Saturday, June 27, 2020

இதுக்கு ஈசி சேர்ன்னு பேரு வச்சது யாரு?! - கிராமத்து வாழ்க்கை

பழமையின் முடிவையும், புதுமையின் ஆழம்பத்தினையும் கண்டு களித்த மத்திய வயதுடையவர்களின் நினைவுகளை கிளறி விடும் சிறு முயற்சியே இந்த கிராமத்து வாழ்க்கை தொடர்...

Friday, June 26, 2020

அருள்மிகு சோழராஜா திருக்கோவில், ஒழுகினசேரி-புண்ணியம் தேடி ஒருபயணம்.

லாங்க்.. லாங்க்.. அகோ.. ஒன்ஸ் அப்பான் எ டைம்..  கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் கோவில்களை பற்றிய தொடர் ஒன்றை பதிஞ்சது உங்களுக்கு நினைவிருக்கலாம்.   இப்ப லாக் டவுன் காரணமா எங்கும் போகமுடியாத சூழல். ஆடின காலும், பாடின வாயும் மட்டுமல்ல ஊர்சுற்றி எஞ்சாய் பண்ணினதை பதிவாக்கின மனசும்   சும்மா இருக்காது. பதிவாக்காக  எங்காவது போகலாம்ன்னா முடியல. எதையாவது மீள் பதிவா போட்டுக்கலாம்ன்னு முடிவு பண்ணியாச்சுது.  சரி, எருமைமாடு அசை போடுற மாதிரி டூர் போய் வந்த போட்டோக்களை பார்த்துக்கிட்டே வரும்போது சில கோவில்களை பதிவாக்காம இருந்தது தெரியவர லாஸ்ட் பாலில் சிக்ஸர் அடிச்சு ஜெயிச்ச மாதிரி ஒரு பீல் வந்துச்சு.. உடனே இன்னிக்கு அதை பதிவாகவும் போட்டாச்சுது.  

Thursday, June 25, 2020

க்ராஸ் கட் மார்க்கெட் வயர் கூடை - கைவண்ணம்

கொரோனா வந்தாலும் வந்தது, விடிஞ்ச பிறகு எழுந்து , எட்டு மணிக்கு காபி குடிச்சு, பத்து மணிக்கு டிபன் சாப்பிட்டு என வாழ்க்கை முறையே மாறிட்டுது... சோம்பேறித்தனம் மெல்ல எட்டி பார்க்க ஆரம்பிச்சிருக்கு. ஒரு வாரத்தில்  முடிக்கும் 2 ரோல்  ஒயர் கூடையை பின்னி முடிக்க ஒரு மாசத்துக்கும் மேல ஆச்சு. கூடை பின்னி ஒரு கைப்பிடியும் போட்டு வச்சு  21 நாள் ஆச்சு. பதிவு போடனுமேன்னுதான் இப்பயும் முடிச்சேன். இல்லன்னா, அதுவும் முடிச்சு இருக்க மாட்டேன். 

Wednesday, June 24, 2020

ராமனின் பெண்பால்தான் இந்த மணிமேகலை - வெளிச்சத்தின் பின்னே...

சிலப்பதிகாரத்தில் பாவப்பட்ட கதாபாத்திரம் யார்ன்னு கேட்டா  யாரை சொல்வீங்க? மாதவியிடமும், பிறகு எமனிடமும் கணவனை பறிகொடுத்த கண்ணகியையா?! தாசிக்குலத்தில்  பிறந்து கற்பு நெறியோடு வாழ்ந்தாலும் சந்தேகம் கொண்ட கோவலனால் கைவிடப்பட்ட மாதவியையா?! ரெண்டு பெண்களோடும் வாழ்ந்து, பொய் குற்றம் சாட்டப்பட்டு தலை வெட்டுண்ட  கோவலனா?! அதிகாரிகளை நம்பி தீர விசாரிக்காமல்  தண்டனை வழங்கி தப்பென்று தெரிந்தபின் உயிர் விட்ட பாண்டிய மன்னனா?! அல்லது கணவனோடு சேர்ந்து உயிர்விட்ட பாண்டிமாதேவியா?! இல்லை வாழ்வில் எந்த சுகமும் அனுபவிக்காத மணிமேகலையா?! சிலப்பதிகாரத்தில் பாவப்பட்ட கதாபாத்திரம்ன்னா அது மணிமேகலைன்னுதான் நான் சொல்வேன்.  

ஏன் மணிமேகலையை பாவப்பட்ட கதாபாத்திரம்ன்னு சொல்றேன்னு இன்றைய வெளிச்சத்தின் பின்னே... பகுதியில் பார்க்கலாம்..

Tuesday, June 23, 2020

சத்தான முட்டை+கேரட் பொரியல் -கிச்சன் கார்னர்

கேரட் பொரியலில் துவரம்பருப்போ அல்லது பை பருப்போ சேர்த்து கூட்டு செய்வோம். இல்லன்னா, தேங்காய் துருவல் சேர்த்து பொரியல் செய்வோம். முட்டை போட்டு புதுவிதமான பொரியலும் செய்யலாம். முட்டையில் இருக்கும் வைட்டமின் ஏ,பி,சி,டி,ஈ.. அயோடின், பாஸ்பரஸ், துத்தாநாகம் போன்ற சத்துகளும், கேரட்டில் இருக்கும் வைட்டமின் ஏ,சி,கே, பொட்டாசியம் மாதிரியான சத்துக்களும் சேர்ந்து நமக்கு அதிகப்படியான சத்துக்களை தரும்ன்னு சொல்லி குழந்தைகளை ஏமாத்தலாம்..

