Monday, April 02, 2018

சாமியாரை பார்க்க போகும்முன் படித்தவனும், படிக்காதவனும் செய்பவை - ஐஞ்சுவை அவியல்

மாமோய்! குழந்தையா இருந்த நம்ம சின்ன பொண்ணை தூக்கி வச்சிட்டிருந்த பக்கத்து வீட்டு முஸ்லீம் பொண்ணை நேத்து பஜார்ல பார்த்தேன். அவளுக்கு ஆண்குழந்தை பிறந்து ஒரு வருசமாச்சாம். ஆனா குழந்தை ஒரு மாதிரி இருக்கு.

ஒருமாதிரின்னா?!

எது சொன்னாலும் புரிஞ்சுக்க தெரில. பேச்சு சரியா வரல. ஜொள்ளு ஒழுகிட்டே  இருக்கு... இப்படி சொல்லிக்கிட்டே போகலாம். அக்கம் பக்கம்லாம் அதை லூசுன்னு சொல்லி கிண்டல் பண்ணுறாங்களாம். ஆஸ்பிட்டலுக்கு கூட்டி போய் இருக்கா. என்னமோ ஹார்ட்டீசோ என்னமோ சொன்னா..

அது  ஹார்ட்டீசம் இல்ல. ஆட்டீசம் (autism). இது  மூளை, மனம் சார்ந்த பிரச்சனை இல்ல. முக்கியமா இது நோய் இல்ல. நரம்பு வளர்ச்சி குறைபாடு ஆகும்.  அதனால, இதுக்கு மருத்துவரீதியா எந்த சிகிச்சையும் இல்ல. அன்பும், பொறுமையும், அந்த குழந்தையை அப்படியே ஏற்றுக்கொள்ளுதலும்தான் இந்த பாதிப்பிலிருந்து கொஞ்சமாவது அந்த குழந்தையை மீட்டெடுக்க முடியும்.  கர்ப்பக்கால நோய் தாக்குதல், அதுக்கு எடுத்துக்கும் மருந்துகள்,  மரபணு மாற்றம் இதுலாம் ஆட்டிசம் குறைப்பாட்டோடு குழந்தை பிறக்க காரணம். எல்லா குழந்தைகளையும் போல நார்மலா பிறக்கும் இக்குழந்தைகள்,  வழக்கத்துக்கு மீறின துறுதுறுன்னு இருப்பாங்க. இவங்களுக்கு காது நல்லா கேட்கும், ஆனா நம்ம கூப்பிடுறதை, கேட்குறதை உணர மாட்டாங்க. எந்த உணர்ச்சியையும் இவங்க முகம் காட்டாது. சம்பந்தமில்லாத செயல்கள், சம்பந்தமில்லாத பார்வைன்னு ஆட்டிசம் குறைப்பாட்டோடு ஆயிரத்துக்கு ரெண்டு குழந்தைகள் பிறக்குது. 

இங்கிலாந்தை சேர்ந்த டாக்டர் லியோ கானீர்ன்றவர்தான் முதன்முதலில் 1943ல் குழந்தைகளுக்காக எழுதிய கட்டுரையில்  ஆட்டிசம் பற்றி எழுதினார்.  இந்த பாதிப்பை முற்றிலுமா சரிசெய்யமுடியாது.பொறுமை, அன்பு, விடாமுயற்சி இருந்தால் 70%குணப்படுத்தலாம். உலகம் முழுக்க கிட்டத்தட்ட 1கோடி குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு இருக்கு. காலமாற்றத்தில் இந்த எண்ணிக்கை அதிகரிச்சுட்டே வருவது ஆபத்துக்குரியது. இந்த பாதிப்பை சரிசெய்ய இதுவரை மருந்து எதும் கண்டுப்பிடிக்கல. அதனால, 2007ம் ஆண்டு ஐநா சபை விஞ்ஞானிகள்கிட்ட மருந்துக்கண்டுப்பிடிக்க சொல்லி ஒவ்வொரு ஏப்ரல் 2ந்தேதியை ஆட்டிசம் விழிப்புணர்வு நாளாய் கொண்டாட ஆரம்பிச்சிருக்காங்க. இப்பலாம் ஆட்டீசம் குறைப்பாட்டை நீக்குறோம்ன்னு சொல்லி சில மருத்துவர்கள் பணம் பறிக்குறாங்க. அங்கெல்லாம் போகாம தகுந்த பயிற்சி கொடுக்கலாம். அதேமாதிரி பில்லி சூனியம்ன்னு அந்த கறுப்பு பக்கமும் போக வேணாம்.  ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட லண்டனை சேர்ந்த ஸ்டீபன் வில்ட்ஷையர்ன்றவர் ஏரியல்வியூவில் ஒரு நகரத்தை பார்த்தால் அடுத்த 30 நிமிடங்களுக்குள் ஓவியமாக வரைஞ்சுடுவார். இவரது சாதனைகளை பார்த்து இங்கிலாந்து அரசு இவரை கவுரவித்துள்ளது. இதுமாதிரி பாதிப்புக்குள்ளான பெண் எழுத்தாளர் கிராண்டின் என்பவர் கொலராடோ பல்கலைக்கழகத்தில் விலங்கியல் துறை பேராசிரியரா இருக்கார். 


