Thursday, September 30, 2010

ஊருல அவன் அவன் நாப்பது,அம்பது பிள்ளைகளுக்கெல்லாம் பாடம் சொல்லிக் குடுக்குறான். ஆனால் மூணு பிள்ளைங்களுக்கு பாடம் சொல்லி குடுக்குற அவஸ்தை இருக்கே . ஐயையையையையையோ..., னு சந்தானம் மாதிரி புலம்ப வச்சுடுவாங்க என் புத்திர சிகாமணிகள். மாலை ஆறிலிருந்து எட்டு வரை அவர்களுக்கு பாடம் சொல்லித் தரவேண்டியது என் பொறுப்பு.(அதுக்கு பதிலா நான் கேரளாவுக்கு அடிமாடா போகலாம்)

அமைதியா படிச்சுக்கிட்டு, இல்லனா எழுதிக்கிட்டு இருப்பாங்க. அதை நம்பி நாமும் எதாவது ஒரு நாளிதழை கையில் எடுத்த வினாடி, இதை எழுதிக் குடு ப்ளீஸ், அப்பிடுன்னு பெருசு வந்து நிக்கும், உடனே சின்னது ஓடி வந்து எனக்கு இந்த படத்தை வரைஞ்சு குடுன்னும், கடைகுட்டியோ இந்த கணக்கை சொல்லிக் குடுன்னும். ஒருத்தருக்கு எழுதி குடுத்துட்டால், அவள்(ன்) முக்கியம், நான் முக்கியமில்லைன்னு முருகர், விநாயகர் மாம்பழத்துக்கு கோவிச்சுக்கிட்டதுப் போல் கோவிச்சுக்கும். நான் அவங்க சண்டையில பே னு முழிக்க வேண்டியதுதான்.


சரி போனால் போகுதுன்னு தமிழ் புக்கை எடு த்து படிங்க என்றால், சின்னது காச நோயை, காசாநோய் னு படிக்கும். சரி வேண்டாம் டிக்டேசன் வைக்கலாமின்னு, சின்னதையும், கடைக்குட்டியையும் கூப்பிட்டு எழுத சொன்னால், புக்குல இருக்குறதை சொன்னாதான் கோட்டை விடுராங்கலேன்னு டி.வி, திரைப்படங்களின் பெயரை சொன்னால், வேட்டைக்காரனை, வெட்டைக்காரனாக்கி(விஜய்க்கு இது தேவைதான்) விட்டாள் இளைய மகள். பேருந்து நிலையம் எழுதுடா என்றால், கடைக்குட்டி பெருந்து நிலையம் என்று எழுதுனான்.

சரி இதெல்லாம் சரிபட்டு வராது என்று எண்ணி ஆங்கில புத்தகத்தை கொண்டு வர சொன்னேன், describe the meenaakshi temple னு ஒரு கேள்வி அதுக்கு யார் கட்டினது, எங்க இருக்கு னு அரை மணி நேரமா சொல்லிக் குடுத்தேன். என் பையன் எல்லாத்துக்கும் மண்டைய மண்டைய ஆட்டி கேட்டுகிட்டு, describe meenatchi temple னா அதோட மீனிங் மட்டும்தான்னு எங்க மிஸ் சொல்லிக் குடுத்தாங்க னு சொன்னானே பார்க்கலாம்.

இல்லடா describe னா விளக்கம் இல்ல விவரி னு அர்த்தம்டா. நீ சொல்வதுப் போல் மீனிங் இஇல்லடா னு ,நானும் எவ்வளவோ போராடிப் பார்த்துட்டேன். அவன் என்னை நம்புற மாதிரியே இல்ல. என் மூத்த மகளும் நான் சொல்றதுதான் கரெக்ட் னு அவன்கிட்ட சொல்லி பார்த்துட்டா . போடி நீங்க ரெண்டு பேரும் ஒரு கட்சி அதான் அவங்களுக்கு சப்போர்ட் பண்றேன்னு அவகிட்ட சண்டைக்கு போனான் . அவள் போடான்னு போயிட்டாள். நானும் கோவம் வராத மாதிரியே எவ்வளவு நேரம் தான் நடிக்கிறது...., போடா. உன் மிஸ் தலையில இடி விழ னு மனசுக்குள் நினைச்சுக்கிட்டு (வெளில சொன்ன என்னை, அடிப்பானோ) நீயாச்சு, உன் மிஸ் ஆச்சுன்னு நான் கோவமா எழுந்து வெளில வந்துட்டேன்.


சாப்பிடும்போது, அப்பா, அம்மாக்கிட்ட இதை சொல்லி ஆறுதல் தேடிக்கலாமினு புலம்புனா, நீயும் இப்படிதான், குப்புசாமி னு எழுத சொன்னா, குப்புசமி, அமரேசன் னு எழுத சொன்னா அமரரோசன், கார்த்திகேயன் னு எழுத சொன்னா கர்த்திகொயன் னு அழுதினே, உன்னை போலதானே உன் புள்ளைங்களும் இருப்பாங்க னு சேம் சைடு கோல் போட்டாரே பார்க்கலாம்.

முப்பது வருடம் கழிச்சு உன்னாலே இந்த அவமானம் எனக்கு தேவையா? எப்படியும் நைட்டு படுக்க என் பக்கத்துலதானே வரணும் , உனக்கு இருக்கு கச்சேரி னு பயபுள்ளைய எதிர்பார்த்துகிட்டு இருக்கேன். கும், கும்முன்னு கும்ம.


"நாளைய பாரதம்'

என் மகன் நல்லா படிப்பான், ஆனால், கமல் ஸ்டைல் ல சொல்லனும்னா எழுதனும்னு வந்தாதான் வார்த்தைதான், பேனாதான்..,
என் மகள் நீதான் பெரிய கவிஞர் ஆச்சே (இது உணர்ந்து இல்ல. ரத்த பாசத்துல) உன் புள்ளைக்கு ஒரு கவிதை எழுது. உன் புள்ளை அப்பவாவது படிக்குறானா பார்க்கலாம் என்றாலே பார்க்கலாம்.
இது நம்ம பிரஸ்டிஜ் பிராப்ளம் ஆச்சே.
ஒரு நொடியில(நிஜமாவே ஒரு நொடியில் வந்து விழுந்த கவிதை)
இனி உங்க தலையெழுத்து...,


விழித்திடு...., மகனே
விழித்திடு ..., உன்
அறியாமை இருள் அகற்றிட,
கல்வி கற்று,
நம்(உன்) வாழ்வில் ஒளி ஏற்றிட
விழித்திடு..., மகனே,
விழித்திடு...,
"நாளைய பாரதம்"
உனக்காக காத்திருக்கிறது...,


பின் குறிப்பு: தலைப்பு என் மகள் தந்தது.(இதை சொல்லாட்டி பெரிய யுத்தமே வெடிக்கும் என எச்சரிக்கை)


மரண அழைப்பு

தாயாக மாறி
அன்பை தந்துவிட்டு...,
தந்தையாய் மாறி
அறிவைத் தந்துவிட்டு ...,
உடன்பிறப்பாய் மாறி
பாசத்தை தந்துவிட்டு...,
நண்பனாய் மாறி
தோள் தந்துவிட்டு...,
இணையாய் மாறி
காதலை தந்துவிட்டு..,

பால்ய பருவத்து "நிலா"
பருவமெய்தியதும்,
தூர, தூர, தூர...,
செல்வதுப் போல்
விலகி தூர சென்றவளே...,

"மறக்காமல்
வந்துவிடு என் மரணத்திற்கு".

