Tuesday, July 10, 2018

ரவா பொங்கல் - கிச்சன் கார்னர்

திடீர்ன்னு யாராவது விருந்தாளிங்க வந்துட்டா, சட்டுன்னு சமைக்க ரவையதான் எடுப்போம். ரவையில் உப்புமா, கிச்சடி, கேசரி,  பாயாசம்ன்னு அஞ்சு நிமிசத்துல செஞ்சு அசத்தலாம்.  அது என்னமோ தெரில, பொண்டாட்டிய பிடிக்காத மாதிரி எல்லா ஆம்பிளைகளுக்கும் உப்புமா பிடிக்க மாட்டேங்குது. பொண்டாட்டி புத்தி சொன்னா அது நல்லதாவே இருந்தாலும் எந்த ஆம்பிளைக்கு பிடிக்குது?!  அதுமாதிரிதான் ரவையில் நிறைய சத்துகள் இருக்கு. ஆனாலும் இந்த ஆம்பிளைகளுக்கு பிடிக்க மாட்டேங்குது..

ரவை  கோதுமைஅரிசிமக்காச்சோளத்திலிருந்து உற்பத்தியாகுது. சன்னம், கொஞ்சம் நடுத்தரம்ன்னு இரண்டு வகையா இது தயாராகுது. ரவைக்கு இங்கிலீஷ்ல செமொலினா(Semolina). செமோலினான்ற வார்த்தைக்கு தவிடுன்னு அர்த்தம். வட இந்தியாவிலும், பாகிஸ்தான், நேபாளில்  சுஜி(sujee)ன்னு சொல்றாங்க.

ரவை பெரும்பாலும் கோதுமையில் இருந்து தயாரிக்கப்படுது. கோதுமையை சுத்தம் செய்து, மேல இருக்கும் தவிட்டினை நீக்கி, உள்ளே உள்ள அரிசி பாகத்தை மாவாக்குவதில் இருந்துதான் மைதா, ரவா, ஆட்டா ஆகிய மூன்று பொருட்கள் கிடைக்கின்றன. தவிட்டினை இயந்திரங்கள் மூலம் நீக்கும் போது மிகவும் முழுமையாக நீக்கிவிட முடியாது. பிரிக்க முடியாத தவிட்டின் மேல் பாகமும், உள்ளே உள்ள அரிசி பாகமும் இணைந்த பகுதியை அரைத்துக் கிடைப்பது ஆட்டா. உள்ளே உள்ள பாகத்தை பல சுழற்சி முறைகளில் மாவாக்கி சுத்தம் செய்றாங்க. அப்படி செய்யும்போது சற்று பருமன் அதிகமாக உடைக்கப்பட்ட பகுதி ரவையாக பிரித்து எடுக்கப்படுது. மீதமுள்ளவை மீண்டும் நன்கு அரைக்கப்பட்டு மைதாவாகுது.

புரோட்டின்(Protein), தாதுக்கள் (Minerals), நார்ச்சத்து (Fibre) போன்றவை ரவையை விட மைதாவிலும், மைதாவை விட ஆட்டாவிலும் அதிகம். எல்லாமே கோதுமைதான். அது அரைத்து, மாவாக்கப்பட்டு பிரித்து எடுக்கப்படும் விதத்தைப் பொறுத்து நிறைய வகைபடுத்தப்படுது. மைதாவிலேயே ஐந்து, ஆறு வகை மைதாக்கள் தரம் பிரிக்கப்படுகின்றன. பிரெட் செய்வதற்கு தனிரகம், பரோட்டாவிற்கு ஒரு ரகம்,  மேக்ரோன், சேமியாவிற்கு ஒரு ரகம்..  பல ரக மைதாக்கள் இருக்கு. உடல் இளைக்க நினைக்குறவங்களுக்கு ரவை, அதிலும் சம்பா ரவை ஆபத்பாந்தவன்.