Sunday, June 21, 2020

குரங்கு கையில் சிக்கிய பூமாலை போல இந்த பாட்டு - பாட்டு புத்தகம்

கோதுமை ஊற வைத்து ஆட்டி,  பால் எடுத்து, புளிக்க வைத்து, வாணலியில் நெய் சேர்த்து அதில் நீர்த்த கோதுமை பாலை சேர்த்து கிளறி, சர்க்கரை சேர்த்து கிளறி, வறுத்த முந்திரி, திராட்சை ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி, சுருண்டு வரும்போது இறக்காம விட்டால் அடிப்பிடிச்சு மொத்த உழைப்பும் வீண்,

Saturday, June 20, 2020

லெமனே இங்கு சிவனாய்.. -சுட்ட படம்

பக்கம் பக்கமாய் படிக்கும் இம்சையிலிருந்து இன்னிக்கு விடுதலை.. இணையத்தில் பார்த்து ரசித்தவற்றின் தொகுப்பு இது.. முன்னாடியே பார்த்திருந்தால் மன்னிச்சு...

Friday, June 19, 2020

ஸ்ரீதட்ஷிணாமூர்த்தி சுவாமிகள், பள்ளிதென்னல்-பாண்டிச்சேரி சித்தர்கள்.

கடவுள் விசயத்தில் இருவேறு மாறுபட்ட கருத்துகள் இருந்தாலும்,  இத்தனை சித்தர்கள் ஒரே இடத்தில் ஜீவசமாதியானது அதிசயத்திலும் அதிசயம்தான்.  நம்மை மிஞ்சிய சக்தியின் அருள் இல்லாமல் இது சாத்தியமில்லை என்பது புரியும்.  நேரமின்மை காரணமாக பல சித்தர்களின் ஜீவசமாதிகளை தரிசனம் செய்யமுடியவில்லைஇருந்தாலும் இறையருளும் குருவருளும் இருந்தால் விரைவில் மீதமுள்ள ஜீவசமாதி கோவில்களுக்கு சென்று அதைப்பற்றியும் ஒரு நீண்ட தொடர் எழுத ஆசை. போனவாரம் நாம ஸ்ரீ வண்ணாரபரதேசி சுவாமிகளின் ஜீவசமாதியை பாண்டிச்சேரி சித்தர்கள் வரிசையில் தரிசித்தோம். அந்த வரிசையில் இந்த வாரம் நாம பார்க்கப்போவது பள்ளித்தென்னல்ல இருக்கிற ஸ்ரீதட்ஷிணாமூர்த்தி சுவாமிகளின் ஜீவசமாதியினை...

Wednesday, June 17, 2020

ராமனுக்கும் அணிலுக்கும் என்ன சம்பந்தமென தெரியுமா?! - தெரிந்த கதை, தெரியாத தகவல்...

பாலையா என்னும் பழம்பெரும் நடிகர் பாமா விஜயம் படத்துல ஒரு வசனம் சொல்வாரு. வாழ்க்கை என்பது விசித்திரமானது. பாடம் சொல்லிக்கொடுத்து பரிட்சை வைக்காது. பரிட்சை வச்சுட்டுதான் பாடமே சொல்லிக்கொடுக்கும்ன்னு சொல்வாரு.  அதேமாதிரிதான் காலமும்..... காலத்தால் நிகழ்த்தப்படும் ஒவ்வொரு செயலும் வீணாய் நிகழ்வதில்லை. அந்த நிகழ்வின் காரண காரியத்தின் பலன் பின்னாளில் தெரியவரும்.  நாம் வரமா நினைச்சது சாபமா மாறும். சாபம்ன்னு வெறுத்தது வரமாகும்... சாபம் வரமான கதை புராணங்களில் பார்த்திருக்கிறோம். ராமாயணத்தில் நிகழ்ந்த ஒரு துர்மரணம் இரு வரமானதை இன்றைய தெரிந்த புராணம் தெரியாத தகவலில் பார்க்கப்போகின்றோம்..

Tuesday, June 16, 2020

புழுங்கல் அரிசியிலும் இடியாப்பம் செய்யலாம்!!- கிச்சன் கார்னர்

எங்க வீட்டில் யாருக்கும் இடியாப்பம் பிடிக்காது.   இடியாப்ப செய்றதில்லைன்றதால இடியாப்ப மாவு வீட்டில் இருக்காது. மாமனாருக்கு  உடம்பு சரியில்லைன்னா இரவு உணவுக்கு  கண்டிப்பா  இட்லியோ இல்ல இடியாப்பமோ இருக்கனும். அவருக்கு என்ன வேணும்ன்னு முதல்லியே சொல்லமாட்டாரு. திடீர்ன்னு அரை மணிநேரத்துக்கு முந்திதான் சொல்வாரு :-(

Monday, June 15, 2020

கவலைகளை மறக்க இந்த பாப்பாவோட சிரிப்பை பாருங்க -ஐஞ்சுவை அவியல்

போர்க்கால அவசரத்துக்கு உதவும்ன்னு கோவில்,  அரண்மனைகளிலிருந்து கோட்டைக்கு வெளியில் அல்லது காடு, மலைகளுக்கோ போற மாதிரி சுரங்கப்பாதை  அமைச்சிருப்பாங்களே! அதுமாதிரி, ஒரு நாட்டுக்கும் இன்னொரு நாட்டுக்கும் சுரங்கப்பாதை அமைக்கலாமில்ல!!

