Monday, April 30, 2018

பிள்ளைகளுக்கு கொண்டாட்டம், பெற்றோருக்கு திண்டாட்டம் - ஐஞ்சுவை அவியல்


ஐயையே! பகல்ல கொஞ்ச நேரம் தூங்கமுடியுதா?! ஸ்கூல், காலேஜ் லீவ் விட்டாலும் விட்டாங்க. கத்தியே கூப்பாடு போடுதுங்க. இல்லன்னா டிவி பார்த்துக்கிட்டு இம்சை பண்ணுதுங்க.  ச்ச்சை...

நம்ம வீட்டு பசங்களும் இப்படிதானே கொட்டமடிக்கும்?! அதை நினைச்சு பாரு புள்ள. ஈசியா எடுத்துக்க. லீவ் நாளில்தானே அதுங்க நிம்மதியா இருக்க முடியும்.

ஆமாம் மாமா. லேட்டா எழுந்து, பிடிச்சதை சாப்பிட்டு டிவி பார்த்துக்கிட்டு ஹோம் வொர்க் இல்லாம நல்லா எஞ்சாய் பண்ணுதுங்க.  

பிள்ளைகளை அந்தமாதிரி லேட்டா எழுந்துக்க விடுறது தப்பு. எப்பயும்போல, அதேநேரத்துக்கு எழுப்பிவிட்டுடனும். இல்லன்னா, ஸ்கூல் திறக்கும்போது பிள்ளைகள்தான் கஷ்டப்படும். நமக்கு கோவம் வரும். கத்துவோம். பிள்ளைகளை அடிப்போம். அதேமாதிரி, வீட்டில் பொருட்கள் இறைஞ்சு கிடக்க விடக்கூடாது, அந்தந்த இடத்துல அந்தந்த பொருட்களை வைக்கனும்ன்னு ஸ்ட்ரிக்டா சொல்லிடனும். பழைய புத்தகத்தை தேவைப்படுறவங்களுக்கு கொடுக்க சொல்லனும். வெங்காயம், பைசாக்கு ஆசைப்பட்டு எடைக்கு எடை போட்டுட கூடாது. அக்கம்பக்கத்து வீட்டாளுங்களுக்கு எதாவது கொடுக்கனும்ன்னா பிள்ளைங்கக்கிட்ட கொடுத்தனுப்பனும். அப்பதான் அக்கம்பக்கத்தாரோடு குழந்தைகளுக்கு ஒரு அன்னியோன்யம் பிறக்கும். பகிர்ந்துண்ணுதலும் என்னன்னு புரியும்.
செடிக்கு தண்ணி ஊத்துறது, மாடு ஆடு கோழின்னு இருந்தா அதுகளுக்கு தீவனம் போட சொல்லனும். பக்கத்திலிருக்கும் வயல்வெளிக்கு கூட்டி போய் வேலை செய்யுறதை காட்டலாம். அப்பதான் விவசாயிங்க கஷ்டம் தெரியும். உணவின் மதிப்பு புரியும். மார்க்கெட், உழவர் சந்தை மாதிரியான இடங்களுக்கு கூட்டி போகனும். பொருட்களை வாங்க குழந்தைகளை பழக்கனும். ட்ராபிக் போலீஸ், போஸ்ட்மேன் மாதிரியான ஆட்கள் எப்படி வேலை செய்யுறாங்கன்னும், அவங்க படும் கஷ்டத்தை புரிஞ்சுக்க அவங்களோடு பழக விடனும். ஆண், பெண்ணென இரு குழந்தைக்கும் சின்ன சின்ன அத்தியாவசியமான சமையல்களை பழக்கலாம். அப்படியே வீட்டு வேலைகளையும் பழக்கலாம். அந்த தெரு பிள்ளைகள் முழுக்க சேர்ந்து தெருவினை சுத்தம் பண்ணலாம். கிராம சபா, பஞ்சாயத்துகளுக்கு போய் அங்கிருக்கும் நடைமுறைகளை தெரிஞ்சுக்கலாம். கொஞ்சம் வளர்ந்த பிள்ளைங்க, பேங்க், போஸ்ட் ஆஃபீஸ், ஆர்.டி.ஓ ஆபீஸ்களுக்கு போய் உதவி தேவைப்படுறவங்களுக்கு உதவி செய்யலாம்.
ட்ராயிங்க் கிளாஸ், ப்ரெஞ்ச், சீனமொழி கிளாசுக்குதான் போகனும்ன்னு இல்ல, நீச்சல், ட்ரைவிங்க், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் ரிப்பேர், மாதிரியான கிளாசுக்கும் போகலாம். அப்பா, அம்மாவோடு அவங்க ஆஃபிசுக்கு போய் அவங்க படும் கஷ்டத்தை தெரிஞ்சுக்கலாம். அம்மாவோடு கிச்சனில் ஹெல்ப் பண்ணலாம்.
சொந்தக்காரங்க வீட்டுக்கு கூட்டி போகனும். அப்படி போகும்போது அவங்கக்கிட்ட பர்மிஷன் கேட்டுட்டு போகனும், அங்க போய் அதிகாரம் செய்யக்கூடாது. அவங்க வீட்டு வேலைகளில் ஹெல்ப் பண்ணனும். முதியோர் இல்லம், கருணை இல்லம் மாதிரியான இடங்களுக்கு கூட்டி போகனும். அப்பதான் நாம எவ்வளவு வசதி வாய்ப்புகளோடு இருக்கோம்ன்னு தெரிஞ்சுக்கிட்டு கடவுளுக்கு, பெத்தவங்களுக்கு நன்றி சொல்வாங்க. படிப்பறிவு மட்டும் வெற்றியை தேடி தந்திடாது. பட்டறிவுதான் சரிப்பட்டு வரும். வெற்றியை தரும்.
நம்ம திருவண்ணாமலை மாவட்டத்தை சார்ந்த, கலசப்பாக்கம் ஊராட்சியில் சின்னக்கல்லந்தல் பகுதியை சார்ந்த ஆடுமேய்க்கும் வீட்டில் பிறந்த பி.யுவராஜ் படிச்சு ஐ.ஏ.எஸ் ஆகி இருக்கார். முதல்ல அரசு பள்ளியில் படிச்ச இவரு சிவில் இஞ்சினியரிங்க் படிச்சுட்டு சகாயம், இறையன்பு மாதிரியான கலெக்டராகனும்ன்னு சொல்லி கஷ்டப்பட்டு படிச்சு இந்திய அளவில் 751 வது இடமும், தமிழக அளவில் 74வது இடமும் பெற்றார். இவர் கலெக்டரானால், ஆறு, குளம் மாதிரியான நீர்நிலைகளை தூர்வாரி, ஆக்ரமிப்பை அகற்றி நீர் சேகரிக்க ஏற்பாடு பண்ணுவாராம். அதான் அவரோட லட்சியம்ன்னு பேட்டியில் சொல்லி இருக்கார்.
நல்ல விசயம்தான் மாமா. இணையத்துல ஒரு கல்யாண இன்விடேஷன் உலாவுது. அதை புதைச்சு வச்சா செடி முளைக்குமாம். நல்ல முயற்சிதானே?!