Tuesday, September 28, 2010

சிரிக்க மட்டும்

கணினி பொறியாளர் தன காதலை இப்படிதான் சொல்வார்

ஆண்: உன் பெயர் என்ன? கூகுளா?
பெண்: என்ன உளர்றே?
ஆண்; நான் தேடும் அனைத்தும் உன்னுள் உள்ளதே அதான் கேட்டேன்.

முன்னவர்: மாப்பிள்ளை போலி கணினி பொறியாளர் எப்படி சொல்றே?
பின்னவர்: எங்க வீட்டு கம்ப்யுட்டர்ல வைரஸ் வந்துருக்குனு சொன்னா,
ஏன் நீங்க தடுப்பூசி போடலயானு கேட்குறார்.

முன்னவர்: அலாரத்தை கண்டுபிடிச்சவந்தான்முழுமுதல் சோம்பேறி .
பின்னவர்: இல்ல, இல்ல, ஸ்நூஸ் அ கண்டுபிடிச்ச எங்க ஆளுதான் முழு முதல் சோம்பேறி.

மனைவி: நம்ம பையன் என்னவா வர ஆசைப் படுறீங்க?
கணவன்: அவன் என்னவாவது ஆகித் தொலைக்கட்டும், ஆனா, யாருக்கும் புருஷனா மட்டும் ஆகக்கூடாது. நான் பட்ட கஷ்டம் என்னோடு போகட்டும்.

மனைவி: ஏங்க? சமையல்காரியை நிறுத்திட்டு, நானே சமைக்குறேனே, எனக்கு எவ்வளவு சம்பளம் கொடுப்பீங்க.
கணவன்: சம்பளமெல்லாம் எதுக்கும்மா. நீ சமைக்க ஆரம்பிச்சுட்டா, என் இன்சூரன்ஸ் பணம் மொத்தம் உனக்குதானே.

மனைவி: ஏங்க , அதோ உக்காந்து தன்னியடிச்சுக்கிட்டு இருக்காரே அவரு ஒரு முறை என்னை பொண்ணு பார்க்க வந்துட்டு, நான் கிடைக்காமல் போகவே இத்தனை வருஷமா தண்ணி அடிச்சுக்கிட்டு இருக்காருங்க.
கணவன்: இத்தனை வருஷமாவா அந்த சந்தோசத்தை கொண்டாடிக்கிட்டு இருக்கான்.


Monday, September 27, 2010

குறுஞ்செய்தியில் ரசித்தது

"அபராதம்" என்பது
நாம் தவறாக நடந்துக் கொண்டதற்கு
விதிக்கப்படும் "வரி."

"வரி" என்பது,
நாம் சரியாக நடந்து கொண்டதற்கு
விதிக்கப்படும் "அபராதம் "

2. காக்கைக்கு தன் குஞ்சு
பொன்குஞ்சு என்றால்
எல்லா காக்கையும்
நகைக் கடைதானே வைக்கணும்?

3. வாழ்க்கையில் மரணமே
மிகப் பெரிய வலி இல்லை.
அதையும் தாண்டிய மிகப் பெரிய வலி..,
உங்களின் அன்புக்குரியோர்
நீங்கள் உயிருடன் இருக்கும்போதே
உங்களைவிட்டு பிரிந்து போவது.

4. பசங்களோட வாழ்க்கையை புரட்டிப் போடும்
சக்தி வாய்ந்த வார்த்தை..,

"மச்சி அவ உன்னை பார்க்குறாடா"

5. உலகிலேயே மிகவும் உணர்ச்சிகரத் தருணம்
நண்பன் பரிட்சை எழுத
நாம் அறைக்கு வெளியே நிற்கும் தருணம்.

"ஒருவேளை பாஸ் ஆயிடுவானோ"?

6. நீ பிறப்பதற்கு முன்பே
நான் துடிக்க ஆரம்பித்தேன்.
அதனால்தானோ என்னவோ..,
நீ இறப்பதற்கு முன்பே
நான் இறந்துவிடுகிறேன்.
இப்படிக்கு,
உன் இதயம்உன்னை எப்படி மறப்பேனடி?

உறங்கும்போது காதுவரை போர்த்திவிட்டு
தலைக்கோதும் கனிவு,

நான் பசியாற பார்த்து,
உன் பசி தணிந்த பாசம்,

துயரத்தில் சோர்ந்திருக்கும் வேளையில்
தோள் கொடுக்கும் தோழமை,

அருகிலிருக்கும்போது சண்டையிட்டு
கோபப்படுவதுபோல் நடிக்கும் நடிப்பு,

பிரிந்திருக்கும்போது
துடிக்கும் துடிப்பு.

உடல் நலனில்லாமல் இருக்கும்போது
திருநீறுப் பூசி,
எனக்காக நோன்பிருக்கும்
அக்கறை,
நகக்கணுக்களில் அழுக்கெடுக்கும் பரிவு

இப்படி எத்தனை? எத்தனை?
உன் காதலுக்கு ஈடு செய்ய முடியாதபடி
என்னை தவிக்கவிட்டு...,

என் இரண்டாவது தாயாகவே மாறிய
உன்னை எப்படி மறப்பேனடி?


Wednesday, September 22, 2010

அஷ்டாவதானி

 மானத்தை மறைக்கும் உடையாய் ,
மகளுக்கு தாவணியாய்,
அரிசி உலர்த்தியாய்,
அடுப்படியில் கைப்பிடித் துணியாய்,
விளக்குத் திரியாய்,
உன்னைப் போலவே பலரூபமெடுக்கும்,
நீ வங்கித் தந்த "புடவை" 

எங்கே செல்கின்றன நம் பாதைகள்?

                இன்று எங்கள் வீட்டில் குடியிருக்கும் பெண்மணி வந்து, விரைவில் நாங்கள் குடியிருக்கும் உங்கள் வீட்டை காலி செய்துவிட்டு , வேறு வீட்டுக்கு போகபோகிறோம் என்றார்கள். அப்புறம் பேச்சு எங்கெங்கோ போய் கடைசியில்  தோட்டத்தில் உள்ள பூச்செடிகளின் மீது வந்தது.

                  டிசம்பர் பூச்செடி என் பொண்ணு ஆசையாசையாய் வைத்தது. இப்போதான் தளதளனு வந்திருக்கு. இந்த சீசனில் கண்டிப்பா பூக்கும். ம்ஹும், போகும்போது வெட்டிப் போட்டுவிட்டுதான் போகணும் என்றாரேப்  பார்க்கலாம்.  சில நொடிகளுக்கு  எனக்குப் பேச்சே வரவில்லை. ஒருவாறாக அவர்களை வழியனுப்பிவைத்துவிட்டு, யோசித்தேன்.

                      ஒருப் பூச்செடியே  அடுத்த ஒருவருக்கு விட்டுக் கொடுக்காத அளவிற்கு மனித மனங்கள் (என்னையும் சேர்த்துதாம்ல)  இன்று சுருங்கி விட்டதை எண்ணி வேதனைப் பட்டேன்.

