Wednesday, December 29, 2010

இந்திய "குடி"மகனின் ஆதங்கம்


இரு நண்பர்கள் புல்லா தண்ணியடிச்சுட்டு, செம போதையில ரயில்வே லைன்ல நடந்துக்கிட்டு இருக்கும்போது...,

நண்பர் 1: இங்க பாருடா மாப்ள இந்த அநியாயத்தை
நண்பர் 2: என்னடா மாமா?
நண்பர் 1: படிக்கட்டை கொண்டாந்து எந்த முட்டாப் பயலோ தரையில வச்சுக் கட்டி இருக்கான் பாரு ...,!!??
நண்பர் 2: அதுக்கூட பரவாயில்லடா மாமா கைப்பிடியும் கூடவே சேர்த்து வச்சு கட்டிஇருக்கான் பாரு..., அவனைலாம் என்னனு சொல்றது??!!


பாரில் புல் மப்பில் அருகிலிருந்தவரிடம்....,
முதலாமவர்: ஏன்டா மச்சி இந்த சரக்கடிச்சா நல்லா போதையேறுமா?!
அருகிலிருந்தவர்:
அதெல்லாம் எனக்கு தெரியாது.., ஆனால், இப்பவே நீ புல் மப்புலதான் இருக்கேங்குறது மட்டும் எனக்கு நல்லா தெரியும்..,
முதலாமவர்: எப்படிடா அவ்வள‌வு கன்பார்மா சொல்ரே
அருகிலிருந்தவர்: ஏன்னா நான் உன் பிரண்ட் இல்ல. உன் அப்பன்டா.இந்திய குடிமகனின் ஆதங்கம்:

10 ரூபாய் கொடுத்து வாங்கும் இட்லிக்கே புதினா சட்னி, கார சட்னி, தேங்கா சட்னி, சாம்பார்னு 4 சைட் டிஷ் தற்ராங்க. ஆனால், 75 ரூபாய் கொடுத்து வாங்கும் குவார்ட்டருக்கு சைட் டிஷ்ஷா ஒரு துண்டு ஊறுகா கூட தரமாட்டேங்குறாங்க. என்ன உலகம்டா சாமி இதுFriday, December 17, 2010

என்னை உணர்வாயா?


"கண்ணில்" வழிந்த "காதலையும்,"

"வார்த்தைகளில்" உதிர்ந்த "பாசத்தையும்,"

"செயலில்" நிறைந்த "அக்கறையும்",

"கோபத்தில்" வெளிவந்த 'அன்பையும்"..,

உணராமல் சென்றவனே,

என் மரணத்திற்குபின்
என் உடலை
"நாயும், நரியும்" தோண்டியெடுத்து...,

காக்கையும், கழுகும் போட்டியிட்டுக் கொண்டு என் அங்கங்களை கொத்தித் திண்ணுகையில்...,

வெளிவந்திருக்கும்
சிதைந்துப் போன
என் இதயத்தை,

தற்செயலாய் காண நேரிடும் போதாவதாவது!!

உணர்வாயா??

"இது உன்னால் சிதைந்த இதயமென்று"?!?!

Thursday, December 09, 2010

மறந்துப்போன காதலனுக்கு கடிதம்

உனக்கு கடிதம் எழுத வேண்டும் என்று நீண்ட நாட்களாக ஆசை. ஆனால், அந்தகடிதத்தை எப்படி, யாரிடம் தந்து அனுப்புவது..இதோ ஒரு வழியாக கடிதம் எழுதிவிட்டேன் . எப்படியோ அது உன்னிடமும் வந்து சேர்ந்தும் விட்டது.., உனக்கான கடித்ததை ஆரம்பிக்கையிலேயே எனக்கு குழப்பம்.., எப்படி ஆரம்பிப்பது அன்புள்ளஎன்றா? அல்லது பாசத்துடன் என்றா? அன்பும், பாசமும் இல்லாத உன்னை எப்படி, அப்படி விளிப்பது ஆகவே, எதையும் சொல்லாமலே இக்கடிதத்தை ஆரம்பித்துவிட்டேன்..,

என்னை எப்படியடா மறந்தாய்? உனக்கும் எனக்குமான நட்பு ஒன்றிரண்டுஆண்டுகளா என்ன? நான் உனக்கு அறிமுகமாகி சுமார் பதினோறு ஆண்டுகள்ஆச்சே.

