Showing posts with label . கவிதைகள். Show all posts
Showing posts with label . கவிதைகள். Show all posts

Saturday, October 27, 2012

உன்னை அறிந்தால்.....,


                                                      
கண்ணில் காண்பதெல்லாம்!!
கனவென்று நம்பாதே...,
காணாத கனவுகளும்!!
நனவாகிப் போகலாம்...,



நிகழ்கால நிழலில்,
 மட்டும் ஓய்வெடுக்க எண்ணாதே...,
எதிர்கால மர நிழலில்,
 மட்டும் ஓய்வெடுக்க எண்ணாதே...,
இறந்தக் கால தென்றல் காற்றின்...,
இதமான அரவணைப்பில் ஓய்வெடு....,



கண்களை மூடித் திறக்குமுன்..,
உன் கற்பனைகளை திறந்து விடு...,
பூக்களின் வாசனையை நுகர்வது தப்பில்லை..., 
அதிலுள்ள முட்களின் வேதனையை புரிந்துக் கொள்...,


புன்னைகையே மட்டுமே 
வாழ்க்கையல்ல...,
பூகம்பமும் வரும்..,
 எதிர் கொள்ள தயராகு!!


நீ விதைத்ததை...,
 நீயே அறுவடை செய்துக் கொள்ள்ள வேண்டும்...,
அன்று கொல்லாவிடினும்..., 
நின்றாவது கொல்லும்..., 
மாற்றான் துயரம் மட்டுமல்ல!!??
மதுவும், மாதுவும் கூடத்தான்.....,


மற்றவர் கண்களில் தெரிவது,
 கண்ணீரென்று மட்டும் எண்ணாதே...,
விஷமாவும், கேலியாகவும், 
விஷமமாகவும்..., ஏன்? உனக்கென
தோண்டப்பட்ட புதை குழியாவும் கூட இருக்கலாம்...,

உனக்கென ஒரு பாதை.....,
 உனக்கென ஒரு பயணம் .....,
உன்னோடு சில பயணிகள்....,
தேர்வு உன் கையில்!!??


இது நீ ”பிறந்த நாள்” அல்ல..,
உன்னை நீ நன்கு உணர்ந்த நாள்”,  ஆயின்...,
உன்னை எண்ணி பூரிப்பதில் 
தோழி நானும் ஒருத்தி உண்டு...,
  
பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்களுடன்...,  


Wednesday, September 05, 2012

பதில் சொல்வீர்களா சென்னை பதிவர் சந்திப்பு விழாக்குழுவினரே?!

                              
சாமி!  என் பொண்ணு ராஜி ஒரு வாரமா, ரொம்ப மகிழ்ச்சியா இருக்கா. சிரிச்சுக்கிட்டேயும் இருக்கா.

ஏம்மா! ஒரு பொண்ணு சந்தோஷமா இருக்குறது தப்பா?

ஐயோ சாமி! சந்தோசமா இருக்குறது தப்பில்ல. சகோன்னு சொல்றா. கமெண்ட்ன்னு சொல்றா. எங்க உறவுகள்ல இல்லாத பேர்களை சொல்லி அண்ணா, அம்மா, தாத்தான்னுலாம் சொல்றா. அதான் பயமா இருக்கு என்னன்னு பார்த்து சொல்லுங்க சாமி.

ம் ம் ம் புது புது பேர் சொல்லி புலம்புறங்களா? இது ஏதோ காத்து கருப்போட வேலைதான். அதை நான் ஓட்டிடுறேன் நீங்க பயப்படாதீங்கம்மா.

காளி,  நீலி, சூலி யாரு நீயி? எந்த ஊரு? ஏன் இந்த பொண்ணை பிடிச்சு இருக்கே?  ஒழுங்கு மரியாதையா சொல்லிடு. இல்லாட்டி உன்னை,,,,,

ம்  சொல்லிடுறேன்.என் பேரு பிளாக். நாந்தான் ராஜி உடம்புல இருக்கேன்.

இன்னாடா இது? ஒரு பொண்ணு உடம்புல செத்துப்போனவங்க ஆவி புகுந்துக்கும் இல்லாட்டி முனீஸ்வரன், காட்டேரி இதெல்லாம் புடிச்சு இருக்கு. நானும் ஓட்டியிருக்கேன். இதென்னது “பிளாக்”ன்னு புதுசா இருக்கே. விவரமா சொல்லு.

நான் கூகுள் வயத்துல பொறந்தவ. என் பேரு “பிளாக்”. 

ஓ அப்படியா!

பிளாக்ன்னா என்ன?

நான் ஒரு நோட்டு புத்தகம் போல, என்ன வேணும்னாலும் எழுதலாம், அரசியல், கதை, கவிதைன்னு எது வேணும்னாலும் எழுதலாம்.

ஓ, நீ வெளிநாட்டு பேயா?

ம்ம் நான் எங்கெங்கோ சுத்திட்டு தமிழ்நாட்டுக்கு வந்து பலப்பேரை பிடிச்சு இருக்கேன்.ராஜியையும் பிடிச்சுக்கிட்டேன். அந்த பலபேருல சென்னையில வசிக்குறவங்கலாம் ஒரு மீட்டிங்க் போட்டு, தமிழ்ல யார்லாம் பிளாக் எழுதுறாங்களோ, அவ்ங்கலாம் சந்திக்கலாம்ன்னு முடிவு பண்ணி போன ஞாயிற்றுக்கிழமை சந்திச்சுக்கிட்டாங்க. அதுல ராஜியும் கலந்துக்கிட்டா. அங்க பார்த்த சில காமெடியான விசயங்களை பார்த்துதான் சிரிச்சுக்கிட்டே இருக்கா.

ஓ அப்பிடியா?! என்ன நடந்துச்சுன்னு சொல்லு இல்லை உன்னை பாட்டில்ல அடைச்சு வச்சு கடல்ல தூக்கி போட்டுடுவேன்.

முதல்ல   ”தூரிகையின் தூறல்” மதுமதியை ஒரு பாடலாசிரியர் போல தமிழ்த்தாய் வாழ்த்து பாட சொன்னா, நடிகர் போல பாட்டுக்கு நடிச்சு காட்டுறார். மோட்டுவளையை நிமிர்ந்து பார்க்குறதையும், கைகட்டி கன்னத்தை தாங்குறதையும் பார்த்து அமைதியா வாழ்த்துப்பா பாட வேண்டிய நேரத்துலயும் ராஜி சிரிச்சதையும்,

                                                  
 வரவேற்புரையை நிகழ்த்த மண்டபத்துல இருக்குற சகோ “வீடு திரும்பல்” மோகன் குமாரை கூப்பிட சொன்னா, சந்திப்புக்கு வரவே வராத  சகோ “வீடு”சுரேஷ்குமாரை  கூப்பிட்டு, தனக்கு தானே பல்ப் கொடுத்துக்கிட்ட சகோ மதுமதியை நினைச்சும்...,

                                        

”சென்னை பித்தன்” ஐயாவை பத்தி பேச, மாங்கு மாங்குன்னு உக்காந்து, இத்தனை நாளா யூஸ் பண்ணாத மூளையை யூஸ் பண்ணி  எழுதி குடுத்தா, என்னமோ ஸ்கூல்ல மனப்பாடப்பகுதி ஒப்புக்கிற மாதிரி, ஏற்ற இறக்கம் இல்லாம, பெரியங்கலாம் இருக்காங்கன்ற  பதட்டத்துல,  ஒப்பிச்சுட்டு வந்த தூயவை நினைச்சும்...,

                                            


புலவர் ராமானுஜம் ஐயாவை பற்றி சௌந்தர்,   குறிப்புரை  வாசிக்கும்போது, ஒரு நந்தவனத்தை அறிமுகப்படுத்த, ஒற்றை ரோஜா வந்திருக்குன்னு சௌந்தர் சொல்ல,  “ஒற்றை ரோஜா, அதுத்வும் கருப்பு ரோஜா”ன்னு சொன்னா இன்னும் நச்சுன்னு இருக்கும் அங்கிள்ன்னு தூயா அடிச்ச கமெண்டை கேட்டு ராஜியால் சிரிப்பை அடக்க முடியாம சிரிச்சதையும்..

கவிதை வாசிப்புக்குன்னு மதியத்துக்கு மேல நேரம் ஒதுக்கியும், அடமா, கவிதைப்போல ஏதோ ஒண்ணை வாசிச்சு ,  ராஜி போல அறிவிலிகளுக்கு புரியாமலே சுய அறிமுகம் செஞ்சுக்கிட்ட “வசந்த மண்ட்பம்” மகேந்திரனை நினைச்சும் சிரிப்பை அடக்க முடியலை.

என்ன புடவை கட்டுறது? மேட்சிங்கா என்ன ஜுவல்ஸ் போடுறதுன்னும், மேடையில் சுய அறிமுகத்தின் போது எப்படிலாம் பேச போறேன்னு டிரையல் பார்க்குறேன்னு  ஒரு வாரமா பிள்ளைகளை கொலையா கொண்ணும், மேடையில போய் நிண்ணு மைக்கை கையில வாங்கி என் பேர் ராஜி, என் பிளாக் பேரு “காணாமல போன கனவுகள்”ன்னு சொல்லி மேற்கொண்டு என்ன பேசறதுன்னு தெரியாம “ஙே”ன்னு முழிச்சுக்கிட்டு நின்னதையும்,

என்னதான் விழாக்குழுவுல  மெம்பரா இருந்தாலும், ரெண்டு இலையில் சாப்பிட்ட “கவிதைவீதி” சௌந்தரையும் (இல்லைன்னு சகோதரர் மறுக்கலாம். அதுக்கு ஆதாரம் இருக்கு. தூயா தன் மொபைல்ல படம் எடுத்திருக்கா. அவ வீட்டுக்கு வந்ததும் வெளியிடப்படும்),

                                                
                                       
பொதுவா கவியரங்கம்ன்னா சமூக அவலங்களை, வரதட்சனை, காதல், பிரிவு, நட்பை வெச்சு கவிதை எழுதுவாங்க. ஆனா முதல் முறையா, செலவே இல்லாம கல்யாண இன்விடேஷனை ”கவிதை”ன்ற பேருல வாசிச்சு, எல்லாரையும் இன்வைட் பண்ணிட்டு போன மயிலனை பற்றியும்தான் நினைச்சு சிரிச்சுக்கிட்டு இருக்கா .

ஓ ஓ இவ்வளவு நடந்திருக்கா? அப்ப சிரிக்க வேண்டியதுதான். சரி நீ எப்போ ராஜியை விட்டு போவே? மட்டன் பிரியாணி தரவா? சிக்கன் சுக்கா தரவா?

ம்ஹூம் போக மாட்டேன்?

என்னாது போக மாட்டியா?! ஏன்?  திரட்டிகள்ல முதல்ல வந்தா போவியா? இல்ல லட்சம் ஹிட்ஸ் குடுத்தா போய்டுவியா?

ம்ஹூம் அப்பவும் போக மாட்டேன். வருசத்தொரு முறை இதுப்போல நடத்துறோன்னு விழாக்குழுவினர்லாம் வந்து கற்பூரம் அடிச்சு சத்தியம் செய்ய சொல்லு. அப்போதான் போவேன்.

அவ்வ்வ்வ்வ்வ் ஏன் இப்படி என்னை சதாய்க்குறே?! அது என் கையில இல்லியே , விழா குழுவினர்தான் இதுக்கு பதில் சொல்லனும்...,

Tuesday, February 14, 2012

கிளிக்கு றெக்கை முளைச்சுட்டுது..., அது ஆத்தை விட்டு பறந்து போய்ட்டுது....,

 பாலூட்டி வளர்த்த கிளி 
பழம் கொடுத்து பார்த்த கிளி
 நான் வளர்த்த பச்சை கிளி 
இன்று வந்ததம்மா கச்சேரிக்கு 
செல்லம்மா, என் செல்லம்மா..., 

                                     http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/ec/Ara_ararauna_Luc_Viatour.jpg/220px-Ara_ararauna_Luc_Viatour.jpg
      என்னங்க காதலர்தினம் அதுவுமா சோகப்பாட்டு பாடுறேன்னு பார்க்குறீங்களா? இன்னிக்கு எங்க வீட்டுல பாகப்பிரிவினை நடந்து என் பெரிய பொண்ணு தூயா, புது வீடு பார்த்து  தனிக்குடித்தனம் போய்ட்டா. இந்த  வீட்டு வேலைல பாதி வேலை செய்யுறது அவதான்.., இப்போ இந்த வேலைக்குலாம் எனக்கு யார் ஹெல்ப் பண்ணுவா.

     என்ன ஏதுன்னு சொல்லாம இப்படி புலம்புனா எப்படிம்மா? பாப்பாவோட கோவத்துக்கு என்ன காரணம்ன்னு சொன்னால் நாங்க போய் சமாதான படுத்துறோம்ன்னு நீங்க எனக்கு ஆதரவா சொல்றதுனால...., (சொல்வீங்கதானே!?) என் சோக கதையை உங்க கிட்ட சொல்றேன்...,

       நான் பிளாக் எழுத ஆரம்பிச்சு கொஞ்ச நாள் வரை ரேங்க், விசிடர்ஸ் டுடே, ஓட்டு இதை பத்தியெல்லாம் கவலை படலை. திரட்டிகளில் இணைச்சாதான் நம்ம பதிவு அதிக பேர்களை போய் சேரும்ன்னு தம்பி சசியோட வந்தேமாதரம் பிளாக்ல படிச்சு தெரிஞ்சுக்கிட்டு அதே போல திரட்டிகளில் சேர்ந்து பதிவுகளை இணைக்க ஆரம்பிச்சேன்.

       ஒருநாள் தற்செயலா தமிழ்மணம் ரேங்க் எம்பளம் என் கண்ணில் பட்டிச்சு. நம்ம பிளாக் எந்த இடத்துல இருக்குன்னு பார்க்கலாம்ன்னு ஆசைப்பட்டு அங்கே கிளிக் பண்ணேன்.   ”ஏழரை” எங்க வீட்டு வாசல்ல நின்னு என்னை உற்று பார்ப்பது தெரியாமல்...,  
 
    638வது இடத்துல என் பிளாக் இருந்துச்சு. அடடா, நாம எழுதுற லட்சணத்துக்கு 638வது இடத்துல இருக்கோமேன்னு பெருமை தாங்லை. எப்பவாவது போய் பார்ப்பேன்.  என் பிளாக் ஆணியடிச்ச மாதிரி அங்கேயே இருந்துச்சு.

   ஒருநாள் போய் பார்க்குறேன் என் பிளாக் 188வது இடத்துல இருக்கு.  ”ஏழரை” சேர் போட்டு என்கூடவே கம்ப்யூட்டர் பக்கத்துல உக்காந்து இருக்குறது தெரியாமல் சந்தோசப்பட்டுக்கிட்டேன். தினமும் போய் ரேங்க் பார்க்க ஆரம்பிச்சேன். காலையில எழுந்ததும் பல்லு கூட வெளக்காமல் தமிழ்மணம் ரேங்க் பார்த்து என் பிள்ளைங்ககிட்ட இன்னிக்கு என் பிளாக் 105, 98 ,78ன்னு கவுண்ட் டவுன் சொல்ல ஆரம்பிச்சேன். என்னால பார்க்க முடியாத நாளில் பாப்பாவை பார்க்க சொல்வேன். 
   
     இதனால செம கடுப்பான என் பொண்ணு பிளாக் ஆரம்பிச்சு ஒன்றரை வருசம் கழிச்சுதான் இந்த 41வது இடத்துக்கு வந்திருக்கே..,இதுவே உன் இடத்தில் நான் இருந்தால் எண்ணி ஆறே மாசத்தில் தமிழ்மணத்துல உன்னிடத்துக்கு வந்திருப்பேன்னு என்கிட்ட சவால்விட்டு இன்னிக்கு தேவதையின் கனவுகள்ன்னு தனியா பிளாக் ஆரம்பிச்சிருக்கா. சமாதானப்படுத்த நினைக்கும் நாட்டாமைக்காரர்லாம் அங்க போய் பேச்சு வார்த்தை நடத்துங்க.
 
                                          
  என் நண்பனோட மகனுக்கு  இன்னிக்கு முதல் பிறந்த நாள்.  

கைகளாலே அரவைணத்து
கால்களாலே உலகம் சுற்றி
இசையினிலே மெய்மறந்து
கவிதையாக வாழ்ந்து காட்டி
அடக்கத்திலே சிறந்து விளங்கி
கடமையிலே தைலச் சிறந்து
அன்பினாலே சுடர் ஏற்றி
பிறருக்கும் பகிர்ந்தளித்து
பல்லாண்டு காலம் நீ வாழ்க 
என அவனை வாழ்த்திக்குறேன்.
                            
                 
டிஸ்கி: இன்னிக்கு காதலர் தினமாம். இன்னிக்கு எதாவது பதிவு போடலைன்னா சாமிக்குத்தம் ஆகிடும்ன்னு  சன் நியூஸ்ல சொன்னதால  எதாவது பதிவு போடலாம்ன்னு பார்த்தால்..., காதல் பண்ணுங்கன்னும், காதல் பண்ணாதீங்கன்னும், காதலின் நன்மை தீமைகள்ன்னும், காதல் கவிதைன்னு பதிவு போட்டு  “காதல்”ன்ற அப்பாவி ஜீவனை இம்சை பண்ணிக்கிட்டு இருக்காங்க. இந்த லட்சணத்துல  நானும் எதாவது சொல்லி இம்சிக்க வேணாம்ன்னு முடிவெடுத்து வாழ்த்துக்களை மட்டும் சொல்லிக்குறேன்.



Tuesday, December 06, 2011

அன்பு தம்பிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...,

திருமலையில் வாழும் ஏழுமலையானின் அருளால் பிறந்தவன் நீ!
சகோதரிகளுக்கு சிறந்த  காவலன் நீ!
வீட்டில் போடும் செல்ல சண்டையின் வேட்டைக்காரன்நீ!
உடன் பழகும் பிள்ளைகளுக்கு உற்ற நண்பன் நீ!
நீ பயிலும் பள்ளியில் மாண்புமிகு மாணவன் நீ!
விளையாட்டில் கில்லிநீ!
சச்சினின்தீவிர ரசிகன் நீ!
சில சமயங்களில் மொக்கை போடுவதில் “திருப்பாச்சி அருவாள் நீ!
சைக்கிள் ஓட்டும் வேகத்தில் “சுறா நீ
வீட்டில் அனைவருக்கும் அழகிய தமிழ் மகன்  நீ!
எதையும் “நேருக்கு நேர் எதிர் கொள்வதில் வேலாயுதம் நீ
எங்களுடன் ஒன்ஸ்மோர் அடுத்த ஜென்மத்திலும் பிறக்க வேண்டும்.
 
 சகோதரன் என்பவன் குழந்தை பருவத்தின் ஒரு பகுதி.  
அவ்வரம் அமைய பெற்றவர்கள்
யாரும் அதை இழக்ககூடாது. 
சகோதரிகள் எங்களுக்காக  நீ 
பிறந்ததற்கு எங்கள்  நன்றி! 
 
சகோதரன் என்பவன் மிகப்பெரிய பரிசு. 
உன்னை எங்களுக்கு சகோதரனாய் தந்ததற்கு
கடவுளுக்கு எங்கள் நன்றி.
உன்னைப் போன்ற சகோதரன் உலகில் வேறு யாருக்கும் கிடைக்கவில்லை.

சகோதரன் என்பவன் ஒரு 
உற்றத் தோழன் வாழ்க்கையில்,
உன்னை எங்கள் சகோதரனாய் 
அடைந்ததற்கு பெருமைக் கொள்கிறோம்.
 
டிஸ்கி: அம்மா கொஞ்சம் பிஸி என்பதால் எங்கள் அன்பு சகோதரன் பிறந்த நாள் பதிவை நாங்கள் போடுகிறோம். அனைவரும் அவனை வாழ்த்த வேண்டுகிறோம். அவனுக்கு இது 12வது பிறந்த நாள். அவன் விஜயின் ரசிகன். அதனால் 12 வரிகளில், விஜய் படம் வருமாறு கவிதை எழுத முயற்சி செய்தோம்.
இப்படிக்கு 
தூயா, 
இனியா.


Tuesday, August 31, 2010

சிற்றின்பம்

சிர்ரின்பன் என்பது
சிறிய இன்பம்
என்று பொருள் படுவதில்லை,

அதற்காக,
எவ்வளவு சிறுமையும்
தாங்க வேண்டும்
என்றே பொருள் கொள்ள வேண்டும்.

எங்கோ படித்தது