சம்மர் ஹாலிடே நெருங்குது. ஸ்பெஷல் கிளாஸ்ன்னு பசங்களை படுத்தி எடுக்காம தாத்தா, பாட்டி, மாமா, அத்தை வீடுகளுக்கு கூட்டி போங்க. அதேநேரம் பாரம்பரிய உணவுகளான கூழ், களி, உப்புருண்டை, உளுத்தங்களி, பொருள்விளங்கா உருண்டை, அதிரசம்லாம் செய்யவும், சாப்பிடவும் பழக்குங்க. கோடை விடுமுறை விட்டாச்சு. என்னதான் விதம் விதமா சமைச்சு கொடுத்தாலும் பிள்ளைகளுக்கு திருப்திப்படாது. கடையில போயி வாங்கியாற சொல்லும்.
நான்லாம் சின்ன பிள்ளையா இருக்கும்போது மாலை நேரத்துல போண்டா, வடை, ராகி அடைன்னு செஞ்சு சாப்பிட கொடுப்பாங்க. மாசம் ஒருநாள் சீராளம்ன்னு ஒரு பண்டம் செஞ்சு கொடுப்பாங்க. இதுக்கு கொஞ்சம் மெனக்கெடனும். அதனால எப்பவாவது ஒருநாளுக்குதான் இது கிடைக்கும். செம டேஸ்டா இருக்கும்..
தேவையான பொருட்கள்...
பட்டாணி பருப்பு - 1/4 கி
பச்சரிசி- 1 டேபிள் ஸ்பூன்
காய்ந்த மிளகாய்
பூண்டு,
வெங்காயம்.
தக்காளி,
இஞ்சி பூண்டு பேஸ்ட்,
கறிவேப்பிலை கொத்தமல்லி
உப்பு
எண்ணெய்
கடுகு
கடலைப்பருப்பு , உளுத்தம்பருப்பு..
சீராளத்தை துவரம்பருப்பிலும் செய்வாங்க. ஆனா, பட்டாணிப்பருப்பில் செஞ்சா இன்னும் ருசி அதிகமா இருக்கும். கடலைப்பருப்பைவிட விலை மலிவா இருக்கும் இந்த பட்டாணிபருப்பு.
கடலைப்பருப்பு , உளுத்தம்பருப்பு..
சீராளத்தை துவரம்பருப்பிலும் செய்வாங்க. ஆனா, பட்டாணிப்பருப்பில் செஞ்சா இன்னும் ருசி அதிகமா இருக்கும். கடலைப்பருப்பைவிட விலை மலிவா இருக்கும் இந்த பட்டாணிபருப்பு.
பட்டாணி பருப்புங்குறது கடலைப்பருப்பு மாதிரி கொஞ்சம் பெருசா இருக்கும். அதுல சும்மா ஒரு டேபிள் ஸ்பூன் பச்சரிசி போட்டு இரண்டு மணிநேரம் தண்ணில ஊற வைங்க.
காய்ந்த மிளகாய் பூண்டு உப்பு சேர்த்து கொரகொரப்பா அரைச்சு , இட்லி பானைல வேக விடுங்க. தேவைப்பட்டா கொஞ்சம் ஆப்பசோடா சேர்த்துக்கலாம்.
மாவு வெந்ததும், எடுத்து ஆறினதும், துண்டாக்கிக்கனும்...
வாணலில எண்ணெய் ஊத்தி காய்ந்ததும் கடுகு, க.ப,உ.ப, சோம்பு, பட்டை, லவங்கலாம் போட்டு சிவக்க விடனும்.
அடுத்து ப.மிளகாய், வெங்காயம், உப்பு சேர்த்து நல்லா வதக்கனும்..
அடுத்து இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்கனும்...
மிளகாய்தூள், மஞ்சத்தூள் சேர்த்து வதக்கி, தண்ணி சேர்த்து கொதிக்க விடனும்..
