Wednesday, January 30, 2013

சின்ன வயசுல நான் இப்படித்தான் இருந்தேனாக்கும்!! ..,

                       

சின்ன பிள்ளையா இருக்கும்போது அழகா இருப்பேன். ப்ளீஸ் பேச்சு பேச்சாதான் இருக்கனும். ஏன், கல்லுலாம் தேடுறீங்க?! சரி சுமாரா இருந்தாலும் அறிவா இருப்பேன்..., ப்ளீஸ், இதையாவது ஒத்துக்கோங்களேன்!!! எப்ப பாரு எதாவது யோசனை பண்ண்கிக்கிட்டே இருப்பேனாம். வருங்காலத்துல பிளாக் எழுதுவேன்னு எனக்கு அப்பவே தெரிஞ்சிருக்கு. அதான் அப்பத்திலிருந்து பதிவை தேத்த யோசனை பண்ணிக்கிட்டு இருந்திருகேன்.

அப்படி என்னதான் என் மண்டைக்குள்ள பல்ப் எறிஞ்சுச்சுன்னு நீங்க தெரிஞ்சுக்க வேணாம்??! அதுக்குதான் இந்த பதிவு...,

1. பென்சில் சீவி வரும் தூளை “சாதம் வடிச்ச கஞ்சி”ல ஊற வெச்சா அழி ரப்பர் வரும்ன்னு நினைச்சுப்பேன்!!??

”2.  சூட்டு கொட்டையை” சூடு பறக்க தேய்ச்சு, பக்கத்துல உக்காந்து இருக்குற புள்ளைங்க தொடையில வெச்சு ரசிச்சு சிரிப்பேன்!!

3. வேப்பங்கொட்டை ஓட்டினை  ரெண்டா உடைச்சு கை விரல் முட்டில வெச்சு ஓங்கி அடிச்சு ரத்தம் வர வெச்சு வீரம் காட்டுவேன்!!??

4. சினிமா தியேட்டர்ல வெட்டி வீசியெரிஞ்ச ஃபிலிமை காசு குடுத்து வாங்கி வந்து, பியூஸ் போன பல்புல தண்ணி நிரப்பி வெளிச்சம் பாய்ச்சி தாத்தாவுக்கு தெரியாம அவர் வேட்டியை கொண்டு வந்து திரையாக்கி படம் காட்டி அலட்டிக்குவேனாக்கும்!!??

5. வாத்தியார் அடிக்குறதுக்காக தினம் ஒரு புது குச்சி உடைச்சு வர்ற பக்கத்து கிளாஸ் பையனுக்கு வாந்தி, பேதி வரனும்ன்னு எல்லையம்மனுக்கு காசு வெட்டி போட்டிருக்கேன்!!??

6. சைக்கிள் கடையில் கிடைக்குற வாஷர்களை கொண்டு போய் பாணியர் காலத்து “ஓட்டை காலணா”ன்னு சீன் போட்டிருக்கேன்!!??

7. ஆத்துல மிதக்குற தலை பிரட்டையை  “மீனு”ன்னு நம்பி வீட்டு கிணத்துல கொண்டு வந்து நிரப்பி கிணத்தை நாசம் பண்ணி செம மாத்து வாங்கியிருக்கேன்!!??

8. நுங்கு சாப்பிட்டு மிச்சம் இருக்குற பனங்கா ஓட்டுல வண்டி செஞ்சு அமெரிக்கா, ஜப்பான்லாம் விசா இல்லாம போய் வந்திருக்கேன்!!??

9. கொட்டான்குச்சியில் நிரப்பி சுட்ட மணல் இட்டிலியும்,  கருவேல இலையில் அரைத்து வைத்த சட்டினியும் பசி போக்கியது அப்போது!!??

10.கண்ணாடி போட்டிருக்குறவங்கலாம் அறிவாளிங்கன்னு நம்பி..., வீட்டுல தலை வலிக்குதுன்னு பொய் சொல்லி கண்ணாடி போட்டுக்கிடு தடுக்கி விழுந்திருக்கேன்!!??

11. குரைக்குற நாய் கடிக்காதுன்னு நம்பி அதுங்கிட்ட வீரத்தை காட்டி கடிப்பட்டிருக்கேன்??!!

12.தீப்பெட்டியில் கயிறு கட்டி டெலிபோனா நினைச்சு, அண்டார்டிக்கா, ஆப்பிரிக்காக்குலாம் பேசினேன்??!!

13. தண்டவாளத்துல சில்லறை காசை வெச்சு அதன் மேல ரயில் ஏறி இறங்குனா, அந்த சில்லறை காசு காந்தமா மாறிடும்ன்னு நம்பி இருக்கேன்??!!

14. குலத்தெய்வத்துக்கு நேர்ந்துக்கிட்டு அம்மா சேர்த்து வெச்ச சாமி உண்டியல்ல இருந்து காசை சுட்டுக்கிட்டு (காசு சேர்ந்ததும் டபுள் மடங்கா போடுறதா சாமிக்கிட்ட சின்ன ஒப்பந்தம் போட்டுக்கிட்டுதான்) போயி கம்ர்கட் வாங்கி தின்னது!!??

