Saturday, October 22, 2011

அதையும் தாண்டி புனிதமானது....,



இதயம் வெடித்து விடுமோ
மூளை சிதறி விடுமோ
எனும் அளவுக்கு
நான் பயந்து பயந்து யோசித்த
என் சந்தேகத்தை வழக்கம் போல்
உன்னிடமே தூக்கி கொண்டு ஓடிவருகிறேன்....,

ஒரு கப் காபி கொடுத்து
ஓரிரு கதைகளை சிரித்து பேசி
ஒரு sms , ஒரு phone செய்யும்
ஒரு சாதாரண நண்பனாய்
ஒரு போதும் உன்னை நினைக்க முடியவில்லை.

கட்டில் மேல் படுத்து
விடிய விடிய சுகம் அனுபவிக்கும்
ஈருடல் ஓர் உயிராய் வாழும்
கணவன் நிலையிலும்
என்னால் உன்னை நினைக்க முடியவில்லை.

நீ எனக்கு யார்?
நான் உனக்கு யார்?
நமக்குள் என்ன உறவு?
நான் தவறான பெண்ணா?
நான் உன்னை பிரிந்து விடட்டுமா?
என்னிடம் கேள்விகள் மட்டுமே.

அதே பதட்டமில்லாத வார்த்தைகள்
அதே மென்மையான பேச்சுகள்
வழக்கம் போல் உன்னிடம்.

ஒரு புறம் கோபமும், ஒரு புறம் குழப்பமுமாய்
புரியாத நிலை என்னிடம்.
நான் உன்னை பிரிந்து விடட்டுமா? என்றேன்.
உன் விருப்பம் அதுவாயின் செய் என்றாய்.

நான் தவறான பெண்ணா? கேட்டேன்.
என்னவள் நீ!
உன்னிடம் களங்கம் காண முடியாது என்றாய்.

ஏன் நான் உன்னை விரும்ப கூடாதா?
அப்பாவி தனமாய் கேட்டேன்.
விரும்புதல் என்றால் என்ன? திரும்ப கேட்டாய்?
 விழித்தேன் விடை தெரியாமல் வழக்கம்போல்.

காதலா? ஊஹும். காமமா? ஊஹும்.
விளக்கி சொல்ல சொன்னாய் என் நிலையை.
பொறுமையாய் அனைத்தையும் கேட்டாய்.
வசீகரமாய் சிரித்தாய், என் நெஞ்சை பறித்தாய்.

முட்டாள் பெண்ணே!
இதே நிலையில் தான் நானும் என்றாய்.
என் வாழ்க்கை துணையை விட மேலானவள் நீ என்றாய்.
அந்த வார்த்தைகள் என் உயிரை தீண்டியதை அறியாமல்!

புனிதமான உறவுகளை பட்டியலிட சொன்னாய்.
தாய்க்கும், சேய்க்குமான உறவு,
கணவன் , மனைவிக்கான உறவு,
கடவுள், பக்தர்களுக்கான உறவு.
உன் ஓர் ஒரு வார்த்தையில்
என் சந்தேகத்திற்கு முற்று புள்ளி வைத்தாய் !

அடி பெண்ணே! 
” நம் உறவு அவைகளை விட புனிதமானது “
 
 



14 comments:

  1. டைட்டிலில் ஒரு டவுட்


    >>அதையும் தாண்டி புனிதமானது....,"

    எதையும் தாண்டி?-

    ReplyDelete
  2. >மூளை சிதறி விடுமோ
    எனும் அளவுக்கு
    நான் பயந்து பயந்து யோசித்த

    இல்பொருள் உவமை அணி போல!!!

    ReplyDelete
  3. உங்களுக்கு புனிதான்னு ஒரு தோழி இருக்காங்க போல!!

    ReplyDelete
  4. //"அதையும் தாண்டி புனிதமானது....,"//

    அருமை.

    ReplyDelete
  5. கலக்கலான கவிதை!!!!! வாழ்த்துக்கள் ராஜி....

    ReplyDelete
  6. சி.பி.செந்தில்குமார் கூறியது...
    டைட்டிலில் ஒரு டவுட்


    >>அதையும் தாண்டி புனிதமானது....,"

    எதையும் தாண்டி?//

    வந்தமா படிச்சமா ரசிச்சமா'ன்னு போகணும், அதைவிட்டு கேள்வியாடா கேக்குற...?? ராஸ்கல் பிச்சிபுடுவேன் பிச்சி.....ஹி ஹி அண்ணே.....

    ReplyDelete
  7. மாதம் இரண்டொன்றை எழுதினாலும்
    மிக மிக அழகாக
    நினைவை விட்டு நீங்காத
    அருமையான படைப்பாகக் கொடுத்துவிடுகிறீர்கள்
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்
    த.ம 3

    ReplyDelete
  8. அருமை, வேறு வார்த்தை சொல்ல தெரியவில்லை

    ReplyDelete
  9. என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் .மிக்க நன்றி தங்கள் பகிர்வுக்கு .......

    ReplyDelete
  10. அழகிய கவிதை...

    தீபாவளி வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  11. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்க்கும் எங்களின் இனிய தீபாவளி வாழ்த்துகள் சகோதரி.

    ReplyDelete
  12. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் தோழி...

    ReplyDelete
  13. சகோ தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்... இந்நாளில் தங்கள் குடும்பத்தினர் அனைவரும் நோய், நொடியின்றி பூரண நலத்துடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்

    ReplyDelete
  14. நல்ல கவிதை, ஆனாலும் இது கிடைப்பதற்கரிய உறவு!

    ReplyDelete