Saturday, April 21, 2018

உலகம் அழியும் காலம் எப்பன்னு தெரிஞ்சுக்கனுமா?! -ஊர் வம்பு


நம்ம ஊரில் பகவத்கீதை மேல சத்தியம் வாங்குற மாதிரி, பண்டைய எகிப்திய நீதிமன்றங்களில் வழக்குகள் விசாரிக்கப்படும்போது வாதியும், பிரதிவாதியும் வெங்காயத்தின்மீதுதான் சத்தியப்பிரமாணம் எடுத்துப்பாங்களாம்....

வேலூரில் இருக்கும் சி.எம்.சி(chiristian medical college)லதான் திரு. செரியன் அவர்கள் தனது மருத்துவப் பயணத்தை துவக்கி, புகழ்பெற்ற இருதய நிபுணரா தன் மருத்துவப் பணியை தொடர்ந்தார். இந்தியாவில் முதல் இதயமாற்று சிகிச்சை செய்த மருத்துவர் இவரே!இவரது சேவையை பாராட்டி 1991இல் பத்மஸ்ரீ விருது கொடுத்தாங்க.


ஐன்ஸ்டினின் கணிப்புபடி தேனீ இனம் முற்றிலும் அழிந்து, அன்றிலிருந்து சரியாய் 4 ஆண்டுகளுக்குள் மனித இனம் முற்றிலுமாய் அழிஞ்சு போயிடுமாம்!!
ஒரு கண் பாதிக்கப்பட்டால் பார்வைத்திறனில் 5ல் ஒரு பங்குதான் குறைகிறது. மற்ற ஒரு கண்ணின் மூலமே 95 சதவீத காட்சியை காணலாமாம்.

திருக்குறளில் உயிரெழுத்துக்கள் 13 ஆயிரத்து 74ளும், மெய்யெழுத்துக்கள் 12,729 ளும்... உயிர் மெய் எழுத்துக்கள் 15 ஆயிரத்து 47,ஆயுத எழுத்தும், 50 ஆக மொத்தம் 40 ஆயிரத்து 900 எழுத்துக்கள் உள்ளன. அதேமாதிரி, திருக்குறள் ‘அ’வில் ஆரம்பித்து ‘ன்’ல் முடியும்.

மாநில பிரிவிற்கு முன் அழகுத்தமிழில் எருமையூர் என அழைக்கப்பட்டு, மாநில பிரிவிற்கு பின் வடமொழியில் மகிசூர் (எருமை)ஆகி, அதுவும் மருவி மைசூர் ஆனதாம். ஆஸ்திரேலியாவில் முதன்முதலாக குடியேறியவர்களில் பலரும் ஆங்கிலேயே அரசால் நாடு கடத்தப்பட்ட தண்டனைக் குற்றவாளிகள்தான். உலகம் உருண்டை என்று கூறியவர் கோப்பர்நிக்கஸ், ஆனால் அதனை நிரூபித்தவர் கலிலியோ ..., டென்மார்கில் சொந்த நாட்டு கொடியை எரிக்கலாம். ஆனால் வேறு நாட்டு கொடியை எரிப்பது குற்றமாம்.

தமிழகத்தில் ஒரு தமிழன் மத்திய அரசுக்கு செலுத்தும் வரி 18500 ரூ. மத்திய அரசிடம் திரும்ப பெறுவது 6200ரூ மட்டுமே! அதே சமயம் பிகார் செலுத்துவது 7200ரூ பெறுவதோ 30400ரூ. உபி செலுத்துவது 7000ரூ. திரும்ப பெறுவது 11200ரூ. ராஜஸ்தான் செலுத்துவது 6600ரூ. திரும்ப பெறுவது7800ரூயாம்... ஊருக்குள்ள பேசிக்கிட்டாங்க!

ஊர்வம்பு தொடரும்...

நன்றியுடன்,
ராஜி.

16 comments:

 1. தமிழக அரசின் வாதங்களை வைக வில்லயே ஊர்வம்பு நன்றாக இருக்கிறது

  ReplyDelete
  Replies
  1. தமிழக அரசுன்னு ஒண்ணு இருக்காப்பா?!

   Delete
 2. ஊர் வம்பு நல்லாத்தான் கீது...

  ReplyDelete
  Replies
  1. ஊர் வம்பினால் எனக்கு எதும் வம்பு வராம இருந்தா சரி

   Delete
 3. ஊர் வம்பு - தொடரட்டும்.

  ReplyDelete
 4. ஊர் வம்பாக இருந்தாலும் நல்ல தகவல் பாராட்டுகள்

  ReplyDelete
 5. ஊர் வம்பு
  அருமையான தொகுப்பு
  சுவையான தகவல்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

   Delete
 6. சுவாரஸ்யமான தகவல்கள். தேனீக்களை எப்பாடு பட்டாவது காப்பாற்றவேண்டும் போலவே....!! அது என்ன கணக்கு, அவை அழிந்தால், மனித இனம் அழிந்து விடுமென்று!

  ReplyDelete
  Replies
  1. தெரில சகோ. இந்த இருவரிகளைதான் புத்தகத்தில் படித்தேன். இனி என்ன ஏதுன்னு கூகுளாண்டவர்கிட்ட கேட்கனும்.

   Delete
 7. அருமையானத் தொகுப்பு

  ReplyDelete
 8. தேனீக்கள் தேன் சேகரிக்க நல்ல இயற்கை வேண்டும் மலர்கள் பூத்து குலுங்க வேண்டும்.
  இயற்கை கொஞ்சமாய் அழிந்து கொண்டு இருக்கிறது. தண்ணீர் தட்டுபாடு வந்து விட்டது. மலர் வனம் வளர்க்கிறது?
  தேனிக்கள் குறையும் தானே!

  ஊர் வம்பு நன்றாக இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. இந்த பதில் பொருத்தமா இருக்கும்மா

   Delete