மிளகாய்தூள் வாசனை போனதும் துண்டாக்கி வச்சிருக்கும் சீராளத்துண்டுகளை சேர்க்கவும்...
கரம் மசாலாவை சேர்த்து சேர்த்து கிளறிட்டு, கறிவேப்பிலை, கொ.மல்லி சேர்த்துக்கோங்க.
சூடாய் மட்டுமில்ல ஆறிப்போயிருந்தாலும் நல்லா இருக்கும். வெங்காயத்தை வழக்கத்தைவிட அதிகமா சேர்த்துக்கிடனும். தேங்காய்பூ சேர்ப்பவங்களும் உண்டு. நாங்க சேர்ப்பதில்லை. செஞ்சு பார்த்துட்டு நல்லா இருக்கான்னு சொல்லுங்க... வர்ட்ட்ட்ட்டா?!
நன்றியுடன்,
ராஜி.
நல்லா இருக்கு கா..
ReplyDeleteபட்டாணி பருப்பு வடை செஞ்சு இருக்கேன்...இது புதுசு..
இதை செஞ்சு பாருங்க அனு. நல்லா இருக்கும். வெங்காயம் அதிகமா சேர்க்கனும். அதை மறக்காதீங்க.
Deleteஆஹா பக்கோடா போல இருக்கும் போலயே....
ReplyDeleteமொறுமொறுன்னு இருக்காதுண்ணே. கிட்டத்தட்ட கெட்டியான வடைகறிப்போல இருக்கும்.
Deleteஇதுவும் நல்லா இருக்கே...!
ReplyDeleteசாப்பிடவும் நல்லா இருக்கும்
Deleteபட்டாணிப்பருப்பு எங்கூர்ல நல்லாவே கிடைக்கும். அடை, வடை எல்லாம் அதுலதான் செய்யறது. இங்க சென்னை வந்தப்புறம் கிடைக்கறது ரொம்பக் கஷ்டமா இருக்கு இங்க எல்லா கடைலயும் கிடைக்கறதில்லை. சீராளம் செய்யறதுல நிறைய வெர்ஷன்ஸ் உண்டு.
ReplyDeleteசீராளம் எங்க வீட்டுல பாட்டி விரத நாட்களில் செய்வதுண்டு./ ஆனால் வெங்காய பூண்டு எதுவும் சேர்க்க மாட்டாங்க...எல்லா பருப்பும் போட்டுக்குவாங்க...மிளகு மிள்காய் சேர்ப்பாங்க...தேங்காய் சேர்ப்பாங்க. கிட்டத்தட்ட அடை உசிலினும், அடை உப்புமான்னும் நான் பாட்டிய கலாய்ப்பேன்...ஹையோ நான் பாட்டிய கலாய்ச்சது ரொம்ப...பார்த்தீங்கனா இது கிட்டத்தட்ட குஜராத்தி டோக்ளா...மசாலா சேர்க்கலைனா...
நான் வெங்காயம் பூண்டு சேர்த்து தேங்காயும் சேர்ப்பேன்...சீராளம் மசாலா சேர்க்காம அப்படியே துட்னு போட்டு தாளிச்சும் செய்வேன்..தேங்காய் தூவி...நிறைய கறிவேப்பிலை, வெங்காயம், கொத்தமல்லி எல்லாம் போட்டு...
இல்லைனா நீங்க செய்யறது போல ஆனா பட்டை எலலம் போட்டதில்லை. நோட் பண்ணிக்கிட்டேன்...இது இட்லிக்கு செய்யற வடை கறி போல..நும் சொல்லலாம்....
கீதா
ஒவ்வொரு பகுதிக்கும் வட்டார பேச்சு வழக்கு போல சமையல் முறையும் மாறுபடும்ல்ல கீதாக்கா.
Deleteஇது நான் சுவைத்ததேயில்லை.
ReplyDeleteஅப்படியா?! செஞ்சு பார்த்து சாப்பிடுங்க சகோ.
Delete