Friday, February 25, 2011

ஜோக்.., ஜோக்.., மேலும் ஜோக்...,


பாலு : பழம் நழுவி பாலில் விழுந்து டம்பளர் உடைஞ்சு போச்சு.
வேலு : எப்படிடா ?
பாலு : விழுந்தது பலா பழமாச்சே!
========================================================
பாலு: மரியாதை இல்லாத பூ எது?
வேலு: "வாடா"மல்லி
=========================================================
ஆசிரியர்: கி.பி 5000 ல உலகம் எப்படி இருக்கும்?
மாணவர்: உருண்டையாதான்.
==========================================================

விஜய்: நான் 50 படங்கள் ல நடிச்சு இருக்கேன்.
பத்திரிக்கையாளர்: நடிச்சதா நீங்களே முடிவு பண்ணிட்டா எப்படி.
=========================================================
பாலு: குடி, குடிய கெடுக்குமாடா?
வேலு: நீ வாங்கி குடுத்தா உன் குடி கெடும் , நான் வாங்கி குடுத்தா என் குடி கெடும்.
==================================================
பாலு: பொண்டாட்டி போட்டோவை பக்கத்துல வச்சுக்கிட்டு என்ன எழுதுரே?
வேலு: பத்திரிகைக்கு பேய்க் கதை..,
==========================================================
பாலு: சிங்கத்தை பார்த்து பயப்படாத மிருகம் எது?
வேலு: தெரியலியே?
பாலு: சிங்கத்தோட பொண்டாட்டி சிங்கம்.
============================================================
பாலு : உங்களுக்கு இருந்த தோஷமெல்லாம் உங்க கல்யாணத்திற்கு அப்புறம் நீங்கிடுச்சாமே? அப்படியா?!!
வேலு: ஆமாம், கடைசியா இருந்தது "சந்தோஷம்". இப்ப அதுவும் போய்டுச்சு..,
============================================================
முதலாளி: அந்த டேபிள்ள என்னய்யா தகராறு?
சர்வர்: பேமிலி ரோஸ்ட் சாப்பிடுறதுல பாகப்பிரிவினை தகராறாம்
==============================================================
பாலு: நடிகை ராதிகாவிற்கு இஷ்ட தெய்வம் எது?
வேலு: "சித்தி"விநாயகர் .
===============================================================

பாலு:எலிக்கும் , மௌசுக்கும் என்னடா வித்தியாசம்?
வேலு: எலிக்கு வாலு பின்னாடி இருக்கும்
மௌசுக்கு வாலு முன்னாடி இருக்கும்.
================================================================

Thursday, February 17, 2011

2011 காதலர் தின உறுதிமொழி:


வாழ்க்கையின் மிக முக்கியமான நிலைகள் 10:
  1. படிப்பு,
  2. விளையாட்டு,
  3. பொழுதுபோக்கு,
  4. நட்பு,
  5. காதல்,
  6. ...
  7. ...
  8. ...
  9. ...
  10. ...
என்ன பார்க்குறீங்க மிச்சமெல்லாம் எங்க னுதானே? காதல் வந்த பிறகுதான் எல்லாமே நாசமா போகுமே.?!

--------------------------------------------------------
பையன் 1: பெற்றோருக்கும், நல்ல பெற்றோருக்கும், ரொம்ப நல்ல பெற்றோருக்கும் என்னடா வித்தியாசம்?

பையன் 2: பெற்றோர்ணா "கல்யாணம் நிச்சயம் பண்ணுவாங்க",
நல்ல பெற்றோர்ணா "நாம காதலிக்கும் பொண்ணை கட்டி வைப்பாங்க",
ரொம்ப நல்ல பெற்றோர்ணா "நீ காதல் பண்ணு, பொண்ணை நாங்க தூக்குறோம் னு சொல்வாங்க.
----------------------------------------------------------

மனசுக்கு பிடிக்காத பொண்ணா இருந்தால் அது, " சானியா மிர்சா" வா இருந்தால் கூட கட்ட கூடாது.
ஒரு வேளை, அவ உங்க மனசுக்கு பிடிச்சு இருந்தால் அது "சாணி அள்ளுறவளா" இருந்தால் கூட விடக் கூடாது.
------------------------------------------------------------------
பையன்: நீங்க பார்க்க என் மனைவி மாதிரியே இருக்கீங்க.!!
பெண்
: அப்படியா? அவங்க பேர் என்ன? எங்க‌ இருக்காங்க?
பையன்: அதை நீங்கதான் சொல்லணும்.
(காதலை இப்படியும் மறைமுகமா சொல்லலாம்)


