Sunday, May 31, 2020

தெய்வீக ரகசியத்தை அறிந்துக்கொள்ளனுமா?! - ஐஞ்சுவை அவியல்

மாமா! இந்த மாசம் மளிகை லிஸ்ட்ல ரெடிமேட் சாம்பிராணி எழுத மறந்துட்டேன். அதையும் சேர்த்து வாங்கி வாங்க!

ஏன், தூபக்காலில் நெருப்பை வச்சு, அதில் சாம்பிராணி தூவி வீடு முழுக்க காட்டுறதுக்கென்ன?!

முன்னலாம் விறகு அடுப்பில் சமைச்சாங்க. அதனால் நெருப்பு இருந்தது. அதில் சாம்பிராணி புகை போட்டாங்க. இப்பலாம் கேஸ்ல சமைக்குறதால் நான் நெருப்புக்கு எங்க போவேன்?!

தேங்காய் ஓடும், தேங்காய் நாறும் இருக்கே. அதை வச்சு நெருப்பு கங்கை உருவாக்க முடியாது. மனமிருந்தால் மார்க்கமுண்டுன்னு நீ கேள்விப்பட்டதில்லையா?! 

இந்த ஈர வெங்காயமெல்லாம் எனக்கும் தெரியும். இப்ப ரெடிமேட் சாம்பிராணி ஏத்தி வீடு முழுக்க காட்டுறதுல உனக்கென்ன  குறைஞ்சு போகுது?!

அடியேய்! நான் சொல்லுற மாதிரி சாம்பிராணி புகையை காட்டுறதால எத்தனை நன்மை இருக்கு தெரியுமா?! சிவன் கோவிலில் தினத்துக்கும் குங்கிலியம் கொண்டு புகை போடுறாங்களோ அவர்களுக்கு தெய்வீக ரகசியம் தெரியவருமென அகத்தியர் தன்னோட வாத காவியம்ன்ற நூலில் சொல்லி இருக்கிறார்.  இப்படி தெய்வீக ரகசியத்தினை தெரிஞ்சுக்கிட்டவங்களுக்கு எமதூதர்களிடமிருந்து விடுதலை பெறும் சக்தி கிடைக்கும். அதாவது மரணத்தை வெல்லும் சக்தி கிடைக்குமாம். அப்படி சக்தி கிடைச்சவங்க தான் மட்டுமல்லாம மத்தவங்களையும் காப்பாத்துவாங்க. இது சித்தர்களின் வழிபாட்டு முறைகளில் ஒன்றூ. அதனால்தான் சித்தர்களால் மற்றவங்களை மரணத்திலிருந்து காப்பாத்த முடிஞ்சது. அதை நாம பல கதைகளில் கேட்டிருக்கோம். 

தென்னிந்தியாவில் மேற்கு தொடர்ச்சி மலைகளிலும், வட இந்தியாவில் இமயமலை அடிவாரம் மாதிரியான சில காடுகளில் விளையக்கூடிய கருமருதுன்ற மரத்தினை கீறி, அதிலிருந்து வடியும் பிசினை சேகரிச்சு காயவச்சால் கிடைக்குறதுக்கு பேருதான் குங்கிலியம். இதைதான் நாம சாம்பிராணின்னு சொல்றோம்.  இந்த சாம்பிராணி புகை இந்துக்கள் வழிபாட்டில் மட்டுமல்லாமல் மதங்களை கடந்து எல்லா எல்லா மதத்தின் வழிபாட்டிலும் இடம்பெறுகிறது.

இப்படி மதங்களை கடந்து எல்லோரும் சாம்பிராணி புகை போட இறை நம்பிக்கை மட்டுமல்லாம  வாசனைக்காகவும்,  காற்றில் கலந்து வரும் நச்சுக்கிருமிகளை அழிக்கவும் வீடு, கடைன்னு எல்லா இடத்திலும் சாம்பிராணி புகை  போடும் வழக்கம் உண்டானது.  முன்னலாம் குழந்தைகள், பெண்கள் அதிலும் முக்கியமா கர்ப்பிணி பெண்கள், புதுசா பிரசவிச்ச தாய்மார்களுக்கு வாரமொரு முறை எண்ணெய் தேய்த்து தலைக்கு ஊற்றி, சாம்பிராணி புகை காட்டுவது வழக்கம்.  சாம்பிராணி புகையை தலையில் காட்டுவதோடு புகையை சுவாசிக்கவும் செய்வாங்க. இதனால் கருப்பை சார்ந்த பிரச்சனைகள், தலைவலி,  தலையில் நீர் கோர்த்தல் மாதிரியான  வியாதிகள் தீரும். இளநரை, முடி கொட்டுதல், பொடுகு மாதிரியான தலைமுடி சார்ந்த பிரச்சனைகள் வராமல் இந்த சாம்பிராணி புகை தடுத்தது. 

சாம்பிராணி புகை  ஆஸ்த்துமா, வீசிங்க் பிராப்ளம் மாதிரியான சுவாசக்கோளாறுகளையும் போக்கியது.  சாம்பிராணி புகையில் புற்றுநோயை உருவாக்கும் காரணிகளை மட்டுப்படுத்தும் ஆற்றல் இருக்குறதாகவும் இப்பத்தைய ஆய்வுகள் சொல்லுது.  சுத்தமான குங்கிலியம் கொண்டு போடும் சாம்பிராணி புகையால் பாதிப்பு ஏதுமில்லை. ஆனா, நீ சொல்லும் ரெடிமேட் சாம்பிராணி புகையால் மூச்சடைப்பு, அலர்ஜி மாதிரியான தொல்லைகள் உண்டாகுவதை நாமே பார்த்திருக்கோம்..

ஆமா மாமா, ரெடிமேட் சாம்பிராணி ஏத்தினாலே என் பாட்டி மூச்சடைக்குதுன்னு வெளில போய்ட்டு கொஞ்ச நேரம் கழிச்சுதான் உள்ள வருவாங்க. 


ம்ம் அந்த ரெடிமேட் சாம்பிராணியில் சேர்க்கப்படும் செயற்கை ரசாயாண பொருட்களும், வாசனை பொருட்களும்தான் இதற்கு காரணம்.    முன்னலாம் மழைக்காலத்தில் சாம்பிராணி புகையுடன், காய்ந்த வேப்பிலை சருகு, நொச்சி இலை சருகையும் போட்டு மாலைவேளையில் வீடு முழுக்க காட்டுவாங்க. இதனால் கொசு தொந்தரவு இருக்காது.  மழைக்காலத்தில் உருவாகும் நோய்க்கிருமிகள் தொற்றிலிருந்து நம்மை காக்கும்.  சுத்தமான குங்கிலியம் பர்வதமலை, கொல்லிமலை, கஞ்சமலை, சதுரகிரிமலை, அத்ரிமலை பகுதிகளில் கிடைக்கும். இப்பலாம் அங்கும் கலப்படம் நடக்குது. தெரிஞ்சவங்கக்கிட்ட சொல்லி வச்சு வாங்குறது நல்லது. 

சரி இனி பார்த்து வாங்குறேன். காலையில் எழுந்து அரக்க பரக்க சமைச்சு டப்பா கட்டும் வேலையில்லை. காலெஜ் லீவுங்குறதால் பாப்பா இருக்குறதால் வேலையே இல்லாத மாதிரி இருக்குன்னு சொன்னது குத்தம்ன்னு அப்பு இந்த கணக்கை நேர் பண்ணுன்னு சொல்லிட்டு போறான். இதுல 8767458998 அரிசி இருக்கு வேணும்ன்னா எண்ணிக்கன்னு மொக்கை ஜோக் சொல்லக்கூடாதுன்னு கண்டிஷன் வேற!
 