15. லெட்டர்லாம் தபால்ல போடாம பாம்புக்கிட்டயும் லெட்டர் குடுத்தனுப்பலாம்ன்னு இராம. நாராயணன் படத்தை பார்த்து தெரிஞ்சுக்கிட்டேன்.

Tuesday, January 29, 2013

சக பதிவர்கள் கொண்டாடிய பொங்கல் திருவிழா

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை சமீபத்துலதான் நாம கொண்டாடினோம். பிரபல பதிவர்கள்லாம் அவங்கவங்க வீட்டுல எப்படி கொண்டாடுனாங்கன்னு பதிவா போட்டு இருப்பாங்க. நீங்களும் படிச்சு, பார்த்து ஆஹா, ஓஹோன்னு கமெண்ட் போட்டுட்டு வந்திருப்பீங்க. அதுலாம் பதிவுக்காக கொஞ்சம் மிகைப்படுத்தி இருக்கும்.

அதனால, நம்ம சக பதிவர்கள்லாம் நிஜமாவே எப்படி அவங்க  வீட்டுல எப்படி பொங்கல் கொண்டாடினாங்கன்னு கொஞ்சம் கஷ்டப்பட்டு தகவல் சேகரிச்சதால கொஞ்சம் லேட்டாகிட்டுது.., சாரி..., இனி ஒவ்வொரு பதிவரும் அவங்க வீட்டுல எப்படி கொண்டாடினாங்கன்னு அவங்கவங்க குடும்பத்தார்கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கிட்டது...,


”மின்னல் வரிகள்” கணேஷ் அண்ணா வீட்டில்...,
சரிதா: ஏங்க! பொங்கல் வைக்க டைம் ஆகிட்டுது. எல்லாம் ரெடி.., அடுப்பை  பத்த வச்சு பொங்க பானை வெக்கலாம். வாங்கன்னு கூப்பிட்டா அங்க என்னத்தை தேடுறீங்க?! ஏங்க! ஏங்க!
கணேஷ் அண்ணா: நீ பட்டுப் புடவைக்கும், தங்க வளையலுக்கும் ஏங்குறது தெரிஞ்சும் கண்டுக்காமத்தானே இருக்கேன்..

சரிதா:  நான் கரடியா கத்துறது உங்க காதுல விழலியா?!

கணேஷ் அண்ணா: எனக்கு கரடி பாசைலாம் தெரிஞ்சா நான் ஏன் இங்க இருக்கேன். சர்க்கஸ்ல போய் ரிங்க் மாஸ்டராகி நல்லா சம்பாதிச்சு இருப்பேனே!

சரிதா: என்னாது அங்க முணுமுணுப்பு??!! 

கணேஷ் அண்ணா: ஒண்ணுமில்லம்மா! சாண்டில்யன் தன்னோட ஒரு நாவல்ல பொங்கல் வைப்பதன் சிறப்பு என்ன? எப்படிலாம் வெக்கனும்ன்னு எழுதி இருக்கார் அதைதான் தேடிக்கிட்டு இருக்கேன்.

சரிதா: ம்க்கும்.., நீங்க எப்போ தேடி நாம எப்போ பொங்கல் வைக்குறது??!!  உங்க பாச மலர்கள்ல ஒண்ணு சசிக்கிட்ட போன் போட்டு கேட்டு பாருங்க...,

கணேஷ அண்ணா: அது பாவம், சின்ன பொண்ணு அதுக்கு ஒண்ணும் தெரியாது..,

சரிதா: அப்படின்னா, அடுத்த பாசமலர் ராஜிக்கிட்ட கேளுங்களேன்.

கணேஷ் அண்ணா: உன்னை கட்டிக்கிட்ட நாள் முதலா இன்னிக்குதான் உருப்படியா ஒரு யோசனை சொல்லி இருக்கே. ராஜிக்கு எல்லாம் தெரியும் அவளை கேட்டுட்டு வரேன்.

 ”வீடு திரும்பல்” மோகன்குமார்...,

ஹவுஸ் பாஸ்: குட்டிம்மா! உங்கப்பா எங்கேம்மா?!

குட்டி பாப்பா: கரும்பு, பானை வாங்கி வா!ன்னு நீதானேம்மா அனுப்பினே?!

ஹவுஸ் பாஸ்: அட, ஆமாம்! மறந்தே போச்சு. என்னடா குட்டி.., மதியமாச்சு.., காலையில போன உங்கப்பாவை இன்னும் காணோமே! என்ன ஆச்சுனு தெரியலியே! வா போய் பார்த்துட்டு வரலாம்..,,

குட்டி பாப்பா: அய்.., அம்மா, அப்பா வந்துட்டாங்க..,அப்பா ஏன் லேட்டு?!

ஹவுஸ் பாஸ்:  ஏங்க இம்புட்டு நேரம் நாங்க பயந்துட்டோம். ஏன் இவ்வளவ் நேரம்?! எதாவது பிராப்ளமா?!

ஐய்யா சாமி: பிரபல பதிவராயிட்டேனே அதான் பிராப்ளம்.