Monday, February 14, 2011

அன்பர்கள் தின வாழ்த்துக்கள்


நேசிக்கப்படுகிறோம் என்ற உணர்வு எல்லாரையும் கர்வப்பட வைக்கும்..,
பெற்றோரோ, ஆசிரியரோ, பிள்ளையோ,ஏன் நம்ம வீட்டு நாய்க்குட்டியாக இருக்கலாம். அதுவும், எதுவும் புரியாத பதின்ம வயதில் வரும் எதிர்பாலினரின் மீதான நேசம் நம்மை றெக்கை கட்டி பறக்க சொல்லும்..,


மைண்ட்வாய்ஸ் : ஏய் ஸ்டாப், ஸ்டாப் இப்ப எதுக்கு இங்க இதை சொல்றே ?
நான்: இன்று காதலர் தினம். அதுக்கு ஒரு கருத்து சொல்லலாமினு..,
மைண்ட்வாய்ஸ் : உதைப்படறடுக்குள்ள ஓடிப்போயிடு. ஏற்கனவே பலப் பேரு காதலர் தினத்தையும் , காதலையும் சோப்பு போட்டு நனைச்சு , அலசி, காயப்போட்டுட்டங்க. நீ எதுவும் புதுசா சொல்ல தேவை இல்ல.
நான்: ஒரு கவிதையாவது ...?
மைண்ட்வாய்ஸ் : ஒண்ணும் வேணாம். அதுவும் ஓராயிரம் கொட்டி கிடக்கு பிளாக்குல. நீ வேற கழுத்தறுக்காத ஓ.கே
நான்: ப்ளீஸ் ப்ளீஸ் ..,
மைண்ட்வாய்ஸ் : சரி சரி தொலைஞ்சு போ. ஆனால் சொந்த சரக்கை mattum போட்டு நல்ல நாளை கெட்ட நாளா மாத்திடாதே
நான்: சரி சரி


தபூ
சங்கரின் சில கவிதைகள்:
நம் காதலுக்குக்காக
நீ ஒன்றும் செய்ய வேண்டாம்..,
நீ சம்மதம் மட்டும் சொல்..,
உனக்கும் சேர்த்து நான்
காதலித்துவிட்டு போகிறேன்.?!!

உன்னை கேலி செய்பவனைக் கூட
முறைத்துப் பார்க்கிறாய்..,
ஆனால்
உன்னை உயிராய்
காதலிக்கும் என்னை
சாதரணமாய் கூட
பார்க்க மறுக்கிறாயே ஏன்?

இனி தொலைப்பேசியில்
முத்தம் தராதே..,
அது..,
உன் முத்தத்தைஎல்லாம்
எடுத்துக் கொண்டு,
எனக்கு சத்தத்தை
மட்டுமே
தருகின்றது..,

நீ பேருந்து நிலையத்தில்
கசக்கி போட்ட
பயணச் சீட்டு கண்ணீர்
விடுகின்றது..,
பயணம் முடிந்ததே
என்ற ஏக்கத்தில்...,


Thursday, February 10, 2011

பிறிதொரு பிறவியில்...,


ஔவ்வை மொழிக்கேற்ப அறிய மானிடப் பிறவி வேண்டும்...,
கூன், குருடு, செவிடு இல்லாமல் பிறத்தல் வேண்டும்...,
பூரண ஆரோக்கியத்துடன், நீள் ஆயுளும் வேண்டும்..,
புதுவரவான என்னை வரவேற்கும் உறவுகள் வேண்டும்..,
துள்ளி திரிந்து களிக்கும் பால்யப் பருவம் வேண்டும்...,

அன்னை பிதா கடவுளெனப் போற்ற வேண்டும்..
ஆலயங்கள் தொழும் கடமை வேண்டும்....,
பருவத்தே ஞானத்தை பெறுகின்ற கல்வி வேண்டும்..,
எம்மொழியாகிலும் தாய்மொழியில் தனியன்பு வேண்டும்...,
என்னாட்டில் வசிப்பினும் தாய்நாட்டின்மீது தனிப் பற்று வேண்டும்..,

