Tuesday, February 26, 2013

மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன?


1. ஸ்கூல் ஆஃபீஸ் டைம் தெரிஞ்சு நேரத்துக்கு எல்லாத்தையும் ரெடி பண்ணிடனும்..., (கிளம்புற நேரத்துலதான் சமைக்கலை, ட்ரெஸ் அயர்ன் பண்ணலைன்னு சொல்லி கடுப்பேத்த கூடாது...,)

2. அதிகாலை 6 மணிக்கு முன் எழுந்துக்கனும்.., (வூட்டுக்காரர் கிளம்பி டாட்டா சொல்லிட்டு போற வரை தூங்க கூடாது.)

3. எப்பவும் சிரிச்ச முகமா இருக்கனும்..,  (அதுக்காக வெளில போகும்போதும் இளிச்சுட்டே வரக்கூடாது)


4. உங்க  மாமியாரை தாயா மதிக்கனும் (உங்க  வீட்டுக்காரோட மாமியாரை இல்ல..,) 

5. தன்னோட வீட்டு ஆளுங்க கிட்ட அனுசரணையா நடந்துக்கனும்..,( ஆனா, இவரு மட்டும் மாமன், மச்சான், மாமனார், மாமியார் வந்தால் ஆஃபீசுல ஓவர் டைம்முன்னு சொல்லி லேட்டா வருவார்.) 

7. எதுக்கெடுத்தாலும்  புருசனை   குறை சொல்லக் கூடாது (இழுத்து போட்டு அடிச்சாலும்..)

8. அதிகாரம் பணணக் கூடாது(திண்ணுட்டு திண்ணுட்டு கிரிக்கெட் பார்த்தாலும் எதும் சொல்லப்படாது...)

9. குடும்ப ஒற்றுமைக்கு உழைக்க வேண்டும். அண்ணன், தம்பி பிரிப்பு கூடாது (சம்பாத்தியம் மொத்தமும் அவங்களுக்கே கொடுத்து உங்களை பட்டினி போட்டாலும்...)

10. கணவன் குறைகளை வெளியே சொல்லக்கூடாது. அன்பால் திருத்த வேண்டும் (ஆமா, சந்தேகப்பட்டு ஆசிட் ஊத்த வரும்போதும் இதோ பாரு டார்லிங் அதை என் மேல ஊத்துனா லேசா எறியும், தோல் வழண்டிடும்ன்னு அன்ன்ன்பா சொல்லனும்.)

11. கணவனை சந்தேகப்படக் கூடாது (அவன் லேப்டாப்பை போர்வைக்குள்ள வச்சுக்கிட்டு சிரிச்சுக்கிட்டே டைப்பிக்கிட்டு இருந்தாலும்..,)
 .
12. குடும்பச் சிக்கல்களை வெளியே சொல்லக் கூடாது (ஆமா, எவ்வளவு சீரழிஞ்சாலும் சாக்கியாரிஸ்டுக்கிட்ட கூட சொல்லி உருப்படுற வழியை பார்க்க கூடாது...)

13. பக்கத்து வீடுகளில் அரட்டை அடிப்பதைக் குறைக்க வேண்டும் (ஆனா, அவங்க மட்டும் ஃபேஸ்புக், ட்விட்டர், ஆர்குட்டுன்னு செவ்வாய் கிரகத்துல இருக்குறவங்ககிட்ட கூட சாட் பண்ணுவாங்க...)

14. வீட்டுக்கு வந்தவுடன், சாப்பிடும் போது சிக்கல்கள் குறித்துப் பேசக் கூடாது(ம்ம் ஏன்னா சாப்பிடும் போது கூட ஃபேஸ்புக், ட்விட்டர்ல ஸ்டேட்டஸ் போடனுமே!!)

.
15. கணவர் வழி உறவினர்களையும் நன்கு உபசரிக்க வேண்டும் (ம் ம் ம் அவங்க எத்தனை நாள் வேணும்னாலும்  டேரா போட்டு, ஊரை சுத்தி டெபிட் கார்டை தேச்சு காலி பண்ணாலும்..,) .

16. இருப்பதில் திருப்தி அடைய வேண்டும்(ஆமா, வாங்குற சம்பளத்தை தண்ணி, தம்முன்னு அழிச்சுட்டு வந்து குடும்பம் நடத்துனாலும்...)

17. அளவுக்கு மீறிய ஆசை கூடாது (அப்படி ஆசைப்பட்டு சிறுவாடு சேர்த்து நகை, டிவி,ஃப்ரிட்ஜ்ன்னு சேர்த்து எல்லாரையும் போல நல்லபடியா வாழ ஆசைப்பட கூடாது...)

18. குழந்தை படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் (இவர் மட்டும் ரெண்டாவது பொண்ணு என்ன செக்‌ஷன்ல படிக்குதுன்னு கூட தெரிஞ்சுக்காம இருப்பார்...)

19.. கணவரிடம் சொல்லாமல் கணவரின் சட்டைப் பையிலிருக்கும் பணத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது (ஏன்னா, தண்டமா ஃப்ரெண்டுக்குலாம் டிரீட் குடுக்கனுமே!)

.
20. தேவைகளை முன் கூட்டியே சொல்ல வேண்டும் (ஃப்ரெண்ட்ஸ் கூட அரட்டை அடிச்சுட்டு கூர்க்காவும் கண் அசரும் நேரத்துல வீட்டுக்கு வந்தா எந்த கடை திறந்திருக்கும்...)


21. எதிர்காலத் திட்டங்களைச் சிந்திக்கும் போது ஒத்துழைக்க வேண்டும் (யார் எதிர்காலம்ன்னு கேக்கப்படாது...)

