Monday, January 24, 2011

மணநாள் பரிசு..












ஏதோ
ஒரு பிறவியில்
எப்படியோ ஒரு தருணத்தில்..,
கண்டிப்பாய் தவம்
செய்து இருக்க வேண்டும் ..,
இப்பிறவியில் உன்னை
இனிய தோழியாய்
நான் பெறுவதற்கு ...,

பாசம் என்பதைத் தேடி
பலமுறை நான் ஏமாந்திருக்கிறேன்..,
வேஷமான பொய் அன்பினால்
மூழ்கி நான் களைத்திருக்கையில்...,

நிறைவான அன்பினால்
நீயும் அடிமை செய்திட்டாய்..,
உன் மணநாள் பரிசாக
என்ன தரலாம் என்று
மனதினுள் யூகித்து நின்றேன்...,??!!!!

இறுதியில் இப்படி வேண்டி நின்றேன்
இறைவனிடம்..,
என் ஆயுளில் பாதியை
பரிசாகத் தர சொல்லி...,

ஒருவேளை
இல்லைஎன்று சொல்லி அவன்
மறுத்தாலும் மறுப்பான்..,

என்னிடமிருந்து உனக்குத் தர‌
எவனிடம் கேட்க வேண்டும் ???
இதையே உன்
மண நாள் பரிசாக
பெற்றுக் கொள்ளேன் ??!! ?!!,

நீயும் விதிவிலக்கல்ல...,


நானென்றால்
கல்லறைக்கூட
கதவடைத்துக்கொள்ளும் போது ...??!!!
நீ மட்டுமென்ன
காதலுடனாக்
காத்திருக்கப் போகிறாய்??!!!

Thursday, January 20, 2011

காத்திருக்கிறேன்

சிதைந்த என் மனதுக்கு
விதைப்பாய் மகிழ்ச்சியை -என
உன்னில் நான் இணைந்த போதே
உணர்ந்துக் கொண்டேன் ...,

பாழிருட்டில் நான்
தவித்திருந்தும்..., என்
வெளிச்சத்தை உன்னிடமே
கொடுத்து வைத்திருந்தேன் ...,


பார்த்திருந்து மகிழ
பொழுது போக
பைத்தியமாய் மாற்றி
பதற வைத்தாய் என்னை..,


என் நினைவினில்,
நிஜத்திலும் நீ ??!!
உனக்கு என்னை தந்தேன்
என் மரணம் உனக்கு இனித்தால்
எனக்கும் அது இன்பமே..,

இழந்தவை
ஏதுமில்லை - இனி
இழப்பதற்கும்
ஏதுமில்லை
என்னிடம்...,

உயிரே,

உன்னை இழந்தப்பின்..,
என் உயிர் எனக்கெதற்கு??!!

உரிமையாய் உறவாய்
என்னோடு ஒன்றிய
உன் மனதை
கன்றிய
மனதாக்கினாய் ....??!!!

அதற்காக
நான்
சாகவும்
தயார்??!!
உனக்கு இனிக்குமா
என் மரணம்??!!!

காத்திருக்கிறேன்
உன் பதிலுக்காக.....

Friday, January 14, 2011

பொங்கல்

கார்த்திகை கழிய...,
மார்கழி மறைய....,
நம் வாழ்வில் ஒளி ஏற்றிட
தை என்னும் திருமகள்
பிறந்தாள்.





பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் தமிழ் வருட பிறப்பு , பொங்கல், மாட்டு பொங்கல் மற்றும் காணும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

Tuesday, January 04, 2011

மாறாக் காதல்

இனியவனே,

உன்னோடு பழகியது சரித்திரம்
பிரிவது சத்தியம்,
மறக்காததுதான் நிச்சயம்,

என்னை நீ விரும்புவதற்கும் ,
என்னை நீ பிரிவதற்கும் ,
ஆயிரம் காரணம் இருக்கலாம்.

ஆனால்,

நான் உன்னை பிரிவதற்கு
"மாறாத காதல்"
மட்டுமே காரணம் .

நீ என்னோடு இல்லாததால் ,
உயர்வானாலும், தாழ்வானாலும்
இது பிடித்தமான வாழ்வாகாது.

தப்பு தப்பாய் போட்ட வாழ்க்கை கணக்கில்
விடை மட்டும்
வித்தியாசமாவா வரப்போகுது...,??!


நினைவுகள் எப்போதும் சங்கீதம்தான்.
ஏன்
சங்கடமானவையும்கூடத்தான்..