தேவையா உனக்கு?! வாய வச்சிக்கிட்டு சும்மா இல்லாம...

நான் அவனை எப்படியெல்லாம் வளர்த்தேன் தெரியுமா மாமா!? இப்படி என்னையை நக்கல் அடிக்குறான்.

இதுக்கும் வடிவேலு காமெடி மாதிரி எதும் சொல்லிடப்போறான். சின்ன வயசில் இப்படி எதாவது அவனை வெறுப்பேத்தி இருப்பே! அதான் உன்னைய இப்ப அவன் ரிவெஞ்ச் எடுக்குறான்... 

அப்படித்தான் போல!   சில கடுப்பேத்தும் வீடியோக்களால் எனக்கு டிக்டாக்ன்னாலே பிடிக்காது. ஆனா, நல்லா இருக்குன்னு யாராவது பகிர்ந்தால் பார்ப்பேன். அப்படி பார்த்ததில் இந்த வீடியோ பிடிச்சது.  உலக அழகியாக ஐஸ்வரியா ராய் தேர்வானபோது,  இந்தியாவே அவர் அழகை கொண்டாடிச்சு. அப்ப எங்க சார் ஒருத்தர் சொன்னாரு. ஐஸ்வர்யா ராயின் உடல் வாகு, அறிவுத்திறனோடு, உயரம், எடையோடு ஒத்துப்போகும் மொத்தத்தில் ஐஸ்வரியா ராயைவிடவும் அழகான பெண் எங்கோ காடு மேடுகளில் வெளிச்சத்துக்கு வராமல் இருக்கலாம். அதனால் ஐஸ்வரியா ராய் அழகான பெண்களில் ஒருத்திதானே தவிர, அவளே அழகானவள் இல்லைன்னு சொல்வார். 

அதுமாதிரி, பயிற்சி எடுத்துக்கிட்டு அசரவைக்குற மாதிரி ஆடும் ஆட்கள் எத்தனையோ பேர் இருக்காங்க. ஆனா, எந்த பயிற்சியும் செய்யாம, எங்கோ ஒரு மூலையில் நேர்த்தியுடனும்,அசர வைக்கும்படியாகவும் ஆட்களுக் இருக்கத்தான் செய்றாங்கன்னு இந்த வீடியோ பார்த்ததும் தெரிஞ்சுக்கிட்டேன். அதனாலோ என்னமோ எனக்கு பிடிச்சு போச்சு. நீ இந்த வீடியோவை பார்த்துக்கிட்டு இரு. நான் போய் சமைக்கும் வேலையை பார்க்கிறேன்...


நன்றியுடன்,
ராஜி

மானே தேனே கட்டிப்புடி - பாட்டு புத்தகம்

மோகன் படமா?! மைக் புடிச்சு பாடும் பாட்டு கண்டிப்பா இருக்கும். அப்படி ஒரு காட்சி இருந்தால் படம் ஹிட்ன்னு 80-90களில்  சினிமா செண்டிமெண்ட்..  அந்த செண்டிமெண்ட் நல்லாவே வேலை செய்தது. பாட்டுக்காகவே மோகனின் படங்கள் ஹிட் அடித்தது. மொக்கை படமானாலும் மோகன் படங்களில் பாட்டு நல்லா இருக்கும். ஓரிரு பாட்டுக்கள் இல்ல எல்லா பாட்டுமே! மோகன்+இளையராஜா+எஸ்.பி.பி இந்த மூன்று பேரின் கெமிஸ்ட்ரி நல்லாவே ஒத்துப்போச்சு.

Saturday, May 30, 2020

அரிசி குத்தும் அக்கா மகளே! - கிராமத்து வாழ்க்கை

சிறு வயதில் வாழ்ந்த வாழ்க்கையின் சிறு நினைவுமீட்டலே இந்த கிராமத்து வாழ்க்கை தொடர்.. 80,90களில் வளர்ந்தவர்களின் பால்யம் அழகானது. பழமையின் முடிவும், அறிவியல்  வளர்ச்சியின் ஆரம்பத்தையும் ஒருசேர அனுபவிச்சவர்கள்.. 30டூ 50 வயதுகளில் இருப்பவர்கள் எல்லாத்தையும் அனுபவித்துக்கொண்டே எதோ இழந்தமாதிரி  சில நேரத்தில் உணர்வார்கள்...  வயதானவர்களைப்போல பழமையில் இருக்கவும், இப்பத்திய பிள்ளைகள்போல புதுமையில் திளைச்சிருக்கவும் முடியாம திரிசங்கு சொர்க்கத்தில் வாழ்வதுபோல வாழ்கிறோம்!!

Friday, May 29, 2020

ஸ்ரீலட்சுமண சித்தர் சுவாமிகள் -பாண்டிச்சேரி சித்தர்கள்.

பொழுதன்னிக்கும் சாமி கும்பிட்டுக்கிட்டும், இறை உணர்வோடும், தரும சிந்தனையோடும் இருக்கும் இறை பக்தர்கள் நம்மில் பலர் உண்டு. இன்னும் கொஞ்சம் அதிகமான இறை பக்தியுடன் குடும்பத்தை விட்டு விலகி சாமியாராய் போனவர்களும் நம்மில் சிலர் உண்டு.  ஆனா, நம்மில் எத்தனை பேர்கள் சித்தர்களா மாறி இருக்கோம்?! அதென்ன பெரிய விசயமா ஓலைச்சுவடிகளை படிச்சு சித்து வேலைகளை கத்துக்கிட்டால் சித்தராகிடலாம்ன்னு பதில் வரும். ஆனால், அது முடியாது. ஏன்னா, பக்தர்கள்/சாமியார்களுக்கும் சித்தருக்கும் ஒரே வித்தியாசம்தான் இருக்கு. பலவாறாய் குழம்பி, இறைவனை காண முயன்று, கோவில் குளம் என இறைவனை தேடிக்கொண்டிருப்பவர்கள் பக்தர்கள்/சாமியார்கள். இறைவனை கண்டு தெளிந்தவர்கள் சித்தர்கள்.  இறைவனை கண்டபின்  சித்தர்களுக்கு எங்கும் எதிலும்  இறைவனே! இறைவன் ஒருவனே என உணர்ந்ததால் பெரிதாய் இறைவழிபாட்டில்கூட அவர்கள்  அதிகமாய் ஈடுபடுவதில்லை. முடிந்தளவுக்கு அடுத்தவர்களுக்கு உதவி செய்துவிட்டு சதா சர்வக்காலமும் தான் உணர்ந்த இறைவனை நினைத்து கொண்டு தனிமையில் இருப்பர். 

Tuesday, May 26, 2020

சுலபமாய் செய்யலாம் முறுக்கு வத்தல் - கிச்சன் கார்னர்

வெயில் காலம் வந்துட்டாலே வத்தல், வடாம் போடுறதுன்னு ஏக பிசி.  முன்னலாம் கஞ்சி வத்தல், முறுக்கு வத்தல், மாங்காய் வத்தல், கொத்தவரங்காய் வத்தல், மோர் மிளகாய், தாளிப்பு வடகம்ன்னு  கோடை விடுமுறையில் பிசியாகிடுவேன். கஞ்சி வத்தல் ஊத்தும்போது அதில் ஒரு டம்ப்ளர் கஞ்சியை சுடச்சுட குடிக்க எனக்கு ரொம்ப பிடிக்கும்.. சீரகம், இஞ்சி, பச்சை மிளகாய், பெருங்காயம்லாம் போட்டு வாசமாய் அட்டகாசமாய் இருக்கும்..