.
2.2. தினமும் நடந்ததை இரவில் சொல்ல வேண்டும் (சொல்லி முடிச்சு பார்த்தா குறட்டை விட்டு தூங்கிட்டு இருப்பான்...)

23. தாய் வீட்டில் கணவரை குற்றம் சொன்னால் மறுத்துப் பேச வேண்டும் (உள்ளதை சொன்னால் விரோதம்தான் வளரும்.. அப்புறம் கோர்ட்டு, கேசுன்னு பொண்ணை பெத்தவங்க சுத்தனும்...)

24. அடக்கம், பணிவு தேவை. கணவர் விருப்பத்துக்கு ஏற்றாற் போல் ஆடை, அலங்காரம் செய்ய வேண்டும் (அவர் மட்டும்ஃபேஷன்ன்ற பேருல கன்றாவியா குட்டையா சட்டை போட்டுக்கிட்டு தொந்தி அசைய வருவார்..,)


25. குழந்தையைக் கண்டிக்கும் போது எதிர்வாதம் கூடாது ( ஆஃபிசுல இருக்கும் கோவத்தால் குழந்தையை எவ்வளவு அடிச்சாலும் மூச்ச்ச்ச்..)

26. சுவையாகச் சமைத்து, அன்புடன் பரிமாற வேண்டும் (ஆனா, ஃப்ரெண்ட்கிட்ட செல்போன்ல அரட்டை அடிச்சுக்கிட்டே  நல்லா இருக்குன்னு ஒரு வார்த்தை கூட சொல்லாம பாய்லர்ல  கறி அள்ளி போடுற மாதிரி சாப்பிட்டு போவார்...)

28. கணவர் வீட்டுக்கு வரும் போது நல்ல தோற்றம் இருக்கும்படி வீட்டை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும் (அப்போதானே சாக்ஸ், ஃபைல், செல்போன், லேப்டாப்ன்னு கண்ட இடத்துல போட்டு குப்பையாக்க முடியும்!!?) .
29. அதிகம் சினிமா பார்க்க கூடாது (அவர் மட்டும் வாரத்துல ஒரு நாள் ஃப்ரெண்ட்ஸ் கூட போய் பார்த்துட்டு வருவார்..,)


30.தன்னோட ஃப்ரெண்ட்ஸ் வரும்போது  நல்லபடி சமைச்சு கவனிச்சுக்கனும் அதே நேரம் அவங்ககிட்ட எதும் பேசிட கூடாது (நம்ம ஃப்ரெண்ட் வந்தா இவங்க மட்டும் ஜொள்ளு விட்டுக்கிட்டு வந்து பேசுவாங்க...)


Monday, February 25, 2013

வூட்டுக்காரரை கைக்குள்ள வெச்சுக்குறதுங்குறது இதானோ?!

(எவ்வளவு அடிச்சாலும் தாங்கறாண்டா! இவன் ரொம்ப நல்லவன்ன்ன்ன்ற வடிவேலு காமெடிதான் நினைவுக்கு வருது...,)


(அம்மாக்கும், மம்மிக்கும் உள்ள வித்தியாசம்...)


(வாழ்க்கைன்னா இதான்..)
(நினைவுலயும் நீயே! கனவுலயும் நீயே...,)



(இஞ்சினியர்ஸ் பண்ற ஓவர் சீன்!!)

   (ரொம்ப அலெர்ட்டா இருக்குறாராம்!!!)


(வூட்டுக்காரரை கைக்குள்ள வெச்சுக்குறதுங்குறது இதானோ?!)


(இதுக்குத்தான் ஊருக்குள்ள ஒரு ஆல் இன் ஆல் அழகுராஜா வேணும்ங்குறது..,)

( பாப்பா  தூங்கும்போது.., அப்பாவும்.., அம்மாவும்...,)

( கூகுளாண்டவருக்கே தெரியலியாம்!!)


(ரொம்ப வெவரம்தான்...,)

Thursday, February 21, 2013

அமிழ்தினினும் இனிய தமிழ்- சர்வதேசத் தாய்மொழி தினம்..!

                               
ஒவ்வொரு மனிதனுக்கும் தாய்மொழி இருக்கிறது. அதனை எக்காரணம் கொண்டும் இழந்துவிடக்கூடாது. இளம் பருவத்தில் கல்வி என்பது தாய்மொழியில் இருந்துதான் தொடங்க வேண்டும். கல்வி என்பது வெறும் படிப்பு இல்லை. அது பண்பாடு, கலாசாரம், நாகரிகம், கலைஇலக்கியம், தத்துவம், இசை, நாட்டியம் என்று பலவற்றோடும் தொடர்பு கொண்டது. அதனைத் தாய்மொழி மூலமாகத்தான் எளிதாக அறிந்துகொள்ள முடியும். எனவே, ஒவ்வொரு குழந்தையும் தாய்மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்வதுதான் சர்வதேசத் தாய்மொழி தினத்தின் முக்கியமான நோக்கம்.

ஒருவருக்கு ஒருவர், தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள உதவிய மொழி, பின்னாளில், இனத்தின் அடையாளமாக மாறியது. உலகளவில் மொழியானது நாட்டுக்கு நாடு, மாநிலத்துக்கு மாநிலம், சமூகத்துக்கு சமூகம் மாறுபடுகிறது. உலகில் பேசப்படும் மொழிகள், பொது மொழி, தாய்மொழி என இரண்டு வகையாக, பிரிக்கப்பட்டுள்ளது. உலக அளவில், 100 ஆண்டுகளுக்கு முன், 6,200 ஆக இருந்த மொழிகள், இன்று, 3,000க்கும் குறைவாக குறைந்துள்ளதாக, மொழியியல் அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். இந்தியாவில் இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட, 22 மொழிகள் அதிகாரப்பூர்வமாக உள்ளன. உலகில் உள்ள மொழிகளுக்குள், ஒரு தொடர்பை ஏற்படுத்தவும், ஒற்றுமையை வளர்க்கவும், ஆண்டுதோறும் பிப்., 21ம் தேதி உலக தாய்மொழி தினம் யுனெஸ்கோ அமைப்பால் கடைபிடிக்கப்படுகிறது.

