Tuesday, May 09, 2017

நரசிம்மரின் உக்கிரம் தணிக்க தயிர்சாதம் - நரசிம்மர் ஜெயந்தி ஸ்பெஷல்

Krishna, in his Narasimha avatar, usually depicted with a lion's head, many arms, a wreath of venomous snakes, and a whole lotta carnage.:
எங்கெல்லாம்  தீமை உருவாகுதோ அங்கெல்லாம் நான் அவதரிப்பேன்னு கீதையில் கண்ணன் சொன்னான். ஆனா, அதுக்கு முன்னாடியே மச்சம், வராகம், கூர்மம், சிம்மம்,  ராமர்  உட்பட பல அவதாரங்களை எடுத்து தீமைகளை அழித்திருக்கார். விஷ்ணுவின் பல அவதாரங்களில் மிகமுக்கியமான பத்து அவதாரங்களை தசாவதாரம்ன்னு சொல்வாங்க. தசாவதாரங்களில் மிக முக்கியமானவைகளில் சிம்ம அவதாரம் எனச்சொல்லும் நரசிம்ம அவதாரமாகும்.

நரசிம்ம அவதாரம் தசாவதாரங்களில் நாலாவதாகும். மத்த அவதாரமெல்லாம்  பிறப்பெடுத்து குறிப்பிட்ட சமயம் வரும்வரை காத்திருந்து  தீமையை அழிக்கும். ஆனால், நரசிம்ம அவதாரம் மட்டும் பக்தன் அழைத்த நொடி பிரசன்னமானதாகும்.
narasimha:
இரண்யாட்சன் என்ற அசுரன் பூமியை கடலுக்குள் மறைத்து வைத்தான்.  வராக அவதாரமெடுத்து அவனை வதம் செய்து பூமியை காத்தருளினார் மகாவிஷ்ணு.  தன் சகோதரனின் மரணத்திற்கு பழி வாங்க எண்ணிய இரண்யகசிபு தன் சக்தியை அதிகரிக்க வேண்டி பிரம்மனை நோக்கி கடுந்தவம் இருந்தான்.    இரண்யகசிபுவின் தவத்தை கலைக்க வேண்டி இந்திரன் கர்ப்பிணியான  இரண்யகசிபுவின் மனைவி லீலாவதியை சிறைப்பிடித்தான்.  இதை அறிந்த நாரதர்  லீலாவதியை மீட்டு தன் ஆசிரமத்தில் வைத்துக்கொண்டதோடு அவள் கருவறையில் இருக்கும் கருவிற்கு விஷ்ணுவின் மகிமையை எடுத்துச்சொல்லி    சகல கலைகளையும் கருவிலேயே கற்று தந்தார்.   இவ்வாறாக பிரகலநாதன் பிறந்தான்.
Lord Brahma: Inspired by Him only, I discover what is already created by Him [Nārāyaṇa] under His vision as the all-pervading Supersoul, and I also am created by Him only. - SB 2.5, The Cause of All Causes:
இரண்யகசிபுவின் கடும் தவத்துக்கு இரங்கிய பிரம்மன் என்ன வரம் வேண்டுமென கேட்டார்.  சாகாத வரம் வேண்டுமென கேட்டு நின்றான் இரண்யகசிபு. பிறந்த அனைத்து உயிர்களும் ஒருநாள் இற்ந்தே ஆகவேண்டுமென்பது இறைவன் விதித்த விதி. அதனால் அதை தவிர்த்து வேறு கேள் என்றார் பிரம்மன். மும்மூர்த்திகள் உட்பட தேவாதி தேவர்கள், முனிவர்கள், மனிதன்,மிருகம், பறவை புல், பூண்டு, மரம், செடி, கொடி   எந்த உயிரினத்தாலும், இரவுமல்லாது பகலுமல்லாது, உள்ளேயுமல்லாது வெளியேயுமல்லாது,  பூமியுமல்லாது விண்ணுமல்லாத , எந்தவகை ஆயுதத்தாலும் தனக்கு மரணம் சம்பவிக்கக்கூடாது, என் உடலிலிருந்து சொட்டு ரத்தம் கீழே சிந்தினாலும் அதற்கு காரணமானவன் தலை சுக்குநூறாய் போகவேண்டுமென வேண்டி நின்றான். அவ்வாறே ஆகட்டுமென பிரம்மனும் வாக்களித்தார்.
Lord Brahma, who is in charge of secondary creations. One Brahma appears per universe, and his number of heads is an indication of the size of the universe created.:
கிட்டத்தட்ட சாகா வரம் வாங்கிய பெருமிதத்தில்  நாட்டுக்கு திரும்பிய இரண்யகசிபு தன் மனைவி லீலாவதியையும், மகன் பிரகாலநாதனையும் அழைத்து வந்தான். அத்தோடு தானே கடவுள் என்று அறிவித்ததோடு, இனி யாரும் ஹரியை கும்பிடக்கூடாது, அவன் நாமமே தன் காதில் விழக்கூடாது என அறிவித்தான். மூலோகமும் இரண்யகசிபுவுக்கு அஞ்சி ஹரி நாமத்தை உச்சரிக்காமல் இருந்தனர். ஆனால், பிரகலநாதன்?!