ஹவுஸ் பாஸ்:  புரியுற மாதிரி சொல்லுங்க.

ஐய்யா சாமி: கரும்பு, மஞ்சள், பானை விக்குறவங்களைலாம் பேட்டி  எடுத்து வந்தேன். அதுமில்லாம கோடி வீட்டு கோமளம் மாமி பொங்கல் வெச்சுகிட்டு இருந்தாங்க அதை போட்டோலாம் எடுத்து வந்தேன் பதிவு போட..., அதானுங்க லேட்.

ஹவுஸ் பாஸ்: !@#$%  )(*&^$#  @#^&*


”அவர்கள் உண்மைகள்” மதுரை தமிழன் வீட்டில்...,

ஹவுஸ் பாஸ்: ஏங்க! பொங்கல் வைக்க, கூட மாட ஒத்தாசை பண்ணாம அங்க என்ன செல்லை நோண்டிக்கிட்டு இருக்கீங்க.

மதுரை தமிழன்: வரேன் இரு.

ஹவுஸ் பாஸ்: ஏங்க இங்க வந்து ஹெல்ப் பண்ணா சீக்கிரம் சாமி கும்பிடலாமில்ல.

மதுரை தமிழன்: இரும்மா! யாராவது பொங்கல் பத்தி எஸ்.எம்.எஸ் இல்லன்னா மெயில் அனுப்புவாங்க அதை வெச்சு பதிவு தேத்தலாம்ன்னு பார்த்தா யாரும் அனுப்பலியே!

ஹவுஸ் பாஸ்: !@#$% *!@^&* )^$#@\


” கோவை நேரம்” ஜீவா வீட்டில்..,

ஹவுஸ் பாஸ்: ஏனுங்க! இன்னிக்கு பொங்கல் பண்டிகை. சர்க்கரை பொங்கல் செய்யனும்.., பொங்கல் குழம்பு வைக்கனும்.., கொஞ்சம் மளிகை சாமான் வாங்கி வர்றீங்கள்?!

ஜீவா: இதோ பாரும்மா! சர்க்கரை பொங்கல், நம்ம மூணவது தெருவுல இருக்குற ------- ஹோட்டல்ல நல்லா இருக்கும். காலையில  8மணிக்கு கூட்டம் கம்மியா இருக்கும். அங்க வாங்கிக்கலாம்.பொங்கல் குழம்பு லாங்க் பஜார் ரோடுல இருக்குறா------- ஹோட்டல்ல நல்லா இருக்கும் அங்க வாங்கிக்கலாம். டேஸ்ட் கொஞ்சம் மட்டமா இருந்தாலும் அம்மணிகள்லாம் வருவாங்க.

ஹவுஸ் பாஸ்: !@#$%^  +)&^%$ !@#%^&&

ஜீவா: நல்ல நாளும் அதுவுமா, நிம்மதியா  ஒரு பக்கார்டியா  அடிக்க உடுறாளா?! நொய், நொய்ன்னு சே இதுக்கு நான் டூர் இருக்குன்னு வழக்கம்போல எங்கிட்டாவது கிளம்பி போய் இருக்கலாம்


”தூறிகையின் தூறல்” மது மதி வீட்டில்...,

ஹவுஸ் பாஸ்: ஏனுங்க! பொங்க வைக்கனும். இப்போ நல்ல நேரம் வாங்க.., ஆரம்பிக்க்லாம்..,

மதுமதி: இதோ பாரும்மா! நான் பெரியார் பொறந்த மண்ணுல பொறந்தவன் அதனால, இந்த ஈர வெங்காயம்லாம் எனக்கு வேணாம். நீ வேணும்ன்னா பாப்பாக்காக பொங்கல் வெச்சுக்க.

ஹவுஸ் பாஸ்: ம்க்கும், அந்த மாதிரி நல்லவங்க பேச்சைல்லாம் நீங்க கேக்க மாட்டீங்கன்னு எனக்கு நல்லா தெரியும்.., வேலை செய்ய சோம்பேறித்தன பட்டுக்கிட்டும், பதிவு தேத்தவும்தானே நீங்க வரமாட்டேன்னு சொல்றீங்கன்னு எனக்கு தெரியும். படைச்ச பின் இலையில் கை வெச்சு பாருங்க..  அப்புறம் இருக்கு உங்களுக்கு கச்சேரி...,

மதுமதி: ங்ங்ங்ங்ங்ங்ஙேஙே 


”அட்ரா சக்கை” சி.பி.செந்தில் குமார் வீட்டில்...,

 அம்மா: ஏம்மா! அந்த பானையை எடுத்து மஞ்சள் துண்டு கோர்த்து கட்டும்மா

 ஹவுஸ் பாஸ்: கட்டிடேனுங்க அத்தை. அரிசி களைஞ்சு வெச்சுட்டேன். குழம்பு வைக்க காய்லாம் கூட கட் பண்ணி வெச்சுட்டேன்.

 அம்மா: பொங்க பானை அடுப்புல வெக்கனும் சிபி எங்கே? சிபி! சிபி....,

ஹவுஸ் பாஸ்: ம்க்கும். அவர் எங்கே இங்க இருக்க போறார். இன்னிக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு  12 படம் ரிலீஸ் அதனால, நேத்து நைட்டே பாய், தலைகாணிலாம் எடுத்துட்டு போய் அங்கயே போய் படுத்துக்கிட்டார்.