ஆமாம். இனி இதுமாதிரியான எதாவது செஞ்சாதான் பூமியை காப்பாத்த முடியும்.   பகையாளி குடும்பத்தை உறவாடி கெடுன்ற  பழமொழிக்கு அர்த்தம் தெரியுமா மாமா?!
பகையாளி வீட்டுல போய் உறவாடி அவனை கெடுக்கனும்ன்னு அர்த்தமில்ல. பகையாளி வீட்டுல உறவாடி அவன் மனசுல இருக்கும் பகை உணர்ச்சியை போக்கி அவனையும் நல்லவனா மாத்தனும். இதான் அர்த்தம். நான் சொன்னது சரியா புள்ள?!

சரிதான் நான் கேட்கும் விடைக்கு பதில் சொல்லு பார்க்காலாம்...
காட்டில் பச்சை... கடையில் சிவப்பு... வீட்டில் சிவப்பு... அது என்ன?!
பதில் யோசிச்சு வை. நான் வெளில போய்ட்டு வந்து பதிலை கேட்டுக்குறேன்...

நன்றியுடன்,
ராஜி

16 comments:

  1. அவியல் ப்ரம்மாதம்.....விடுமுறையில் இருக்கும் குழந்தைகள் நல் வழியில் செல்லவும்,கஷ்ட நஷ்டங்களைப் புரிந்து கொள்ளவும் ஏற்ற வகையில் தாய்/தந்தையரால் செய்யக் கூடியனவற்றைப் பதிந்திருக்கிறீர்கள், நன்று.....பதிவுக்கு நன்றி தங்கச்சி....

    ReplyDelete
    Replies
    1. எல்லாமே அனுபவம்தாண்ணே. இந்த காலத்து பிள்ளைகளுக்கு காசின் அருமை, உழைப்பின் மதிப்பு தெரில. அதனால்தான் இன்னிக்கு உலகம் இந்த பாடு பட்டுக்கிட்டிருக்கு. ஆணின் உழைப்பையும் தியாகத்தையும் பெண்ணும், பெண்ணின் வலியை, அவள் முக்கியத்துவத்தை ஆணும் உணரனும். அப்பதான் உலகம் உய்யும்.

