Thursday, April 30, 2020

1 1/2 ரோல் லஞ்ச் கூடை - கைவண்ணம்

பிள்ளைகள் வீட்டில் இருந்தும் போன வாரம் முழுக்க மனசே சரியில்லை. மனசுல பெருசா பாரம் ஏதோ ஏறின மாதிரி இருக்கு. லாக் டவுன் எஃபெக்டோ என்னமோ தெரில. 

Wednesday, April 29, 2020

தேசிங்கு ராஜாவிற்கு சமாதி எழுப்பிய சதயத் உல்லாகானின் சமாதி(பச்சைக்கல் மசூதி) - மௌன சாட்சிகள்


நினைவு சின்னம் என்பது, சம்பந்தப்பட்ட மனிதர், பின்னாளில் அன்று நடந்த நிகழ்வுகளை நேரடியா நினைவுக்கூர்வதற்கான உண்டான அமைப்பாகும். நம்  இந்திய திருநாடு நீண்ட நெடிய வரலாற்றை கொண்டது. உலகில் வேறெங்கும் இல்லாத அளவுக்கு ஆயிரம், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான பழமை வாய்ந்த கட்டிடங்களும்,கோயில்களும் இந்தியா முழுக்க நிறைந்திருக்கின்றது.  இந்த நினைவு சின்னங்கள், எந்த சூழ்நிலையில் உருவாக்கப்பட்டது, அப்பகுதி மக்களின் வாழ்க்கை முறை, மன்னனின் குணநலன்கள், வீரம், கொடைத்தன்மை, இறைநம்பிக்கை ஆகியற்றை எடுத்து சொல்லும் மௌன சாட்சிகளாகும். 

Tuesday, April 28, 2020

குட்டி குட்டி உருளைக்கிழங்கு வறுவல் - கிச்சன் கார்னர்

உருளைக்கிழங்கு.... இது எல்லாருக்கும் பிடித்தமானது. இந்த உருளையை பிடிக்காதுன்னு யாரும் சொல்லி  நான் கேட்டதில்லை. உடலுக்கு ஆகாது ஆனாலும், கொஞ்சமா வைன்னு சொல்றவங்களைதான் பார்த்திருக்கேன். உருளைக்கிழங்கில் வறுவல், பொரியல், சிப்ஸ், பொடிமாஸ்,குருமான்னு சமைச்சு அசத்தலாம்.

Sunday, April 26, 2020

மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று.. - பாட்டு புத்தகம்

சோகத்துல ஓஓஓன்னு கத்தி அழுது அரற்றுவதும், மகிழ்ச்சியின்போது தலைகால் தெரியாம துள்ளி குதிப்பதும் மனித இயல்பு. அடிமேல் அடி விழுகும்போது உடல் மரத்துப்போகும். அதுமாதிரிதான், வாழ்க்கையில் தொடர்தோல்விகளை சந்திக்கும்போது மனசும் மரத்துப்போகும்.  அப்ப, எதுவும் நிரந்தரமில்லை. இதுவும் கடந்து போகும்ன்னு புரிதல் உண்டாகும். அந்த புரிதல் வந்தபின் மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கவும் மாட்டோம். துன்பத்தில் துவளவும் மாட்டோம். வாழ்க்கையில் எதுவும் நிரந்தரமில்லை. பம்மல்.கே.சம்பந்தம் படத்துல கமல் சொல்றது மாதிரி எல்லாமே  passing cloudsன்னு உணர்ந்தால்  கிட்னி சேதாரமில்லாம தப்பிக்கும். 

அவன்தான் மனிதன்னு சிவாஜி படம். முத்துராமன், ஜெயலலிதா நடிச்சது. எனக்கு எம்.ஜி.ஆரை பிடிக்காது. அதனால் ஜெயலலிதாவையும் பிடிக்காது. ஆனா, ஜெயலலிதாவின் இந்த படம் பார்ப்பேன். இன்னொரு படம் ஜெயலலிதா இரட்டைவேடத்தில் நடிச்சிருப்பாங்க. ஜெயசங்கர் , சோ என ஜோடி சேர்ந்திருப்பாங்க. அதுவும் பிடிக்கும். 




மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று!!

இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று!!

மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று!!
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று!!
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று!!
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று!!
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று!!


தந்தை தவறு செய்தார்... தாயும் இடம் கொடுத்தாள்...

தந்தை தவறு செய்தார்... தாயும் இடம் கொடுத்தாள்...

வந்து பிறந்து விட்டோம்! வெறும் பந்தம் வளர்த்து விட்டோம்!!
மனது துடிக்கின்றது... மயக்கம் வருகின்றது...
அழுது லாபம் என்ன?! அவன் ஆட்சி நடக்கின்றது..


மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று...


காட்டு மனமிருந்தால் கவலை வளர்ந்து விடும்...

காட்டு மனமிருந்தால் கவலை வளர்ந்து விடும்..

கூட்டைத் திறந்து விட்டால் அந்தக் குருவி பறந்து விடும்..
காலில் விலங்கு விட்டோம் கடமை என அழைத்தோம்..
நாலு விலங்குகளில் தினம் நாட்டியம் ஆடுகின்றோம்..


மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று..


விதியின் ரதங்களிலே, நாம் விரைந்து பயணம் செய்தால்

மதியும் மயங்குதடா, சிறு மனமும் கலங்குதடா!!

கொடுக்க எதுவுமில்லை.. என் குழப்பம் முடிந்ததடா!!
கணக்கை முடித்து விட்டேன். ஒரு கவலை முடிந்ததடா!!


மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று!!

இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று!!



திரைப்படம்:  அவன்தான் மனிதன்,
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
நடிகர்கள்: சிவாஜி கணேசன்.

பாட்டு புடிச்சிருக்கா சகோ’ஸ்

நன்றியுடன்,
ராஜி

Friday, April 24, 2020

சீலத்திரு ஸ்ரீமண்ணுருட்டி சுவாமிகள்-பாண்டிச்சேரி சித்தர்கள்.


ஆழ்ந்த சிந்தனையில் இருக்கும்போது ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு தனித்தன்மையான பழக்க வழக்கம் இருக்கும். சிலர் நகத்தை கடிப்பாங்க. சிலர் தலைமுடியை சுருட்டுவாங்க. அதுமாதிரி   இந்த ஸ்ரீமண்ணுருட்டி சித்தர்  தனிமையில் தன் சிந்தனையினை  மனதில்  கட்டுபடுத்தும் பயிற்சிக்காக ஒரு கையில் மண்ணை வைத்துக்கொண்டு தன் கட்டை விரலால் உருட்டிக்கொண்டு இருப்பார். இதனால் மக்கள் இவரை மண்ணுருட்டி சாமிகள்ன்னு மக்களால் அழைக்கப்பட்டவரை பற்றிதான் பாண்டிச்சேரி சித்தர்கள் வரிசையில் பார்க்கலாம். பாண்டிச்சேரியில் உள்ள திருவள்ளூவர் பஸ்நிலையம் பின்புறம் அமைத்துள்ள புதுச்சேரி சுதேசி காட்டன் மில் எதிரில் இருக்கும் கோவிந்தசாமி முதலியார் தோட்டத்தில் உள்ள  ஸ்ரீ மண்ணுருட்டி சுவாமிகளின் ஜீவசமாதி

Thursday, April 23, 2020

பேத்திக்காக பின்னிய 1 ரோல் வயர்கூடை- கைவண்ணம்

மகளின் கல்யாணத்திற்காக ஓரகத்தியின் மருமகள் வந்திருந்தாங்க. மருமகளுக்கு 11/2 வயசில் பெண்குழந்தை இருக்கு. அது வீட்டிலிருந்த வயர்கூடையை எடுத்துக்கிட்டு வீடு முழுக்க சுத்திக்கிட்டே இருந்துச்சு. வயர்கூட பாப்பாவை உயரத்துக்கு இருக்கும். சரி, அத்தை கல்யாணம் முடிஞ்சதும் சின்னதா கூடை பின்னித்தரேன்னு சொன்னேன். அதுக்குள்தான் எலும்பு முறிவுன்னு ஃபுல் ரெஸ்ட்ல கொடுத்த வாக்கை மறந்தாச்சு. 

Tuesday, April 21, 2020

சிறுகீரை +துவரம்பருப்பு கூட்டு - கிச்சன் கார்னர்

தினமும் ஒரு கீரையை சாப்பாட்டில் சேர்த்துக்குறது உடலுக்கு நல்லது. சாம்பார், சூப், பொரியல், போண்டா, கூட்டு, வெரைட்டி சாதம்ன்னு கீரையிலும் விதம் விதமா சமைக்கலாம்.  என்ன கீரையை சுத்தம் செய்வதுதான் கொஞ்சம் கஷ்டம்தான். டிவி, சீரியல்லாம் வருவதற்குமுன், முன்னலாம் அம்மாவின் அம்மா/மாமியார், மாமியாரின் அம்மா/மாமியார்ன்னு வயசான பெரியவங்க  யாராவது ஒருத்தங்க எல்லா வீட்டிலும் இருப்பாங்க.  அவங்க காய்கறிகளை அறிவது, தானியங்களை நோன்ப, புடைக்க, இட்லிக்கு மாவரைக்கன்னு உக்காந்தபடியே வேலை செய்வாங்க.   வீட்டு வேலைகள் முடித்தபின் அக்கம் பக்கத்து வீட்டு பெண்கள் எதாவதொரு வீட்டின்முன் உக்காந்து பேசுவாங்க. அப்ப கீரை சுத்தம் செய்றது. கிழிஞ்ச துணிகள் தைக்க, பூ கட்டுறது, தானியங்கள் சுத்தம் செய்வதுன்னு வேலைகள் பகிர்ந்து நடக்கும். உடல் உழைப்பு அதிகமா இருந்தாலும் பகிர்ந்து செஞ்சுக்கிட்டதால் அலுப்பு இல்லாமல் இருந்தது, இன்னிக்கு மிக்சி, கிரைண்டர், பாக்கெட் பண்ணப்பட்ட மளிகைப்பொருட்கள்ன்னு இருந்தாலும் அலுப்பாவே இருக்கு. 

