Thursday, February 15, 2018

பயந்து ஒதுங்கி மறைந்து செல்ல வேண்டியவளா ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி?! - மயான கொள்ளை

பெரும்பாலும் அங்காளம்மன் அல்லது அங்காளபரமேஸ்வரி வழிபாடு  கடலூர்விழுப்புரம்பாண்டிச்சேரி, ஆற்காடுமதுரைதிருச்சிகோயம்புத்தூர் மாவட்டங்களில் காணப்படும் ஒரு வழிபாட்டுச் சடங்கே மயானக்கொள்ளை ஆகும். இதற்கு, மயானத்தில் நிகழ்த்தப்படும் கொள்ளை” என்று பொருள்படும். ஆனால், “கொள்ளை” என்பது திருட்டு” என்ற  அர்த்தம் கொள்ளாமல் தீயதை அழித்து நல்லவைகளை நிலைநாட்டுவதாய பொருள் கொள்ளவேண்டும்.
வந்தவாசியில் நடைப்பெற்ற மயானக்கொள்ளை திருவிழா...

மாசி மகாசிவராத்திரி அன்று நன்பகலில் நிகழ்ச்சி தொடங்குகிறது. அன்றிரவு  இறந்த பிணங்களின் சாம்பல்மண் ஆகியவற்றால் அல்லது மீட்டர் நீளமுள்ள அம்மன் (பார்வதி) படுத்திருப்பதுபோல் உருவமொன்று அழகுற செய்யப்படுகிறது. அன்று மாலை பூவால் செய்யப்பட்ட கரகம் சோடித்துஇரவு முழுவதும் அம்மன் ஊர்வலம் நடைப்பெறுகிறது. பின்னர் விடியற்காலையில் மயானத்திற்குச் சென்று அம்மனுக்குக் கண் திறந்து பம்பைக்காரர்கள் பாடல் பாடுவர். காலையில் பூசாரி பதினாறு கைகள் கொண்ட அம்மனை அலங்கரித்து சிம்ம வாகனத்தில் ஏற்றுவர். காளி வேடமிட்டு கொண்டு நேர்த்திக் கடன் வேண்டியவர்கள் ஆடி வருவார்கள்.


 குறிப்பிட்ட குலத்தை சார்ந்த ஆண் ஒருவருக்கு புடவை கட்டிமுகத்தில் சிகப்பு வண்ணம் பூசி, அனைத்து ஆபரணங்களும் சூட்டி, நீண்ட முடியுடன் அம்மனாய் உருவகப்படுத்துவார்கள்.  அவர்களுள் ஒருவர் ஆட்டு ஈரலை வாயில் கவ்வி கையில் தீச்சட்டி ஏந்தி வருவார். சேவல் பலிபூசைஊர்வலம்முடிந்த பிறகு பூசாரி ஒப்பனை செய்துகொண்டு படுத்திருக்கும் அம்மன் தலைமீது ஆவேசமுற்று விழுவார்.அப்போது அங்கு கூடியிருக்கும் மக்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த தங்கள் வீடு, கழனிகளில் விளைந்த காய்கறிகளை வீசுவர்.. உடல்நிலை சரியில்லாதபோது வேண்டிக்கொண்டதற்கிணங்க பாதிக்கப்பட்டு சீரான உடல் பாகங்களின் உருவங்களை அரிசி மாவில் செய்து வீசுவர். குழந்தை வேண்டி வரம் பெற்றவர்கள் குழந்தை உருவம் செய்து வீசுவர். அதை முந்தானையில் பிடித்து குழந்த வரம் வேண்டுவோர் சாப்பிட்டால் குழந்தை வரம் கிடைக்கும் என்பது ஐதீகம். பின்னர் உருவாக்கியிருக்கும் அம்மன் மீதிருக்கும் மஞ்சள், குங்குமம். சாம்பல்மண் போன்றவற்றைச் சண்டை போட்டுக் கொண்டு மக்கள் கொள்ளையடிக்கிறார்கள். பூசாரி அம்மன் தலை மீது விழுந்தவுடன் அம்மன் உருவம் சிதைக்கப்படுகிறது.

அப்போது அம்மன் உருவத்தின்மீதிருந்து எடுக்கப்படும் மண், மஞ்சள், குங்குமம் சாம்பல் ஆகியவைகள் தீயசக்திகளையும்நோய்களையும் விரட்டும் ஆற்றல் வாய்ந்தது.  அதனை நிலத்தில் புதைத்தால் நல்ல விளைச்சல் உண்டாகும். அதனை பூசாரி திருநீறு போல் மக்களுக்கு வழங்குவர்.மயான கொள்ளை” நிகழ்ச்சியின்போது பம்பைகாரர்கள் பாடல் இசைப்பார்கள். 
ஆற்காடு நகரத்தின் மயான கொள்ளை திருவிழா..

