கதை படிக்கும்போது கதாபாத்திரமாவே ஒன்றிப்போவது இயற்கை.. ஆனா, எல்லா கதை புத்தகத்திலயும் ஒன்றிப்போறோமான்னு கேட்டால் இல்லன்னுதான் சொல்வேன்.
எத்தனை கதைகள் படிச்சிருந்தாலும் ’சிவகாமியின் சபதம்’ கதையில் வரும் சிவகாமியா என்னை நினைச்சுக்கிட்டு படிச்சு, அவளின் முடிவில் மனசு நொந்து,, அதிலிருந்து மீண்டு வர ரொம்ப நாளாச்சுது..
நான் படிச்சது இரண்டு பாகமா வெளிவந்த புத்தகம். சிவகாமியை புலிகேசி தூக்கிட்டு போக, மகேந்திர வர்மன் துரத்திக்கிட்டு போனதோட முதல் பாகம் முடிஞ்சுடும்.
மகேந்திர வர்மனின் மரணம், சிவகாமியின் சபதம், படையெடுப்பு ஆயத்தம், படையெடுப்பு, மாமல்லன் - சிவகாமியின் முறிந்த காதல், சிவகாமியின் முடிவு என நீளும் 300 பக்கங்களுக்கு நீளும் இரண்டாம் பாகத்தினை ஒரே நாளில் படிச்சு முடிச்சு.. கதையின் முடிவில் விக்கி விக்கி அழுததெல்லாம் இன்னமும் பசுமையாய்...
பார்த்ததும் காதல்லாம் பல படங்களில், நேரில் என பார்த்து சலித்தாகிட்டுது. ஆனா, பார்த்ததும் சகோதர பாசமும் வரும்ங்குறதை இந்த புத்தகம் உணர்த்தியது. பரஞ்சோதியின் சகோதர பாசமும், சிவகாமியின் மீதான பக்தியும் ஆண்,பெண் உறவில் புது பரிணாமம்.
கடைசி பாகத்தில் சிவகாமியின் நிலையினை அத்தனை உணர்வுப்பூர்வமாய் எழுத்தில் கொண்டு வர கல்கியால் மட்டுமே முடியும்.
வெற்றிவாக சூடி மாமல்லனும், அவன் மனைவி, குழந்தையென ஊர்வலம் வர, அதைப்பார்த்த சிவகாமியின் துடிப்பினை, ஒரே வார்த்தையில் சொல்லி இருப்பார்.
ஓ! பல்லவ குல சந்ததியை பற்றி கவலை இல்லை என எண்ணியது அவள் மனம். அதேவேளையில்,அவள் மனதில் ஏதோ ஒரு நரம்பு படீரென அறுந்தது.
அறுந்தது வேறென்ன?! சிவகாமியின் ஆசை நரம்பு, உயிர் நரம்பும்கூட...
பகைவனின் கோட்டையில் கற்போடும், காதலனின் நினைவோடும் தைரியமாய் கண்ணீரின்றி இருந்தவள் நீண்ண்ண்ணட நாள் கழித்து மாமல்லனின் துரோகத்தால் அழுது, அரற்றி தனது முடிவினை தேடிக்கொண்டாள்..
தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே!!
No comments:
Post a Comment