Friday, May 01, 2015

அழுகண்ணி சித்தர் தவமிருந்த இடம் மறைமலைநகர் -புண்ணியம் தேடி ஒரு பயணம்

உடல் உழைபவர்களுக்கு நேரம் எது காலம் ஏது உழைப்புகான பலனை அடைவதுதான் உண்மையான உழைப்பாளர்கள் தினம் சகோக்கள் அனைவருக்கும் எனது இனிய உழைப்பாளர் தின வாழ்த்துக்கள் இனி நம்முடைய வெள்ளிக்கிழமை  ஸ்பெஷல் புண்ணியம்  தேடி ஒரு பயணம் கொஞ்ச நாளா போக முடியல ..என்னமோ இறைவன் அருளாலும் மற்றும் சகோதர  சகோதரிகளின் பிரார்த்தனைகளினாலும் மீண்டும் தொடங்கும் ஒரு வாய்ப்பு கிடைச்சு இருக்கு சரி பயணம் ரெடியாகியாச்சு எங்கே போலாம்ன்னு யோசிக்கும் போது  முதலில் ஒரு சித்தர் பெருமானின் சன்னதிக்குள் சென்று ஆசிகள் வாங்கிவிட்டு பின் பயணம் புறப்படலாம் என நினைத்து கொண்டு இருக்கும் பொழுது மறைமலைநகர் பக்கம் இருக்கும் திருகச்சூர் ஒவ்ஷத கிரி மலையில் அழுகண்ணி சித்தர் தவம் செய்த இடம் இருப்பதாகவும் அங்கே சென்று பிரார்த்திப்பவர்களுக்கு தங்களுடைய வேண்டுகோள் நிறைவேறுவதாகவும் அந்த இடத்தில ஒரு  வைப்ரேஷன் இருப்பதாகவும் ஒரு தகவல் வர நாங்களும் அந்த மலையில் இருக்கும் இடத்தை நோக்கி பயணத்தை தொடர்ந்தோம்
மறைமலைநகர் ன்னு சொல்கிறது திருகழுகுன்றதில் பிறந்த  பிரபல தமிழ் அறிஞரான பல்லாவரம் முனிவர்ன்னு அழைக்கப்பட்ட வேதாசலம் அவர்களது பெயர்ல இருக்கும் வேதம் எனபது மறைன்னும்  அசலம்ன்னு சொல்கிறது மலைன்னு அர்த்தம் கொண்டது இதை வச்சுதான் இந்த இடத்திற்கு மலைமலை நகர்ன்னு சொல்கிறாங்க .இதுதான் அந்த இடத்திற்கு செல்லும் மலை அடிவார பாதை நிறைய பகதர்கள் இங்கே சென்று வருகிறார்கள் போல் தெரிகிறது ஏன்னா இந்த இடத்தில நான்கு  செங்கல்களை வைத்து சூடம் ஏற்றி கும்பிட்டதற்கான அமைப்பில் செங்கல்களை வைத்து இருகிறாங்க எங்களை அழைத்து சென்ற வழிகாட்டி பக்தரும் இந்த இடத்தில சூடம் ஏற்றி வழிபட்டு சித்தரின் ஆசிகளை வேண்டி எங்களையும் கும்பிட சொன்னார் அங்கேயும் அந்த கற்களை சுற்றியும் நிறைய பேர் சூடம் ஏற்றி வழிபட்டதற்கான அடையாளங்கள் இருக்கு இந்த இடத்தினை சுற்றி வசிப்பவர்களும் இதைபற்றி தெரிந்தவர்களும் இங்கு வந்து வழிபட்டு செல்கிறார்கள் போலும் நாங்களும் பவ்யமாக சூடத்தை தொட்டு கும்பிட்டு மலையேற தொடங்கினோம்
இதுதான் அந்த மலைக்கு செல்லும் மலையடிவார பாதை நாங்கள் செருப்புகள் எல்லாம் மலைக்கு கீழேயே விட்டு சென்று விட்டோம் பாதை எனபது ஏதோ தார் ரோடு போட்டு இருகிறாங்கன்னு நினைச்சுராதீங்க ஒரு ஒத்தை வழிதடம் மனிதர்கள் கால்பட்டு பட்டு தடமாக மாற்றியிருக்கும் பாதை இருபக்கங்களிலும் செடிகளும் மரங்களும் பார்ப்பதற்கு அழகாக இருந்தன சென்னை போன்ற மாநகரங்களில் புகையும் தூசும் இல்லாம சுத்தமான காற்றை சுவாசிக்கும் ஒரு புண்ணியம் கிடைச்சு இருக்கு இந்த மலையை பற்றி சொல்லணும்னா ராம ராவண யுத்தத்தின் போது மயக்கமுற்ற வானர வீரர்களையும் ராம லக்குமனையும் காப்பாற்றுவதற்காக எடுத்து வரப்பட்ட சஞ்சீவி மலையின் மேல் இருந்து வீழ்ந்த மண் தான் இங்கே குன்றாகவும் மண்ணே மருந்தாகவும் இருக்கிற திருகச்சூர் மருந்தீஸ்வரர் கோவில் இருக்கும் இடமாகும் இது இந்த கோவிலை பற்றி தெரிந்து கொள்ளாதவர்கள் இங்கே போய் ஒரு எட்டு பார்த்துவிட்டு வந்திடுங்க