கேரளத்திலும்கேரளத்தையொட்டிய குமரி மாவட்டத்தின் சில பகுதிகளில் நிகழ்த்தப்படும் அம்மன் கோயில்களில் களமொத்தும் பாட்டும்” என்ற நிகழ்ச்சி மயான கொள்ளையோடு தொடர்புடையதாகக் கருதப்படுகிறது. களமொத்து பாட்டு அம்மன் உருவத்தைத் தரையில் வரைந்து வண்ணம் தீட்டி பாடல் பாடியும் களச்சித்திரம் அழிக்கப்படும்.குமரி மாவட்டத்தில் நாயர் சமூகத்தினரால் நிகழ்த்தப்படும் இந்த நிகழ்ச்சி நம்பூதிரி அல்லது பிராமணரால் பூசை செய்யப்படுகிறது. நம்பூதிரிதான் தரைச்சித்திரத்தை அழிப்பார். கால் பகுதியிலிருந்து சித்திரம் அழிக்கப்படுகிறது. மார்புப் பகுதியில் இருக்கும் அரிசி திருமலை பிரசாதம்” என நம்பப்படுகிறது.இந்த அரிசியில் ஒன்றிரண்டை கஞ்சி வைத்து குடித்தால் குழந்தை பெற்ற பெண்களுக்குப் பால் சுரக்கும் என நம்பப்படுகிறது. சிதைக்கப்பட்ட ஓவியத்திலிருந்து எடுக்கப்படும் வண்ணப்பொடிகள் பிரசாதமாக வழங்கப்படுகின்றன. பேய்பிசாசுகளை விரட்டும் ஆற்றல் வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது.மயான கொள்ளை நிகழ்த்துதலில் காளிஅங்காளம்மன்காட்டேரிபேய்ச்சி போன்ற பல வேடங்கள் போடப்படுகின்றன. வேடம் ஏற்பவர் பம்பை இசைக்கேற்ப ஆடுகிறார். பம்பைகாரர்கள் பாடும் பாடலும்ஆடலும் சிறப்பிடம் பெறும். ஆயினும் இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் மயான கொள்ளை என்னும் வழிபாட்டு நிகழ்ச்சியின் சடங்குகளாக நிகழ்த்தப்படுகின்றன.
வரலாற்றுரீதியாக பார்க்கும்பொழுது, தாட்சாயணி அவதாரத்தில் தட்சனின் மகளாய் அவதரித்து, தந்தயின் சொல்பேச்சை மீறி சிவனை கைப்பிடித்ததால் கடுன்கோபத்துக்கு ஆளானாள். தான் நடத்தும் மகா யாகத்துக்கு சிவனுக்கு முறையாய் அழைப்பு அனுப்பாமலும், சிவனுக்குரிய அவிர்பாகத்தையும் தராததால் தந்தையை கண்டிக்க யாகத்துக்கு வந்த தாட்சாயனி, தந்தையை சமாதானப்படுத்த முடியாமல்... சிவனுக்கு தன் உயிரையே அவிர்பாகமாய் அளிக்க,  யாக குண்டத்தில் விழுந்து உயிரை விட்டாள்.
அம்பிகையின் உயிரற்ற  உடலைத் தூக்கிக்கொண்டு ஈரேழுலகத்தையும் சுற்றி வந்ததை காண சகியாத மகா விஷ்ணு தன் சுதர்ஷண சக்கரத்தை ஏவி தாட்சாயணி உடலை துண்டாடினார். அப்படி  அறுந்து விழுந்த அம்பிகையின் உடல் பாகங்கள் சக்தி பீடங்களாய் முளைத்தன. துண்டாய் விழுந்த அம்பிகையின் வலக்கையின் புஜம் விழுந்த இடம் மேல்மலையனூர் என்று கூறப்படுகிறது. இதையே தண்டகாரண்யம் என்றும் சொல்கின்றனர். அப்படி அம்மனின் உடல் உறுப்புகள் விழுந்த இடங்கள் அனைத்துமே மகிமை பொருந்தியதோடு அல்லாமல் அம்பிகையில் உடலே பீஜாக்ஷரங்களால் ஆனது என்பதால் ஒவ்வொரு எழுத்துக்கும் ஒவ்வொரு சக்தி பீடமும் உருவானது. அங்காளியே இப்படிக் கோயில் கொண்டாள் என்றும் இந்த மேல் மலையனூரே ஆதி சக்தி பீடம் என்றும் கூறுகின்றனர்.
 சண்டிமுண்டிவீரிவேதாளிசாமுண்டிபைரவிபத்ரகாளிஎண்டோளிதாரகாரிஅமைச்சிஅமைச்சாரிபெரியாயிஆயிமகாமாயிஅங்காயிமாகாளிதிரிசூலிகாமாட்சிமீனாக்ஷிஅருளாட்சிஅம்பிகைவிசாலாக்ஷிஅகிலாண்டேசுவரி என்ற பெயரில் எண்ணற்ற சக்திபீட தேவதையாக  அன்னை விளங்குகின்றாள். ஈசனைப் போலவே தனக்கும் ஐந்து முகங்கள் இருப்பதால் தானும் பெரியவன் என்று வீண் கர்வம் கொண்ட பிரம்மாவின் ஐந்தாவது சிரசை ஈசன் கிள்ளி எறிய  சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக்கொண்டது. கிள்ளி எறிந்த சிரசின் மண்டை ஓடு ஈசன் கையை விட்டு அகலாமல் கையிலேயே ஒட்டிக்கொண்டது. ஒட்டிக்கொண்ட மண்டை ஓட்டில் அம்பிகையானவள் பிச்சை இட்டு அந்த பிச்சைய ஏற்கும்போது எந்த ஊரில் மண்டை ஓடு அகலுமோ அங்கே பிரம்மஹத்தி தோஷமும் நீங்கும் என்று புரிந்த ஈசன் ஒவ்வொரு ஊராக ஒவ்வொரு சுடுகாட்டுக்கும் சென்று கபாலத்தில் பிச்சை வாங்கிச் சுற்றி அலைந்து திரிந்து கடைசியாக இந்த தண்டகாரண்யம் என்னும் மேல்மலையனூருக்கு வருகிறான்.


அன்னையானவள் சுவை மிகுந்த உணவை தயாரித்து சிவனுக்கு பிச்சை இடத்தயரானாள். முதல் கவளத்தை சிவனின் கையிலிருந்த மண்டை ஓடு உண்டது. இரண்டாவது கவளத்தை வேண்டுமென்றே தவறவிட்டாள் அன்னை. உணவின் ருசியால் ஈர்க்கப்பட்ட மண்டை ஓடு உணவை சுவைக்க வேண்டி சிவனின் கையிலிருந்து நழுவியது..  மீண்டும் அக்கபாலம் இறைவனின் கைகளில் ஏறாமல் இருக்க அன்னையானவள் தன் கையிலிருந்த மிச்ச உணவை வானை நோக்கி இறைத்தாள்.  கபாலமும் உணவுக்காக வான் நோக்கி சென்றது.  அப்படி வான் நோக்கி பறந்த கபாலத்தை விஸ்வரூபமெடுத்து தன் கால்களால் பூமியில் அழுத்திகொண்டாள்.

அப்படி சிவனின் பிரம்மஹத்தி தோசம் நீங்கிய நாள் மாசி மாத அமாவாசை தினம். அதன் நினைவாகவே இன்றும் மயான கொள்ளை நடத்தப்படுது. சிவன் கையிலிருந்து கீழே இறங்கிய கபாலம் சூரையைச் சாப்பிடும்போது சிவன் அங்கிருந்து தாண்டித் தாண்டி ஓடிதாண்டவேஸ்வரர் ஆக அந்த ஊரிலேயே அமர்ந்தார். அதன் பின்னரே அவர் அங்கிருந்து சிதம்பரம் சென்று ஸ்படிக லிங்கமாக அமர்ந்தார் என அங்காளம்மன் கோயில் வரலாறு கூறுகிறது.மாசி மாதம் சிவராத்திரிக்கு மறுநாள் அமாவாசை. அங்காளியானவள் அன்று தன்னுடைய பூரண வலுவோடும்பலத்தோடும் இருப்பாள். .இப்படிபட்ட சிறப்பு வாய்ந்த அங்காளபரமேஸ்வரி அம்மனுக்கு மிகவும் முக்கியமான ஒரு விசேஷம் மயான கொள்ளை. மாசி அமாவாசையில் அங்காளம்மனுக்கு மயான கொள்ளை ஒரு தனி சிறப்பு.  