Saturday, June 13, 2020

அரசு இயந்திரம் இயங்க இந்த 6823 ஸ்பேர் ஸ்பார்தான் காரணம்-சுட்ட படம்

பக்கம் பக்கமா படிக்கும் இம்சையிலிருந்து இன்று விடுதலை... இணையத்தில் வலம் வந்த படங்கள், வீடியோக்களின் தொகுப்பு இது..

Friday, June 12, 2020

ராகு-கேது தோஷம் நீக்கும் திருப்பாம்புரம்- புண்ணியம் தேடி

முன்னலாம் குழந்தை பிறந்ததும் ஜாதகம் எழுத,  திருமணத்திற்கு பொருத்தம் பார்க்கவும், திருமணத்திற்கு நாள் குறிக்கவும்தான் ஜோதிடர்களிடம் போவாங்க.  வீட்டில் யாராவது காணாமல் போனால், தீக்கமுடியாத பிரச்சனைகளுக்காகவும் ரொம்ப அரிதா ஜோதிடம் பார்க்க போவாங்க. காது குத்து, சீமந்தம், வீடு கிரகப்பிரவேசம் மாதிரியான நிகழ்ச்சிகளுக்கு வீட்டில் இருக்கும் பெரியவர்களே பஞ்சாங்கம் பார்த்து நாள் குறிப்பாங்க. இப்ப யாருக்கும் பஞ்சாங்கம் பார்க்க தெரிவதில்லை. அதனால் எல்லாத்துக்கும் ஜோதிடர்கிட்ட போறாங்க. அதுமட்டுமில்லாம,   ஜாதகம் பார்த்து ரொம்ப நாள் ஆச்சுதேன்னுலாம் போறவங்களும் இருக்காங்க. 

Wednesday, June 10, 2020

வருவேன் என்ற ஒற்றை வார்த்தைக்காக காத்திருந்த சகுந்தலையின் காதல் - வெளிச்சத்தின் பின்னே..

காதல் என்னவெல்லாம் செய்யும்?! அள்ளி அணைக்கும், அழ வைக்கும், கெஞ்சும், கொஞ்சும், காத்திருக்கும், காணாமல் போகும்... சகுந்தலையின் காதலும் அப்படித்தான்.. பார்த்ததும் காதல் கொண்டது, குலம் குணம் தெரியாமல் மணம் புரிந்தது, தன்னையே தந்தது, வருவேன் என்ற ஒற்றை வார்த்தைக்காக காத்திருந்தது, யார் நீ என கேட்டு எட்டி உதைத்தபோதும் பல ஆண்டுகளாக காத்திருந்தது... திரும்பி வந்த துஷ்யந்தனை ஏற்றுக்கொண்டது.....  அதுவரை வாழ்வில் எந்த சுகமும் அனுபவித்திராத சகுந்தலை ராஜபோகத்தில் திளைத்தாள்.  அத்தோடு சுபம் போட்டுடலாமா?! காத்திருந்த சகுந்தலை துஷ்யந்தனுக்கு ஒரு பரிசு தந்தாள். அது என்ன பரிசு என  வெளிச்சத்தின் பின்னே.. பகுதியில் பார்க்கலாம்...

Tuesday, June 09, 2020

யாராச்சும் ஃபீரியா இருந்தால் இதுக்கு பேர் வச்சிட்டு போங்க! - கிச்சன் கார்னர்

சிலபல வருடங்களுக்கு முன் மதுரை, திருச்செந்தூர், குற்றாலம்ன்னு தென் தமிழகத்தில் ஒரு வாரம் குடும்பத்தோடு டூர் போனோம். ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஆண்டாளை தரிசனம் செய்து முடிச்சோம். அப்பதான் கோவிலில் அன்னதான திட்டம் அறிமுகப்பட்டிருந்தது. தரிசனம் முடிச்சு வரும் வெளியூர் பக்தர்களுக்கு டோக்கன் கொடுத்துக்கிட்டு இருந்தாங்க. எங்க வீட்டில் யாரும் அன்னதானத்தில் சாப்பாடு வாங்கி சாப்பிடுறதை கௌரவக்குறைச்சலா நினைக்க மாட்டோம்.  அதனால் டோக்கன் வாங்கி சாப்பிட உக்காந்தோம்...

Monday, June 08, 2020

பெண்மனசு ஆழத்தையும் தெரிஞ்சுக்கலாம்.. ஆழ்கடல் ரகசியத்தை தெரிஞ்சுக்க முடியாதுபோல!! - ஐஞ்சுவை அவியல்

மாமா! என் போன்ல வால்பேப்பரா வைக்க நல்லதா ஒரு  கடல் படம் தேடி தாயேன்..

என்ன புள்ள! திடீர்ன்னு கடல் படம் கேக்குறே?!

இன்னிக்கு சர்வதேச பெருங்கடல்கள் தினமாம். அதனால் அதுபத்திய பதிவை பார்த்தேன். அதான் கடல் படம் வைக்கலாம்ன்னு..
குரங்கு, யானை, விமானம், கடல் இவற்றின்மீதான பிரமிப்பும், ஆர்வமும் எத்தனை வயதானாலும் மக்களுக்கு  குறையாது.  இந்த பூமி எத்தனையோ விந்தைகளை தன்னுள் கொண்டுள்ளது. அதற்கு சற்றும் குறைவில்லாதது  கடலும், கடல் சார்ந்த விசயங்களும்...    கடலைவிட பிரம்மாண்டது கடல் சார்ந்த விசயங்கள்..
மெரினா கடற்கரைக்கு போய் இருக்கியே! அதை பார்த்தே பிரமிச்சு நின்னியே!  தமிழ்நாடு முழுக்க நீண்டிருக்கும் கடற்கரைகளின் நீளம் எவ்வளவு தெரியுமா?! 