                    இந்த அறிவியல்  யுகத்தில் கிடைக்கும் வசதிகளால் உலகமே சுருங்கிப் போய்விட்டது என்று பெருமையுடன் மார் தட்டும்போது.,, மனங்கள் சுருங்கிப் போய்விட்டதை எண்ணி கண்டிப்பாக வெட்கித் தலைக் குனிய வேண்டியதுதான்.

                 என் மனம்  பால்ய  காலத்திற்கு சென்றது (கொசுவர்த்தி சுருள் ஏத்திட்டீங்களா? )

                  அன்று, பெரும்பாலும் எல்லார் வீட்டிலும் திண்ணை வைத்துதான் வீடுக் கட்டுவார்கள்.  அது எதற்கு என்றால் வழிப் போக்கர்கள் ஓய்வெடுக்கவென்று . அந்த திண்ணை இப்போது எங்கே?

                  ஒவ்வொரு வீட்டு திண்ணையும் எத்தனை, எத்தனை சுகம், துக்கம், பிறப்பு, இறப்பு, மகிழ்ச்சி, சோகம், காதல் வலியை சுமந்திருந்தன? என்று நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.

                    மாலை வேளைகளில் (அப்போதெல்லாம்  T.V.என்ற முட்டாள் பெட்டி இல்லை). அத்தின்னை பலரூபமெடுக்கும் . சிறார்கள் தத்தம் வயதுக்கும்,பாலினத்திற்கேற்பவும்  பல குழுக்களாக ஆங்காங்கு விளையாடுவர். அம்மாக்கள் ஒருபுறமும், அப்பாக்கள் ஒருபுறமும், அண்ணன்கள்,அக்காக்கள் மறுபுறமும் தத்தம்  வயதுகேற்ப பிரிந்து உக்கார்ந்து பேசிக் கொண்டிருப்பார்  இல்லையில்லை தங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வுக் கண்டுகொள்வார்கள்.

                       குழந்தையின் உடல்நிலையிலிருந்து. வீடு கட்டுவது, பணமுடை, ஊர்பயணம், மகனின் திருமணம், அப்பாவின் தெவசம்  வரை அங்கேயே செலவில்லாமல் முடிந்த கதை உண்டு.

                        அப்புறம் தண்ணி எடுக்க போவது. பெரும்பாலும் குடிநீர் கிணறு ஊருக்கு வெளியே ஆற்றங்கரை அல்லது குலத்தங்கரையில்தான்    இருக்கும், அதற்கு வயதுவந்த பெண்களும், சிறார்களும், பெரியவர்களும் தனியாகப் போகாமல் ஒரு குழுவாக போவார்கள். அந்தக் குழுவில் நம் வீட்டு அண்ணனோ இல்லை கோடி வீட்டு சித்தப்பாவோ சைக்கிளை உருட்டிக் கொண்டு கண்டிப்பா போவார். ஏன்? தண்ணி எடுக்கவும் அவர்களை காபந்து பண்ணி கூட்டிவர  மட்டுமின்றி  சந்து வீட்டு  யசோதாக்கவை கடலை போடவும் .அதற்கு துணை நம்மை போன்ற சின்ன பிள்ளைகள்தான்.   (25 வருடத்திற்கு முன் நான் சின்ன பிள்ளையாக்கும்) அண்ணனிடமிருந்து வளையலோ, சாந்தோ அங்கிட்டு போகும், அங்கிருந்து  பலகாரங்களோ கடிதமோ இங்கிட்டு வரும் அதில் கண்டிப்பாக நமக்கு பங்குண்டு. .(அவிங்க மாட்டுனா முதல் அடி  நமக்குதான்). காதலையும் தாண்டி மற்றவர்களை பாதுக்காக்க வேண்டி வரும் மனிதநேயம் இன்று எங்கே?

                       ஆனால் இன்று வீட்டுக்கு வீடு குழாய், மோட்டார் இருந்தும் அண்டைஅயல் வீட்டினருடன் தண்ணீர் தகராறு பெரும்பாலும் பக்கத்து வீட்டினருடன் சண்டையிட முதல் காரணம் தண்ணீர்தான்.

                      அன்று யார் வீட்டிலும், யார் வீட்டு குழந்தையையும் பெற்றோர் விட்டுவிட்டு   ஊர்பயணம் மேற்கொள்வர். அவர்கள் வரும்வரை, குழந்தை   அவர்கள் வீட்டிலியே  சாப்பிட்டுட்டு அங்கேயேத்  தூங்கும். ஆனால், இன்று யாரை நம்பி நம் குழந்தைகளை நாம் விட்டுச் செல்கிறோம். குழந்தைகளை வீட்டுக்குள் வைத்து பூட்டி கடைக்கு போய்வரும் பெற்றோர் எத்தனை?

                ரோடில் அடிபட்டு விழுபவனை தூக்கிவிட எத்தனைப் பேர் வருகின்றனர்?

              அடிப்பட்டு, அனாதையாய்
              வீழ்ந்து விட்ட
              பிணத்தைப்  பார்த்துக் கொண்டு
             செல்கின்றன
              "நாளைய பிணங்கள்"

              எப்போதோ எங்கோப் படித்த  கவிதையே நினைவுக்கு வருகிறது.

               பள்ளிக்கு சாப்பாடுக்  கட்டிக் கொடுக்கும்போதே அரிசிவிலை  கிலோ முப்பது ருபாய் அதனால் தானம் பண்ணாமல் நீமட்டும் சாப்பிடு.  பென்சிலை நீ ஏன் அவனுக்கு கொடுத்தே அது உங்க மாமா சிங்கப்பூரிலிருந்து வாங்கிவந்தது னு சொல்லிக் கொடுக்கிறோம். அவர்கள் பெரியவர்கள் ஆனதும் பகிர்தல் என்பதே மறந்துவிடுமோ னு எனக்கு பயமா இருக்கு.

                  நம்முடைய பிள்ளைகளுக்கு நாம் நம் உறவு முறைகளையே சுருக்க கற்றுக் கொடுத்துவிட்டோம். அத்தை,மாமி,பெரியம்மா, சித்தி இந்த அத்தனை உறவுகளும் aunty  என்றாகிவிட்டது. அதேப்போல் சித்தப்பா,பெரியப்பா,மாமாலாம்  uncle என்றும்,  தாத்தா, பாட்டி, பாட்டன், பூட்டன், முப்பாட்டன் எல்லாம் சுருங்கி grand-parents என்றாகி ரொம்ப  காலமாச்சு.

                 நம்        தவறான பழக்க வழக்கங்களால் கலப்பட உணவு, மாசடைந்த காற்று, சுகாதார சீர்கேடான உலகத்தைதான் நம் எதிர்கால் சந்ததிக்கு பரிசளிக்கப் போகிறோம். அந்த தொல்லைகளைத்  தாங்க நம் பிள்ளைகளுக்கு தோள் கொடுக்க அண்டை அயலாரை (உண்மையான) நட்புடன் விட்டுச் செல்ல வேண்டாமா?

                        *இது என்னுடைய முதல் கட்டரை (படிக்குரக் காலத்துலேயே நாங்க கட்டுரை எழுதினா நாலு இல்ல அஞ்சு மார்க்தான் வரும்). எப்படி ஆரம்பிப்பது முடிப்பது எனத் தெரியவில்லை நீளம்   எனக்கே உறுத்துது.  மன்னித்து பிழைகளைப் பொறுத்து எப்படி உள்ளது என பின்னூட்டமிடுக
 நன்றி மற்றும் தோழமையுடன்                 Tuesday, September 21, 2010

குறுஞ்செய்தியில் ரசித்தது.