ரொம்ப தம் கட்டி பேசிட்டேள். இருங்க முலாம் பழம் ஜூஸ் கொண்டு வரேன். வெயிலுக்கு இதமா இருக்கும். 
நல்ல மணமும், மங்கலகரமா மஞ்சள் நிறத்துல இருக்கும் இந்த பழத்துக்கு முலாம்பழம், கிர்ணிப்பழம், வெள்ளரிப்பழம்ன்னு சொல்வாங்க. இதோட பெயர்  Cucumis melo. இந்த பழத்தோட பிறந்த இடம் ஈராக், இந்தியா. முலாம் பழம், வெள்ளரிக் குடும்பத்தைச் சேர்ந்தது. வெள்ளரிக்காயை மாதிரியே இதும் கொடி வகையை சார்ந்தது. கோடைக் காலத்திற்கென இயற்கை நமக்களித்துள்ள நீர்ப்பழங்களில் முலாம் பழம் முக்கியமானது. இதுக்கு இங்க்லீஷ்ல Musk Melon பேரு. Muskன்னா வாசனை ன்னு பெர்சிய மொழியில் பொருள்படுது. Melon என்பது ஃப்ரெஞ்சு மொழியில் ஆப்பிள்ன்னு அர்த்தமாகுது.
இதோட வாசனைக்காவே ஆங்கிலத்தில் Musk Melon என அழைக்கப்படும் முலாம் பழம் Cantaloupe, Rock Melon, Spanspekன்னு சொல்லப்படுது. இந்த பழத்தில் அதிக நீர்ச்சத்து 65%, குறைந்த கலோரிகள் (53/கப்), அதிக நார்ச்சத்து ( 1g/கப்) மற்றும் zero கொழுப்பு வைட்டமின்கள் A, C, B, E, பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், செலீனியம் மற்றும் Phytonutrients லாம் இருக்கு. நீர்வறட்சியை போக்குறதோட உடல்பருமனை குறைக்க, இருதயநோய், புற்றுநோய், மலச்சிக்கல், கண் மற்றும் சரும பாதுகாப்பு, நோயெதிர்ப்பு, ஞாபகத்திறன், புத்துணர்ச்சி...களை தருவதோடு, சிகரெட்டில் உள்ள, Benzapyrene என்ற நச்சுத்தன்மையை போக்க இப்பழத்திலிருக்கும் கரோட்டினாய்டுகள் உதவி புகைப்பழக்கத்தை கைவிடவும் உதவுகிறது.. கொலம்பசினால் இந்த பழம் அதிக இடங்களுக்கு அறிமுகமாச்சு. பெண்களைப்போல இனிக்கவும், சிலசமயம் தள்ளியும் வைக்க தோணுதுன்னு ஸ்பானிஷ் கவிஞரால் புகழப்பட்ட இந்த முலாம்பழம் தமிழகம், ஆந்திரா, பஞ்சாப்ல அதிகப்படியா விளையுது. ஏப்ரல் முதல் ஜூன் வரையில் இதுக்கு சீசன். தோல், விதை நீக்கி அப்படியே சாப்பிடலாம். இல்லன்னா, துண்டுகளாக்கி சர்க்கரை சேர்த்து சாப்பிடலாம். ஜூஸ், பலூடா, ஐஸ்க்ரீம், ஃபுட்டிங்க்ன்னு இந்த பழத்தில் செய்யப்படும் உணவுகள் அதிகம். அதனால, ஸ்ட்ராபெர்ரி, ஆப்பிள்ன்னு போகாம நம் மண்ணின் மணம் வீசும் நம் மண்ணில் விளைஞ்ச முலாம்பழத்தை சாப்பிடலாம்..
ஒரு ஜூஸ் குடிக்க சொன்னா இப்படியா நாலு பக்கத்துக்கு பேசுறது?! பழம் மஞ்சள் நிறம்ன்னு சொன்னீங்களே! என்ன மஞ்சள் நிறம்ன்னு சொல்லுங்க. மஞ்சள் நிறத்துல அப்படி என்ன வெரைட்டி இருக்கு?! லைட் மஞ்சள், டார்க் மஞ்சள், அதிகப்படியா போனா, எலுமிச்சை கலர், வெந்தயக்கலர்ன்னு ஒன்னு இருக்கு, அதைத்தவிர வேற எதும் இருக்கா என்ன?!
மஞ்சள்ல்ல இத்தனை வெரைட்டி இருக்கு. நல்லா பார்த்து ஞாபகத்துல வச்சிக்கிட்டு அடுத்த முறை சேலை எடுக்கும்போது பார்த்து எடுத்துட்டு வாங்க.