தெரியாது மாமா...

தமிழ்நாட்டில் 997 கிமீ நீளத்துக்கு கடற்கரை இருக்காம். இந்தியாவில் இருக்கும் கடற்கரை 7,517கிமீ ஆகும்.  உலகத்தில் இருக்கும் மொத்த கடற்கரைகளின் நீளம்  5,50,000 கிமீ.  கடலை ஒட்டிய கரையே அஞ்சரை லட்சம் கிமீக்கு மேல் நீண்டிருக்குதுன்னா.,  கடல் எந்தளவுக்கு பரந்து விரிஞ்சிருக்கும் . அப்படி பரந்து விரிந்திருக்கும் கடலில் இருக்கும் நீரின் அளவு எவ்வளவு இருக்கும் தெரியுமா?! 1450,00,00,00,00,000,0000 மெட்ரிக் டன் அளவுக்கான நீர் இருக்காம் . இது பூமியின் மொத்த எடையில் 0,022  சதவிகித எடைதான் இருக்காம்.

போ மாமா! பொய் சொல்லாத! பூமியின் மேற்பரப்பின் மூன்றில் இரண்டு பங்கு கடல்ன்னு படிச்சிருக்கேன். அப்படி இருக்க, 0.022 சதவிகித எடைதானா இருக்கும்?!
ஆமா புள்ள, நீ சொல்ற பூமியின் மூன்றில் இரண்டு பங்கு நிரைஞ்சிருக்கும் கடலானது பூமிக்கு மேலதான் இருக்கு,  பூமியின் குறுக்கு வெட்டு நீளம் கிட்டத்தட்ட 12,700கிமீ. , இதுல முதல் 5 டூ 10 கிமீக்குதான் கடல் தண்ணி இருக்கு. மிச்சம்லாம் மணல், பாறைகள், கற்கள், மலைகள்ன்னு இருக்கு. அதனாலதான் கடல்நீரின் எடையின் சதவிகிதமாகும்.      என்னதான் கடல் மூன்றில் இரண்டு பங்கு பூமியில் இருந்தாலும் பூமியின் மொத்த எடையில் ஒரு பங்கு கூட இல்ல. உதாரணத்துக்கு நம்ம உடம்பில் அதிகமா தென்படுவது தோல்தான். ஆனா, மொத்த தோலின் எடை எவ்வளவு இருக்கும்?! அதுமாதிரிதான் பூமியை மூடியிருக்கும் தோல்தான் கடல்ன்னு வச்சுக்கலாம். பூமிக்கடியில் இருக்கும் நெருப்பு குழம்பால் பூமியின் மேற்பரப்பு பாதிப்படையாமல் காக்கும் ஒரு இயற்கை அரணே இந்த கடல்ன்னு சொல்லலாம். 
உலகில் அட்லாண்டிக், பசிபிக், இந்தியன் பெருங்கல், அண்டார்டிக், ஆர்டிக்ன்னு மொத்தம்  5  பெருங்கடல்கள் இருக்குன்னு சின்ன வயசில் படிச்சிருக்கோம். இப்ப,  அட்லாண்டிக் பெருங்கடலை வட அட்லாண்டிக், தென் அல்டாண்டிக்ன்னும் பசிபிக் பெருங்கடலை வட பசிபிக், தென் பசிபிக்ன்னு பிரிச்சு மொத்தம் ஏழு பெருங்கடலா ஆக்கி இருக்காங்க.  தமிழ் இலக்கியத்தில்  குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலைன்னு  நிலத்தை வகைப்படுத்தி வச்சிருக்கிற மாதிரி பெருங்கடல்களை உப்புக்கடல், கரும்பச்சாற்றுக்கடல், மதுக்கடல், நெய்க்கடல், தயிர்க்கடல், பாற்கடல், சுத்தநீர்க்கடல்ன்னு ஏழா பிரிச்சு வச்சிருந்ததற்கான குறிப்புகள் இருக்கும்.

பெருங்கடல்களின் பகுதிகளாக கடல், வளைகுடா(Gulf) விரிகுடா(Bay), நீரிணை(Strait)  இருக்கு. நாலு பக்கமும் கடல் நீரால் சூழ்ந்தது தீவுன்னும் சொல்றோம். அதாவது கடலுக்கு அடியில் இருக்கும் மலைகளின் உச்சிப்பகுதி கடலுக்கு வெளியே நீட்டிக்கிட்டு இருக்கும் பகுதிதான்  தீவா உருவெடுக்குது. , மூன்று பக்கமும் கடல் நீராலும், ஒரு பக்கம் நிலத்தாலும் மூடியது தீபகற்பம்.  இந்தியா தீபகற்ப நாடுன்னு சின்ன வயசில் படிச்சதை மறந்திருக்க மாட்டேன்னு நினைக்கிறேன்.