லட்சியம் என்றொன்று இருக்க வேண்டும்...,
அலட்சியம் இல்லாமல் அதை வெல்ல வேண்டும்..,
கவர்ச்சியில் தொலைந்து போகா கவனம் வேண்டும்...,
கள்ளமில்லா குழந்தை உள்ளம் வேண்டும்..,

விதிமேல் பழிப்போடாமல் மதியோடு வாழ்ந்திடல் வேண்டும்..,
மதம் ஒண்று, இனம் ஒன்று என்று எண்ணிடல் வேண்டும்...,
ஒற்றுமையே மனதில் ஒங்க வேண்டும்..,
பேதங்கள் அற்ற வாழ்க்கை வேண்டும்..,
வேதங்களை நம்புகின்ற‌ பக்தி வேண்டும்..,

துன்பத்தில் துணைவரும் நல்ல நட்பு வேண்டும்..,
உயிரினம் எதாகிலும் இரங்க வேண்டும்..,
பிறர் துன்பத்தில் பங்கேற்கும் மனது வேண்டும்..,
எவன் அழுதாலும் இறங்கித் துடைக்கும் விரல் வேண்டும்..,
மன்னிக்கும் மனம் வேண்டும்..,

இளமையில் காதல் வேண்டும்..,
காதலும் திருமணத்தில் கைகூட வேண்டும்..,
தயங்காமல் கூடி, தமிழ் பாடி ஆட வேண்டும்...,
ஆசைக்கு ஒன்று, ஆஸ்திக்கு ஒன்றாய் வேண்டும்..,

வீடு, மனை, பசு என பதினாறு பேறுகள் வேண்டும்..,
ஒருத்திக்கு ஒருவனாய் வாழ்ந்திடல் வேண்டும்..,
பண்பாடு காக்கும் பக்குவம் வேண்டும்..,
கலாச்சாரமும் கைவர வேண்டும்..,
மோகத்தை வெல்லுகின்ற மனம் வேண்டும்...,

தேவையற்ற தெருபெச்சு பேசாத நா வேண்டும்..,
தேவையற்ற தெருப் பார்வை பாராத பார்வை வேண்டும்..,
தமிழை வதம் செய்து வெல்ல வேண்டும்..,
ஏமாற்றத்தை ஏற்கும் இதயம் வேண்டும்..,

முதுமையிலும் விளையாடும் இளமை வேண்டும்..,
இருக்கும்வரை பாவங்கள் செய்யாத வாழ்க்கை வேண்டும்..,
இறக்கும்போது பிரிவுத் துயரை கண்ணில் ஏந்தும் இணை வேண்டும்...,
தூக்கத்திலேயே வலியில்லா மரணம் வேண்டும்...,
இறந்தாலும் இருக்கின்ற புகழ் வேண்டும்..,

அட, இவற்றைஎல்லாம் நான் சுகிக்க..??!!
பிறிதொரு பிறவியில்...,
இணையாய், தோழனாய், எல்லாமுமாய்
நீ வேண்டும்..,
கண்டிப்பாய் நீ வேண்டும்..,
கண்டிப்பாய் என்னருகில் நீ வேண்டும்...,
கண்டிப்பாய் என்னருகில் நீ மட்டுமே வேண்டும்...,

Sunday, February 06, 2011

நச்சென்று சில காரணங்கள்ஆசை மொழியானாலும், சண்டையானாலும் நான் சொல்ல வரும் கருத்துக்களை, என்னை முந்திக் கொண்டு அழகான வார்த்தைகளால் கூறிவிடுகிறாய்...., அந்த புரிதல் .

உன்னை நான் எதற்காகவும், எங்கும் விட்டுக் கொடுப்பதில்லை. அந்த என்
உள்ளுணர்வு .

யாரையுமே கண்ணோடு கண் கொண்டு பார்த்துப் பேசும் என்னால் உன்பார்வையை எதிர்கொள்ள முடியாமல், என் பார்வையை விலக்கிக் கொள்வேன். அந்த ஆயிரமாயிரம் வாட்ஸ் மின்சாரத்தை தேக்கி உள்ள உன்
பார்வை .

