திங்கள், அக்டோபர் 03, 2011

அம்மா செல்லமான அப்பா செல்லம்

                                                     
எப்படி எப்படி 
எல்லாமோ 
தன பாசம் உணர்த்துவாள் அம்மா.
ஒரேயொரு கையழுத்தலில்
எல்லாமே உணர்த்துவார்
அப்பா...,

முனனால் சொன்னதில்லை   
பிறர் சொல்லித்தான்
கேட்டிருக்கிறேன்!
என்னைப் பற்றி
பெருமையாக அப்பா
பேசிக் கொண்டிருந்ததை..,

அம்மா எத்தனை முறை
திட்டினாலும்
உரைத்ததில்லை..,
உடனே..,
உறைத்திருக்கிறது
என்றேனும் அப்பா
முகம் வாடும்போது...,

உன் அப்பா
எவ்வளவு உற்சாகமாக
இருக்கிறார் தெரியுமா!? என
என் தோழிகள் 
என்னிடமே சொல்லும்போதுதான் 
தெரிகிறது யாருக்கும் 
கிடைக்காத 
தந்தை எனக்கு 
கிடைத்திருக்கிறார் என்று...,

எதையும் கேட்ட உடனே
தன்னால் கொடுக்க இயலாது 
என்பதால்தானோ
அப்பாவை என்னுடன் 
அனுப்பி இருக்கிறார் கடவுள!?

சிறுவயதில்
என் கைப்பிடித்து
நடைப்பயில
சொல்லிக்குடுத்த
அப்பா...,
என் கரம்
பிடித்து நடந்தபோது
என்ன நினைத்திருப்பார்!?

லேசாக என் கால்
தடுமாறினாலும்
பதறுவார்
அப்பா..,
அவர் தடுமாறியபோது
அருகில் ...,
நான் இல்லை!!??  

அம்மா செல்லமா?
அப்பா செல்லமா?
என கேட்டபோதெல்லாம்..,
பெருமையாகச் சொல்லி
இருக்கிறேன்..,
அம்மா செல்லமான
அப்பா செல்லம் என!!??..,  
 
எத்தனையோ பேர்
"நானிருக்கிறேன்."
எனச் சொன்னாலும்  
அப்பாவைப் போல்
யார் இருக்க முடியும்???
நானும் காட்டியதில்லை
அவரும் காட்டியதில்லை
எங்கள் பாசத்தை..,
இருந்தும்,
காட்டிக் கொடுக்கும்  கண்ணீரை
துடைக்க  இன்று
அப்பாவும் அருகில் இல்லை...,

அம்மாவிடம் பாசத்தையும்..,
அப்பாவிடம் நேசத்தையும்
இன்றே உணர்த்திவிடுங்கள்.
சில நாளைகள்
 அவர்கள் அருகில் 
நீங்கள்,
இல்லாமலும் போகலாம்..   

27 கருத்துகள்:

 1. >>என்னைப் பற்றி
  பெருமையாக அப்பா
  பேசிக் கொண்டிருந்ததை..,  என்னைப் பற்றி
  எருமையாக அப்பா
  பேசிக் கொண்டிருந்ததை..,

  பதிலளிநீக்கு
 2. >சில நாளைகள்
  அவர்கள் அருகில்
  நீங்கள்,
  இல்லாமலும் போகலாம்..

  டச்சிங்க் லைன்ஸ்

  பதிலளிநீக்கு
 3. டைட்டிலாக அம்மா என்றால் அன்பு, அப்பா என்றால் அம்மா என வைத்திருக்கலாம் பை அதிகப்பிரசங்கி அழகிரிசாமி

  பதிலளிநீக்கு
 4. அன்பை இன்றே உணர்த்தி விடுங்கள் கண்டிப்பாக....

  பதிலளிநீக்கு
 5. இந்த கவிதை எல்லாரையும் சென்றடைய வேண்டும், எனது பேஸ்புக், டிவிட்டர், பஸ் எல்லாவற்றிலும் உங்கள் கவிதையை பிரசுரம் செய்கிறேன்.

  பதிலளிநீக்கு
 6. அப்பாவின் பாசம் உணர்த்தும் வரிகள் அருமை

  பதிலளிநீக்கு
 7. சி.பி.செந்தில்குமார் கூறியது...

  >>என்னைப் பற்றி
  பெருமையாக அப்பா
  பேசிக் கொண்டிருந்ததை..,  என்னைப் பற்றி
  எருமையாக அப்பா
  பேசிக் கொண்டிருந்ததை..,

  >>>>

  நான் என் அப்பா பேசியதை பற்றி சொன்னேன். நீங்க உங்கப்பா பேசியதை பற்றி சொல்லியிருக்கீங்க சிபி சார்.

