Thursday, November 29, 2012

கண்டுகொண்டேன்! கண்டுக்கொண்டேன்!

-->
 
சூரியனா?!
சந்திரானா?!
உன் முகத்தை சொல்லுகிறேன்...,
இப்படி பிரகாசித்தும்
குளுமையை உணரமுடிகிறதே!?..

நீ தலைவாரும்
சீப்பில் பற்களுக்கு பதிலாக
பூ இதழ்களால் செய்யப்பட்டுள்ளதாமே!?..

பூக்கள் உன்னை
சூடிகொள்கின்றன.
நீ, எதை சூடிகொள்கிறாய் ?..

உன் அழகு சிந்தும்
வெட்கத்தை எல்லாம்
உதடுகள் பூசிகொள்கின்றனவா!?
இப்படி சிவந்திருக்கின்றதே?!

பிறை நிலாவா?
உன் புருவங்களுக்கு மத்தியில்
பொட்டாக இருப்பது?..

நீ அழகு பார்க்கும்
நிலைகண்ணாடியை பார்க்கவேண்டும்..,
அது, அழகு தேக்கியா என்று!?..

சங்கு கழுத்து
என்று சொல்லுவது
உன் கழுத்தை பார்த்துதானோ!?..


கொடி இடை என்பது
சரிதான். ஆனால், ஒரு
சந்தேகம் உன்னிடை
எந்த வகை கொடி ?..

சந்தன மரங்கள் தானோ
உன் கால்கள்??!!
அப்பா இப்படி ஒரு நிறம்

கடைசியில்
கண்டே பிடித்துவிட்டேன்
உன் பாதங்கள்
ரோஜா இதழ்கள் தானே!!??


Monday, November 26, 2012

நீயின்றி நானில்லை..., என் காதல் பொய்யுமில்லை..,                          
உனக்காக இதயத்தையும்..,
விழிகளையும்.., வானையும்...,..
தென்றலையும்.., நிலவையும்..,
பறவைகளையும்..., பூக்களையும்
தூதுவிட்டேன்...,
என் காதலை
உனக்கு உணர்த்த சொல்லி?!


பூவானது வாடி வந்து சொன்னது
நீ மறுத்து விட்டாய் என்று
கலங்கி போய் வந்தன கண்கள்
உணர்ந்துகொண்டேன்


வான் இருண்டு போனது
நீ துரத்திவிட்டதால்
நிலவானது தேய்ந்து போனது
நீ பாராமுகமாய்
அனுப்பிவிட்டதால்


எனக்கு காரணம்
சொல்ல தெரியாமல்
தென்றலோ திசை மாறி
சென்றுவிட்டது

பறவையோ சோகமாய் வந்தது
இதயம் மட்டும் தூதாய் போய்
இன்றும் வர மறுக்கிறது


ஒரு வேளை
என் இதயத்தை
மட்டும் வைத்து கொண்டு
எல்லாவற்றையும்
திருப்பி அனுப்பி விட்டாயோ


இதே நினைவில் வாழ்கிறேன்
நான்...
என் இதயம் உன்னிடத்தில்
தஞ்சமாய் இருப்பதால்..... 

Monday, November 19, 2012

சின்ன புள்ளையா இருக்கும்போது இப்படி நினைச்சுப்பேன்..., பாகம் 2


                                       

1. வாயிலிருந்த விழுந்த பல்லை., மனுசங்க மிதிக்காத இடத்துல நட்டு வச்சு.., அதை யானை மிதிச்சா.., அந்த இடத்துல பைசா கிடைக்கும்ன்னு நினைச்சு “வீட்டு காம்பவுண்டுக்குள்” புதைச்சு வெச்சுப்பேன்....,

2. ”டிரைவிங் ஸ்கூல்” இருக்குற மாதிரி  “டிரைவிங் காலேஜ்”ன்னு ஒண்ணு இருக்குன்னு  நினைச்சிருக்கேன்...,

3. ”ஓணான்” கடிச்சா ஒரு நிமிசம், ‘அரணை” கடிச்சா அரை நிமிசம், “பல்லி” கடிச்சா பத்து நிமிசத்துல செத்துடுவோம்ன்னு நம்பியிருக்கேன்....,

4. ”ப்ளட் கேன்சர்” வந்தா மருந்தே கிடையாது செத்துதான் போவாங்கன்னு சினிமா பார்த்து தெரிஞ்சுக்கிட்டேன்..,

5. போட்டோ எடுத்துக்கிட்டா ஆயுசு குறைஞ்சுடும்ன்னு தாத்தா சொன்னதை நம்புனேன்....,

6. கிணறு தோண்டும்போது மூட்டை, மூட்டையாய் சர்க்கரை கொட்டுனதாலதான் தண்ணி நல்ல சுவையில இருக்குறதா நினைச்சுப்பேன்...,

