Tuesday, March 08, 2011

பெண்ணாய் பிறந்த பொற்குவியல்

என் பெரிய பொண்ணு தூயா பிறந்த போது மனசுக்குள் ஒரு சின்ன வருத்தம், ஆண் பிள்ளையை எதிர்பர்த்திருந்தபோது பெண்பிள்ளை பிறந்ததால் வந்த சின்ன ஏமாற்றம்தான் அது.

ஆனால், அவள் அழகும், துறுதுறுப்பும் என்னை தேற்ற ஆரம்பித்தது.,
மற்ற குழந்தைகளைப்போல் அங்கும் இங்கும் ஓடியாடி கிழே விழுந்து என்னை தவிக்க விட்டதில்லை.
சட்டென்று எதையும் கிரகித்த்துக் கொண்டு படிப்பிலும் படு சுட்டி.
எனக்கு உடல்நிலை சரியில்லாதபோது, என்னருகிலிருந்து தாதியாய் பணிவிடைசெய்து, தாயாய் உடன்பிறந்தோரை கவனித்து கொண்டவள்.
நான் மனம் சோர்ந்திருக்கும் வேளையில் தோழியாய் மாறி ஆறுதல்சொல்பவள்..,
நான் கண்ணால் உரைப்பதை புரிந்துக் கொண்டு சூழ் நிலைக்கேற்ப நடந்து கொள்பவள்.
இப்படி பல பல ரூபங்களில் தேவதையாய் காட்சி தருபவள், சட்டென குழந்தையாய் குறும்பு செய்து குட்டி சாத்தானாய் மாறி வெறுப்பேற்றுவாள்.


(அது வேற ஒன்னுமில்லீங்க. நான் இன்று எங்கள் school ல நடந்த sports day ல 3 பதக்கமும், Super Senior Champion பட்டமும் வாங்கி வந்துட்டேனாம். அதுக்குதான்இத்தனை feelings- தூயா )
அவளுக்காக ஒரு கவிதை:
அழகு பாதமோ மாவிலை கொழுந்து,
கண்களோ வர்ணிக்க முடியா நட்சத்திரங்களின் ஜொலிஜொலிப்பு,

உலகை மறந்தேன், என்னையும் மறந்தேன்,
முடிகள் அனைத்தும் பஞ்சு மிட்டாயின் மென்மை,
நேர்த்தியான நெற்றியோ இளம்பிறை,
அழகு உதடுகள் குவித்து வரும் ஓசை குழலுக்கு ஈடானது,

ரோஜா மலரும், தாமரை மலரும் தோற்றது
என் மகளின் நிறம் கண்டு,

கையும், காலும் அல்லிதண்டு,

அசைவில் ஒரு அற்புதமும் உண்டு,

மகளாக அவள் பிறக்கவில்லை,
உண்மையில் பெண்ணாக பிறந்த பொற்குவியல்,

மருத்துவராக வேண்டி தவமிருக்கும் தேவதை...!
டிஸ்கி: மகளிர் தினத்திற்காக வேறொரு கவிதையை எழுதி வைத்திருந்தேன். ஆனால், பரிசுகள் பல பெற்று, பெண்ணின் பெருமையை என் மகள் நிலைநாட்ட முனையும்போது, நான் மகளிர் தினம் கொண்டாட இதைவிட வேறொரு காரணம்தோன்றவில்லை.

மகளிர் அனைவருக்கும் "உலக மகளிர் தின வாழ்த்துக்கள்"

23 comments:

 1. பதிவு அருமை.. பெண் பிள்ளைகளின் மகத்துவத்தை பிரதிபலிக்கும் பதிவு ......

  ReplyDelete
 2. பெண்மையை போற்றுவோம்...

  ReplyDelete
 3. ம்ம்ம்.., உங்களுக்கு நல்ல., புத்திசாலி
  பொண்ணு கிடைச்சிருக்கு.. அதான்
  நீங்க ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க..

  ஆனா உங்க அம்மா ஏன் சோகமா
  இருக்காங்க..? அவங்களுக்கு இந்த மாதிரி
  ஒரு பொண்ணு கிடைக்கலையோ.!?# டவுட்டு.

  சமத்து பொண்ணுக்கு வாழ்த்துக்கள்.
  &
  மகளிர் தின வாழ்த்துக்கள்..!!

  ReplyDelete
 4. உலக மகளிர் தின வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. இதுவே நீங்க சென்னைல இருந்திருந்தா ஒரு வேலை சாப்பாடை தேத்திருக்கலாமே# வடை போச்சே

  ReplyDelete
 6. உங்க பொண்ணுக்கு என்னோட வாழ்த்துக்கள்

  ReplyDelete
 7. விடுங்க விடுங்க உங்களால முடியாததை பொண்ணு செஞ்சிருக்கா... இதுக்கா ஃபீல் பண்ணுறது....

  ஸ்வீட் எடு! கொண்டாடு....

  ReplyDelete
 8. இக்பால் செல்வன் கூறியது...

  பதிவு அருமை.. பெண் பிள்ளைகளின் மகத்துவத்தை பிரதிபலிக்கும் பதிவு ....
  ///////////////////////
  நன்றி தங்கள் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும்

  ReplyDelete
 9. வேடந்தாங்கல் - கருன் கூறியது...

  பெண்மையை போற்றுவோம்.
  >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
  நன்றி தங்கள் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும்

  ReplyDelete
 10. வெங்கட் கூறியது...

  ம்ம்ம்.., உங்களுக்கு நல்ல., புத்திசாலி
  பொண்ணு கிடைச்சிருக்கு.. அதான்
  நீங்க ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க..
  >>>>>>>>>>>>>>>>>>>.


  சமத்து பொண்ணுக்கு வாழ்த்துக்கள்.
  &
  மகளிர் தின வாழ்த்துக்கள்..!!
  >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
  Thanks

  ReplyDelete
 11. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...

  உலக மகளிர் தின வாழ்த்துக்கள்
  >>>>>>>>>>>>>>>>>>>>>>>
  நன்றி

  ReplyDelete
 12. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...

  உங்க பொண்ணுக்கு என்னோட வாழ்த்துக்கள்
  >>>>>>>>>>>>>>>>>>
  கண்டிப்பா

  ReplyDelete
 13. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...

  இதுவே நீங்க சென்னைல இருந்திருந்தா ஒரு வேலை சாப்பாடை தேத்திருக்கலாமே# வடை போச்சே
  >>>>>>>>>>>>>>>>>>>>>>>>
  God is great

  ReplyDelete
 14. அருண் பிரசாத் கூறியது...

  விடுங்க விடுங்க உங்களால முடியாததை பொண்ணு செஞ்சிருக்கா... இதுக்கா ஃபீல் பண்ணுறது....
  >>>>>>>>>>>>>>>>>>>
  இது மகிழ்ச்சியான feelings

  ஸ்வீட் எடு! கொண்டாடு....

  கண்டிப்பா

  ReplyDelete
 15. மகளிர் தின வாழ்த்துக்கள்..!!
  உங்கள் மகளின் பெயர் அழகாக இருக்கிறது.
  அருமையான பதிவு. உங்கள் செல்ல மகளுக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 16. >>>இப்படி பல பல ரூபங்களில் தேவதையாய் காட்சி தருபவள்,


  எல்லா குழந்தைகளும் அம்மாவுக்கு தேவதையே...

  ReplyDelete
 17. தூயா- நான் கேள்விப்படாத பெண்பால்பெயர்.. தூயவன் தான் தெரியும்... எனிவே வாழ்த்துக்கள்

  ReplyDelete
 18. @ வெங்கட்

  ஒரு புத்திசாலிக்குத்தான் இன்னொரு புத்திசாலி வாரிசு வரும்..

  ReplyDelete
 19. அம்பிகா கூறியது...

  மகளிர் தின வாழ்த்துக்கள்..!!
  உங்கள் மகளின் பெயர் அழகாக இருக்கிறது.
  அருமையான பதிவு. உங்கள் செல்ல மகளுக்கும் வாழ்த்துக்கள்.
  >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
  நன்றி தங்கள் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும்

  ReplyDelete
 20. சி.பி.செந்தில்குமார் கூறியது...

  >>>இப்படி பல பல ரூபங்களில் தேவதையாய் காட்சி தருபவள்,


  எல்லா குழந்தைகளும் அம்மாவுக்கு தேவதையே...
  /////////////////////
  Correct

  ReplyDelete
 21. சி.பி.செந்தில்குமார் கூறியது...

  தூயா- நான் கேள்விப்படாத பெண்பால்பெயர்.. தூயவன் தான் தெரியும்... எனிவே வாழ்த்துக்கள்.
  >>
  @ வெங்கட்

  ஒரு புத்திசாலிக்குத்தான் இன்னொரு புத்திசாலி வாரிசு வரும்..
  ............
  Thanks

  ReplyDelete
 22. தூயா விற்கு வாழ்த்துக்கள்,
  வாழ்க வளர்க

  ReplyDelete
 23. உண்மையில் பெண்ணாக பிறந்த பொற்குவியல்,
  மருத்துவராக வேண்டி தவமிருக்கும் தேவதை...!//
  கனவு நனவாக இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
  வாழ்க வளமுடன்.

  ReplyDelete