மேல்மலையனுரில் இத்திருவிழா பத்து நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது . இந்த மயானக் கொள்ளை  தினத்தன்று அங்காளி கோப வடிவினளாக அலங்கரிக்கப்பட்டு (ஒரு பக்தர் இவ்விதம் அலங்கரிக்கப்படுவார்) கையில் முறம் ஒன்றில் அவல், பொரி, கடலையுடன், ஆட்டு நுரையீரல் ஒன்றும் அங்காளம்மன் வாயில் வைத்தபடி ஊர்வலமாக அழைத்து வரப்படுவார். இந்த அங்காளம்மனைச் சூழ்ந்து பூத கணங்களாக கருப்பு சேலை அணிந்த பூதங்கள் போல வேடம் தரித்து கூத்தாடியபடி ஊர்வலத்தில் கலந்து வருவர். அப்போது அங்காளம்மனுக்கும், அவரது பேய் பூத கணங்களுக்கும் பக்தர்கள் காணிக்கை செலுத்தி விழுந்து வணங்குவார்கள்.


 பிரம்மனின் தலையை தன் காலால் மிதித்து சிவனை பிரம்மஹத்தி தோஷத்திலிருந்து விடுவிவிக்க விஸ்வரூபமெடுத்த ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி உக்கரம் அடைகிறாள். எனவே அம்மனை சாந்திபடுத்தவே எலுமிச்சை மாலையும், வேப்பிலை மாலை உடை சார்த்தியும், ஒவ்வொரு  அமாவாசை நள்ளிரவில் அம்மனை ஊஞ்சலில் அமரவைத்து தாலாட்டு பாடல்கள் பாடியும் அம்மனை சாந்தப்படுத்தகின்றனர். அன்றைக்கு அம்மனைக் காணவரும் பக்கதர்களுக்கு அம்மன் அருள் பூர்ணமாக கிடைப்பதாக நம்பப்படுகிறது..
 மேல்மலையனூர் மாதாந்திர ஊஞ்சல் உற்சவம்.....

ஆடி வருகிறாள் அங்காளி சீறி வருகிறாள்.. ஆனந்தமாய் நடனமிட்டு ஓடி வருகிறாள்..

அங்காளபரமேஸ்வரி அம்மன் என்று சொன்ன மாத்திரத்திலேயே பலரும் கூறுவது அவள் மயான தேவதை., அவள் ஆவேசக்காரி., மாந்திரீக தேவதை என்ற கருத்துக்கள் பலருக்கு உண்டாகும்.  ஆனால் அக்கருத்து முற்றிலும் தவறு. அங்காளம்மன் என்ற அம்பிகை எண்ணற்ற மக்களுக்கு குலதெய்வமாவாள். சக்தி ஸ்தலம் என்று அறியப்படுவதை விட குலதெய்வ ஸ்தலமாகவே பலரால் வழிப்படப்படுகிறது, என் அம்மா வீட்டுக்கும் இதான் குலதெய்வம். எனக்கு முதல் மொட்டை அடித்தது இங்கதான். அம்மன் அருளால் இன்னிய வரைக்கும் மொட்டை அடிப்பது தொடர்ந்துக்கிட்டுதான் இருக்கு:-( இவள் பார்வதி தேவியின் அம்சம்.


ஆதி சோதிவேத பார்வதி அங்காளவள்ளி, 
ஆனந்த நடன குணவதி மலையனூராள், 
ஆதியாகி சோதியானவள் அங்காளவள்ளி, 
அண்டமாகி பிண்டமானவள் மலையனூராள், 
அக்குமணி கைக்கபாலமும் அங்காளவள்ளி, 
அரவமாலை பூண்டதேவதா மலையனூராள், 
சித்தாங்கம் தரித்த தேவதா அங்காளவள்ளி, 
சிவனாரோடாடும் தேவதா மலையனூராள்,, 
கஞ்சன்மண்டை கரத்திலாடவே அங்காளவள்ளி, 
கஞ்சுளி தோளிலாடவே மலையனூராள்,,,, 
பார்ப்பான் மண்டை கரத்திலாடவே அங்காளவள்ளி,, 
பார்த்த பேய்கள் அலறி ஆடவே மலையனூராள்,, 
பூதராக்ஷத முனிகளாடவே அங்காளவள்ளி,, 
பூங்காவன அழகு ஆடவே மலையனூராள்,, 
அழகு சிங்க முதுகிலேறியே அங்காளவள்ளி,, 
அங்கமுத்து நடனம் கொண்டாளாம் மலையனூராள்,, 
வேகாத சுடலை தேடியே அங்காளவள்ளி, 
வேதாந்தி நடனங் கொண்டாளாம் மலையனூராள்,, 
மாண்டவர் எலும்பை பூண்டவளாம் அங்காளவள்ளி,, 
மானிலத்தில் பூசை கொண்டாளாம் மலையனூராள்,
 ஓம்சக்தி ஆதி அங்காளபரமேஸ்வரி திருவடி போற்றி! போற்றி!
 ஓம்சக்தி அங்காளி போற்றி போற்றி!!

பக்தி பரவசத்துடன்...
ராஜி.

Friday, February 09, 2018

ஆலயங்களின் அதிசயங்கள் பாகம் 1 - புண்ணியம் தேடி

ஒவ்வொரு ஆலயத்தாலும் பல அதிசயங்கள் நடந்திருக்கு.  மனக்குழப்பத்துக்கு இதமளிக்க, கேட்ட வரம் கிடைக்க, பிள்ளை வரம், நோய் நொடி குணமாக, பணம், பதவி,  பிள்ளைக்கு கல்வி, நல்ல வாழ்க்கைத்துணைன்னு மக்களின் வேண்டுகோளை நிறைவேற்றும் அதிசயக்கோவில் எத்தனை எத்தனையோ இருக்கு. எது எப்படியாயினும் கேட்டதை கேட்டபடி கொடுப்பதில் எல்லா கோவிலுக்கும் ஒற்றுமை உண்டு. ஆனா, சில கோவில்களில் மட்டுமே நடக்கும் அதிசயம்ன்னு சிலது இருக்கு. அவைகளில் சிலவற்றை இப்பதிவில் பார்ப்போம்...


