Friday, December 28, 2012

ஊருக்குள்ள அவசியம் கோவில் இருக்கத்தான் வேணுமா?!

 மன்னராட்சி காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்ததாம். என்ன காரணம்? தேடிப் பார்ப்போம் வாங்க...,

கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அவற்றுக்கு பின்னால் இருக்கும் ஆன்மிகம் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், அதற்குப் பின்னால் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போது தான் தெரிந்தது. கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி, செப்பு அல்லது ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின்காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியினை (earth) கலசங்களுக்கு கொடுக்கின்றன. (நெல், கம்பு, கேழ்வரகு, திணை, வரகு, சோளம், மக்காசோளம், சாமை, எள்)ஆகியவற்றை கொட்டினார்கள். குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாக கொட்டினார்கள். காரணத்தை தேடிப்போனால் ஆச்சரியமாக இருக்கிறது, "வரகு" மின்னலை தாங்கும் அதீத ஆற்றலை பெற்றுள்ளது என இப்போதைய அறிவியல் கூறுகிறது. அப்போது எந்... கல்லூரியில் படித்தார்கள் என தெரியவில்லை!!.


இவ்வளவு தானா... இல்லை, பனிரெண்டு வருடங்களுக்கு ஒருமுறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் "கலசங்களில் இருக்கும் பழைய தானியகள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பபடுகிறது", அதை இன்றைக்கு சம்பரதாயமாக மட்டுமே கடைபிடிக்கிறார்கள். காரணத்தை தேடினால், அந்த தானியங்களுக்கு பனிரெண்டு வருடங்கள் தான் சக்தி இுக்கிறது. அதன் பின்பு அது செயல் இழந்து விடுகிறது!! இதை எப்படி ஆராய்ந்தார்கள்!!!. அவ்வளவு தானா அதுவும் இல்லை, இன்றைக்கு பெய்வதை போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று? தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது, ஒருவேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்து பயிர் செய்வது? இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பே இல்லை, இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே!!!


ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அது தான் முதலில் "எர்த்" ஆகும். மேலும், அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள். உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் அடைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாக்காமல் காக்கப்படுவார்கள். அதாவது சுமார் 7500 சதுர மீட்டர் பரப்பில் இருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள் !!!!. சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன, அது நாலாபுறமும் 7500 சதுர மீட்டர் பரப்பளவை காத்துக்கொண்டு நிற்கிறது!!! இது ஒரு தோராயமான கணக்கு தான், இதை விட உயரமான கோபுரங்கள், இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றது!! பிரம்மிப்பு !!!


அதெப்படி என்று கேட்கிறவர்கள் படத்தைப் பார்க்கவும். இதை எல்லாம் பார்க்க போனால் "கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகின்றது.

டிஸ்கி: என்ன பதிவு தேத்தலாம்ன்னு முழிச்சுக்கிட்டு இருந்த நேரத்துல மெயில் அனுப்பி உதவிய மரியாதைக்குரிய என் கொழுந்தனாருக்கு நன்றி  

Monday, December 24, 2012

மார்கழி திங்கள் - ஐஞ்சுவை அவியல்
மார்கழி மாசம் பொறக்குறதுக்கு முதல் நாளே (எந்த ஆஸ்பத்திரி, டேட் என்ன, பெத்தவங்க யாருன்னு கும்முனீங்க அப்புறம் நடக்குறதே வேற...,) ஸ்கூல் விட்டு வரும்போதே முள், புதர்ன்னு பார்க்காம பூசணிப்பூ கிள்ளி வந்து, 8 மணிக்கு எந்திரிச்சு பழக்கமில்லாதவ 5 மணிக்குலாம் எழுந்து.., வாசல அடைச்சு கோலம் போட்டு,  பசு சாணத்துலாம் பிள்ளையார் பிடிச்சு வெச்சி, பூசணிப்பூ, விளக்குலாம் வெச்சு பூஜை பண்ணுவோம்.

                                     

மார்கழி மாச முப்பது நாளும், பெருசாவும்,  ஒரு நாளைக்கு போட்ட கோலத்தை மறுபடியும் போடக் கூடாதுன்னும், அதிகமா யாரு பிள்ளையார் பிடிச்சு வெச்சு பூசணி பூ வெக்குறாங்கன்னும்.., எங்களுக்குள் போட்டியே நடக்கும். இதுக்காகவே, என்ன கோலம்? பூசணி பூ எங்க கிடைக்கும், கலர் என்ன குடுக்கலாம்ன்னு ஸ்கூல்ல கூட டிஸ்கஷன்லாம் நடக்கும். இப்போ, என் மகள்களை காலைல எழுப்பினா போம்மா!ன்னு அலுத்துக்குறாங்க.
                                      
ஆன்மீக காரணம்லாம் எனக்கு தெரியாது. ஆனா, 30நாட்களுக்கு தொடர்ந்து அதிகாலையில் எழுந்துக்க பழகினா அதுவே நமக்கு பழகிடும், ரெண்டாவது குனிஞ்சு நிமிர்ந்து கோலம் போடுறதால உடலுக்கு நல்ல உடற்பயிற்சி ஆச்சு, பிள்ளையார் பிடிச்சு சாமி கும்பிடுறதால மனசை ஒரு நிலைப்படுத்த தியானம் பண்ண மாதிரியும் ஆச்சு.இதுப்போன்ற விசயங்களில் இந்த காலத்து பிள்ளைகளுக்கு ஏன் ஆர்வம் இல்லைன்னு தெரியலை.     

