அம்மாவின் முகத்தை பார்த்தே, அம்மா மனதில் இருப்பதை அப்பா புரிந்து கொள்வார்.அப்பா வாய்விட்டு சொன்னாலும் அதற்கு எதிர்ப்பதமாகவே செய்து பழக்கப்பட்ட அம்மா! ஆனாலும், இதுவரை தவறியும் அப்பாவுக்கு பிடிக்காததை, அம்மா செய்ததாக சரித்திரமில்லை. அற்ப விஷயத்துக்காக பனிப்போர் நடந்து ரெண்டுப் பேரும் பேசாமலிருப்பாங்க. அப்போ எனக்கு கிடைக்கும் அன்பு, பாராட்டு, எல்லாம் அடடா! அந்த சில நிமிடங்கள் சொர்க்கம். வேணுமின்னே அடுத்தவங்களை வெறுப்பேத்த, ராஜி போல தோசை ஊத்தவும், காஃபி போடவும் யாரால முடியும்ன்னு அப்பாவும், ஷாப்பிங்க் போனால், ராஜியோடதான் போகனும் பொறுமையா எல்லாத்தையும் ஒண்ணு விடாமல் வாங்குவான்னு அம்மாவும் பெருமை பேசுவாங்க.
தோசை ஊத்துறாளாம் தோசை, பேப்பராட்டம் மெல்லிசா, கருக வச்சி, காஃபில சர்க்கரையை கொட்டி..., உன்னை யாரு சமையலுக்குலாம் போக சொன்னதுன்னு அப்பாவும்(அந்த கருகிப்போன தோசையே ஏழெட்டு உள்ள போயி, இன்னும் ஜீரணம் கூட ஆகாம இருக்கு அதுக்குள்ள இந்த பேச்சு).
காய்கறி வாங்கி வர சொல்லி அனுப்பினேங்க. இங்க பாருங்க, காய்ஞ்சுப்போன கத்தரிக்காய், முத்திப்போன முள்ளங்கி, வாடிப்போன வெண்டைக்காயெல்லாம் வாங்கி வந்திருக்கான்னு சொல்லுவாங்க( அப்போ அந்த காய்கறிலாம் நாங்க பாட்டுக்கு எங்க உறவினர்களுடன் மார்க்கெட்டுல இருந்திருப்போம். இங்க கூட்டிட்டு வந்தியே உனக்கிது தேவைதான்னு கேலி செய்ற மாதிரியே இருக்கும்.)
எனக்கு பாராட்டு கிடைக்கனும்ங்குறதுக்காகவே அவங்க சண்டைப் போட்டுக்கிடனும்னு சாமியை வேண்டிக்கிட்ட நாட்கள் உண்டு. அது விவரம் தெரியாத நாட்கள். ஆனால், இப்போதோ நிலைமை வேறு. முப்பத்தேழு ஆண்டுகள் கடந்தப் பின்னும் மாறாத காதலோடு இருக்கும் அவங்களை பார்த்து சற்று பொறாமை கூட படுவதுண்டு. அப்பேற்பட்ட இளஞ்சோடிகளுக்கு இன்று திருமண நாள். அவர்களை வாழ்த்த வயதில்லை. எனவே, வணங்கி அவர்கள் பாதங்களில் என் வாழ்த்துக்களை ஒரு கவிதையில் சமர்ப்பிக்கிறேன்.
இணைந்தே இல்லறத்தின் இலக்கணம் வென்ற
இரு மனங்களின் இன்ப உலா இன்று
இங்கண்
இதயம் மலர வாழ்த்துப் பூக்கள் வெற்றித் தம்பதியர்களுக்கு
இக்கவிதை மலர்கள் சமர்ப்பணம்...,
மூத்தவர் நீங்கள் அரண்களாய் இருந்து
முந்திய அறங்கள் எல்லாம் சிறக்க
ஒன்றுக்குள் ஒன்றாகி உறவுக்கு விளக்கமாகி
உணர்வுகளை மதித்து ,உரிமைக்கு இடம் அளித்து
அன்பென்னும் பந்தத்தில் அரும்பெரும் சுடராகி
பண்பென்னும் பகுப்பிலே பலமான விருட்சமாகி
வாழ்வின் இன்ப வளைவுகளை வசந்தத்தின் வாசலாக்கி
வந்து விழுந்த துன்பங்களை வளைத்தெடுத்து வாளிப்பாக்கி
வாழ்க்கைத்துணையுடன் கை கோர்த்து,
வாழ்வின் நோக்கத்தை தேர்ந்தெடுத்து,
மனம்போல் மகிழ்வோடும்,அழகான மகவோடும்
வாழ்க்கையை உங்கள் வசமாக்கி
வந்திட்ட பொழுதுகளை வாசமாக்கி
இல்லறத்தில் மகத்தான வாகை சூடி....
இந்த நிமிடத்தில் வாழ்வின் வெற்றியாளர்களாய் நிற்கின்ற
அம்மாவையும் அப்பாவையும்
வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றேன்!!!!!