தாய்மொழி, தேசிய மொழி மற்றும் தொடர்பு மொழி என பொதுவாக மூன்று விதமான மொழிகள், ஒருவருக்கு தெரிந்திருந்தால், எங்கு வேண்டுமானாலும் வாழ்வதற்கு துணையாக இருக்கும், என அறிஞர்கள் கூறுவர். ஆனால், தொடர்புகளுக்காக உருவான மொழியின் பெயரால், இனவாதம் துவங்கியது, துரதிஷ்டமானது. உலக மக்களால் பயன்படுத்தப்படும் அனைத்து மொழிகளுக்கும் பாதுகாப்பும், உரிய மரியாதையும் அளிக்க வேண்டும். எந்த மொழியையும் அழிக்கக் கூடாது."ஒருவர் பல மொழிகளை தெரிந்து கொள்ளவும், வெளிநாட்டு மொழிகளை கற்றுக் கொள்ளவும், மொழிபெயர்ப்பு மூலம் அமைதியை உருவாக்கவும்' இத்தினம் வலியுறுத்துகிறது
 தமிழின் சிறப்புகளில் சில: 

 • உலகின் பழைய மொழிகள் ஏழு. அதில் இப்போதும் வழக்கில் இருக்கும் மொழிகள் மூன்றுதான். அதில் ஒன்று தமிழ்.

• இடமிருந்து வலமாக எழுதப்படும் மொழிகளில் பழைய மொழி தமிழ் மட்டும்தான். அதாவது தமிழ் எப்படி எழுதப்பட்டதோ, அதே போல்தான் இன்று உலகின் பல மொழிகள் எழுதப்படுகின்றன. 

• இந்தியாவில் கிடைத்துள்ள ஏறத்தாழ 1,00,000 கல்வெட்டுப் பதிவுகளில் அறுபதாயிரத்திற்கும் அதிகமானவை தமிழில் உள்ளன. மற்ற மொழிகள் அனைத்தும் ஐந்து விழுக்காட்டுக்கும் குறைவான கல்வெட்டுகளையே கொண்டுள்ளன. 

• தமிழ் பிராமியில் எழுதப்பட்ட கல்வெட்டுக்கள் எகிப்து, தாய்லாந்து, இலங்கை ஆகிய நாடுகளில் கிடைத்துள்ளன. இவற்றின் வயது கி.மு.300. அதாவது 2300 ஆண்டுகளுக்கு முன்னரும் தமிழ் இருந்திருக்கிறது.

• திருக்குறள் 2000 ஆண்டுகளுக்கும் முந்தையது. ஆனால், அதில் உள்ள சொற்களை நாம் இப்போதும் பயன்படுத்தி வருகிறோம். 
உதாரணம்: ‘எப்பொருள் யார்யார்வாக் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு’ 

‘பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்’

• தமிழ் எழுத்துக்களைப் பயன்படுத்தி எண்களும் எழுதப்பட்டன.

• கோடிக்கு மேல் குறிப்பிடுவதானால், ஆங்கிலத்தில் பத்து கோடி, நூறு கோடி என்றுதான் எழுத வேண்டும். அவற்றிற்கென தனிச் சொற்கள் கிடையாது. ஆனால், தமிழில் உண்டு. கோடி கோடி என்பதை பிரமகற்பம் என்ற ஒரு சொல்லில் எழுதிவிடலாம். அதேபோல பின்னத்தில் 320ல் ஒரு பங்கைக் குறிப்பது வரை ஒரு சொல்லில் குறிப்பிட முடியும் (முந்திரி).

• தன்னிலிருந்து மலர்ந்து வரும் ஒலி என்பதைக் குறிப்பிடும் தம்-இழ் என்ற சொல்லே தமிழ் என ஆயிற்று என்றும், தகுதியான பேச்சு முறை என்பதைக் குறிக்கும் தம் -மிழ் என்ற சொல்லே தமிழ் என ஆயிற்று எனவும் செக் நாட்டு அறிஞர் கமில் சுலவெபில் கருதுகிறார்.

• வன்மையான ஓசை உடைய எழுத்துக்கள், மென்மையான ஓசை உடைய எழுத்துக்கள், இரண்டிற்கும் இடைப்பட்ட ஓசை உடையவை என்பதை உணர்த்தும் வகையில் தமிழின் மெய்யெழுத்துக்கள் வல்லினம், மெல்லினம், இடையினம் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொன்றிலிருந்தும் ஓர் எழுத்தை எடுத்து (த-வல்லினம், மி- மெல்லினம், ழ்- இடையினம்), தமிழ் என மொழிக்குப் பெயரிடப்பட்டுள்ளது. உலகில் பெயரைக் கொண்டே மொழியின் தன்மையை அறியும் பெயர் வேறு எந்த மொழிக்கும் கிடையாது.

• இணையத்தில் அடி எடுத்து வைத்த முதல் இந்திய மொழி தமிழ்.

• உலகில் நான்கு நாடுகளில் தமிழ் அரசின் அலுவல் மொழியாக இருக்கிறது.