கண்களும், நினைவுகளும் திறந்திருக்கும் வேளையில் மட்டுமல்ல, அவை
மூடியிருக்கும் வேளையில்கூட விலகாமல் இருக்கும் உன்
நினைவு

நீயும், உன் நினைவுகளும் இல்லாத நொடிகளில், நின்று போன இதயத்தின்
அமைதி

என்னுடன் உன்னை கூட்டி செல்கையில், எங்கோ தொலைந்து போன
உன்னை அன்றிலிருந்து தேடும் என் தேடல்

என் உணர்வுகள் அனைத்தும் உன் தோளில் மட்டுமே இளைப்பாறவேண்டும்என்று எண்ணும் உன் கோரிக்கை.

ஆனால் நீ மட்டும் உன் உணர்வுகளை என்னிடம் பகிராமல் இருக்கும் உன் அகங்காரம்

என் வாழ்க்கைத் துணைக்கான அத்துனை தேடல்களின் இடத்தையும்ஆக்கிரமித்த
உரிமை.

உன்னோடு நானும், என்னோடு நீயும் இருக்கும்போது நாமாகிப் போனோமேஅந்த பன்மை

எல்லாரையும் போலதான் நமக்குள் சண்டை வருகிறது. எல்லாரையும்போலதான் சமாதானமும் ஆகிறோம், ஆனால், சமாதானமாக யார் விட்டுக்கொடுப்பதென நீளும்
சண்டை.

உனக்கு எதெல்லாம் பிடிக்காது என்பதை சொல்லாமல் சொல்லும் உன்
கோபம்

தவறு என்மீது இல்லையென்றாலும்.., என்னை ஒரு வார்த்தை, பதில்கூட பேசவிடாமல் செய்துவிடும் உன்
திறமை.

நாமிருவரும் சந்திக்கையில் நாம் பேச இயலா சூழலில் இருந்தால், நமக்குமுன்நம் கண்கள் பேசிவிடும் அந்த
கண்களின் மொழி.

கண்ணுக்கெட்டாத தூரத்தில் நீ இருந்தாலும், என் கைவிரல்களில் இருக்கும்உன்
வாசம்

பொறாமைக்கோ , கர்வத்திற்கோ துளிகூட நம்மிடம் இடமில்லை. வேறென்னவேண்டும் வாழ்வில்.

டா போட்டு யார் பேசினாலும் உனக்கு பிடிக்காது. ஆனால் நான் மட்டும்உன்னை நான் பார்த்த நாள் முதல் கொண்டு டா போட்டு தான் பேசுகிறேன். எனக்குமட்டும் நீ அளித்த அந்த
விதிவிலக்கு

யார் அதட்டலுக்கும் அசராத நான், உன் அதட்டலுக்கு மட்டும் அடைந்து விடும்
சரண்

நேரில் கேட்பதற்கு நேர்மறையாக ஒலிக்கும் உன் தொலைபேசி
குரல்

திரைப்படங்கள் நம்மிடம் தோற்றுப் போகும் நாம் பேசினால். நம் ஒரு நாள்சண்டையிலும், சமாதானத்திலும் ஒரு திரைப்படம் அளவிற்கு இருக்கும்
வசனங்கள்

என் உயிரோட்டம் எதனால் நிகழ்கிறது என்று எனக்கு தெரியாது. ஆனால்அத்துணைக்கும் நீயே
காரணம்

சோகங்களில் நான் சுருண்டு விழும்போதெல்லாம் ஆலம் விழுதாய்தாங்குவாய். துன்பங்கள் என்னுடையதென்றால், வலிகளை உன்னுடையதைமாற்றி கொள்ளும்
நேசம்

நம் ஐந்து விரல்களும் ஒன்றோடு ஒன்றாய் இருக்கையில் என் கோடிதுன்பங்களும் கால் தூசிதான். அந்த
வலி நிவாரணி.