திருவண்ணாமலை வாழ் அருணாச்சலேஸ்வரர்   எப்போதுமே ராஜக்கோபுரம் வழியா வெளிய  வர மாட்டார்.  பக்கத்து வாசல் வழியாகத்தான் வெளியே வருவார். கும்பகோணத்துக்கு பக்கத்திலிருக்கும்  திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோவிலில் தயாராகும் எந்த நைவேத்தியப் பண்டங்களுக்கும் உப்பு சேர்ப்பதில்லை. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் பெருமாள் கோவில்களில் கொடுப்பதுபோல் தீர்த்தம் கொடுக்கிறார்கள். வேறு எந்த சிவன் கோவிலிலும் இதுமாதிரி தீர்த்தம் கொடுப்பதில்லை. பொதுவா, அபிஷேக ஆராதனைக்கு கருவறையிலிருக்கும் மூலவருக்கும், வீதி உலா, தேரோட்டம், தீர்த்தவாரி மாதிரியான கோவிலுக்கு வெளியே நடக்கும் வைபவங்களுக்கு உற்சவர்ன்னு தனித்தனியே இருப்பாங்க. ஆனா,  மூலவரே வீதிவலம் வருவது சிதம்பரம் நடராஜர் கோவிலில் மட்டுமே நடக்கும்.  சிதம்பரம் ஆலயத்தில் ஒரே இடத்தில் நின்றபடி, ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளையும், ஸ்ரீ நடராஜரையும் கண்டு தரிசிக்கலாம்.  சைவர்களுக்குரிய திருவாதிரையும், வைணவர்களுக்குரிய வைகுண்ட ஏகாதசியும் ஒரே மாதத்தில் ஒரே திருக்கோயிலில் நடைபெறுவது சிதம்பரத்தில் மட்டுமே!
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் மொத்தம் 14 கோபுரங்கள் இருக்கும். வேறு எந்த கோவிலிலும் இவ்வளவு அதிகமான கோபுரங்கள் இல்லை.  மதுரை அருள்மிகு ஸ்ரீமீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள பொற்றாமரைக் குளத்தில் மீன்கள் வளராது.  காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் அம்மனுக்கென தனி சன்னிதி இல்லை. பொதுவா, பெருமாளின் இடக்கையில்தான் சங்கு இருக்கும். அதுமாதிரிதான் எல்லா கோவில்கலிலும் அப்படிதான் அருள்புரிவார். ஆனா, திருக்கோவிலூரில் மட்டும் வலது கையில் சங்கு வைத்துக்கொண்டு காட்சி தருகின்றார் உலகளந்த பெருமாள். 


கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே இருக்கும் கேரளபுரத்தில் சிவபெருமானுக்கு கோயில் உள்ளது. இங்கு அரச மரத்தடியில் நிறம் மாறும் அதிசய விநாயகர் இருக்கிறார். ஆவணி மாதத்திலிருந்து ஆறு மாதங்கள் வெள்ளை நிறமாகவும், மாசி மாதத்திலிருந்து ஆறு மாதங்கள் கறுப்பாகவும் மாறி விடுகிறார். இப்படி நிறம் மாற காரணம் அபூர்வமான சந்திரகாந்த கல்லினால் உருவானது. இது சுயம்பு மூர்த்தமாகும். அதுமட்டுமில்லாம, நாளுக்கு நாள் இந்த சிலை வளர்ந்து வருதுன்னும் சொல்றாங்க.

காசியில் பல்லிகள் இருந்தாலும் அவை கத்துவதில்லை.  காசி நகரைச் சுற்றி 45 கல் எல்லை வரை கருடன் பறப்பதில்லை. இங்கு பிணங்களை எரித்தால் கெட்ட வாசனை வராது.   குளித்தலை, மணப்பாறை வழியில் இருப்பது ஐவர் மலை என்ற ரத்தினகிரி மலை உள்ளது. இம்மலையின் மேல் காகங்கள் பறப்பதில்லை. அதேமாதிரி , ரத்னகிரி மலையில் இருக்கும் முருகனுக்கு அபிஷேகம் செய்யும் பால் சிறிது நேரத்தில் தயிராக மாறும் அதிசயமும் நடக்குது. ஈரோட்டுக்கு அருகில் இருக்கும் சென்னிமலை முருகனுக்கு அபிஷேகம் செய்யும் தயிர் புளிப்பதில்லை.


இமயமலைச் சாரலில் இருக்கும் திருத்தலங்களில் ஒன்று பத்ரிநாத். மே மாதத்தின் முதல் வாரம் நடைதிறப்பார்கள். நவம்பர் மாதம் முதல் வாரத்தில் மூடுவார்கள். நவம்பரில் கோயிலை மூடும்போது ஒரு தீபம் ஏற்றுவார்கள். அந்த தீபம் மீண்டும் கோயில் திறக்கப்படும்வரை அதாவது, ஆறுமாதம் எரிந்துகொண்டே இருக்கும். ஆழ்வார்குறிச்சியில் நடராஜர் சிலை ஒரே கல்லினால் ஆனது. ஆனா, அச்சிலையை தட்டினால் வெண்கல ஓசை வரும்.  மதுரைக்கருகே இருக்கும் பழமுதிர்சோலைக்கருகே இருக்கும் ராக்காயி கோவிலிலிருக்கும் ஒரு துவாரத்தில் மெல்லியதாக தண்ணி வந்து கொண்டே இருக்கும். ஆனா அது எங்கிருந்து வருதுன்னு எத்தனை ஆராய்ச்சி செஞ்சும் கண்டுப்பிடிக்க முடில.  

சமயபுரம் ஸ்ரீமாரியம்மன் உட்கார்ந்த கோலத்தில் மிகப்பெரிய திருமேனி. இவ்வளவு பெரிய ரூபமுள்ள அம்பிகை வேறு எந்த கர்பக்கிரகத்திலும் இல்லை. இத்திருமேனி சில மூலிகைகளால் ஆக்கப்பட்டது.தேனி மாவட்டம் தெப்பம்பட்டியில் உள்ள வேலப்பர் கோவிலில் உள்ள மூலவர் சுயம்பு மூர்த்தி. இந்தக் கோவில் அருகில் உள்ள மாமரத்தின் அடியில் இருந்து ஊற்று நீர் பொங்கி வந்து கொண்டேயிருக்கிறது.

இதுமாதிரி, நிறைய கோவில்களில் நமக்கு புரியாத, தெரியாத அதிசயங்கள் இருக்கு. என்னதான் இனிப்புன்னாலும் அதிகமாச்சுன்னா திகட்டும்.  பதிவின் நீளம் கருதி அடுத்தடுத்த பதிவில் பார்க்கலாம்...


ஆன்மீக பதிவர் ராஜேஸ்வரி அம்மாவின் இரண்டாவது நினைவு நாள் இன்று. அவர் வழியில் என் பதிவுகள்....  எத்தனை எத்தனை பக்தி பதிவுகள்?!  அதனால், தெய்வீக பதிவர்ன்னு அழைக்கப்பட்டவர்... இன்று தெய்வமாகவே ஆகிவிட்டார். அம்மாவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்... 