டிஸ்கி: அவசர. அவசரமா ஃபேஸ்புக்குல சுட்டது.., இன்னிக்கு மதியம் ஃபேஸ்புக்குல உலாவும்போதுதான் இன்று ”சர்வதேச தாய் மொழி தினம்” ன்னு தெரியும்.முதல்லியே தெரிஞ்சிருந்தா எப்படி தமிழை கொலையா கொண்ணேன்னு பதிவு போட்டிருப்பேன்.

Wednesday, February 20, 2013

எங்கே செல்லும் இந்த பாதை!!??


           இன்ன்னிக்கு  எங்க வீட்ட்டுக்கு பக்கத்துல  குடியிருக்கும் பெண்மணி வந்து, கூடிய சீக்கிரம்  நாங்க குடியிருக்கும்  வீட்டை காலி செய்துட்டு , வேறு வீட்டுக்கு போகபோகிறோம்ன்னு சொன்னாங்க. அப்புறம் பேச்சு எங்கெங்கோ போய் கடைசியில்  தோட்டத்தில் உள்ள பூச்செடிகள் பக்கம் போச்சு...,

                 இங்கிருக்குற  ”டிசம்பர் பூச்செடி” என் பொண்ணு ஆசையாசையாய் வச்சுது. இப்போதான் தளதளனு வந்திருக்கு. இந்த சீசனில் கண்டிப்பா பூக்கும். ம்ஹும், போகும்போது வெட்டிப் போட்டுவிட்டுதான் போகணும் என்றாரேப்  பார்க்கலாம்.  சில நொடிகளுக்கு  எனக்குப் பேச்சே வரலை. ஒருவாறாக அவர்களை வழியனுப்பிவைத்துவிட்டு, யோசித்தேன்.

                      ஒருப் பூச்செடியே  அடுத்தவங்களுக்கு விட்டுக் கொடுக்காத அளவிற்கு மனித மனங்கள் (என்னையும் சேர்த்துதாம்ல)  இன்று சுருங்கி விட்டதை எண்ணி வேதனைப் பட்டேன்.

                    இந்த அறிவியல்  யுகத்தில் கிடைக்கும் வசதிகளால் உலகமே சுருங்கிப் போய்விட்டது என்று பெருமையுடன் மார் தட்டும்போது.,, மனங்கள் சுருங்கிப் போய்விட்டதை எண்ணி கண்டிப்பாக வெட்கித் தலைக் குனிய வேண்டியதுதான்.
                 என்னோட நினைப்பு நான் சின்ன புள்ளையா இருந்த கால்த்துக்கு டைம் மெஷின் இல்லாமலயே போய்ட்டுது..(கொசுவர்த்தி சுருள் ஏத்திட்டீங்களான்னு கேக்கப்படாது? )
                                    
                  அன்னிக்கு, பெரும்பாலும் எல்லா வீட்டிலும் திண்ணை வைத்துதான் வீடுக் கட்டுவார்கள்.  அது எதுக்குன்னு எல்லாருக்குமே தெரியும்.  வெளியூரிலிருந்து வர்றவங்க கொஞ்ச நேரம் தங்கி ரெஸ்ட் எடுத்துட்டு போக கட்டுனது.  . அந்த திண்ணை இப்போ எங்கே?

                  ஒவ்வொரு வீட்டு திண்ணையும் எத்தனை, எத்தனை சுகம், துக்கம், பிறப்பு, இறப்பு, மகிழ்ச்சி, சோகம், காதல் வலியை சுமந்திருந்தன? என்று நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.

                    சாயந்தர நேரத்துல  (அப்போலாம்  T.V.என்ற முட்டாள் பெட்டி இல்லை). அந்த திண்ணை  பல வேசமெடுக்கும் . சின்ன பிள்ளைங்க  தங்களோட வயசு பசங்களஓட செட்டு சேர்ந்து  விளையாடுவாங்க. அம்மாக்கள் ஒருபுறமும், அப்பாக்கள் ஒருபுறமும், அண்ணன்கள்,அக்காக்கள் மறுபுறமும் தத்தம்  வயதுகேற்ப பிரிந்து உக்கார்ந்து பேசிக்க்கிட்டு இருப்பாங்க.  சில சமயம் குடும்ப பிரச்சனைகள் கூட அங்கே பேசப்பட்டு அங்கேயே அதுக்கு தீர்வு கிடைச்சுடும்

                       குழந்தையின் உடல்நிலையிலிருந்து. வீடு கட்டுவது, பணமுடை, ஊர்பயணம், மகனின் திருமணம், அப்பாவின் தெவசம்  வரை அங்கேயே செலவில்லாமல் பிரச்சனை சுமூகமாய் முடிந்த கதை உண்டு.

                        அப்புறம்,  தண்ணி எடுக்க போவது. பெரும்பாலும் குடிநீர் கிணறு ஊருக்கு வெளியே ஆற்றங்கரை அல்லது குலத்தங்கரையில்தான்    இருக்கும், அதற்கு வயதுவந்த பெண்களும், சின்ன பிள்ளைகளும், பெரியவங்களும் தனியாகப் போகாம ஒரு கேங்காதான் போவாங்க.. அந்தகேங்குல  நம் வீட்டு அண்ணனோ இல்லை கோடி வீட்டு சித்தப்பாவோ சைக்கிளை உருட்டிக் கொண்டு கண்டிப்பா போவார். ஏன்? தண்ணி எடுக்கவும்,  தண்ணி எடுக்க போறவங்களை காபந்து பண்ணி கூட்டிவர  மட்டுமின்றி  சந்து வீட்டு  யசோதாக்கவை கடலை போடவும் .அதுக்கு துணை நம்மை போன்ற சின்ன பிள்ளைகள்தான்.   (25 வருடத்திற்கு முன் நான் சின்ன பிள்ளையாக்கும்) அண்ணனிடமிருந்து வளையலோ, சாந்தோ அங்கிட்டு போகும், அங்கிருந்து  பலகாரங்களோ கடிதமோ இங்கிட்டு வரும் அதில் கண்டிப்பாக நமக்கு பங்குண்டு. .(அவிங்க மாட்டுனா முதல் அடி  நமக்குதான்). காதலோடு கூட மத்தவங்களை  பாதுக்காக்க வேண்டி வரும் மனிதநேயம் இன்று எங்கே?

