எத்தனைமுறை சென்றாலும் அலுப்பு தட்டாத நகரம் மதுரை மாநகரம். மீனாட்சி அம்மன் கோவிலாகட்டும், நாயக்கர் மகாலாகட்டும், அழகர் கோவிலாகட்டும், ராணி மங்கம்மாள் மாளிகையாகட்டும்.. பார்க்க பார்க்க அலுப்பு தட்டாது. இந்நாளில் நாம் காணும் பழமையும், புதுமையும் கலந்து காணப்படும் மதுரை, 300 வருஷங்களுக்கு முன்னர் மதுரையின் கட்டமைப்பு மற்றும் நிர்வாக அமைப்பு போன்றவற்றில் சிறந்து விளங்கியது. இப்பொழுது இருந்ததைவிட நேர்த்தியாகவும், அழகாகவும் இருந்ததுன்னு சொன்னா ஆச்சர்யமாதான் இருக்கும். மதுரையை பாண்டிய மன்னர்கள் ஆண்ட 13-ம் நூற்றாண்டு காலகட்டங்களில் மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி பெரிய கோட்டை இருந்ததுன்னு வரலாற்று ஆய்வுகள் சொல்வதா படிச்சேன். அது நிஜமா?! பொய்யான்னு இன்றைய மௌனசாட்சிகள் பதிவில் பார்க்கலாம்.