ஆலய அதிசயங்கள் இன்னமும் வரும்...

நன்றியுடன்,
ராஜி. 

Thursday, February 08, 2018

கோவிலும் கும்பாபிஷேகம்கோவில் இல்லா ஊரில் குடி இருக்க வேணாம்ன்னு முதுமொழி. அதனாலதான்  எல்லா ஊரிலும்  சின்னதும் பெருசுமா கோவில் இருக்கு. இருக்குற கோவில் பத்தாதுன்னு புதுசு, புதுசா கோவில் உருவாகிக்கிட்டிருக்கு.  நாம வீடு கட்டும்போது,  போக்குவரத்து, தண்ணி, காத்து, வெளிச்சம், சத்தம், மார்க்கெட், பள்ளி, ஹாஸ்பிட்டல்.....ன்னு எத்தனையோ  பார்த்து, பார்த்து கட்டுறோம். அதிகபட்சம் முப்பது வருசம் இருக்கப்போற வீட்டுக்கே இத்தனை பார்க்குறோமே! உலகையே காக்கும் இறைவனுக்கு வசிப்பிடமா இருந்து தலைமுறைகள் பல கடந்து நிலைச்சு நிற்கப்போகும் கோவில் கட்டும்போது எத்தனை விசயம் பார்க்கனும்?! அந்த விசயங்கள் என்னென்னன்னு இன்னிக்கு பதிவில் பார்க்கலாம்....


கோயிலின் அமைப்பு:
கோயில் என்பது மனித உடலிலுள்ள தத்துவ ஆதாரத்திற்கு ஏற்றபடி கோயில் கட்டப்பட வேண்டுமென ஆகமங்கள் தெரிவிக்கின்றன.


கோபுர அமைப்பு:
ஆலய நுழை வாயிலில் நம்மை வரவேற்பது இராஜ கோபுரம். இராஜ கோபுரத்தை ஸ்துல லிங்கம் எ‎‎‎‎ன்று கூட கூறுவார்கள். ஆலயத்தி‎ன் உள் இருக்கும் கோபுரங்கள் எல்லாம் உயர்ந்திருக்கும். இப்படி உயர்ந்து இருப்பதால், நெடுந்தூரத்திற்கு அப்பால் இருந்தும் கோபுரத்தை காணலாம். கோபுரத்தையே தெய்வ சொரூபமாக எண்ணி வணங்குவார்கள். தூரத்தில் ‏ இருப்பவர்களுக்கும் இறைவனி‎ன் நினைவு கூறவே கோபுரம் அமைக்கப்பெற்றது. கோபுரத்தின் தளங்கள், கோபுர நிலைகள் என்று அழைக்கப்படும்.
கருவறை சிறியதாகவும், கோயில்களின் மையப்பகுதியிலும் அமையும். கருவறைக்கு முன்பாக அர்த்த மண்டபம், அதற்கு முன்பாக ஸ்தபன மண்டபம், அதற்கும் வெளியே மகா மண்டபம் ஆகியன காணப்படும். உள்ளிருக்கும் பிரதான தெய்வத்தைப் பொறுத்து வாகனம் இடம் பெறும்.ஒரே கோயில், ஒன்றுக்கு மேற்பட்ட சந்நிதிகள் இருக்கலாம். ஆனாலும் மூலஸ்தானம் என்பது பிரதான தெய்வத்தின கருவறைக்கு வழங்கப்படும். மூலஸ்தானக் கருவறையும், பிற சந்நிதிகளையும் தனித்தனியாக வலம் வரும் அமைப்பு இருக்கலாம்.இராஜகோபுரத்தி‎‎ன் கோட்பாடுகள்:
எல்லா கோபுரஙகளிலும் உயரமானது இராஜ கோபுரம். கருவறையின் மீது அமைக்கப்படும் சிகரம், விமானம் எனப்படும். எண்கோண வடிவத்தைக் கொண்தாகவே இவை அமைக்கப்படுகின்றன. இராஜ கோபுரத்தி‎‎ன் அருகில் செ‎‎‎‎‎‎ன்‎று அத‎ன் அமைப்பைக் கவனித்தால் சில அதியசங்களைக் காணலாம். கோபுரத்தில் கணக்கற்ற சிறிய, பெரிய சுதையிலான சிற்ப வடிவங்களைக் காணலாம். அவற்றுள் மா‎னிட வடிவங்களையும் காணலாம். ‏இறைவனி‎ன் திருவிளையாடல்கள், அற்புதம் நிகழ்த்திய காட்சிகள், தேவர்கள், விலங்குகள், பறவைகள், ஏனைய சிற்றுயிர்கள் அதில் ‏ இடம் பெற்று‏ இருக்கும். பிரபஞ்ச அமைப்பில் ‏இவைகளுக்கும் இடமுண்டு எ‎ன்பது கோட்பாடுகள்.
சிற்றுயிர்கள், பேருயிர்கள், விலங்கினம், மக்கள் ‏இனம், தேவர் கூட்டம் ஆகிய எல்லோரும் பிரபஞ்சத்தில் ‏இருக்கிறார்கள், அண்டத்தினுள் ‏ இ‎‎ன்‎னது ‏இருக்கிறது எ‎‎‎‎ன்று எல்லாப் படித்தரங்களிலும் உள்ள அனைத்தும் அங்கு ‏ இடம் பெற்றிருக்கும். ‏இக்கோட்பாட்டை ‏ இராஜகோபுரம் உருவகப்படுத்தி விளக்குகிறது. இயற்கையி‎‎ன் நடைமுறையி‎ன் புறச்சி‎‎ன்‎னமாகப் பெரிய கோபுரம் அமைந்திருக்கிறது எ‎‎ன்றால் ‏ இயற்கையில் ‏உள்ளவைகளை எல்லாம் அத‎‎ன் மூலம் விளக்கம் பெற்றுள்ளன.தத்துவங்களுக்குக் கோபுர வாயில்:
‏இராஜ கோபுரத்தி‎ன் வாயில்கள் பொதுவாக ஒற்றைப்படை எண்ணில் அமைந்திருக்கும். மூ‎‎‎ன்று, ‏ஐந்து, ஏழு, ஒ‎‎ன்பது, பதினெ‎ன்று எ‎‎ன்ற நிலையில் கோபுரம் வாயில் அமைந்திருக்கும்.அத்தகைய வாயில் தத்துவத்துக்கு விளக்கம் ‏இருக்கிறது.மூ‎ன்று வாயில் உள்ள இராஜ கோபுர ‏இடத்துக்கு ஜாக்கிரத, சொப்பன, சு ஷுப்தி எ‎ன்னும் மூ‎‎‎ன்று அவஸ்தைகளை அவை குறிக்கி‎ற‎ன. ஐந்து வாயில்கள் உள்ள ‏இடத்து ஐம்பொறிகளை அவை பெறுகி‎‎‎‎ன்ற‎ன. ஏழு வாயில் உள்ள ‏இடத்து மனம், புத்தி எ‎‎னும் ‏இ‎ன்னும் ‏‏இரண்டு தத்துவங்கள் சேர்க்கப் பெறுகி‎‎‎‎ன்ற‎ன. ஒ‎‎ன்பது வாயில் உள்ள ‏இடத்து சித்தம் அகங்காரம் எனும் ‏இன்னும் இரண்டு தத்துவங்கள் சேருகி‎‎ன்ற‎ன.‏ இப்படி நம்முடைய அமைப்பில் உள்ள வெவ்வேறு தத்துவங்களுக்குக் கோபுர வாயில் சி‎‎ன்‎னங்களாக அமைந்திருக்கி‎ன்றன.