சொன்னதையே நான் திரும்ப திரும்ப சொன்னாலும் , அலுக்காமல் கேட்கும்உன்
பொறுமை

இனி உன்னிடம் பேசவே மாட்டேன் என முடிவெடுத்து தொலைப்பேசியைவைத்த சிறிது நேரத்தில், மீண்டும் தொலைப்பேசியில் அழைத்து மாத்திப்பண்ணிட்டேன் என வழிகையில் , புரிந்துக் கொண்டு அமைதியாய் சிரிக்கும் ஒரு
குறுஞ்சிரிப்பு

"
நீயும்" வேண்டும் என்று ஆரம்பித்து, " நீ" வேண்டும் என்று நீண்டு இப்போதுநீ மட்டுமே" வேண்டும் என்றில் வந்து நிற்கும் என் "பாதை

சரியோ? தவறோ? என் பாதைகள் தெரியவில்லை. வழித்துணையாய் நீஇருக்கிறாய் என்று நம்பும் என்
ம்பிக்கை

யாருக்கும் எந்த தீங்கும் நீ நினைபபதில்லை. உன்னை துன்பபடுத்தும் நான்கூட நல்லா இருக்கணும்னு நினைக்கும்
அக்கறை.

நான் உன்னை காதலிக்கிறேன். கொஞ்சம் எனக்காக. நிறைய உனக்காகஎன்னும் என்
பங்கு .

இருபத்திநாலு மணிநேரம் பேசினாலும் அலுக்காது நமக்கு. அதுசரிஆசைமொழி அலுத்துப் போகும், அன்பு மொழி அலுத்து போகாது என்னும்
உணர்தல்

என் பைத்தியக்காரத்தனம் அத்துனையும் உனக்கு பிடிக்கும், பின் எப்படிஉன்னை எனக்கு பிடிக்காமல் போகும். என் பைத்தியக்காரத்தனத்தை சகித்துக்கொள்ளும் உன்
பொறுமை

என் எந்த செயலையும் நீ கேலி செய்வதில்லை. அப்படியே என்னைஏற்றுக்கொண்ட
மனப்பாங்கு

இறுக்கமாக விரல்களை பற்றிக் கொள்ளும்போது என் வலிகள் தெரிவதில்லை. எங்கே கற்றுக் கண்டாய் அந்த
வித்தையை

அன்பு மட்டும் போதாது காதலுக்கு என்று சொல்லி என் மீது நீ வைத்த
நம்பிக்கை

என்னை அழ வைப்பவன் நீ. என்னை சிரிக்க வைக்கவும் தெரிந்த
மாயாஜாலக்காரன்

உன் தோள்களில் நான் சாய்கையில் கண்ணில் கண்ணீர் மல்கும். கடைசி வரைநீ நிலைக்கப் போவதில்லையே என்னும்
ஏக்கம்

என் பாரங்கள் அத்துனையும் கரைத்துவிடும் உன் ஒற்றை சொல் ----------

காதல் என்பதற்கு என்ன அர்த்தமோ, அதைவிட அதிகமாகவே நீ தந்த அந்த கொடை.

நீ விளையாடும் விளையாட்டை
கூட இஷ்டமான எனக்காக விட்டு தராத பிடிவாதம்.

எனக்கென்று இறைவன் ஒதுக்கி வைத்த நேரம் இருக்கிறது. அவற்றைஉனக்காக மட்டுமே செலவழிக்கிறேன். உன்னை
கண்ட நாள் முதல் .

என் ஆதி முதல் அந்தம் வரை உனக்கு அத்துப்படி.., ஆனால் உன்??!! அந்த
புரியாத புதிர் .

எதன்பொருட்டோ பாராட்டவோ, திட்டவோ, இல்லை கருத்துஏதாவது தெரிவிப்பாய் என காத்திருக்க கிணற்றில் போட்ட கல்லாய் இருக்கும்
விட்டேற்றித்தனம்.

நான் உன்னிடம் நிபந்தனையிட , நமக்குள்ளே எந்த நிபந்தனையும் வேணாம்னு கூறி ...., உன் நிபந்தனையை என்மேல் திணிக்கும்
ஆளுமை

தெரிந்தோ, தெரியாமலோ என்மீது படிந்துவிட்ட உன்
சாயல்

எலியை பிடிக்கவும், தன் குட்டியை தூக்கவும் ஒரே பற்கள்தான் பயன்படுகிறதுபூனைக்கு. அதுப்போன்ற உன்
கரங்கள்.