ஐந்து வகை பெருங்கடல்களில் பசிபிக் பெருங்கடல்களில்  பசிபிக் பெருங்கடல்தான் பெரியது.இப்ப இருக்கும் உலக நாடுகள் மொத்தமும் சேர்த்து பசிபிக் கடலில் வச்சாலும் இன்னொரு ஆப்பிரிக்க கண்டத்தின் நிலப்பரப்பையும் வைக்குற அளவுக்கு பசிபிக் பெருங்கடல் பெரிசாம்.   சீனா, ஜப்பான் நாடுகளுக்கு கிழக்காகவும், அமெரிக்காவுக்கும் மேற்காகும் இடைப்பட்ட பகுதில் பரந்து விரிநதிருக்கும் பசிபிக் பெருங்கடல் சில இடத்தில் இதன் அகலம் 16,000கிமீ இருக்கு.  அதனால்தான் பசிபிக் கடலை தென், வட என பிரிச்சு வச்சிருக்காங்க. பூமி கிழக்கு பக்கமா சுத்துவதால், காத்து மேற்கு பக்கமா வீசும். இடையில் எந்த தடுப்பும் இல்லாததால் பசிபிக் கடல் காற்றின் வேகம் அதிகம் அதனால், கிழக்கு நோக்கி கப்பலை ஓட்டுறது மிக சிரமம்.  தென் பசிபிக் பகுயில் காற்றின் வேகத்தால் பெரியப்பெரிய அலைகள் உருவாகுது. இதுவரை உருவான சுனாமி மொத்தமும்  இந்த பசிபிக் கடலில்தான் உருவாச்சு.  பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் நடுக்கங்களால் உருவாகும் பெரும் அலைகள் ஜப்பானிய கடற்கரையைத்தான் தாக்கும். 
அண்டார்டிகா பெருங்கடலிலிருந்து பிரிந்து வரும் பனிப்பாறைகள் எட்டுமாசம் வரைக்கும் உருகாம பசிபிக்  கடலில் மிதந்து பல இடங்களுக்கும் போகுமாம்.  சில பாறைகள் நியூசிலாந்து வரைக்கும் நகர்ந்து போய் இருக்குன்னா பார்த்துக்கோயேன்.  கரையிலிருந்து கடலுக்குள் ஓரிரு மைல்கள் வரைக்குதான்  எல்லை பிரிச்சு வச்சிருக்காங்க. எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சராசரியா 600 அடி ஆழம் வரைக்கும் இருக்கும். கடலோட ஆழமே அதுக்கு பிறகுதான் ஆரம்பிக்குது.  எல்லை பிரிக்கப்பட்ட பகுதிகளுக்கு அப்பால் இருக்கும் கடல் பகுதிகளுக்கு காண்டினெண்டல் ஷெல்ப்ன்னு பேரு.  இதிலும் 3%கடல்தான் இருக்கு.  காண்டினெண்டல் ஷெல்ப்க்கு பிறகு97% கடல் இருக்கு. இங்கு  குறைஞ்சது 13,000 அடியிலிருந்துதான்  ஆழமே ஆரம்பிக்குது. அதுக்கு அபிஸ்(abyss)ன்னு பேரு. இங்கதான் நிலத்தில் இருப்பதுபோல் எரிமலைகள், சமவெளிகள், மேடுகள், பள்ளங்கள், மலைத்தொடர்கள் இருக்கு.  சூரிய ஒளி 100 அடி ஆழம் வரைக்கும்தான் போகும். 100 அடிக்கு மேல ஆழம் போகப்போக வெளிச்சம் குறைஞ்சுக்கிட்டே வந்து கும்மிருட்டாகிடும்.  இருட்டில் என்ன இருக்கும்?! ஒன்னுமே இருக்காதுன்னு நாம நினைச்சுக்கிட்டிருக்கோம்..


கடலுக்கடியில் ஏதோ இருக்குன்னு அரிஸ்டாட்டில் சொல்ல, அவரது அலெக்சாண்டர் கண்ணாடியில் பலூன் மாதிரி செஞ்சு, அதில் எந்தவித கருவியும் இல்லாம, மூச்சை அடக்கிக்கிட்டு   கடலுக்குள் போய் இருக்கார். மிகப்பெரிய திமிங்கலத்தை பார்த்ததா சொன்னார். அதுதான் கடலுக்குள் நடந்த முதல் ஆராய்ச்சி.. பலர் பல்வேறாய் முயன்றாலும் 1960ல சுவிட்சர்லாந்தை சேர்ந்த பிக்கார்ட் என்பவர் நீர்மூழ்கி கப்பலை உருவாக்கி ட்ரீஸ்டின்னு பேர் வச்சார். அதில் உக்காந்துக்கிட்டு செங்குத்தாக கடலில் இறங்கினார்.  4 மணி நேரமாகியும் அவரிடமிருந்து எந்த தகவலும் இல்லை.  அஞ்சு மணி நேரம் கழிச்சு தரையை தொட்டுவிட்டேன்னு வயர்லெஸ்சில் தகவல் அனுப்பினார். பிக்கார்ட்  கடலுக்குள் இறங்கிய இடம்தான்  ‘மெரியான் ட்ரெஞ்ச்’. இங்கு கடலின் ஆழம்  ஆறே முக்கால் மைல்.  அதாவது 35 ஆயிரத்து 808அடி. நம்ம எவரெஸ்ட் சிகரம் 29 ஆயிரத்து 28அடிதான். அதைவிட  அதிக ஆழமானது இந்த மரியானா ட்ரெஞ்ச். அங்க பிக்கார்ட் 20நிமிசம் இருந்தார்.  இதுவரை மனிதன் கண்டுபிடித்த மிகமிக ஆழமான இடம் இது. இதுவே இப்பவரைக்கும் சாதனையா இருக்கு.  கடல் சார்ந்த ஆரய்ச்சிகள் உலகம் முழுக்க குறைச்சலாகவே இருக்கு. மிகச்சவாலான இந்த வேலைக்கு எட்டு முதல் கோடி ரூபாய் வரைக்கும் சம்பளம் பேசப்படுது. ஆராய்ச்சிக்காக மட்டுமில்லாம எரிவாயு, எண்ணெய் குழாய்களை பதிக்கவும், கண்டங்களுக்கு இடையிலே தகவல் பரிமாற்றத்துக்காக கேபிளை பதிக்க, அவற்றை பராமரிக்க  ஆழ்கடல் மூழ்கு வீரர்கள் பயன்படுறாங்க.  இந்தியாவில் ஆழகடல் மூழ்கு வீரர்களுக்கான பயிற்சி வசதிகள் இல்லைன்னாலும் ஆனாலும் ஆஸ்திரேலியா, நார்வே மாதிரியான நாட்டில் பயிற்சிப்பெற்ற  800 ஆழ்கடல் வீரர்கள் இந்தியாவில் இருக்காங்க.   பெல் டைவிங்ன்னு சொல்லப்படும் இந்த ஆழ்கடல் வீரர் பயிற்சிக்கு பத்து லட்சத்துக்கும் மேல் செலவாகுமாம். 