எனக்கு நன்றாய் நினைவில் இருக்கிறது நமக்கான நட்பு அரும்பிய முதல் நாள்..., ஒரு மதிய நேரத்தில் நீ உன் வீட்டில் ஒய்வெடுத்துக் கொண்டு இருந்தபோது வேறொருவன் சொந்தமாக உன் வீட்டில் அடியெடுத்து வைத்தேன். அன்றே உனக்கும் எனக்குமான நட்பு விதை ஊண்றப் பட்டதோ என்னவோ யார் கண்டது?

உன் கண்ணில் அடிக்கடி பட்டதாலும், எனது ஸ்பரிசம் உன் மீது பட்டதாலோஎன்னவோ? என் மீதான உன் வேட்கை அதிகமானதா?

பிறிதொரு நாளில் என்னை நீயே விரும்பி ஏற்றுக் கொண்டாய். அன்றிலிருந்துஇருவரின் விடியலும் அடுத்தவர் முகத்தில், இருவரின் தூக்கமும் பிரிவின்விளிம்பில் ஆற்றொனா துயரத்தில் தொடங்கும், மீண்டும் பொழுதுப்புலர்ந்ததும் என்னைக் காண புன்னகையுடன் ஓடி வருவாய். என்னை வாஞ்சையுடன் தடவிக்கொடுத்தப் பின்தான் உனக்கு சோறே உள்ளிறங்கும்...,

அதன்பின் உனது பொழுதுகள் என்னோடு விளையாட, உண்ண, பால்வாங்க, குளிக்க செல்ல, இப்படி ஒவ்வொரு மணித்துளியும் என்னோடு தான் கழிப்பாய்..,ஒரு தாயின் பரிவோடு என்னைக் கவனித்துக் கொள்வாய் , ஒரு தந்தையின் அக்கறையோடு எனக்கான தேவைகளை பூர்த்தி செய்வாய்..,

நீ முதுகலைப் பட்டம் பயில வெளியூர் செல்ல நேர்கையில் பிரிவை எண்ணிகண்ணில் கண்ணீர் அரும்பியதே மறந்துவிட்டாயா? பின்வந்த நாட்களில் தொலைப்பேசியில் நான் எப்படி உள்ளேன் என, உன் வீட்டாரிடம் நலம் விசாரிப்பாயே அதாவது நினைவிருக்கிறதா?

பின் வேலைத்தேடி நீ நகரத்திற்கு சென்றபின்னும் உன் நலம் விசாரிப்புகள் தொடர்ந்ததே.., நான் கூட அச்சமயங்களில் நினைத்ததுண்டு.., என்னைத்தவிர உன்னை யாரும் நெருங்க முடியாதென்று இருமாந்திருந்ததுமுண்டு..,

பின் எப்படி, எங்கே விரிசல் விட்டது நமது உறவில்??

ஆங்ங்ங்க் நினைவிற்கு வந்துவிட்டது உனது திருமணத்தின்போதுதான்..,உன்திருமணத்திற்கு பேசும்போது நானும் உடனிருந்தேன். நூறு பவுன் நகை, ஐம்பதுகிலோ வெள்ளி, "புதுவண்டி" என பேரம் பேசுகையில் என் வயிற்றில் புளியைக்கரைத்தது. ஓரக்கண்ணால் உன்னைக் கவனித்தேன். நீ சம்மதிக்க மாட்டய் என.., ஆனால், நீ சம்மத்துவிட்டாய்.

உன் நண்பர்கள் கூடகேட்டார்கள்.., எப்படிடா இதை பிரிவாய், நீ வேற எதையும் "ஓட்டி"ப் பழக்கமில்லையே என.., நீ அதற்கு, இல்லடா நான் கல்லூரியில்படிக்கும்போது வேறவேறவற்றை "ஓட்டி" பழகியிருக்கிறேன் என்றாய்.., "

மெல்ல, மெல்ல எனை மறந்து உன் புது உறவின்மேல் நாட்டம் கொள்ளஆரம்பித்தாய்..,

நீ உன் புதுமனைவியுடன் வெளியில் செல்லும்போது சத்தியமாய் போர்ராமையுடன் நெஞ்சம் கனத்து ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருப்பேன்.நீ இதைப் பற்றியறியாமல் , என்னெதிரிலேயே உன் நண்பனிடம் உன் புது உறவைபற்றி