  ”காணாமல் போன கனவுகள்” ராஜி மற்றும் “தேவதை கனவுகள்” தூயா வீட்டில் ...

பெரியப்பா: ஏம்மா தூயா! செங்கல் கொண்டு வாம்மா!

தூயா: இந்தாங்க பெரியப்பா.

பெரியம்மா: அந்த அரிசில இருக்குற கல்லு, நெல்லுலாம் பொறுக்கி சுத்தம் பண்ணும்மா.

தூயா: சரி பெரியம்மா. என்ன காய்கறின்னு சொன்னா.., நான் கழுவி நறுக்கி தருவேன்.

ராஜியோட ஹவுஸ் பாஸ்: ஏய் தூயா! நீதான் வேலை செய்யுறே. உங்கம்மா எங்கே?!

தூயா: ம்க்கும் அம்மா என்னிக்குப்பா வீட்டு வேலைகள் செஞ்சு இருக்காங்க?! அதோ பாருங்க பதிவுல போடுறதுக்காக வளைச்சு வளைச்சு போட்டோ எடுக்குறதை..., மனசுக்குள் பிரபல பதிவர்ன்னு நினைப்பு...,

ராஜியோட ஹவுஸ் பாஸ்:     1{@}%:&{)_!?$<>^&*&))()@<>{}][’;./,

டிஸ்கி: நெட் கனெக்‌ஷன் பிரச்சனைனால பொங்கல் கழிஞ்சு இத்தனை நாள் ஆகி இந்த பதிவு.

Monday, January 28, 2013

நீயும் நானுமில்லையேல் எம்மதமுமில்லை....,

  ”அம்மா”ன்னா சும்மா இல்லீங்கோ!!

மனிதனின் மறுபக்கம்...,

காதல்ன்னா..., இதான். வேற ஒரு மண்ணுமில்ல...,

மனித நேயத்தின் உச்சபட்சம்...,

செத்தாண்டா சேகரு...,
 
ஷார்ட் கட் கீஸ்...,
 
 உலகின் முதன் முதல் ஆம்புலன்ஸ்..,
 

We Never Complete Without " U & I "
try to understand the meaning brothers
 
 
இதால கொசு ஓடிப்போகுதோ இல்லியோ?! ஜலதோசம் ஓடிப்போகும்..,
 
நோ கமெண்ட்ஸ்.., ஏன்னா, எனக்கு சினிமா பிடிக்காது...,
 
 
ஏலேய்.., என்னலே நடக்குது இங்க?!
 
இதான் டீம் வொர்கா?!
 
 மண்டே ஃபீவர்...,

Saturday, January 19, 2013

எங்க வீட்டு பொங்கல் கொண்டாட்டம்(கொஞ்சம் லேட்டா...,)

(பொங்கல் கோலம்..., என் மகள்கள் தூயா மற்றும் இனியாவின்  கைவண்ணத்தில்...)

(அரிசி மாவில் கோலம்...,)

(தன் சித்தப்பா, பெரியப்பா, அண்ணாலாம் வேட்டி காடி இருப்பதை பார்த்து என் மகன் ராம்ஜியும் பட்டு வேட்டி, சட்டையுடன்...,) 

 (தம்பி வேட்டி கட்டியதை பார்த்ததும் தூயாக்கு சேலை கட்டி பார்க்க ஆசை வந்துட்டுது..., )
அதிகாலையில் எழுந்து குளிச்சு, ”ப” வடிவில களிமண்ணால வீடு கட்டி, பசு மாட்டின் சாணத்தில் பிள்ளையார் பிடிச்சு வைப்போம் அதுக்கு “ பிள்ளையார் மன”ன்னு பேர்.  காய்கறிகள்,  கரும்புலாம் வெச்சு  பெரியவங்க நாங்க சாமி கும்புடுவோம். பொடுசுங்கலாம் எப்படா சாமி கும்பிட்டு முடிப்பாங்க. கரும்பு எப்போ திங்கலாம்ன்னு காத்து கிடப்பாங்க.

                                                          
(இதுதான் பிள்ளையார் மனை....,.     )

பொங்கல் அன்று வீடு வாசல்லாம் மொழுகி, குளிச்சு  சுத்த பத்தமா ஒரு தட்டில் ஊற வெச்ச பச்சரிசி, பச்சரிசி மாவு, வெல்லம் தேங்காய், வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், மஞ்சள், குங்குமம், பூ, பானகம் என்று சொல்லப்படுகின்ற வெல்லம் தண்ணி ஒரு டம்ப்ளர், மஞ்சள் தண்ணி ஒரு டம்ப்ளர் எல்லாம் எடுத்துக்கிட்டு ஆண்கள், சின்ன பிள்ளைகள்லாம் பக்கத்தில் இருக்கும் அம்மன் கோவிலுக்கு போய் பூஜை பண்ணிட்டு வருவாங்க. அதுக்கு ,” பச்சை வைக்குறது”னு பேர்.