அளக்க முடியாத அளவிற்கு சந்தோசங்கள் நிறைந்த வாழ்க்கை. நீவந்ததற்கு பிறகு..., சாமி கொடுத்த வரம். கடவுளே வரமாய் கிடைத்துவிட்ட திருப்தி எனக்கு

என் இதய ஆழத்தில் உள்ள உணர்வுகளை காட்டும் விளக்கு நீ


கடவுளும் நீயும் ஒன்று. ஏனெனில், இருவருமே எதிர்பார்ப்பவற்றை தராமல் ஏமாற்றும் ஏமாற்றுக்காரர்கள்.

நாளை என்ன நடக்குமோ யாமறியேன். ஆனால் நடந்த, நடந்துக்கொண்டிருக்கும் இந்த நிமிடங்கள் மறக்க முடியாதவை. என்னோடு நீ இருந்ததால் மட்டும்


காதல் என்பது எவ்வளவு தூயமையானதோ அதைவிட அதிக தூய்மையை கண்டேன் நான் உன்னிடம்

என் ரகசிய தேசத்தின் காவலாளி நீ . உன்னை மீறி என் ரகசியங்கள் எங்கும்போவதில்லை .

பொக்கிசமாய் பாதுகாக்கப் படவேண்டிய பொருள் என்று ஏதுமில்லை என்னிடம். உன் நினைவுகளைத் தவிர.

நிமிடத்திற்கு எத்தனைதரம் துடிக்குமோ இதயம் எனக்கு தெரியாது. நீ இருக்கிறாய் அத்தனை துடிப்பிலும்.

உன்னை பார்க்கும் ஒவ்வொரு முறையும் என் இதயத்துடிப்பின் துடிப்பு ஒன்றுகாணாமல் போய்விடுகிறது.
திருடா

எவ்வளவு பாரங்கள் இருந்தாலும்
எல்லாம் தீர்ந்து இலகுவாகிறது மனது நீ அருகில் இருக்கையில் மட்டும்.

மனத்திலும், உடலிலும் எத்தனை வலி இருந்தாலும் சாய்ந்த உடனே வலிகளை போக்கிவிடும் உன்
மடி

இந்த நிமிடமே நான் இறந்துகூட போவேன் சந்தோசமாய். ஏனெனில் என்மீதுஅன்பு செலுத்தும்
தேவதையை கண்டுக் கொண்டேன், கண்டு கொண்டேன்.

வெகுநாட்கள் காணாமல் இருந்துவிட்டு பார்க்கும்போது பிணைத்துக்கொள்ளும் கைகளில் உள்ள
நெருக்கம்

கண்டு விட்டு பிரியும்போது 'திரும்பி பார்க்கக் கூடாது" என எனக்கு நானேநூறு முறை சொல்லியும், சொல்பேச்சுக் கேளாமல் அடமாய் திரும்பிபார்க்கையில்..., எப்படியும் நான் திரும்பிப் பார்ப்பேன்..., கையசைக்கலாம் எனக்பார்த்திருக்கும் உன்
காத்திருப்பு

கிறுக்குத் தனமாக எதாவது செய்து விட்டு உன்னிடம் நான் வாங்கும்
குட்டு, வலிக்கும். ஆனா வலிக்காது

என்னை பொறுத்தவரை வண்டி ஓட்டுவது ஒரு சிலருக்குதான் அழகு. அப்படிஓட்டுபவர்களில் நான் ரசித்தவர்கள் ஒரு சிலரே. அதிலும் உனக்கே
முதலிடம்.

என்ன தவறு நான் செய்தாலும் , உன்னிடம் எனக்கு கண்டிப்பாக உண்டு
மன்னிப்பு.

உன்னிடம் ஏதாவது ஒரு கோரிக்கை வைத்து விட்டு, கண்டிப்பாய் எனக்காக இதை செய்வாய் என நம்பி இருக்கும் என் ஏமாளித்தனம்


என் எதிர்ப்பார்ப்புகளை பூர்த்தி செய்யாவிட்டாலும்... கையை சுடும் என்றாலும் தீயை தொடும் பிள்ளைப் போல் மீண்டும் , மீண்டும் உன்னிடமே எதிர்நோக்கும் என் எதிபார்ப்பு


இந்த கேள்விக்கு இந்த பதில்தான் சொல்லுவே..., இப்படி பேசினால்இப்படி எதிர்கேள்வி கேட்பே னு நம்பி பேசினால் கண்டிப்பாய் அந்த கேள்வி பதிலை choice விட்டுவிடுவாய்.