  பதிலளிநீக்கு
 8. சி.பி.செந்தில்குமார் கூறியது...

  >சில நாளைகள்
  அவர்கள் அருகில்
  நீங்கள்,
  இல்லாமலும் போகலாம்..

  டச்சிங்க் லைன்ஸ்

  >>>.

  நன்றிங்க சிபி சார்

  பதிலளிநீக்கு
 9. சி.பி.செந்தில்குமார் கூறியது...

  டைட்டிலாக அம்மா என்றால் அன்பு, அப்பா என்றால் அம்மா என வைத்திருக்கலாம் பை அதிகப்பிரசங்கி அழகிரிசாமி

  >>

  அப்பா என்றால் அம்மாவா? என்ன டைட்டில் இது? உங்களுக்கே புரியலை. இதுல மத்தவங்களுக்கு அட்வைஸ் வேற.

  பதிலளிநீக்கு
 10. MANO நாஞ்சில் மனோ கூறியது...

  இந்த கவிதை எல்லாரையும் சென்றடைய வேண்டும், எனது பேஸ்புக், டிவிட்டர், பஸ் எல்லாவற்றிலும் உங்கள் கவிதையை பிரசுரம் செய்கிறேன்.
  >>
  நன்றிங்க சகோ. நல்லதொரு விஷயத்தை பகிர்வது நல்லதுதானே

  பதிலளிநீக்கு
 11. !* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...

  மனதை நெகிழச் செய்யும் கவிதை..

  >>

  நன்றிங்க சகோ

  பதிலளிநீக்கு
 12. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...

  :)
  >>>
  thanks

  பதிலளிநீக்கு
 13. ஒரேயொரு கையழுத்தலில்
  எல்லாமே உணர்த்துவார்
  அப்பா... Hats Off...

  ரொம்ப பிடித்திருந்தது...

  பதிலளிநீக்கு
 14. ரெவெரி கூறியது...

  ஒரேயொரு கையழுத்தலில்
  எல்லாமே உணர்த்துவார்
  அப்பா... Hats Off...

  ரொம்ப பிடித்திருந்தது...
  >>>
  நன்றிங்க சகோ

  பதிலளிநீக்கு
 15. கூரிய வாள் அதை பயன்படுத்தத் தெரிந்தவனிடம்
  இருந்தால்தான் அதன் பலமும் பலனும் தெரியும்
  கவிதை கூட அப்படித்தான்
  இப்படி ஒரு நல்ல படைப்பைப் படித்து வெகு நாட்களாயிற்று
  மீண்டும் மீண்டும் படித்து ரசித்தேன்
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 16. Ramani கூறியது...

  கூரிய வாள் அதை பயன்படுத்தத் தெரிந்தவனிடம்
  இருந்தால்தான் அதன் பலமும் பலனும் தெரியும்
  கவிதை கூட அப்படித்தான்
  இப்படி ஒரு நல்ல படைப்பைப் படித்து வெகு நாட்களாயிற்று
  மீண்டும் மீண்டும் படித்து ரசித்தேன்
  தொடர வாழ்த்துக்கள்
  >>>
  நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு
 17. நல்ல கவிதைப் பகிர்வு....

  அம்மா செல்லமான அப்பா செல்லம்... நல்ல தலைப்பும்...

  பதிலளிநீக்கு
 18. அப்பா..அழகான கவிதை விளக்கம்.
  அருமையாக இருக்கு ராஜி.

  பதிலளிநீக்கு
 19. சத்தியமான வார்த்தைகள் சகோ...பகிர்வுக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 20. யாருக்கும்
  கிடைக்காத
  தந்தை எனக்கு
  கிடைத்திருக்கிறார் என்று...,


  nice..

  பதிலளிநீக்கு
 21. தங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்.

  http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_18.html

  பதிலளிநீக்கு
 22. அன்பையும் கண்டிப்பையும் அழகாகக் கொடுக்க அப்பாவால் தான் முடியும். உடனே நேசத்தைச் சொல்லச் சொன்னீர்களே அது ஒன்றுதான் நிற்கும்.
  பிறகு வருந்திப் பயன் இல்லை.

  பதிலளிநீக்கு
 23. //அம்மா எத்தனை முறை
  திட்டினாலும்
  உரைத்ததில்லை..,
  உடனே..,
  உறைத்திருக்கிறது
  என்றேனும் அப்பா
  முகம் வாடும்போது...,//

  unmai..vaalthtukkal

  பதிலளிநீக்கு