யோகியின் உடலமைப்புப் போலவே கோயில் அமைப்பு:
ஒரு யோகியின் உடலமைப்புப் போலவே கோயில் அமைப்பு காணப்படுகிறது. மனிதனுடைய உடலமைப்பை ஆதாரமாகக் கொண்டே திருக்கோவில்கள் கட்டப்பட்டு, வழிபாட்டுக்கு உரிய அமைப்பாக மதிக்கப்படுகின்றன.

கொடிக்கம்பம்:
கொடிக்கம்பம் உள்ளிருக்கும் தெய்வத்தையும், தெய்வத்தை வணங்குவதால், உண்டாகும் மகிழ்ச்சியையும் சுட்டுகிறது. கொடிமரத்துக்குக் கீழ் வாகனம் இருக்கும்; இது ஆன்மாவைச் சுட்டு; ஆன்மாவான வாகனம் தெய்வத்தைப் பார்த்தபடி காணப்படும்.
குண்டலினி சக்தி உறங்கிக் கிடக்கும் மூலாதாரமே கொடி மரமாகச் சித்திரிக்கப்பட்டு, ஸ்தாபிதம் செய்யப்பட்டுள்ளது. கொடி மரத்தில் காணப்படும் 32 வளையங்கள், மனித உடலின் முதுகுத் தண்டிலுள்ள 32 எலும்புகளைக் குறிப்பதாகும். மேலும் மனிதனுடைய முப்பத்து இரண்டாவது வயதில்தான் அறிவுப் பல் முளைக்கிறது.

கருவறை:
கோயிலின் மையப்பகுதியாக உள்ள கருவறையில், தெய்வ திருமேனி இருக்கும். கருவறை, மனித இதயத்தைக் குறிப்பதாகும். கருவறையில் இருப்பது போல், இறைவன் இதயத்தில் இருக்க வேண்டும். கோவில்களும், கோயில் கட்டுமானமும் வளர்ச்சி பெறப் பெற, கலை, பண்பாடு, வாழ்வியல் ஆகிய பல்வேறு துறைகளும் கோயில்களோடு இணைக்கப்பட்டுள்ளன.
எண்ணங்களின் பிறப்பிடமாக விளங்கும் கொப்புள் ஸ்தானத்தில் சிவனுடைய வாயிற் காப்போனாகிய நந்தியைப் பிரஷ்டை செய்வதன் மூலம் எண்ணங்களை அடக்கி, மனதினைத் தூய்மைப்படுத்த வேண்டும் என்பது உணர்த்தப்படுகிறது. கர்ப்பக்கிரகம் அல்லது மூலஸ்தானத்தைப் பிரம்ம கபால உருவில் அமைப்பது வழக்கம். புருவ மத்தியில் ஆக்ஞா சக்கரத்தில் ஆன்ம நேய ஒருமைப்பாடு ஏற்படும் பொழுது ஆன்ம ஒளி ஏற்படும் என்பதைக் குறிக்கவே லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
ஞானிகள், முனிவர்கள், சித்தர்கள் சிறந்த கோயில்களையும், அதில் தெய்வ திருவுருவச் சிலைகளையும் ஏற்படுத்தும் முறைகளை வகுத்துக் கொடுத்து, கோயில் திசை நான்கிலும் விண்ணை முட்டும் பெரிய கோபுரங்களை நிர்மாணித்து அவற்றின் சக்தியால் உயிர்கள் நல்ல முறையில் வாழும் அமைப்பை ஏற்படுத்தி கொடுத்தார்கள்.
கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம். ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்ற முன்னோர்களின் பொன் மொழிகள் இதன் பயன் கருதி கூறியவை.

கோபுர தரிசனம் கோடி புண்ணியம்:
ஆகம விதிப்படி கோயில் நிர்மாணித்து, அபிஷேகிக்கப்பட்டு, காலம் தவறாது புணர் கும்பாபிஷேகம் செய்யப்பட்டு வழிபாடு நடந்து கொண்டிருக்கிற கோயில்களில் உள்ள கோபுரங்களின் மேல் தங்கத்தாலும், செம்பினாலும் செய்யப்பட்ட கலசங்கள் தனது கூரிய முனை வழியாக ஆகாயத்தில் உள்ள உயிர் சக்தி என்று அழைக்கப்படும் பிராண சக்தியைக் கிரகித்து வெளிவிடுகிறது. அந்த சக்தியை நம் உடல் பெறுவதால் புத்துணர்ச்சி, புது உணர்வு, உள்ளத் தூய்மை, ஆன்மீக ஈர்ப்பு, நோயின்மை, நோய் எதிர்ப்பு சக்தி அடைகிறோம். இதனால்தான் கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று நம் முன்னோர்கள் கூறினர்.