Sunday, April 19, 2020

ஒரு பொண்ணை இப்படியா வர்ணிப்பாங்க?! - பாட்டு புத்தகம்

டி.ராஜேந்தர் படங்கள் ரிலீஸ்ன்னா கிராமம், நகரம்ன்ற பாகுபாடு இல்லாம  எல்லா இடத்திலும் வெற்றிகரமா ஓடும். ரஜினி, கமல் படங்களுக்கினையாக அந்த காலத்தில் இவர் படங்கள் வெற்றிப்பெற்றது. அதுக்கு காரணமா அவர் படங்களில் அம்மா தங்கை செண்டிமெண்ட், ஹீரோவின் காதல் தோல்வி, டி.ராஜேந்தர் ஹீரோயினை தொடாமல் நடிப்பது, இசை, கதை, ரைமிங்கான வசனம்ன்னு நிறைய சொல்லிக்கிட்டே போகலாம்.  அவர் படத்தோட செட்டிங்க்காகவே படத்துக்கு போன ஆட்கள் பலர் உண்டு.

Saturday, April 18, 2020

சூரிய கிரகணத்தின்போது சூரியனை பார்த்தால் என்ன நடக்கும்?! - கிராமத்து வாழ்க்கை

மனசு மகிழ்ச்சியாய் இருப்பது என்பது அத்தனை எளிதல்ல! ஆனா, எளிதாய் கிடைக்கக்கூடிய பொருட்களைக்கொண்டு மனம் மகிழ்ந்தவர்களின் சிறிய நினைவு மீட்டலே இந்த கிராமத்து வாழ்க்கை தொடர்....

Friday, April 17, 2020

யாழ்ப்பாணம் ஸ்ரீகதிர்வேல் சுவாமிகள்,பிருந்தாவனம் நகர் -பாண்டிச்சேரி சித்தர்கள்.

பாண்டிச்சேரி சித்தர்கள் வரிசையில் இன்று பார்க்கப்போறது யாழ்ப்பாணம் ஸ்ரீகதிர்வேல் சுவாமிகள்பாரதியார் யாழ்ப்பாணத்து சித்தரை பற்றி  பாடியுள்ளார். ஆனா,   அவர் பாடியது ஸ்ரீகதிர்வேல் சுவாமிகளை பற்றின்னு உறுதியா சொல்ல முடியலை.  அது நிஜமான்னு கூகுளில் தேடினால் இன்னும் சில யாழ்ப்பாணத்து சித்தர்கள் பற்றி படிக்க முடிஞ்சது.  அவர்களை பற்றியும் இந்த பதிவில் பார்க்கலாம்... 

Thursday, April 16, 2020

வுல்லன் மேட்- கைவண்ணம்

புத்தகம் படித்தல், தோட்டம் பராமரித்தல், பிராணிகள் வளர்ப்பு, கிராஃப்ட், எம்ப்ராய்டரி என எதாவது ஒரு பொழுதுபோக்கு இருக்கனும்.  மனசை ரிலாக்ஸ் செய்ய உதவும். முன்னலாம் ஸ்கூல்லயே கைத்தொழில்ன்னு ஒரு கிளாஸ் இருக்கும். அதில் தச்சு வேலை, தையல், கூடை பின்னுதல்,எம்ப்ராய்டரின்னு சொல்லி தருவாங்க.  ஆனா, இப்ப அதுலாம் இல்ல. பாடத்தை மனப்பாடம் பண்ணி அப்படியே பேப்பரில் எழுதுறதுக்கு மட்டுமே பள்ளிகள் சொல்லி தருது.  படிக்கும் குழந்தைகளுக்கே ஏகப்பட்ட மன அழுத்தம்.

Monday, April 13, 2020

மணல் கடிகாரம் டூ டிஜிட்டல் கடிகாரம்.. - ஐஞ்சுவை அவியல்

மாமா!  சமையல் கட்டில் மாட்டியிருந்த கடிகாரம் ரிப்பேர் ஆகிட்டுது. புதுசு ஒன்னு வாங்கிட்டு வாங்களேன். 

எதுக்கு அதான் ஹால்ல, பெட்ரூமில்ன்னு 3 கடிகாரம் இருக்கு. உனக்குன்னு செல்போன் இருக்கு. அதில்லாம, உன் கைக்கடிகாரம் இருக்கு.இத்தனை இருக்கும்போது எதுக்கு சுவர் கடிகாரம் கேட்குறே?!

காலையில் எல்லாருக்கும் டப்பா கட்ட சரியான டைமுக்கு சமைக்கனுமே!  கையில் ஈரம் இருக்கும்போது செல்போன், வாட்ச்ல எப்படி டைம் பார்க்கமுடியும்?! அதனால்,   சின்னதா ஒரு நூறு ரூபாயில் வாங்கி வந்தால் போதும். 


