Wednesday, May 03, 2017

யதுகுல சந்ததிகளின் முடிவின் விதை விதைக்கப்பட்ட நிகழ்வு - தெரிந்த கதை தெரியாத உண்மை .

The Lost Continent of Kumari Kandam (Lemuria):

கிருஷ்ணன் துவாரகையில் தன் மனைவியர்களான பாமா, ருக்மணி ஆகியோரோடு வாழ்ந்து யதுகுலத்தின் தலைவனாக சிறப்பாக ஆட்சி செய்துவந்தார். அந்த யதுகுலத்தினரது அழிவு அவர்களுடைய வம்சத்து இளைஞ்ர்களாலேயே தொடங்கிற்று.  கிருஷ்ணர் யாதவ குலத்தில் தோன்றியபோதும், யாதவர்கள் ஒருபோதும் அவதாரமான கிருஷ்ணன் தங்களுடன் வாழ்கிறார் என்பதை உணர்ந்திருக்கவில்லை. கிருஷ்ணனின் பெருமைகளை உணர்ந்து சில முனிவர்களும், ரிஷிகளும், தேவர்களும், பாண்டவர்களும் மற்றும் சிலரும் அவ்வப்போது துவாரகைக்கு வந்து ஆசிகளை பெற்று செல்வார்கள். 

அதுப்போல ஒருமுறை சில ரிஷிகள் துவாரகைக்கு வந்தபோது, யாதவ குலத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள் கிருஷ்ணரின் மகனான சாம்பா என்பவனை கர்ப்பிணியாக வேடமிட்டு இவளுக்கு பெண் குழந்தை பிறக்குமா?! ஆண் குழந்தை பிறக்குமா?! என்று ரிஷிகளிடம் கேட்டனர். கோபமுற்ற ரிஷிகள் ஒரு உலக்கையை அவள் பெற்றெடுப்பாள். அது உங்கள் குலத்தை அழிக்கும் என்று கூறினார். சாம்பா தன் உடையை அவிழ்த்தபோது ஒரு இரும்பு உலக்கை அவன் உடையில் இருந்தது. 
அங்கிருந்தோர் உடனே  நடந்த சம்பவத்தை பலராமனிடமும், கிருஷ்ணரிடமும் தெரிவித்தனர். அவர்களின் பொறுப்பற்ற நடத்தையைக் குறித்து பலராமன் கோபமடைந்தார். ரிஷிகளின் சாபத்தை கேட்டதினால் கவலையுற்ற பலராமன் அந்த இரும்பு உலக்கையை தூளாக அரைக்கும்படி செய்தார். ஒரு துண்டு மிகவும் கடினமாக இருந்தது, அதை தூளுடன் சமுத்திரத்தில் வீசச் சொன்னார். 

அக்ரூரர் என்பவர் யாதவ குலத்தின் ஒரு பிரிவான விருஷ்ணி கிளைக்குலத்தவர் இவர் கிருஷ்ணரின் சித்தப்பா முறையாவார் கம்சனின் அரசவையில் அமைச்சராகவும் .பிருந்தாவனத்திலிருந்த கிருஷ்ணரையும், பலராமரையும், மதுரா கம்சனின் அரண்மனைக்கு கூட்டிச் சென்றவரூம் இவரே ஆவார் ..பின்னர் கிருஷ்ணரின் ஆலோசகராக இருந்தவர்.அவர்தான் இதை உடனே பொடியாக்கி அதை கடலில் வீச சொன்னவர் என்றும்  வட இந்திய செவிவழி கதைகளில் சொல்லப்படுவதுண்டு. 
அதை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை .என்ன செய்வது என புரியாமல் ஆயிரம் கேள்விகளுடன் அக்ரூரர், கிருஷ்ணனை பார்த்தார்.கிருஷ்ணரிடம் வெறும் புன்னகை மட்டுமே பரிசாக இருந்தது. காலசக்கரங்கள் நமக்கெதிராக சுழல ஆரம்பித்துவிட்டது. நாம் இறுதிகாலக்கட்டத்திற்கு வந்துவிட்டோம் சித்தப்பா! நீங்களும் உங்களது பணியினை சிறப்பாக செய்து முடித்தீர்கள் என சொல்லவும் அக்ரூரர் பேச வார்த்தை இல்லாமல் திகைத்து நின்றார். சாபத்தினால் வந்த விளைவினை எண்ணித்தான் கிருஷ்னர் அப்படி சொன்னார். 
குருஷேத்திர யுத்தத்தில் தன்னுடைய குலம் முழுவதும் அழிந்துவிட்டதை எண்ணி தீராக்கவலையுடன் இருந்தாள்காந்தாரி. ஒருமுறை, கிருஷ்ணரும் காந்தாரியும் சந்திக்கும்போது,  கிருஷ்ணா! நீ  உடன் இருந்தும் அந்த யுத்தத்தை ஏன் தடை செய்யவில்லை என்று கிருஷ்ணனிடம் கேள்வியை எழுப்பினாள்.  அதற்கு கிருஷ்ணர்  கட்டுப்படுத்தாத துவேஷமும், பொறாமையும்  தான் குரு குடும்பத்தை அழித்தது என்று கிருஷ்ணர் விளக்கிக் கூறினார். இந்த பதிலால் சமாதானமைடையாத காந்தாரி கடுமையாக கோபமடைந்தாள். அந்த கோபத்தின் விளைவாக,  கிருஷ்ணா! .உன்னுடைய குலமும் ஒருவர்கூட மீதமில்லாமல் தங்களைத் தாங்களே அழித்துக் கொள்வார்கள் என்று காந்தாரி சாபமிட்டாள். கிருஷ்ணர் அந்த சாபத்தை ஆசீர்வாதம்போல இருகரம் கூப்பி தலைகுனிந்து வாங்கிக் கொண்டார்.
mahabharatham - the great indian epic:
யாதவர் குலம் என்று சொல்லும் பொழுது கிருஷ்ணருடைய வம்சா வழியினரையும் குறிக்கும். உண்மையில் கிருஷ்ணருக்கு எத்தனை மனைவிமார்கள் என்றால்  16,008 என்பர். ஆனால்அவர்பூ அதிகாரபூர்வமாக 8 மனைவியரை மட்டுமே மணம் புரிந்திருந்தார் என சொல்லப்படுகிறது. இந்த எட்டு மனைவிகளின் பெயர்கள் ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு மாதிரி வேறுபட்டு காணப்படுகிறது. ஆனால் உண்மை எதுவென்று கிருஷ்ணருக்குத்தான் தெரியும்.  பகவத் புராணப்படி ருக்மிணி, சத்யாபாமா, ஜம்பாவதி, கலிந்தி, மித்ரவிந்தா, நக்ஜஜிதி, பதறா மற்றும் லட்சுமணா என்ற எட்டுப்பேரே க்ருஷ்ணரின் மனைவியர்.

Mysore Painting depicting Krishna with his eight principal wives.:
பழைய புராணங்களில் கிருஷ்ணனுக்கு 80 மகன்கள் இருந்ததாக சொல்லப்படுகிறது.  கிருஷ்ணர் மற்றும் ருக்மினிக்கு பிறந்தவர்கள் 10 பேர். அவர்கள்  பிரதியூனா, சாரு தேஷ்னா, சுதீஷ்னா, சருதஹ,  சூசார், சர்குபுதா, பாதரச்சர், சாருசந்திர, விச்சாரு, சரு ஆகியோர்.


கிருஷ்ணர் மற்றும் சத்யபாமாவின் 10 மகன்களின் பெயர்  பானு, சுபாஷ், ஸ்வாபவன், பிரபுன்,  பானுமண்,  சந்திரபவன்,  பிரகத்பனவு,  ஆபிபூவ்,  ஷிபஹானு, பிரபீபுன்.



கிருஷ்ணர் மற்றும் ஜம்பாவதி மகன்களின் பெயர்  சம்பா, சுமித்ரா, புருஜித்ஷ, தாஜித், சாகஸ்ராட், விஜய்,  சித்ரகாட்டு,  வாசுமுன்,  டிராவின், க்ருடு. 



கிருஷ்ணர் மற்றும் நாகஜிகிட்டியின் மகன்கள் வீர், சந்திர, அஷ்வசென், சித்ரகு,  வேகாவான், வ்ஷ்ஷ், ஆடம் ,ஷாங்க்,  வாசு,  குந்தி. 


கிருஷ்ணர் மற்றும் கலிந்தியின் மகன்கள் ஷ்ரூட், கவி,  வெருஷ், வீர்,  சுபாஹு , பத்ரா, சாந்தி, தர்ஷ், பூராமாஸ், சோமாக்.


