Monday, November 29, 2010

நீயில்லாத நிகழ்காலம்

என்னுள் மட்டும் அல்ல‌
என் கவிதையிலும்
வெறுமை தெரிகிறது
நீ இல்லாத தருணங்களில்...,

உன்னிடம் சொல்ல நினைத்து
ஞாபகத்தில் சேமித்து வைத்தவை
நிறைந்து வழிந்து ஓடுகின்றன‌
நீ வருவாய் என்ற மலட்டு நம்பிக்கையில்..??!!

சர்க்கரை இல்லாமலே இனிக்கிறது
உன் நினைவுகள்.
நீ கன்னத்திலிட்ட முத்தமும்,
கைவிரல் கோர்த்து நடந்த பயணமும்
நினைவில் மெல்ல நகர்கிறது
அந்தக்கணத்தின் தீராதத் தாகத்தோடு..,

அணுஅணுவாய் சுகம் கண்டு
ஆசைத் தீரப் பேறுப் பெற்று
ஆயுள்வரைக் கூட வருவேன் என்று
தோளில் சாய்ந்து நீ உரைத்ததைக் கேட்டு,
நமக்கு நிழல் கொடுத்த மரம்
உறைந்துக் கிடக்கின்றது இன்று

மௌ சாட்சியாய் ..,


உன் ஆசை மொழிகளை பகிர வந்த

அலைப்பேசி அழைப்புகளையும்,
உன் காதலை சொல்ல வந்த

குறுஞ்செய்திகளையும்,
உன் அன்பை சுமந்து வந்த

பரிசுகளையும்
பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன்..,!!
அவை அறியாப்
பல நெருடல்களோடு..,

என்னை விட்டுவிட்டு
உன்னால் எப்படி முடிந்தது
வேறொருவன் கரம்பிடித்துப் போக
ஒரு பூவைப்போல்...,

தான் மலர்ந்த செடியை மறந்து??!!...,

குறிப்பு: அடுத்த பதிவு எனது நூறாவது பதிவு , மற்றும் எனது மகளின் உற்ற தோழி ஓவியாவின் பிறந்த நாள் டிசம்பர் 3 ம் நாள் வருகிறது. அதற்கும் சேர்த்து மிகப்பெரிய ட்ரீட் வைக்கலாமினு இருக்கேன். எனவே, டிசம்பர் 3 ம் தேதி, வெள்ளிக்கிழமை இரவு சுமார் எட்டு மணியளவில் பார்ட்டி இருக்கு. பதிவுலக நண்பர்கள் அனைவரும் கலந்துக் கொள்ள வேண்டுகிறேன். .
இடம்: அவரவர் வீடு.
தவறாது கலந்து கொண்டு விழாவினை சிறப்பிக்க வேண்டுகிறேன். .

நன்றி! நன்றி! நன்றி!


இவள்தான் ஓவியா


இவள்தான் என் மகள் தூயாவின் உற்ற தோழி. இவள் எனது மகளுக்கு இதே நாளில் வடபழனி முருகன் கோவிலில் பரிசாக கிடைத்தாள். என் மகளுக்கு எங்கள் வீட்டருகே யாரும் தோழிகள் இல்லாததால் இவள்தான் எல்லாமே.(பொம்மை என்று சொன்னால், கோவப்படுவாள்.) அது அவளுக்கு எந்த அளவு பிடிக்குமென்றால், எங்களுக்கு எதாவது அவளிடம் காரியம் சாதிக்க வேண்டுமென்றால், தூயாவை கொன்னுடுவோமினு என் மகனும், குப்பையில் தூக்கிப்போட்டுடுவேன்னு நானும் மிரட்டுமளவுக்கு அதன் மீது பைத்தியம் அவளுக்கு. தூங்கும்போது, அருகிலும், படிக்கும்போது அருகிலும், வெளியில் எங்காவது செல்லும்போது பத்திரமா இரு நு சொல்லி தன் அலமாரியில் வைத்து பூட்டிவிட்டுதான் செல்வாள். இன்று அது தனக்கு கிடைத்த நாளை அதன் பிறந்த நாள் என்று கூறி அதன் மீதுள்ள அலங்காரப் பொருட்களை அவளே செய்தாள்.

*******************************************************************************************************************இன்று உன் பிறந்த நாளில்லை
ஒரு தேவதை எனக்காக
ம்ண்ணில் இறங்கி வந்த நாள்.
- தூயா
Friday, November 26, 2010

ஐ வில் கில் யூ


நான் ஆறாம் வகுப்பிலிருந்து ஏழாம் வகுப்புக்கு சென்ற முதல் நாள்...,
(மைண்ட் வாய்ஸ் : ஹேய் நீ அம்புட்டு பெரிய படிப்புலாம் படிச்சு இருக்கியா?)

முதல் பீரியட்.., தமிழ் ஆசிரியர் வந்தார் "என் கோடை விடுமுறை" என்ற தலைப்பில் கட்டுரை எழுத சொன்னார். தமிழ் என்பதால் அசத்திட்டோமில்ல. பத்துக்கு எட்டு எடுத்து குட் வாங்கியாச்சு.

அடுத்த பீரியட் ஆங்கிலம். சார் வந்தார். வெளியூரிலிருக்கும் உன் நண்பனுக்கு பிறந்த நாளுக்கு வாழ்த்துக் கூறி கடிதம் எழுதுங்கள் என்றார்.


