Friday, April 20, 2018

கோவிலே கலைப்பொக்கிஷமாய்.... - அறிவோம் ஆலயம்


வேலூர் கோட்டையில் குடிக்கொண்டிருக்கும் ஜலகண்டேஸ்வரரின் மகிமைகள், கோவில் உருவான விதம், கோவில் அமைப்பு, கோவிலின் வரலாற்றை கடந்த இரு பதிவுகளில் பார்த்தோம். இந்த கோவில் மத்த கோவில்களைப்போல, வெறும் கடவுளின் பராக்கிராமத்தை பத்தி  மட்டும் எடுத்து சொல்லல. தமிழனின் கலாரசனையின் உச்சத்தையும், தமிழனின் கலைத்திறனுக்கும் எடுத்துக்காட்டா விளங்குது. இக்கோவிலில் கொட்டிக்கிடக்கும் கலைப்பொக்கிஷத்தினைதான் இன்னிக்கு பார்க்கப்போறோம்.

கோவிலுக்குள் நுழையும்போது, இடப்பக்கத்தில் இருக்கு இந்த கல்யாண மண்டபம். ஸ்ரீரங்கம், ராமேஸ்வரத்து ஆயிரங்கால் மண்டபத்துக்கு சவால் விடும் வகையில் ஒரே அளவிலான தூண்களைக்கொண்ட கல்யாண மண்டபமும், வசந்த மண்டபமும் இருக்கு. தூண்கள் ஆயிரமாய் இல்லன்னாலும் ஒவ்வொண்ணும் காண சலிக்காது.
வீரத்துக்கு பேர்போனது வேலூர். அதை சொல்லாம சொல்லும் போர்வீரர்களிம் சிற்பங்கள் இந்த கோவில் முழுக்க கடவுள் சிற்பங்களுக்கு போட்டி போடும் வண்ணம் இருக்கும். போர்வீரர்கள் இடுப்பு பெல்ட், ஷூ, தொப்பி, மார்பு பெல்ட்ன்னு அத்தனையும் கச்சிதமா இருக்கும். 
கோவில் ராஜகோபுரத்தின் நிலைவாசப்படியில் இருக்கும் சிற்பம்...
எம்ம்ம்ம்ம்மாம்பெரிய கதவு!!!!!! 

 மகிஷாசுரமர்த்தினி.... (மை க்ளிக்)
கல்லால் ஆன ஜன்னல்...


 பிரம்மாண்டமான யாளி....

 பிரசவிக்க தயாராகும் யானை...

 கல்யாண மண்டபத்தின் அடிவாரம்...
ஆடல் மகளிர்...

வசந்த மண்டபம்...
போர் வீரர்கள்..... 
கல்யாண மண்டபம்.. இறைவன், இறைவியின் திருமணம் இங்குதான் நடக்கும். முன்னலாம் தேவதாசிகளின் நடக்கும் இடமும் இதான். குறைந்தது 50000 பேர் ஒருசேர பார்க்கலாம். 
தூணிலிருந்து பிளந்து வந்த நரசிம்மர்.... 
மற்றொரு கோணத்தில் கல்யாண மண்டபம்
கல்தூண்...... 
பூதகணங்கள்...
இக்கோவிலுக்கு வருபவர்கள் மிஸ் பண்ணாம தேடிப்பிடிச்சு பார்க்கும்  சிற்பம் ஒண்ணு எல்லாத்துக்கும் கீழ இருக்கு.  யானைகளின் அணிவரிசையில் அந்த சிற்பம் இருக்கும்.  அது என்ன சிற்பம்ன்னு கீழ பாருங்க. 
ஒரு ஜான் உயரம்கூட இருக்காது இந்த சிற்பம். ஆனா, அத்தனை கலைநுணுக்கம்.  ஒரே தலையில் யானையும் காளையும் ..... யானை உடலை மறைச்சுக்கிட்டு பார்த்தால் காளை கொம்போடு தெரியும். காளையின் உடலை மறைச்சுக்கிட்டு பார்த்தால் தந்தத்தோடு யானை தெரியும்(மை க்ளிக்..)