                                          பச்சை வைக்க கோவில்ல தட்டு ரெடி....,

பங்காளிகள்ன்னு சொல்லப்படுகின்ற  பெரியப்பா,    சித்தப்பா, அண்ணன், தம்பி லாம் சேர்ந்து கோயிலுக்கு போய் பச்சை வச்சுக்கிட்டு வருவாங்க. .

                           
       கோயிலுக்கு போனவங்க வருவதற்குள் வீட்டில் இருக்கும் பெண்கள் வீடில் வாசல் இருக்குறவங்க வாசல்லயும், வாசல் இல்லாதவங்க மாடிலயும், மஞ்சள் தண்ணி தெளிச்ச்சு, தரையில் கோலம் போட்டு  செங்கல் அடுக்கி, அதற்கு மேல் களிமண் உருண்டை வச்சு, ஈர மஞ்சளை கோர்த்து, அடுப்பு மேல வச்சு ரெடியா இருப்போம்.

                                 
                           
(அடுப்பு ரெடி, பொங்க பானை ரெடி...,)

    கோயில்ல இருந்து வந்ததும் கற்பூரம் ஏத்தி அதை பொங்கல் வைக்க போற அடுப்புல  போட்டு துவரை மிளாறை எரிய வைப்போம். பொங்கல் பானை காய்ந்ததும் முதலில் விதை நெல் போடுவோம். 


 
(நல்ல நேரத்துல பொங்கல் வைக்கன்னும்ன்னு எல்லாரும் மும்முரமாய் வேலை செய்றங்க.., தூயாவும் தன்னோட  பெரியப்பாக்கு உதவுறாங்க..,)


அது பொறிந்ததும், பால் ஊற்றி பால் பொங்கியதும்  தண்ணி ஊத்தி பொங்கி வரும்போது , பொங்கலோ பொங்கல்ன்னு சொல்வோம். பொங்கி வந்ததும் கடைக்கு போய் உப்பு வாங்கி வருவோம் (பொங்கல் பொங்கியதும் முதல்ல உப்பு வாங்கனும்ன்னு ஐதீகம்.)   கரும்பை வெட்டி துடுப்பாக்கி அதால கிளறுவோம். உப்பு போட்டு பொங்கி இறக்கி வைப்போம்.

பொங்கல் இறக்கியதும் அதே அடுப்புல பொங்கல் குழம்பு, வெந்தயக்கீரை மசியல் பிடி கருணை காரக்குழம்பு வைப்போம். சமையல் முடிந்ததும், பிள்ளையார் மனைலயும், பொங்கல் அடுப்புக்கும்  செங்கல் பொடியால கோலம் போட்டு பூசணி இலையில் பொங்கல், பொங்கல் குழம்பு, கீரை மசியல்லாம் வச்சு சாமி கும்புடுவோம். 

(பொங்கல் பொங்கிட்டுது...,)

(பொங்கல் நல்லாவே பொங்கி வருது..,)

(பூசணி இலையில் சூரியனுக்கு படையல் ரெடி.., பொங்கல், பொங்கல் குழம்பு, வெந்தியக்கீரை குழம்பு, பிடி கருணை காரக்குழம்பு..,)

 
 (பொங்கல் பண்டிகையே நன்றி செலுத்துற பண்டிகைதானே?! தினமும் நம் பசி போக்கும் அடுப்புக்கும் ஒரு படையல்..,)

 மாட்டுப் பொங்கல் அன்னிக்கு மாலை ஆறு மணிக்கு  விளக்கு வச்ச பின் தான் படைக்குறது வழக்கம். துணிகளை படைச்சு, வீட்டிலிருக்கும் பெரியவங்க, தம்பதி சமேதராய்  எடுத்து குடுப்பாங்க. பெரியவங்கலாம்  தன்னால் முடிந்த அளவு  பணம்  மத்தவங்களுக்கு குடுப்பாங்க.அதுக்காகவும் பசங்க காத்துக்கிட்டு இருப்பாங்க.

   சாம்பார், பொறியல், வடை, பாயாசம், இனிப்பு போண்டா, கொழுக்கட்டை இதெல்லாம் கண்டிப்பா செய்யனும், செய்து சாமிக்கு படையல் போட மணி எட்டாகிடும். பெரியவங்கள்லாம் டி.வி பார்த்துக்கிட்டும் கதை பேசிக்கிட்டும் சாப்பிட்டு முடிக்கும்வரை பிள்ளைகள்லாம் தவிப்பா பார்த்துக்கிட்டும் சீக்கிரம் சாப்பிடுங்க, எதிர்வீடு, பக்கத்துவீட்டுல எல்லாம் பசங்க டிரெஸ் போட்டுட்டாங்கன்னும் கூச்சல் போட்டுக்கிட்டும் இருப்பாங்க



 (7 மணிக்கு படைக்க போற துணிகள் மஞ்சள் தடவி மதியம் மூணு மணிக்கே தயார்...,)

 (மைத்துனர் பசங்க பயபக்தியா சாமி கும்பிடுறதா சீன் போடுதுங்க.., சீக்கிரம் சாமி கும்பிட்டு புது துணி எடுத்து தரனும்ன்னு வெயிட்டிங்க்...,)



 (சின்ன மகள் இனியா தாத்தா பாட்டிக்கிட்ட ஆசிகளையும், புது துணியும் வாங்குறா..,)

(எனக்குதான் ட்ரெஸ் முதல்லன்னு எல்லா குட்டீசும் சண்டை போட..,
எல்லார் ட்ரெஸ்சையும் ஒரே தட்டுல வெச்சு குடுக்க வெச்சுட்டா தூயா...)

 (என்னதான் அடிக்கடி புது ட்ரெஸ் எடுத்து போட்டுக்கிட்டாலும், பண்டிகையின் போது ட்ரெஸ் வாங்கும்போது பசங்க முகத்துல எம்புட்டு சந்தோசம்??!)

(சின்ன பிள்ளைங்க மட்டுமில்ல, பெரியவங்களான நாங்களும் அப்படிதான் பெரியவங்க காலில் விழுந்து ஆசியோடு புது துணி வாங்கிக்குவோம்..,) 

குழந்தைகளை தொடர்ந்து பெரியவங்க நாங்கலாம் ஜோடியாய் பெரியவங்க  காலில் விழுந்து டிரெஸ் வாங்கிக்குவோம். துணியோடு சேர்த்து அவங்களால் முடிந்த அளவு பணம் தருவாங்க. அதை பிரிச்சுக்குறதுல தகராறு பண்ணிக்கிட்டு இருக்கும்போது, குட்டீஸ்கள் அப்பா, அம்மாவுக்கு இடையில்  சமாதான படுத்துற மாதிரி வந்து பணத்தை அதுங்க அடிச்சுக்கிட்டு போய்டும்ங்க. 

    புது துணி உடுத்திக்கிட்டு  அவங்கவங்க நட்பு வட்டத்தோடு கோயிலுக்கு போவோம்.  வத்தலும், தொத்தலுமா  இருக்கும் ரெண்டே ரெண்டு மாட்டை என்னமோ அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டுல மாட்டை அடக்குற மாதிரி எங்க ஊரு “பிரசாந்த், சிம்பு, தனுஷ்”லாம் பயங்கரமா  சீன் போடுவாங்க. அந்த வீரத்துல  எங்க ஊர் ”தாப்ஸீ, ஹன்சிகா மோத்வானி, கார்த்திகா”லாம்  மயங்கி புது காதல்லாம் பிக்கப் ஆகும்.


   காணும் பொங்கலன்று எல்லாரும் கோவிலுக்கு போவோம். கோவிலுக்கு போகும் முன் சின்ன மாமனர், மாமா, சித்தப்பா, அண்ணன்கள் எல்லாரும் எல்லாருக்கும் பைசா குடுப்பாங்க. எப்படியும் பெரியவங்களுக்கு ஆயிரம் ரூபாயும், சின்னவங்களுக்கு 250 ரூபாயும் சேர்ந்துடும் பொங்கல் அன்று. 

    முன்னலாம் 3 கி.மீ நடந்து போவோம். எல்லா உறவுகளும் பேசிக்கிட்டு அரட்டை அடிச்சுக்கிட்டும் கரும்பு, பொரி சாப்பிட்டுக்கிட்டும் போவோம். இப்போலாம் டூவீலர்ல போய்ட்டு வந்துடறோம். நடந்து போய்வந்த போது இருந்த உற்சாகம் இப்போ வண்டில போய் வரும்போது இல்லைன்னு எல்லாரும் உணர்கிறோம்.

    அத்தோடு பொங்கல் கொண்டாட்டம் முடிஞ்சுது. அன்னிக்கு பொங்கல் முடிந்தாலும் அதன் நினைவு பல மாதங்கள் நெஞ்சில் நிற்கும். அடுத்த பொங்கல் எப்போ வரும்ன்னு காத்து கிடப்போம்.
   எங்களுக்குள்ளும் சண்டைகள், சச்சரவுகள் உண்டு. ஆனால், அதெல்லாம் இந்த பண்டிகையின்போது கொஞ்சம் கொஞ்சமா மாறி உறவுநிலை சகஜமா மாறிடுறதை கண்கூடா பலமுறை பார்த்திருக்கேன். பண்டிகைகள் வருவதன் நோக்கமும் அதுதானே...,

Thursday, January 10, 2013

ஊமைக்குயில் - படித்ததில் பிடித்தது


மார்கழி மாதமொன்றின் அதிகாலையில்
 தொலைபேசி வழியே என் இதயம் நுழைந்தவள்!!
தேவதைகளின் நிறம் கறுப்பென்று..,
 வெள்ளை நிற தேவதைகளை ஓரம் கட்டியவள்!!

அனிச்சமலர் மனசுக்குள்..,
 ஆயிரமாயிரம் வண்ணத்துப்பூச்சிகள் பறக்க வைத்தவள்!!
மின்னஞ்சல் பெட்டியை..,
 முத்தங்களால் நிரப்பி..,
 சத்தமின்றி யுத்தமொன்றை நடத்தியவள்!!