ரவையில் மாவு சத்து அதிகமா இருக்கு. நார்ச்சத்து, புரதம், நீர்சத்து, வைட்டமின் ஏ, பி6, பி12, கால்சியம், இரும்புசத்து, மக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், மங்கனீசுலாம் இருக்கு. இத்தனை சத்து இருக்கே! செய்வதுக்கும் சுலபம், மாமாவும் நல்லா இருக்கட்டுமேன்னு உப்புமா செஞ்சா சும்மா, காக்கா மூக்குல கொத்துற மாதிரி கொத்திக்கிட்டு போவாங்க. ஆனா, ரவாபொங்கல் செஞ்சா மட்டும் நல்லா இருக்குன்னு சாப்பிடுவாங்க. ரவையில், பணியாரம், கொழுக்கட்டை, தோசை, இட்லி, சோமாஸ், ரவா கட்லெட், தட்டைன்னு விதம் விதமா செய்யலாம்.

இன்னிக்கு ரவா பொங்கல் எப்படி செய்யுறதுன்னு பார்ப்போம்..

ரவை             -1 பங்கு
பை.பருப்பு     - 1/2 பங்கு
முந்திரி
இஞ்சி
மிளகு
எண்ணெய்
நெய்
பெருங்காயம்
கறிவேப்பிலை
உப்பு.

பைத்தம்பருப்பை லேசா உப்பு சேர்த்து குழைய வேகவிடுங்க.  முந்திரியை உடைச்சு நெய்யில் வறுத்துக்கோங்க. மிச்சமிருக்கும் நெய்யில் ரவையை லேசா வறுத்துக்கோங்க. சிவக்கனும்ன்னு அவசியமில்ல. இஞ்சிய தோல்சீவி நசுக்கி வச்சுக்கோங்க. 

 ஒரு பாத்திரத்தில் எண்ணெய், நெய் ஊத்தி காய்ஞ்சதும், மிளகு, சீரகம் போட்டு பொரிய விடனும்.
 அடுத்து முந்திரி போட்டு சிவக்க விடனும்..

 அடுத்து இஞ்சியை போட்டு சிவக்க விடுங்க..

அடுத்து கறிவேப்பிலை போட்டு பொரிஞ்சதும் தேவையான அளவு தண்ணி ஊத்துங்க... ஒரு டம்ப்ளர் ரவைக்கு 11/2 டம்ப்ளர் தண்ணி சேர்த்தா பொங்கல் குழைவா வரும். தேவையான உப்பு சேருங்க.  
 அடுத்து நல்லா குழைவா வேக வச்சிருக்கும் பைத்தம்பருப்பை சேருங்க..

 எல்லாம் நல்லா கொதிச்சதும் வறுத்த ரவையை சேர்த்து கட்டித்தட்டாம கிளறுங்க.
 கொஞ்சம் பெருங்காயப்பொடி சேர்த்து, சிம்ல வச்சிட்டு மூடிவிடுங்க. நல்லா குமுங்கட்டும்..
ரவா பொங்கல் ரெடி. தொட்டுக்க தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, வெல்லம், சர்க்கரை நல்லா இருக்கும். எதுமே இல்லன்னாலும் ரவா பொங்கல் சாப்பிட நல்லா இருக்கும். ஒருசிலர் இஞ்சியோடு சேர்த்து ப.மிளகாய் சேர்ப்பாங்க. எனக்கு அது வாசனை பிடிக்குறதில்ல. அதனால சேர்ப்பதில்லை.

பச்சரிசி ஊற வச்சு மெஷின்ல கொடுத்து கொரகொரப்பா அரைச்சுக்கிட்டு வந்து சலிச்சு மாவு தனியா, ரவை தனியா பிரிச்செடுத்தும் உப்புமா செய்வாங்க. அதும் செம டேஸ்டா இருக்கும்.

நன்றியுடன்,
ராஜி.

18 comments:

  1. தகவல்கள் எல்லாமே அருமை ராஜிக்கா...
    ரவா பொங்கல் சூப்பர் க்கா...எங்களுக்கும் ரொம்ப பிடிக்கும்...

    ReplyDelete
    Replies
    1. இந்த முறை செமயா வந்துச்சுப்பா! நான் பிளாக்குக்கு படமெடுக்குறேன்னு தெரிஞ்சிடுச்சுப்போல!

      Delete
  2. எப்படி எல்லாம் புரிய வைக்க வேண்டியிருக்கு.....!!!!!!