                       ஆனா, இன்னிக்கு  வீட்டுக்கு வீடு குழாய், மோட்டார் இருந்தும் பக்கத்து வீட்டுக்காரங்க கூட தண்ணி தகராறு.  பெரும்பாலும் பக்கத்து வீட்டுக்காரங்க கூட வர்ற முத மோதல்   தண்ணிதான்.

                      அன்னிக்கு அக்கம் பக்கத்து வீட்டுல விட்டுட்டு  பெத்தவங்க  விட்டுவிட்டு   ஊருக்குலாம் போவாங்க.  அவங்க  வர்றவரை, குழந்தை   அவர்கள் வீட்டிலியே  சாப்பிட்டுட்டு அங்கேயேத்  தூங்கும். ஆனா, இன்னிக்கு யாரை நம்பி நாம நம்ம  குழந்தைகளை நாம வுட்டுட்டு போறோம். குழந்தைகளை வீட்டுக்குள்ள வெச்சு  பூட்டிட்டு  கடைக்கு போய்வரும் பெத்தவங்க எத்தனை பேரு இருக்காங்க?!

                ரோட்டில் அடிபட்டு விழுபவனை தூக்கிவிட எத்தனைப் பேர் வருகின்றனர்?

              அடிப்பட்டு, அனாதையாய்
              வீழ்ந்து விட்ட
              பிணத்தைப்  பார்த்துக் கொண்டு
             செல்கின்றன
              "நாளைய பிணங்கள்"

              ன்னு எப்போதோ எங்கோப் படித்த  கவிதையேதான் ஞாபகத்துக்கு  வருது.

               பள்ளிக்கு சாப்பாடுக்  கட்டிக் கொடுக்கும்போதே அரிசிவிலை  கிலோ முப்பது ருபாய் அதனால தானம் பண்ணாம  நீ மட்டும் சாப்பிடு.  பென்சிலை நீ ஏன் அவனுக்கு கொடுத்தே அது உங்க மாமா சிங்கப்பூரிலிருந்து வாங்கிவந்தது னு சொல்லிக் கொடுக்கிறோம். அப்படி கேட்டு வளர்ற பிள்ளைங்களுக்கு அவங்க  பெரியவங்க ஆனதும் பகிர்தல் என்பதே மறந்துவிடுமோ னு எனக்கு பயமா இருக்கு.

                  நம்முடைய பிள்ளைகளுக்கு நாம், நம் உறவு முறைகளையே சுருக்க கற்றுக் கொடுத்துவிட்டோம். அத்தை,மாமி,பெரியம்மா, சித்தி இந்த அத்தனை உறவுகளும் aunty  என்றாகிவிட்டது. அதேப்போல் சித்தப்பா,பெரியப்பா,மாமாலாம்  uncle என்றும்,  தாத்தா, பாட்டி, பாட்டன், பூட்டன், முப்பாட்டன் எல்லாம் சுருங்கி grand-parents என்றாகி ரொம்ப  காலமாச்சு.

                 நம்        தவறான பழக்க வழக்கங்களால் கலப்பட உணவு, மாசடைந்த காற்று, சுகாதார சீர்கேடான உலகத்தைதான் நம் எதிர்கால் சந்ததிக்கு பரிசளிக்கப் போகிறோம். அதனால,  . அந்த தொல்லைகளைத்  தாங்க நம் பிள்ளைகளுக்கு தோள் கொடுக்க அண்டை அயலாரை (உண்மையான) நட்புடன் விட்டுச் செல்ல வேண்டாமா?

 டிஸ்கி: என்னமோ சொல்லனும்ன்னு தோணுச்சு. அதனால, ஒரு கட்டுரை போல எழுதிட்டேன். படிக்குரக் காலத்துலேயே நாங்க கட்டுரை எழுதினா நாலு இல்ல அஞ்சு மார்க்தான் வரும்). இது எந்த லட்சணத்துல இருக்குன்னு சொல்லுங்க

Tuesday, February 19, 2013

நிழலாய் போன நிஜம்...,

   
எங்கோ நெடுந்தூரம் அழைத்து செல்கிறாய்....,
கால் வலிக்குது என்கிறேன் நான்..,
ஆழ்ந்தப் பார்வை பார்த்துவிட்டு
என் கைப் பிடித்துக் கொள் என்கிறாய்.
உற்சாகத்தோடு நடந்தேன் "உயிருள்ளக் கவிதையாய்!!??

யாரும் அறியாதபோது, சட்டென்று இழுத்து
உதட்டோடு உதடு பொருத்தி என் உயிர்த் தேடலை
முடித்து வைத்தது உ(எ)ன் முத்தம்....
திருப்தியாக நடந்தேன் "இனிய கவிதையாய்!!??

நீதான் முக்கியம் என்று நீ உரைத்தப் போது
கர்வத்தோடு நடந்தேன்....
"உற்சாகமான கவிதையாய்!!?? ....,

ஆனால்,
என் இத்தனை நிஜக்கவிதைகளும்
"அவளைப் போல் நீ வரமுடியுமா”??
என்று கேட்ட ஒரு கேள்வியில்
"நிழலாய்" போய்விட்டது!!