என்னவோ கருவாச்சிக் காவியம் எழுதுற வைரமுத்து போல மத்தப் பிள்ளைகளை ஒரு பார்வை பார்த்துட்டு .., சார்கிட்ட நல்லா பேரு வாங்கணுமின்னு வேகமா எழுத ஆரம்பிச்சேன்.., (மைண்ட் வாய்ஸ்: நல்ல பேரு வாங்குறது யாரு? நீயா? பார்ப்போம்..,)


பதட்டத்துல என்ன எழுதணும் னு மறந்து போச்சு . அப்படி இப்படி னு ஒப்பேத்தி முதல் ஆளா பேப்பரை குடுத்துட்டு ரிசல்ட்டுக்காக காத்திருந்தேன்.
( மைண்ட் வாய்ஸ்: ஆமா பெரிய I.A.S ரிசல்ட்)

எல்லாருக்கும் பேப்பரைக் குடுத்துட்டு பசங்களோட பேரும் மார்க்கும் சொன்னார்.
எல்லாரும் அஞ்சு, ஆறு மார்க் எடுத்து இருந்தாங்க. என் பேப்பர் மட்டும் வரலை. ஆஹா, நாமதான் முதல் மார்க்கு போல, கடைசியா நம்ம பேரு, மார்க் சொல்லிட்டு குடுப்பருனு நினைச்சு மனசு ரெக்க கட்டி பறக்குது.


கடைசியா ராஜி இங்க வா னு சார் கூப்பிட,

நானும் எதோ பத்மபூசன் விருது வாங்குற மிதப்புல போய் சார்கிட்ட நின்னேன்.

@@## $%% @@##$%%^&!@$%&* !!@#%&***** ணு சார் திட்ட

பசங்கலாம் "கொள்"னு சிரிக்குறாங்க.

நான் பேப்பரைக் கையில வாங்கிகிட்டு, மூஞ்சிய தொங்கப் போட்டுக்கிட்டு, என் இடத்துக்கு வந்து பேப்பரை எடுத்து பார்க்குறேன் அதுல இப்படிதான் இருந்தது...,

நீங்களே பாருங்க இதுக்கு போய் எங்க சார் அசிங்க அசிங்கமா திட்டுனார்.

To,
R.Sujatha,
No.132, NH Road,
Nehru nagar,

calcutta.

Hai Suji,


I am Raji. I am fine. How are you? you fine?

my father, mother, sister, my house cow fine. your father, mother, brother, sister, your house dog fine?

I vill (WILL) kill You. Happy birth day to you. Who are you? mani mani haappi retans off the day(many many Happy returns of the day)

With Love,

Your loving friend,
Raji.


(உங்க சாரா இருக்கப் போகவே உன்னை திட்டுரதோட விட்டுட்டார். நானாஇருந்தால் உன்னை அன்னிக்கே T.C. குடுத்து அனுப்பி இருப்பேன். இந்த பிளாக் உலகம்மவது நிம்மதியா இருந்திருக்கும். யாரு, யார் அது? வேற யாரு மைன்ட் வாய்ஸ்தான்)

Tuesday, November 23, 2010

இரவல் தா

என் கருத்துக்களை உன்னோடு
பகிர்ந்துக்கொள்ள அனுமதி கொடு...

உன்னோடு எனைச் சேர்த்த
வாழ்வொன்றை நினைத்துப்பார்..??!!!
ஒரு நொடியில், ஒரு கணமாவது...,

களவுப் போகாமல்
பத்திரப்படுத்திவைத்திருக்கிறேன்.,
என்னைப் பைத்தியமாக்கிய
உன் கண்களின் நட்சத்திரத்தை..,

புது அர்த்தங்கள் தேடி கொடு
பழமை மாறாத இன்பங்களுக்கு..,

எந்நேரமும் பிரிந்திருந்து
என்ன செய்யப் போகிறது
இணைத்து வைக்க உதவி செய்
நம் இரு கரங்களுக்கு..,

கோடி துன்பங்களும் கால்தூசிதான்
உன் மூச்சுக்காற்று
என்னை முத்தமிடும்போது..,

அழவை, அசிங்கப்படுத்து, ஆத்திரப்படுத்து,
இன்னும் செய்துக்கொள்
என்னை என்னவெல்லாமோ..,

என்னை நீ என்ன செய்தாலும்
மற(று)க் காமல் நினைவில்
மட்டும் வைத்திரு..,என் வாழ்வின் கடைசி
மரண நொடிகளில்
உன் மடியினை
கடன் கேட்க வருவேன்...,(சில வரிகள்
வலையில் சிக்கியவை)

Monday, November 22, 2010

பிரதிபலிப்பு

எந்த ஒரு
விசயத்திலும்..,
உன் முகம் காட்டும்..,

கோபமோ, மகிழ்ச்சியோ
மட்டுமே நான் பிரதிபலிக்கிறேன்..??!!

பெண்ணாகப் பிறந்ததைவிட,
நீ பார்க்கும் கண்ணாடியாகப்
பிறந்திருக்கலாம்??!!!..,

வலிகளாவது மிஞ்சியிருக்கும்.,(இந்த வாரம் விகடனில்)

வெறுமையின் மொழியில்...

பகிர்தலுக்கு எதுவுமற்றுப் போனாலும்
ஒரு வெற்றுக்
குறுஞ்செய்தி அனுப்பு.

என் அலைபேசி
ஒலி எழுப்பட்டும்
எங்கோ உன்
இருப்பை அறிவித்து!

நிறுத்தம்

அலைபேசி அழைப்பில்
'எங்கே இருக்கிறாய்?'
எனக் கேட்கிறாய்
நீ விரல் பிடித்து
அழைத்துச் சென்று
நிறுத்திய இடத்தில்தான்
இருக்கிறேன் இன்னமும்...