இந்த மண்டபத்தின் அழகில் மயங்கி இதை அப்படியே வேரோடும், தூணோடும் பெயர்த்து கொண்டு போக ஆசைப்பட்டு கப்பலை வரவச்சிருக்கார் ஒரு ஆங்கிலேய தளபதி. ஆனா, கப்பல பாதி வழியிலேயே நின்னுட்டதால அந்த திட்டம் கைவிடப்பட்டதா சொல்றார்.  பல போர்களை கண்டதாலோ என்னமோ நிறைய சிற்பங்கள் சிதிலமாயிருக்கு. 
மிச்சம் இருக்குறதையாவது வரும் தலைமுறைகளுக்கு காப்பத்தி வைப்பான்னு ஜலகண்டேஸ்வரரை வேண்டிக்கிட்டு நான் உத்தரவு வாங்கிக்குறேனுங்க. 
நன்றியுடன்,
ராஜி

15 comments:

  1. /வீரத்துக்கு பேர்போனது வேலூர்/ உண்மைதான் வேலூர் வாசிகளை நாங்கள் பட்டாளத்தார் என்றே கூறுவோம் இந்திய சீனப் போரில் புகழ் பெற்ற ஆறுமுகம் நினவுக்கு வருகிறார் சில சிற்பங்கள் ஸ்ரீரங்கத்தை நினைவு படுத்துகிறது

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்ப்பா.. குதிரையில் அமர்ந்திருக்கும் போர்வீரன் சிற்பம் ஸ்ரீரங்கத்தை நினைவுப்படுத்தும்.

      வேலூர் மாவட்டத்தில் நிறைய பேர் இன்னிக்கும் ராணுவத்தில் இருக்காங்க. ராணுவப்பேட்டைன்னு ஒரு ஊர் இருக்கு. அங்க ஒவ்வொரு வீட்டிலிருந்து ஒரு ஆள் ராணுவத்தில் இருக்காங்க.

      Delete
  2. வீரத்துக்கு பேர்போனது வேலூர் அப்படீனாக்கா.... தேவகோட்டை ???

    ReplyDelete
    Replies
    1. சண்டாசுரனை வதம் செய்ய வேண்டித் தேவர்படைக்குக் காளிதேவி தலைமை ஏற்று வீற்றிருந்த இடத்தில் தேவர் கட்டிய மாயாசாலக் கோட்டைதான் தேவகோட்டை. தேவிக்கு கட்டிய கோட்டைங்குறதால அந்த ஊருக்கு தேவக்கோட்டைன்னு பேர் உண்டாச்சு... மத்தபடி கில்லர்ஜி அண்ணா பெருசா மீசை வளர்த்துட்டதால அது வீரம் விளைஞ்ச மண்ணுன்னுலாம் பெருமை அடிக்கக்கூடாது.

      ஆமா, இதேக் கேள்வியைதானே போன பதிவிலும் கேட்டீங்க, இப்பயும் அதே கேள்வியா?!

      Delete
  3. அருமையான படைப்பு
    https://plus.google.com/u/0/communities/110989462720435185590

    ReplyDelete
    Replies
    1. இணைச்சுட்டேன். இனி தவறாமால் வருவேன் சகோ

      Delete
  4. அழகான சிற்பங்கள். பார்க்கப் பார்க்க ஆனந்தம். நேரில் எப்போது காண முடியுமோ.....

    ReplyDelete
    Replies
    1. விரைவில் காணும் பாக்கியம் கிட்டும்

      Delete
  5. தமிழகத்தில் பார்க்கவேண்டிய முக்கிய கோயில்களில் ஒன்று. இன்று இப்பதிவு மூலம் மறுபடியும் செல்லும் வாய்ப்பு. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்ப்பா, வரலாறு, ஆன்மீகம், கலை, பண்பாடு,கலாச்சாரம்ன்னு கலந்த கலவை இம்மண்ணு. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிப்பா

      Delete
  6. அருமையான படங்களுடன் விளக்கமும் நன்று பாராட்டுகள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சகோ

      Delete
  7. கல்யாண மண்டபம் மற்றும் வசந்தமண்டபத் தூண்களில் "கல்லும் கவி பாடுகிறது."

    ReplyDelete