சதாசர்வக்காலமும் ஹரி நாமத்தை உச்சரித்து ஹரி வழிப்பாட்டிலேயே கவனத்தை செலுத்தினான் பிரகலநாதன். இரண்யகசிபு சாம,பேத, தாண்ட என அத்தனை வழிகளிலும் முயன்று தன் மகனின் மனதை மாற்ற இயலாமல் தோற்று நின்றான்.  ஒருநாள் மகனை அழைத்து அவன் மனதை மாற்ற முயன்று தோற்றபோது கடுங்கோபம் கொண்டு , மூடனே! என்னை எதிர்த்து பேசும் தைரியம் உனக்கு யார் தந்தது!? இம்மூவுலகில் என்னைவிட உயர்ந்தவன் யார்!? என கர்ஜித்தான். எல்லா உயிருக்கும் படியளிக்கும் பரந்தாமனே சிறந்தவன் என பிரகலநாதன் எதிர்த்து வாதிட்டான்.
Sri Narasimha destroys Hiranyakashipu's army:
எங்கிருக்கிறான் அந்த பரந்தாமன் என்று கர்ஜித்தான் இரண்யகசிபு. தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் அவன். என பதிலுரைத்தான் பிரகலநாதன். வெறிக்கொண்டு அருகிலிர்ந்த தூணை கதாயுதத்தால் பிளந்தான் இரண்யகசிபு . தூணிலிருந்து நரசிம்மர் ஆக்ரோசமாய் வெளி வந்தார்.  தேவர், மனிதன், பறவைன்னு எந்த உயிரினமாகவுமில்லாமல் சிங்க முகமும், மனித உடலோடும் தோன்றி, இரண்யகசிபுவை தூக்கி உள்ளேயுமல்லாது வெளியேயுமல்லாத வாசல்நிலைப்படியில் அமர்ந்து, வானுமல்லாத பூமியுமல்லாத தன் மடியில் கிடத்தி, எந்த ஆயுதத்தாலும் ஆகாத தன் கைவிரல் நகத்தால் இரண்யகசிபுவின் குடலை கிழித்து அவன் ரத்தத்தை உறிந்துக்குடித்து அவனை கொன்றார். அப்படி அவர் கொன்ற நேரம் இரவுமல்லாத பகலுமல்லாத மாலை இருள் சூழும் நேரம்.
இரண்யகசிபுவை வதம் செய்தும் நரசிம்மர் உக்கிரம் குறையாமல் இருப்பதைக்கண்ட தேவாதிதேவர்கள் பலவாறு முயன்றனர். கடைசி உத்தியாய் பிரகலநாதனை அனுப்பினர். பிரகலநாதனை கண்டதும் உக்கிரம் குறைய தொடங்கியது.  அடுத்து மகாலட்சுமியை அனுப்பினர். முழுக்க உக்கிரம் தணிந்த நரசிம்மர் மகாலட்சுமிதேவியை தன் மடியில் இருத்திக்கொண்டு  அனைவருக்கும் அருள்பாலித்தார்.