கொஞ்சிக் கொஞ்சி..,
 என்னைக் கொன்றுதின்ற..,
 பிஞ்சுமன வஞ்சியவள்!!!

பூங்குயில் குரலால்...,
 இறைபாடல் பாடுகின்ற..,
 குழந்தைமன பெண்ணவள்!!

என் இதயசிம்மாசனத்தில்..,
 நிரந்தர அரசியாய் வீற்றிருக்கும்..,
 சாக்லெட்டில் செய்த ரோஜாமலரவள்!!!

இதயத்தில் துவங்கிய காதல்...,
 கண்களின் சந்திப்பைக்காண...,
 ஏழுமாதம் தவமிருந்தவள்!!

முதல் சந்திப்பில் மொழி மறந்து...,
 பேச தவித்த பொழுதில்,
 கண்சிமிட்டாமல் சிலையானவள்!!

கனவுகளுடன் திரிந்தபோது..,
 என் கனவுகளை,
 தன் கண்ணில் சுமந்து துணையிருந்தவள்!!

சொல்லித் தெரிவதில்லை??!
 காதலென்று மான்விழி பார்வைகளால் உணர்த்தியவள்...,
அவளை, அறிமுகப்படுத்திய நண்பனே??!!
 எட்டப்பனாக மாறியதில் துடிதுடித்தவள்.

கவர்ந்து சென்று வாழ...,
 பொருள்தேடி தலைநகரம் நான்...,
 பயணித்த காலத்தில்..,
 கையசைக்காமல் கண்ணசைத்து வழியனுப்பியவள்!!

என் கையெழுத்தும்...,
 கவிதை என்று கடிதமெழுதிய!!
 அவள் பேனாவின் மைத்துளிக்குள்...,
 தன் காதலைச் சுமந்தவள்!

வேலை கிடைத்த செய்தியை சொல்வதற்கு...,
 தொலைபேசியில் அழைத்தபோது..,
 அழுதுகொண்டே வாழ்த்தியவள்!!??

அழுகையின் காரணமறியாமல்!!
 ஆனந்த கண்ணீரென்று!!!
 நான் நினைத்து மலர்ந்த இரவொன்றில்...,
 தொலைபேசியில் அழைத்தவள்....,

நீண்ட மெளனம் உடைத்து...,
 திருமணம் நிச்சயக்கப்பட்ட செய்தியை??!!
 செவிக்குள் இடியாய்..,
இறக்கி சொல்லியழுதவள்!!

தவித்து..,துடித்து...,துவண்டு..,
அழுது,அடங்கி,வதங்கிய பூவாக
 மணமேடை ஏறியவள்!!

சிறகுகளை இழந்துவிட்டு...,
 சிலுவைகளை சுமந்துகொண்டு...
 மறுவீடு சென்ற ஊமைக்குயிலவள்!!

வானத்தை இழந்துவிட்ட நிலவு..,
 இன்று, எங்கோ ஒரு கானகத்தில்..,
 காதல் தந்த நினைவுகளுடன் மட்டும் வாழ்கிறது??!!

பொருளாதாரச் சூறாவளியில்..,
 சிக்கி தொலைந்த காதல்..,
 இன்று சட்டைப்பையிலிருந்து..,
 வழிகின்ற வெள்ளிக்காசுகளை கவனிக்காமல்??!!
அவள் நினைவுகளின் கனத்தை...,
 சுமந்துகொண்டு தள்ளாடியபடி பயணிக்கிறது!!


Monday, January 07, 2013

திருமணமாம்.., திருமணமாம்...,


                                              
ஒரு சில கல்யாணத்துல போனா, பொன்னூஞ்சல் ஆடுறது, பானைக்குள்ள மோதிரம் போட்டு எடுப்பது, அப்பளம் உடைக்குறது.., தாய் மாமன்கள் சுமக்க மால மாறி கொள்வது.., அப்படி வரும்போது சிக்காம இருக்க போக்கு காட்டுறதுன்னு சொந்தங்கள், நட்புகள், மணமக்கள்ன்னு சந்தோஷப்பட நிறைய விசயங்கள் இருக்கும்.

ஆனா, எங்க சமுதாய  திருமண சடங்குகளில்..,   எல்லாரும் ரசிக்கும்  இந்த சின்ன சின்ன  விளையாட்டுக்கள்  இல்லாம வெறும் .சடங்குகள் மட்டுமே இருக்கும். அது எனக்கு பெரிய குறையாவே இருக்கும்.

இந்த குறையை தீர்க்கத்தானோ என்னவோ.., திருமண சடங்குகள் முடிந்து ”மறுவீடு”ன்னு ஒரு நிகழ்ச்சி இருக்கும். முன்னலாம் திருமணம் முடிஞ்ச மூன்றாம் நாள், ஐந்தாம் நாள்ன்னு வச்ச இச்சடங்கு இப்போ, பசங்களுக்கு ஸ்கூல், பெரியவங்களுக்கு ஆஃபீஸ், போக்குவரத்துன்னு எல்லாத்தையும் மனசுல வெச்சு.., கல்யாணம் முடிஞ்ச மதியமே மண்டபத்துலயே வெச்சிடுறாங்க.