Monday, May 25, 2020

தாராவியினை இதே நிலையில் இருக்கச்சொல்கிறதா Slum Tourisam?!- ஐஞ்சுவை அவியல்

மாமா! டிவியில் கொரோனா பாதிப்பு பத்தி போடும்போது தமிழகத்தில் சென்னையில் அதிகமா பாதிப்பு இருக்குற மாதிரி, மும்பையில் தாராவியில் அதிகமா பாதிச்சிருக்குன்னு சொல்றாங்களே! தாராவின்னா இந்த நாயகன், காலா, காதலர்தினம், ஸ்லம்டாக் மில்லியனர் படத்துல வந்த  இடம்தானே! 

அதேதான் புள்ள! சூரியன் மறையாத நாடுன்னு பிரிட்டனை சொல்வாங்க. ஏன்னா, பிரிட்டனின் கொடிஉலகத்தின் எல்லா மூலையிலும் எதோ ஒரு நாட்டில் பறந்து சூரியனை பார்த்துக்கிட்டே இருக்கும். அதேமாதிரிதான் ஏதோ ஒரு நாட்டிலிருந்து சூரியனை  24 மணிநேரமும் தமிழன் பார்த்துக்கிட்டே இருக்கிறான்னு சொல்ல ஆரம்பிச்சாட்டாங்க. அந்தளவுக்கு உலகம் முழுக்க தமிழனின் கொடி பறக்கின்றது.  சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, அரபு நாடுகள்ன்னு தமிழகர்கள் பெருமளவில் இருந்தாலும்  ஒரே இடத்தில் இருப்பதில்லை. பரவலாய் நாடு முழுக்க இருப்பாங்க. உலகம் முழுக்க தமிழர்கள் இருக்கும்போது நம் இந்திய நாட்டிலும் தமிழன் கால் பதிச்சிருப்பாந்தானே?!    மகாராஷ்டிராவில் கொஞ்சம் அதிகமாவே தமிழன் கால் பதிச்சுட்டான்போல! மும்பையில் ஒரு குட்டி தமிழகத்தை உருவாக்கிட்டான். 
18ம் நூற்றாண்டு வரை மேற்கு வங்கத்தில் மான்க்ரூவ்  தீவுகளைப்போல தாராவியும் தீவாகத்தான் இருந்தது.  அப்ப, கோலின்ற மீன் பிடிப்பதை குலத்தொழிலாக கொண்ட  மக்கள் மீன்பிடித்து வாழ்ந்து வந்தனர். ஆங்கிலேயர்களால் கோலி-வாடா என இந்த இடம் அழைக்கப்பட்டது. கிழக்கிந்திய கம்பெனியின் காலத்தில் இந்த இடம் பம்பாய் ஆனது. இங்கு 1887ல் தோல் பதனிடும் தொழிற்சாலை பம்பாயில் தொடங்கப்பட்டது.   பம்பாய் நகரம் அசுர வளர்ச்சியடைய ஆரம்பித்தது.  உத்தர பிரதேசத்திலிருந்து வந்தவர்கள் எம்பிராய்டரி தொழிலும், குஜராத்திலிருந்து வந்தவர்கள் மண்பாண்ட தொழிலும், தமிழகத்திலிருந்து சென்றவர்கள் நெசவுத்தொழிலும் செய்தனர். கூடுதலாக ப்ளாஸ்டிக் மீள் உற்பத்தி தொழிலும் கன ஜோராக நடந்தது. 

 
பம்பாய் நகரின் அசுர வளர்ச்சி ஏராளமான வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தந்தது. பொதுவாக நகரங்கள் செழித்து வளரும்  அதேநேரம் கிராமப் பகுதிகளில் பஞ்சம் தலைவிரித்தாடும் என்பது உண்மை.  மெட்ராஸ், கல்கத்தா, பம்பாயின் வளர்ச்சி கிராமத்து உழைக்கும் வர்க்கத்தை தன்பால் ஈர்த்தது. காரணம், நகரங்களின் வளர்ச்சிக்கு கட்டுறுதியான உடலும், கடுமையாய் ழைக்கும் ஆட்கள் தேவை. அத்தகைய ஆட்கள் கிராமப்புறங்களில் இருந்தார்கள் அவர்களை பல்வேறு ஆசைவார்த்தை காட்டி நகரங்கள் தங்கள் வளர்ச்சிக்கு பயன்படுத்த ஆரம்பித்தார்கள். 

பம்பாய் நகரத்தின் தேவையும், கிராமப்புறத்தில் உருவான வறுமையும், இயலாமையும், தமிழர்களை பம்பாயை நோக்கி போக வைத்தது. அன்றைய மெட்ராஸ் மாகானத்து மக்களே பெரும்பாலும் பம்பாய்க்கு புலம்பெயர ஆரம்பித்தார்கள்..  திருநெல்வேலி, வட ஆற்காடு, சேலம் போன்ற மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பிழைப்புக்காக பம்பாயை நோக்கிச் பயணப்பட்டனர். அப்பதான் ஓடத்துவங்கிய ரயிலில் பலர் பயணப்பட்டனர். மீதி ஆட்கள் நடந்தே மும்பை சென்றனர். வந்தாரை வாழவைக்கும் சென்னை மாதிரி அன்றைய பம்பாய் வந்தவருக்கெல்லாம் வேலை கொடுத்தது.  ஆனா, தங்க இடம் கொடுக்கலை.  மீன் பிடி தொழில் சரிய தொடங்கியதால் மீனவர்கள் கோலி-வாடாவிலிருந்து வேறு இடம் நோக்கி நகர்ந்தனர். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சதுப்பு நிலப்பகுதியாய் இருந்த 7 தீவுகளில் குடியேற ஆரம்பித்தனர்.  அதுவே இன்று தாராவியாய் சுமார் 10 லட்சம் மக்களால் வளர்ந்து நிற்கின்றது. 
தாராவியிலிருந்து பம்பாயின் எல்லா பகுதிகளுக்கும் சீக்கிரத்துல போயிடலாம்ன்றது தொழிலாளர்களுக்கு வசதியா போச்சு. ஏர்போர்ட் 12கி.மீ,  நடந்து போற தூரத்துல 4 ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட்ன்னு இருக்குறதால பெருமளவில் தொழிலாளர்கள் இங்க இருக்காங்க.  வெறும் 100- 200 ச.அடியில்  தகரத்தால் ஆன வீடுகள்ன்னு 520 ஏக்கர் பரப்பளவில் தாராவி பறந்து விரிந்திருக்கு.  வீட்டுக்கொரு கழிப்பறை இல்லைன்னாலும் மிக்சி, கிரைண்டர், ஆப்பிள் போன்ன்னு எல்லா வசதியும் இவங்கக்கிட்ட இருக்கு.  ஒரு காலத்துல சீந்துவார் இல்லாம இருந்த கோலி-வாடா, தாராவியாய் மாறி மும்பையிலேயே நெருக்கடியான இடமாகிட்டுது. இங்க 100 சதுர அடிகூட பல லட்சங்களுக்கு விலை போகுது. அதுவும் கிடைக்கவும் மாட்டேங்குது. படிப்பு, பதவின்னு உயர்ந்தாலும் இந்த இடத்தைவிட்டு அவங்க இடம் மாறுவதில்லை.வருசத்துக்கு 1பில்லியன் டாலர் அளவுக்கு முறைப்படுத்தப்படாத பொருளாதாரத்தை ஈட்டி தந்தாலும் உங்க உட்கட்டமைப்பு வசதியை யாராலும் செய்து தரப்படவில்லை. தரப்படவில்லை என்பதைவிட முடியவில்லை என்பதே உண்மை. இதற்கு காரணம் புறா கூண்டு சைசிலான வீடுகளும் வாழ்வாதார சிக்கல்களும், மறைவான அரசியலும்தான். நுகர்வு கலாச்சாரத்தால் ஈர்க்கப்பட்டுள்ள மேற்கத்திய நாடுகள் குறிப்பா ஐரோப்பியர்களுக்கிடையே slum tourismன்ற வாழ்க்கையின் விளிம்பு நிலையில் இருக்கும் மக்களை கண்டு அவர்களை ரசித்து, பரிதாபப்பட்டு, வியந்து, உதவி... தங்களது ஆன்மாவை திருப்திப்படுத்திக்கொள்கின்றனர். வறுமையுடனான மக்களின் போராட்டத்தை ‘உண்மையில் ஏழைகள்தான் மகிழ்ச்சியாக இருக்காங்க’ன்னு  தங்களைத் தாங்களே ஆறுதல்படுத்திக்கொள்ள இல்லன்னா நாம எவ்வளவோ பரவாயில்லைன்னு  திருப்திபடுத்திக்க்குறதுக்கோ இந்த சேர் சுற்றுலாவை  தேர்ந்தெடுக்கிறாங்க.  தாராவி மக்களுக்கு பொருளாதார ரீதியாய் உதவினாலும் அவர்களின் வறுமையை, சுகாதாரமின்மையை ஊக்குவிக்குற மாதிரி இருக்குன்னு சமூக ஆர்வளர்கள் சொல்றாங்க. இங்கு நடக்கும் உள்ளடிகளை வச்சுதான் நாயகன் படம் எடுத்தாங்க. 