அந்த choice களை இன்றுவரை தொடர்ந்து வரும் உன் சாகசம்.

ஆனால் அந்த choice களை நீ தொடர்வதால் உன்னிடம் இன்னும்கூட சொல்லாமலே விட்ட ரகசியங்கள்

நாம் அறிந்தோ அறியாமலோ நமக்குள் ஒன்றாய் அமைந்துவிட்ட ரசனைகள்.

தொலைப்பேசியில் தான் பேசுவோம். முகம் காணாவிட்டாலும் என்உணர்வுகளை அப்படியே உள்ளது உள்ளபடி சொல்லும் உன்
கெட்டிகாரத்தனம்.

பிறந்த நாள், பொங்கல், திபாவளி அது, இது லொட்டு லொசுக்குக்கு ஏன் வாழ்த்தலை னு கேட்டால், அந்த நாளும் மற்றொரு நாளே னு சமாளித்து நீ அள்ளிவிடும்
தத்துவ முத்துக்கள்

எனக்கு பிடிக்காது என அந்த டாபிக்கையே விலக்குவதாக்..., நடிக்கும் அந்த
நடிப்பு

எனக்கு பிடிக்காத டாப்பிக்கை நீ தொடவே மாட்டேன் னு நம்பி இறுமாந்திருக்கையில், அதை தெரிந்தும் திடுமென்று அதைபத்தி பேசி என்னை நிலைகுலைய வைக்கும்அந்த திமிர் .

யாரையும் நம்பாதே னு சொல்லி, உனக்கே தெரியாமல்.., உன்னை மட்டுமே நம்பணும்னு திணிக்கும் உன்
திணிப்பு.

உன்னை மட்டுமே நான் கொண்டாடனும்னு நினைக்கும் உன்
ஆசை

ஆனால், அதுபோல் நீ நடக்காமல் என்னை அவமதிக்கும் உன்
செயல்

இப்படி ஒன்றல்ல இரண்டல்ல இன்னும் ஆயிரம் காரணம் வைக்க முடியும் அளவுக்கு என்னை கவிஞனாய் மாற்றிய
பெருமை உனது.

வேறெதற்கும் பிறக்காமல் உன்னை காதலிக்க மட்டுமே பிறந்த மாதிரி இருக்கும்என் வேட்கை

இப்படி பொது இடத்துல எழுதலாமான்னு என்மீது கோபப்பட்டுக்கொண்டே இதை ரசிக்கும் உன் ரசனை

இளங்கதிர் புறப்படும் வரை நீண்ட தொலை பேசி உரையாடல்கள். விடிந்தப்பின்னும்..., முடியாமல் தொடர்ந்த..., குறுஞ்செய்திகள்..,

வேண்டாம் முடித்துக் கொள்வோம் என தினம் தினம் முற்றுப்புள்ளி வைத்து அதுவே இன்று தொடர்புள்ளியான அதிசயம்.

சட்டென்று கோபப்படும் நான். நீ என்ன பிழைசெய்தாலும் உன்மீது எனக்கு இதுநாள் வரை வராத கோவம்.

கண் குவளைமலர், சிறப்பு தாமரைன்னு கவிஞர்கள் மலருடன் ஒப்பிடுவார்கள். அதுப் போல் உன்னை மலருடன ஒப்பிட சொன்னால் அனிச்சைமலருடன்தான் ஒப்பிடுவேன்.


அனிச்ச மலர் கூட முகர்ந்து பார்த்தால்தான் வாடும். ஆனால் மனதிற்குள் சிறிதாக மருகினாலும் உன் முகம் வாடிவிடும். அப்படி என்றால் உன்னை எதடுன் ஒப்பிடுவது என தெரியாமல் திணறும் என் மனது.

நான் சொல்றதெல்லாம் பொய், எங்கிருந்தோ சுட்டதுனு தெரிஞ்சும் என்னைநம்பி உக்காந்து படிக்குறே பாரு அந்த வெகுளித்தனம்.

தலைப்பிற்கும், சில கருத்துக்கள் தந்ததற்கும் நன்றி:
அனாதைக் காதலன்