 காற்றும், வெளிச்சமும் இல்லாத,  தண்ணீர் சூழ்ந்த இடத்தில் வேலை பார்க்கும் துணிவு இருக்க வேண்டும்.  டைவிங் பெல் அமைப்பினரால் மட்டுமே இந்த வீரர்களுக்கு உடைகள் கொடுக்கப்படும். அந்த அமைப்பின்மூலம் வெதுவெதுப்பான காற்றும், நீரும் அடிக்கப்படும். ஆக்சிஜன் சிலிண்டர், மற்ற உபகரணங்கள் இந்த அமைப்பின்மூலமே கொடுக்கப்படும்.  டைவிங் பெல் அமைப்புக்கு சொந்தமான கப்பலின் சாச்சுரேசன் சேம்பர்ன்ற பகுதியிலிருந்து வீரர்கல் கடலுக்குள் இறக்கப்படுவார்கள்.  ஒவ்வொரு வீரருக்கும் மூச்சு விடும் முறை மாறுபட்டு இருக்கும். அதனால் இவர்களுக்கு ஆக்சிஜனும், ஹீலியமும் கலந்த காற்றைதான் சுவாசிக்க கொடுப்பாங்க.  நாம் சுவாசிக்கும் காற்றில் ஆக்சிஜனும், நைட்ரஜனும் இருக்கும்.,  கடலின் ஆழத்தில் உள்ள அழுத்தத்தால் ரத்தத்திலிருந்து ஆக்சிஜனும், நைட்ரஜனும் வெளியேறும்.  அப்ப ரத்தக்கசிவு உண்டாகும். சிலசமயம் உயிரிழப்புக்கூட ஏற்படும். ஆனா, ஹீலியம் வெளியேறாது. அதனால்தான் ஹீலியத்தை கணிசமான அளவுக்கு உடலில் செலுத்துவாங்க. கடலுக்குள் பல நாட்கள் தொடர்ந்து ஆராய்ச்சி செது முடித்து வெளிய வந்தபின்  வெளிப்புற அழுத்தத்திற்கும், சூழலுக்கும் உடல் பழகும்வரை சாச்சுரேசன் சேம்பரில் வைப்பாங்க.  அந்த சாச்சுரேஷன் சேம்பரில் எல்லா வசதியும் இருக்கும்.  கடல் எல்லைகளை  ஐக்கிய நாடுகள் மன்றம் எனப்படும்  United Nations Convention on th Law of the Sea வரையறுத்தது.  இந்த அமைப்பில் 158 நாடுகள் இருக்கு.  கரையில் இருந்து ஆறு நாட்டிகல் மைல் தொலைவுக்கு உட்பட்ட கரைக்கடல் பகுதியில் கட்டுமர மீனவர்கள் மீன் பிடிக்கலா, அதற்கடுத்த ஆறு நாட்டிகல் மைல் தொலைவுக்கு இருக்கும் பகுதிக்கு அண்மைக்கடல்ன்னு பேரு. இதில் விசைப்படகு வீரர்கள் மீன் பிடிக்கலாம்.  அதற்குப்பிறகு இருக்கும் பகுதிகள் ஆழிக்கடல்ன்னு பேரு. இதில் கப்பல்களில் மீன் பிடிக்கலாம். கால மாற்றத்தால் கரையோரங்களில் மீன்கள் கிடைக்காததால் மீனவர்கள் இடம்மாறி மீன் பிடிச்சு சண்டை வருது. இந்தியா, இலங்கைக்கு இடையிலான கடற்பரப்பின் தூரம் 25கிமீதான். பல்வேறு அரசியல் காரணங்களல் எல்லை பிரிப்பு சரிவர நடக்காததால் இரு நாட்டுக்குமிடையில் எல்லை தகராறு வருது.    எந்த நாடா இருந்தாலும் கடலிலிருந்து 12 நாட்டிகல் மைல் தூரத்தில் அதாவது தோராயமா 22.2 கி.மீ தூரத்திற்கு பயணிகள் கப்பல் போகலாம்.  ஆனா, மீன்பிடிக்கப்பல், போர்க்கப்பல், சரக்கு கப்பல்லாம் போகனும்ன்னா பர்மிஷன் வாங்கனும். 
மனிதன், மிருகங்கள், பறவைகள், பூச்சிகள், புழுக்கள் என பலதரப்பட்ட உயிர்கள் இருக்கு. அவற்றை பற்றி ஆராய்ச்சிகள் பல காலமாய் நடந்துக்கிட்டு இருந்தாலும் அடிக்கடி புதுசா எதாவது ஒரு உயிரினத்தை பத்திய தகவல் வந்துக்கிட்டுதான் இருக்கு, இதேமாதிரிதான் கடலிலும் பலதரப்பட்ட உயிரினங்கள் இருக்கு.1சதவிகிதம்தான் பூமியில் இருக்கு. மிச்சம்லாம் கடலில்தான் இருக்கும் . கடலில் 25மில்லியன் உயிரினங்கள் வாழலாம்ன்னு ஒரு கணக்கு சொல்லுது.  உலகின் முதல் உயிரி கடற்பாசி, உலகின் மிகப்பெரிய உயிரினம் நீலத்திமிங்கலம்.. இப்படி பல சாதனைகள் கடலுக்குண்டு. சுறாவில் மட்டும் 350வகை இருக்காம்.