Wednesday, February 13, 2013

சொர்க்க லோகம்

                                            Romance

இப்போலாம் ஆஃபீசில் எட்டு மணி நேரம் வேலை செய்யுறவங்களுக்கு டூர், ஜிம், யோகாக்கு  வருடத்திற்கொரு முறை  லாம் போக அவங்களே  ஏற்பாடு செய்யுறாங்க. சில கார்ப்பரேட் கம்பனிகள் தங்கள் ஆஃபீசுலயே ஸ்ட்ரெஸ்ஸை போக்க.., ஜிம்மும்,  கேரம், டேபிள்டென்னிஸ், செஸ் போன்ற சின்னதா உள் விளையாட்டு அரங்கமும் வெச்சு குடுத்து தங்களோட  பணியாளர்கள்  மன அழுத்தம் இல்லாம இருக்க மெனக்கெடுது.

ஏறக்குறைய  எட்டுமணிநேர வேலைக்கே இத்தனை மெனக்கெடல் இருக்கும் போது விடியற்காலை முதல் மறு நாள்  விடியற்காலை வரை இணைந்தே இருக்கும் தங்கமணிக்கு  என்னென்ன செய்யனும்ன்னு ஒரு பட்டியலே போட்டிருக்காங்க “உளவியல் நிபுணர்கள்”. அவங்க கிடக்குறாங்க இப்படித்தான் எதாவது சொல்லுவங்கன்னு பதிவை படிச்சு, ஓட்டு போட்டு, கருத்து சொல்லிட்டு மறந்து போயிட்டா அவஸ்தை படப்போறது நீங்கதான் சகோ. அதனால, இதை அப்படியே செய்ய  முடியலைனாலும் சிலதை மட்டுமாவது செஞ்சு “எங்க வூட்டுக்காரர் போலாகுமா”?உங்க வூட்டம்மாக்கிட்ட நல்ல பேரு வாங்குங்க...,

அலுவலக டென்சன்

ஆஃபீசுல என்னதான் டென்ஷனா இருந்தாலும் அதை ஆஃபீசோட விட்டுடுங்க. . வீட்டில  உங்க பொண்டாட்டி, புள்ளைங்களை மட்டும் நினைங்க. ஆஃபிசுல மத்தவங்க மேல இருக்குற  கோபத்தை எக்காரணம் கொண்டும் பொண்டாட்டிக்கிட்ட காட்டாதீங்க.

ஆஃபிசுல இருந்து வந்ததும்,  வீட்டுல   ”உங்க” வூட்டம்மாவை பார்த்ததும் அவங்களை பாசத்தோடு லேசா கட்டித் தழுவுங்க.  (பக்கத்துல யாரும் இல்லாத நேரத்துல் பொடுசுங்க இருந்தா வயசாகியும் ரொமான்ஸ் குறையலைன்னு கேலி பேசும்ங்க..)ஆசையா மென்மையா  சில முத்தங்களையும் கொடுங்க. அவங்களும் தன் பங்குக்கு உங்கள் மீது பாசத்தை கொட்டுவாங்க

சமையல் செய்யும்போது நீங்களும்வூட்டம்மா க்கு உதவி செய்யுங்க. விடுமுறை நாளில்நான் சமைக்கிறேன் என்று சின்ன பொய்யையாவது சொல்லி முயற்சி செய்யுங்க.  நீங்கள் சொன்னதே போதும் என்று திருப்திகொள்வாங்க  உங்க வூட்டம்மா

குழந்தையாக மாற்றுங்கள்

வீட்டில் சாப்பிடும் சூழ்நிலையில் முடிந்தவரை சாப்பிடும்போது ஒண்ணாவே  சாப்பிடுங்க. அப்போது வூட்டம்மாக்கு சாப்பாட்டை ஊட்டி விடுவதில் தவறே இல்லை. அப்படி செஞ்சீங்கன்னா அவங்க  ஒரு குழந்தையாகவே மாறிடுவாங்க. அந்த குழந்தைத் தனத்தில் அவங்க செய்கைகள் உங்களை மகிழ்ச்சியின் எல்லைக்கே கொண்டு போயிடும். வாரத்திற்கு ஒரு நாள் அல்லது மாதத்திற்கு ஒரு நாளாவது சினிமாவுக்கு கூட்டி போங்க. சிரிச்சுப் பேசுங்க, மகிழ்ச்சியை பரிமாறிக் கொள்ளுங்க. வெளியில் மனைவியுடன் செல்லும்போது அவளை நெருங்கியபடியே போங்க(அதுக்காக ஈஷிக்காதீங்க. மத்தவங்க கேலிக்கு ஆளாக வேண்டி வரும்.). முடிந்தால் அவங்க கரத்தை பற்றிக் கொண்டே செல்லுங்க. இந்த பாதுகாப்பை எல்லா பெண்களுமே கணவனிடம் எதிர்பார்ப்பாங்க.

காதலும் புரிதலும்

சிலநேரங்கள்ல, அவங்களே எதிர்பார்க்காத வகையில கிஃப்ட் வாங்கிக்கொடுத்து அசத்துங்க. எதிர்காலம் பற்றி முடிவு எடுக்கும் போது உங்கள் வூட்டம்மாகிட்டயும்  விஷயத்தை சொல்லி, அவங்களோட கருத்தையும்  கேளுங்க. அவங்க  அப்போது கூறும் அறிவுரைகளையும் ஃபாலோ பண்ணி பாருங்க. ”அந்த” னேரத்தில்  மட்டுமல்லாம, எல்லா நேரத்திலுமே உங்கஉங்க வூட்டம்மாக்கிட்ட அன்பை பரிமாறிக் கொள்ளுங்க.