பிராண சக்தி :
கர்ப்பக்கிரக கோபுரத்தின் மேல் வைக்கப்பட்டுள்ள கலசங்கள் அதே போல் பிராண சக்தியை கிரகித்து கலசத்தின் நேர் கீழே உள்ள இறை பீடத்திற்கு இடையறாது அனுப்பி கொண்டிருக்கிறது. இந்த சக்தி பீடத்தின் அடியில் உள்ள தங்கத்தாலும், வெள்ளியினாலும் செய்யப்பட்ட மந்திர சக்கரங்கள், யந்திரங்கள் தன்பால் இழுத்து தான் அமையப் பெற்றிருக்கும் தன்மைக்கு ஏற்ப பீடத்தின் மேல் தன் சக்தியை வெளிப்படுக்கிறது.
இந்த பிராண சக்தியின் அளவை மேலை நாட்டு விஞ்ஞானி போவிஸ் கண்டு பிடித்துள்ளார். இதிலிருந்து வெளிப்படும் சக்தியை (14 ஆயிரம் உயிர் சக்தி) நம் உடலில் உள்ள உயிர் அணுக்களை தாக்க இயலாது. எனவே தான் பீடத்தின் மேல் அமைக்கப்பட்டுள்ள திருவுருவச் சிலை அந்த சக்தியை பிரித்து ஒன்பது முனைகள் வழியாக வெளியேற செய்கிறது. அந்த சக்தி கர்ப்பக்கிரத்தின் வாயில் வழியாக வெளியே வருகிறது. அப்போது அங்கு இறைவனை வணங்கி கொண்டுள்ள நம் மீது படுகிறது. இதனால் நமக்கு ஆன்மீக உணர்வு, புத்துணர்வு, புத்துணர்ச்சியை ஏற்படுத்தி நம்முள்ள கவலைகள், பிரச்சனைகள், உடல் நோய்களைப் போக்கி ஆனந்தத்தை கொடுக்கிறது.
கர்ப்பக்கிரத்தில் கிழக்கு அல்லது வடக்கு திசைகளில் நீர் செல்லும் பொருட்டு ஓர் துவாரம் அமைக்கப்பட்டு இருக்கும். இந்த துவாரத்தின் வழியே செல்லும் நீரிலும் பிராண சக்தி கலந்து வெளிப்படுகிறது. அங்கு அமைக்கப்பட்டுள்ள சதுர வடிவ தொட்டியில் விழும் நீரைக் கோயிலை வலம் வரும் நாம் எடுத்து கண்ணிலும், சிரசிலும் ஒற்றிக் கொள்கிறோம். அந்த சில நிமிடங்களில் நம் மீது பிராண சக்தி பரவுகிறது.

விஞ்ஞானத்தின் அடிப்படை :
இந்த பிராண சக்தி வெளிப்பட்டு கொண்டு இருப்பதால் தான் சிலையின் குறுக்கே செல்லக்கூடாது. சிலையின் பக்கவாட்டில்தான் செல்ல வேண்டும். சிலையை விட்டு விலகி நிற்பதுடன், அபிஷேகம் செய்யும் போது கைகள் சிலைக்கு மேல் செல்லக் கூடாது. ஒரு காலை வெளியிலும், மறுகாலை கர்ப்பக்கிரத்தின் வாயிலும் வைக்ககூடாது. கர்ப்பக்கிரகத்திற்குள் இரும்பாலான எந்த பொருளையும் பயன்படுத்த கூடாது என முன்னோர்கள் விஞ்ஞானத்தின் அடிப்படையில்தான் கூறியுள்ளனர்.

தமிழ் நாட்டு கோயில்களில் சித்தர்கள் சமாதி: 
சித்தர்கள் சமாதி அடைந்த கோயில்களில் இந்த இறைவுணர்வும், ஈர்ப்பு சக்தியும் அதிகமிருப்பதை நாம் உணரமுடியும்.
நம் மனதில் கோபம், ஆக்ரோஷம், குழப்பம், கவலை, ஆகியவை எழும் போது நம் உடலைச் சுற்றி உள்ள அலைகள் 14 ஹெர்ட்ஸ்க்கு மேல் இருக்கும். இதனை பீட்டா அலைகள் என கூறுகின்றனர். நாம் ஓய்வெடுக்கும் போது (ஆழ்ந்த தூக்கத்தின் போது) உடலை சுற்றி உள்ள அலைகள் 14 ஹெர்ட்ஸ்க்கு கீழே இருக்கும். அந்த அலைகளை ஆல்பா அலைகள் என கூறுகின்றனர். அதே உடல் தியான நிலையில் இருக்கும் போது எட்டு ஹெர்ட்ஸ்க்கு கீழே இருக்கும். இதனைத் தீட்டா அலைகள் என்கிறார்கள் விஞ்ஞானிகள். தவ நிலையில் உள்ள சித்தர்களின் உடலில் இருந்து வெளிப்பட்டு கொண்டே இருக்கும். 

பலி பீடம்:
பலி பீடம் என்பது இங்கு உயிர் பலி கொடுக்கப்படும் இடமல்ல. நம் மனதுள் நமக்கு தெரியாது ஒளிந்திருக்கும் காமம், ஆசை, குரோதம், லோபம், மோகம், பேராசை, மத, மாச்சர்யம் எனும் எட்டு தீய குணங்களையும் பலி கொடுக்க உறுதி செய்துக்கொள்ளுமிடம். வெறுமனே வீழ்ந்து வணங்குவதால் ந‎லன் ஒன்றும் வந்துவிடாது. வீழ்ந்து வணங்கும்போது தனது கீழான இயல்புகளெல்லாம் அந்த ‏ இடத்திலே பலி கொடுக்கவேண்டும். ம‎னிதனிடத்துள்ள கீழ்மையெல்லாம் அங்கு பலியிட வேண்டும்.மனதின் ஆணவம் பலியிடப்படுகிறது. மேலான எண்ணங்கள் மட்டும் எஞ்சியிருக்க வேண்டும்.
ஆண்கள் இங்கு தலை, கையிரண்டு, இருசெவிகள், இரு முழங்கால், மார்பு, ஆகிய உறுப்புகள் பூமியில் படும்படி அஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும். பெண்கள் தலை, இரண்டு முழங்கால், மார்பு, என நமஸ்காரம் செய்ய வேண்டும். அவ்வாறு கீழே வீழ்ந்து வணங்கும் போது வடக்கு பக்கம் தலை வைத்து வணங்க 