                                    
 புது வருசம் பொறக்க இன்னும் சில நாட்களே இருக்கு.., எப்பவும் போல புது வருசத்துல செஞ்சே ஆகனும்ன்னு நினைச்சு சபதம் எடுக்குறதுக்குன்னு ஒரு லிஸ்டே இருக்கு. வழக்கம்போல புது வருசத்தன்னிக்கு சாமி படத்து முன்னாடி நின்னு சபதம் எடுத்துட்டு.., ரெண்டு நாளைக்கு தீவிரமா செஞ்சுட்டு மூணாவது நாளே சோம்பேறித் தனத்தால காத்துல பறக்க விட்டுட்டு.., எல்லா வருசத்தையும் போலவே 2013யும் ஓட்ட போறோம். இந்த லட்சணத்துல புது வருசத்தை கொண்டாட என்னென்ன பிளான் போடுறாங்கப்பா!?

 

 அந்தா!  இந்தான்னு ஒரு வழியா 21.12.2012 வந்தும் உலகம் அழியாம அப்படியே இருக்கு. பல வருசமா சொல்லியும் அசராம இருந்தும்.., நாட்கள் நெருங்க நெருங்க, வேலூர்ல ஒரு ஆட்டுக்கு மனுச தலையும், ஆட்டு உடலும் சேர்ந்த மாதிரி குட்டி போட்டிருக்கு.., சேலத்துல ஒரு பொண்ணு பிரசவிச்ச பெண் குழந்தை அம்மன் அருள் வந்து பேசி உலகம் அழியப் போகுதுன்னு கன்ஃபார்ம் பண்ணிடுச்சுன்னும்.., திருச்சில ஐஸ்கட்டி மழை பெஞ்சுது.., ஒவ்வொரு ஐஸ்கட்டியும் 2 கிலோ தேறும்ன்னு வந்த வதந்தியை கேட்டும் நம்பாத மனசு.., பிள்ளைகளை பார்த்ததும் கொஞ்சம் அரண்டுதான் போச்சு. எந்த பாவிப்பயலோ கரெக்டா அதே நேரத்துக்கா பட்டாசு வெடிச்சு பயமுறுத்தனும். அவன் தலையில இடி விழ...

 
 நீயா? நானா?வுல எங்க பிளாக்கர் மோகன்குமார் அண்ணா பேச போறார்ன்னு தெரியாம என் சின்ன பொண்ணுக்கிட்ட சொல்லிட்டேன். 8 மணிக்கே சாப்பிட்டு டிவி முன்னாடி உக்காந்துட்டா!! நிகழ்ச்சி ஆரம்பிச்சது எங்கேம்மா அங்கிள்ன்னு கேட்டு தொல்லை பண்ணா.., அது முதல் வரிசையில கோட் போட்ட பொண்ணு பக்கத்துல கத்தரிப்பூ சட்டை போட்டு, ஷூ போட்டிருக்காரே அவர்தான்ன்னுகாட்டினேன். கொஞ்சம் நேரம் உத்து பார்த்தவ..,

ம் ம் ம் உங்க சகோதரரும் உங்களை போலத்தானா?!ன்னு கேட்டா.. ஏன்ம்மா! அப்படி கேக்குறேன்னு கேட்டதுக்கு...., போட்டோ, விடியோல நிக்கும்போது செயின், நெக்லஸ்லாம் தெரியுற மாதிரிதானே போஸ் கொடுப்பே! அதேப்போல மோகன் அங்கிளும் தன் ஷூ நல்லா டிவில நல்லா தெரியனும்ன்னு காலை நீட்டிக்கிட்டு உக்காந்துக்கிட்டு இருக்காரு பாரு. ஆக மொத்தம் ரெண்டு பேரும் “ஒரே குட்டையில் ஊறின மட்டைகள்”தான் போலன்னு சொல்லிட்டு.., கடைசி வரை என்னோடு இருந்து நிகழ்ச்சியை பார்த்துட்டு தான் தூங்கினா.

Monday, December 17, 2012

ஆரத்தி தட்டு - நானே செஞ்சது
டிஸ்கி: போன திங்கள் கிழமை என் நாத்தனாருக்கு கல்யாணம். அவளுடைய விருப்பத்துக்காக நானும், இனியாவும் செஞ்சது. இந்த தட்டுக்களை செஞ்சதுல இனியாக்குதான் பெரும்பங்கு. கடைக்கு போய் வாங்கி வந்தது, அப்படி செய்யலாம், இப்படி செய்யலாம்ன்னு ஐடியா தந்ததுலாம் இனியாதான்.

Monday, December 03, 2012

மரணத்தை வென்றது...


விழி மூடும் மெல்லிசையில்...,
உதட்டோரப் புன்னகையி..,ல்
மென்மையாய் வருடிச் செல்லும்
உன் நினைவுகள்....,

என் மரணத்தோடு 
மடிந்துவிடுவதில்லை நம் காதல்!!??
என் மரணம் தாண்டியும்...,
 அது வாழும்!!

உன்னையும், என்னையும் போல்....,
எத்தனையோ ஜீவன்கள்....,
நிஜத்தையே காணமுடியாத
நிழல்களாய் போனாலும்....,

நினைவுகளின் உயிர் குடித்தபடி
வாழ்வதால்தான்.......,
வாழ்கிறது
வாழ்வும்,உலகமும் .....,