சொல்...
நான் எங்கே இருக்கிறேன்?எப்படி மறந்தாய்?

ஒரு வார்த்தையோ சிறு அசைவோ
போதுமானதாக இருக்கிறது
என் மீதான உனது வன்முறைக்கு...

எப்போதும் கூரிய ஆயுதங்களுடன்
எனைத் தாக்கக் காத்திருக்கிறாய்
காரணங்களுக்காக...

எப்படி மறந்தாய்
என்னிடமும் உண்டு
காரணங்களும் சில ஆயுதங்களும் என!


Thursday, November 18, 2010

கண்ணாமூச்சி கொடுமை


வயதைத் தொலைத்தேன்..,
அதில் சலனமில்லை ?!!

வாழ்க்கையை தொலைத்தேன்...,
அதிலும் வருத்தமுமில்லை ??!!!

என்னையும் தொலைத்தேன்....,!!!
ஏனோத் தேடிடவில்லை??!!!

உன்னையும் தொலைத்தேன்...,
உடலில் உயிருமில்லை??

ஒரு சொந்தம் போனால்..,
ஒரு சொந்தம் கிடைக்கும்
என்றே நினைத்திருந்தேன் ...,

கிடைத்ததும் இன்று
தொலைந்ததும் ஏனோ?
தனிமையில் தேம்புகிறேன்..,

மின்மினி சிரிப்பும்
காதில் வந்து போகுதே..,

கடலலை எல்லாம்
உந்தன் அழகைப் பார்க்குறேன்..,
காலடிஎல்லாம் உந்தன்
அளவைப் பார்க்குறேன்...,

இறைவா நீயும் உன் துணைப்
பிரிந்தால் என் நிலைப் புரியுமையா!!

கண்ணாமூச்சி ஆடிடும்
உன் கொடுமை புரியுமையா !!

உள்ளுக்குள்ளே ஊசி ஒண்ணு குத்துதையா
காற்றோடு உன் குரலே கேட்குதையா...,

Saturday, November 13, 2010

கணற்பொறி வாழ்க்கை


சலசலக்கும் சிற்றோடையின் ஓசை ...,
மரங்களடர்ந்த சூழல்..,
பெயர் தெரியாப் பூக்களின் வாசம்..,
காட்டுப்பூச்சிகளின் ரீங்காரம்...,

இதமான தென்றல்...,
நட்சத்திரங்கள் கண்சிமிட்ட...,
பௌர்ணமி ஒளியில்...,
கயிற்றுக் கட்டிலில்...,
கதையளந்தபடி இரவு உணவு...

விவசாயம் செய்துக்கொண்டு நீயும்...
பானை முடிந்துக் கொண்டோ, பாய் பின்னிக்கொண்டோ...,
உனக்குதவியாக நானும் இருந்திருப்போம்...,
மகிழ்ச்சியாகவே போய் இருக்கும் வாழ்க்கை..??!!!

நரகத்து நகர வாழ்க்கையில்...,
கணிப்பொறியாளனாய் நீ இருக்க...,
கணர்பொறியை கக்கிக்கொண்டு
நகர்கிறது வாழ்க்கை.....,
Thursday, November 11, 2010

அன்பே நஞ்சாய்

ஊற்ற ஊற்ற
உள்வாங்கியபடியே
நிரம்ப விரும்பாத
மதுக்கோப்பை.

எனை மீட்டும் அன்பும்
அது மீட்கும் உன் நினைவும்
மதுவை விடவும்
மயக்கமாய்.

எப்போ தொடங்கினாய்
என்னென்ன பேசினாய்
என்ன சொல்லி முடித்தாய்
எந்த பிரக்ஞையுமின்றி.

மூச்சுத்திணறுகிறது
மூழ்கிக்கொண்டிருக்கிறேன்
உன் அன்பிற்குள்.

நீந்திக்கரை சேரும்
நிலையில் நானில்லை.
நினைவும் எனதாயில்லை.
கரம் நீட்டிக் கேட்கிறேன்
கரையேற்றி விடும்படி.

*நீயாய் நீந்தி வா*
எனச்சொல்லி
புள்ளியாய்
போய்க்கொண்டிருக்கிறாய்.

*அன்பும் நஞ்சுதானடி *
அசரீரி காதில் விழ
அண்ணாந்து பார்க்கிறேன்.

விடியும் வானில் சிரித்தபடி
விடிவெள்ளிகள்!!!சிரிக்க மட்டும்

தமிழை வளர்க்க தமிழக அரசு, செம்மொழி மாநாடு, சினிமா படத்துக்கு தமிழ்ல பெயர் வைத்தால் வரிவிலக்கு, 1331 குறளையும் ஒப்பித்தால் குரளரசி , குறளரசன் என்ற பட்டத்துடன் 1001 ரூபாய் குடுப்பது .., என என்னென்னவோ செய்து தமிழை வளர்க்குது. நாமும் நம்மாலான உதவியை செய்யலாமே. தமிழில் தங்கள் தொழிலை இப்படி சுட்டிக்காட்டலாமே.

