திங்கள், ஏப்ரல் 25, 2011

பாரதியால் நான் படும் அவஸ்தை...,

"அச்சம் தவிர் " என்கிறான் பாரதி..,
"பயந்தது நட" என்கிறார் அப்பா!!??

"துணிந்து நில்" என்கிறான் பாரதி..,
"பணிந்து செல்" என்கிறாள் அம்மா..,

"ரவுத்திரம் பழகு" என்கிறான் பாரதி..,
"கோபம் குறை" என்கிறான் அண்ணன்!!??

"சிறுமை கண்டு பொங்கு" என்கிறான் பாரதி..,
"நமக்கேன் வம்பு", கண்டுக்கொள்ளாதே" என்கிறார் கணவர் !!??

"நாடாளச்" சொல்கிறான் பாரதி...,
"வீட்டுக்குள் ஒடுங்கச்" சொல்கிறாள் மாமியார்!!??

"பெண்மையைப் போற்றுவோம்" என்கிறான் பாரதி..,
"தூற்றத் துடிக்கிறது" ஊர்!!??

சகல விஷயங்களிலும் உதைப்படும்
பந்தாய் அலைக் கழிக்கப்படுகிறேன்..,
யார் சொல்லை கேட்பதென!!??

22 கருத்துகள்:

 1. me the firstu

  பாரதியும்
  பாரதி கவிதைக்கு கவிதை கொடுத்த கவி வாழ்க

  பதிலளிநீக்கு
 2. சகல விஷயங்களிலும் உதைப்படும்
  பந்தாய் அலைக் கழிக்கப்படுகிறேன்..,
  யார் சொல்லை கேட்பதென!!?? //

  ஏதாச்சும் குட்டி குழந்தை இருந்தா அவுக சொல்றத கேளுங்க.. நோ ப்ராப்ளம் கம்ஸ்.. குழப்பம் ஈசியா சால்வ் ஆகும்..

  பதிலளிநீக்கு
 3. ரொம்ப நல்லா இருக்கு..!

  ஆமா இதை யார்கிட்ட எழுதி வாங்குனீங்க..?

  பதிலளிநீக்கு
 4. வெங்கட் கூறியது...

  ரொம்ப நல்லா இருக்கு..!

  ஆமா இதை யார்கிட்ட எழுதி வாங்குனீங்க..?

  haa haa யார் கிட்டயும் எழுதி வாங்கலை.. எஸ் எம் எஸ் ல வந்ததும் இல்ல ஹா ஹா

  பதிலளிநீக்கு
 5. >சகல விஷயங்களிலும் உதைப்படும்
  பந்தாய் அலைக் கழிக்கப்படுகிறேன்..,
  யார் சொல்லை கேட்பதென!!??

  யார் பேச்சையும் கேட்காதீங்க.. மன்சாட்சி சொல்றபடி நடங்க அவ்வளவுதான்

  பதிலளிநீக்கு
 6. பாரதியால் நீங்க படற அவஸ்தையை விட உங்களால நாங்க படற அவஸ்தை தான் ஜாஸ்தி.. ஏஹே ஹே ஹே

  ( இது சும்மா ஜாலி கமெண்ட்.. இதை சீரியஸா எடுத்துட்டு எதாவது பஞ்சாயத்தை கூட்டாதீங்க ஹி ஹி )

  பதிலளிநீக்கு
 7. siva கூறியது...

  me the firstu

  பாரதியும்
  பாரதி கவிதைக்கு கவிதை கொடுத்த கவி வாழ்க
  >>
  தங்கள் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி

  பதிலளிநீக்கு
 8. தம்பி கூர்மதியன் கூறியது...

  சகல விஷயங்களிலும் உதைப்படும்
  பந்தாய் அலைக் கழிக்கப்படுகிறேன்..,
  யார் சொல்லை கேட்பதென!!?? //

  ஏதாச்சும் குட்டி குழந்தை இருந்தா அவுக சொல்றத கேளுங்க.. நோ ப்ராப்ளம் கம்ஸ்.. குழப்பம் ஈசியா சால்வ் ஆகும்..
  >>
  அதுங்க பண்ற அலப்பறை இருக்கே.,, அப்ப்ப்பப்பா அதுக்கு தனி கவிதை எழுதலாமினு பார்த்தால் கவிதையே எழுத வரமாட்டேங்குது.