இதுபோலே திருவிழா தினமும் கண்டு
ஒரு மனத்தோடு, இன்முகத்தோடு வாழ
உலகமுள்ளவரை வாழ்ந்திருக்க வேண்டுமென
அகம் மகிழ்ந்து அன்பாலே
உண்மையான உள்ளத்தாலே வாழ்த்துகின்றேன்!!!!!
வாழ்க நீவிர் பல்லாண்டு!!!!!!!!!!!!!!!!!!!!!!

டிஸ்கி: கடல்கள் பல கடந்து நியூசிலாந்த் பறவையாய் மாறிப்போன தோழி மாலதிக்கும் இன்றுதான் "பிறந்த நாள்". என்ன தவறு நான் செய்தாலும், கண்டித்து, தண்டிக்காமல் மன்னிக்கும் தாயுள்ளம் கொண்டவள்.
தோழி, உன்னை கண்டு தழுவி பிறந்த நாள் வாழ்த்து சொல்ல என்னால் இயலவில்லை. துக்கம் தொண்டையை முட்டுகிறது. இருக்காதா பின்னெ ஒரு "டிரீட் போச்சே" அவ்வ்வ்வ்வ்வ்.
இப்படி எகனை மொகனையா சிந்திக்குறதே நமக்கு வாடிக்கைதானே,
"சாரி" என்பதற்கு பதில் "எல்லாம் உன்னாலேதான் லூசே"ன்னும்,
வெற்றிக்கு வாழ்த்துவதற்கு பதில் "டிரீட் எப்போ" என்றும்,
வீட்டு விசேஷத்துக்கு வான்னு சொல்லாம, "ரொம்ப அலட்டிக்காம வந்து சேரு. இல்லாட்டி கொன்னேப்புடுவேன்"ன்னும்
" Get well soon" ன்னு சொல்லாம, "ஓவர் சீன் போட்டா, இப்படித்தன் கடவுள் ஆப்பு வைப்பார்ன்னும் சொல்லும் பிரஸ்கபதிகளாச்சே நாம.
Wish You Many More Happy Returns Of The Day My Dear Friend
ரெண்டாவது டிஸ்கி: என் வாழ்வில் முக்கியமான தினம் நாளைக்கு(என்னன்னு இப்ப சொல்ல மாட்டேன். அது சஸ்பென்ஸ்). அதுக்கும் பதிவு உண்டு நாளைக்கும் அவசியம் வந்துடுங்க.
முதல் வாழ்த்து
ReplyDelete>>எனக்கு பாராட்டு கிடைக்கனும்ங்குறதுக்காகவே அவங்க சண்டைப் போட்டுக்கிடனும்னு சாமியை வேண்டிக்கிட்ட நாட்கள் உண்டு. அது விவரம் தெரியாத நாட்கள். ஆனால், இப்போதோ நிலைமை வேறு. முப்பத்தேழு ஆண்டுகள் கடந்தப் பின்னும் மாறாத காதலோடு இருக்கும் அவங்களை பார்த்து சற்று பொறாமை கூட படுவதுண்டு. அப்பேற்பட்ட இளஞ்சோடிகளுக்கு இன்று திருமண நாள். அவர்களை வாழ்த்த வயதில்லை.
ReplyDeleteச்சே.. உங்க அம்மா அப்பாவையே இளஞ்சோடிகள்னு நக்கலிங்க்? ஹி ஹி ( பத்த வைடா பரட்டை)
>
ReplyDelete"சாரி" என்பதற்கு பதில் "எல்லாம் உன்னாலேதான் லூசே"ன்னும்,
வெற்றிக்கு வாழ்த்துவதற்கு பதில் "டிரீட் எப்போ" என்றும்,
வீட்டு விசேஷத்துக்கு வான்னு சொல்லாம, "ரொம்ப அலட்டிக்காம வந்து சேரு. இல்லாட்டி கொன்னேப்புடுவேன்"ன்னும்
" Get well soon" ன்னு சொல்லாம, "ஓவர் சீன் போட்டா, இப்படித்தன் கடவுள் ஆப்பு வைப்பார்ன்னும் சொல்லும் பிரஸ்கபதிகளாச்சே நாம.
உங்க ஃபிரண்டை பாராட்றீங்களா? திட்றீங்களா?
சி.பி.செந்தில்குமார் கூறியது...
ReplyDeleteமுதல் வாழ்த்து
>>
நன்றி!
சி.பி.செந்தில்குமார் கூறியது...
ReplyDelete>>எனக்கு பாராட்டு கிடைக்கனும்ங்குறதுக்காகவே அவங்க சண்டைப் போட்டுக்கிடனும்னு சாமியை வேண்டிக்கிட்ட நாட்கள் உண்டு. அது விவரம் தெரியாத நாட்கள். ஆனால், இப்போதோ நிலைமை வேறு. முப்பத்தேழு ஆண்டுகள் கடந்தப் பின்னும் மாறாத காதலோடு இருக்கும் அவங்களை பார்த்து சற்று பொறாமை கூட படுவதுண்டு. அப்பேற்பட்ட இளஞ்சோடிகளுக்கு இன்று திருமண நாள். அவர்களை வாழ்த்த வயதில்லை.