Doctor -- வைத்யநாதன்
Dentist -- பல்லவன்
Lawyer -- கேசவன்
North Indian Lawyer -- பஞ்சாபகேசன்
Financier -- தனசேகரன்
Cardiologist -- இருதயராஜ்
Paediatrician -- குழந்தைசாமி
Psychiatrist -- மனோகரன்
Marriage Counsellor -- கல்யாணசுந்தரம்
Ophthalmologist --கண்ணாயிரம்
ENT Specialist -- நீலகண்டன்
Nutritionist -- ஆரோஞசாமி
Hypnotist -- சொக்கலிங்கம்
Mentalist -- புத்திசிகாமணி
Exorcist -- மாத்ருபூதம்
Magician -- மாயாண்டி
Builder -- செங்கல்வராயன்
Painter -- சித்திரகுப்தன்
Meteorologist -- கார்மேகம்
Agriculturist -- பச்சையப்பன்
Horticulturist -- புஷ்பவனம்
Landscaper -- பூமிநாதன்
Barber -- கொண்டியப்பன்
Beggar -- பிச்சை
Bartender--மதுசூதனன்
Alcoholic -- கள்ளபிரான்
writer -- நாவலன்
Makeup Man -- சிங்காரம்
Milk Man -- பால் ராஜ்
Dairy Farmer -- பசுபதி
Dog Groomer -- நாயகன்
Snake Charmer --நாகமுர்த்தி
Mountain Climber -- ஏழுமலை
Javelin Thrower -- வேலாயுதம்
Polevaulter -- தாண்டவராயன்
Weight Lifter -- பலரமன்சுமோ
Wrestler -- குண்டு ராவ்
Karate Expert -- கைலாசம்
Kick Boxer -- எத்திராஜ்
Batsman -- தண்டியப்பன்
Bowler -- பாலாஜி
Spin Bowler -- திருப்தி
Female Spin Bowler -- திருப்புற சுந்தரி
Driver -- சாரதி
Attentive Driver -- பார்த்தசாரதி
(இது எனக்கு மின்னஞ்சலில் வந்தது.)

வாழ்வா? சாவா?

உன்னால்
ஏற்படும்
"குழப்பம்"
என்னை வாழவிடுவதில்லை.

உன் கண்களில் தெரியும்
"கருணை"
என்னை சாகவிடுவதுமில்லை

Wednesday, November 10, 2010

பிறந்தநாள் வாழ்த்து

உன் பிறந்த நாளுக்கு
நான் ஏன் வாழ்த்து கூறவில்லை
தெரியுமா?
நான் உன்னை முதன் முதலில்
கண்டபோது எப்படி இருந்தாயோ
இன்றும் அதே இளமையோடு இருக்கிறாயே!!??
பின், நான் வாழ்த்துக் கூறி
உனக்கு வயது ஒன்றுக் கூடிவிட்டதை உணர்ந்து
நீ வருந்தக்கூடாது என்றுதான்.பிறந்த நாள் வாழ்த்து

என்ன மாப்பி
லைப் எப்படி போகுது..,
வீட்டுல எல்லாரும் நலமா?
உங்க வீட்டுசெடி, கொடிலாம் எப்படி இருக்கு ?
உங்க ஊருல மழை பெயஞ்சுதா?
கடைசியா என்ன படம் பார்த்தே?
அப்புறம்..,
என்னைப் பார்க்க எப்ப என் வீட்டுக்கு வரப்போறே?
,
,
,
,
,
,
,,
ஆங் ஒண்ணு சொல்ல மறந்துட்டேன் மாப்பி
,
,
,
"HAPPY BIRTHDAY TO U"
என்ன மறந்துட்டேன் னு நினைச்சியா?
அதுக்கு chance இல்ல


தத்துவம்

வாழ்க்கையில் கிடைக்கும்
சின்ன சின்ன சந்தோசங்களை
உடனே அனுபவித்துவிடுங்கள்.....,
பின் தவறவிட்ட மிகப்பெரிய
வாய்ப்பாய் மாறி
மனதை வருத்தும்.
************************************
பாக்குமரத்துல பாக்கு இருக்கும்,
எலுமிச்சை மரத்துல, எலுமிச்சை இருக்கும்,
ஆனால்,
பனமரத்துல பணம் இருக்குமா?
*****************************************
எவ்வளவு காஸ்ட்லியா காசு குடுத்து ஏரோப்பிளேன்ல போனாலும்,
ஜன்னலை திறந்து வேடிக்கை பார்க்க முடியாது.
********************************************************
பேன்ட் போட்டுக்கிட்டு முட்டி போடமுடியும்
முட்டி போட்டுக்கிட்டு பேன்ட் போடமுடியுமா?
**********************************************************
Fan க்கும் ரெக்கை இருக்கு,
பறவைக்கும் ரெக்கை இருக்கு,
ஆனா, Fan ல பறக்கமுடியாது,
பறவையால சுத்த முடியாது..,
Fan அ அமுத்துனா சுத்தும்,
பறவைய அமுத்துனா கத்தும்.
**************************************
இருக்கும்போது என்னதான் Complan, Horlicks,Bosst, னு
குடிச்சு வளர்ந்தாலும்,
செத்ததுக்கு அப்புறம்
எல்லார்க்கும் பால்தான்.
*********************************************
South-India ல நார்த்தங்காய் கிடைக்கும்.
ஆனால்,
North-India ல சௌத்தங்காய் கிடைக்குமா?
*************************************************
பச்ச மிளகைல பச்ச இருக்கும்..,
குடைமிளகாயில குடை இருக்குமா?
*********************************************

கோயில்மணிய நாம அடிச்ச சத்தம் வரும்,
கோயில்மணி நம்மள அடிச்சா ரத்தம் வரும்.
*********************************************

பிறந்த தின வாழ்த்துகள்பறக்க முடியா
பாட்டாம்பூச்சியாய் அலைமோதும்
நேசங்களைக் காற்றலையில்
உனக்காய்த் தூதனுப்பினேன்...