அவரை பத்தி சொல்லேன் மாமா! இப்பவே பதிவு நீண்டு போச்சு. அவரது வரலாறை இன்னொரு நால் பதிவில் பார்க்கலாம்.. 

சரி, இந்த mpl கேம்ன்னா என்ன  மாமா?!

எதுகு கேக்குறே புள்ள!?

டிவியில்  ஒருபையன்  தான் இஞ்சினியர் படிச்சுட்டு வேலையில்லாம வீட்டில் இருக்கும்போது இந்த கேமை விளையாடி 50,000வரைக்கும் ஜெயிச்சதாவும் வீட்டுக்கு ஹெல்ப் பண்ணதாவும், அந்த விளையாட்டை யார் வேணூம்ன்னாலும் விளையடாலம்னு சொல்றான். இன்னொரு பையன் இந்த கேமை விளையாடி 40000வரை ஜெயிச்சு பிரண்ட்ஸ்கூட செலவு செஞ்சதாவும் ராயல் என்ஃபீல்ட் வாங்கனும்ன்ற தன் ஆசை இதாலதான் நிறைவேற போகுதுன்னு சொல்றான். அதான், நாமளும் விளையாடி சம்பாதிக்கலாம்ன்னு கேட்டேன்..
முன்னலாம் பொழுது போகதாயம், பல்லாங்குசின்னு விளையாடுவோம். இந்த டிஜிட்டல் உலகில் கூட சேர்ந்து விளையாட ஆள் இல்லாததால் வீடியோ கேம் வந்தடு. அதுவே வளர்ந்து மொபைல், கம்ப்யூட்டரில் ஆங்கிரி பேர்ட், டெம்பிள் ரன், கேண்டி கிரஷ்ன்னு வளர்ச்சி அடைந்தது., இப்ப அதோட லேட்டஸ்ட் வெர்ஷந்தான் இந்த mpl, ஆன்லைன் ரம்மி மாதிரியான விளையாட்டுகள்.  பணத்தை காட்டி   விளையாடும் எந்த விளையாட்டும் சூதுதான். இதுலாம் விளையாடுவது தப்பு. 


சின்ன வயசு பசங்களின் ஆசையை தூண்டி கோடிகோடியாய் பணத்தை குமிக்குறதுக்கு பேரு ரியல் மணி கேம். இதோட விவரத்தை இன்னொரு பதிவில் பார்க்கலாம். முன்னலாம் வீட்டில் தாயம் விளையாடுவதையே  சில் பெரியவங்க ஒத்துக்க மாட்டாங்க. ஏன்னா அது விளையாடியதால் தருமன் தோற்றான். நாடு நகரமிழந்தான். தம்பி, மனைவியை அடமானம் வைத்து, திரௌபதி துகில் உறியப்பட்டாள்ன்னு சொல்வாங்க.  ஆனா, இப்ப தினத்துக்கு ஆன்லைன் சூதை விளையாடச்சொல்லி நடுவீட்டில் நின்னு தமன்னா, வீராட் கோலி மாதிரியான பெரிய ஆளுங்க கூப்பிடுறாங்க. இந்த விளம்பரத்தால் இஞ்சினியரிங் படிச்சா வேலை கிடைக்காது. வேலை இல்லன்னாலும் இந்த ஆன்லைன் விளையாட்டை விளையாடி சம்பாதிச்சு ஜாலியா இருக்கலாம், வேலைக்கு போறதைவிட இதுல அதிகமா சம்பாதிக்கலாம். வீட்டில் இருந்துக்கிட்டே அதுவும் விளையடிக்கிட்டே சம்பாதிக்கலாம்ன்ற மாதிரியான  தப்பான அபிப்ராயத்தை உண்டாக்கும். எனக்கு தெரியாம எதாவது விளையாடி, எதாவது சிக்கலை இழுத்து விடடுக்காத. 

சரி அந்த கேமை விளையாடலை. ஆனா, இந்த விளையாட்டை விளையாடவா?!
இது விளையாட யாருக்குதான் பிடிக்காது., வேணும்ன்னா சொல்லு நானு, உன்னோடு வந்து விளையாடுறேன்.   என்ன ஒன்னு இந்த விளையாட்டின் ஒரே விதி பாப்பாக்கு பல் முளைச்சிருக்கக்கூடாது. பல்லு இருந்தால் விரல் துண்டாகிடும்.  

ஆமா மாமா! எந்த விசயத்திலும் ஆம்பிளைங்களுக்கு பயம் வந்தால் எதுவா இருந்தாலும் அப்படியே கைவிட்டுடுவாங்க. ஆனா, பொம்பளைங்களுக்கு பயம் வந்தால் தப்பா எதுவும் நடந்துடக்கூடாதுன்னு முன்னைவிட பலமா இறுக்கமா பிடிச்சுப்பாங்க. இதுதான் ஆணுக்கும் பெண்ணுக்குமான வித்தியாசம். அது வண்டியிலும் தொடரும், கீழ விழுற மாதிரி இருந்தால் ஹாண்டில்பாரை விட்டுட்டு கீழ குதிக்க பார்ப்பாங்க. ஆனா, பொண்ணுங்க, முன்னைவிட ஆக்சிலேட்டரை முறுக்குவாங்க. அப்படி முறுக்கித்தான் ராஜி கீழ விழுந்தாளம். அவ அப்பா சொன்னாரு. இந்த வீடியோவை பார்க்கும்போது அவ நினைவுதான் வந்துச்சு.  இந்த வீடியோவை பார்த்துக்கிட்டு இருங்க. நான் போய் சாப்பாட்டு வேலையை ஆரம்பிக்குறேன்..
நன்றியுடன், 
ராஜி

Sunday, May 24, 2020

என்னை ஏன் பிடிக்காது என்றாய்?! - பாட்டு புத்தகம்

என்னதான் பிடிச்ச இனிப்பு பண்டமா இருந்தாலும் ஓரிரு துண்டுகள் சாப்பிட்டால் பரவாயில்லை.  அதையே சாப்பிட்டுக்கிட்டிருந்தால் போரடிக்க ஆரம்பிக்கும். அதுமாதிரிதான் இந்த பாட்டும்... ஆனா என்ன டிவில தினத்துக்கு பத்து முறை பார்த்து, கேட்டு போரடிக்கவே ஆரம்பிச்சிடுச்சு.