7. தண்டவாளத்துல பழைய அலுமினிய 10பைசா இல்ல 20 பைசாவை வெச்சு அது மேல ரயில் ஏறுனா அது தங்கமாய்டும்ன்னு நம்புனேன்...,

8. பெரியவளானதும் பனை ஓலைல செஞ்ச காத்தாடி, பனங்காயினால செஞ்ச வண்டிலாம் செஞ்சு விக்குற தொழிலதிபராகனும்ன்னு நினைச்சுப்பேன்...,

9. மழை டைமல் இடி இடிச்சா அது எங்காவது போய் விழும். அது விழுற இடத்துல பசு மாட்டோட சாணியை போட்டு வெச்சா அந்த ”இடி” ஒரு கம்பியா மாறும். அதை வெச்சு பாறைல கூட ஓட்டை போடலாம்ன்னு  பாட்டி சொன்னதை நம்புனேன்...,

10. அம்மன் சாமிலாம் னடிகை கே. ஆர். விஜயா சாயல்ல இருப்பாங்கன்னு நினைச்சுப்பேன்...,

11. அசோக மரத்தையெல்லாம் அசோகர் தான் நட்டார்ன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்...,

12. லெட்டர்லாம் தபால்ல போடாம பாம்புக்கிட்டயும் லெட்டர் குடுத்தனுப்பலாம்ன்னு இராம. நாராயணன் படத்தை பார்த்து தெரிஞ்சுக்கிட்டேன்.

13. அடுத்த தெரு ராமு மாமா வீட்டு நாய்தான் கொடிய விலங்குன்னு நினைச்சுப்பேன்(சனியன்! நான் எங்கே போனாலும் விடாது.., அன்பா?! தொரத்தும்..)

14. புத்தகத்துல மயிலிறகு வெச்சு குங்குமம் வெச்சா மயிலிறகு குட்டி போடும்ன்னு நினச்சுப்பேன்.


15.  பொய் சொன்னா, ராத்திரி தூங்கும்போது  சாமி வந்து கண்ணு குத்தும்ன்னு நம்புனேன்...,

Saturday, November 17, 2012

நானும் நடிகைதான்..,

பாதத்தில் புரளும்
கொசுவத்தை சற்றுத் தூக்கிப் பிடித்து,

சப்தமிடும் கணுக்கால்
கொலுசு வெளித் தெறிய..,

சிணுங்கும் கண்ணாடி வளையலும்,
மருதாணி சிவப்பேறிய கைகளாலும்
உயர்த்திப் பிடித்து,

சாலையோரம் தேங்கியுள்ள
நீரில் கால் நனைத்து,
நேற்றிரவு பெய்த மழையின்
மீதத்தை சேமித்திருக்கும்
இலை பிடித்து இழுத்து,

வேலியோரத்து பூக்களின்
தேனை வண்டுக்கு தெரியாமல்
களவாடி செல்கையில்,

வாகனங்களில் செல்வோரின்
ஏளனப் பார்வைக்கு பயந்து,
கைகள் தன்னிச்சையாக
கொசுவத்தை விட்டு...,

என்னிலிருந்து மாறுபட்டு
பதவிசாக நடப்பதாக
நடிக்க ஆரம்பிக்கிறேன் நான்....,

Friday, November 16, 2012

குளிப்பதனால் வரும் நன்மைகளை தெரிஞ்சுக்க வாஙக!!

நாம, டெய்லி குளிப்பதானால, என்னென்ன நன்மைகள்லாம் வருதுன்னு கடைசியா சொல்றேன். அதுக்கு முன்னாடி, நாம குளிக்க யூஸ் பண்ணும் “சோப்”ல இருந்து எவ்வளவு அழகான சிற்பம் கிடைக்குதுன்னு பாருங்க. டிஸ்கி:  ”குளிப்பதனால வரும் நன்மைகள்”....,

1. சோப்ன்னா என்ன? அது எதுக்கு யூஸ் ஆகுது?ன்னு தெரிஞ்சுக்கலாம்!!.

2. சோப் குளிக்க மட்டுமில்ல. இதுப்போல அழகான கலைப்பொருட்கள் செய்யவும் யூஸ் ஆகும்ன்னும் தெரிஞ்சுக்கலாம்!!