கிருஷ்ணர் மற்றும் லட்சுமணாவின் மகன்கள்  பிரபா,  கத்ராவான், சிம்ஹா,  பால்,  பிரபுல் ,  உர்தவாக்கம் ,  மகாஷ்தி ,  சஹா,  ஓஜா,  அபராஜித்.


கிருஷ்ணர் மற்றும் மித்ரவிந்தாவின் மகன்கள்  வுக்,  ஹர்ஷ், அனில், குதுரா,  வர்தான்,  அன்னட் , மகாஷ்,  பவன் ,  வனி ,  குஷு. 


கிருஷ்ணர் மற்றும் பதறாவின் மகன்கள்  சக்ராம்ஜித்,  ப்ருத்சன்,  ஷூர், பிரஹரன்,  அரிஜிட்,  ஜெய்,  சுபாத்ரா,  வாம் , ஆயு மற்றும்  சத்தியக். 


இவரிகளின் வரிசை அவர்களது தாயாரின் அடிப்படையை கொண்டது வயதை கொண்டு அல்ல. இந்த என்பது பேர் மட்டுமே புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது .
பூலோக மக்களுக்கும், முனிவர்களுக்கும், தேவர்களுக்கும் நன்றாக அறியப்பட்ட கிருஷ்ணன போல் அவரது மகன்கள் அறியப்படவில்லை. இதில் ஜாம்பவதி பெற்றெடுத்த சாம்பா மட்டும் விதிவிலக்கு. ஏனெனில், அவன் மகாபாரதத்தில் சிறிய பங்கினையும், யதுகுல அழிவிற்கு பெரும்பங்கையும் ஆற்றியவன். சாம்பா கிருஷ்ணரின் மகன் என்றாலும், சிவன் என்று பூலோகத்தில் சொல்லப்படுகிற ருத்திரனின் அம்சமாகவே அவன் இருந்ததாக அநேகர் குறிப்பிடப்படுவதுண்டு. 