Saturday, May 23, 2020

அன்பு எப்படி இருக்கனும்ன்னு தெரியுமா?!


பக்கம் பக்கமா எழுதி போரடிக்கிறேன்ல! ஒரு சேஞ்சுக்கு இணையத்துல சுட்டதை பதிவாக்கி இருக்கேன்....

Friday, May 22, 2020

சிவன்மலையில் வீற்றிருப்பது யார்?! - புண்ணியம் தேடி..


சின்ன மகளின் கல்லூரி மேற்படிப்புக்காக  கோவை பயணத்தின்போது  சிவன்மலைக்கு போகலாம்ன்னு அப்பா சொன்னதும் அங்க சிவன்தான் இருப்பார்ன்னு நினைச்சேன்.  மலையடிவார நுழைவு வாயிலிலேயே தெரிஞ்சுது மலைக்குமேல் குடிக்கொண்டிருப்பது சிவன் இல்லை. அவரோட சன் முருகன்தான்னு.. அப்பா கட்டிய வீட்டில் பிள்ளைங்க இருக்குற மாதிரி சிவன்மலையில் முருகன் இருக்கார்ன்னு நினைச்சுக்கிட்டேன்.  இந்த தலத்தை வாழ்நாளில் மறக்கமுடியாத இன்னொரு நிகழ்வு, என் பையன் முதன்முதலா கார் ஓட்டிக்கிட்டு மலைமீது ஏறினது இங்கதான்.  கொஞ்சம் பயத்தோடுதான் காரை ஓட்டினான். தைரியம் சொல்லி கூட்டிப்போனோம். நல்லாவே ஓட்டி பத்திரமா கீழிறங்கி வந்துட்டோம். அவன் பதட்டம் ரசிக்க வைத்தது.

Sunday, May 17, 2020

வீட்டில் திட்டு வாங்க வைத்த பாட்டு - பாட்டு புத்தகம்

மாயாவி படத்தில் ஒரு காட்சி வரும். அவனவன் சிம்ரன் படத்தைதான் மூணு மணிநேரம் பார்ப்பான். நான்லாம் சிம்ரன் போஸ்டரையே மூணு மணிநேரம் பார்ப்பேன்னு... அந்த மாதிரிதான் நானும் கார்த்திக் போஸ்டரையே மூணு நாள் பார்த்துக்கிட்டிருப்பேன். அப்பேற்பட்ட ஆளுக்கிட்ட இந்த பாட்டு சிக்கலாமோ!!??  சிக்கிடுச்சு. முன்னலாம் ரீல் அந்துபோகும், சிடி தேஞ்சு போகும். இல்லலாம் எத்தனை தடவை ரிப்பீட் ஆனாலும் கவலை இல்லை. டிவில டேட்டா கனெக்ட் செஞ்சு யூட்யூப்ல ஒருநாள் முழுக்க கேட்டும் பார்த்தும் அளுக்கலை. ஆனா டேட்டா காலியாகுதேன்னு டவுன்லோடி ரிப்பீட் மோடுல போட்டுவிட்டு வீட்டில் சிறுசுங்கக்கிட்ட திட்டு வாங்கியும் ஆஃப் பண்ண பாடில்லை..

Saturday, May 16, 2020

தொற்றுநோயாளிகளை அரவணைத்துக்கொள்ளும் தாம்பரம் சானிடோரியம்

நம் தனிப்பட்ட அனுபவங்களை தவிர்த்து ஒவ்வொரு ஊருக்கும் ஒரு வரலாறு உண்டு.  நாம் சாதாரணமாய் கடந்து செல்லும் பல ஊர்களுக்கு பின்னாடி மிகப்பெரிய சரித்தரம் இருக்கு. தாம்பரம் சானடோரியம் என்றால் அவரவர் அனுபவம் தவிர்த்து  MEPZ , புறநகர் பேருந்து நிலையமும், ஒரு ரயில்வே ஸ்டேஷனும்  நினைவுக்கு வரும்.  ஆனா, இன்று தாம்பரம் சானடோரியம் என அழைக்கப்படும் அந்த இடத்தின் அடையாளமாய்  முன் இருந்தது எது என தெரிஞ்சுக்கலாமா?!

Friday, May 15, 2020

அருள்மிகு ஸ்ரீமஞ்சனீஸ்வரர் அய்யனாரப்பன் திருக்கோவில் -கீழ்ப்புத்துப்பட்டு.

நினைச்சது ஒன்னு நடந்தது ஒன்னு, மாட்டிக்கிட்டு முழிக்குதே அய்யாக்கண்ணு..ன்னு பழைய பாட்டு ஒன்னு  இருக்கும், அதை அனுபவப்பூர்வமா உணர்ந்தேன்.  என்ன அனுபவம்ன்னு படிக்கும்போதே தெரிஞ்சுப்பீங்க!. போனவாரம் ஸ்ரீமௌலானாசாகிப் சுவாமிகள் ஜீவ சமாதியான தர்காவினை பற்றி  பார்த்தோம். அங்கிருந்து  கீழ்புத்துபட்டு  ஸ்ரீலஷ்மண சுவாமிகள் ஜீவ சமாதிகளை பார்க்கலாம்ன்னு கிளம்பினோம். வாழ்க்கையில் அடுத்த நிமிடம் என்ன நடக்கப்போகுதுன்னு யாருமே அறியாதது. அதுமாதிரிதான் நாங்க நினைச்சது ஒன்னு, நடந்தது ஒன்னு...

Wednesday, May 13, 2020

அரிச்சந்திரன் நல்லவனா?! கெட்டவனா?!- தெரிந்த கதை, தெரியாத தகவல்


அதுவரை சராசரியான மனித வாழ்க்கை வாழ்ந்து வந்த மகாத்மா காந்தியின் வாழ்க்கையை அரிச்சந்திரன் கதை மாற்றி அமைத்ததுன்னு சொல்லி கேள்விப்பட்டிருக்கோம். அன்றிலிருந்து என்ன கஷ்டம் வந்தாலும் பொய் சொன்னதில்லைன்னும் சொல்வாங்க,... காந்தியடிகள்  மனசு மாறினதுக்கு காரணமான அரிச்சந்திரன் உண்மையிலேயே பொய்யே சொன்னதில்லையா?!  அரிச்சந்திரனும் குறிப்பிட்ட காலம் வரை சராசரி மனித வாழ்க்கையை வாழ்ந்தவர்ன்னு சொன்னால் ஏற்பது கஷ்டம்தான்.

Monday, May 11, 2020

இப்படியா சோறு திம்பாங்க?! - ஐஞ்சுவை அவியல்

மாமா ! என் ஃப்ரெண்ட் ராஜி தன்னோட பையன்கூட வாக்குவாதம் பண்ணிக்கிட்டிருந்தா.

என்னவாம்?! உன் ஃப்ரெண்ட் ஒரண்டை இழுக்காத ஆள் யாராவது இருக்காங்களா?! எல்லார்க்கிட்டயும் சண்டை இழுக்குறதே அவளுக்கு வேலை. சரி, பெத்த புள்ளைக்கிட்ட எதுக்கு சண்டை போட்டாளாம்?! 


