Saturday, April 07, 2018

முதன் முதலாக...... பாகம் 1


முதல் காதல், முதல் முத்தம், முதல் அழுகை, முதல் ஸ்பரிசம், முதல் பரிசு என முதன்முதலாய் வாய்த்தவைகள் என்றும் மறக்கலாகாது. அதுமாதிரி, முதன்முதலாய் நிகழ்ந்த நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியவகளின் சிலவற்றை இந்த பதிவில் பார்ப்போம். 
இன்னிக்கு சோனி (sony)ன்ற பேரை கேட்டதும் நமக்கு டிவிதான் நினைவுக்கு வரும். ஆனா, சோனி கம்பெனில முதன்முதலா தயாரிச்ச பொருள் ரைஸ்குக்கராகும்...  அதேமாதிரி, டயர் தயாரிப்பில் பேர்போன எம். ஆர் . எப். (MRF) கம்பனி தயாரிச்சது ஒரு பலூனை.... ரிலையன்ஸ் தன்னோட வியாபாரத்தை ஆரம்பிச்சது விமல்ன்ற துணிகள்மூலம்தான். அதேப்போல, விப்ரோ கம்பனி வனஸ்பதியையும், பானசானிக் கம்பனி பல்பு ஸ்டாண்டுகளையும், நோக்கியா பேப்பர் மில்ன்னுதான் தன்னோட பயணத்தை ஆரம்பிச்சாங்க.  

இந்திய அளவில் ஒரு லட்சம் சம்பளம் வாங்குன முதல் நடிகை கே.பி.சுந்தராம்பாள் அம்மா. சட்டமன்ற மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்ணும், முதல் நடிகையும் இவங்கதான். காந்தியடிகளே நேரில் வந்து சுதந்திர போராட்டாத்தில் தங்கள் பங்களிப்பு வேணும்ன்னு சொல்லி கூப்பிட்ட முதலும் கடைசியுமான நடிகை இவங்கதான். 

முழுக்க முழுக்க இந்தியர்களாலயே தோற்றுவிக்கப்பட்ட வங்கி பஞ்சாப் நேசனல் பேங்க்.  தமிழகத்தின், இந்தியாவின் முதல் மாநகராட்சின்ற பெருமை சென்னையையே சேரும். சென்னை மாநகராட்சியின் முதல் தலைவர்  சர்.பி.டி. தியாகராயர்,   சென்னை மாநகராட்சியின் முதல் மேயர் சர்.ராஜா முத்தையா செட்டியார், . சென்னை மாநகராட்சியின் முதல் பெண் மேயர்,  தாரா செரியன் என பதவியை அலங்கரித்தனர். 



சென்னையில் முதன்முதலாக கட்டிய சினிமா தியேட்டர் ‘கெயிட்டி’. இது ஆந்திராக்காரரான ஆர். வெங்கய்யா. இவர்தான் ஊமைப்படத்துக்கு பிண்ணனி இசை சேர்த்து, சினிமாவை பேச வைத்தவர், இந்த தியேட்டர் கட்டுறதுக்கு முன்,  எக்மோர் பக்கத்துல இருக்கும் விக்டோரியா ஹால்லதான் நாடகம், மௌன படங்கள்லாம் காட்டப்பட்டது. தமிழில் வெளிவந்த முதல் படம் கீசகவதம். 1916l இப்படம் வெளியானது.  நடராஜ முதலியார்  இயக்கியிருந்தார். இவரே தமிழ்த் திரையுலகின் முதல் இயக்குனரும் ஆவார். தமிழில் வெளியான இரட்டைவேடம் கொண்ட படம் உத்தமபுத்திரன். பி.யு. சின்னப்பா ஹீரோவா நடிச்சிருந்தார்.  ஏ.வி. எம் நிறுவனத்தால் எடுக்கப்பட்ட முதல் படம் அல்லி அர்சுனா. 1935ல வெளியானது. 

முதன்முதலாக ... அடுத்த பாகமும் வரும்...

நன்றியுடன்,
ராஜி






22 comments:

  1. முதல்,முதலாக தங்கச்சியின் பதிவுக்கு கருத்து/கொமண்ட் போட்டது நான் தான்.......

    ReplyDelete
    Replies
    1. அண்ணன் படு ஸ்பீடு.. 3.40க்கு போடா பதிவுக்கு 3.49க்குலாம் கமெண்ட். டிடி அண்ணனை மிஞ்சிட்டீங்க

      Delete
  2. அருமை... தொடரட்டும் சகோதரி...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே

      Delete
  3. முதன்முதலா இவைகளை பதிவிட்டது சகோதான்.

    வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. கிண்டல் பண்ணாதீகண்ணே

      Delete
  4. //முதல் காதல், முதல் முத்தம், முதல் அழுகை, முதல் ஸ்பரிசம், முதல் பரிசு என முதன்முதலாய் வாய்த்தவைகள் என்றும் மறக்கலாகாது.//

    முதல் கல்யாணம்????????

    ReplyDelete
    Replies
    1. அந்த கருமத்தை ஏன் ஞாபகப்படுத்திக்கிட்டு...

      Delete
  5. நல்ல தகவல்கள் சகோதரி/ராஜி...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே

      Delete
  6. முதல் விஷயங்கள் பற்றிய விஷயங்களை முதலாவதாக வந்து படிக்க முடியாவிட்டாலும், சுவாரஸ்யமான பதிவை ரசித்துப் படித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்தேன்னு அடிச்சு விடுங்க சகோ

      Delete
  7. அருமை
    அருமை
    தொடருங்கள் சகோதரியாரே

    ReplyDelete
  8. ஸ்வாரஸ்யமான தகவல்கள். தொடரட்டும்.

    ReplyDelete
  9. வணக்கம் நண்பரே.. !

    உங்களது பதிவு http://gossiptamil.com/aggre/ இல் பகிரப்பட்டுள்ளது, பார்வையிடவும். தமிழுக்கான புதிய திரட்டியாக http://gossiptamil.com/aggre/ வெளிவந்துள்ளது. உங்களது இணையத்தளங்களின் பதிவினை இத் திரட்டியினூடாக பகிர்ந்து கொள்ளவதன் மூலம் உங்கள் பதிவுகள், உணர்வுகள், சுவாரசியங்கள் மற்றவர்களையும் சென்றடையச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    நன்றி
    http://gossiptamil.com/aggre/

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பா வரேனுங்க சகோ

      Delete
  10. முதல் கோணல் முற்றும்கோணல் என்னும் சொல்வழக்கு உண்டு அது அத்தனை சரியில்லையோ

    ReplyDelete
    Replies
    1. அதும் உண்டுப்பா.

      Delete