                                       
(சின்ன கவுண்டர் படத்துல வர்ற முத்துமணி மாலை.., பாட்டை மணமக்களை பாட சொன்னாங்க. என் நாத்தனார் வெக்கப்பட்டு பாடலை. ஆனா, மாப்பிள்ளை செமையா பாடி அசத்திட்டார்...,)

கல்யாண பொண்ணுக்கு ஸ்பூன் முதற்கொண்டு, ஃப்ரிட்ஜ், பீரோ, கட்டில், பித்தளை செம்பு சாமான்கள், வெள்ளி பொருட்கள்ன்னு அவங்கவங்க வசதிக்கு தகுந்த மாதிரி சீர் வரிசை வாங்குவாங்க. அப்படி வாங்குபோதே “அரை வரிசை”க்குன்னு தவலையோ, ஒரு டப்பாவோ, இல்ல ஒரு பக்கெட்டோ தங்கள் வசதிக்கு ஏத்த மாதிரி வாங்குவாங்க.

அது எதுக்குன்னா, தங்கள் வீட்டில் பிறந்து, கல்யாணம் கட்டிக்குடுத்து இருக்கும் கல்யாணப் பெண்ணின் மூத்த பெண்பிள்ளைகளுக்காக..,  அது எத்தனை தலைமுறை பெண் இருந்தாலும்.., கணவனையே இழந்திருந்தாலும்..,  அவங்களுக்கு மரியாதை செஞ்சுட்டுதான் கல்யாண பெண்ணுக்கு சீர் வரிசை கொடுப்பாங்க.

ஒரு பாத்திரத்துல, வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், பூ, பழம்,  ஸ்வீட், காரம், பொருள்விளங்கா உருண்டை, அதிரசம், காரம்ன்னு போட்டு சீனியாரிட்டி படி குடுத்துட்டே வருவாங்க.  அந்த சீரையும் கல்யாண பொண்ணோட சகோதரகள்தான்  கால்ல விழுந்து கொடுக்கனும்ங்குறது சம்பிரதாயம். அப்போ சீர் கம்மியாருக்கு நான் வாங்க மாட்டேன்ன்னு அத்தை, அக்காக்கள்லாம் செல்லமா சண்டை போடுவாங்க(சில வீட்டில் நிஜமாவே நடக்குங்குறது வேற விஷயம்). அவங்களை சமாதான் படுத்துற மாதிரி சும்மாவே அலம்பல் பண்ணுவாங்க பசங்க.

போன மாசம் எங்க நாத்தனாருக்கு கல்யாணம். அப்போ எடுத்த போட்டோக்கள் சில...,


                                 
கல்யாண பொண்ணோட அத்தைக்கு ”அரைவரிசை சீர்” என் கொழுந்தனார் செய்யுறார்.
                                   
(கல்யாண பொண்ணோட அக்காக்கு மரியாதை.., உடன் பிறந்த சகோதரி இல்ல.., பெரியப்பா மகளுக்கும்கூட சீர்...,)

                                    
(தன் சித்த்தப்பா மகளுக்கு சீர் செய்யும்போது...,)



(கல்யாண பெண்ணுக்கு சீர் செய்யும்போது...,)

இதுதான் எங்க குடும்பம். என் மாமனாருக்கு சகோதரர்கள் 4 பேர். அவங்க பிள்ளைங்க, பொண்ணுங்க அவங்க எல்லாரோட பேரன் பேத்திகள்ன்னு இருக்குற இதுப்போல குரூப் ஃபோட்டோவை என் கல்யாணத்திலிருந்து இன்று வரை மிஸ் பண்ணதில்ல..., பெரிய ஃபேமிலிதான்னு கண்ணு வைக்காதீங்கப்பா. இதுலயே நம்ம தூயா மிஸ்ஸிங்க். என் கொழுந்தனார் மகன், இன்னும் ரெண்டு கொழுந்தனார், அவங்க மனைவிகள்ன்னு சிலர் மிஸ்ஸிங்.


எங்களுக்குள்ளயும், கோவம், சண்டைன்னு இருக்கும்.. ஆனா, இதுப்போல கல்யாணம், காதுகுத்து போன்ற வீட்டு விசேஷங்களில் அதெல்லாம் காணாம போய் எல்லாரும் செம கலகலப்பா இருப்போம். மச்சினன் மனைவிக்கு தலை பின்னிவிடும் ஓரகத்திகள், தம்பி மனைவிக்கு என்ன வேணும்ன்னு கேட்டு ஓடிபோய் கொண்டு வந்து தரும் கொழுந்தனார்கள், மருமகளை உக்கார வெச்சு பரிமாறும் மாமனார்கள்ன்னு எங்க வீட்டு விசேஷம்லாம் செமையா களை கட்டும். அதனாலயே நான் எந்த விசேசத்தையும் மிஸ் பண்றதில்லை. நான் என் புகுந்த வீட்டை ரொம்ப விரும்புறேன். இனி ஒரு முறை பெண்ணாய் பிறந்தாலும் இதே வீட்டில் வாழ்க்கப்படனும்ன்னு வேண்டிக்குறேன்.