மாறிவரும் வெப்பநிலை, சுற்றுச்சூழல் மாசுகள், கடலில் கொட்டப்படும் கழிவுகளால் கடல் மாசுப்பட்டு வருது. வெப்பநிலை உயர்ந்துக்கொண்டே வருவதால் பனிமலைகள் உருகி கடற்கரைகள் நகரை நோக்கி நீண்டுக்கொண்டு வருகிறது. மாலத்தீவுகள் உள்ளிட்ட பல தீவுகள் தங்களது நாட்களை எண்ணிக்கொண்டு இருக்கு.  இனி கடல்களின் கதி என்னாகுமென சமூக ஆர்வலர்கள் யோசிக்குறாங்க.

அப்ப, கடலும் மாற்றத்திற்குள்ளாகும்போல.. உலக பெருங்கடல் தினமான இன்று கடலை பத்தி நிறைய விசயங்கள் தெரிஞ்சுக்கிட்டேன் மாமா.

கடலைப்போலவே கடல் சார்ந்த விசயங்களும் நிறைய இருக்கு. பதிவு நீளுமேன்னு இத்தோடு முடிச்சுக்கிட்டேன்..

ஆமா மாமா , ஏற்கனவே பதிவு நீளம்ன்னு பேச்சு வருது. வயித்துக்குள் இருக்கும் பாப்பாவை பத்தின மீம்ஸ். பார்த்ததும் பிடிச்சு போச்சுது. கூடவே அதிலிருக்கும் உண்மையும் ஒத்துக்க வேண்டியதா இருக்கு...
இந்த பாப்பாவை பாருங்க. கேட்டதும் கொடுக்கலைன்னு காண்டாகி என்ன பண்ணுச்சுன்னு...
கால்ல எதுக்கு இத்தனை விரல்ன்னு நினைச்சு கடிச்சு துப்ப பார்க்குதான்னு தெரில மாமா. 

பாப்பாக்கள் வீடியோலாம் செம சூப்பர்ப்பா... வெளில வேலை இருக்கு. நான் போயிட்டு வரேன்...நன்றியுடன்,
ராஜி
Sunday, June 07, 2020

அக்கட தேசத்து பாட்டையும் ரசிப்போமில்ல!! -பாட்டு புத்தகம்

எங்க அப்பாருக்கு நான் டீச்சராகி பொத்தனாப்ல காலையில் வேலைக்கு போய் மாலையில் வீட்டுக்கு வந்து சனி, ஞாயிறுகளில் வீட்டில் இருக்குற மாதிரி டீச்சர் வேலைக்கு போகனும்ன்னு ஆசை. என் ஆத்தாளுக்கோ விஜயசாந்தி ஐ.பி.எஸ் சாரி வெஜெயந்தி ஐ.பி,எஸ் மாதிரி பறந்து பறந்து சண்டை போட்டு பேர் வாங்கனும்ன்னு ஆசை. இப்படி படிச்சு திரைக்கடல் ஓடி திரவியம் தேடனும்ன்னு ஆசைப்பட்ட பொண்ணு இது எதையும் மைண்ட்ல வச்சுக்காம பாட்டு கேட்டுக்கிட்டு படிப்புல கோட்டைய விட்டது. என்னோட இசையார்வம் தமிழ் பாட்டுக்களை மட்டுமில்லாம மத்த மொழி  பாட்டுக்களையும் ரசிக்க வைத்தது...

Saturday, June 06, 2020

நாங்கலாம் அப்பவே கொரோனாக்கூட பழகி இருக்கோமாக்கும்-கிராமத்து வாழ்க்கை

சிறு வயதில் அனுபவித்து வாழ்ந்த வாழ்க்கையின் சிறு நினைவு மீட்டலே இந்த தொகுப்பு.... 