உனக்கு சேலை பைத்தியம் பிடிச்சுட்டுது. இரு உன்னை எதாவது சாமியார்க்கிட்ட கொண்டு போய் காட்டி மந்திரிச்சு கொண்டு வரேன்.
சாமியார்களை பார்க்கபோகும்போது படிக்காதவன் செருப்பை கழட்டி வச்சிட்டு பணிவோடு போவானாம். படிச்சவன் மூளையை கழட்டி வச்சிட்டு அறிவில்லாம போவானாம். அப்பதான் அவன் என்ன உளறுனாலும் எருமைமாடு மாதிர் தலை ஆட்டிக்கிட்டு வருவாங்கன்னு உணர்த்தும் படம் ட்விட்டர்ல இருந்துச்சு. அதை நான் உங்களுக்காக சுட்டுட்டேன். அப்ப எனக்கு அறிவு வேலை செய்யலன்னு சொல்லாம சொல்லுறியா?! சொல்லாமலாம் சொல்லல, மூஞ்சிக்கு நேராவே சொல்லுறேன். உனக்கு அறிவு இல்ல. உனக்கு மட்டுமில்ல, நிறைய விசயத்துல படிச்சு, நாகரீகம் வளர்ந்தப்பின்னும் அறிவு வேலை செய்யல. இதுக்கு இந்த படம்தான் உதாரணம். எந்த இடம் உயிரினங்கள் உருவாக காரணமா இருந்துச்சோ அதை மாசுபடுத்தி, உயிரினம் அழியவும் காரணமா இருக்கோம்ன்னு உணர்த்தும் படம்....
ரொம்ப நேரம் பேசிட்டோம். வேலை கெடக்கு நான் போறேன்...
நன்றியுடன்,
ராஜி.

23 comments:

  1. மாமாவோடு உரையாடியது ரசிக்க வைத்தது சகோ.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே

      Delete
  2. /அப்ப எனக்கு அறிவு வேலை செய்யலன்னு சொல்லாம சொல்லுறியா?!சொல்லாமலாம் சொல்லல, மூஞ்சிக்கு நேராவே சொல்லுறேன். உனக்கு அறிவு இல்ல. உனக்கு மட்டுமில்ல, நிறைய விசயத்துல படிச்சு, நாகரீகம் வளர்ந்தப்பின்னும் அறிவு வேலை செய்யல. /மாமாவுக்கு இது தேவையா பாவம்

    ReplyDelete
    Replies
    1. உண்மையதான் சொல்றேன்.அவங்களுக்கு புத்திக்கூர்மை கொஞ்சம் குறைவு

      Delete
  3. அருமையான அவியல்...........கடைசி பஞ்ச் அருமையிலும்,அருமை..... நன்றி,தங்கச்சி!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே

      Delete
  4. முதலில் உள்ள பழ போட்டோ அதை Cantaloupe என்று சொல்லுவார்கள் இரண்டாவதாக உள்ள ப்ழத்தை Honeydew என்று இங்கே அழைப்பார்கள்

    ReplyDelete
    Replies
    1. எங்க ஊர்ல எல்லாமே கிர்ணிப்பழம், முலாம்பழம் இல்லன்னா வெள்ளரிப்பழம்தான்.