கவிதைச்
சுமக்கும் மௌனங்கூட
மொழியில்லா சின்னச் சின்ன
மழைத்துளி அர்ச்சனைகள்தான்...


விடிகின்ற உன் எல்லாப்
பொழுதும் சுகங்களை
மட்டும் ஆசிவதிக்கட்டும்...

இன்று துடிகிற இதயமும் கூட
உன்னை மட்டுமே
வாழ்த்திப் பாடட்டும்...


காற்றின் இடைவெளியை
அதிகரித்து வான
எல்லையையும் தாண்டி
இதய வழி வாழ்த்துகிறேன்...

இனிய பிறந்த தின வாழ்த்துகள்!!!!

நன்றி
ninaivellaam.blogspot.com


பிறந்தநாள் வாழ்த்து கவிதைகள்


இன்று மலர்ந்த
கோடானுக் கோடி மலர்கள்
சார்பாக உன்னை வாழ்த்துகிறேன்..,
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
********************************************உன் பிறந்த நாளை
பார்த்து மற்ற நாட்கள்
பொறாமை
ப்படுகின்றன??!!!..
பிறந்து இருந்தால்
உன் பிறந்த நாளாகத் தான்
பிறந்து இருக்க வேண்டும் என்று ..
*****************************


365 நாள் சுற்றுப்பயணத்தில்
உங்கள் பிறந்த நாள்
அந்த இனிய நாள்
இன்றுதான்...,
Enjoy the journey....,
Happy birthday to U

*************************

இன்று உனக்கு
பிறந்த நாள் இல்லை..,
இந்த பூமிக்கு
தேவதை ஒன்று
இறங்கி வந்த நாள்!!
***************************


னக்கு வாழ்த்து சொல்ல
புதிதாய் பிறந்தது
நீயா இல்லை நானா?
உன்னை வாழ்த்த
புதிதாய் யோசித்து, யோசித்து
நானே புதியதாய் மாறிப்போனேன்.
யோசித்து, யோசித்தும்
பிறக்கவில்லை கவிதை??...,புதியதாய்
இன்று
பிறந்த நீயே
கவிதைதானே எனக்கு.
*************************

அன்பு
நிலைப்பெற
ஆசை நிறைவேற
இன்பம் நிறைந்திட
ஈடில்லா இந்நாளில்
உள்ளத்தில் குழந்தையாய்
ஊக்கத்தில் குமரியாய்
எண்ணத்தில் இனிமையாய்
ஏற்றத்தில் பெருமையாய்
ஐயம் நீங்கி
ஒற்றுமைக் காத்து
ஒரு நூற்றாண்டு
ஔவை வழிக்கண்டு
நீ வாழிய வாழியவே..,
**************************

குறிஞ்சி பூப்பது
பனிரெண்டு வருடத்திருக்கு
ஒரு முறைதானாம் ..,
யார் சொன்னது????
வருடத்திற்கு ஒருமுறை
பூக்கிறது
உன் பிறந்த நாளாக!!!
********************************


புத்தம் புது நாள்...,
புத்தம் புது வருடம்...,
புத்தம் புது வாழ்க்கை...,
எல்லா சோகங்களும்,,
கஷ்டங்களும்..,
கரைந்துவிட ...,
இனி....,
உங்கள் வாழ்வில்
மகிழ்ச்சி மட்டுமே
பொங்குவதற்கு...,
இனிய
பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

****************************************


பறவை பறப்பதை மறக்கலாம்,
ரோஜா பூப்பதை மறக்கலாம்,
ஏன் பூமி
சுற்றுவதைக் கூட மறக்கலாம்..,
ஆனால் ...,
உன், பிறந்த நாளை
எப்படி என்னால் மறக்க முடியும்??!!!...,
ஏனெனில்...,
,
,
,
போன வருஷம் ட்ரீட் தரேன்னு
டிமிக்கி குடுத்திட்டியே அதான்.

*********************************************


நிலவைக் காட்டி
தாய்தான் சோறு ஊட்டுவாள்
ஆனால்,
இங்கு அந்த நிலவே
birthday cake ஊட்டுகிறது.
************************************
ஒவ்வொரு ஆண்டும்
புதுபுது சொந்தங்கள்,
புதுபுது கனவுகளுடன்
உன்னை விரும்புவோரெல்லாம்
உன்னை சுற்றி நின்று
வாழ்த்தும் அந்த இனிய நாள்தான்
நீ பிறந்த இந்த நாள்.
இன்று உன் வயது மட்டுமல்ல,
உன் கனவுகள், ஆசைகள்,
வெறுப்புகள், போன்றவையும் கூடுகிறது...,
அவைகளெல்லாம்
உனக்கு இந்த ஆண்டு மட்டுமல்லாமல்
இனி வரும்
அனைத்து ஆண்டுகளும்
நிறைவேறிட வாழ்த்துகிறேன்.
************************************

உன்
பிறந்த நாளில்
உனக்கு பரிசளிக்க
ரோஜாவைப் பறிக்க சென்றேன்...,
மலர்ந்த அந்த ரோஜாவுக்காக
மலருமென்னை றிக்காதே என்றது ..,
****************************************


நச்சென்று சில காரணங்கள்

ஆசை மொழியானாலும், சண்டையானாலும் நான் சொல்ல வரும் கருத்துக்களை, என்னை முந்திக் கொண்டு அழகான வார்த்தைகளால் கூறிவிடுகிறாய்...., அந்த புரிதல் .


உன்னை நான் எதற்காகவும், எங்கும் விட்டுக் கொடுப்பதில்லை. அந்த என்
உள்ளுணர்வு .