இங்கே சிவன் என்றால் யாருக்கும் ஏன் பெரும்பாலான சிவனடியார்களுக்கு கூட தெரியாது. சித்தர்களுக்கும், மகான்களுக்கும், சத்குருக்களுக்கும் மட்டுமே தெரிந்த சதாசிவம் என்பது மும்மூர்திகள் என அறியப்படுகின்ற ருத்திரன், நாராயணன், பிரம்மா இவர்களுக்கு மேலான பரப்பிரம்மம். அதன் வழிபாடு காலப்போக்கில் சில இடைச்செருகல்களால் பெரும்பாலனவர்களுக்கு தெரியாமல் போய்விட்டது. அந்த ருத்திரனுடைய அழிக்கும் சக்திகளை கொண்ட ஒரு மகன் வேண்டும் எனபரப்பிரம்மம் சதாசிவனை நோக்கி பலகாலம் தவம் இருந்தார் கிருஷ்ணர், அந்த சதாசிவமும் அப்படியே ஆகுக என வரமளித்தார். ஆனால் அப்பொழுது கிருஷ்ணர் உணர்ந்திருக்கவில்லை யாதவ குலத்தின் அழிவு இவன் மூலம்தான் உருவாகும் என்று.....
 ..ravi varma painting:
கிருஷ்ணரின் மகன் சாம்பா செய்த எண்ணற்ற தீய செயல்களால், கிருஷ்ணர் மிகவும் வருத்தமாக இருந்தார் என்றும், அவன் யதுகுலத்தை அழிக்க வந்தவன்.  யதுகுலத்தின் பெயரை களங்கப்படுத்த வந்தவன் என்றும், அவனுடைய செய்கையினால் கிருஷ்ணர் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகி கோபப்பட்டு அவனை தொழுநோய் தாக்கட்டும் என்று சபிக்குமளவு அவனை வெறுத்திருந்தார். எனவும் சில வடமொழி புராணங்களில் சொல்லப்படுகின்றது. சாபத்தால் பீடிக்கப்பட்ட சாம்பா உடனடியாக தொழுநோயால் பாதிக்கப்பட்டான். அவனது உடல் ஒரே இரவில் சிதைந்து போனது.  இந்த தொழுநோயால் மிகுந்த வலியும் வேதனையும் அனுபவித்தான். உடனே,  சாம்பாவின் தாயாரும் கிருஷ்ணனின் மனைவியுமான ஜாம்பவதி அவளது மகன் சித்திரவதை அனுபவிப்பதை காணசகிக்காது கண்ணீருடன் கிருஷ்ணனை அணுகி, பிரபோ! என்ன காரியம் செய்தீர்கள் .என்ன இருந்தாலும் அவன் உங்களுடைய மகன் அல்லவா?! அவனை இந்த கஷ்டத்தில் இருந்து விடுவிக்குமாறு மன்றாடினாள்.
ஜாம்பவதியின் கண்ணீரால், கலக்கமுற்ற  கிருஷ்ணர், தன் மகன்மீது இரக்கப்பட்டார். மகனே! நீ அறியாது தவறு செய்தாலும் பொறுத்துக்கொள்வது என்கடனே. அதனால், இதிலிருந்து நீ விடுபட, நீ சூரியனை பிராத்தனை செய்து, சந்திரபாஹா நதியில் நீராடி எழும்போது உன் நோய் குணமாகிவிடும் என ஆசிகள் கூறினார். தந்தையே! என்னால் எழக்கூட முடியவில்லை. பின் எப்படி நான் ஆற்றங்கரைக்கு செல்வேன் என வேதனையுடன் கேட்டான். அதற்க்கு கிருஷ்ணர், கடுமையான குரலில் எப்படியாவது நீ சென்றுதான் ஆகவேண்டும் என கண்டிப்புடன் கூறினார். ஆனால், சாம்பா, கிருஷ்ணனிடம் மனமுருகி வேண்டினான். தந்தையே! என்னால் நகரக்கூடமுடியவில்லை. ஆனால், இருந்த இடத்திலிருந்தே உங்களால் என் நோயை குணப்படுத்த முடியும் வல்லமை உங்களுக்கு உண்டு.  தயவுசெய்து கருணை காட்டுங்கள் என கெஞ்சினான்.ஆனால் கிருஷ்ணர், நீ நதிக்கரைக்கு சென்றே ஆகவேண்டும் என கண்டிப்புடன் இருந்தார். இதைக்கேட்ட ஜாம்பவதி, அவனுடைய இந்த நிலைக்கு நீங்கள்தான் காரணம். ஆகையால் ஒரு தகப்பனின் கடமையாக நீங்களே அவனை நதிக்கரைக்கு கூட்டிச்செல்லுங்கள் எனக் கோபத்துடன் கூறினாள்.
Mirzapur, India: A hindu devotee offers prayers to the sun god after taking holy dips in the river Ganges during the Anant Chaturdashi festivalPhotograph: Anshul Mishra/AP:
முடிவில் என்னதான் ஒரு கடவுளாக இருந்தாலும், ஒரு தந்தையாக கிருஷ்ணர் சாம்பாவை ஆற்றங்கரைக்கு அழைத்துச் செல்ல ஒப்புக்கொண்டார். அவனால் வெகுதூரம் நடக்கமுடியவில்லை. உடனே அவனை கிருஷ்ணர் தூக்கிசென்றார். ஆற்றங்கரையை அடைந்தவுடன், சாம்பாவை கிருஷ்ணரே தண்ணீரில் இறக்கிவிட்டு சூரியனை பிராத்தனை செய்யச்சொல்லி, அவனை தண்ணீரில் முக்கி குளிப்பாட்டி விட்டார். ஆற்றில் மூழ்கி எழுந்த சாம்பா தன் சாபத்தில் இருந்து விடுபட்டு புதுப்பொலிவுடன் திகழ்ந்தான். இந்த சம்பவந்தான் பிற்காலத்தில் யாதவக்குலமே அழிவதற்கு காரணம் எனவும் சொல்லப்படுகிறது .
Dandavats | The Perils Of Being Over-intelligent:
ஒருமுறை மூன்று முனிவர்கள்  கிருஷ்ணனை காண அவரது அரண்மனைக்கு வருகை தந்தனர். அப்பொழுது கிருஷ்ணர் உடனே அவர்களுக்கு தக்க மரியாதை கொடுங்கள்.  உடனே, நான் சபைக்கு வருகிறேன் என அறிவித்தார். அவர்கள் சிறப்பான மரியாதையுடன் அழைக்கப்பட வேண்டும் எனவும் கூறினார். கிருஷ்ணரின் சில நெருக்கமான உறவுகள், தெய்வீகத்தன்மையை குறித்து சிந்திக்காதவர்களாகவே இருந்தனர். காரணம், அவர்கள் கிருஷ்ணனுக்கு மிகவும் நெருங்கிய உறவினர்களாதலால், அவர்களுக்கு தேவையான எல்லாமே கிடைத்தது. துன்பம் என்னவென்று அறியாதவர்களாதலால் அவர்களுக்கு தெய்வத்தின் அவசியம் என்னவென்று தெரியாமல் போய்விட்டது. அவர்கள் எப்பொழுதும் குடியும், கும்மாளம் மற்றும் சோம்பேறிகளாகவே வாழ்ந்துவந்தனர். பிறரை கேலி செய்வது போன்ற காரியங்களில் ஈடுபட்டுவந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் கிருஷ்ணனின் மிக நெருங்கிய உறவினர்களாக இருந்தனர். அவர்கள் வந்திருந்த முனிவர்களுக்கு மரியாதை செலுத்தாமல் அவர்களை அவமரியாதை செய்தனர். ஏனெனில், அவர்களுடைய சொகுசு வாழ்க்கை ஆன்மீகத்தில் இருப்பவர்கள் எல்லாம் வாழ்க்கையை அனுபவிக்க தெரியாதவர்கள் என்றும் பயனற்றவர்கள் என்றும் எண்ணினர். இந்த அவமரியாதை கிருஷ்ணரை காணவந்த முனிவர்களுக்கு கோபத்தையும் மிகுந்த மனவருத்தத்தையும் ஏற்படுத்தியது.
The Curse of the Rishis:
அதிலும் குறிப்பாக கிருஷ்ணரின் மகன் சாம்பா  இதுமாதிரியான கோமாளித்தனத்திற்கு மிகவும் பெயர்போனவன். அவனும் சில இளைஞர்களும் சேர்ந்து முனிவர்களை சோதிக்க எண்ணினார். சாம்பாவின் நண்பர்கள் அவனது வயிற்றில் ஒரு மண்பாண்டம் வைத்து, பின்னர் அவனுக்கு புடவை கட்டி முனிவர்களுக்கு முன் கூட்டிவந்தனர். கூட்டத்திலுள்ள ஒரு இளைஞன் விளையாட்டாக, முனிவர்களே! இந்த பெண் என்ன குழந்தை பெறுவாள்?! ஆண் குழந்தையா இல்லை பெண் குழந்தையா?! தயவுச்செய்து கிருஷ்ணர் வருவதற்குள் எங்களிடம் சொல்லமுடியுமா என கேலியாக கேட்டனர். அவர்களுடைய விளையாட்டுதான் யாதவகுல அழிவுக்கு சாபமாக அங்கே விளைந்தது
அந்த இளைஞர்கள் தங்களை கேலி செய்வதை வந்திருந்த முனிவர்கள் உடனே தெரிந்து கொண்டனர். இச்செயல் அவர்களை மிகவும் கோபங்கொள்ள வைத்தது.  நீங்களெல்லாம் கிருஷ்ணரின் உறவினர்களோ!? சாம்பா நீ கிருஷ்ணரின் சொந்த மகன். நீயும் இவர்களோடு சேர்ந்து எங்களை கேலி செய்கிறாய்.  முனிவர்கள் என்ற மரியாதைக்கூட இல்லாமல் இப்படி செய்கிறாயே என்று வருத்தப்பட்டு... இந்த பெண் ஒரு குழந்தையை பெற்றெடுப்பாள்.  ஆனால்,  அது மனிதகுழந்தை இல்லை. ஒரு இரும்பு உலக்கையாக  இருக்கும். அந்த இரும்புத்துண்டின் மூலம்தான் உங்களின் முழுக்குலமும் அழியும் என சாபம் கொடுத்தனர். நாங்கள் பல வருடம் தவம் இருந்த தவச்சீலர்கள். எங்களையே நீங்கள் பரிகாசம் செய்கிறீர்கள். கடவுளிடம் பக்தி செலுத்துபவர்களை நீங்கள் மதிப்பதில்லை. ஆகையால் நீங்கள் எல்லாம் அழிக்கப்படவேண்டியவர்களே என சாபம் கொடுத்தார்கள்.
"My dear Lord Śiva, I accept your statements, and your desire for Bāṇāsura is also accepted by Me. I know that this Bāṇāsura is the son of Bali Mahārāja, and as such I cannot kill him because that is My promise. I gave a benediction to King Prahlāda that all the demons who would appear in his family would never be killed by Me. Therefore, without killing this Bāṇāsura, I have simply cut off his arms to deprive him of his false prestige.:
அந்த சமயத்தில்தான் கிருஷ்ணர்  அம்மண்டபத்தினுள் நுழைகிறார். அப்பொழுது  முனிவர்களின் சாபத்தை கேட்டதும் மிகவும் கவலையடைந்தார். அவரும் புரிந்துக்கொண்டார். அவரது உறவினர்கள் எந்தளவு முனிவர்களை புண்படுத்தி இருப்பார்கள் என்று கிருஷ்ணரை கண்ட முனிவர்கள், தாங்கள் கொடுத்த கடுமையான சாபத்துக்காக வருந்தினார்கள். ஒருகணம் கோபத்தால் வந்த வினை எனக்கூறி,  அந்த சாபத்தை திரும்ப எடுக்க நினைக்கும்போது அவர்காளால் அது முடியவில்லை.  இவ்வளவு துரதிருஷ்டவசமான சம்பவங்கள் நடந்திருந்தாலும், அவர்களை கிருஷ்ணர் உபசரித்து நீண்டநேரம் உரையாடினார்.  மேலும்,  கடைசியாக விடைப்பெறும்போது கிருஷ்ணருடைய ஆசீர்வாதங்களையும் முனிவர்கள் பெற்றனர். வருத்தப்பட்ட முனிவர்களை தேற்றினார் கிருஷ்ணர். எல்லாம் நடக்கவேண்டிய சமயத்தில் சரியாக  நடக்கிறது. நீங்கள் ஒரு கருவி மாத்திரமே என ஆறுதல் சொல்லி அனுப்பினார்.