ச்சே.. உங்க அம்மா அப்பாவையே இளஞ்சோடிகள்னு நக்கலிங்க்? ஹி ஹி ( பத்த வைடா பரட்டை
>>>
உங்களுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை?
சி.பி.செந்தில்குமார் கூறியது...
ReplyDelete>
"சாரி" என்பதற்கு பதில் "எல்லாம் உன்னாலேதான் லூசே"ன்னும்,
வெற்றிக்கு வாழ்த்துவதற்கு பதில் "டிரீட் எப்போ" என்றும்,
வீட்டு விசேஷத்துக்கு வான்னு சொல்லாம, "ரொம்ப அலட்டிக்காம வந்து சேரு. இல்லாட்டி கொன்னேப்புடுவேன்"ன்னும்
" Get well soon" ன்னு சொல்லாம, "ஓவர் சீன் போட்டா, இப்படித்தன் கடவுள் ஆப்பு வைப்பார்ன்னும் சொல்லும் பிரஸ்கபதிகளாச்சே நாம.
உங்க ஃபிரண்டை பாராட்றீங்களா? திட்றீங்களா?
>>>
மீண்டும் ஏன் பத்த வைக்குறீங்க. அவ ஏற்கனவே கோவக்காரி. ஐயையோ இதையும் படிச்சுடுவாளோ அவ்வ்வ்வ்.
உன் வாழ்த்துக்கு நன்றி தோழி
ReplyDeleteபெற்றோருக்கு என் வணக்கங்களையும், திருமண வாழ்த்துக்களையும் சொல்லிவிடு.
ReplyDeleteஅருமையான கவித.அம்மா அப்பாவிற்க்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇனிய தம்பதிகளான தங்கள் தாயும் தந்தையும்
ReplyDeleteபல்லாண்டு பல்லாண்டு நல்ல ஆரோக்கியத்தோடும்
இதே சந்தோஷத்தோடும் வாழ மனமாற வாழ்த்துகிறேன்
நாளைக்கு என்னன்னு எனக்கு தெரியுமே. கண்டிப்பாய் வருகிறேன். (என் முதல் கருத்து உன் தளத்தில். இனி தொடர்ந்து வருவேன். ஜாக்கிரதை)
ReplyDeleteRAMVI கூறியது...
ReplyDeleteஅருமையான கவித.அம்மா அப்பாவிற்க்கு வாழ்த்துக்கள்.
>>
நன்றிங்க. பெற்றோரிடம் தங்கள் வாழ்த்துக்களை சொல்லிடுறேன்.
Ramani கூறியது...
ReplyDeleteஇனிய தம்பதிகளான தங்கள் தாயும் தந்தையும்
பல்லாண்டு பல்லாண்டு நல்ல ஆரோக்கியத்தோடும்
இதே சந்தோஷத்தோடும் வாழ மனமாற வாழ்த்துகிறேன்
>>
நன்றிங்க ஐயா!
இளம் தம்பதியினருக்கு [[சரி சரி]] வாழ்த்துக்கள்....
ReplyDeleteதோழி மாலதிக்கும் என் வாழ்த்துக்கள்...
ReplyDeleteசி.பி.செந்தில்குமார் கூறியது...
ReplyDelete>>எனக்கு பாராட்டு கிடைக்கனும்ங்குறதுக்காகவே அவங்க சண்டைப் போட்டுக்கிடனும்னு சாமியை வேண்டிக்கிட்ட நாட்கள் உண்டு. அது விவரம் தெரியாத நாட்கள். ஆனால், இப்போதோ நிலைமை வேறு. முப்பத்தேழு ஆண்டுகள் கடந்தப் பின்னும் மாறாத காதலோடு இருக்கும் அவங்களை பார்த்து சற்று பொறாமை கூட படுவதுண்டு. அப்பேற்பட்ட இளஞ்சோடிகளுக்கு இன்று திருமண நாள். அவர்களை வாழ்த்த வயதில்லை.
ச்சே.. உங்க அம்மா அப்பாவையே இளஞ்சோடிகள்னு நக்கலிங்க்? ஹி ஹி ( பத்த வைடா பரட்டை)//
எலேய் உனக்கு இதே வேலையா போச்சு...
வாழ்த்துக்கள் பலவிதம்
ReplyDeleteஇது புதுவிதம்
ரசித்தேன்
என்னுடைய வாழ்த்துக்களும்
அம்மா அப்பாவிற்க்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஎன்னுடைய வாழ்த்துக்களும்...
ReplyDeleteஉங்கள் தாய் - தந்தையருக்கு இந்த இனிய நாளில் எனது வணக்கங்கள்...
ReplyDeleteஉங்களது தோழிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்....
நாளை என்ன நாள் என்று அறிய காத்திருக்கிறேன்...
வாழ்த்துக்கள்.
ReplyDelete