"சூப்பர் வண்டிடா மாப்ளே, ஹோண்டா கம்பெனியோடது, சூப்பர் கலர், பெட்ரோல் அதிகமா குடிக்கலை, பராமரிப்பு செலவும் கம்மி, குலுங்கவே இல்லடானு" புகழ்ந்து பேசுவாய் ....,எனக்கு எப்படி இருக்கும் என சிறிதாவது யோசித்தாயா? ,இதற்கு நீ என்னை கொன்றே போட்டிருக்கலாம்.

இப்படிக்கு,

உன் பிரிவை எண்ணி வாடும்

உன் மிதிவண்டி

சே என்ன கனவுடா இது என்று சலித்துக் கொண்டவாறே தூக்கத்திலிருந்துதிடுக்கிட்டு எழுந்தான் கண்ணன். ஏன் இப்படி கனவு வந்தது எனயோசிக்கையில்..,

காலையில் அலுவலகம் செல்லும்போது, மிதிவண்டியில் வந்த ஒருவனைதெரியாமல் தன் புது வண்டியில் இடிக்க,மிதிவண்டியில் வந்தவனுக்குஅவ்வளவாக அடிபடவில்லை. ஆனால், மிதிவண்டிக்கு மட்டும் பலத்த சேதம்.

அவன் நல்லவன் போல, மற்றவர்களைப்போல் சண்டையிடாமல், தவறு தான் மீதும் உள்ளதெனக் கூறி, அவனே கூட்டத்தினரை விலக்கியும்விட்டான்.

மருத்துவமனை செலவுக்கும், புது மிதிவண்டி வாங்கிக்கொள்ள சொல்லி கண்ணன் ஐந்தாயிரம் நீட்ட, அவனோ ஐநூறை மட்டும் எடுத்துக் கொண்டு "இந்தமிதிவண்டி, என்னோட பத்து வருசமா இருக்கு, அதைவிட்டு வேறோரு வண்டிவாங்க என்னால் முடியாது. அதை பழுதுப் பார்க்க இந்த ஐநூறு போதுமென' கூறி சென்றதுநினைவுக்கு வந்து மூளையில் உறைத்தது.., .

காலையில் முதல் வேலையா எழுந்து "ஷெட்டுல இருக்குற தன்னோட பழையமிதிவண்டியை போய் பார்க்கனும்" னு நினைத்துக் கொண்டே உறங்கிப்போணான்.

பின்குறிப்பு: இது என்னோடநூறாவது பதிவு. எத்தனை நாளைக்குதான் கவிதையே எழுதுறது.அதுதான் சிறுமுயற்சி. நூறாவது பதிவுக்காக வித்தியாசமாய் எதாவது எழுதனுமினு யோசிக்கையில், நிறைய "கதைக் கருக்கள்" மனதில் தோன்றியது. பிடித்திருந்தால் பின்னூட்டத்தில் சொல்லுங்கள். அவற்றையெல்லாம் ஒவ்வொன்றாய் பதிவிடுகிறேன்.

(மைண்ட் வாய்ஸ்: : பிடிக்கலைனு சொல்லிட்டால்??

நான்: அப்பவும் பதிவிடுவேன்.

மைண்ட் வாய்ஸ் :??!!!)

இந்த வலைப்பூவை விளையாட்டாய்தான் ஆரம்பித்தேன். ஆனாலும், தொடர்ந்து தொடர்வேனா என்று முதல் சில பதிவுகளில் நான் நினைத்ததுண்டு. நூறை தொட்டதில் எனக்கும் ஆச்சர்யம்தான். என் பதிவையும் படித்து பார்த்து??!!! முதன்முதலில் பாராட்டி, முதல் follower ஆன ஆதிரை அவர்களுக்கு நன்றி!! மற்றும் 24 followers க்கும் ஆயிரங்களை தாண்டிய பார்வையாளர்களுக்கும் நன்றி! நன்றி!!
Monday, November 29, 2010

நீயில்லாத நிகழ்காலம்

என்னுள் மட்டும் அல்ல‌
என் கவிதையிலும்
வெறுமை தெரிகிறது
நீ இல்லாத தருணங்களில்...,

உன்னிடம் சொல்ல நினைத்து
ஞாபகத்தில் சேமித்து வைத்தவை
நிறைந்து வழிந்து ஓடுகின்றன‌
நீ வருவாய் என்ற மலட்டு நம்பிக்கையில்..??!!

