பட்டாணி குருமா, வெஜிடேபிள் குருமா, கடலைப்பருப்பு குருமா, பன்னீர் குருமா, முந்திரி குருமா, முட்டை குருமான்னு விதம் விதமா குருமா செஞ்சாலும் எதாவது நொள்ளை நொட்டை சொல்வாங்க. அதனால, என்னடா புதுசா செய்யலாம்ன்னு யோசிக்கும்போது பச்சைப்பயறு கண்ணில் பட்டது. என் மாமியார் பச்சைபயறுல சாம்பார் வைப்பாங்க. நாம ஏன் குருமா வைக்கக்கூடாதுன்னு யோசிச்சு செஞ்சு பார்த்தது. நல்லாவே இருந்துச்சு. இப்பலாம் பட்டாணி, சென்னாவில் செஞ்ச குருமாலாம் பசங்களுக்கு பிடிக்குறதில்லை. மென்னு தின்ன லேட்டாகுதாம்! இப்படி ஒரு சாக்கு சொல்லுதுங்க :-(
தேவையான பொருட்கள்:
பச்சைப்பயறு
பெல்லாரி வெங்காயம்
தக்காளி
ப.மிளகாய்
இஞ்சி பூண்டு பேஸ்ட்’
உருளைக்கிழங்கு (காளிபிளவர், கேரட்ன்னு கையில் கிடைக்குறதை போட்டுக்கலாம். என் கைக்கு உருளைக்கிழங்குதான் கிடைச்சுது..)
பட்ட,லவங்கம், அன்னாசிப்பூ,
மிளகாய்தூள்
கடுகு
மஞ்சப்பொடி
எண்ணெய்
உப்பு
தேங்காய்
முந்திரி - நாலு
பச்சைப்பயறை ரெண்டு மணிநேரம் ஊறவைக்கனும். பச்சைப்பயறை நல்லா கழுவி உப்பு போட்டு வேக வைக்கனும். உருளைக்கிழங்கை வேக வைச்சுக்கனும். வெங்காயம் தக்காளியை கழுவி பொடிசா வெட்டிக்கனும். தேங்காய், முந்திரியை நல்லா நைசா அரைச்சுக்கனும்.
வாணலி சூடானதும் கடுகு போட்டு வெடிச்சதும் பட்டை, லவங்கம், அன்னாசி பூலாம் போட்டு பொரிந்ததும், கீறி வச்ச ப.மிளகாய் போடனும்.
வெங்காயம் போட்டு சேர்க்கனும்...
உப்பு சேர்த்து வெங்காயம் சிவக்க வதக்கனும்.
இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கனும்..
புதினா கொ.மல்லி சேர்த்துக்கனும்...
தக்காளி சேர்த்து பச்சைவாசனை போகும்வரை வதக்கனும்..
மிளகாய்தூள், மஞ்சள் தூள் சேர்த்து, வதக்கி தண்ணி சேர்த்து கொதிக்க விடனும்.
வேக வச்சிருக்கும் பச்சைபயறு, உருளையை சேர்த்துக்கனும்..
அரைச்சு வச்சிருக்கும் தேங்காய்,முந்திரி விழுதை சேர்த்து நல்லா கொதிக்கவிடனும். தேவைப்பட்டா கரம் மசாலா ஒரு ஸ்பூன் சேர்த்துக்கலாம்.
இட்லி, தோசை, பூரிக்கு நல்லா இருக்கும். பச்சை பயறு உடலுக்கு குளிர்ச்சியை தரும்.
நன்றியுடன்
ராஜி.
புது கண்டுபிடிப்பா ? நல்லாத்தான் இருக்கும் போலயே...
ReplyDeleteபுது கண்டுப்பிடிப்புன்னு நாமளே பில்ட் அப் கொடுத்துக்கிடலாமே தவிர, யாராவது செஞ்சிருப்பாங்க. எங்க வீட்டுக்கு புதுசு
Deleteபடங்களுடன் சிறந்த வழிகாட்டல்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ
Deleteஅருமை. நேற்று என் பாஸ் கேரட், பீன்ஸ், வெங்காயம் மட்டும் போட்டு (வேறு காய் எதுவும் இல்லாததால்) குருமா செய்திருந்தார்கள். நன்றாய் இருந்தது.
ReplyDeleteதக்காளிகூட சேர்க்காமயா?! செஞ்சு பார்த்திடலாம்.
Deleteஅருமை
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே
Deleteநான் முந்திரி மட்டும் சேர்க்க மாட்டேன்..கா..
ReplyDeleteமத்தபடி இது மாதரி செய்வேன்...
நானும் அப்படி செய்வதுண்டு அனு. பிள்ளைங்களுக்கு இப்படியாவது சத்து சேரட்டுமேன்னுதான் இதுலாம் சேர்க்குறது.
Deleteநல்ல குறிப்பு. பச்சைப் பயறுடன் உருளை - Aalu goes with everything.
ReplyDeleteஉருளையை பிடிக்காத பசங்களும் கிடையாதுண்ணே
Delete