 புரிந்துக் கொள்ளாத அன்புக்கு,
 அருகிலிருந்தும் பயனில்லை....,
புரிந்துக் கொண்ட அன்புக்கு,
தூரம் ஒரு பிரிவு இல்லை.

உன் வாழ்க்கை முழுதும்
உன்னுடன் வரத் தயாராய் இருக்கிறேன்.
உன் கோவத்தால் என்னை
விரட்டி விடாதே.,
இப்படிக்கு,
உன் "புன்னகை".

நல்லவங்களை
உலகத்துல எந்த மூலையில
தேடினாலும்,
கிடைக்க மாட்டாங்க.
ஏன் தெரியுமா?
*
*
*
*
நான் வீட்டுல இருக்கேன்.
(நோ, நோ, அழப்படாது, .)

மழையிலும் உன் ஞாபகம்,
வெயிலிலும்   உன் ஞாபகம்,
போனமுறை என் வீட்டுக்கு
வந்தபோது கொண்டு சென்ற
என் குடையை திருப்பித் தாயேன் ப்ளீஸ்

வாழ்க்கை என்பது
மலைப்பாதை பயணத்தைப்போல்,
ஏறும்வரை  கடினமாக  இருக்கும்,.
எறியப்  பின்தான்  உணர்வோம்,
நாம் எவ்வளவு உயரத்தில் இருக்கிறோம் என்று.

பொறுமையிருந்தால் சல்லடையில்கூட
தண்ணீரை அள்ளலாம்.
அது பனிக்கட்டியாகும் வரைக் காத்திருந்தால்......,

ஒருப் பொண்ணு ரோடை தவறாக் கிராஸ் பண்ணால்
பார்த்துப் போம்மா என்பார்கள்.
அதுவே ஒரு பையன் கிராஸ் செஞ்சா
சாவுகிராக்கி என்பார்கள்.
என்ன கொடுமை சார் இது.

காசுக் கொடுத்து திட்டு வாங்கும்
பரிதாபமான ஜந்து எது?
 "மாணவர்கள்".

பிறந்த நாளன்று,
கணவன்: உன் பிறந்த  நாளுக்கு என்ன வேணும்டா செல்லம்?
மனைவி: ஒரு ரிங் கொடுங்க போதும்.
கணவன்: ஏர்செல் ல  இருந்தா? ஏர்டெல் ல இருந்தா?
                  இல்ல வோடபோனே ல இருந்தா?
மனைவி:!!!????

மனைவி: ஏங்க உங்க பிரண்டுக்கு பார்த்த பொண்ணு நல்லா இல்லீங்க.
அவருக்கு நீங்க எடுத்து சொல்லக்கூடாதா?
கணவர்: நான் ஏன் சொல்லணும். அவன் மட்டும் சொன்னானா?
மனைவி: ?????

மனைவி: நமக்கு கலியாணம் செய்து வைத்தாரே புரோகிதர்
அவர் அநியாயமா விபத்துல செத்துட்டாராம்.
கணவன்: பண்ண பாவமெல்லாம் சும்மா விடுமா என்ன?

பிரண்ட் 1 : டேய் மச்சான் .வெள்ளிக் கிழமை  எனக்குக் கல்யாணம்டா. நீ கண்டிப்பா வரணும்..
பிறந்த: 2 : நீ போ மாமா, உனக்கு ஒரு கஷ்டமினா, உன் பக்கத்துல நிக்குற முதல் ஆளு நாந்தான்.

தண்ணீர் குடிக்க
 மனம் வரவில்லை.
நினைப்பது நீயானால்.
நீடிக்கட்டும்
இன்னும் சில நிமிடங்கள்...., 
"விக்கல்"

நான் நினைக்கும்போதெல்லாம்,
உனக்கு விக்கல்
வருதென்றால்
இந்நேரம் நீ விக்கியே.....,
செத்திருப்பாய்.       
               

டவுட் தனபாலு

எனக்கு பல  சந்தேகங்கள். சந்தேகத்தை தீர்த்து வைப்போருக்கு விஜய் நடித்து வெளிவரவிருக்கும் காவல் காதல்  படத்தின்  முதல் காட்சியை என்னோடு சேர்ந்து, சிற்றுண்டியுடன் பார்க்கும் வாய்ப்பு.  உங்களுக்கு போனசாக ஒரு டசன் கைக்குட்டையும் .வழங்கப்படும். சரியான  பதில்  எழுதுவோரில் ஒருவர் மட்டும் குழுக்கள் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார். இந்த அரிய வாய்ப்பை தவறவிடாதீர்..,

 1.  விஜய் "நடித்த"  ஒரு  படம் சொல்லுங்கள்?
 2.  அஜீத் நடித்து ஹிட்டான படம் எது?
 3.  ஜெயலலிதாவுக்கு கொலை மிரட்டல் வராத நாள் எது?
 4.  சரத்குமார் கட்சியின் உறுப்பினர்கள் எத்தனைப் பேர்?
 5. கலைஞருக்கு   எப்போது  பணிநிறைவு விழா ?
 6. ஷங்கர் ஒரு படத்தையாவது குறுகிய பட்ஜெட்டில், ஓராண்டுக்குள் முடிப்பாரா?
 7. செல்வராகவன் புரியும்படி படம் எடுப்பார?
 8. கௌதம் மேனன் தமிழ் பேசும் தமிழ்  படம் எடுப்பாரா?
 9. மணிரத்தினம் வெளிச்சத்தில் படம் எடுப்பாரா?
 10. சினிமா நடிகர்கள், கிரிகெட் வீரர்கள், மனைவி, காதலி, மாணவர்கள், சாமியார்கள் இல்லாமல் ஒரு குறுஞ்செய்தி  இல்லை ஒரு வலைபூவோ?  இருக்குமா? 
 11. முற்றும் துறந்த முனிவர் யார்?
 12. கோட்டா ஸ்ரீனிவாசராவ் ஊமையாய் நடிப்பாரா?
 13. ரஜினிகாந்த் தாத்தா வேஷத்தில் லக்சுமியுடன்   ஜோடி சேர்ந்து நடிப்பாரா?                        

Monday, September 20, 2010

தலைமுறை

என் தாத்தா தோண்டும்போது
       நிறைய தங்கம் கிடைத்தது
               பூமியில்....,

என் அப்பா தோண்டும்போது    
        நிறைய தண்ணீர் கிடைத்தது
                 பூமியில்.....,

நான் தோண்டும்போது
       நிறைய பிளாஸ்டிக் பொருட்கள்  கிடைக்கிறது
                பூமியில்....,

என் மகன் தோண்டும்போது
       நிறைய எலும்புக் கூடுகள் கிடைக்குமா?
                      பூமியில்.....,
                      

வினோதங்கள்

உன்னோடு களித்த இனிய கிழமைகள்! !
        உன் நினைவில் நான் பைத்தியமானது !
நாம் பகிர்ந்துகொண்ட சந்தோஷங்கள்!
       அதிசயமாக எழுதிய கவிதைகள்1
ஆழமாக எழுதிய, எழுதாத  கடிதங்கள்!