இரண்யகசிபுவின் வதமும், நரசிம்ம அவதாரமும் நிகழ்ந்த இடம் ஆந்திர மாநிலம் அகோபிலம் நகரமாகும். இன்றளவும் இரண்யகசிபு வாழ்ந்த இல்லமும், பிரகலநாதன் குருகுலமும், நரசிம்மர் வெளிவந்த தூணும் அகோபிலத்தில்  இருக்கு. நரசிம்ம அவதாரத்தை தான் காணவில்லையென கருட பகவான் வருந்த அவருக்கு அகோபிலத்தில் ஒன்பது அவதாரமெடுத்து காட்சி தந்தார். கருடன் வழிப்பட்டு வரும் இந்த ஒன்பது மூர்த்தங்களும் சுயம்புவாய் உருவானது. அகோபில மலை ஆதிசேஷன் வடிவில் இருக்கு. இம்மலையின் ஒரு பக்கத்தில் திருமலையும், இன்னொரு பக்கம் ஸ்ரீசைலமும் இருக்கு.
Narasimha pictures:
உக்ரமூர்த்தியான ஆதிநரசிம்மர் எனச்சொல்லப்படும் அகோபில நரசிம்மர் மலைமீது அருள்பாலிக்கிறார்.

அகோபிலத்திலிருந்து 2கிமீ தூரத்தில் மலையடிவாரத்தில் இருக்கிறார் பார்க்கவநரசிம்மர். இவர் ராமரால் வழிப்பட்டவர்.  பார்க்கவன் என்பது ராமரின் பெயர்களில் ஒன்று.

மலைமீதே தென்கிழக்கு திசையில் 4 கிமீ யோக நிலையில் அமர்ந்திருக்கிறார் யோகானந்த நரசிம்மர். பிரகலநாதனுக்கு யோகத்தை கற்பித்தவர் இவர்.

குடைவடிவிலான கோவிலில் பத்மபீடத்தில் அமர்ந்து அரிய வகை கல்லாலான மூர்த்தத்திலிருந்து அருள்பாலிக்கிறார் சத்ரவத நரசிம்மர். கீழ் அகோபிலத்திலிருந்து 4கிமீ தூரத்தில் உள்ளது இக்கோவில்.

இரட்டை நரசிம்மர் தலம் என்ற பெயருடன் பாபநாசினி நதிக்கரையின் கிழக்கில் லட்சுமி நரசிம்மரும், வராக நரசிம்மரும் இருக்கிறார்கள். இங்கிருந்து வேதகிரி, கருடாத்ரி மலைகளுக்கிடையில் உள்ள பள்ளத்தாக்கில் வராக குண்டத்திலிருந்து பாபநாசினி நதி பாய்வதை காணலாம்.

மேல் அகோபிலத்திலிருந்து 1 கிமீ தூரத்தில் கராஞ்ச மரத்தடியில், கையில் வில்லேந்தி அருள்பாலிக்கிறார் கராஞ்ச(சராங்க) நரசிம்மர். 
Narsimha:
மா என்றால்  லட்சுமி. லோலன் என்றால் பிரிமானவன். நரசிம்மரின் உக்கிரத்தை லட்சுமி தணித்ததால் லட்சுமிப்பிரியரான பெருமாள் அவளை மடியில் அமர்த்தியபடி காட்சியளிக்கிறார் மாலோல நரசிம்மர். இக்கோவில் அகோபிலத்திலிருந்து 2 கிமீ தூரத்தில் இருக்கு.

பாவன ஆற்றங்கரையில் கோவில் கொண்டதால் பாவன நரசிம்மர்ன்னு பெயர் பெற்றார்.  அகோபிலத்திலிருந்து ஆறு கிமீ தொலைவில் இக்கோவில் இருக்கு.

