. அதனை அவர் துரத்தி சென்றார். ஆனால் அது போக்கு காட்டி பல இடங்களுக்கு சென்று ஒரு பெரிய திடலில் வந்து படுத்துக் கொண்டது. இதனால் வியப்படைந்த ராஜராஜசோழன் அதனை கொல்லாமல் துரத்தினார்.  ஆனால் அது எழுந்து நின்று காலால் பூமியை தோண்டியது. இது குறித்து ராஜராஜசோழன் அரண்மனை ஜோதிடரை அழைத்து விவரம் கேட்டார். அப்போது கோவில் கட்ட இடத்தினை, வராஹி தேவி தேர்ந்தெடுத்து இருப்பதை தெரிவித்தார் ஜோதிடர். அந்த இடத்தில் பெரிய கோவில் கட்டும் முன்பு வெற்றி தேவதை வராஹிக்கு சிறிய கோவில் அமைத்து வழிபட்டு பின்னர் பணியை தொடங்கினார் ராஜராஜன். அன்னையின் அருளால் உலகம் போற்றும் பெரிய கோவிலை கட்டினார் என்பது வரலாறு. 

அன்றிலிருந்து ராஜராஜனி வெற்றி தெய்வமாய் மாறிப்போனாள் இந்த வராகி. அன்றிலிருந்து போருக்கு செல்லும் முன் இங்கு வந்து ஆயுத பூஜை போட்ட பிறகே செல்வார். அதனால்தான், அவருக்கு வெற்றிமேல் வெற்றி கிட்டி, பாரத கண்டம் முழுக்க தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாய் நம்ப்படுது. இப்பவும், தஞ்சையை சுற்றியுள்ள பகுதிகளில் வராகி அம்மன் வழிபாடு பிரசித்தி பெற்றது. 


குழந்தைவரம், கல்வியில் தேர்ச்சி பெற்று வெற்றி பெற வியாழக்கிழமையிலும் வழிபடலாம். வெள்ளிக்கிழமைஅன்று வழிபட்டால் பில்லி, சூனியம், ஏவல், தோஷம் நீங்கும். சனிக்கிழமையன்று வழிபட்டால் நினைத்த காரியம் கைகூடி வெற்றிபெறும். மாதத்தில் வருகிற வளர்பிறை, தேய்பிறை, பஞ்சமி திதியிலும் விரதம் இருந்து வழிபட்டால் நல்லது.
ஓம் ச்யாமளாயை வித்மஹே
ஹல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வாராஹி ப்ரசோதயாத்

வராகி தேவியை வழிப்படுவோம். வாழ்வில் எல்லா வளமும் பெறுவோம்....

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1472461
நன்றியுடன்,
ராஜி. 

14 comments:

 1. படித்தேன், ரசித்தேன்.

  ReplyDelete
 2. பகிர்வுக்கு நன்றி சகோ
  தமன்னா சேர்ந்து விட்டதாக பொய் சொல்கிறது நான் என்ன செய்வது ?

  ReplyDelete
  Replies
  1. தமிழ்மண முதல்வருக்கு வாழ்த்துகள்.

   Delete
  2. தமன்னா இப்படிதான் அடிக்கடி பொய் சொல்றாங்கண்ணே

   Delete
 3. வராகி அம்மனை ...அழகிய படங்களுடன் தரிசித்தோம்....

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அனு

   Delete
 4. இப்போதெல்லாம் ஆன்மீகப் பதிவராக மாறிவிட்டீர்கள்.

  ReplyDelete
  Replies
  1. ராஜேஸ்வரி அம்மாள் மாதிரி ஆகனும்ண்ணே. அதுமில்லாம வயசாகிட்டுதுல்ல. இனி போற வழிக்கு புண்ணியம் தேடிக்கனும்

   Delete
 5. கைவசம் நிறைய கதைகள் உள்ளன போலும்! த ம 4

  ReplyDelete
  Replies
  1. ம்ம்ம்ம் இன்னும் இருக்குப்பா. படிக்க படிக்க பக்தி வர்றதைவிட கடவுள் மறுப்புதான் வருது

   Delete
 6. நல்லதகவல்கள்! வராகி அம்மனைப் பற்றி! ரசித்தோம்...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே

   Delete
 7. #ராஜராஜனின் வெற்றிக்கு காரணம் ஒரு பெண் தெய்வமா?!#
  ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் பெண் இருப்பது தெரியும் :)

  ReplyDelete
 8. என் பதிவு ஒன்றில் நான் இப்படி எழுதி இருந்தேன் /கடவுளுக்கு ஏராளமான சக்தி உண்டு என்று நாம் நம்ப, அவனுக்கு பிரம்மா, விஷ்ணு, சிவன் முறையே படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்று செயல்களின் வெளிப்பாடுகளாக அறிவிக்கப்படுகிறோம். இன்னும் கடவுளை ராமனாகவும் கண்ணனாகவும், முருகனாகவும் கற்பிதம் செய்து அவர்களின் சக்திகளில் நம்பிக்கை வைத்து அவர்களை வழிபாடு செய்தால் நலம் பெறுவோம் எனும் நம்பிக்கை சிறு வயது முதலே வளர்க்கப்படுகிறது. தாயே மனிதனின் முதல் தெய்வம் என்று கருதப்படும் நம் நாட்டில், கடவுளை அன்னையின் வடிவத்திலும் வழிபடுகிறோம். சரஸ்வதியாக , லட்சுமியாக , பார்வதியாக, ஒவ்வொரு தெய்வமும் ஒவ்வொரு சக்தியின் பிரதிபலிப்பாக வணங்க வளர்க்கப்படுகிறோம்./இருந்தாலும் சில கற்பனைகள் கட்டுக்குள் அடங்காதது போலவே இருக்கிறது

  ReplyDelete