தொலைப்பேசியில் பேசி களித்த பொழுதுகள் !
         முத்தங்களிலே மகிழ்ந்த கணங்கள் !
தூங்காமல் தூங்கிய இரவுகள்! !
      சேர்ந்து வாழ நினைத்த கனவுகள் !
பிரிந்திருந்தபோது துடித்த நிமிடங்கள்  !
      அடுத்து என்று உன் வருகை?
என்று ஏங்கிய நாட்கள் !!
       எல்லாமே எல்லாமே, இன்று என்னுள்
எங்கோ தொலைத்த வினோதங்கள்!!.


வாட பிறந்தவள்


என்னை பற்ற வைப்பது எளிது
தீக்குச்சி கூட தேவையில்லை!!
உன்னுடைய முடியாது..., என்ற
ஒரு வார்த்தைப் போதும்!!

 இப்போதும்..,
எரிந்துக் கொண்டுதான் இருக்கிறேன்..,
நீ முடியாது என்று சொன்னதால்!!

உன்னிடம் மன்றாடி கெஞ்சினேன், நீ
மறுத்ததை மறக்க முடியவில்லை.
கனவிலும் என் கன்னத்தில் தைத்தன,
முட்களாய் உன் முத்தங்கள்??!!!

நாம் ஒன்று சேரவில்லை..,
நம் காதலும் ஒன்று சேரவில்லை..,
சேரும் என்ற நம்பிக்கை போனதால்,
பிரிவோம் என்று நம்புகிறேன்.

அதாவது, சரியாக நிறைவேறட்டும்
பிரிவிலும் ஒரு இன்பம் உண்டாம்..,
அதையாவது.,
 அனுபவிக்க ஆசையாய் இருக்கிறது,

பிறந்த குழந்தைக்கு தெரியாது
தான் பிறந்திருப்பது!!  இறந்த
மனிதனுக்கு தெரியாது
தான் இறந்திருப்பது! அப்படித்தான்
எனக்கும்தெரியாது
"உன்னை பிரிந்திருப்பது"!?

என் நினைவுகளை, உன் தோட்டத்தில்
செடிகளோடு சேர்த்தே புதைத்துவிடு,
பூக்களில் என் வாசமும் இருக்கும்!
இரவுகளில் வரும் உன் கனவுகளில்
நான் உன்னோடு பேசலாம்,

வீசும் காற்றில் என் சுவாசமும்
கலந்து இருக்கும்!
கேட்கும் பாடலில் என் நினைவு வரலாம்...,

இப்படி நாம் பிரிந்தே இருந்தாலும்
சின்ன சின்ன நிகழ்வுகள் நடந்து
கொண்டுதான் இருக்கும்..,
உன்னையும் என்னையும் இணைத்து......!!!

இன்றும் நான் உன்னை தேடுகிறேன்!?
நீ இங்கே இல்லை.
நாம் பகிர்ந்து கொண்ட காதலும்,
இனிய முத்தங்களும் மட்டுமே இருக்கின்றது.

”வாழ பிறந்த என்னை...,
வாட பிறந்தவாளாக்கி விட்டாய்..,
Sunday, September 19, 2010

சொல்பேச்சுக் கேட்கும் பிள்ளை

மழை பெய்யும்போது
அதில் நனைந்து பார்
என் கண்ணீர்
துளிகள் அதில் கலந்திருக்கும்..,
உன்னை பிரிந்திருக்கும்
சோகம் எனக்கு
இப்போது இல்லை
தயவு செய்து
கனவில்
வருவதை மட்டும்
நிறுத்திவிடாதே.!இமைக்காமல் பார்க்கும் உன் கண்கள்
எனக்கு வேண்டும், என் உயிரை
எடுத்துக் கொள், உன் கண்ணில் நான்
இருக்கும்போது இந்த உடல் எதற்கு?


நான்  என்ன சொன்னாலும் நீ கேட்பாய்
என்று தெரியும். ஆனால் இந்த அளவிற்கு
கேட்பாய் என்று தெரியாது,ஏதோ
கோபத்தில் வாய் தவறி
என்னை மறந்துவிடு"
 என்று சொன்னால்,
 இப்படி ஒரேயடியாகவா 
மறந்து விடுவது????

குறுஞ்செய்தி

சுமைகளைக்  கண்டு
துவண்டு விடாதே
உலகத்தை  தாங்கும்
பூமியே
உன் காலடியில்தான்.

முள்ளின் திறமையைப் பார்
காலில் மிதித்தவனை
கையில் எடுக்க வைக்கிறது.
.
*வாழ்க்கையில் தன்னம்பிக்கை கொள்.Saturday, September 18, 2010

வேண்டுகோள்

அரியணையில் ஏற ஆசை இல்லை
வரலாற்றிலும் இடம் கேட்கவில்லை,
நான் கேட்பதெல்லாம்,
உன் மனத்திலும்,
உன் மடியிலும்
"சிறிது இடம்"

Friday, September 17, 2010

காதல் நெருப்பின் நடனம்

ஆபத்து நடந்திருக்குமோ என்றுகூட
அறிய முடியாத அச்சத்தில்
என்னை ஆழ்த்திவிட்டு
அனைத்துவிடுகிறாய்
உன் அலைப் பேசியைத்
திடீரென....,


கண்களில் கோபம் தேக்கி
வழக்கமான புன்னகையை
 வழங்காமல்
தெருமுனை வளைவில்
என்னைத் திரும்பிக்கூடப்
பார்க்காமால் போய்விடுகிறாய்
என் பொழுதுகளைச் சுக்கு நூறாய்ச்
சிதைத்துவிட்டு ....,

"தயவுசெய்து  என்னை
மறந்துவிடு" என்ற
செய்தி  கொண்டுவருகிறாய்
நீ அவ்வப்போது
கண்ணீரில் கலக்கி...,

சில சமயம்
"நீ இல்லாத உலகம்
கற்பனையில்கூடப்
பயமுறுத்துகிறது" என
அழுகிறாய் ஆரத்தழுவி...,

"உனக்காகத்தான்
இந்த ஜென்மம் எடுத்துருக்கிறேன்"
என்றும் உன்னால் கூறமுடிகிறது
உணர்ச்சிப் பொங்க...,

என்னை
ஒரு கொலை முயற்சியோடு
நீ துரத்திக் கொண்டிருப்பதாகப்
படுகிறது எனக்கு.
ஆனால்,
நீ காதல் என்கிறாய்!

நன்றி, 
ஆனந்தவிகடன்

Thursday, September 16, 2010

உன் வீடு உன்னை எப்படித் தாங்குகிறது?


உன் நினைவுகளை மட்டுமே
மனதில் சுமக்கும்....,
என் உடலே இந்தப் பாடுப்படுகிறதே..,

நீ உறங்க, பாட,
உணவருந்த, படிக்க,
விளையாட,குளிக்க
கோபப்பட, கொஞ்ச
என முழுதாய்
உன் வீடு, உன்னை எப்படித் தாங்குகிறது? 

           நன்றி,
கவிதையின் தலைப்பும், கருவும் தந்த
திரு.  தபு சங்கர் ஆர்களுக்கு. 

Wednesday, September 15, 2010

பொக்கிஷம்

நீ போட்டக் குப்பையெல்லாம்
என் வீட்டில் பொக்கிஷமாய்.
ஆனால்,
என் இதயமோ..,
உன் வீட்டுத் தெருவில்
குப்பையாய்.