சில தெய்வங்களைத் தவிரப் பெரும்பாலும் அருள்மிகு பெருந்தெய்வங்களுக்கு ஆலயத்தை ஊரின் நடுப்பாகமாகிய பிரம்ம பாகத்தில் அமைத்தல் வேண்டும். இத்தகைய ஆலயம் 2 முதல் 5 வரை சுற்றுப் பிராகாரங்களுடனும் நான்கு கோபுர வாயில்களுடனும், நடுவில் விமானங்களுடனும் அமைத்தல் வேண்டுமெனச் சைவ ஆகமங்கள் விரிவாகக் கூறுகின்றன.
நிலத்தை முறைப்படி சோதனை செய்து சல்யோத்தாரம் செய்வது நல்லது. பூமியை 25 அடி ஆழம் வெட்டி மண்ணை அப்புறப்படுத்திவிட்டு, ஓடு, கல், மயிர், எலும்பு முதலிய பொருள்களை நீக்கித் தூய்மையான மணலால் நிரப்பி அழுத்திவிட வேண்டும். மலைக்கோயில் கட்டுவதெனின் வேறுவகை அணுகுமுறையைப் பின்பற்றுவர்.
2.2.2 சாத்திர முறை
கட்டடம் கட்ட நிர்ணயித்த இடத்தில் இட்டிகைத் தாபனம், அஃதாவது நான்கு செங்கற்களைத் தேர்ந்தெடுத்துப் பூசை செய்து, ஒமம் வளர்த்துத் தெய்வ நலச் சிந்தனையுடன் குறிப்பிட்ட இடத்தில் நிறுவ வேண்டும். பிறகு கருப்பநியாசம் தேவையாகும்.
 கருப்பநியாசம்
திருக்கோயிலில் மூல மூர்த்தியை நிறுவக்கூடிய இடத்திலும், கோபுரங்களில் கால்கள் நிறுத்துமிடத்திலும், சபைகள் திருமடங்கள் என இருப்பின் அவற்றின் ஈசான்ய பாகத்திலும், விமானங்களில் ஸ்தூபியின் அடிப்பாகத்திலும், விமானங்களில் ஸ்தூபியின் அடிப்பாகத்திலும் கருப்பநியாசம் புரிதல் வேண்டும்.
 உபபீடம் அமைத்தல்
கருவறையில் அதிட்டானம் அமைப்பதற்கு வசதியாக உபபீடம் அமைத்தல் தேவைப்படும்.
குறிப்பிட்ட இடத்தில் திருக்கோயிலின் பிராசாதம் 24 அங்குலம் என்ற அளவையினால் 20-30-50 அளவுள்ள அகல நீளமுள்ளது உத்தம பிராசாதம்; அதே அளவையினால் 10-12-16 அளவுள்ளது மத்திம பிராசாதம்; அதே அளவையினால் 7-8-9 அளவுள்ளது அதமப் பிராசாதம் ஆகும். சரியான அளவுடன் அப்படி நிர்ணயம் செய்த பிராசாதத்தின் அடிப்பரப்பை 25 பாகம் செய்து 9 பங்கில் கருப்ப கிருகமும், 16 பங்கினைச் சுற்றுச் சுவரைக் கனமாக அமைக்கப் பயன்படுத்துதல் வேண்டும்.
லிங்கத்தின் அளவைக் கொண்டு பிராசாதம் அமைக்குங்கால் மகாலிங்கத்தின் சுற்றளவு 3 கொண்டது பீடமாகும். அந்தப் பீடத்தின் அளவு 3 பங்கு கொண்டது கருப்ப கிருக அகலமாகும். கருப்ப கிருக அளவில் மூன்றில் ஒரு பங்கு சுற்றுச் சுவராகும். அப்படி நிர்ணயம் செய்த பிராசாத கருப்ப கிருக அளவை 8 பாகம் செய்து, ஒரு பங்கு சேர்த்துக் கொண்டு உபபீடம் அமைக்க வேண்டும். உபபீடத்தின் உயரமும் அகலத்தின் எட்டில் ஒரு பாகமாக இருத்தல் வேண்டும். இந்த உபபீடம் ஸ்ரீகரம், லலிதம், பத்ரம் என மூன்று வகைப்படும்.
 அதிட்டானம் அல்லது பிராசாதம்
ஆலயத்தில் பெருஞ் சிறப்பினைக் கொள்ளும் பாகம் கருவறையாகும். அந்தக் கருவறைக்கு அதிட்டானமே தோற்றப் பொலிவைத் தர அடிப்படையாக விளங்குவது.
உபபீடத்தின் மேலே அதிட்டானம் அமையும்; அது விமானத்தின் கீழ்ப்பக்கம் வியாளம் என்ற வர்க்கம் வரையுள்ளது.
2.2.3 தத்துவ நோக்கு
உலக வரலாற்றை நோக்கும்போது கிரேக்கர்கள் கோயிற் பண்பாடுஎன்பதனை வளர்த்துப் பெருமை கொண்டனர்; அவர்களைப் போலவே தமிழ்ப் பெருமக்கள் கோயிற் பண்பாட்டை உருவாக்கிக்காட்டிப் பெருமை கொண்டுள்ளனர்.
கோயில் என்றதும் மக்கள் தம் அகத்தே உணர்ந்த - அனுபவித்த - அழகனுபவத்தை ஆகம முறைப்படி புறத்தே புலப்படுத்திய கவின் கலைப்படைப்பு எனலாம். ஆனால், அதற்கு மேலும் சிந்திக்க வேண்டிய நுண்குறிப்பு உண்டு; அது அறிவியலுக்கும் அருளியலுக்கும் பொருந்தி வரக்கூடியதே.
மானுடவுடம்பு ஐம்பூதங்களின் சேர்க்கையால் அமையப் பெற்றது என்பதை எல்லோரும் ஒப்புக் கொள்வர். இந்த அடிப்படையில் ஒவ்வொரு கோயிலும் (உடம்பையொத்து அமைக்கப்படுவதால்) ஐம்பூதங்களின் கூட்டுறவுப் பரிணாமத்தை ஒருவகையில் புலப்படுத்தும் கலைப்படைப்பாகும்.
ஒவ்வொரு கோயிலின் உறுப்புகளாக அமைந்துள்ள கற்கள் (கட்டடமும் சிற்பமும்) ‘நிலத்தைக் குறிக்கும்; கோயில் தீர்த்தமாகவுள்ள திருக்குளம் கிணறு முதலியவை ‘நீர்’ எனும் பூதத்தைக் குறிக்கும் . அவற்றுடன் (கருப்பூரச்சுடர் உள்ளிட்ட) ஒளி விளக்குகள் ‘தீ’ எனும் பூதமாகும். இங்கு ஒரு நுட்பக்குறிப்பு உண்டு; ஒளிவிளக்கு நம் கண்ணுக்குப் புலப்படினும், சுடரொளியை வழங்கத் துணை நிற்பது ‘காற்று’ எனும் பூதமாகும். ஐம்பூதங்களே மக்களுக்குப் பரம்பொருளை நினைவுபடுத்தும் வகையில் கூட்டுறவு கொண்டு எழும்பியதே கோயில் என்பது தெரியவரும். சுருங்கக் கூறின், எங்கும் நிறைந்த பரம்பொருளை நினைக்கும் முறையில், ஐம்புலப்பாட்டுக்கு ஏற்ற வண்ணம் ஆலயத்தின் கோபுரம், விமானம், மண்டபம், தூண், சுவர், தீர்த்தம் என்றெல்லாம் ஆகம அடிப்படையில் வெளிப்படுத்திக் கொண்டுள்ளது எனலாம்.

15. நவக்கிரகப் பிரதிஷ்டை கோவிலில் வடகிழக்குப் பகுதியில்தான் அமைய வேண்டும் என்று சிற்ப சாஸ்திரம் கூறுகிறது.