பாடங்கள் போரடிக்கும்போது , வெட்டியாய் இருக்கும்போதும் பேப்பருக்கு அடியில் சில்லறைக்காசை வச்சு,  பென்சிலால் தேய்ச்சா, மேல் பேப்பரில் சில்லறைக்காசின் அச்சு விழும்.
பென்சில், ரப்பர், பேனாக்களை அட்டைப்பெட்டியில் வாங்கி வீட்டில் வச்சு பிள்ளைகளுக்கு கொடுத்து அனுப்பும் காலமிது.   கேட்டதும் கிடைக்குறதால் பொருளோட அருமை தெரியாமல் தொலைச்சுட்டு வருவது, பாதி பென்சிலை தூக்கிப்போடுறதும் நடக்குது. ஆனா, தேய்ஞ்சுப்போன சிறு பென்சிலை வீட்டில் காட்டினாலும் புதுசு வாங்கி தரமாட்டாங்க. கெஞ்சி கூத்தாடனும்...
உக்காந்தபடியே நோகாம விளையாடும் விளையாட்டு. ஒரு எழுத்தினை சொல்ல, அந்த எழுத்தில் ஆரம்பிக்கும் மனிதன், பூ, நாடு/ஊர், பழம், மிருகத்தின் பெயரை எழுதனும்... நாடு/ஊரு, விலங்கோட  பேரு ஒரு கட்டத்தில்  கிடைக்கவே கிடைக்காது. அதுலதான் மார்க் குறைஞ்சு போகும்.
டிசம்பர் பூ மாதிரி பூக்கும் காட்டுப்பூவின் விதை இது. இதை தண்ணியில் போட்டால் வெடிக்கும். கிளாசில்  இருக்கும்போது வாய்க்குள் போட்டு வெடிக்கவிடுவோம். எச்சிலில் நனைச்சு தேமேன்னு உக்காந்திருக்கும் பக்கத்துல இருக்கும் ஆள்மேல் வச்சு வெடிக்கும்போது அவங்க திடுக்கிடுறதை ரசிப்போம். சில சமயத்துல ஃப்ரெண்ட் மேல வச்சு வெடிக்காம போகும். மீண்டும் எச்சிலில் நனைக்க வாயில் வைக்கும்போது வாயிலேயே வெடிச்சு நம்மை திடுக்கிட வைக்கும்.
நாம் சிறுவயதில் பயன்படுத்திய பல பொருட்கள் இன்று மாற்றமடைஞ்சு வேற மாதிரி ஆகிட்டுது. ஆனா, சேஃப்டி பின் எனப்படும் ஊக்கு மட்டும் அதே வடிவத்தில் இருக்கு.  ஆனா, அதே சேஃப்டி பின்னின் தலைப்பாகத்தில் குரங்கு, பூனை, பூன்னு வடிவம் இருக்கும். அதை  வாங்கி தாவணி, சுடிதார்ன்னு அணிஞ்சு ஸ்டைல் காட்டி இருக்கோம்..
கொரோனா சைசிலிருக்கும்  இந்த காயை உடைச்சு, உருட்டி, பொரட்டி  சின்ன வயசில் விளையாடி இருக்கோம்.  அந்த காய்தான் நம்மை பழிவாங்க கொரோனா உருவெடுத்து வந்திருக்குப்போல!!

இந்த வார நினைவுமீட்டல் எப்படி இருக்கு?!

நன்றியுடன்
ராஜி...

Friday, June 05, 2020

அழுக்கு துணிகளை துவைத்து கொடுத்து துன்பம் நீக்கிய சித்தர்-பாண்டிச்சேரி சித்தர்கள்.

சித்தம் என்றால் அறிவு... அறிவு தெளிந்தோருக்கு சித்தர்கள் என்று பெயர்.  சித்தர்கள் யாருக்கும் அடிமை இல்லை. யாரையும் அடிமைப்படுத்த மாட்டார்கள். ஜாதி, மத பாகுபாடு கிடையாது. இவர்களுக்கு நேரம் கால்ம் கிடையாது. தீட்டு, தீண்டத்தகாதவை கிடையாது. சித்தர்களின் கோட்பாடு ஒன்றுதான். இறைவன் ஒருவனே! அவன் ஜோதிவடிவானவன். அதிலும் இறைவன் தன்னுள்ளே உள்ளான். இறைவனை அடைய அன்பு ஒன்றே சிறந்த வழி என்று உணர்ந்தவர்களையே சித்தர்கள் என போற்றுகிறோம். தத்துவங்கள் தொன்னூற்று ஆறையும் கடந்தவர்கள் சித்தர்கள் என திருமூலர் பாடி வைத்துள்ளார். இப்பேற்பட்ட சித்தர்களை பற்றியும், அவர்தம் வரலாறு, ஜீவசமாதி ஆன இடம் பற்றியும் பாண்டிச்சேரி சித்தர்கள் வரிசையில் பார்த்து வருகிறோம். இந்த வாரம் நாம பார்க்கப்போறது பாண்டிச்சேரியில் உள்ள வில்லியனூர் சாலையில் ஒதியம்பட்டு என்ற ஊரில் உள்ள ஸ்ரீவண்ணார பரதேசி சுவாமிகள் ஜீவசமாதியை...

Wednesday, June 03, 2020

கடமையை செய்ததற்கு கிடைத்த பரிசு - தெரிந்த கதை, தெரியாத தகவல்

ஏழை பணக்காரன், உயர்ந்தவர் தாழ்ந்தவர்ன்ற எந்த வித்தியாசமும் பாராமல்,தரும நெறியின் வழியில் நடப்பதில் தருமனுக்கு ஈடு இணை இல்லை என்பர். அவரைப்போலவே தருமநெறி தவறாமல் நடப்பது எமன். அதனால்தான் எமனுக்கு தர்மன் என்று பெயர் உண்டானது.    ஆனால், அந்த எமதர்ம ராஜாவையே நீ செய்ய வந்த வேலை தவறானது என உதை வாங்கியம்கதை தெரியுமா?! அப்படி உதைத்தவர் சிவபெருமான்?! தன் கடமையை எமதர்மன் செய்வதை ஏன் சிவபெருமான் தடுத்தார்?! எமதர்மனை ஏன் எட்டி உதைத்தார் என தெரிந்த கதை தெரியாத தகவலில் பார்க்கலாம் வாங்க!!