3. “ சோப்”னால் இப்படி கலைப் பொருட்கள் செய்யலாம்ன்னு தெரிஞ்சுக்கிட்டா!! அதை வெச்சு ஒரு பதிவை தேத்தலாம்.. இதான் ”குளிப்பதனால வரும் நன்மைகள்”....,

அடடா! ஏன் இப்படி டென்ஷனாகி கல்லுலாம் தேடுறீங்க..,  எதுவா இருந்தாலும் ”பேசி” தீர்த்துக்கலாம் சகோஸ். மீ பாவம்!!!

Thursday, November 15, 2012

எனக்கு சினிமாவை பிடிக்காம போன காரணங்களில் சில...,

                                                    

1. காதாநாயகனோ இல்ல கதா நாயகியோ இல்ல ரெண்டு பேருமே கோவில் திருவிழாவுக்காக நடுத்தெருவில், ஊர்சனமே பார்க்க ஆடிக்கிட்டு இருக்கும்போது வில்லன் கோஷ்டி அருவா, துப்பாக்கி கையோடு நின்னுட்டு இருக்குறதை ஒரு பயலும் பார்க்க மாட்டான்..,

2. கதாநாயகி(கன்)க்கு தங்கச்சியா பொறந்தா கற்பழிக்கனும், தம்பியா பொறந்தா செத்துதான் போகனும்...,

3.  படம் ஆரம்பிக்கும்போது, கதாநாயகி(கன்)யோட அப்பாவோ இல்ல அம்மாவோ   ரகசியம் சொல்ல வந்தா “பொட்டு”ன்னு செத்து போறதும்..., படம் முடியும் வேளைன்னா 4 பக்கத்துக்கான வசனத்துல ரகசியத்தை சொல்லிட்டு செத்து போறது....,

4. பணக்கார வீட்டு பையனாவோ இல்ல பொண்ணாவோ பொறந்தா கண்டிப்பா திமிர் பிடிச்சு போய் அழிச்சாட்டியம் பண்ணுற கெட்டவனாத்தான் பொறப்பாங்க..., 

5. டூ பீஸ் போல இருக்குற ட்ரெஸ்ல தலை விரிச்சு போட்டுக்கிட்டு யாரையுமே மதிக்காம இருக்குற பொண்ணு.., காதல் வந்ததும்!? இழுத்து போர்த்தி சேலை கட்டிக்கிட்டு தழைய தழைய தலை வாரி கனகாம்பரம் பூ வெச்சுக்கிட்டு வரும்...,

6. செகண்ட் ஹீரோயின்ன்னு ஒருத்தி அந்த படத்துல இருந்தா நிச்சயம் ஹீரோ மேல செம லவ்வாகி டூயட்லாம் பாடி!! ஹீரோவால் நான் உன்னை என் தங்கச்சியாதான் நினைக்குறேன்ன்னு சொல்ல கேட்டு வில்லனை கட்டி கொடுமைக்கு ஆளாவா! இல்லாட்டி வில்லனால் செத்து போவா!!

7. படத்துல ஹீரோவும் அவர் அப்பாவும் ஃப்ரெண்ட்ஸ் போல காட்டுனா கண்டிப்பா ஒண்ணா சேர்ந்து தண்ணியடிச்சுக்கிட்டும் ஃபிகரை தேத்துறதுக்கு ஐடியா குடுக்குறதுமாதான் இருக்கும்...,

8. ஹீரோயினுக்கு சோகம் வந்தா வேகமா ஓடிப்போய் “தொபுக்கட்டீர்”ன்னு கட்டில்ல விழுந்துதான் அழுவாங்க..., சேர், வாசப்படி, சோஃபால லாம் உக்காந்து அழமாட்டாங்க...,

9. செகண்டுக்கு 100 புல்லட்டை துப்புற மெஷின் கன்னிலிருந்து  50 கிமீ வேகத்துல பறக்குற குண்டுல இருந்து  (மெஷின் கன்னோட டீட்டெயில் தெரியாது. சும்மானாச்சுக்கும் சொல்லியிருக்கேன். தெரிஞ்சவங்க வந்து கிளாஸ் எடுக்காதீங்கப்பா!) லேசான தலையசைக்குறதானால ஹீரோ தப்பிச்சுடுவார்...,

10.  ஹீரோயினோட கல்யாணம் நின்னு போய்ட்டா.., கரெக்டா ஹீரோதான் பெரிய மனசு பண்ணி வாழ்வு குடுப்பார். லட்டு ஃபிகரா இருக்கவே தாலி கட்டுறவர் அட்டு ஃபிகரா இருந்தா தாலி கட்டுவாரா?!

11. ஹீரோ தத்து பிள்ளையா இருந்தா அந்த ரகசியம் கண்டிப்பா அவரோட கல்யாணத்தப்போ தான் தெரிய வரும்..