இந்த மலையில்தான் அதிபலா என்னும் மூலிகை தேவர்களுக்கு கிடைத்ததாக ஒரு ஐதீகம் உண்டு சரி யார் இந்த அழுகண்ணி சித்தர் அவரை பற்றி கொஞ்சம் பார்க்கலாம் இவர் 18 சித்தர்களில் ஒருவர் இவர் எழுதியுள்ள பாடல்கள் ஒப்பாரி போலவே அழுகின்ற ஓசையுடையதாயிருந்ததால் இவருக்கு அழுகணி சித்தர் என்று பெயர் ஏற்பட்டிருக்கலாம் என்றும்  அழுகணிச் சித்தரின்பாடல்களின் அழகையும், அணியையும், தமிழ் சொற்களின் இனிமையும் சுட்டி இருந்ததால் ஆரம்பத்தில் இவரை அழகணிச் சித்தர் என்று அழைக்க பட்டதாகவும் பின்னர் காலபோக்கில் அழகணிச் சித்தர் என்பதே அழுகணி எனமாறி இருக்கலாம்  என தமிழ் ஆராய்ச்சியாளர்கள்  சொல்கிறாங்க இவர் எழுதிய நூல்களில் மிகவும் சிறந்தது என சொல்லபடுவது வாசியோகம் காயசித்திமுறை முதலியவை மேலும் இவரது பெயரில் 32 கலித்தாழிசைகள் வழக்கத்தில் இருக்கிறது இவரது நூல்களில் பிரதானமாக தவத்தின் ஆற்றலால் கூற்றுவனைவென்று நெடிது வாழலாம் என்பது யோக முறையில் நெடிது வாழும் வகை என்றும் கூறுகின்றார்.
இந்த மலைக்கு மறைமலைநகர் மெயின் ரோடுல இருந்து ரயில்வே கேட் தாண்டி திருகச்சூர் மலையின் கிரிவலவல பாதைவழியாகவும் செல்லலாம்  இல்ல மறைமலைநகர் -பெரமனூர் வழியாகவும் செல்லலாம்.  இந்த மலையில் ஒரு நரிகுகை இருப்பதாகவும் அதில் ஓம் ஓம் ன்னு சப்தம் வருவதாகவும் சிலர் சொல்கின்றனர் அது இருக்கிறதா இல்லையான்னு இங்கே இருப்பவர்களுக்கு தான் தெரியும்  ஆன இந்த இடத்தில நிறைய சித்தர் பெருமக்கள் இருந்தா சொல்கிறாங்க இங்கே இருக்கும் சாமியார் கேட் என சொல்லபடுகிற இடத்தில அகத்திய முனிவர் இருந்ததா சொல்கிறாங்க அதில் இப்ப ஒரு அம்மன் கோவில் இருக்கு
இதுதான் அந்த இடத்தின் லேண்ட்மார்க் மலையில் கீழ் பகுதியில் இருந்து பார்க்கும் போது இந்த மரம் தெரியும் அதை நோக்கி நாம பயணம் செய்தா இந்த இடத்தை அடையலாம்
சித்தர் தவம் இருந்த இடம்ன்னு சொல்லபடுகிற இடத்திற்கு அருகிலேயே ஒரு பெரிய புற்று இருக்கு அதில் சிலர் மண் சட்டியில் பால் ஊற்றுகின்றனர் அந்த புற்றினை மஞ்சள் சேலை கொண்டு சுற்றி இருகிறாங்க அதைபற்றிய விவரம் தெரியவில்லை  அங்கேஆடு மேய்க்கும் ஒருவரிடம் இதுபற்றி கேட்டபோது அவருக்கும் தெரியல ஆன நிறையப்பேர் இங்கே வந்து வழிபாடு செய்கிறாங்கன்னு சொன்னார் அதேசமயம் பல வருஷங்களுக்கு முன்பு இதே இடத்தில ஒரு பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறினார் அதற்கு நடுகல் வைத்து வழிபடுகிரர்களா என்ற சந்தேகமும் வந்தது அதுபற்றி அவரிடம் கேட்டபோது அதுமாதிரி வழக்கம் எல்லாம் இந்தபக்கம் கிடையாதுன்னு சொன்னார்   எது எப்படி இருந்தாலும் நாங்க இப்ப மலை உச்சிக்கு வந்திடோம்
இதுதான் அழுகண்ணி சித்தர் தவம் இருந்த இடம் என்று சொல்லபடுகிற இடம் எங்கள் கூடவே வந்த வழிகாட்டி நண்பர் மாலையெல்லாம் சாற்றி இங்கே சூடம் பத்தியெல்லாம் ஏற்றி பயபக்தியுடன் வழிபட்டார் எங்களையும் வழிபட சொன்னார் சிறிது நேரம் இங்கே இருக்கும் கல்லில் அமர்ந்து தியானம் செய்ய சொன்னார் நாங்களும் தியானம் செய்தோம் அந்த இடத்தில ஏதோ ஒரு சக்தி இருப்பதை உணர முடிந்தது நல்ல வைப்ரேஷன் தெரிகிறது வழிகாட்டி நண்பர் எல்லோரும் எதாவது பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள் நிறைவேறும் என சொன்னார் நம்மை சுற்றி உள்ளவங்களும் உலக மக்கள் எல்லோருக்கும் ஒரு கஷ்டமும் வரகூடாதுன்னு பிரார்த்தித்து விட்டு மலையில் இருந்து கீழே இறங்க தொடங்கினோம்
எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு என்கிற வாக்குப்படி அந்த இடத்தில உள்ளவர்களிடம் விசாரித்து பின் செல்லுங்கள் வாழ்கை பயணத்தில் புதிரான புரியாத நீண்டபாதையில் பயணிக்கும் யாத்ரீகர்களில் நானும் ஒரு பயணிதான் மேலே இருந்து பார்க்கும் வல்லூராக இருந்தால் நமக்கு அந்த பாதையின் நெளிவு சுழிவுகள் தெரியும் ஆனால் நான் மண்ணில் ஊர்ந்து செல்லும் சிறு எறும்பு அதனால் எனக்கு தெரிந்த நான் பார்த்த சில விஷயங்களை இதில் எழுதுகின்றேன் அதன் உண்மை நிலையை உங்கள் அனுபவ அறிவுகொண்டு தெரிந்து கொள்ளுங்கள் அடுத்தவாரம் புண்ணியம் தேடி ஒரு பயணத்தில் சுந்தரர் அவதார ஸ்தலமான திருநாவலூரில் மீண்டும் சந்திக்கலாம்

