Showing posts with label ஐயம். Show all posts
Showing posts with label ஐயம். Show all posts

Thursday, November 11, 2010

வாழ்வா? சாவா?













உன்னால்
ஏற்படும்
"குழப்பம்"
என்னை வாழவிடுவதில்லை.

உன் கண்களில் தெரியும்
"கருணை"
என்னை சாகவிடுவதுமில்லை

Sunday, October 10, 2010

கவிதைப் பெண்

யாரென்று சொல்ல
உனக்கும் தைரியமில்லை,
நானா என்று கேட்க
எனக்கும் நா
எழவில்லை...,
ப்ளீஸ்,ப்ளீஸ்,ப்ளீஸ்
சொல்லிவிடேன் உன்
கவிதைப் பெண் யாரென்று.??!!


Saturday, October 09, 2010

ஐயம்

உனக்கு பிடித்த
எல்லாம் எனக்குத் தெரியும்..,
என்னை உனக்குப்
பிடிக்குமா?
என்பதைத் தவிர்த்து.



Thursday, September 02, 2010

ஆசையும் வெறுப்பும்

என் கல்லறைக்குப் பக்கத்திலும்கூட
அவளுக்கு கல்லறை எழுப்பிவிடாதீர்கள்
அங்காவது நான் நிம்மதியாய் இருக்க வேண்டும்.
நன்றி,
yezhuththu.com

என் கல்லறைக்குப் பக்கத்திலாவது
அவளுக்கு கல்லறை எழுப்புங்கள்.
அங்காவது என்னருகில் அவள் இருக்கட்டும்.
இது நான்

Wednesday, September 01, 2010

என் மரணம்

நாளை நான் இறந்துவிடுவேன்..,
எனக்கு பிடித்த முற்றத்து மல்லியும்,
வேலியோரத்து செவ்வரளியும்
வழமைப் போல் பூக்கும்
இதை நானறிய மாட்டேன்....,

மரண ஓலம் வீட்டை நிறைக்கும்,
இன்னார் என்று அழைத்ததுப் போய்
"பொணத்தை எப்போ எடுப்பாங்களாம்"
உறவினர்களின் அன்பான விசாரிப்புகள் தொடரும்,
இதையும் நானறிய மாட்டேன்....,

மாமரத்து உச்சியினில் கூடுகட்டி வாழும்
தூக்கனாங்குருவியும்
ஒருகணம் எட்டிப்பார்த்துவிட்டு செல்லும்.
பின்பு, மறந்துவிடும்.
உறவுகள் அழும்,
ஒன்று, இரண்டு, மூன்று மாதங்கள்....,
முழுதாய் ஓட
என்னை மறந்து, என் முகமும்
மறந்துவிடும்.
கொஞ்சம் கொஞ்சமாய்
சுவற்றில் சித்திரமாய்
என் படமும் ஏறிவிடும்.
இதையும் நானறிய மாட்டேன்..,

ஓர் வருடம் ஆகி விட்டாலோ,
எல்லோரும் என்னை மறந்து விடுவர்.

ஆனாலும்,
எனக்காக எங்கோ தொலைதூரத்தில் ஆத்மார்த்தமாய்
இதயத்தின் வழியெல்லாம்
ஒன்றுசேர,
ஒரேயொரு ஜீவன் மட்டும்
எப்பவும் எனக்காக,
ஊமையாய் அழுதுகொண்டு இருக்குமா?


- கவிதையின் கரு மட்டும் தந்த முகம்
தெரியாத நண்பருக்கு நன்றி

Tuesday, August 31, 2010

விடையறியாக் கேள்வி?

நீ பயணித்த
அதே பேருந்தில்,
நானும் பயணித்து,
வீடு வந்து சேர்ந்து நெடு நேரமாகியும்,
என் கனவுகள் மட்டும் வீடு வந்து சேரவில்லை ...!!!!
யார் கண்டது??????
நீ கண்டு மீதம் வைத்துவிட்டுப் போன
கனவுகளுடன்(?)
இன்னும் அளவளாவிக்கொண்டிருக்கிறதோ? என்னவோ?