12. கிராமத்து படமா இருந்தா கண்டிப்பா ஆலமரத்தடி பஞ்சாயத்து சீன் கண்டிப்பா உண்டு. அதுல இப்படியே உக்காந்திருந்தா எப்படிப்பா?! யாராவது ஆரம்பிங்கப்பான்னு ஒரு பெருசு சவுண்ட் விடும்....,

13.  பாம்பு, குரங்கு, யானை, நாய்லாம் அந்த படத்துல இருந்தா அதுலாம் இங்க்லீஷ் தெரிஞ்சுக்கனும், வில்லன் கூட கம்பு, கத்தி சண்டை போடனும், துப்பாக்கி சுட ட்ரெயினிங் எடுத்து சர்டிஃபிகேட் வங்கியிருக்கனும்...

14. ஹீரோ கிராமத்துல பொறந்திருந்தா,  கண்டிப்பா குடுமி வெச்சுக்கிட்டு அசடாத்தான் இருக்கனும், அவங்க குடும்பத்தை இழந்து பட்டணத்துக்கு போய் கிராப் வெட்டி, கராத்தே, குங்க்ஃபூலாம் கத்துக்கிட்டு செத்தவங்களோட திதி அன்னிக்கு பழிவாங்கனும்...,

15. வில்லங்கன்னா கண்டிப்பா சுமோதான் வெச்சிருக்கனும்.., அத்தோட அவங்க ஆளுலாம் சீட்டுல உக்காரம வெளில நின்னுக்கிட்டு,  கத்தி, அருவாலாம் சுத்திக்கிட்டே போகனும்...,

16.சாமி படம்ன்னா எட்டு கால், இருபத்தி நாலு கை, மூணு கண்ணு, நாலு தலைன்னு பெயர் தெரியாத ஜந்து ஒண்ணு  கிளைமேக்ஸ்ல நெருப்பை கக்கிட்டே வரணும்.

17. பேய் படத்துல வர்ற பொம்பளை பேய்ன்னா கண்டிப்பா வெள்ளை புடவை கட்டி, பார்லர் போய் சீரா முடி வெட்டி, புருவம் திருத்தி, நகத்தை நீளமா  அழகா வெச்சிருக்கனும். ஆம்பிள்ளை பேய்ன்னா பாதி சிதைஞ்ச முகம், சுருங்கி போன தோல்ன்னு பயம் காட்டனும்..,

18. ஓப்பனிங்க் ஷாட்டுல கிராமம்ன்னா சூரியோதமும், சேவல் கூவுறதும்,  கோவம், ஏர் தூக்கிக்கிட்டு போற உழவனோடதான் தொடங்கும்.. சிட்டி படம்ன்னா பேப்பர் போடுறது, ஓட ஓட வெரட்டி கொல்லுறது, வாக்கிங்க், ஜாக்கிங்க் போறதுலதான் தொடங்கௌம்...,

19. கிராமத்து படத்துல ஒரு பொண்ணை லேசா உரசிட்டாலே  ஊரே ஒண்ணு கூடி அடிக்கும். அதுவே சிட்டி படத்துல நடு ரோட்டுல ஒருத்தனை இழுத்து போட்டு வெட்டுனாலோ இல்ல ஒரு பொண்ணை ஈவ் டீசிங் பண்ணக்கூட யாரும் கண்டுக்காமத்தான் நிப்பாங்க..

20. ஸ்கூல், காலேஜ் சப்ஜெக்ட் படமா இருந்தா ஹீரோவும் அவங்க ஃப்ரெண்ட்ஸும் கண்டிப்பா உருப்படாதவங்களாத்தான் இருப்பாங்க. கடைசி 3 ரீல்ல ஹீரோயின், இல்ல டீச்சர், இல்ல பெத்தவங்க குடுக்குற ஸ்பீச்சுல மனசு மாறி 12 வருசமா தொடாத புக்கை தொட்டு ஒரே மாசத்துல படிச்சு !! பரிட்சைல கோல்ட் மெடல் வாங்குவாங்க??!!...,

டிஸ்கி: எப்பவுமே சினிமாக்கு கூட்டி போனால் வேண்டா வெறுப்பாத்தான் போவேன். ஆனா, அதுக்கு காரணம் தெரியாது. வளர்ந்த பின் தான் காரணம் தெரியுது. கதை, லொக்கேஷன், ஆக்டர்ஸ் மாறினாலும் அடிப்படை விஷயங்கள் மட்டும் மாறுறதே இல்ல.  அதனாலயே சினிமா பார்க்குறதே பிடிக்காம போய்ட்டுது. இது சில காரணங்கள்தான் இன்னும் சில காரணங்கள் இன்ன்மொரு பதிவில்....,