டைம் பார்க்க செல்போன், வாட்ச்ன்னு இன்னிக்கு பலவழிகள் இருக்கு. முன்னலாம் சூரியன் நகர்வதை வச்சும் பொருட்களின் நிழல்களைக்கொண்டுமே நேரத்தை   கணக்கிட்டாங்க.  முதல்ல நேரத்தை கணக்கிட்டது சுமேரியர்கள்தான். இவங்கதான் மணி, நாள், வாரம், மாசம், வருசம்ன்னு பிரிச்சாங்க.  பிறகு எகிப்தியர்கள், சூரியன் நகர்வதைப் பின்பற்றி 24 பெரிய கம்பங்களை வட்டப்பாதையில் நிறுவி, ஒளியும் நிழலும் அவற்றின்மீது விழுவதை வச்சு நேரத்தை அளவிட முயற்சி செய்தனர். தொடர்ந்து நேரத்தை அளவிடும் முயற்சிகளில் மற்ற நாடுகளும் முயற்சி செய்துக்கிட்டே இருந்தாங்க.     கிரேக்க நாடு தண்ணீரைப் பயன்படுத்தி நேரத்தை அளவிடும் சோதனை முயற்சி செய்தாங்க.  தண்ணீர் ஒவ்வொரு துளியாக ஒரு கல் பாத்திரத்தில் விழுமாறு ஏற்பாடு செய்து, அப்படி விழும் தண்ணீரின்  அளவை அடிப்படையாகக் கொண்டு நேரம் அளவிடப்பட்டது. இது நடந்தது கி.மு. 320ல் நடந்தது. 



கிரேக்கர்களும்  ரோமானியர்களும் இந்த தண்ணீர் கடிகாரத்தில் பல மாற்றங்களை உண்டாக்கினர். மணற்கடிகாரமும் சோதனை முயற்சியில் கண்டுபிடிச்சாங்க.   கி.பி.1510-ம் ஆண்டுவாக்கில்  ஜெர்மன் நாட்டைச் சார்ந்த பூட்டு செய்யும் தொழிலாளியான பீட்டர் ஹென்கின்  நேரத்தைக் காட்டும் நின்ற நிலையிலான கடிகாரம் ஒன்றை உருவாக்கினார். பின்னர் 1656-ம் ஆண்டு வாக்கில் டச்சு நாட்டுத் தொழில்நுட்ப வல்லுநர் ஹியூஜன்ஸ் என்பவர் ஊசலாடும் (pendulum) கடிகாரத்தை உருவாக்கினார். 



ஹியூஜன்ஸ்தான்  ஒரு நாளை 24 மணிகளாகவும், ஒரு மணியை 60 நிமிடங்களாகவும், ஒரு நிமிடத்தை 60 நொடிகளாகவும் பிரித்து, கடிகாரம் செய்வதில் புதுப்புது  உத்தியை கையாண்டார். கூடவே,  ஒரு நாளை A.M.–Ante meridiem,( befor e noon) P.M.– Post meridiem, (after noon)   பிரித்தார்.  இங்கிருந்து கடிகாரம் பல்வேறு மாறுதலுக்குட்பட்டு  விதம்விதமா தயாரிக்கப்பட்டு  மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு வந்துச்சு.  ஆரம்பத்துல மரத்துலதான்  கடிகாரத்தின் பாகம்லாம் செய்யப்பட்டது.  பிறகு இரும்பில் செய்தாங்க. இப்ப பிளாஸ்டிக், பைபர்ன்னு வர ஆரம்பிச்சுட்டுது. 
19 ம் நூற்றாண்டின் தொடக்கம் வரை   பெண்டுலம் வச்ச கடிகாரங்கள்தான் வழக்கத்துல இருந்துச்சு.  இந்த பக்கமும் அந்த பக்கமுமாய் அசைந்தாடும் பெண்டுலம் கடிகாரத்தின் இரு முட்களையும் இயக்கி சரியான நேரத்தை காட்டுச்சு. இந்த கடிகாரங்களை ஸ்கூல், அலுவலங்களில், வசதியான சில வீடுகளில் நாமலாம் சின்ன பிள்ளையா இருக்கச்சே பார்த்திருப்போம்.  இப்ப மாதிரி பேட்டரியால் இந்த கடிகாரம் இயங்காது. அதுக்குன்னு இருக்கும் ஒரு சாவியை கொண்டு குறிப்பிட்ட இடைவெளிகளில் நாம சாவி கொடுக்கனும். அப்பதான் கடிகாரம் இயங்கும். 
ம்ம்  என் பிரண்டோட அப்பா ,  ஒரு சாவியால் கடிகாரத்துக்கு சாவி கொடுப்பதை பார்த்திருக்கேன் மாமா. அப்புறம் அந்த பெண்டுலத்தை ஆட்டி ஓட வைப்பார். அந்த சாவியை பத்திரமா பீரோவுக்குள் வைக்குறதையும் பார்த்திருக்கேன்.

மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்டபின் பெண்டுலம் வச்ச கடிகாரங்களின் மவுசு குறைய ஆரம்பிச்சது. அலெக்சாண்டர் பெயின், 1840ல பேட்டரியில் இயங்கும் கடிகாரத்தை கண்டுபிடிச்சார். சாவி கொடுக்கலைன்னா கடிகாரம் இயங்காது. சாவி கொடுக்கும் கால இடைவெளியை மறக்கக்கூடாதுன்ற நடைமுறை சிக்கல்கள்  எல்லாரையும் பேட்டரி வச்ச கடிகாரத்திற்கு மாற வச்சது. ரோமானிய எழுத்தக்களிலிருந்து அவரவர் வட்டார வழக்கு எழுத்து வர ஆரம்பிச்சது. எண்கள் இல்லாத கடிகாரம், படம் வைத்தது, கல் வச்சதுன்னு பல கிரியேட்டிவான கடிகாரங்கள் மார்க்கெட்டில் வர ஆரம்பிச்சது. 


1920ல குவாட்ஸ்ன்ற கடிகாரம் கண்டுபிடிக்கப்பட்டது.  கடிகாரம் வந்தது. குவாட்ஸ்ன்னா கல் மாதிரியான ஒருவகை கிரிஸ்டல் (Crystal). இந்த குவாட்ஸ்ஸினூடாக கரெண்டை பாய்ச்சும்போது சீராக துடிக்கும் (Osillates) இந்த துடிப்பை வைத்து கடிகாரத்தின் ஓட்டத்தை உண்டு பண்ணி இயங்க வைக்குது. பெண்டுலம் கடிகாரத்தைவிட குறைவான பராமரிப்பு இந்த குவார்ட்ஸ் கடிகாரத்திற்கு போதும்ன்றது இதன் சிறப்பம்சமாகும். அதுமில்லாம பெண்டுலம் கடிகாரம் தயாரிக்கப்படுவதைவிட இது குறைச்சலா செலவாகுது. பேட்டரி, ஒரு மைக்ரோசிப் சுற்று, ஒரு மின் மோட்டார், கியர்கள், கைகள், கடிகார முகம், மற்றும் ஒரு குவார்ட்ஸ் கிரிஸ்டல் இது போதும். 

ஆரம்பத்தில் தயாரான கடிகாரங்கள் பெருசா இருந்ததால்  பெரிய மாளிகைகள், அரண்மனைகளில்தான் அதுவும் காட்சிப்பொருளாகத்தான் இருந்தது.  பயன்படுத்த எளிதான, சிறிய அளவில் கடிகாரங்கள் வந்தபின் சாமானியர்களும் வாங்கி பயன்படுத்த ஆரம்பிச்சாங்க.  ஆங்கிலேயர்கள் ஆட்சியின்கீழ் நாம இருந்தபோது எல்லா அரசு அதிகாரிகளுக்கு, அரசு அலுவலகத்துக்கும் அரசு செலவில் கடிகாரங்கள் கொடுத்தாங்க. அப்பதான் அதுவரை ஆடம்பர பொருளாய் இருந்த கடிகாரம் பொதுமக்கள் பார்வைக்கு வந்துச்சு. ஆங்கிலேயர்களுக்கு போட்டியா சமஸ்தான மன்னர்களும், ஜமீந்தாரர்கள், பண்ணையார்களும் கடிகாரங்களை வாங்கி தங்கள் மாளிகையில் வச்சுக்கிட்டாங்க.  ஆடம்பர பொருளாய் கடிகாரங்கள் இருந்ததால் கடிகார கம்பெனி  ஏஜெண்டுகள் பல நாடுகளுக்கு போய் தங்கள் கம்பெனி கடிகாரத்தின் பெருமைகளை சொல்லி விற்பனை செய்ததோடு, அந்த ஊர் கடிகாரத்தின் சிறப்பம்சங்களையும் தெரிஞ்சுக்கிட்டு வந்தாங்க.


ஐதராபாத் நிஜாம் அவரோட அரண்மனைக்கு யார்கிட்டயும் இல்லாத மாதிரியான  சுவர்கடிகாரம் ஒன்றினை வாங்க விரும்பி, ஸ்விஸ் நிறுவனத்துக்கிட்ட கேட்க, பெரும்பொருட்செலவில் ஒரு சுவர் கடிகாரத்தை  உருவாக்கி கொடுத்திருக்கிறது. இன்றும் அந்த கடிகாரம் “ஜலார் ஜங்” அருங்காட்சியகத்தில் அதிசய காட்சிப் பொருளாக இருக்காம் புள்ள!. நிஜாம்கிட்ட இருந்த அந்த அழகான கடிகாரத்தை பார்த்த பிறகு பல சமஸ்தானங்கள் சுவர் கடிகாரத்தை வாங்கி அரண்மனைகளில் மாட்டி இருக்காங்க. . கொஞ்ச காலத்திற்கு பிறகு பாக்கெட் கடிகாரம் மார்க்கெட்டுக்கு வந்துச்சு. . ஜமீன்தார்கள், அதிகாரிகள், பிரபுக்கள்ன்னு  அந்த கடிகாரத்தை வாங்கி கோட் பாக்கெட்டில் வச்சுக்கிட்டாங்க. அது ஒரு ஸ்டேட்டஸ் சிம்பளாவே அப்ப இருந்துச்சு. 