அப்பு புதுசா வாங்குன தன்  வண்டியின் முன்பக்கத்தில் தன்னோட  பேரும், சிறகு இருக்கும் ஒரு கொம்பை, இரு பாம்புகள் பின்னி இருக்குற மாதிரி ஒரு குறியீட்டை வரைஞ்சு வந்திருக்கான். இதை ஏன்டா வரைஞ்சேன்னு ராஜி கேட்டதுக்கு, இது மருத்துவத்துக்கான குறியீடு, இதை டாக்டர்கள், நர்ஸ், ஹாஸ்பிட்டல், ஆம்புலன்ஸ், மருத்துவம் சார்ந்த தொழிலாளர்கள், வண்டிகள், இடங்களில் பயன்படுத்தலாம், நான் பிசியோதெரபி படிக்குறதால், நான் என் வண்டியில் வரைஞ்சுக்கிட்டேன்ன்னு சொல்லி இருக்கான்.

சரியாதானே சொல்லி இருக்கான்?! அப்புறம் எதுக்கு புள்ளைய திட்டினா?!

யார்கிட்ட கதை விடுறே! ஆம்புலன்ஸ்சில் சிகப்பு கலர்ல ப்ளஸ் குறிதான் இருக்கும். நிறைய டாக்டர்கள் தங்களோட வண்டிகளில் அதைதான் போட்டிருக்காங்க. நான் நிறைய அதுமாதிரி பார்த்திருக்கேன்னு சொல்லி இருக்கா.

ராஜி சொல்றதும் சரிதானே?!

மாமா! யாராவது ஒருத்தங்க பக்கமா பேசுங்க! ரெண்டு பேரில் யார் சொல்றது சரி?!


ரெண்டு பேரும் சொல்வதுமே சரி. பரவலா சிவப்பு கலர் ப்ளஸ்தான் மருத்துவமனை, ஆம்புலன்ஸ்சில், ஹாஸ்பிட்டலில் இருக்கு.  ஜெனிவா ஒப்பந்தப்படி போர்க் காலங்களில் மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்பவர்களும், மருத்துவ உதவி செய்பவர்களும் வெள்ளை நிறத்து பிண்ணனியில் சிவப்பு நிறத்து பிளஸ் குறியீட்டை பயன்படுத்துவாங்க. இதுக்கு ரெட்கிராஸ்ன்னு பேரு. நம்ம ஊரு ஸ்வஸ்திக்ல இருந்து இந்த குறியீடு வந்ததுன்னு நம்மாளுங்களும், இல்லை எங்க சிலுவை சின்னத்திலிருந்து வந்ததா கிறிஸ்துவர்களும் சொந்தம் கொண்டாட, உங்க ரெண்டு பேரு சகவாசமே வேணாம்ன்னு  அரபு நாட்டினரும், இன்னும் சில நாட்டினரும் இந்த குறியீட்டுக்கு பதிலா பிறை, சிங்கம், செம்படிகம்ன்னு வேறு சில குறியீட்டையும் பயன்படுத்திக்கிட்டாங்க. 1864ல் போர்ப்படையில் மருத்துவப்பிரிவினர் தங்களை தனித்து அடையாளப்படுத்திக்க இந்த ரெட்கிராஸ் சின்னத்தை பயன்படுத்திக்க ஆரம்பிச்சாங்க.  தூரத்திலிருந்தும் பளிச்சுன்னு இந்த குறியீடு தெரியும் காரணத்தினாலும், உதவி தேவைப்படுறவங்க சுலபமா அடையாளம் காணவும், சுலபமா வரையக்கூடியதாலும் இந்த குறியீடு உலகம் முழுக்க பரவிச்சு.  ஹாஸ்பிட்டல், ஆம்புலன்ஸ்,  மருந்துக்கடைன்னு எல்லாரும் இந்த குறியீட்டை பயன்படுத்தி வர்றாங்க. ஆனா, மருத்துவத்துக்கான குறியீடுன்னு பார்த்தா அப்பு வரைஞ்ச கொம்பை சுத்தி இரு பாம்புகள் இருக்கும் படம்தான் சரியானது.


சரி, இந்த குறியீட்டின் அர்த்தம் என்ன மாமா?!

நமக்கு எதுவுமே சாமிக்கிட்ட ஆரம்பிச்சாதான் புரியும், கடைப்பிடிப்போம். அதனால், ஆன்மீக காரணத்தை சொல்றேன். சிவன் கோவில்கள், ஆல/அரச/வேப்ப மரத்தடியில் இரு பாம்புகள் பின்னி இருக்கும் சர்ப்ப பிரதிஷ்டைகளை பார்த்திருப்போம். இந்த பிரதிஷ்டையை தினமும் தரிசனம் செய்தால் நாம் செய்த கர்மவினைகள் நீங்கும், தீராத வியாதிகள் எல்லாம் தீரும்ன்றது நம் நம்பிக்கை. இதை பார்த்துதான் இந்த குறியீடு உண்டாக்கினதா சொல்றாங்க.

ஜோதிட ரீதியா செவ்வாய்கிரகம் நோய்க்கு காரணமான ரோகக்காரன்னும், பகைக்கு காரணமான சத்ருகாரகன்னும், கடன் தொல்லைக்கு காரணமான ருணக்காரன்னும் சொல்வாங்க. இந்த செவ்வாய் கிரகம் ஆயில்யம் நட்சத்திரத்தன்னிக்கு  செயலற்று போகும்ன்னு ஜோதிடம் சொல்லுது. ஆயில்யம்ன்னா பிண்ணிக்கொள்வதுன்னு ஒரு அர்த்தமாம். ஆயில்யம் நட்சத்திரத்தின் குறியீடா பிண்ணிக்கொண்டிருக்கும் பாம்பைதான் சொல்றாங்க. அதனால்தான் மருத்துவம் பார்க்க ஆயில்யம் நட்சத்திரம் சிறந்ததுன்னு சொல்றாங்க. அதனாலும் இந்த குறியீடு வந்ததா சொல்றாங்க.

இனி இன்னொரு காரணத்தை பார்க்கலாம்!! கிரேக்கர்களை பொறுத்தவரை மருத்துவம்ன்றது கடவுள் தந்த பரிசுன்னு இன்னமும் நம்புறாங்க.  ஒலிம்பஸ் மலையில் உள்ள கடவுளின் தூதரான ஹெர்ம்ஸ் என்பவர் காடூசியஸ்ன்ற மந்திரக்கோலைகோலை கையில் வச்சிருப்பார். இந்த மந்திரக்கோலை அவருக்கு கிரேக்க கடவுளான அப்பல்லோ, ஹெர்ம்ஸ் உடனான தனது நட்புக்கு அடையாளமாக இந்த காடூசியஸ்ன்ற மந்திரக்கோலை பரிசாக தந்தார். இரண்டு பாம்புகள் பிண்ணி பிணைந்தபடி இருக்கும் ஒரு தடி. அந்த தடியோட மேற்பகுதியில் இறக்கைகள் இருக்கும். காடூசியஸ் மந்திரக்கோலில் நடுவில் இருக்கும் தடி நமது தண்டுவடத்தை குறிக்கும்.   இரண்டு பாம்பில் ஒன்று விசம்(நோய்) இன்னொரு பாம்பு அந்த விசத்தினை முறிக்கும் மருந்து(குணப்படுத்துதல்) ன்னு அர்த்தம். இப்படி பின்னி பிணைந்த பாம்புகள் ஆண், பெண்ணின் சேர்க்கை எனவும் சொல்றது உண்டு. சித்த மருத்துவப்படி இரும்பை தங்கமாக்கும் ரசவாதத்தில் இந்த தடியில் இருக்கும் ஆண் பாம்பு கந்தகம் எனவும், பெண் பாம்பு பாதரசம்ன்னும் சொல்றாங்க.   இரண்டு கொள்கைகளின் தொடர்புகளின் அடையாளமாகும். இரண்டு பின்னிப் பிணைந்த மற்றும் பாம்புகளை ஒன்றிணைக்க ஆர்வமாக இருப்பது ஞானத்தை வெளிப்படுத்துதுன்னும் சொல்றாங்க.  காடூசியஸ்சில் இருக்கும் சிறகுகள் இரண்டும் காற்றை  அடையாளமா கொண்டது. எந்த தடை இருந்தாலும் காற்றைப்போல எல்லா இடத்திலும் நுழையும் தன்மைக்கொண்டது மருத்துவம்ன்னு இந்த குறியீடு சொல்லாம சொல்லுது. 16ம் நூற்றாண்டிலிருந்துதான் இந்த காடூசியஸ் குறியீட்டை பரவலா பயன்படுத்த ஆரம்பிச்சாங்க.  

அதென்ன மாமா கொடிய விசம் கொண்டதும், உயிரை எடுக்கும் பாம்பை போயி உயிர் காக்கும் மருத்துவத்துக்கு குறியீடா வச்சிருக்காங்க. 


மனிதன் உருவான காலத்தில் தன் உயிருக்கு ஆபத்து தரும்  மிருகங்களையும் இடி, மின்னல், மழை மாதிரியான இயற்கை சீற்றங்களை கண்டு பயந்தான். தன்னால் கட்டுப்படுத்த முடியாததையும், தான் பயப்படுவதையும் கடவுளாய் பாவிக்கும் வழக்கம் மனிதனின் ரத்தத்தில் ஊறிப்போன ஒன்று.  அதுமாதிரிதான் பாம்பு, சிங்கம், புலி, காற்று, நெருப்புலாம் வணங்கினான். எழுத, வரையும் கலை வந்தபின் இயற்கை சீற்றங்கள் கடவுளின் அம்சமானது. மிருகங்கள் அந்த கடவுளுக்கு வாகனமாகின. பாம்பினை வாழ்க்கை மற்றும் மனிதனை மீளுருவாக்கம் செய்யும் சக்தியாக ஆதிமனிதர்கள் வணங்கினர்.   உயிரை பறிக்கும் பாம்பின்கொடிய விசத்திலிருந்து ஏகப்பட்ட உயிர்காக்கும் மருந்துகள் தயாரிக்கப்படுது. அதனால்தான்  பாம்பு  மருத்துவ குறியீட்டில் இடம்பெற்றது.  அதனால்தான் எல்லா கடவுளும் பாம்பினை வச்சிருக்காங்க. 

அதேமாதிரிதான், மருந்து கடைகளிலும், டாக்டர் கொடுக்கும் மருந்து சீட்டிலும் Rxன்னு இருக்கும் Reciepeன்ற லத்தீன் மொழில இருந்துஅ வந்தது.  இதுக்கு என்ன அர்த்தம்ன்னா  எடுத்துக்கொள்ளவும்ன்னு  அர்த்தம். 

சரி மாமா! ராஜி பொண்ணூ கல்யாண பத்திரிக்கையில் சீமந்த புண்ணிய புத்திரின்னு இருந்துச்சே அதுக்கு என்ன அர்த்தம்?!
முதல் குழந்தையை சீமந்த புண்ணிய புத்திரன்/புத்திரின்னு சொல்வாங்க. ஒரு பெண் முதல் குழந்தையை கருவில் சுமக்கும்போது சீமந்தம் என்னும் வளைகாப்பு சடங்கு நடத்துவாங்க.  ரெண்டாவது. மூணாவது குழந்தையை சுமக்கும்போது வளைகாப்பு சடங்கு நடத்தமாட்டாங்க. ஏன்னா, முதல் குழந்தையை சுமக்கும்போது பிரசவத்தை எண்ணி பயம் இருக்கும். அதை போக்கும்விதமா இப்படி விழா நடத்துவது உண்டு. அதனால்தான் முதல் குழந்தையை அப்படி சிலர் சொல்வதுண்டு. இன்னும் சில பத்திரிக்கைகளில்  மாப்பிள்ளை/ பொண்ணு பேருக்கு முன் திருவளர்ச்செல்வன்/செல்வின்னும், திருநிறைச்செல்வன்/செல்வின்னும் போடுறதை பார்த்திருக்கோம்.  திருவளர்ச்செல்வன்?செல்வின்னா அந்த குடும்பத்தின் மூத்த மகன்/ள்ன்னும்,  இதுதான் முதல் கல்யாணம், இன்னும் பசங்க எங்களுக்கு இருக்காங்கன்னு உங்க வீட்டுக்கு பொருந்துமான்னு பாருங்கன்னு சொல்லாம சொல்லுறதுக்காக இப்படியொரு குறிப்பு. அதேப்போல, திருநிறைச்செல்வன்/செல்வின்னா இது எங்க குடும்பத்தின் கடைசி மகன்/மகளின் திருமணம்.  இனி எங்க வீட்டில் கல்யாணத்துக்கு ஆள் இல்லன்னு மறைமுக சொல்றதுக்காக இந்தமாதிரி பத்திரிக்கையில் போடுறாங்க.

இது எதுவுமே இல்லாம, இங்கிலீஷ்ல அடிக்கும்போது, பொண்ணோட பேருக்கு முன்னாடி SOWன்னு போடுறாங்க. இதுக்கு என்ன அர்த்தம்ன்னு கேட்டால் சௌபாக்கியவதியை சுருக்கி சௌன்னு போடுறதா சொல்றாங்க. அட! கூறு கெட்ட குக்கருகளா! SOWன்ற இங்கிலீஷ் வார்த்தைக்கு பெண்பன்றின்னு ஒரு அர்த்தமிருக்குன்னு பத்திரிக்கை வைக்க வர்றவங்கக்கிட்ட சொல்லத்தோணும். ஆனா, என்ன நினைச்சுப்பாங்களோன்னு அமைதியா விட்டுடுறது. கல்யாண பத்திரிக்கை அடிக்கும்போது இதுலாம் கவனத்தில் வச்சுக்கனும். 

போதும் மாமா! இப்பவே நம்ம பதிவுலாம் ரொம்ப நீளம்ன்னு சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க. இந்த பதிவையாவது இத்தோடு நிறுத்திக்கலாம்.
சரி புள்ள ! போறதுக்கு முன்னாடி பதிவு படிச்ச களைப்பு நீங்க ஒரு குட்டிப்பாப்பா சோறு திங்கும் அழகை பார்த்திட்டு போகட்டும்..
ஒரு பருக்கை இலையிலும் இல்லை. கையிலும் இல்ல. அதோட அம்மா ஊட்டும் சோறும் வாய்க்குள் போகல. வீடு க்ளீன் பண்ணும் வேலை இருந்தாலும் பரவாயில்லைன்னு குழந்தையை தானே சாப்பிட விட்டிருக்காங்க பாருங்க. அதுக்கே வாழ்த்தலாம் மாமா!

நன்றியுடன்,
ராஜி


Up pointing backhand index

Sunday, May 10, 2020

கள்ளழகர் அருள் புரிவாரா?!

90களில் வந்த சினிமாக்களின்  வந்த தாக்கமா?! இல்ல, அப்பா கொஞ்ச நாள் கமுதியில் வேலை செஞ்சதால் வந்த விட்டக்குறை, தொட்டக்குறையான்னு தெரியாது. மதுரை, சோலைமலை, அருப்புக்கோட்டை, கன்னியாகுமரி, குற்றாலம் , தென்காசி, தேனின்னு தென் தமிழகத்தின்மீது எனக்கு மோகம் அதிகம். .  சாக்லேட்டை காட்டி குழந்தையை கடத்துறமாதிரி உன்னைய தென் தமிழகம் கூட்டிப்போறேன்னு யாராவது கடத்தப்போறாங்கன்னு பசங்க கிண்டல் செய்யுமளவுக்கு தென் தமிழகத்தின்மீது மோகம். ஆனா, என் தொடக்கம் ஆரம்பிச்ச அதே தென் தமிழகத்தில்தான் முடிவும் அமையனும்ன்னுதான் என் ஆசை.. பார்க்காமலே நட்பு கொண்ட பிசிராந்தையார், கோப்பெருஞ்சோழனைப்போல, கேள்விப்பட்டதை வைத்து பார்க்காமலே சிலருக்கு சில ஆசைகள் இருக்கும். இன்ன இடத்துக்கு போகனும், இதை பார்க்கனும்ன்னு...  அப்படி கேள்விப்பட்டதை வைத்து பார்க்க நினைச்சது அருப்புக்கோட்டையில் நடக்கும் கத்தி போடும் திருவிழாவும், கள்ளழகர் திருவிழாவும்..

Saturday, May 09, 2020

அடுத்த வீட்டுக்கு டிவி பார்க்க போயி அவமானப்பட்டதுண்டா?! - கிராமத்து வாழ்க்கைஅவசர யுகமிது. எல்லா வசதியும் இருந்தாலும் எதையும் நின்னு நிதானமா அனுபவிச்சு வாழலை.  எதையோ இழந்த உணர்வு எல்லோரிடமும் இருக்கு. ஆனால், எந்த வசதியும் இல்லாத முப்பது வருடங்களுக்குமுன் எத்தனை மகிழ்ச்சியாய் இருந்தோம்.. அந்த மகிழ்ச்சியின் சிறிய நினைவுமீட்டலே இந்த தொடர். சிலருக்கு ஆறின புண்ணை கிளறிவிட்டதாகவும் இருக்கலாம். அவ்வாறு இருந்தால் மன்னிச்சு.

Friday, May 08, 2020

ஸ்ரீ மௌலானாசாகிப் சுவாமிகள்-பாண்டிச்சேரி சித்தர்கள்.

தமிழ்நாட்டின் பல கோயில்களில் சித்தர்கள் சமாதி இருப்பதை பார்த்திருப்போம். சித்தர்கள் சமாதி அடைந்த கோயில்களில் இறை உணர்வும்ஈர்ப்பு சக்தியும் அதிகமிருப்பதை நம்மால் உணர முடியும். நம் மனதில் கோபம், ஆக்ரோஷம், குழப்பம்கவலை ஆகியவை எழும்போது நம் உடலைச் சுற்றி உள்ள அலைகள் 14 ஹெர்ட்ஸ்க்கு மேல் இருக்குமாம். இதனை பீட்டா அலைகள்ன்னு சொல்றாங்க. நாம் ஓய்வெடுக்கும்போது (ஆழ்ந்த தூக்கத்தின்போது) உடலைச் சுற்றி உள்ள அலைகள் 14 ஹெர்ட்ஸ்க்குக் கீழே இருக்குமாம். 

Thursday, May 07, 2020

நலம் தரும் சித்ரா பௌர்ணமி வழிபாடு

இந்துக்களின் பண்டிகைக்கும் பௌர்ணமிக்கும் நிறைய தொடர்புண்டு. அதுலயும் சித்ரா பௌர்ணமி ரொம்ப விசேஷமானது.  வசந்தக்கால தொடக்கம் சித்திரை  மாதம். அதனால சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமி மிக விசேஷமானது.  மத்த பௌர்ணமிக்கில்லாத சிறப்பு இந்த பௌர்ணமிக்கு மட்டும் ஏன்ன்னு இனி பார்க்கலாம்.

Wednesday, May 06, 2020

பக்தனின் நம்பிக்கைக்காக ஓடோடி வந்த விஷ்ணு பகவான் -நரசிம்ம ஜெயந்தி வழிபாடு

முன்கூட்டியே முடிவெடுத்து அவதரித்து, தக்க சமயம் பார்த்து தீயவர்களை அழிக்க கடவுள் எடுத்த அவதாரங்கள் பல. ஆனா, பக்தனை காக்கவேண்டியும், பக்தனின் நம்பிக்கையை காக்க வேண்டியும், நொடிப்பொழுதில் இறைவன் எடுத்த அவதாரமே நரசிம்ம அவதாரம். பக்தனின் நம்பிக்கையை காப்பாற்றியதற்காகவே விஷ்ணு எடுத்த தசாவதாரங்களில் மிக உயர்ந்ததும், கால அளவில் மிகச்சிறியதுமென நரசிம்ம அவதாரம் போற்றப்படுது.  தசாவதாரங்களில் நரசிம்ம அவதாரம் 4வது ஆகும்.

Tuesday, May 05, 2020

பச்சை சுண்டைக்காய் சாம்பாரும், மினி இட்லியும்.. -கிச்சன் கார்னர்


காலைல டிஃபனுக்கு தொட்டுக்க என்ன செய்றது?ன்றதுதான் தூங்கி எழுந்துக்கும்போதே யோசிக்க தோணும். சாம்பார், சட்னின்னு போரடிச்சு போனவங்க பச்சை சுண்டைக்காய் கிடைச்சா சாம்பார் வச்சு சாப்பிடுங்க. அடிக்கடி செய்வீங்க. கசப்பு சுண்டைகாயை சாப்பிடாத ஆட்களும் இந்த சுண்டைக்காய் சாம்பாரை சாப்பிடுவாங்க. இதில் காரக்குழம்பும் செய்வாங்க.

Sunday, May 03, 2020

வரியில்லாத பாட்டும் ஹிட் அடிக்குமா?! - பாட்டு புத்தகம்

ஒரு பாட்டுன்னா என்ன வேணும்?! கவர்ந்திழுக்கும் இசை, காந்தர்வ குரல், அர்த்தமுள்ள வரிகள், ஆழமான கருத்துகள்.. இவை போதும் .   அட, எது இருக்கோ இல்லியோ பாட்டுக்கு இசையும் இசைக்கேத்த வரிகளும் முக்கியம். 

Saturday, May 02, 2020

தடங்கலுக்கு வருந்துகிறோம்-கிராமத்து வாழ்க்கை

மத்திய வயதினர் தன்னோட பால்யத்தில் அனுபவிச்சு, இப்பவும் நினைவில் ஆடும் நினைவுகளின் தொகுப்பே இந்த கிராமத்து வாழ்க்கை தொடர்...

Friday, May 01, 2020

எதிலும் இறைவனை கண்ட ஓம் ஸ்ரீசக்திவேல் பரமானந்த குரு சுவாமிகள்-பாண்டிச்சேரி சித்தர்கள்.

நதிமூலம், ரிஷிமூலம் மட்டுமல்ல சித்தர்களின் பூர்வீகம், பிறப்பு முதலான தகவல்கள் கிடைப்பது அரிது. இன்றைய பதிவில் நாம் பார்க்க இருக்கும் சித்தர்  வள்ளலாருக்கு முந்தைய காலகட்டத்தை சேர்ந்தவர். அதனால், அவர் பிறந்த தேதி,வருடம் , பெற்றோர், என எந்த விவரமும் யாருக்கும் தெரியவில்லை. அதேப்போல் எந்த ஆண்டுகாலத்தில் பாண்டிச்சேரிக்கு வந்தார்?! எப்பொழுது ஜீவ சமாதியானர் என்பது கூட எவருக்கும் தெரியவில்லை.எல்லாமே செவிவழி செய்தியாக சொல்லப்படுபவைகள்தான்!!!