  பதிலளிநீக்கு
 9. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...

  ஆணிய புடுங்க வேணாம்...
  >>
  ஏன் தம்பி

  பதிலளிநீக்கு
 10. வெங்கட் கூறியது...

  ரொம்ப நல்லா இருக்கு..!

  ஆமா இதை யார்கிட்ட எழுதி வாங்குனீங்க..?
  >>
  நிச்சயமா உங்ககிட்ட இருந்து இல்ல.

  பதிலளிநீக்கு
 11. சி.பி.செந்தில்குமார் கூறியது...

  வெங்கட் கூறியது...

  ரொம்ப நல்லா இருக்கு..!

  ஆமா இதை யார்கிட்ட எழுதி வாங்குனீங்க..?

  haa haa யார் கிட்டயும் எழுதி வாங்கலை.. எஸ் எம் எஸ் ல வந்ததும் இல்ல ஹா ஹா
  >>
  Thanks

  பதிலளிநீக்கு
 12. சி.பி.செந்தில்குமார் கூறியது...

  >சகல விஷயங்களிலும் உதைப்படும்
  பந்தாய் அலைக் கழிக்கப்படுகிறேன்..,
  யார் சொல்லை கேட்பதென!!??

  யார் பேச்சையும் கேட்காதீங்க.. மன்சாட்சி சொல்றபடி நடங்க அவ்வளவுதான்
  >>
  மன்சாட்சி படிதானே? நடக்குறேன், நடக்குறேன்

  பதிலளிநீக்கு
 13. சி.பி.செந்தில்குமார் கூறியது...

  பாரதியால் நீங்க படற அவஸ்தையை விட உங்களால நாங்க படற அவஸ்தை தான் ஜாஸ்தி.. ஏஹே ஹே ஹே

  ( இது சும்மா ஜாலி கமெண்ட்.. இதை சீரியஸா எடுத்துட்டு எதாவது பஞ்சாயத்தை கூட்டாதீங்க ஹி ஹி )

  >>
  ஏன் நிறைய பஞ்சாயத்து பார்த்த நீங்களே இப்படி பயந்துக்கிட்ட எப்படி சார்?

  பதிலளிநீக்கு
 14. கேளுங்கள் மனம் சொல்வதை

  பதிலளிநீக்கு
 15. சகல விஷயங்களிலும் உதைப்படும்
  பந்தாய் அலைக் கழிக்கப்படுகிறேன்..,
  யார் சொல்லை கேட்பதென!!?? //ரொம்ப நல்லா இருக்கு..!

  பதிலளிநீக்கு
 16. ஆதிரை கூறியது...

  கேளுங்கள் மனம் சொல்வதை
  >>>
  சரிங்க. தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி

  பதிலளிநீக்கு
 17. மாலதி கூறியது...

  சகல விஷயங்களிலும் உதைப்படும்
  பந்தாய் அலைக் கழிக்கப்படுகிறேன்..,
  யார் சொல்லை கேட்பதென!!?? //ரொம்ப நல்லா இருக்கு..!

  >>
  நன்றிங்க.

  பதிலளிநீக்கு
 18. யார் சொல்லை கேட்பதென!!?? //
  மனம் சொல்வதை கேளுங்கள் நோ ப்ராப்ளம் !!!???

  பதிலளிநீக்கு
 19. உங்கள் கவிதையும் அதன் உள் அர்த்தமும் மிக அருமை! காலங்கள் மாறியிருப்பினும் மனிதர்களும் அவர்களது மூட நம்பிக்கைகளும் மாறவில்லை இன்றும். ஒரு குடும்பம் சார்ந்த வாழ்க்கை வாழ வேண்டுமாயின் நாம் பாரதியை பற்றி நினைப்பதை கூட விட்டு விட வேண்டியிருக்கிறது :(

  பதிலளிநீக்கு