நான் வேண்டும் வரங்கள்

தினம் தினம்  பௌர்ணமி நினைத்தவுடன் மழை,
கள்ளமில்லா சிரிப்பு,
தூய அன்பு,
சுகாதாரமான சூழல்,
ஆரோக்கியமான உடல்,
தூக்கத்தில் மரணம்.

குட்டி காதல் கதை

ஒரு ஊருல ஒரு கணவனும், மனைவியும் இருந்தாங்க.
இரண்டுப் பேருக்கும் ஒருத்தர் மேல ஒருத்தர் அன்புக் கொண்டவங்க.
அந்த கணவன் தினமும் அலுவலகம் விட்டு வரும்போது,
தன்னுடைய மனைவிக்கு பூ வாங்கி வருவார்.

ஒருநாள் இரவு அந்த கணவர் திடீர்னு இறந்துட்டார்..
மறுநாள் அவரை அடக்கம் பண்ணிட்டாங்க.
வழக்கமா அவர் அலுவலகம் விட்டு வீட்டுக்கு

எல்லாரும் அவரோட தினப்படி வழக்கத்தை நினைத்து  அழுதுகிட்டு இருக்காங்க.
அப்போ கதவைத் தட்டும் சத்தம் கேட்டு போய் கதவைத்  திறக்குறாங்க
அங்கே ஒரு பையன் வந்து பாட்டியம்மவைக் கூப்பிடுங்கனு சொல்றான்.
எல்லாரும் என்ன விஷயம் னு கேட்குறாங்க.
நேத்து தாத்தா வந்து இன்று இரவு நான் இறந்துவிடுவேன். நாளை மாலை  நான் பூ வாப்கி வராமல் என் மனைவி ஏமாந்துப் போகக் கூடாது. எனவே நீ தினமும் பூ குடுத்துட்டு வா னு சொல்லி பணம் குடுத்தார் னு சொல்றான்.

அதைக் கேட்டு உறவினர்களெல்லாம் இன்னமும் பெரிதாக  அழவே,
அந்தப் பையன் உள்ளப் போய் பார்க்குறான்,
அந்தப் பையனும் ஷாக்காகி நிக்குறான். அங்க, நடுக் கூடத்தில் அந்தப் பாட்டியம்மாவை  சடலமாக கிடத்தி இருக்காங்க.

 இதில் தன் மனைவி ஏமாந்துப் போய்விடக்கூடதுனு நினைத்த தாத்தாவின் காதல் உயர்ந்ததா?
இல்லை,
தன் இயல்பான வாழ்க்கை மாறியதை உணருமுன்பே இறந்த பாட்டியின் காதல் உயர்ந்ததா? 

கதையின் கருவுக்கு நன்றி,
குறுஞ்செய்தி
வரும் நேரம் நெருங்குது.

Tuesday, September 14, 2010

பிளேடுக் குடும்பம்

எத்தனை நாள்தான் கவிதையே சுட்டும் சுடாமல் பதிவையிடுவது.
இன்று வித்தியாசமாய் ஏதாவது பதிவிடலாம் என்று மண்டையை பிச்சுக்கிட்டு இருக்கும் போது (இருக்கும் நாலு முடியும் கொட்டிப் போச்சுனா) , எப்போவோ கேட்டு ரசித்த ஒரு கதை. இப்போ உங்களுக்காக...,

ஒரு ஊருல ஒரு அம்மா அப்பா.
அப்பா பேரு பிளேடு, அம்மா பேரு பிளேடு,பிளேடு.
அவங்களுக்கு இரண்டு  பையன்கள்.
 பெரியபையன் பேரு, பிளேடு,பிளேடு,பிளேடு,
சின்னப் பையன் பேரு பிளேடு,பிளேடு,பிளேடு,பிளேடு,

ஒரு நாள் அப்பா பிளேடு, ஷேவ்  செய்றதுக்காக பிளேடு பாக்கெட்டை எடுக்குறார்.அப்போ பிளேடு பாக்கெட்ல பிளேடு இல்லை. உடனே, பொண்டாட்டி பிளேடு, பிளேடை  கூப்பிட்டு, பெரிய பையன் பிளேடு,பிளேடு, பிளேடை பிளேடு கடைக்குப் போய், ஒரு பிளேடு பாக்கெட் வாங்கி வரச்  சொல்லுனு சொல்றார்.

பையன் பிளேடு,பிளேடு,பிளேடு,  பிளேடுக் கடைக்குப் போறான்.

அப்பா பிளேடு, ஷேவ் பண்ண பிளேடு பாக்கெட்ல, பிளேடு இல்லாமல் பிளேடுக்காக காத்திருக்கிறார். பையன் போய் ரொம்ப நேரமாச்சு..., பிளேடு இல்லாமால் அவருக்கு கோவம் வந்துச்சு. உடனே பொண்டாட்டி பிளேடு, பிளேடைக் கூப்பிட்டு பிளேடு இல்லாமல் நான் ஷேவ்  பண்ணாமல் இருக்கேன். பிளேடுக் கடைக்கு பிளேடு வாங்க போன பையன் பிளேடு, பிளேடு, பிளேடைக் காணோம். நீ போய் சின்னப் பையன் பிளேடு,பிளேடு,பிளேடு,பிளேடைக் கடைக்கு அனுப்பி, பிளேடுக் கடைக்குப் போன பிளேடு,பிளேடு,பிளேடைக் கூட்டிக்கிட்டு, பிளேடுக் கடையில பிளேடை  வாங்கிட்டு வரச் சொல்லுனு சொன்னார்.

உடனே அம்மா பிளேடு,பிளேடு, சின்னப் பையன் பிளேடு,பிளேடு, பிளேடு, பிளேடைக் கூப்பிட்டு அப்பா ஷேவ் பண்ண பிளேடு இல்லாமல் அண்ணா பிளேடு, பிளேடு பிளேடைக் கடைக்குப் போய் பிளேடு வாங்கிவரச் சொன்னார்.  அண்ணா பிளேடு, பிளேடு, பிளேடை ,  பிளேடு  வாங்கக் கடைக்குப் போய் பிளேடு வாங்கி வரச் சொன்னார். பிளேடுக் கடைக்குப் பிளேடு வாங்கப் போன அண்ணனை இன்னும் பிளேடோடக் காணோம் நீ பிளேடுக் கடைக்குப் போய் அண்ணா  பிளேடு, பிளேடு, பிளேடைக் கூப்பிட்டுக்கிட்டு, அப்பா பிளேடு ஷேவ் பண்ண பிளேடை வாங்கிக் கிட்டு, வாடானு சொன்னாங்க...,

ஐயோ, என்னாங்க கதையை முடிக்குறதுக்குள்ள எழுந்து ஓடுறீங்க.
சரி இன்னிக்குப்  போங்க. நாளைக்கு குருவியும், நெற்கலனும்  கதை சொல்றேன்.

Monday, September 13, 2010

ரசிக்கவைத்த வரிகள்

அன்பானவர்களுக்கு
 விட்டுக் கொடுங்கள்.
ஆனால்,
அவர்களை
விட்டுவிடாமல் இருங்கள்.

சின்னச் சின்ன விசயங்களில்தான்
"ஆனந்தம்" உள்ளது.
ஆனால்,
"ஆனந்தம்"என்பது
சின்ன விஷயமில்லை.