சர்க்கரை இல்லாமலே இனிக்கிறது
உன் நினைவுகள்.
நீ கன்னத்திலிட்ட முத்தமும்,
கைவிரல் கோர்த்து நடந்த பயணமும்
நினைவில் மெல்ல நகர்கிறது
அந்தக்கணத்தின் தீராதத் தாகத்தோடு..,

அணுஅணுவாய் சுகம் கண்டு
ஆசைத் தீரப் பேறுப் பெற்று
ஆயுள்வரைக் கூட வருவேன் என்று
தோளில் சாய்ந்து நீ உரைத்ததைக் கேட்டு,
நமக்கு நிழல் கொடுத்த மரம்
உறைந்துக் கிடக்கின்றது இன்று

மௌ சாட்சியாய் ..,


உன் ஆசை மொழிகளை பகிர வந்த

அலைப்பேசி அழைப்புகளையும்,
உன் காதலை சொல்ல வந்த

குறுஞ்செய்திகளையும்,
உன் அன்பை சுமந்து வந்த

பரிசுகளையும்
பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன்..,!!
அவை அறியாப்
பல நெருடல்களோடு..,

என்னை விட்டுவிட்டு
உன்னால் எப்படி முடிந்தது
வேறொருவன் கரம்பிடித்துப் போக
ஒரு பூவைப்போல்...,

தான் மலர்ந்த செடியை மறந்து??!!...,

குறிப்பு: அடுத்த பதிவு எனது நூறாவது பதிவு , மற்றும் எனது மகளின் உற்ற தோழி ஓவியாவின் பிறந்த நாள் டிசம்பர் 3 ம் நாள் வருகிறது. அதற்கும் சேர்த்து மிகப்பெரிய ட்ரீட் வைக்கலாமினு இருக்கேன். எனவே, டிசம்பர் 3 ம் தேதி, வெள்ளிக்கிழமை இரவு சுமார் எட்டு மணியளவில் பார்ட்டி இருக்கு. பதிவுலக நண்பர்கள் அனைவரும் கலந்துக் கொள்ள வேண்டுகிறேன். .
இடம்: அவரவர் வீடு.
தவறாது கலந்து கொண்டு விழாவினை சிறப்பிக்க வேண்டுகிறேன். .

நன்றி! நன்றி! நன்றி!


இவள்தான் ஓவியா


இவள்தான் என் மகள் தூயாவின் உற்ற தோழி. இவள் எனது மகளுக்கு இதே நாளில் வடபழனி முருகன் கோவிலில் பரிசாக கிடைத்தாள். என் மகளுக்கு எங்கள் வீட்டருகே யாரும் தோழிகள் இல்லாததால் இவள்தான் எல்லாமே.(பொம்மை என்று சொன்னால், கோவப்படுவாள்.) அது அவளுக்கு எந்த அளவு பிடிக்குமென்றால், எங்களுக்கு எதாவது அவளிடம் காரியம் சாதிக்க வேண்டுமென்றால், தூயாவை கொன்னுடுவோமினு என் மகனும், குப்பையில் தூக்கிப்போட்டுடுவேன்னு நானும் மிரட்டுமளவுக்கு அதன் மீது பைத்தியம் அவளுக்கு. தூங்கும்போது, அருகிலும், படிக்கும்போது அருகிலும், வெளியில் எங்காவது செல்லும்போது பத்திரமா இரு நு சொல்லி தன் அலமாரியில் வைத்து பூட்டிவிட்டுதான் செல்வாள். இன்று அது தனக்கு கிடைத்த நாளை அதன் பிறந்த நாள் என்று கூறி அதன் மீதுள்ள அலங்காரப் பொருட்களை அவளே செய்தாள்.

*******************************************************************************************************************இன்று உன் பிறந்த நாளில்லை
ஒரு தேவதை எனக்காக
ம்ண்ணில் இறங்கி வந்த நாள்.
- தூயா