யாரையுமே கண்ணோடு கண் கொண்டு பார்த்துப் பேசும் என்னால் உன்பார்வையை எதிர்கொள்ள முடியாமல், என் பார்வையை விலக்கிக் கொள்வேன். அந்த ஆயிரமாயிரம் வாட்ஸ் மின்சாரத்தை தேக்கி உள்ள உன்
பார்வை .

கண்களும், நினைவுகளும் திறந்திருக்கும் வேளையில் மட்டுமல்ல, அவை
மூடியிருக்கும் வேளையில்கூட விலகாமல் இருக்கும் உன்
நினைவு

நீயும், உன் நினைவுகளும் இல்லாத நொடிகளில், நின்று போன இதயத்தின்
அமைதி

என்னுடன் உன்னை கூட்டி செல்கையில், எங்கோ தொலைந்து போன
உன்னை அன்றிலிருந்து தேடும் என் தேடல்

என் உணர்வுகள் அனைத்தும் உன் தோளில் மட்டுமே இளைப்பாறவேண்டும்என்று எண்ணும் உன் கோரிக்கை.

ஆனால் நீ மட்டும் உன் உணர்வுகளை என்னிடம் பகிராமல் இருக்கும் உன் அகங்காரம்

என் வாழ்க்கைத் துணைக்கான அத்துனை தேடல்களின் இடத்தையும்ஆக்கிரமித்த
உரிமை.

உன்னோடு நானும், என்னோடு நீயும் இருக்கும்போது நாமாகிப் போனோமேஅந்த பன்மை

எல்லாரையும் போலதான் நமக்குள் சண்டை வருகிறது. எல்லாரையும்போலதான் சமாதானமும் ஆகிறோம், ஆனால், சமாதானமாக யார் விட்டுக்கொடுப்பதென நீளும்
சண்டை.

உனக்கு எதெல்லாம் பிடிக்காது என்பதை சொல்லாமல் சொல்லும் உன்
கோபம்

தவறு என்மீது இல்லையென்றாலும்.., என்னை ஒரு வார்த்தை, பதில்கூட பேசவிடாமல் செய்துவிடும் உன்
திறமை.

நாமிருவரும் சந்திக்கையில் நாம் பேச இயலா சூழலில் இருந்தால், நமக்குமுன்நம் கண்கள் பேசிவிடும் அந்த
கண்களின் மொழி.

கண்ணுக்கெட்டாத தூரத்தில் நீ இருந்தாலும், என் கைவிரல்களில் இருக்கும்உன்
வாசம்

பொறாமைக்கோ , கர்வத்திற்கோ துளிகூட நம்மிடம் இடமில்லை. வேறென்னவேண்டும் வாழ்வில்.

டி போட்டு யார் பேசினாலும் உனக்கு பிடிக்காது. ஆனால் நான் மட்டும்உன்னை நான் பார்த்த நாள் முதல் கொண்டு டி போட்டு தான் பேசுகிறேன். எனக்குமட்டும் நீ அளித்த அந்த
விதிவிலக்கு

யார் அதட்டலுக்கும் அசராத நான், உன் அதட்டலுக்கு மட்டும் அடைந்து விடும்
சரண்

நேரில் கேட்பதற்கு நேர்மறையாக ஒலிக்கும் உன் தொலைபேசி
குரல்

திரைப்படங்கள் நம்மிடம் தோற்றுப் போகும் நாம் பேசினால். நம் ஒரு நாள்சண்டையிலும், சமாதானத்திலும் ஒரு திரைப்படம் அளவிற்கு இருக்கும்
வசனங்கள்

என் உயிரோட்டம் எதனால் நிகழ்கிறது என்று எனக்கு தெரியாது. ஆனால்அத்துணைக்கும் நீயே
காரணம்

சோகங்களில் நான் சுருண்டு விழும்போதெல்லாம் ஆலம் விழுதாய்தாங்குவாய். துன்பங்கள் என்னுடையதென்றால், வலிகளை உன்னுடையதைமாற்றி கொள்ளும்
நேசம்

நம் ஐந்து விரல்களும் ஒன்றோடு ஒன்றாய் இருக்கையில் என் கோடிதுன்பங்களும் கால் தூசிதான். அந்த
வலி நிவாரணி.

சொன்னதையே நான் திரும்ப திரும்ப சொன்னாலும் , அலுக்காமல் கேட்கும்உன்
பொறுமை

இனி உன்னிடம் பேசவே மாட்டேன் என முடிவெடுத்து தொலைப்பேசியைவைத்த சிறிது நேரத்தில், மீண்டும் தொலைப்பேசியில் அழைத்து மாத்திப்பண்ணிட்டேன் என வழிகையில் , புரிந்துக் கொண்டு அமைதியாய் சிரிக்கும் ஒரு
குறுஞ்சிரிப்பு

"
நீயும்" வேண்டும் என்று ஆரம்பித்து, " நீ" வேண்டும் என்று நீண்டு இப்போதுநீ மட்டுமே" வேண்டும் என்றில் வந்து நிற்கும் என் "பாதை

சரியோ? தவறோ? என் பாதைகள் தெரியவில்லை. வழித்துணையாய் நீஇருக்கிறாய் என்று நம்பும் என்
ம்பிக்கை

யாருக்கும் எந்த தீங்கும் நீ நினைபபதில்லை. உன்னை துன்பபடுத்தும் நான்கூட நல்லா இருக்கணும்னு நினைக்கும்
அக்கறை.