அடுத்தவங்க  உங்களை புரிஞ்சுக்கனும்ன்னு நினைக்குறதுக்குபதிலா!!   முதல்ல  நீங்க  மத்த குடும்ப உறுப்பினர்களை புரிந்து கொள்ள முயற்சிங்க.  ஏனெனில்,  புரிந்து கொள்ளுதல் இல்லாததால்தான் எத்தனையோ குடும்ப உறவுகள் சிதைந்திருக்கின்றன. புரிதல் இல்லாதவர்கள் சேர்ந்து வாழவே முடியாது.

லைஃப் பார்ட்னர்  மற்றும் மத்தவங்க  உரிமைகள், ஆசைகள், தேவைகளை தெரிஞ்சு  நடப்பதும், அவற்றை மதித்து,  அவருக்கு உதவுவதுமே ”புரிந்து கொள்ளல்” ஆகும். மனைவி கணவரை மதிப்பதுபோலவே கணவரும் மனைவியை மதித்தால் குடும்பத்தில் பிரச்சினையே இல்லை. எந்த விஷயத்திலும் ஈகோ பார்க்காதீங்க. . இதைப்போய் நான் அவக்கிட்ட  கேட்கனுமான்னு  மட்டும் நினைக்காதீங்க. . உங்களுக்காகவே வாழ வந்தவங்ககிட்ட  நீங்க எல்லா விஷயத்தையும் சொல்லலாமே! மறைக்க வேண்டிய அவசியம் இல்லையே!

சொர்க்கமாகும் இல்லம்

எதுக்காகவும் கோபத்தை அவங்ககிட்ட  வெளிப்படுத்தாதீர்கள்(அப்புறம் சோறு கிடைக்காது.) ஒரு வேளை  அப்படியே கோபப்பட்டாலும், உடனே சமாதான மாகிவிடுங்க(பழசாவது கிடைக்கும்). எப்பவும்  உங்க கோபத்தை நியாயப்படுத்திப் பேசாதீங்க. . ஏதோ தவறா பேசிட்டேன். இனி கண்டிப்பாக அப்படி பேச மாட்டேன்ன்னு தான்  சமாதானமா பேசணும் (அப்படித்தான்னு முறுக்கிகிட்டா திண்ணையிலதான் படுக்கனும் மைண்ட்ல வச்சுக்கனும்). அப்புறம் பாருங்கவூட்டம்மா முகத்துல அமைதி ஏற்படுவதை உணரமுடியும்.

இப்படியெல்லாம் உங்கள் வூட்டம்மாவை வெச்சிருந்தா உங்க இல்லமே ஒரு ”சொர்க்கலோகம்” தான். இதைலாம் நான் சொல்லலீங்க. ஆராய்ச்சி பண்ணி பெரியவங்க கொடுத்த ஸ்டேட்மெண்ட். அதனால, நம்பி வரும் காதலர்தினத்திலிருந்து  கல்யாணம் ஆனவங்க மட்டும் முயற்சி செய்யுங்க.    எல்லாம் நல்லதாவே நடக்கும்.

Monday, February 11, 2013

ஸ்பைடர் மேன் இந்திய பெண்ணை கல்யாணம் கட்டிக்கிட்டு இருந்தால்...,!!??

(இந்தியாவில் கல்வியின் நிலைமை இப்படித்தான் இருக்கு!!??)


(இருபது ரூபாய் நோட்டின்  நிழலும்...., நிஜமும்...,)


(எத்தனை பேருக்கு இந்த வாய்ப்பு கிடைக்கும்?! தப்பிச்சுக்கோடா கொமாரு...,)

(சிக்ஸர்...., கூடைப்பந்து விளையாட்டில்.., கூடையில் பந்து போட்டா “சிக்ஸ்தானே?!)

 (நான் கமெண்ட் பண்ணிதான் உங்களுக்கு இந்த படத்தை பற்றி புரியனுமா?!)

(எல்லாமே கூகுள் பார்த்துக்கும்ன்னு சொன்னதை பயபுள்ளைங்க தப்பா புரிஞ்சுக்கிடுச்சு போல?!)


(இவனுக்குலாம் ஏன் இன்னும் நோபல் பரிசு குடுக்கலை??!!)

(சூதனமா இருக்க படாதா?!)

(காதல்ன்னா இவ்வளவுதான்.., இதுக்கு போயி அலட்டிக்கலாமா?!)
(என் மதம் பெரிதா? உன் மதம் பெரிதான்னு சண்டையிட்டு கொள்ளும் பெரியவங்களே.., எங்களை பார்த்து கத்துக்கோங்க...,)

 (ஸ்பைடர் மேன் இந்திய பெண்ணை கல்யாணம் கட்டிக்கிட்டு இருந்தால்!!! இப்படிதான் இருந்திருப்பார்??!!)

Thursday, February 07, 2013

கம்ப்யூட்டர்னா என்னான்னு தெரியுமா?!- ஐஞ்சுவை அவியல்

                   
ஆல, அஞ்சலை, கன்னியப்பா, முனியம்மா, கிரி, கஜா, மணி எல்லாத்துக்கும் ெள்ளிக்கிழமாலை வணக்கம்ங்க.  நாம  எவ்வளவு நாளா  ”கம்ப்யூட்டரை” யூஸ் பண்றோம். இருந்தாலும், எல்லாருக்குமே ”COMPUTER"ன்ற ஆங்கில வார்த்தைல வர்ற எழுத்துக்களோட விரிவாக்கம் என்னன்னு தெரியலை. (என்னைப் போல சிலறிவாளிகள் சில பேர் தவிர...,) தெரியாதவங்கலாம் தெரிஞ்சுக்கோங்க ப்ளீஸ்.., டியூசன் பீஸ் அனுப்பனும்ன்னு நினைக்குறவங்கலாம் மெயில்ல காண்டாக்ட் பண்ணா அக்கவுண்ட் நம்பர் தரேன்.  
C- Common, 
 O- Oriented, 
M-Machine,   
P-Particularly,   
 U  - Used for, 
 T-Trade,  
 E  - Education,  
 R - Research. 
 COMPUTER - Common Oriented Machine Particularly Used for Trade Education and Research.)