இரண்யனை வதைத்த ஜ்வாலா நரசிம்மர் மேரு மலையில் வீற்றிருக்கிறார். இரண்யனை வதைத்த இடமும் இதுவே. குறுகிய மனித வாழ்க்கை சொல்லாமல் சொல்லும் வழியில் சென்று இவரை தரிசிக்க வேண்டும். எட்டு கைகளுடனும், நான்கு கைகளுடனும் இரண்டு நரசிம்மர் திருவடிவங்கள் இங்குள்ளது.
இதில்லாமல் தமிழகத்தில் சோளிங்கரில், பரிக்கல், பூவரன்குப்பம், சிங்கிரிக்குடி, அந்திலி, நாமக்கல், உக்கடம், கீழப்பாவூர், ஸ்ரீரங்கம்,  சிந்தலவாடி உள்ளிட்ட பல இடங்களில் அருள் பாலிக்கிறார்.   வாகாசி மாதம் வளர்பிறை சதுர்த்தி, சுவாதி நட்சத்திரத்தில் பிரதோஷ வேளையில் நரசிம்ம அவதாரம் நிகழ்ந்தது. அதனால், சிவனுக்கு மட்டுமல்லாமல் பெருமாளுக்கும்கூட பிரதோஷ வேளையான மாலை 4.30 முதல் 6 மணி வரையிலான நேரம் வழிப்பாட்டிற்கு உகந்தது.  சனிப்பிரதோஷம் போல செவ்வாய் கிழமை பிரதோஷம் விஷணுவுக்கு உகந்தது.  இந்த நேரத்தில் நரசிம்மரை வணங்கி வந்தால் எதிரி மேல் உண்டான பயம் தீரும். தீவினைகள் அகலும். கடன்கள் தீரும். குடும்பத்தில் அமைதி நிலவும்.
  
நரசிம்மர் வழிப்பாடு..
நரசிம்மர் ஜெயந்தி அன்று நீராடி , லட்சுமி நரசிம்மர் படத்தின் முன் செவ்வரளி, துளசி கொண்டு அலங்கரித்து அர்ச்சனை செய்து தயிர்ச்சாதம், பானகம், பால் வைத்து நைவேத்தியம் செய்து இயன்றளவு தானம் செய்ய வேண்டும்.

நரசிம்மரின் உக்கிரம் தணிக்கும் தயிர்சாதம் செய்முறை...

தேவையான பொருட்கள்;
உப்பு போட்டு குழைய வேக வைத்த சாதம்
ப.மிளகாய்,
கா. மிளகாய்,
இஞ்சி,
கடலைப்பருப்பு,
உளுத்தம்பருப்பு,
கடுகு,
கறிவேப்பிலை,
எண்ணெய்,
உப்பு,
தயிர்,
 பெருங்காயம்.

வாணலியில் எண்ணெய் ஊத்தி காய்ந்ததும் கடுகு போட்டு வெடிக்க விட்டு..


கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு போட்டு சிவந்ததும்...


இஞ்சி போடுங்க...
 
ப.மிளகாய், காய்ந்த மிளகாய் போடுங்க.... 


கட்டியில்லாம அடித்த தயிரில் தாளிச்சதை கொட்டி பெருங்காயம் சேர்த்து..

தேவையான உப்பு சேர்த்து நல்லா கலக்கி..

சாதத்தில் கொட்டி தளர, தளர கிளறவும்... தயிர் புளிப்பா இருந்தா கொஞ்சம் பால் சேர்த்துக்கலாம்..  சாதம் சூடா இருக்கும்போதே தயிர்சாதம் கிளறினா நல்லா இருக்கும்

சுவையான தயிர்சாதம் ரெடி. வெள்ளரிக்காய், மாங்காய், மாதுளை, கருப்பு வெள்ளை திராட்சை, வெங்காயம்ன்னு அவங்கவங்களுக்கு பிடிச்ச மாதிரி சேர்த்துக்கலாம்..