    ReplyDelete
    Replies
    1. எப்படியோ சாப்பிட்டா சரிதானேண்ணே

      Delete
  3. பொடி அரிசியில் உப்புமா பொங்கல் செய்தால் ருசிக்கும் எனக்குப் பிடிக்கும் தேங்காய் துருவல் சேர்த்தால் இன்னும்பிடிக்கும்

    ReplyDelete
    Replies
    1. ஆனா அதை செய்யும்போது கவனமா இருக்கனும். இல்லன்னா கட்டிதட்டிடும்ப்பா.

      Delete

  4. உப்புமா அதை கண்டா எனக்கு வெறுப்புமா

    ReplyDelete
    Replies
    1. பொண்டாட்டியையே புடிக்கலியாம். இதுல உப்புமாவை புடிச்சா என்ன?! புடிக்கலின்னா என்ன?!

      Delete
  5. அருமை......ரவா பொங்கல் செய்யும் முறை பார்த்து நாவில ஜலம் வச்சுண்டேன்.......அப்புறம் இந்த உப்புமா...என் வாழ் நாளில துன்னதில்ல.{மேல கூட கருத்து சொன்னவரு,றைமிங்கா சொல்லியிருக்காரு.>>அவர்கள் உண்மைகள்.}///கிச்சன் கார்னர்ன்னா தமிழில என்னம்மா?// நன்றி பதிவுக்கு.....

    ReplyDelete
    Replies
    1. கிச்சன்னா அடுப்பங்கரை, கார்னர்ன்னா ஓரம், மூலை... அடுப்பங்கரையில் ஒரு ஓரமாதானே அடுப்பு இருக்கும். அங்க நின்னு சமைக்குறதால கிச்சன் கார்னர்ன்னு பேரு....ஸ்ஸ்ஸ் அபா எப்படிலாம் சமாளிக்க வேண்டியதா இருக்கு...

      என்னாது! உப்புமா துண்ணதே இல்லையா?! இங்க வாங்க மூணு வேளையும் உப்புமாவையே செஞ்சு அசத்துறேன்.

      Delete
  6. Replies
    1. sooji என்பது நம்ம ஊர் நம்ம ஊர்ல, sujee என்பது நேபாளத்தில்ப்பா. இது இத்தாலி வார்த்தையிலிருந்து வந்தது.

      Delete
  7. அருமையா இருக்கே.... செய்துடுவோம். நான் புளி போட்டு ரவா பொங்கலோன்னு பார்த்தேன்.

    ReplyDelete
    Replies
    1. அது எப்படின்னு சொன்னால் நாங்களும் செய்வோமில்ல!

      Delete
  8. எல்லா வகை ரவையிலும் பொங்கல் செய்வதுண்டு ராஜி. மக்கா சோள ரவை/பன்ஸி ரவை ல கூட செய்யலாம் நல்லாருக்கும்......அதே போல சிறு தானியம் எல்லாத்துலயும் - சாமை, வரகு, குதிரைவாலி, தினை எல்லாத்துலயும் செய்யலாம் அதுவும் நல்லாருக்கும். இதே ரவைல பாசிப்பருப்பு சேர்க்கறோம்ல உப்புக்குப் பதிலா வெல்லம் சேர்த்து இனிப்பு ரவா பொங்கல் செய்யலாம்...நல்லாருக்கும் அதுவும்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம் அதும் செஞ்சு பார்க்கலாம் கீதாக்கா...

      Delete
  9. இனிப்பு ரவா பொங்கல்ல தேங்காய்ப்பால் சேர்த்து செஞ்சா அட்டகாசமா இருக்கும் சுவை. அதே போல இதே ரவை பா ப சேர்த்து பால் விட்டோ அல்லது தேங்காய்ப்பால் சேர்த்தோ பாயாசமும் செய்யலாம். இப்படி நிறைய ...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ம்ம் ரவையில் பலகாரமும் அதிகம், சுவையும் அதிகம்.... நான் ரவையில் இப்படி செய்ததில்லை. செஞ்சு பார்த்துட்டு சொல்றேன் கீதாக்கா

      Delete