வியாழன், மார்ச் 10, 2011

சுயம் தொலைத்தவள்..,


தட்டு, தடுமாறி
நடைபயிலும்போது...,
பெற்றோருக்கு,
"செல்ல மகளாய்"...,

விளையாட்டாய், கல்வியை
பெறும்போது..,
அண்ணனுக்கு,
"அடங்கிய தங்கையாய் "..,

கல்வியுடன், இளமையும்
தலை நீட்டும்போது...,
காதலனுக்கு,
"அன்பு காதலியாய்"...,

இளைமையுடன், வாழ்வின்
ருசியறிய முயலும்போது...,
கணவனுக்கு,

"ஆசை மனைவியாய்"...,

வாழ்வின் ருசியுடன், பொறுப்பும்
எட்டிப் பார்க்கும்போது..,
பிள்ளைகளுக்கு,

"பொறுப்பான தாயாய்"...,

பொறுப்புடன், பக்குவமும்
கைவரும்போது...,
புகுந்த வீட்டினருக்கு,

"பொருத்தமான மருமகளாய்"..,

பக்குவத்துடன், பொறுமையும்
நிறைந்திருக்கும்போது..,
மருமகபெண்ணுக்கு,

"கனிவான மாமியாராய்"..,

பொறுமையுடன், அனுபவமும்
சேரும்போது ...,
பேரபிள்ளைகளுக்கு,

"கண்ணியமான பாட்டியாய்"..,

அனுபவத்துடன், முதுமையும்,
மூப்பையும் கண்டு அஞ்சும்..,
இணைக்கு..,

"தோழமையுடனான தாதியாய்"...,

மூப்புடன், மரணம்
நெருங்கும் தருவாயில்..,
தனிமையில்,

மெல்ல திரும்பி பார்க்கிறேன்...,


"நான் எங்கே" என்ற
கேள்விக்கு..,

"பெருமூச்சே ".
பதிலாய் வந்து முகத்திலறைகிறது.?!!


டிஸ்கி: இந்த கவிதையைதான் மகளிர் தினத்துக்கு பதிவிடலமினு இருந்தேன். ஆனால், என் மகள் பரிசு பல பெற்றதால் அவளுக்கு ஒரு கவிதையை பரிசளிக்க வேண்டி முந்தைய பதிவு.

31 கருத்துகள்:

 1. ரமேஷ் கூறியது,
  சரிங்க பாட்டிமா.
  >>
  சரிங்க பேராண்டி

  பதிலளிநீக்கு
 2. உங்கள் மகளுக்கு வாழ்த்துக்கள்.

  எனது வலைபூவில் இன்று:தனபாலு...கோபாலு.... அரட்டை ஒண்ணு.

  பதிலளிநீக்கு
 3. தமிழ்வாசி - Prakash கூறியது...

  உங்கள் மகளுக்கு வாழ்த்துக்கள்.
  >>>>>>>>>>>>>>>>
  தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி. தங்கள் வாழ்த்தை என் மகளிடம் கண்டிப்பய் சொல்கிறேன்.

  பதிலளிநீக்கு
 4. // சரிங்க பாட்டிமா.. //

  ஆமா அந்த அங்கிள் ஏன் உங்களை
  பாட்டிம்மான்னு கூப்பிடறாங்க..?

  பதிலளிநீக்கு
 5. வெங்கட் கூறியது...

  // சரிங்க பாட்டிமா.. //

  ஆமா அந்த அங்கிள் ஏன் உங்களை
  பாட்டிம்மான்னு கூப்பிடறாங்க..?
  /////////////////////////
  சின்ன புள்ள உனக்கு சொன்னா லாம் புரியாது. உன் level க்கு A for apple, B for Boy தான். அதை பையன் கிட்ட சன்டை போட்டு வாங்கி படிங்க.

  பதிலளிநீக்கு
 6. //மூப்புடன், மரணம்
  நெருங்கும் தருவாயில்..,
  //

  இது ஓவர்

  மற்றபடி கவிதை அருமை

  பதிலளிநீக்கு
 7. உங்கள் மகளுக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 8. உங்கள் மகளுக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 9. ஆதிரை கூறியது...

  //மூப்புடன், மரணம்
  நெருங்கும் தருவாயில்..,
  //

  இது ஓவர்

  மற்றபடி கவிதை அருமை


  >>>>>>>>>>>>>>>>>
  எது எண்பது வயதில் மூப்பும், மரணமும் ஓவரா?

  பதிலளிநீக்கு
 10. சி.பி.செந்தில்குமார் கூறியது...

  பாவம் வெங்கட்...ஹா ஹா
  >>>>>>>>>>>>>>..
  யார் ப்ளாக்குனே தெரியாம இருக்கீங்க‌ளா

  பதிலளிநீக்கு
 11. ஆர்.கே.சதீஷ்குமார் கூறியது...

  good
  >>>>>
  உங்கள் மகளுக்கு வாழ்த்துக்கள்.
  >>>>>>>>>>>>>>>>>
  தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி. தங்கள் வாழ்த்தை என் மகளிடம் கண்டிப்பய் சொல்கிறேன்.

  பதிலளிநீக்கு
 12. பெண்களின் மொத்த உருவத்தையும் உருவகம் படுத்தி அசத்தியுள்ளீர்கள்

  பதிலளிநீக்கு
 13. "குறட்டை " புலி கூறியது...

  பெண்களின் மொத்த உருவத்தையும் உருவகம் படுத்தி அசத்தியுள்ளீர்கள்
  >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
  தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 14. "நான் எங்கே" என்ற
  கேள்விக்கு..,
  "பெருமூச்சே ".
  பதிலாய் வந்து முகத்திலறைகிறது.?!!
  TRUE.
  மகளுக்கு வாழ்த்துக்களும்,பாராட்டுக்களும்.

  பதிலளிநீக்கு
 15. பெண்ணின் மொத்த வாழ்வியலையும் ஒரு கவிதையில்
  அடைத்துவிட்டாயடி ராஜி. நம் மகளுக்கு என்னுடைய வாழ்த்துக்களை சொல்லிவிடு.
  தோழி
  பிரீத்தி

  பதிலளிநீக்கு
 16. இந்த பிளாக்கோட வடிவத்தை எங்கேயோ பார்த்திருக்கேனே.. இருங்க. எதுக்கும் என் பிளாக் போய் பார்த்துட்டு வர்றேன்.. ஹா ஹா

  பதிலளிநீக்கு
 17. மூச்சுவிட கூட நேரமின்றி வாழ்ந்தவளுக்கு
  கடைசியில் ஒரு பெருமூச்சு விடவாவது நேரம் கிடைத்திருக்கிறதே..!
  வறண்ட புன்னகை மட்டுமே வருகிறது உதடுகளில்..

  பதிலளிநீக்கு
 18. மூச்சுவிட கூட நேரமின்றி வாழ்ந்தவளுக்கு
  கடைசியில் ஒரு பெருமூச்சு விடவாவது நேரம் கிடைத்திருக்கிறதே..!
  வறண்ட புன்னகை மட்டுமே வருகிறது உதடுகளில்..

  http://karadipommai.blogspot.com/

  பதிலளிநீக்கு
 19. வாழ்த்துக்கள்...
  தொடர்ந்து வருவேன்..

  பதிலளிநீக்கு
 20. இராஜராஜேஸ்வரி கூறியது...

  "நான் எங்கே" என்ற
  கேள்விக்கு..,
  "பெருமூச்சே ".
  பதிலாய் வந்து முகத்திலறைகிறது.?!!
  TRUE.
  மகளுக்கு வாழ்த்துக்களும்,பாராட்டுக்களும்.
  >>>>
  தங்கள் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி. தங்கள் வாழ்த்தையும், பாராட்டையும் மகளிடம் சேர்ப்பித்துவிடுகிறேன்.

  பதிலளிநீக்கு
 21. உங்க தளத்துல நான் புதுசாதான் வாறேனோ...???

  பதிலளிநீக்கு
 22. //நான் எங்கே" என்ற
  கேள்விக்கு..,
  "பெருமூச்சே ".
  பதிலாய் வந்து முகத்திலறைகிறது.?!!//

  அருமையா வித்தியாசமாக எழுதி அசத்திட்டீங்க...வாழ்த்துகள்....

  பதிலளிநீக்கு
 23. ஒரு பெண்ணின் பிறப்பு முதல் இறப்பு வரை, அழகு கவிதையாக வரித்து விட்டீர்கள்....

  பதிலளிநீக்கு
 24. preethi கூறியது...

  பெண்ணின் மொத்த வாழ்வியலையும் ஒரு கவிதையில்
  அடைத்துவிட்டாயடி ராஜி. நம் மகளுக்கு என்னுடைய வாழ்த்துக்களை சொல்லிவிடு.
  தோழி
  பிரீத்தி
  >>>
  கண்டிப்பாயடி தோழி

  பதிலளிநீக்கு
 25. Lali கூறியது...

  மூச்சுவிட கூட நேரமின்றி வாழ்ந்தவளுக்கு
  கடைசியில் ஒரு பெருமூச்சு விடவாவது நேரம் கிடைத்திருக்கிறதே..!
  வறண்ட புன்னகை மட்டுமே வருகிறது உதடுகளில்..
  >>>
  தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 26. * வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...

  வாழ்த்துக்கள்...
  தொடர்ந்து வருவேன்
  >>>
  நன்றி. நன்றி.
  தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 27. MANO நாஞ்சில் மனோ கூறியது...

  உங்க தளத்துல நான் புதுசாதான் வாறேனோ...???

  >>>
  ஆமாங்கோ

  பதிலளிநீக்கு
 28. MANO நாஞ்சில் மனோ கூறியது...

  //நான் எங்கே" என்ற
  கேள்விக்கு..,
  "பெருமூச்சே ".
  பதிலாய் வந்து முகத்திலறைகிறது.?!!//

  அருமையா வித்தியாசமாக எழுதி அசத்திட்டீங்க...வாழ்த்துகள்....

  >>>
  தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

  பதிலளிநீக்கு