நான் உன்னை காதலிக்கிறேன். கொஞ்சம் எனக்காக. நிறைய உனக்காகஎன்னும் என்
பங்கு .

இருபத்திநாலு மணிநேரம் பேசினாலும் அலுக்காது நமக்கு. அதுசரிஆசைமொழி அலுத்துப் போகும், அன்பு மொழி அலுத்து போகாது என்னும்
உணர்தல்

என் பைத்தியக்காரத்தனம் அத்துனையும் உனக்கு பிடிக்கும், பின் எப்படிஉன்னை எனக்கு பிடிக்காமல் போகும். என் பைத்தியக்காரத்தனத்தை சகித்துக்கொள்ளும் உன்
பொறுமை

என் எந்த செயலையும் நீ கேலி செய்வதில்லை. அப்படியே என்னைஏற்றுக்கொண்ட
மனப்பாங்கு

இறுக்கமாக விரல்களை பற்றிக் கொள்ளும்போது என் வலிகள் தெரிவதில்லை. எங்கே கற்றுக் கண்டாய் அந்த
வித்தையை

அன்பு மட்டும் போதாது காதலுக்கு என்று சொல்லி என் மீது நீ வைத்த
நம்பிக்கை

என்னை அழ வைப்பவன் நீ. என்னை சிரிக்க வைக்கவும் தெரிந்த
மாயாஜாலக்காரன்

உன் தோள்களில் நான் சாய்கையில் கண்ணில் கண்ணீர் மல்கும். கடைசி வரைநீ நிலைக்கப் போவதில்லையே என்னும்
ஏக்கம்

என் பாரங்கள் அத்துனையும் கரைத்துவிடும் உன் ஒற்றை சொல் ----------

காதல் என்பதற்கு என்ன அர்த்தமோ, அதைவிட அதிகமாகவே நீ தந்த அந்த கொடை.

நீ விளையாடும் விளையாட்டை
கூட இஷ்டமான எனக்காக விட்டு தராத பிடிவாதம்.

எனக்கென்று இறைவன் ஒதுக்கி வைத்த நேரம் இருக்கிறது. அவற்றைஉனக்காக மட்டுமே செலவழிக்கிறேன். உன்னை
கண்ட நாள் முதல் .

என் ஆதி முதல் அந்தம் வரை உனக்கு அத்துப்படி.., ஆனால் உன்??!! அந்த
புரியாத புதிர் .

எதன்பொருட்டோ பாராட்டவோ, திட்டவோ, இல்லை கருத்துஏதாவது தெரிவிப்பாய் என காத்திருக்க கிணற்றில் போட்ட கல்லாய் இருக்கும்
விட்டேற்றித்தனம்.

நான் உன்னிடம் நிபந்தனையிட , நமக்குள்ளே எந்த நிபந்தனையும் வேணாம்னு கூறி ...., உன் நிபந்தனையை என்மேல் திணிக்கும்
ஆளுமை

தெரிந்தோ, தெரியாமலோ என்மீது படிந்துவிட்ட உன்
சாயல்

எலியை பிடிக்கவும், தன் குட்டியை தூக்கவும் ஒரே பற்கள்தான் பயன்படுகிறதுபூனைக்கு. அதுப்போன்ற உன்
கரங்கள்.

அளக்க முடியாத அளவிற்கு சந்தோசங்கள் நிறைந்த வாழ்க்கை. நீவந்ததற்கு பிறகு..., சாமி கொடுத்த வரம். கடவுளே வரமாய் கிடைத்துவிட்ட திருப்தி எனக்கு

என் இதய ஆழத்தில் உள்ள உணர்வுகளை காட்டும் விளக்கு நீ


கடவுளும் நீயும் ஒன்று. ஏனெனில், இருவருமே எதிர்பார்ப்பவற்றை தராமல் ஏமாற்றும் ஏமாற்றுக்காரர்கள்.

நாளை என்ன நடக்குமோ யாமறியேன். ஆனால் நடந்த, நடந்துக்கொண்டிருக்கும் இந்த நிமிடங்கள் மறக்க முடியாதவை. என்னோடு நீ இருந்ததால் மட்டும்


காதல் என்பது எவ்வளவு தூயமையானதோ அதைவிட அதிக தூய்மையை கண்டேன் நான் உன்னிடம்

என் ரகசிய தேசத்தின் காவலாளி நீ . உன்னை மீறி என் ரகசியங்கள் எங்கும்போவதில்லை .

பொக்கிசமாய் பாதுகாக்கப் படவேண்டிய பொருள் என்று ஏதுமில்லை என்னிடம். உன் நினைவுகளைத் தவிர.

நிமிடத்திற்கு எத்தனைதரம் துடிக்குமோ இதயம் எனக்கு தெரியாது. நீ இருக்கிறாய் அத்தனை துடிப்பிலும்.

உன்னை பார்க்கும் ஒவ்வொரு முறையும் என் இதயத்துடிப்பின் துடிப்பு ஒன்றுகாணாமல் போய்விடுகிறது.
திருடா

எவ்வளவு பாரங்கள் இருந்தாலும்
எல்லாம் தீர்ந்து இலகுவாகிறது மனது நீ அருகில் இருக்கையில் மட்டும்.

மனத்திலும், உடலிலும் எத்தனை வலி இருந்தாலும் சாய்ந்த உடனே வலிகளை போக்கிவிடும் உன்
மடி

இந்த நிமிடமே நான் இறந்துகூட போவேன் சந்தோசமாய். ஏனெனில் என்மீதுஅன்பு செலுத்தும்
தேவதையை கண்டுக் கொண்டேன், கண்டு கொண்டேன்.