      Delete
  5. படிக்காதவன் செருப்பை கழட்டி வைப்பான் சரி படித்தவன் மூளையை கழட்டி வைப்ப்பான் சரி ஆனால் என்னை போல படித்த ஆனால் மூளை இல்லாதவன் என்ன செய்வான் நீங்க அதை பற்றியே சொல்லலையே

    ReplyDelete
    Replies
    1. யாரு தாங்களோ?! அண்ணன் எத்தனை சமர்த்துன்னு இந்த தங்கச்சி நோ. பூரிக்கட்டையால் அண்ணிக்கிட்ட வாங்கியும் எப்படியும் டிமிக்கி கொடுத்துட்டு அமெரிக்க அழகிகளோடு ஆட்டம் போட பிளான் போடும் அளவுக்கு உங்களுக்கு மூளையும், அறிவும் இருக்கு மை டியர் பிக் பிரதர்.

      Delete
  6. இதென்ன கேள்வி? மூளையில்லாதவன் தான் சாமியாரா ஆயிடறானே!

    ReplyDelete
    Replies
    1. இன்ன்ன்ன்ன்ன்னும் கொஞ்ஞ்ஞ்ஞ்சம் சத்தமா சொல்லுங்க சகோ. சில ஜென்மத்துங்களுக்கு உரைக்கட்டும்

      Delete
  7. Replies
    1. கருத்துரையும் நன்று

      Delete
  8. முலாம்பழம், கிர்ணி, வெள்ளரி கொஞ்சம் வித்தியாசம் உண்டு இல்லையோ ராஜி!!

    ஆட்டிசம் மூளை சம்பந்தப்பட்டது தான் அதாவது மூளை என்பதே நரம்பியல்தானே...அதன் வளர்ச்சியில் ஏற்படும் குறைபாடுகள். இது ஒரு வயதை அடையும் போது மனம் (இதுவும் மூளைக்குள்தானே!!) சம்பந்தப்பட்டதாகவும் ஆகும்...இதிலும் பல வகைகள் உள்ளன....மைல்டாக இருந்தால் ஓரளவு பயிற்சி கொடுத்து தன்னை இயக்கிக் கொள்ள வழி வகுக்கலாம். ஆனால் பெர்செண்டேஜ் கூடுதலாக இருந்தால் கடினம் தான். இதைப் பற்றி பேசுவது என்றால் முடிவே இல்லை...ஆழமான சப்ஜெக்ட்...மூளையைப் பற்றி முழுவதும் ஆராய்ச்சி செய்யவே முடியாது! அது முடிவற்றது...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஏன் கீதாக்கா நான் என்ன கோயம்பேட்டில் பழமா விக்குறேன் பழ வகைகள் பற்றி தெரிய?!

      அதேமாதிரி, ஆட்டிசம் நரம்பு சம்பந்தப்பட்டதுதானே மூளை சம்பந்தப்பட்டதில்லை. மூளை நரம்பு மண்டலத்தில் சேர்ந்ததா இருந்தாலும்... இது வேற டிபார்ட்மெண்ட், அது வேற டிபார்ட்மெண்ட்

      Delete
  9. ஒரு தகவலிலில் இருந்து அடுத்த தகவலுக்கு போக அழகாக வரிகளை வைத்து இணைத்திருக்கிறீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஒரு 'லி' அதிகமாகி விட்டது! மன்னிக்கவும்!

      Delete
    2. என்னமோ தெரில. இந்த பதிவில் நிஜமாவே இந்த உரையாடல் மனசுக்குள் ஓடுச்சு. அதான் அந்த உணர்தல் பதிவின் சுவையை கூட்டிச்சு.

      Delete
  10. மஞ்சளில் இத்தனை வகைகளா! வியக்கிறேன்.

    மனிதன் தனக்குத் தானே வைத்துக்கொள்ளும் சூனியம் பற்றி அழகாக, சுருக்கமாகச் சொல்லப்பட்டிருக்கிறது அந்தப் படத்தில்.

    சுவாரஸ்யமான கலவை.

    ReplyDelete
    Replies
    1. எந்த வண்ணத்தில் எத்தனை வகைகள் இருந்தால் என்ன?! அண்ணனுக்கு ஒரு ஊத்தப்பம்ன்னு சொல்லும் வடிவேல் காமெடிப்போல பச்சை கலர் சேலை, சிவப்பு கலர் பேண்ட், ரோஸ்கலர் சட்டைன்னுதானே சொல்லப்போறீங்க.

      Delete
  11. சாமியார்களைப் பார்க்கப்போகும்போது...வித்தியாசமாக இருந்தது.

    ReplyDelete
    Replies
    1. ட்விட்டர்ல சுட்டதுப்பா

      Delete