Tuesday, August 31, 2010

விடையறியாக் கேள்வி?

நீ பயணித்த
அதே பேருந்தில்,
நானும் பயணித்து,
வீடு வந்து சேர்ந்து நெடு நேரமாகியும்,
என் கனவுகள் மட்டும் வீடு வந்து சேரவில்லை ...!!!!
யார் கண்டது??????
நீ கண்டு மீதம் வைத்துவிட்டுப் போன
கனவுகளுடன்(?)
இன்னும் அளவளாவிக்கொண்டிருக்கிறதோ? என்னவோ?

சிற்றின்பம்

சிர்ரின்பன் என்பது
சிறிய இன்பம்
என்று பொருள் படுவதில்லை,

அதற்காக,
எவ்வளவு சிறுமையும்
தாங்க வேண்டும்
என்றே பொருள் கொள்ள வேண்டும்.

எங்கோ படித்தது

Monday, August 30, 2010

என் உலகம்




















உன்னுள்ளே தொடங்கி,
உன்னுள்ளே முடிந்துவிடும்
என்னுலகமும் உருண்டைதான்.

Friday, August 27, 2010

நிழல் கவிதைகள்





கனாக்கால நாட்கள்
















குடைக்கு வெளியே குளிர் மழை..,
சத்தியத்தைத் தொலைத்துவிட்டு
மழைக்கு ஒதுங்கிய
அந்த சில நிமிடங்கள்...,

உள்ளே ,சில பார்வைகள்,
சில பரிமாறல்கள்,
சில கூட்டல்கள்,
சில கழித்தல்கள்...,

மழை நின்றது.....,
குடைக்கு இனி அவசியமில்லை.

நிமிடங்கள், மணிகளாயின......,
மணிகள், நாட்களாயின.....,
நாட்கள், வாரங்களாயின....,
வாரங்கள், மாதமாயின..,
மாதங்கள், வருடங்களாயின...,

ஆனாலும்,
மீண்டும் திரும்ப வரவேயில்லை
"அந்த சில நிமிடங்கள்"
ஆனாலும்,

அவ்வப்போது வந்து
நுரையீரல்களில் ஆக்சிஜன் நிரப்பிவிட்டு செல்லும்.
"அந்த சில நிமிடங்கள்"


போகட்டும்,

மீண்டும் வாழ்வில்
ஒருபோதும் திரும்ப வரவே வராத,
"அந்த கனாக் கால நாட்கள்"

Thursday, August 26, 2010

நிழலாய் போன நிஜக்கவிதைகள்

எங்கோ நெடுந்தூரம் அழைத்து செல்கிறாய்....,
கால் வலிக்குது என்கிறேன் நான்,
ஆழ்ந்தப் பார்வை பார்த்துவிட்டு
என் கைப் பிடித்துக் கொள் என்கிறாய்.
உற்சாகத்தோடு நடந்தேன் "உயிருள்ளக் கவிதையாய்"

யாரும் அறியாதபோது சட்டென்று இழுத்து
உதட்டோடு உதடு பொருத்தி என் உயிர்த் தேடலை
முடித்து வைத்தது உ(எ)ன் முத்தம்.
திருப்தியாக நடந்தேன் "இனிய கவிதையாய் ".....,

நீதான் முக்கியம் என்று நீ உரைத்தப் போது
கர்வத்தோடு நடந்தேன்
"உற்சாகமான கவிதையாய்"? ....,

அனால்,
என் இத்தனை நிஜக்கவிதைகளும்
"அவளைப் போல் நீ வரமுடியுமா?
என்று கேட்ட ஒரு கேள்வியில்
"நிழலாய்" போய்விட்டது.....,