*************************************************

ஏழு கை வாச்ச!!?? ஆனா, பாரங்க எனக்க Pull ற்றும் Push" ந்தெண்டத்ுக்கும் இன்னிக்கைக்கம் குழப்பம்ான். இத்ைக்கும் வீட்டிலிரந்ு ோகும்பத இங் pushன்னு இருக்கும் ள்ளும், இங்க  pullன்னு இருக்கும் இழுக்கும்ன்ன(நான் சொல்றிான?!) முக்குள்ள சொல்லிக்கிட்டே போயும் சப்புவேன். அேப்போலான் Escalatorும் பப்பாம ஏறு இல்ல. ஏன்னும் புரிய. எனக்கு மட்டும்ான் இப்பியா?! இல்ல, எல்லாருக்கும உள்ளுக்குள்ளே இருக்கா?ன்னு சொல்லங்கேன் ப்ளீஸ்..., சொன்னங்கன்னா யாராவு பில்லி சூனியம் வெச்சிரந்தா எடுக்கியா இருக்கும்.

**************************************

 எல்லாரும்ாழைஇலையில் சாப்புடோம். ா, எந்தாப்பாட்டொருட்கை,  எங்கைக்கும்ன்னக்கெரியத. ந்த ாப்பாட்டு பொருளை எங்கைக்கும்ன்ன ஒரு விிமுறையை பெரியங்கத்ிருக்கங்க. அன்பி இப்படத்தில் உள்ளப்படி இலையில் வைக்கவேண்டிய பலகாரப் பட்டியல் வருமாறு.
1) உப்பு, 2) ஊறுகாய், 3) சட்னிப் பொடி, 4) கோசும்பரி, 5) கோசும்பரி, 6) ுவையல். 7) பீன்.. பல்யா,     8) பலாப்பழ உண்டி,     9) சித்ரண்ணம்,     10) அப்பளம்   (பப்படம்)
11) கொரிப்பு, 12) இட்லி, 13) சாதம், 14) பருப்பு, 15) தயிர் வெங்காயம், 16) இரசம், 17) பச்சடி, 18)  பக்கோடா, 19) கூட்டு, 20) பொரியல், 21) அவியல், 22) கத்ரிக்காய் , 23) இனிப்பு,  24) வடை,  25)  இனிப்பு  சட்னி,  26) கிச்சடி,    27) காரப்பொரியல், 
28) பாயசம், 29) தயிர், 30) மோர், 31) பலகார வகைகள்

***************************************
 
 பேஷண்ட்„ ……டாக்டர், என்னோட தலைமுடி கொஞ்சம் கொஞ்சமா உதிருது. என்ன செய்யுறது?
டாக்டர்„ ……உதிர்ந்த முடியை வச்சிக்கிட்டு என்ன செய்ய முடியும். தூர எறிஞ்சிடுங்க...,
ண்ட்: !!!????
                       
***************************
how darken the colour mehendi
இரவில் படுக்கும் போது மருதாணி இலை அல்லது ஹென்னாவை வெதுவெதுப்பான நீரில் ஊற வைக்க வேண்டும். அதிலும் டீ டிக்காசனில் ஊற வைத்தால், நன்கு நிறம் பிடிக்கும். 
 * காப்பி பவுடரை வைத்து நிறம் வர வைக்கலாம். அதற்கு இரவில் ஹென்னாவை ஊற வைக்கும் போது, அவற்றில் ஒரு டேபிள் ஸ்பூன் காப்பி பவுடரை சேர்த்து ஊற வைத்தால், மறுநாள் அதனை வைக்கும் போது நல்ல நிறத்தில் பிடிக்கும். 
* எலுமிச்சை சாற்றில் சர்க்கரையை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் கைகளில் மருதாணி அல்லது ஹென்னாவை வைத்தப்பின்பு, அது காய்ந்ததும், அதன் மேல் இந்த எலுமிச்சை கலவையை வைத்து, அது காய்ந்ததும் கழுவிப் பார்த்தால், நல்ல நிறம் பிடித்திருக்கும். 
 * மெஹந்தி அல்லது மருதாணியை கைகளில் வைத்தால், குறைந்தது ஆறு மணிநேரமாவது வைத்திருக்க வேண்டும். அவ்வாறு ஆறு மணிநேரம் ஆனப் பின்பு தான் அந்த எலுமிச்சை கலவையை வைக்க வேண்டும். 
 * அடுப்பில் வாணலியை வைத்து, அதில் கிராம்பை போட்டு வறுக்க வேண்டும். பின் அதனை இறக்கி, அந்த வாணலியிலிருந்து 4 இன்ச் மேலே கைகளை நீட்டி, சற்று நேரம் ஆவி பிடிக்க வேண்டும். அதன் பின் மெஹந்தியை வைத்தால், நிறம் நன்கு டார்க் ஆகும்.
 * இது ஒரு பழைய முறை. அதாவது, வலி நிவாரணியை கைகளில் தடவினால் நிறம் பிடிக்கும். அது எப்படியெனில் மெஹந்தியை கைகளில் வைத்து காய்ந்ததும், அதன் மேல் வலி நிவாரணியை தேய்த்தால், நிறம் பிடிக்கும். எப்படியெனில் அந்த வலி நிவாரணி சருமத்தின் மேல் படும் போது ஒருவித வெப்பத்தை உருவாக்கும். இதனால் மெஹந்தி நல்ல நிறத்தில் இருக்கும்.
.