எதிரி பயம் போக்கும் நரசிம்மர் ஜெயந்தி இன்று நாடெங்கும் கொண்டாடப்படுது.
HiNDU GOD: Lord Narsinmha:
நன்றியுடன்...,
ராஜி.


நரசிம்மர் அருள்பாலிக்கும் வெகுசில கோவில்களில் பூவரன்குப்பமும் ஒன்றே. அக்கோவில் பற்றி அறிய இங்கு அழுத்தவும்.....

14 comments:

  1. காணக்கிடைக்காத நரசிம்ம தரிசனம்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிப்பா

      Delete
  2. அறியாக புராணக்கதை அறிந்தேன்

    ReplyDelete
    Replies
    1. இது கிண்டலில்லையே

      Delete
  3. நரசிம்மருக்கு பிடிக்குதோ இல்லையோ ,இந்த சம்மருக்கு தயிர்சாதம் சாப்பிட எனக்கு பிடிக்கும் :)

    ReplyDelete
  4. பதிவும் படமும் அருமை. ஒரு முறை http://kavithaigal0510.blogspot.com-பக்கம் வாருங்களேன்

    ReplyDelete
    Replies
    1. இந்த வாரம் முழுக்க பிசி சகோ. திங்கள்கிழமைல இருந்து அவசியம் வரேன்

      Delete
  5. பூவரசன்குப்பம் நரசிம்மரைப் பற்றி குமுதம் ஜோதிடம் ஏஎம்ஆர் அவர்கள் எழுதியவுடன் சென்று தரிசித்தோம். நல்லது நடந்தது. கடுமையான நோய்க்கு ICU மாதிரி, கைவிட்டுவிட்ட நோயாளிகளுக்கு நரசிம்மனின் சந்நிதி என்று அவர் எழுதுவார். பானகம் நைவேத்யம் செய்வோம். நீங்கள் சொன்னதால் இனித் தயிர்சாதமும் செய்தால் போயிற்று. நன்றி!

    -இராய செல்லப்பா நியூஜெர்சி (விரைவில் சென்னை)

    ReplyDelete
    Replies
    1. நான் சொல்லைலப்பா. நரசிம்மர் கதை இதான் சொல்லுது. பானகம், நீர்மோர், தயிர்சாதம், குளிர்ந்த பால் இவையெல்லாம் நரசிம்மருக்கு படைக்கலாம்.

      Delete
  6. பூவரசன் குப்பம் ,கோவில் பத்தி ,குமுதம் ஜோதிடம் என்னும் வியாபார ,விளம்பர நிறுவனம்,சொன்னாதான் உங்களுக்கு எல்லாம் பெருசாத்தெரியுது போல ,இதே காணாமல் போன கனவுகளில் நான்கு வருடங்களுக்கு முன்பே தெளிவாக இந்த திருக்கோவில் பத்தி எழுதப்பட்டுவிட்டது .முதலில் ஜோதிடம் என்பது உண்மையாக இருக்கலாம் ,அனால் அதை கூறுபவர்களின் ,100 க்கு 99 % பொய்யர்களே வியாபாரம் என்பது மட்டுமே அவர்களது ஒரே நோக்கு ,கடவுளை மட்டும் வணங்குங்கள்,உங்கள் சுமைகள் எல்லாம் தானே குறைந்து போகும் .இதோ அந்த லிங்க்
    http://rajiyinkanavugal.blogspot.com/2014/02/blog-post_21.html

    ReplyDelete
  7. தெரிந்த கதை என்றாலும் உங்கள் பதிவு அருமை..

    கீதா: அகோபிலம் சென்றிருக்கிறேன்..அதே போன்று ஒரே நேர்க்கோட்டில் அமைந்திருக்கும் பரிக்கல், பூவரசஞ்குப்பம், அபிஷேகப்பாக்கம் அதுவும் சென்றிருக்கிறேன்...பாண்டிச்சேரியில் இருந்த போது..

    நல்ல பகிர்வு ராஜி

    ReplyDelete
  8. நவநரசிம்மர் படமும் தனித்தனியே post செய்யவும்.

    ReplyDelete