Friday, September 10, 2010

கடவுள் தந்த வரம்

நான் கேட்டுக் கடவுள்
கொடுக்காத வரம் நிறைய...,
ஆனால்,
நான் கேட்காமலே
கடவுள் தந்த வரம் "நீ".

ரசிக்க வைத்த வரிகள்

யாருமில்லாதவன் அனாதை அல்ல.
எல்லோரும் இருந்தும் யாருமற்றவனே
 "அனாதை".

புறக்கணிப்பைப் போல தண்டனை
வேறேதுமில்லை.

மறக்க நினைத்தாலும்,
நினைக்க மறக்காதே.

உன் வாழ்க்கை
உன் கையில்

பேசிக் கொள்ளமுடியாத
வலியைப் போல் வேறேதுமில்லை.

உண்மையான அன்புக்கேத்  தெரியும் உன் கண்ணீர்...,
நீ மழையில் நனைந்துக் கொண்டு அழுதாலும்....,
                 (சார்லி சாப்ளின்)

மீன்: நான் விடும் கண்ணீர் உனக்குத் தெரிவதில்லை....,
         ஏனெனில், நான் "உனக்குள்ளே" இருக்கிறேன்.
தண்ணீர்: உன் கண்ணீரை நான் உணர்கிறேன்....,
                 ஏனெனில், "எனக்குள் " நீ இருப்பதால்....,
                (குறுஞ்செய்தி)

இந்த உலகத்தில் நீயும் ஒருவன்.
ஆனால், யாரோ ஒருவருக்கு நீயே "உலகம்."

Wednesday, September 08, 2010

கடி ஜோக்ஸ்

மகன்: அப்பா, மழைக்கும், லஞ்சத்துக்கும் என்ன சம்பந்தம்?
அப்பா: ஒன்னுமில்லைடா.
மகன்: பின்ன ஏன் T.V.ல மழையால் மாமூல் வாழ்க்கைப் பாதிப்புன்னு சொன்னாங்க?
உனக்கு ஒன்னும் வருமானம் ஸ்டாப் ஆகலியே?

கணவன்: ஆசையேத்  துன்பத்துக்குக் காரணம்னு இப்ப நான் புரிஞ்சுக்கிட்டேன்.
நண்பர்:: எப்படிச் சொல்றீங்க ?
கணவன்: என் மனைவியை நான் ஆசைப் பட்டுத் தான்  கட்டிக்கிட்டேன்.


ஒரு சர்தார் வெளிநாட்டுக் கார் வாங்கினார். அதுல இஞ்சின் பின்னாடி இறுக்கும். அது அவருக்குத் தெரியாது. ஒருநாள் வண்டியை ஓட்டிக்கொண்டுப் போறார், அப்போ வண்டி நின்னுடுது. இறங்கி டிக்கியைத் திறந்துப் பார்க்கிறார். எஞ்சினைக்  காணோம். அவருக்கு ஒரே அதிர்ச்சி. அப்போ அதே மாடல் வண்டி ஒன்னு வந்து அவர் பக்கத்துல நின்னு, விசயத்தைக் கேள்விப்பட்ட , மற்றோர் சர்தார்ஜி தலையை வெளிய நீட்டி,
கவலைப்படாதீங்க.
என் டிக்கில இன்னோர் ஸ்பேர் இஞ்சின் இருக்கு"னு சொன்னார்.

 நன்றி
கூடல்.காம்

Tuesday, September 07, 2010

என் மகள் தூயாவின் வரிகள்

நின்றால் தொலைவில்...,
நடந்தால் அருகில்....,
இருக்கிறது "இலக்கு".....,

நேற்றை எருவாக்கு...,
இன்றை உருவாக்கு ...,

Monday, September 06, 2010

எது காதல் தெரியவில்லை?

என் தனிமையின்
போதெல்லாம்-நம்
இதழ் வருடிய வார்த்தைகளையே
அசைப்போடுகிறதே இதுதான் காதலா?

மற்றவர்கள் கேலியில் நீ
அகப்பட்டுக் கொண்டால்-என்
அகம் வதைப்படுகிறதே அதுதான் காதலா?

இமைகளின் இயக்கம்
நிறுத்தி-நீ
உலவும் இடங்களில்
உனையே தேடல்
கொள்கிறதே விழிகள்
இதுதான் காதலா?

அருகினில் நீ இல்லாதபோதும்
உன்னுடன் உறவாடி மகிழ்கின்றேனே
இதுதான் காதலா?

எனக்காக நீ தந்தவைத் தவிர்த்து
சுவாசக் காற்று உட்பட-நீ
வருடிய அனைத்தையும் சேகரிக்கின்றேனே
இதுதான் காதலா?

யார் கேட்டும் இல்லை என்ற  ஒன்றை
நீ கேட்க நினைக்கும்போதே
 கொடுக்கத் தோன்றுகிறதே
அதுதான் காதலா?

பிரிவுகள் நேரும்போது
ஏதோவோர் உணர்வு- நம்
விழிகளில் நீர் நிரப்பிச்  செல்கிறதே
அதுதான் காதலா?

ஊரே நம்முறவை
காதலென்றபோது
நீ மட்டும் மறுக்கிறாயே
நாங்கள் நண்பர்களென்று.....,

எது காதல் தெரியவில்லை
இந்நிகழ்வுகள் அனைத்தும்
நட்பிலும் சாத்தியமென்பதால்...,
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

நன்றிக் கடன்

ஒவ்வொரு நாளும்
ஓராயிரம் முறை
எழுதுகிறேன்....,
"இறைவா நன்றி
"இறைவா நன்றி"

இது எனக்குத் தரப்பட்ட
தண்டைனையல்ல...,

உன்னை எனக்குத் தந்த
அவனுக்கு
நான்  செய்யும்
நன்றிக்கடன்.....,

நேசம்

உன்னை-நான்
நேசிக்கும் அளவு
என்னை-நீ
நேசிக்க வேண்டாம்.

நீரை-வேர்
நேசிக்கும் அளவாவது
என்னை நீ நேசிக்க மாட்டாயா?

ஊணம்

கால் இல்லாமல்,
கை இல்லாமல்
உறுப்புகள் கோரப்பட்டு
மனுசங்க இருக்காங்க.
வயிறு  இல்லாத மனிதன்
இல்லவே இல்லை.


நன்றி:
சுயம்புலிங்கம் (கதாவிலாசம்)

Thursday, September 02, 2010

தனிமையுடன் வாழ்வு

ஆசையைக் காதலித்து,

குழப்பத்துடன்  மணமுடித்து,

ஏக்கத்துடன் முதலிரவு நடத்தி,

வெறுப்பை மகவாக ஈன்று,

தனிமையுடன் வாழ்க்கை நடத்துகிறேன்.

             நன்றி
      yezhuththu.com

மறுஜென்மம்

உன் கைவிரல் பிடித்து
ஊர் சுற்றவும்,
நித்தம் உன் மடியினில்
முகம் புதைக்கவும்,
உன் மார்பினில் உரிமையுடன் தலைசாய்த்து
அழவும், சிரிக்கவும்.........,
மறுஜென்மத்தில்
உன் மகளாகப் பிறந்துவர ஆசைப்படுகிறேன்.
ஆனால்,
அந்த உறவாக வரவாவது உன்னிடம் வந்து சேர
நீ தந்த திருட்டு முத்தம் என்னைத் தடுக்கின்றதே
என்ன செய்ய? 