      Delete
  2. Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே

      Delete
  3. துளசி: ஐஞ்சுவை அவியல் நல்லாருக்கு...

    கீதா: அட்வைஸ் அவியலோ!! ஹா ஹா ஹா ஹா ஹா யுவராஜிற்கு வாழ்த்துகள்! அப்புறம் அந்த இன்விட்டேஷன் ஸ்வாரஸ்யம்...அதுக்காகவே அப்படிக் கிடைச்சா போட்டுப் பார்க்கணும். சரி குப்பைக்குப் போயிருச்சுனா அங்கயும் முளைக்குமோ?! சோளம் பஞ்சுமிட்டாய் எல்லாம் போட்டு ஒன்னுமே சொல்லாம போயிட்டீங்க...

    ReplyDelete
    Replies
    1. சீனாவில் இந்த மாதிரி பேப்பர் கிடைக்குதுன்னு பேஸ்ப்புக்கில் பார்த்தேன்.

      அந்தப்படம் சும்மா சம்மர் ஹாலிடே பிக்சர்ன்னு க்ளிக் பண்ணா இந்த படம்லாம் வந்துச்சு. இந்த படத்தை விட மனசில்ல அதான் பதிவிட்டேன். இந்த படத்தை பார்த்ததும் ரெண்டு ரூபா ஐஸ் ட்யூப் சாப்பிடனும்ன்னு ஆசை வந்திட்டு. வாங்கி சாப்பிட்டும் ஆச்சு

      Delete
  4. விடுமுறையில் குழந்தைகளை நல்ல உறவில் இருக்கும் உறவினர்கள் அல்லது நண்பர்கள் வீட்டுக்கு அனுப்பலாம் அல்லது நூலகங்களுக்கு அழைத்து செல்லாம்..தினமும் ஒரு புதகததை படிக்க வைக்கலாம். அருகில இருக்கும் கிராமங்களுக்கு அழைத்து செல்லாம் அங்குள்ள கோயில்களுக்கு செல்லலாம் ஆனால் சும்மா சம்மா படுத்து தூங்கி சாப்பிட்டு டிவிமட்டும் பார்க்க வைக்க கூடாது அது நல்லதல்ல எப்போதும்

    ReplyDelete
    Replies
    1. லீவ் நாளிலும் புத்தகமா?! ஒரு மாசம் அதை தொடவே கூடாது. வேணும்ன்னா நல்ல நாளிதழ்களை படிக்க வைக்கலாம் சகோ. சரி என் பிள்ளைகளுக்கு லீவ் விட்டாச்சு. எப்ப டிக்கெட் அனுப்புறீங்க. நான் எப்ப அமெரிக்காவை சுத்தி பார்க்குறதாம்?!

      Delete
  5. அந்தக் காலத்தில் எங்களுக்கு லீவு விட்டால் எங்கள் அம்மா அப்பா இவ்வளவு கவலைப்பட்டதில்லை. பள்ளிகள் திறந்தாலும் புலம்பியதில்லை.. அது அந்தக் காலம்!

    யுவராஜ் செய்தி நானும் பாஸிட்டிவ் செஇகிகளுக்கு எடுத்து வைத்திருக்கிறேன். பகைவன் குடும்பத்தை உறவாடிக்கெடு அர்த்தமே பாசிட்டிவ் விளக்கம்தான்.

    ReplyDelete
    Replies
    1. நாம் வளர்ந்த காலக்கட்டம் வேறு சகோ. அக்கம்பக்கத்தாரோடு பழகி ஒண்ணுக்குள் ஒண்ணா வாழ்ந்த காலக்கட்டம். தாத்தா, பாட்டி, அத்தை, மாமா, சித்தப்பா, பெரிம்மான்னும் உறவுகளால் வளர்ந்தவங்க நாம! அதனால எந்த சிரமுமில்ல. ஆனா, இப்ப நாலு சுவத்துக்குள்தான் உலகமே! நிறைய குழந்தைகளுக்கு அப்பா, அம்மா தவிர்த்து மத்த உறவுகள் என்னன்னே தெரியாது. பின்ன புலம்பாம என்ன செய்யுறதாம்?!

      Delete
  6. சுவையான அவியல்தான்
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

      Delete
  7. பயனுள்ள பல பதிவுகள் பாராட்டுகள்

    ReplyDelete
  8. அந்தவயதில் அனுபவிக்கக் கூடியதைமறுக்கக் கூடாது எப்போதும் ஆர்மி ரெஜிமென் கூடாது இப்போது நினைத்தாலும் என்னால் ஆடமுடியுமா

    ReplyDelete
    Replies
    1. ஏன்ப்பா?! ஆசைப்பட்டா இந்த வயதிலும் முடிஞ்சதை அனுபவிக்கலாம். தப்பில்ல

      Delete