பாக்கெட் கடிகாரத்திலிருந்து, குறிப்பிட்ட நேரத்தில் ஒலி எழுப்பும் வசதிக்கொண்ட அலாரம் கடிகாரம் வந்தது. அதிகாலையில்  எழுந்து வேலைக்கு செல்வோரும், மாணவர்களுக்கும் இந்த கடிகாரம் பெரிய அளவில் பயன்பட்டது.  பெரும் பணக்காரர்கள் வீட்டை அலங்கரித்த கடிகாரங்கள் மெல்ல மெல்ல பரிணாம வளர்ச்சியடைஞ்சு சாமானியர் வீடுகளில் அத்தியாவசிய பொருளாக மாறியது. கடிகாரம் மெல்ல அடுத்த கட்டத்தை நோக்கி ஆரம்பித்தது. பாக்கெட் கடிகாரத்தை பயன்படுத்துவதிலும் ஒரு சிக்கல் இருந்துச்சு, ஒவ்வொரு முறையும் பாக்கெட்டில் இருந்து எடுத்து திறந்து மணி பார்க்கனும். இதுக்கு என்ன தீர்வுன்னு யோசிச்சாங்க..

சின்ன சைசில் வந்த பாக்கெட் கடிகாரத்தில் சில மாற்றங்கள் செய்து தோல், செயின் வைத்து கைக்கடிகாரமா மாற்றினாங்க. கைக்கடிகாரத்தை முதலில் ஆண்கள்தான் பயன்படுத்தி வந்தாங்க. பிறகுதான் பெண்களும் கைக்கடிகாரத்தை பயன்படுத்த ஆரம்பிச்சாங்க. பெண்கள் பயன்படுத்த ஆரம்பிச்சபிறகுதான் வாட்ச் விற்பனை சூடு பிடிக்க ஆரம்பிச்சது. காரணம், ஸ்கூல், அலுவலகம் போறவங்க மட்டுமில்லாம வீட்டிலிருக்கும் பெண்கள் கடைத்தெருவுக்கு போகும்போதுகூட வாட்ச் கட்டினதுதான். இதுக்கு ஸ்டைல் மட்டுமே காரணமில்லை. பொண்ணுங்களோட டைம் மேனேஜ்மெண்ட்கூடத்தான். 



ஸ்கூல், காலேஜ் போற பிள்ளைக கறுப்பு, பிரவுன் கலர் பட்டை வாட்சையும்,  வேலைக்கு போகும்போது மெட்டாலிக் வாட்சையும், விருந்துக்கு போகும்போது அழகிய வேலைப்பாடுகள் கொண்ட தங்க (நிற), வெள்ளி வாட்சையும் பெண்கள் கட்டுவாங்களாம். வளையல், பிரேஸ்லெட், கல் பதித்தது, ட்ரெஸ்சுக்கு மேட்சா பட்டை மாத்தும் வாட்சுகள்..இவைதான் டீன் ஏஜ் பொண்ணுங்களோட விருப்பமாம்.  உன்கிட்ட எத்தனை வாட்ச் வச்சிருக்கே புள்ள?!

ம்க்கும் விதம்விதமா வாங்கிக்கொடுத்துட்டுதான் மறுவேலை செய்வீரு?!  என்னைய கோவப்படுத்தாத மாமா!!



கோவத்துலகூட நீ அழகா இருக்கேன்னு பொய்லாம் சொல்ல மாட்டேன்.  ஆனா, இந்த பாப்பா கோவத்துலயும் அழகா இருக்கும் பாரு..

சரி, ரொம்ப நாளா புதிர் இல்லன்னு டிடி அண்ணா சொல்லிக்கிட்டே இருக்காரு. எதாவது விடுகதை சொல்லலாமா?!

வேணாம் புள்ள! ட்விட்டரில் ரொம்ப நாளா ஒரு படம் சுத்துது. படத்துல இருக்கும் காட்சிகளை வச்சு அது என்ன படம்ன்னு சொல்லனும். ஒருவாரமாகியும் இதுவரை யாரும் சொல்லல. உங்க டிடி அண்ணனாவது சொல்வாரான்னு பார்க்கலாம்.
பதில் சொல்லிடுவீங்கதானே டிடி அண்ணா?!

நன்றியுடன்,
ராஜி


Sunday, April 12, 2020

உன்கூடவே பொறக்கனும்.... உன் கூடவே இருக்கனும்.. - பாட்டு புத்தகம்

என் முதல் பொறந்த நாளுக்கு ரேடியோ செட் கட்டி, சீரியல் பல்ப் போட்டு ஊருக்கே விருந்து வச்ச அதே அப்பா, கல்யாணத்துக்குமுன்  புதுத்துணி எடுத்துக்கொடுத்து, எல்லாருக்கும் கொடுக்க சாக்லேட்டை வாங்கி தந்த அதே அப்பாதான் என்ன சாதிச்சேன்னு இப்ப பொறந்த நாள் கொண்டாடனும்ன்னு கேட்பாரு?!  ஞாயிற்றுக்கிழமைல பொறந்த நாள் வந்தால் பிரியாணியோடு மதியம் சாப்பாடு, கையில் ஒரு நூறு ரூபா. இதுதான் பல வருசமா தொடர்ந்து வருது...  பிள்ளைகள் வளர்ந்தபின் அதுங்க கேக் வாங்கி வந்து, எதாவது கிஃப்ட் பண்ணும்...