விடைப்பெற

பிரிவென்றே உணராமல்
கையசைக்கும்
ரயில்பெட்டிக் குழந்தைகளின்
உற்சாகத்தைப் போல,
விடைப் பெற ஆசைப்படுகிறேன்.
இவ்வுலகிலிருந்து, இந்த உடலிலிருந்தும்...,,

என் நேசம் உன்னோடுதான்

நீயும் அழகன்தான்
ஆனால்,
உன்னைவிட அழகனை கண்டிருக்கிறேன்.

நீயும் அன்பானவன்தான் ,
ஆனால்,
உன்னைவிட அன்பானவனை உணர்ந்திருக்கிறேன்.

நீயும் குணவான்தான்
ஆனால்,
உன்னைவிட குணவான்களை சந்தித்திருக்கிறேன்.

ஆனால்,
நான் அவர்களை எல்லாம் நேசிக்காததன்
காரணம்?
அவர்களெல்லாம்
நீயில்லை என்பதால்.

ஆசையும் வெறுப்பும்

என் கல்லறைக்குப் பக்கத்திலும்கூட
அவளுக்கு கல்லறை எழுப்பிவிடாதீர்கள்
அங்காவது நான் நிம்மதியாய் இருக்க வேண்டும்.
நன்றி,
yezhuththu.com

என் கல்லறைக்குப் பக்கத்திலாவது
அவளுக்கு கல்லறை எழுப்புங்கள்.
அங்காவது என்னருகில் அவள் இருக்கட்டும்.
இது நான்

கோபத்தின் கோபம்

என் கோபங்கள் எல்லாம்
என்மீது கோபப்படுகின்றன..
உன்மீது நான்
கோபப்படுவதில்லையென........

தனிமை வேண்டும்

தனியே விடு,
என்னை தனியே விடு,
அழ வேண்டும் நான்,
என்னை தனியே விடு,

பெருஞ்சுமை நெஞ்சில் கனக்கிறது,
ஓர் பிரளயம் என்னுள் நடக்கிறது,
நெருஞ்சியின் மீது நடப்பதுப் போல,
என் நினைவுகள் என்னை வதைக்கின்றது.

உடம்பே வாயாய் அழவேண்டும்,
நான் "ஒ"வென்றலறி விழவேண்டும்.
வடிகால் தேவை.
இல்லையெனில் இவ்வ்வாரிதி என்னை விழுங்கிவிடும்.

ஊற்று மனற்கரைப் போல்
மனம் உருகி வழிந்திட வேண்டும்.
நீற்றுத் துகளெனத் துன்பம்
நீங்கிப் பொடிந்திட வேண்டும்.

வெந்த பசும்புண் போலே- இதயம்,
இந்த அழுகையின்றி மருத்துவத்தால் ஏதும் பயனுண்டோ?
தனியே விடு என்னை.
ஒற்றை சிறிய கிளை- முற்றி உடைந்த
பலாப் பழத்தைப் பற்றியே தாங்கிடுமோ?
தளைகளை விட்டு விடுபடவேண்டும்.
தாங்கும் சுமைகளை இறக்கிட வேண்டும்.

நன்றி,
iyarkai-kathalan.blogspot.com

தனிமை

பகிரப்படாதநேசம்
என்னைக் கொல்கிறது.


தனக்குத் தானேக்
கட்டிக்கொண்ட கைகளின் தனிமைப் போல

நன்றி,
திருமதி. தமிழச்சி தங்கபாண்டியன்

Wednesday, September 01, 2010

என் மரணம்

நாளை நான் இறந்துவிடுவேன்..,
எனக்கு பிடித்த முற்றத்து மல்லியும்,
வேலியோரத்து செவ்வரளியும்
வழமைப் போல் பூக்கும்
இதை நானறிய மாட்டேன்....,

மரண ஓலம் வீட்டை நிறைக்கும்,
இன்னார் என்று அழைத்ததுப் போய்
"பொணத்தை எப்போ எடுப்பாங்களாம்"
உறவினர்களின் அன்பான விசாரிப்புகள் தொடரும்,
இதையும் நானறிய மாட்டேன்....,

மாமரத்து உச்சியினில் கூடுகட்டி வாழும்
தூக்கனாங்குருவியும்
ஒருகணம் எட்டிப்பார்த்துவிட்டு செல்லும்.
பின்பு, மறந்துவிடும்.
உறவுகள் அழும்,
ஒன்று, இரண்டு, மூன்று மாதங்கள்....,
முழுதாய் ஓட
என்னை மறந்து, என் முகமும்
மறந்துவிடும்.
கொஞ்சம் கொஞ்சமாய்
சுவற்றில் சித்திரமாய்
என் படமும் ஏறிவிடும்.
இதையும் நானறிய மாட்டேன்..,

ஓர் வருடம் ஆகி விட்டாலோ,
எல்லோரும் என்னை மறந்து விடுவர்.

ஆனாலும்,
எனக்காக எங்கோ தொலைதூரத்தில் ஆத்மார்த்தமாய்
இதயத்தின் வழியெல்லாம்
ஒன்றுசேர,
ஒரேயொரு ஜீவன் மட்டும்
எப்பவும் எனக்காக,
ஊமையாய் அழுதுகொண்டு இருக்குமா?


- கவிதையின் கரு மட்டும் தந்த முகம்
தெரியாத நண்பருக்கு நன்றி

மரணத்தையும் தாண்டும் காதல்

விழி மூடும் மெல்லிசையில்
உதட்டோரப் புன்னகையில்
மென்மையாய் வருடிச் செல்லும்
உன் நினைவுகள்....,

என் மரணத்தோடு மடிந்துவிடுவதில்லை,
நம் காதல்.
என் மரணம் தாண்டியும் அது வாழும்..,

உன்னையும், என்னையும் போல்....,
எத்தனையோ ஜீவன்கள்....,
நிஜத்தையே காணமுடியாத
நிழல்களாய் போனாலும்,
நினைவுகளின் உயிர்குடித்தபடி
வாழ்வதால்தான்.......,
வாழ்கிறது
வாழ்வும்,உலகமும் .....,

ஒரே நிழல் ஒரே பாதச்சுவடு

அந்திவானம்
அலையில்லாக் கடலை அனைத்து
சிவப்பை பூசிக்கொள்ள
அதைக்கண்ட நானும் சிவந்தேன்
நீ அருகில் இருப்பதாலேயே..,

அசுர அலைகள் நடுவே
தத்தளிக்கும் படகாக நான்!
கருவண்டின் இருளில்
ஆழ்கடல் அமைதியாக நீ.
கண்ணீரால் உயர்த்துகிறது
கடல்மட்டத்தை படகு.

உன் வலையில் வலிய
சிக்கிய மீனாக நான் இருக்க,
என்னை வலையில் சிக்கிய
சிப்பிக்குள் முத்தாய்
நீ கருதினாயே

அன்று,
கடற்கரையில் நாம் இருவர் நடந்தும்
ஒரே பாதசுவடுதான்!!!!!!,
மாலை வெய்யிலில் நாம் இருவர் அமர்ந்திருந்தும்
ஒரே நிழல்தான்!!!!!

இன்றும்,

ஒரே பாதசுவடுதான்,
ஒரே நிழல்தான்!!
ஆனால்,
தனிமையில் நான்......,