16 comments:

 1. நல்ல தகவல் தொடரட்டும் உங்கள் பயணம்.....வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. நன்றி அமிர்தா ..

   Delete
 2. பயணங்கள் தொடரட்டும் சகோதரியாரே
  தம +1

  ReplyDelete
  Replies
  1. நன்றி ...சகோ ..கடவுள் அருளும் நேரமும் இருந்தால் நிச்சயம் பயணம் தொடரும் ...

   Delete
 3. அருமை! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. நன்றி ..உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் ....

   Delete
 4. Replies
  1. கருத்திட்டமைக்கு நன்றி

   Delete
 5. உங்களின் வலைப்பயணமும் தொடரட்டும் சகோதரி....

  ReplyDelete
 6. Replies
  1. உங்கள் வருகைக்கு நன்றி சகோ ...

   Delete
 7. நீண்ட நாட்களாக வலைப்பக்கம் காண வில்லையே? இந்த வார பயணக் கட்டுரை சிறப்பு! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. சில காரங்களால் வரமுடியவில்லை சகோ ..தொடர்ச்சியாக எழுத முடியவில்லை என்றாலும் தொடர்ந்து எழுதுவேன் ..நன்றி

   Delete
 8. அருமை ஐயா அருமை உங்கள் இறை பணி தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete