காலையில எழுந்ததும் காலண்டர்ல நேத்தைய தாளை கிழித்ததும், சுதந்திரதின வாழ்த்துக்களுடன் இன்றைக்கு பொது விடுமுறைன்னு போட்டிருந்ததைப் பார்த்ததும் மனம் எனது பள்ளிப் பருவத்தின் சுதந்திர தினகொண்டாட்டத்தினை நினைச்சுப் பார்த்தேன்..
இப்ப மாதிரி எல்லாமே ரெடிமேட்லகிடைக்காது.எல்லாத்துக்கும் கொஞ்சம் மெனக்கெடனும், ஜுலை மாசக் கடைசிலியே விழாவுக்கான ஏற்பாடுகள் ஆரம்பமாயிடும். ஒவ்வொரு கிளாசுக்கும் சர்க்குலர் அனுப்பி யார்லாம் கலந்துக்கப் போறாங்கன்னு லிஸ்ட் எடுப்பாங்க. ஆகஸ்டு மாசம் ஆரம்பிச்சதும்,பாட்டு,டான்ஸ், நாடகத்துக்கான ஒத்திகை ஒருபக்கம் நடக்கும். பேச்சுப்போட்டி,விளையாட்டுப் போட்டி,குறள் ஒப்புவித்தல்ன்னு போட்டிகள்னு ஒருபக்கம் விழாவுக்கு யாரைலாம் கூப்பிடலாம்னு மறுபக்கம்.
2 நாளுக்கு முன்னாடி,சணல் கயிறுல பசையைத் தடவி முக்கோண வடிவ கலர் பேப்பர்லாம் ஒட்டி காய வைப்போம்.விழாவுக்கு முதல் நாள் பெரிய வகுப்பு பையனுங்கலாம் கலர் பேப்பர் தோரணத்தை கட்டுவாங்க. பொண்ணுங்கலாம் கோலம் போட்டு, கலர் பவுடர் கொடுத்தும் பள்ளியை அலங்கரிப்பாங்க.இப்ப மாதிரிலாம் பள்ளிகள்ல விழாவுக்காக தனி மேடைலாம் கிடையாது.பள்ளிகள்லயும்,பெரிய வகுப்புகள்ல இருக்குற பெஞ்சுலாம் போட்டு மேடை தயார் பண்ணுவாங்க.
கொடி ஏத்தி முடிச்சதும்,எல்லாருக்கும் ஆரஞ்ச் மிட்டாய் தருவாங்க (இதுக்குத்தானே காத்திருந்தோம்). அப்புறம் கலைநிகழ்ச்சிகளும், போட்டிகள்ல ஜெயிச்ச பசங்களுக்கும் கிஃப்ட் கொடுப்பாங்க.எப்படியும் நம்ப பேரு அந்த கிஃப்ட் லிஸ்ட்ல இருக்காது.அவங்க கொடுக்குற சோப்பு டப்பா, ஜாமின்டரி பாக்ஸ், டிஃபன் பாக்ஃசுக்குலாம் ஆசைப்படுற ஆளா நாம்?! ஜனகன மண பாடி ஃபங்ஷன் முடிஞ்சு, கலர் பேப்பர்ல கொஞ்சம் அத்துக்கிட்டு வீட்டுக்கு ஓடுவோம்.கொடிக்கு கொடுக்க வேண்டிய மரியாதை,சுதந்திர தினத்துக்குண்டான மதிப்பு இதுலாம் தெரிஞ்சுக்கலைன்னாலும் நாக்கில் இருக்கும் மிட்டாயின் புளிப்பு சுவைக்காகவும்,மனசு முழுக்க இருக்கும் சந்தோசத்துக்காகவும், இந்தியன் என்ற உணர்வுக்காகவும் சட்டையில் குத்தியிருக்கும் கொடியை வீட்டு நிலைக்கதவுல ஒட்டி போகும் போதும் வரும் போதும் சல்யூட் அடிச்சிக்கிட்டு அடுத்த சுதந்திர தினத்துக்கு காத்திருப்போம்..
இப்படி கழிந்தது நம் சுதந்திர தினக் கொண்டாட்டம். ஆனால், இன்று ...
நம் பிள்ளைகளுக்கு?! இந்த நாளும் மற்றொரு விடுமுறை நாளே!! தொலைக்காட்சி முன்னாடி நொறுக்குத்தீனியோடு, உலகத்தொலைக்காட்சி வரலாற்றில் முதன்முறையாக போடும் திரைப்படத்தோடும், நடிகர்களின் பேட்டிகளிலும் சுதந்திர தினம் கழியுது.. சுதந்திரத்தின் சிறப்பு, மதிப்பு. மரியாதை, அதற்கு நம் முன்னோர்கள் தந்த விலை என்னன்னு அவர்களும் தெரிஞ்சுக்க விரும்புறதில்ல.
அவங்களுக்கு எடுத்துச் சொல்ல நமக்கும் நேரமில்ல. ஏன்னா நாமளும் தொலைக்காட்சி முன்னாடி உக்காந்துக்கிட்டு வூட்டுக்காரம்மாவைப் பத்தி (வூட்டுக்காரர்) கிண்டலடிக்குற பட்டிமன்றத்தை ரசிச்சுக்கிட்டும்,அசைவம் சாப்பிட்டும், தூங்கியும்..., நம்மோட இன்றைய சுதந்திர தினம் கழியுது.
இந்தா ராஜி! வாட்ஸ் அப், ஃபேஸ்புக், பிளாக்ல பதிவு போட்டும்,சட்டைல கொடி குத்திக்கிட்டு செல்பி, வெல்பி எடுத்தும் ஃபோன்லயும், நெட்லயும்ன்னும், யாரும் என்னைய கேட்கப்படாது. ஏன்னா நான் ஆத்துறது சமுதாயக் கடமை.ஆகவே, குறுக்க பேசாம என்னை என் கடமையை ஆத்த விடுங்க.
இப்ப மாதிரி எல்லாமே ரெடிமேட்லகிடைக்காது.எல்லாத்துக்கும் கொஞ்சம் மெனக்கெடனும், ஜுலை மாசக் கடைசிலியே விழாவுக்கான ஏற்பாடுகள் ஆரம்பமாயிடும். ஒவ்வொரு கிளாசுக்கும் சர்க்குலர் அனுப்பி யார்லாம் கலந்துக்கப் போறாங்கன்னு லிஸ்ட் எடுப்பாங்க. ஆகஸ்டு மாசம் ஆரம்பிச்சதும்,பாட்டு,டான்ஸ், நாடகத்துக்கான ஒத்திகை ஒருபக்கம் நடக்கும். பேச்சுப்போட்டி,விளையாட்டுப் போட்டி,குறள் ஒப்புவித்தல்ன்னு போட்டிகள்னு ஒருபக்கம் விழாவுக்கு யாரைலாம் கூப்பிடலாம்னு மறுபக்கம்.
2 நாளுக்கு முன்னாடி,சணல் கயிறுல பசையைத் தடவி முக்கோண வடிவ கலர் பேப்பர்லாம் ஒட்டி காய வைப்போம்.விழாவுக்கு முதல் நாள் பெரிய வகுப்பு பையனுங்கலாம் கலர் பேப்பர் தோரணத்தை கட்டுவாங்க. பொண்ணுங்கலாம் கோலம் போட்டு, கலர் பவுடர் கொடுத்தும் பள்ளியை அலங்கரிப்பாங்க.இப்ப மாதிரிலாம் பள்ளிகள்ல விழாவுக்காக தனி மேடைலாம் கிடையாது.பள்ளிகள்லயும்,பெரிய வகுப்புகள்ல இருக்குற பெஞ்சுலாம் போட்டு மேடை தயார் பண்ணுவாங்க.
கோவை இலையும், கரியையும் சேர்த்து அரைச்சு சாறெடுத்து தேய்ச்சு பழைய போர்டைலாம் புதுசாக்கி, படம் வரைஞ்சி அழகு பண்ணுவாங்க. யூனிஃபார்ம்ல கிழிசல் இருந்தா தைச்சு, துவைச்சு அயர்ன் பண்ணி, நல்லா குளிச்சு படிய தலைசீவி வரனும்.மீறி அழுக்கா, கிழிசலோடு வந்தா உப்புல முட்டி போடனும்னு ஹெட்மாஸ்டர் கண்டிப்போடு
சொல்லி அனுப்புவார்.
காலையில ரெடியாகி, சட்டைல தேசியக் கொடிக் (பெரும்பாலும் தலைக்கீழாய் கொடி யை குத்திக்கிட்டு போய் யார்கிட்டயாவது குட்டு வாங்கியிருக்கேன்) குத்திக்கிட்டு போய் கிரவுண்ட்ல வகுப்பு வாரியா வரிசைல போய் நிப்போம்.எப்படா ஆரம்பிச்சு மிட்டாய் குடுப்பாங்கன்னு காத்திருப்போம்.எல்லாரும் வந்த பின் ஹெட்மாஸ்டர் மைக் பிடிச்சு தமிழ்தாய் வாழ்த்தோடு நிகழ்ச்சிலாம் ஆரம்பிக்கும். சீஃப் கெஸ்ட் கொடி ஏத்துவார்.
நம்ம மானத்தை வாங்குறதுக்குன்னே நல்லா படிக்குற பசங்க யாராவது ஸ்கூல்ல இருப்பாங்க.அவங்கள்ல ஒருத்தர் மார்ச்பாஸ்ட் போட்டு சீப்கெஸ்ட்டை கூட்டிட்டு போய் கொடி ஏத்த வைப்பாங்க. சுதந்திரம்னா என்ன? எப்படி வந்தது? அதை வாங்க கொடுத்த விலை என்னன்னு தெரியலைன்னாலும் கொடி ஏத்தி பறக்கும்போதும்,கொடிக்குள் வெச்சிருந்த பூவுலாம் கொட்டும்போதும்,"தாயின் மணிக்கொடி பாரீர்"ன்னு பாடல் பாடும் போதும் இனம்புரியா உற்சாகம் பொங்கும்.கொடி ஏத்தி முடிச்சதும்,எல்லாருக்கும் ஆரஞ்ச் மிட்டாய் தருவாங்க (இதுக்குத்தானே காத்திருந்தோம்). அப்புறம் கலைநிகழ்ச்சிகளும், போட்டிகள்ல ஜெயிச்ச பசங்களுக்கும் கிஃப்ட் கொடுப்பாங்க.எப்படியும் நம்ப பேரு அந்த கிஃப்ட் லிஸ்ட்ல இருக்காது.அவங்க கொடுக்குற சோப்பு டப்பா, ஜாமின்டரி பாக்ஸ், டிஃபன் பாக்ஃசுக்குலாம் ஆசைப்படுற ஆளா நாம்?! ஜனகன மண பாடி ஃபங்ஷன் முடிஞ்சு, கலர் பேப்பர்ல கொஞ்சம் அத்துக்கிட்டு வீட்டுக்கு ஓடுவோம்.கொடிக்கு கொடுக்க வேண்டிய மரியாதை,சுதந்திர தினத்துக்குண்டான மதிப்பு இதுலாம் தெரிஞ்சுக்கலைன்னாலும் நாக்கில் இருக்கும் மிட்டாயின் புளிப்பு சுவைக்காகவும்,மனசு முழுக்க இருக்கும் சந்தோசத்துக்காகவும், இந்தியன் என்ற உணர்வுக்காகவும் சட்டையில் குத்தியிருக்கும் கொடியை வீட்டு நிலைக்கதவுல ஒட்டி போகும் போதும் வரும் போதும் சல்யூட் அடிச்சிக்கிட்டு அடுத்த சுதந்திர தினத்துக்கு காத்திருப்போம்..
நம் பிள்ளைகளுக்கு?! இந்த நாளும் மற்றொரு விடுமுறை நாளே!! தொலைக்காட்சி முன்னாடி நொறுக்குத்தீனியோடு, உலகத்தொலைக்காட்சி வரலாற்றில் முதன்முறையாக போடும் திரைப்படத்தோடும், நடிகர்களின் பேட்டிகளிலும் சுதந்திர தினம் கழியுது.. சுதந்திரத்தின் சிறப்பு, மதிப்பு. மரியாதை, அதற்கு நம் முன்னோர்கள் தந்த விலை என்னன்னு அவர்களும் தெரிஞ்சுக்க விரும்புறதில்ல.
அவங்களுக்கு எடுத்துச் சொல்ல நமக்கும் நேரமில்ல. ஏன்னா நாமளும் தொலைக்காட்சி முன்னாடி உக்காந்துக்கிட்டு வூட்டுக்காரம்மாவைப் பத்தி (வூட்டுக்காரர்) கிண்டலடிக்குற பட்டிமன்றத்தை ரசிச்சுக்கிட்டும்,அசைவம் சாப்பிட்டும், தூங்கியும்..., நம்மோட இன்றைய சுதந்திர தினம் கழியுது.
இந்தா ராஜி! வாட்ஸ் அப், ஃபேஸ்புக், பிளாக்ல பதிவு போட்டும்,சட்டைல கொடி குத்திக்கிட்டு செல்பி, வெல்பி எடுத்தும் ஃபோன்லயும், நெட்லயும்ன்னும், யாரும் என்னைய கேட்கப்படாது. ஏன்னா நான் ஆத்துறது சமுதாயக் கடமை.ஆகவே, குறுக்க பேசாம என்னை என் கடமையை ஆத்த விடுங்க.
எல்லோருக்கும் எனது இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் ஜெய் ஹிந்த்!