காலங்கள் வேகமாய் ஓடியது. சாம்பா வயிற்றிலிருந்து இரும்புத்துண்டு வெளியானது. சாம்பா,  அவன் சகோதரர்கள் மற்றும்  அவர்களுடன் இருந்த கிருஷ்ணரின் மற்ற மனைவியருக்கு பிறந்த சகோதர்கள்  தங்கள் அழிவு தவிர்க்க முடியாதது என்றும் அதிவிரைவில் இது நடக்கும் என உணரத் தொடங்கினர். அக்ரூரரும் அந்த இரும்புத்துண்டை பொடியாக்கி கடலில் எறிய சொன்னதை அவர்கள் யாரும் செய்ய முன்வரவில்லை. .பின்னர் அவரே அந்த வேலையை செய்து முடித்தார்.

ஆனாலும், யாதவ குலத்தின் அழிவு தொடங்கியது.... 

மீண்டும் வேறொரு பதிவில் யதுகுலத்தின் முடிவை பார்க்கலாம்...


9 comments:

  1. படங்கள் அருமை
    முழுக்க படித்தேன்
    ஆய்வுச் சிந்தனைகள் ஓடுகின்றன.
    மீண்டும் வருகிறேன்
    தம +

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க சகோ. அவசியம் வாங்க விவாதிப்போம்.

      Delete
  2. பதிவும். அதற்கேற்ப அழகிய படங்களும் அருமை பாராட்டுகள்

    ReplyDelete
    Replies
    1. படங்கள் எல்லாம் பழங்கால ஓவியங்களை ,நவீன ஓவிய அமைப்பு ,அல்லது ஐரோப்பிய வகை ஓவியக்கலைகள் மூலம் வரையப்பட்ட நிறைய ஓவியங்களின் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டவை .வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ..சகோ ..

      Delete
  3. தெரியாத கதை. ஆவலுடன் தொடர்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் ஒவ்வருவாரமும் தெரியாத கதை தெரிந்தே வரும் ...தொடர்ந்து படியுங்கள் உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள் நன்றி ...

      Delete
  4. பொருத்தமாக இணைக்கப்பட்டுள்ள படங்களும் மிக அழகு. ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், படங்களை ரசித்து கருத்திட்டமைக்கும் நன்றி

      Delete
  5. படங்கள் அனைத்தும் அழகு!! யாதவ குல அழிவு பற்றி அறிந்திருந்தாலும், உங்கள் பதிவிலிருந்து கூடுதல் தகவல்கள் அறிய முடிந்தது. குறிப்பாகக் கிருஷ்ணரின் குடும்பம் பற்றி. பகிர்விற்கு மிக்க நன்றி.

    ReplyDelete