வெகுநாட்கள் காணாமல் இருந்துவிட்டு பார்க்கும்போது பிணைத்துக்கொள்ளும் கைகளில் உள்ள
நெருக்கம்

கண்டு விட்டு பிரியும்போது 'திரும்பி பார்க்கக் கூடாது" என எனக்கு நானேநூறு முறை சொல்லியும், சொல்பேச்சுக் கேளாமல் அடமாய் திரும்பிபார்க்கையில்..., எப்படியும் நான் திரும்பிப் பார்ப்பேன்..., கையசைக்கலாம் எனக்பார்த்திருக்கும் உன்
காத்திருப்பு

கிறுக்குத் தனமாக எதாவது செய்து விட்டு உன்னிடம் நான் வாங்கும்
குட்டு, வலிக்கும். ஆனா வலிக்காது

என்னை பொறுத்தவரை வண்டி ஓட்டுவது ஒரு சிலருக்குதான் அழகு. அப்படிஓட்டுபவர்களில் நான் ரசித்தவர்கள் ஒரு சிலரே. அதிலும் உனக்கே
முதலிடம்.

என்ன தவறு நான் செய்தாலும் , உன்னிடம் எனக்கு கண்டிப்பாக உண்டு
மன்னிப்பு.

உன்னிடம் ஏதாவது ஒரு கோரிக்கை வைத்து விட்டு, கண்டிப்பாய் எனக்காக இதை செய்வாய் என நம்பி இருக்கும் என் ஏமாளித்தனம்


என் எதிர்ப்பார்ப்புகளை பூர்த்தி செய்யாவிட்டாலும்... கையை சுடும் என்றாலும் தீயை தொடும் பிள்ளைப் போல் meendum, meendum உன்னிடமே எதிர்நோக்கும் என் எதிபார்ப்பு


இந்த கேள்விக்கு இந்த பதில்தான் சொல்லுவே..., இப்படி பேசினால்இப்படி எதிர்கேள்வி கேட்பே னு நம்பி பேசினால் கண்டிப்பாய் அந்த கேள்வி பதிலை choice விட்டுவிடுவாய்.

அந்த choice களை இன்றுவரை தொடர்ந்து வரும் உன் சாகசம்.

அந்த choice களை நீ தொடர்வதால் உன்னிடம் இன்னும்கூட சொல்லாமலே விட்ட ரகசியங்கள்

நாம் அறிந்தோ அறியாமலோ நமக்குள் ஒன்றாய் அமைந்துவிட்ட ரசனைகள்.

தொலைப்பேசியில் தான் பேசுவோம். முகம் காணாவிட்டாலும் என்உணர்வுகளை அப்படியே உள்ளது உள்ளபடி சொல்லும் உன்
கெட்டிகாரத்தனம்.

பிறந்த நாள், பொங்கல், திபாவளி அது, இது லொட்டு லொசுக்குக்கு ஏன் வாழ்த்தலை னு கேட்டால், அந்த நாளும் மற்றொரு நாளே னு சமாளித்து நீ அள்ளிவிடும்
தத்துவ முத்துக்கள்

எனக்கு பிடிக்காது என அந்த டாபிக்கையே விலக்குவதாக்..., நடிக்கும் அந்த
நடிப்பு

எனக்கு பிடிக்காத டாப்பிக்கை நீ தொடவே மாட்டேன் னு நம்பி இறுமாந்திருக்கையில், அதை தெரிந்தும் திடுமென்று அதைபத்தி பேசி என்னை நிலைகுலைய வைக்கும்அந்த திமிர் .

யாரையும் நம்பாதே னு சொல்லி, உனக்கே தெரியாமல்.., உன்னை மட்டுமே நம்பணும்னு திணிக்கும் உன்
திணிப்பு.

உன்னை மட்டுமே நான் கொண்டாடனும்னு நினைக்கும் உன்
ஆசை

ஆனால், அதுபோல் நீ நடக்காமல் என்னை அவமதிக்கும் உன்
செயல்

இப்படி ஒன்றல்ல இரண்டல்ல இன்னும் ஆயிரம் காரணம் வைக்க முடியும் அளவுக்கு என்னை கவிஞனாய் மாற்றிய
பெருமை உனது.

வேறெதற்கும் பிறக்காமல் உன்னை காதலிக்க மட்டுமே பிறந்த மாதிரி இருக்கும்என் வேட்கை

இப்படி பொது இடத்துல எழுதலாமான்னு என்மீது கோபப்பட்டுக்கொண்டே இதை ரசிக்கும் உன் ரசனை

இளங்கதிர் புறப்படும் வரை நீண்ட தொலை பேசி உரையாடல்கள். விடிந்தப்பின்னும்..., முடியாமல் தொடர்ந்த..., குறுஞ்செய்திகள்..,

வேண்டாம் முடித்துக் கொள்வோம் என தினம் தினம் முற்றுப்புள்ளி வைத்து அதுவே இன்று தொடர்புள்ளியான அதிசயம்.

சட்டென்று கோபப்படும் நான். நீ என்ன பிழைசெய்தாலும் உன்மீது எனக்கு இதுநாள் வரை வராத கோவம்.

நான் சொல்றதெல்லாம் பொய், எங்கிருந்தோ சுட்டதுனு தெரிஞ்சும் என்னைநம்பி உக்காந்து படிக்குறே பாரு அந்த வெகுளித்தனம்.

தலைப்பிற்கும், சில கருத்துக்கள் தந்ததற்கும் நன்றி:
anaadhaikathalan.blogspot.com