Saturday, April 11, 2020

துப்புரவு பணியாளர்கள் எதிர்பார்ப்பது என்ன?! - சுட்ட படம்

ஐஞ்சுவை அவியல், மௌன சாட்சிகள், புண்ணியம் தேடி, தெரிந்த கதை தெரியாத தகவல்ன்ற தொடர் பதிவுகள்லாம் பக்கம் பக்கமா எழுதுறது.. தினத்துக்கும் நீளம் நீளமா பதிவு வந்தால் படிக்குறவங்க டயர்டாகிடுவாங்களே! அதான் இணையத்துல பார்த்து மனசுல பதிஞ்ச, பாதிச்ச படங்களை பதிவா போடுறேன்.

Friday, April 10, 2020

சற்குரு மகான் ஸ்ரீகணபதி சுவாமிகள்,தட்டாஞ்சாவடி-பாண்டிச்சேரி சித்தர்கள்.

தமிழர் மரபே சித்தர் மரபுதான். சித்தர் என்பவர் யார்? அவர்தான் புலவர். அவர்தான் மருத்துவர். அவரேதான் குரு. அவரேதான் வழிகாட்டி. அவர்தான் சோதிடர். அவர்தான் போர்க்கலை வல்லுனர். அவர்தான் ஆயக்கலை வித்தகர். சித்தர் என்பவன் ஏதோ குகைக்குள் அல்லது தனிமையில் அமர்ந்து சதா சர்வக்காலமும் சாமி கும்பிட்டுக்கிட்டு இருப்பவன்னு இன்னிக்கு நம்மை புத்தகங்களும், சினிமாக்களும், நாடகங்களும் நம்பவைக்கப்பட்டிருக்கு. மக்களோடு சேர்ந்து வாழ்ந்தவங்கதான் சித்தர்கள். ஆனா அவர்கள் சிந்தனை முழுக்க மருத்துவம், சோதிடம்.. இப்படி எதாவது ஒன்று ஓடிக்கிட்டே இருக்குறதால மக்களிடமிருந்து ஒதுங்கி இருப்பாங்க. இன்றைய கொரோனா வாசகத்துக்கு முன்னோடி இந்த சித்தர்கள்தான். உள்ளத்தால் இணைந்து உடலால் தனிச்சிருப்பாங்க. ஆனா, நாம அவங்களை சாமியார்ன்னு ஆக்கி, அவங்க என்ன நினைச்சுட்டிருந்தாங்களோ அதை நிறைவேற்றாம சித்தர்கள்ன்னா மக்களிடமிருந்து ஒதுங்கி இருப்பாங்க. அரூபமானவங்கன்னு சொல்லி ஃபிலிம் காட்டிக்கிட்டிருக்கோம்.

Thursday, April 09, 2020

11/2 ரோல் லஞ்ச் பேக் ... - கைவண்ணம்

காலை, மதிய உணவினை காலையிலேயே முடித்துவிடுவேன். சமைத்துக்கொண்டே பாத்திரமும் கழுவி 9 மணிக்குலாம் கிச்சன் க்ளீன் ஆகிடும். வாஷிங் மெஷினில் துணிகளை துவைக்க போட்டுட்டு 10 மணிக்கு சன் லைஃபில் பாட்டு கேட்டுக்கொண்டே  இணையம். மதியம்  நேர சாப்பாட்டுக்கு பின் கொஞ்சம் உறக்கம். பிறகு, கிராஃப்ட்,  மாலை வேளையில் அம்மா வீடு.. விளக்கேத்திட்டு மீண்டும் கொஞ்ச நேரம் இணையம்.. இரவு உணவோடு இட்லி தோசைக்கு மாவரைத்தல், இப்படி மறுநாள் சமையலுக்கான ஆயத்தம், இரவு உணவுக்கு பின் கிச்சன் க்ளீன்... இதான் என் வழக்கம்...

Wednesday, April 08, 2020

அக்காள் மடம், தங்கச்சி மடம் பேர் வந்ததற்கு இதுதான் காரணம் - மௌன சாட்சிகள்

ஒவ்வொரு ஊருக்கும் ஒரு கதை இருக்கும். அந்த கதையை ஒட்டியே அந்த ஊரின் பேரும் இருக்கும். பல ஊர் பெயரின் பின்னால் உள்ள கதையினை சில பதிவுகளை முன்பு பார்த்திருக்கிறோம்.. ராமேஸ்வரம் மாவட்டத்தில் இருக்கும் அக்காள் மடம், தங்கச்சி மடத்தின் பெயர்காரணத்தை இன்று மௌன சாட்சிகள் பகுதியில்  பார்க்கலாம்.

Tuesday, April 07, 2020

கல்யாண வீட்டு கடலை மாவு போண்டா - கிச்சன் கார்னர்

மாலை நேரத்தில்  எதாவது சூடா சாப்பிடலாம்ன்னு இருக்கும்போது  சட்டுன்னு செஞ்சுடலாம் இந்த போண்டாவை... 

Monday, April 06, 2020

நாளாம்! நாளாம் திருநாளாம்!! இறைவனுக்கும் இறைவிக்கும் மணநாளாம்!!

இந்துக்கள் பண்டிகைக்கும், பௌர்ணமிக்கும் நெருங்கிய தொடர்புண்டு. ஒவ்வொரு பௌர்ணமிக்கும் எதாவது ஒரு விசேசதினம் இருக்கும். அதன்படி, தமிழ்மாதங்களில் 12வதும், கடைசிமாதமுமான பங்குனியும்,  12 வது நட்சத்திரமான உத்திரம் நட்சத்திரமும் இணையும் நாளான இன்று பங்குனி உத்திரம் எனக் கொண்டாடுவது வழக்கம்.    கல்யாண சுந்தரர் விரதம்ன்னும் இந்நாளை சொல்வார்கள்..

Sunday, April 05, 2020

பாடகி பி.சுசீலாவை இளையராஜா இதற்காகத்தான் தவிர்த்தாரா?! - பாட்டு புத்தகம்

ஒவ்வொரு நடிகர், நடிகைக்கும் ஆஸ்தான மேக்கப் மேன், உடை அலங்காரம், டிரைவர்ன்னு இருந்த காலக்கட்டம் அது,   டி.எம்.சௌந்திரராஜன்தான்  எம்.ஜி.ஆர், சிவாஜியின் பெரும்பான்மையான  பாடல்களை பாடுவார். அதேமாதிரி பத்மினி , சரோஜாதேவி மாதிரியான முன்னனி நாயகிகள் பாடலை பாட பி.சுசிலாதான் பாடுவது வழக்கம்...  ஒரு படத்தில் இரண்டு கதாநாயகிகள் இருந்தால் முதல் கதாநாயகிக்கு பி.சுசீலாவும், இரண்டாவது கதாநாயகிக்கும் மற்றவர்களும் பாடுவது எழுதப்படாத விதி.

Saturday, April 04, 2020

வதந்தி எப்படி பரவுதுன்னு தெரிஞ்சுக்கனுமா?! -கிராமத்து வாழ்க்கை

உலகம் இப்படியும் மாறுமாவென தெரியாமல் கைக்கு கிடைத்தவற்றை  தேவைகளுக்கு பயன்படுத்தி மனநிறைவுடன் வாழ்ந்து, அறிவியலின் பிரம்மாண்ட வளர்ச்சியினையும் அனுபவித்துக்கொண்டே மனநிறைவு இல்லாமல் வாழும் பாவப்பட்ட ஜென்மங்கள்தான் நடுத்தர வயதினர்.  இப்படியும் வாழ்ந்தோமான்னு நினைச்சு பார்க்க வைக்கும் நினைவு மீட்டல்தான் இந்த கிராமத்து வாழ்க்கை பதிவு...

Friday, April 03, 2020

சித்தர்கள் இந்து சமயத்தில் மட்டுமல்ல! முஸ்லீம் மதத்திலும் பிறக்கலாம்!! - பாண்டிச்சேரி சித்தர்கள்

இறைவன் ஒருவனே! ஆனால் அவனை அடையும் வழிகள் பல உண்டு. அவற்றில் இந்து, முஸ்லீம், கிறிஸ்து, பௌத்தம், சீக்கியம்... என பல்வேறு பெயர் கொண்ட பாதைகள் இருக்குன்னு பெரியவங்க சொல்வாங்க.

Thursday, April 02, 2020

மார்க்கெட் வயர் கூடை - கைவண்ணம்

என் மகளின் கல்யாணத்துக்கு வந்திருந்த என் ஓரகத்தி நான் பின்னி வச்சிருந்த வயர் கூடைல ஒன்னை எடுத்துக்கிட்டு போனாள். சின்னதா அழகா இருக்குன்னு அவங்க பக்கத்து வீட்டில் கேட்டதா சொல்லி 3 வயர் கூடை வெவ்வேறு அளவுகளில் பின்னித்தர சொல்லி இருக்கா. 

Wednesday, April 01, 2020

14 வருடங்களுக்கு மேலாக ராமனுக்காக காத்திருந்தது சீதை மட்டுமல்ல!! அனந்தனும்தான்!! - தெரிந்த கதை தெரியாத உண்மை

ராமாயணம், மகாபாரதம் உள்ளிட்ட கதைகளை படித்தவர் குறைவு. படித்தவர் சொல்ல கேட்டவர் நிறைய பேர். அப்படி சொல்பவர்கள் மொத்த கதையினையும் சொல்வது கிடையாது. சில இடைச்செருகல்கள், சில மறைக்கப்பட்டவை, மறந்தவைன்னு அக்கதையில் இருக்கும்.. அந்த மாதிரி  நமக்கு தெரிந்த கதையில் தெரியாத தகவல்களை பற்றித்தான் நாம தெரிந்த கதை.. தெரியாத உண்மை தொடரில் பார்த்துக்கிட்டு வர்றோம்...